புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
41 Posts - 67%
heezulia
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nahoor
சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_m10சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 6:37 pm

First topic message reminder :




சென்னையில் கடந்த ஒரு மாதத்துக்குள் நடைபெற்ற இரு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என்றுகூறி காவல்துறை நேற்று நள்ளிரவு 5 நபர்களைச் சுட்டுக் கொன்ற செய்தி ஊடகங்களில் இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. "காவல்துறை அதிரடி" என அனைத்து ஊடகங்களும் பிரேக்கிங் நியூஸ் போட்டுக் கொண்டாடும் இச்செய்தியில், சாதாரண அறிவுடைய பாமரர் ஒருவருக்கு எழும் சந்தேகங்களில் ஒன்றுகூட இந்த ஊடகங்களுக்கு எழாதது ஆச்சரியம்! சென்னை பெருங்குடி பகுதியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி, கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதில் பல லட்சக்கணக்கான ரூபாயும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் கொள்ளை போயின. அடுத்து இம்மாதம் 20 ஆம் தேதி சென்னை கீழ்க்கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது. இக்கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறை விசாரணையினை முடுக்கி விட்டது.

இதற்கிடையில் திருப்பூரிலுள்ள ஆலுக்காஸ் என்ற நகைக்கடையில் சுமார் 10 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் "வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று, கொள்ளை நடந்த மறுநாளே காவல்துறை கூறியதோடு, அந்த நகைக்கடையின் பின்புறம் நடந்து கொண்டிருந்த கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த வடநாட்டைச் சேர்ந்த பணியாளர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தியது. இதற்கிடையில், சென்னையிலுள்ள பல்வேறு வங்கிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளிலிருந்தும் கொள்ளை நடந்த வங்கிகளில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் இரு வங்கி கொள்ளைகளிலும் ஈடுபட்டவர் என்று ஒருவரின் புகைப்படத்தை நேற்று சென்னை கமிசனர் திரிபாதி வெளியிட்டார். அத்துடன், கொள்ளையர்களைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசும் அறிவித்தார். அவர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய 12 மணி நேரங்களிலேயே, அவர் வெளியிட்ட புகைப்படத்திலுள்ளவர் எனக் கருதப்படுபவர் தங்கியிருந்த இடம் குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. நேற்று நள்ளிரவு அந்த வீட்டைச் சுற்றி வளைத்தக் காவல்துறையினரை நோக்கி, அந்த வீட்டிலிருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் இரு காவல்துறை ஆய்வாளர்கள் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் அந்த வீட்டிலிருந்த கொள்ளையர்கள் எனக் கருதப்படும் வினோத் குமார், வினய் குமார், ஹரீஷ் பிரசாத், சகி கரே, அபே குமார் ஆகிய 5 பேரும் பலியானதாகவும் காவல்துறை அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தில் எழும் சந்தேகங்களையும் கேள்விகளையும் பார்க்கும் முன்னர், தமிழகத்தின் தற்போதைய சில பிரச்சனைகளைப் பார்த்துவிடுவோம்.

கருணாநிதி தலைமையிலான குடும்ப ஆட்சியின் ஊழல் அட்டூழியத்தாலும் தொடர் மின்வெட்டினாலும் வெறுத்துப்போய் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கடந்த தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சியைக் கைமாற்றினர். ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் இந்நாள்வரை தமிழக மக்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு அளவில்லை. அவரது எதேச்சதிகார அகங்காரப்போக்கினால் தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி போன்றவற்றின்மூலம் மக்கள் பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கப்பட்டதோடு, மாணவர்களின் கல்வி பந்தாடப்பட்டது. தொடர்ந்து, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்களின் தினசரி வாழ்வாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டது. இதன் உச்சகட்டமாக, கடந்த ஆட்சியில் சுமார் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு ஜெயலலிதாஆட்சியில் 8-12 மணி நேரமாக ஆகி தமிழகம் இருளில் மூழ்கியது.

இவ்வாறு ஒரு பக்கம் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மக்கள் பிரச்சனையைப் பேசவேண்டிய தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவும் எதிர்கட்சி கேப்டன் விஜயகாந்தும் நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என சினிமா பாணியில் சவால் விட்டு சட்டமன்றத்தைக் கோமாளிகளின் மைதானமாக்கிக் கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் முதலமைச்சர், எதிர்கட்சியினரையும் தன் உடன்பிறவா தோழி சசிகலா குடும்பத்தினரையும் சிறையில் தள்ளுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளார். இந்நிலையிலேயே சென்னை வங்கி கொள்ளைகள், திருப்பூர் நகைக்கடை கொள்ளைகள் என தமிழகத்தின் சட்டம், ஒழுங்கும் பாதிப்புக்குள்ளானது. இவை அனைத்தும் நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய தலைவலியைக் கொடுக்கப் போகிறது என்ற உண்மை எவ்வாறு மக்களுக்குத் தெரியுமோ அதேபோன்று, உளவுத்துறை மூலம் முதலமைச்சருக்கும் தெரியும் என்பதை மனதில் இருத்திக் கொண்டு, நேற்று இரவு காவல்துறை நடத்தியுள்ள என்கவுண்டர் விசயத்திற்குள் போவோம்.

நேற்றிரவு நடத்தப்பட்டதாக கூறும் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள்தான் இரு வங்கி கொள்ளைகளிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் எனவும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 14 லட்சம் ரூபாயும் 7 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் எழும் சந்தேகங்களும் கேள்விகளும்:

1. ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் சிலரை அவ்வீட்டைச் சுற்றி வளையம் அமைத்திருக்கும் காவல்துறையினரால் உயிருடன் பிடிக்க முடியாதா? மயக்கம் ஏற்படுத்தும் கையெறிகுண்டைத் தூரத்திலிருந்து வீட்டிற்குள் வீசினால் மட்டும் போதுமே, எவ்வித தாக்குதலோ சேதாரமோ இன்றி அவ்வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் உயிருடன் பிடிக்க முடியுமே? இதற்கான வசதி தமிழகக் காவல்துறையினரிடம் இல்லையா? ஒருவேளை, அவ்வாறு கையெறி குண்டெல்லாம் வீசும் அளவுக்கு அந்த வீட்டில் எந்த ஒரு இடமும் திறந்திருக்கவில்லை என்றால், திறந்த வெளியிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்பாக வீட்டிலிருந்த ஐந்து பேருமே கொல்லப்பட்டது எப்படி? யாரையோ காப்பாற்ற கொள்ளையர்கள் பற்றிய தடயங்களை வெளிஉலகுக்கு தெரியாமல் காவல்துறை அழித்துள்ளதோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

2. த ஹிந்து என்ற பத்திரிக்கையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் பகுதியிலுள்ள யசோதா என்ற பெண்மணி காவல்துறை நேற்று இரவு 10 மணியளவில் அவ்வீட்டைச் சூழ்ந்து வளையம் அமைத்துக் கொண்டது என கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. பின்னர் சுமார் 2 மணி நேரம் அந்த வீட்டிலிருந்தவர்களுடன் காவல்துறை பேச்சுநடத்திக் கொண்டிருந்ததாகவும் சுமார் 12.30 மணிக்குத் தாக்குதல் துவங்கியதாகவும் அரை மணி நேரத்துக்குள் தாக்குதல் முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் செலவழித்தக் காவல்துறையினருக்கு, ஒரே ஒருவரைக்கூட உயிருடன் பிடிக்க முடியாமல் அனைவரையுமே சுட்டுக் கொலை செய்யும் சூழல்தான் அங்கு இருந்தது என்பது நம்பும்படியாகவா உள்ளது?

3. அதே சமயம், காவல்துறை கமிசனர் திரிபாதி அளித்துள்ள பேட்டியில், நள்ளிரவு 12.20 மணிக்குக் கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் வீடு குறித்த தகவல் கிடைத்ததாகவும் இரவு 1 மணிக்குப் பின்னர் தாக்குதல் நடந்ததாகவும் கூறியதாக மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. முன்னர் கூறிய த ஹிந்து நாளிதழில், அந்த வீட்டின் பக்கத்திலுள்ள வீட்டிலுள்ளவர்கள் நள்ளிரவு நன்றாக தூங்கியதாகவும் அவ்வாறு தாக்குதல் நடந்ததாக எந்தச் சத்தமும் தாங்கள் கேட்கவில்லை எனவும் காலையில் எழும்போது அப்பகுதியில் காவல்துறையினர் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவற்றில் யார் கூறுவது சரியான தகவல்? கமிசனர் திரிபாதி கூறியதாக மாலைமலர் வெளியிட்டுள்ள செய்தி சரியான தகவல் என்ற அடிப்படையில் பார்த்தால்...

4. நள்ளிரவு 12.20 மணிக்குத் தகவல் கிடைத்து, அந்த வீட்டைச் சுற்றி வளைத்த காவல்துறையினர் இரவு இரண்டு மணிக்குள் அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். முன்னதாக, வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறை SRM கல்லூரியில் பொறியியல் படித்த ஒரு மாணவனின் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த வீட்டினுள் இருந்த மற்ற நான்குபேரும் கொள்ளையர்கள்தான் என்று எதன் அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது?

5. வீட்டைச் சுற்றி வளைத்தப்போது, வீட்டிலிருந்தவர்கள் காவல்துறையினரைச் சுட்டதில் இரு ஆய்வாளர்கள் காயம் அடைந்ததாகவும் அதன் பின்னரே அவர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றது எனவும் பின்னர் வீட்டைச் சோதனை போட்டதில் 7 கைத்துப்பாக்கிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. காவல்துறை கூறுவது உண்மையாக இருக்கும் நிலையில், அந்த வீட்டிலிருந்தவர்கள் பயங்கரவாதிகள் என்பதில் மாற்று கருத்தில்லை. துப்பாக்கி சகிதம் எதற்கும் தயாராக இருந்துள்ளவர்கள் சாதாரண கொள்ளையர்களாக இருக்க முடியாது. இவர்களின் பின்னணியில் பெரிய பயங்கரவாத கும்பல் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன்னிலையில் காவல்துறை நிறுத்தினாலே, காவல்துறை கூறியுள்ள இக்கதையினை நம்ப முடியும். இல்லையேல், இவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; கொள்ளையர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதமும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறை சொல்வது அனைத்தும், காவல்துறை "சொல்வதாகவே" இருக்கும்! உண்மை அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்!

6. அந்த வீட்டிலிருந்து 14 லட்ச ரூபாய்க் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. கொல்லப்பட்ட 5 பேரும்தான் கொள்ளையர்கள் எனில், இரு வங்கிகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள பல லட்சக்கணக்கான ரூபாய் எங்கே? நகைகள் எங்கே? கொள்ளையடித்த இந்த ஒரு மாதத்திலேயே பல லட்சக்கணக்கான ரூபாய்களையும் நகைகளையும் செலவழித்துத் தீர்த்து விட்டனரா? என்ன அண்ணாமலையா? அந்த ரூபாயும் கைத்துப்பாக்கிகளும் ஏன் காவல்துறை வைத்து எடுத்ததாக இருக்கக்கூடாது?

7. கொள்ளையர்கள் சுட்டு படுகாயமடைந்ததாக கூறப்படும் இரு ஆய்வாளர்களின் உடலிலிருந்து துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறதே? உண்மையா?

8. கொல்லப்பட்ட ஐந்து பேரும் 20,000 அட்வான்ஸும் 5,000 ரூபாய் வாடகையும் பேசி அந்த வீட்டில் குடியிருந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவர்கள் அவ்வீட்டில் இருக்கின்றனர் எனவும் இதுவரை சந்தேகத்துக்கு இடமான வகையில் அவர்களிடம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் வித்தியாசமான எந்த சத்தமும் கேட்கவில்லை எனவும் அண்டைவீட்டிலுள்ளோர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில், திட்டமிட்டு கொள்ளையடிக்க வருவோர் கொள்ளை நடந்த பின்னரும் ஒரு மாதத்துக்கும் மேலாக அதே வீட்டிலேயே இருந்தனர் என்று கூறுவது நம்பும்படியாக உள்ளதா?

9. "உரிமைக்காகப் போராடும் தமிழகத்திலுள்ள பல்வேறு அமைப்புகளுக்குத் தமிழக அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை இது" என மதுரையிலுள்ள மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கூறியுள்ளார். எனில், கொல்லப்பட்டவர்கள் யார்?

10. இறுதியாக ஒரே ஒரு கேள்வி: நடத்தப்பட்டுள்ளது ஒரு என்கவுண்டர் என்பது உண்மை. ஆனால் அது போலி என்கவுண்டரா? அல்லது உண்மையான தாக்குதல்தானா என்பது மட்டும்தான் இப்போது தெரியவேண்டியுள்ளது! அண்மைக் காலமாகவே தமிழக காவல்துறை ராவணன், திவாகரன், நடராஜன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்து மேலிடத்தைத் திருப்தி படுத்தும் வேலைகளில் பிசியானதால், சட்டம் ஒழுங்கை சரியாகக் கவனிக்க இயலாத நிலையில் உள்ளதை சரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக நடத்தப் பட்டதோ இந்த என்கவுண்டர் என்ற சதேகமும் தொக்கி நிற்கிறது! நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுச் சீரழிந்ததால் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முகத்தைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர், வடமாநிலத்தைச் சேர்ந்த அப்பாவிக் கட்டடத் தொழிலாளர்களைப் போட்டுத்தள்ளி நடத்தப்பட்ட அக்மார்க் நாடகமாக இல்லாதிருக்கட்டும்!

முகநூலில் படித்தது!



சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 11:31 pm

சிவா wrote:என்கவுன்டரை விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: வங்கி கொள்ளையர்கள், "என்கவுன்டரில்' கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, சென்னை, தி.நகர், போலீஸ் துணை கமிஷனர், மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, இன்று விளக்க அறிக்கை அனுப்பினார். அவ்வறிக்கையின் அடிப்படையில், ஆணையத்தின் புலனாய்வு பிரிவு, இந்த "என்கவுன்டர்' சம்பவம் பற்றி விசாரித்து, நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மக்களைச் சமாதானப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. என்ன கொடுமை சார் இது
ஒரு விசாரணைக் கமிஷன் அமச்சிட்டா
என்கவுண்டர் கதை கந்தலாயிடும்ன்னு
அவுகளுக்கு தெரியாதா என்ன?




பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Feb 24, 2012 11:56 am

சிவா wrote:இன்று இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுதுமே ஆட்சியாளர்கள் ஆணவப் போக்குடன் நடந்து கொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் மக்களின் எழுச்சியின் மூலம் இதுபோன்ற ஆணவ அரசுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சூப்பருங்க

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Feb 24, 2012 4:03 pm

மக்களை பாதுகாப்பது அரசின் கடமை போலீசுக்கு ஒரு சல்யூட் மனித உரிமையை பார்த்தால் பல மனித உயிர்கள் போகும் நிலை உருவாகும் குற்றம் பெருக பெருக தண்டனை சட்டங்களை கடுமையாக்கவேண்டும் அப்பொழுதுதான் எங்கௌண்டர் நடக்காது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக