புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
8 Posts - 44%
heezulia
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
431 Posts - 73%
heezulia
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
8 Posts - 1%
prajai
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_m10கந்தபுராணம் - தெய்வானை திருமணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தபுராணம் - தெய்வானை திருமணம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 2:20 pm

கந்தபுராணம் - தெய்வானை திருமணம் E_1329734425
எத்தனையோ ஆபரணங்களை தெய்வயானை அணிந்திருந்தாலும் மனத்துக்கு உகந்த மணாளனை நேரில் கண்டதும் ஏற்பட்ட நாணம் என்ற அணிகலனுக்கு எந்த நகைதான் ஈடாகும்?

குமரப் பெருமான் அவளுடைய நாணத்திற்கு ஈடாக ஒரு குறுநகையை தம் இதழில் சிந்த வைத்தாலே அதை இணையாக வைத்துச் சொல்லலாமா!

அருகில் அமர்ந்திருந்த உமாதேவியார் எதையும் அறியாதவர் போல் முருகவேளையும், தெய்வயானையையும் அழைத்துப் போய் ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். கண்குளிர அந்தப் பேரழகைப் பருகினார். வடிவேலிறைவன் தன் தேவியுடன் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை இந்திரனும், தேவாதிதேவர்களும் கண்ணாரக் கண்டு தொழுதார்கள்.

தாங்கள் பெற்ற பிறவிப் பயனை அடைந்தாற் போன்ற ஆனந்தத்தை அடைந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் சொரிந்து வந்தித்து வாழ்த்தினார்கள். இந்திராணி வந்த நாணத்துடன் திருமஞ்சன நீரை வார்க்க, இந்திரன் தேவாதி தேவர்களின் பெருமகனான கந்தவேலனின் திருவடிகளை பூசித்தான். தெய்வயானையின் திருக்கரத்தை எடுத்து குமரப் பெருமானின் திருக்கரங்களில் வைத்தான்.

கரங்களைக் குவித்து எளியேனுடைய மகளை ஏற்று அருள வேண்டும் அருளாளரே! என்று கண்ணீர் மல்கினான். இந்திராணியும் வந்து இணைந்து வணங்கினாள். குமரவேள் தேவகுஞ்சரி அம்மையாரின் கழுத்தில். பிரம்மா முதலியோர் வேள்விச் சடங்கை நடத்த திருமாங்கல்யத்தை அணிவித்தார். தேவர்கள் முனிவர்கள், மண்ணாளும் அரசர்களும் மகிழ்ந்து மலர்களைத் தூவி கந்தா போற்றி போற்றி! கடம்பா போற்றி! வேலாயுதா போற்றி! முக்கண்ணன் புதல்வா போற்றி! தேவர்கள் தேவா போற்றி! என்று முழக்கம் செய்தனர்.

குமரக் கடவுள் சுரகுஞ்சரியின் கரத்தைப் பற்றி அம்மி மிதித்து, அருந்ததி காட்டி உலக மக்கள் உய்யும் பொருட்டு திருமணச் சடங்குகளைச் செய்து அம்மையப்பரை அன்போடு பணிந்தார். தேவசேனையும் கணவரோடு தன் மாமன்-மாமியைப் பணிந்தாள். இருவரும் தன் மகன்-மருமகளை எடுத்து அன்போடு மார்புறத் தழுவி வாழ்த்தித் தமது முதன்மையைத் தந்து எல்லோருக்கும் அருள்புரிந்து மறைந்தருளினர்.

குமரக் கடவுள் தேவர்களுக்கு அருள் செய்து தெய்வயானை அம்மையாருடன் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இந்திரன் யாவருக்கும் காமதேனு, கற்பகம், சிந்தாமணி இவற்றால் இன்னமுது அளித்தான்.
அனைவரும் அவனிடம் விடைபெற்று தம் தமது இருப்பிடம் சென்றனர். இந்திரனும், இந்திராணியும் தமது குமாரத்தி தெய்வயானையின் திருமணம் நன்கு நடைபெற்ற திருப்தியில் இன்புற்றிருந்தனர்.

செவ்வேட் பரமன் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை அம்மையுடன் திருமணம் முடிந்து சில தினங்கள் கழித்தான். பொன்னுலகத்தை இந்திரனுக்கு அளித்தாலும் முடிசூட்டி அளிக்கத் திருவுளம் கொண்டான். அவனுக்குப் பெயரளவுக்குப் பொன்னுலகத்தை அளித்த பொழுது இந்திராணி அம்மையார் மேரு மலையில் இருந்தாள். முடிசூட்டப் புறப்பட்ட குமரக் கடவுளுடன் வீரபாகு தேவரும், அவரது தம்பியரும், தேவர்களும் புறப்பட்டு வந்தார்கள்.

வாயுதேவன் தமது மனோவேகத் தேரைக் கொணர்ந்து நிறுத்தினான். ஆறுமுகப் பெருமான் அதன் மீது தெய்வயானையுடன் ஏறி அருளினார். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். மயில் வாகனம், அமரர்கள் தொழ கந்தவேள் அருகே வந்தது.

குமரவேளின் ஆணைப்படி அவரவர் தங்கள் தங்கள் வாகனங்களில் ஏறி இருமருங்கிலும் புடைசூழ வந்தார்கள். முனிவர்கள், கந்தர்வர்கள் கானம் இசைத்தார்கள். முரசங்கள் முழங்கின. கந்தவேள் விண் வழியே இந்திரனுடைய அமராவதியை அடைந்தார்.

பானுகோபனால் பாழ்பட்டிருந்த அந்நகரை எல்லா வளங்களுடனும் அமைக்கும்படி தேவதச்சனுக்கு ஏற்கெனவே கட்டளை இட்டிருந்தார் அல்லவா, கந்தப்பெருமான்! அந்தக் கட்டளையை சிரமேற் தாங்கிய தெய்வதச்சன் பொன் மதில்களையும், நான்கு வாயில்களையும் ஏழுநிலை மாடங்களையும், கோபுரங்களையும், எண்ணிற்கடங்காத வீதிகளையும் நடுவே ஒரு பெருங்கோயிலையும், செய்குன்றுகளையும், அளவில்லாத நீர்நிலைகளையும், மணி மயமான மண்டபவங்களையும், தவப்பள்ளிகளையும் அழகுறச் செய்து வைத்திருந்தான்.

இந்திரனுக்குத் தனிக் கோயிலையும், மாலயனாதியர்க்குத் தனிக்கோயிலையும், கந்தக் கடவுளுக்குத் தனிக் கோயிலையும் பாங்குற அமைத்திருந்தான். வானவருக்குத் தனித்தனி இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திய லோகத்தினும் வனப்புடையதாகத் திகழ்ந்தது அந்நகரம். விஸ்வகர்மா மனத்தால் இவ்விதம் அமைத்த திறன் கண்டு அனைவரும் விம்மிதமுற்றனர்.

ஆறுமுக அண்ணல் விஸ்வகர்மாவைப் பாராட்டி அருள்புரிந்து, இந்திரனுடன் அந்நகருக்குள் முறைப்படி புகுந்து தெய்வயானை அம்மையாருடன் சபா மண்டபத்தினுள் எழுந்தருளி இருந்தார். பிறகு திருமாலையும், மற்றவர்களையும் நோக்கிய மயில்வாகனன், இந்திரனுக்கு முடிசூட்டும் விழா இனிதே நடைபெறட்டும் என்றார்.

மயில்வாகனனின் கட்டளைப்படி, விண்ணவர்கள் போற்றவும், கந்தவர்கள் பாடவும், முழவங்கள் முழங்கவும், அரம்பையர்கள் ஆடவும், கற்பக மலர்கள் தூவிக் கொண்டே இருக்குவும்படி செய்து இந்திரனுக்கு முடிசூட்டி இந்திரப் பதவியை தந்தார்கள்.

இந்திரன் முழுமுதற் கடவுளாகிய கந்தக் கடவுளைத் தொழுது, எந்தனையே, சூரனால் இழந்த பொன்னுலகக் காட்சியைத் தந்து என்றும் அழியா இன்பங்களையும் வாரி வாரி வழங்கி உள்ளீர்கள். இதனினும் ஒருவன் அடையும் பேறு ஏதேனும் உண்டோ? தங்கள் திருவடியைத் தொழும் பேறு பெற்றதே நான் செய்த தவமோ தவம் என்றான்.

மயில் வாகனரே சரணம். வெற்றிவேலரே சரணம். தேவர்கள் சேனாபதியே சரணம். கந்தா சரணம் சரணம் என்று துதித்துக் கண்ணீர் மல்கினார்.

இதைக் கேட்ட வெற்றி வேலனார் இன்முறுவல் காட்டினார்.

இந்திரனே, இனி நீ யாருக்கும் அஞ்சவேண்டாம். என்றென்றும் நீ அமராவதியை ஆண்டு கொண்டு இன்புற்று இருப்பாயாக என்று அருள்புரிந்து எல்லா தேவர்களையும் தத்தம் இருக்கை செல்லுமாறு விடைகொடுத்து விட்டு, தெய்வயானை அம்மையாருடன் தமது திருக்கோயிலினுள் சென்று வீற்றிருந்தார்.

வீரவாகுத் தேவர் முதலானோரும், பல பூதங்களும் திருக்கோயிலைக் காவல் காத்தனர். திருமால், பிரம்மா உள்ளிட்ட தேவர்களும் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்று சூரன் இனி வரமாட்டான் என்ற நிம்மதியில் இன்புற்றிருந்தனர். இந்திரன் இந்திராணியுடன் அமராவதிபட்டணத்தை ஆனந்தப்பட்டணமாக மாற்றி ஆடல்பாடல் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பின் கந்தவேள் கந்த வெற்பில் வீற்றிருக்கத் திருவுளம் கொண்டு தெய்வயானை அம்மையாருடன் புறப்பட்டார். அதனை அறிந்த ஆலகண்டலகன், அரவணைச் செல்வன், அம்புயன் முதலியோர் வந்து தொழுவார்கள். அவர்கள் புடைசூழ கந்தபெருமான் தெய்வயானை அம்மையாருடன் திருக்கயிலாயமலைக்குச் சென்று தந்தை தாயை வணங்கினார். பிறகு தேவர்களை அவரவர் இருப்பிடத்திற்குச் செல்லும்படி பணித்தார்.

பிறகு கந்தப் பெருமான் கந்தகிரி சென்று திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். வீரவாகுத் தேவரும் மற்ற பூதங்களும் தங்களுக்குரிய வேலைகளைச் செய்யலாயினர். தெய்வயானை தன் துணைவருடன் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தாள்.

இந்தப் பெருமையைக் கச்சியப்பர் எவ்வாறு கொண்டாடுகிறார் என்று காணலாம்.
துய்யதோர் மறைகளாலும் துதித்திடற்கிரய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு நீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்க இப்புவன மெல்லாம்
என்கிறார்.

கந்தனுடைய வேல், மயில், சேவல் எல்லாம் வாழ வேண்டும். அடியார்கள் வாழ வேண்டும். புவனமெல்லாம் வாழ வேண்டும்.

தெய்வானையின் திருமணத்தைப் பார்த்தோம். ஆறுமுகத்தண்ணலை மணக்க விரும்பி இன்னொரு பெண்ணும் தவம் இருந்தாளே, அவளைப் பார்க்க வேண்டாமா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்? அவளை குமரப் பெருமான் மணம் முடிக்கத் திருவுளம் கொள்வாரா? இரண்டு பெண்கள் வதம் செய்ததில் ஒருத்தியை மட்டுமே மணம் முடித்திருக்கிறாரே? இது என்ன நியாயம்? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதே...

அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் தொண்டை நாட்டில் மேற்பாடி என்னும் ஊருக்கு அருகே உள்ள வள்ளிமலைக்குப் போகலாமா?

வள்ளிமலை - பெயரே நன்றாக இருக்கிறதல்லவா? அம்மலைச் சாரலில் அருந்தவமிக்க, சீறூர் என்று ஓர் ஊர் இருந்தது. கண்ணையும், கருத்தையும் கவரும் கவினுறு வனப்புடன் திகழும் அம்மலைச் சிறூரில் வேடர் தலைவனும், பண்டைத் தவமுடையவனுமாகிய நம்பி என்று ஒருவன் இருந்தான்.

அவனுக்கு சில ஆண் மக்கள் இருந்தனர். பெண் குழந்தை இல்லாமையால் அவன் மிகவும் வருந்தினான். அடியவர்க்கு வேண்டிய வரங்களை ஈயும் ஆறுமுகக் கடவுளை வழிபட்டு குறிகேட்கும் வெறியாட்டயர்ந்தும் பெண் மகப்பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்வ முனிவரின் சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், மகாலட்சுமி மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்திருந்தனர். அச்சிவ முனிவர், சித்தத்தை சிவபெருமானிடம் பதிய வைத்து அம்மலையில் தவம் புரிந்து கொண்டிருந்தார். பொன் நிறமுடைய அழகிய மான் அம்முனிவரின் முன்னே உலவிக் கொண்டிருந்தது.

அம்மானை சிவமுனிவர் கண்டு, அதன் அழகில் விருப்புற்றார். கண்மலரால் அதனோடு கலந்தார். சட்டென்று நினைப்புற்று களைந்து பழையபடி சிவநிலையில் திளைத்தார். உறுதியான தவத்தில் நிலை பெற்றார்.
திருமால் முன்பொரு சமயம் முருகுவேளின் திருவிளையாடலை நினைத்து உளம் உருகி நின்றபொழுது இரு சொட்டுக் கண்ணீர் விட்டார் அல்லவா! அந்த இரு சொட்டுக் கண்ணீரும் அமிர்தவல்லி சுந்தரவல்லியாக திருமாலின் மகளாக உருவானார்கள். கந்த கடவுளே கணவனாக வேண்டும் என்று தவம் இருந்தனர். அமிர்தவல்லி தேவலோகத்தில் தெய்வயானையாக வளர்ந்து குமரக் கடவுளை மணந்து கொண்டாள்.
சுந்தரவல்லி குமரக் கடவுளை மணம் புரியும் நோக்கில் மலையில் உலாவிய தெய்வீக மானின் வயிற்றில் கருவாக உருவெடுத்தாள். அப்பிணை மான்சூல் முதிர்ந்து அங்கும் இங்கும் உலாவியது. நிறை மாதத்தில் உடல் நொந்து புன்செய் நிலத்திற் புகுந்தது. பெண்கள் வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்துவிட்டுக் குழியை மூடாமல் விட்டுச் சென்றிருந்தனர்.

அம்மான் அக்குழி ஒன்றைத் தனக்குப் பாதுகாப்பாகக் கொண்டு அதில் புகுந்தது. பலகோடி சந்திரப் பிரகாசமுள்ள மரகத வண்ணமுடைய உலக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அக்குழவியை நோக்கியது. தன் இனமாக இல்லாமையால் மண்டு போய் அஞ்சி ஓடியது.

அக்குழந்தை அழுதது. கந்தக் கடவுளை மணக்கப் போகும் அக்குழவி கின்னரர்கள் இசைக்கு யாழொலியோ! கலைவாணியின் இன்னிசையோ! என்று கேட்பவர்கள் ஐயுறும் வண்ணம் அழுதது.

அச்சமயம் ஆறுமுகக் கடவுளின் திருவருளால் தூண்டப் பெற்று வேட்டுவ மன்னனாகிய நம்பி தன் மனைவியோடு, பரிசனங்கள் சூழ தினைப் புவனத்திற்கு வந்தான். வள்ளிக் குழியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அக் குழவியின் இனிய அழுகை ஒலியை கேட்டு உள்ளமும், ஊனும் உருகி அழுகுரல் கேட்ட வழியே சென்றான்.

பாற்கடல் மடந்தை பெற்ற திருமகள் திருமடந்தையே நாணுமாறு விளங்கும் பெண் மகவைக் கண்டான். அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. என் மாதவம் பலித்தது என்று உளம் உவந்தான். ஆனந்தக் கூத்தாடினான். பாடினான். பரவசப்பட்டான். துள்ளித் துள்ளிக் குதித்தான். நம்பியின் மனைவி பெயர் கொடிச்சி. குழந்தையை எடுத்து மார்புறத் தழுவி உச்சிமுகர்ந்து தன் மனைவி கொடிச்சியிடம் கொடுத்தான். கொடிச்சி அக் குழந்தையை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்புறத் தழுவிய பொழுது பால் சுரந்தது. பாலூட்டினாள். அனைவரும் சிறூர் போய் நம்பியின் குடிலில் புகுந்து குழந்தையைத் தொட்டிலில் இட்டனர்.
மற்ற வேடுவர்கள் குறிஞ்சிப் பறையை ஒலிக்க விட்டுக் குரவைக் கூத்தாடி வெறியாடி முருகுவேளைத் துதித்து பூஜித்தனர். குழந்தைக்குப் பெயரிட வேண்டும். முதியவர்கள் வந்து கூடினார்கள். என்ன பெயரை வைக்கலாம்? என்று யோசித்தனர்.

வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தை கிடைத்ததால் வள்ளி என்று பெயரிட்டனர். உலகங்களுக்குத் தாயாய் விளங்கும் ஞான மாது குழந்தையாய் பச்சிளம் பாலகியாய் வள்ளி நாயகி என்ற திருநாமத்துடன் நம்பியும் அவன் மனைவியும் அன்பு செய்ய வளர்ந்து வந்தாள்.

- லட்சுமி ராஜரத்னம்

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக