புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2012 12:37 pm

பனி விலகாத அந்தக் காலை வேளையில் தெருவில் நடந்தால் இட்லி, சாம்பார் மணம் வீசுகிறது... மாரியம்மன் கோவில் ஒலிபெருக்கியில் `செல்லாத்தா... செல்ல மரியாத்தா...' என்று எல்.ஆர். ஈஸ்வரி குரல் ஒலிக்கிறது... சற்றுத் தள்ளி ஐயனார் குதிரை கம்பீரமாக நிற்கிறது...

நீங்கள் படிப்பது, ஒரு தமிழக கிராமத்தைப் பற்றிய வர்ணனை இல்லை. தமிழ்நாட்டில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மலர்ந்திருக்கும் ஒரு `தமிழ்க் கிராமம்' குறித்த விவரத்தை.

மணிப்பூர் மாநிலத்தில், மியான்மர் நாட்டையொட்டி ஒடுங்கிக் கிடக்கும், முழுக் கிராமமும் அல்லாத, முழு நகரமும் அல்லாத ஊர் இது. ஊரின் பெயர் மோரே. அன்றாடம் மியான்மர்வாசிகள் (பர்மாக்காரர்கள்) வந்து சரக்குகளை அள்ளிச் செல்லும் இந்த ஊரில் சரளமாகப் புழங்குவது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு தொலைவில் உள்ள ஊருக்கு தமிழும், தமிழர்களும் வந்தது எப்படி? அது, சுவாரசியமும், சோகமும் பூசிய கதை.

இந்த மோரேயில் 1960-களில் பூர்வீக குடிகளான குக்கி மலைவாழ் மக்கள்தான் சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். ஆனால் 1962-ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவப் புரட்சி, மோரேயின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது.

மியான்மரின் புதிய ராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் இருந்து ஜனநாயகத்தை மட்டும் துரத்தவில்லை, இந்தியர்கள் போன்ற வெளிநாட்டவரையும் -அவர்களில் பெரும்பான்மை யானவர்கள் தமிழர்கள்- அங்கிருந்து துரத்திவிட்டார்கள்.

தாய்மண்ணான தமிழகம் திரும்பிய மியான்மர் தமிழர்கள் இங்கு முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய நிலை. மியான்மர் சுற்றுச்சூழல், வாழ்க்கை, உணவுமுறைக்குப் பழகிப் போயிருந்த பல தமிழர்களால் இங்குள்ள சூழலுக்கு ஒத்துப் போகவும் முடியவில்லை.

மியான்மர் ஏக்கத்திலிருந்து மீள முடியாத சில குடும்பங்கள் மீண்டும் அந்நாட்டுக்கே திரும்ப முடிவு செய்தன. அப்போது கடல்வழிப் பயணமெல்லாம் சாத்தியமேயில்லை. ரெயில், சாலை வசதியும் சிலாகிக்கும்படி இல்லாவிட்டாலும், எப்படியோ ஏழு மியான்மர் அகதி தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருந்து மியான்மர் எல்லையான மோரே வந்து சேர்ந்தன. அவர்களைப் பின்பற்றி இன்னும் இரண்டு குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்தன.

எல்லோருமாக மீண்டும் மியான்மருக்குள் ஊடுருவினார்கள். ஆனால் அவர்களைப் பிடித்துவிட்ட மியான்மர் அரசாங்கம், மோரேயில் உள்ள இந்திய போலீசிடம் ஒப்படைத்தது. சுவாசித்து வளர்ந்த மியான்மருக்குள்ளும் நுழைய முடியாமல், தமிழ்நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் திரிசங்கு நிலையில் தவித்தன அந்தத் தமிழ்க் குடும்பங்கள்.

சரி, மியான்மர் ஓரமாக மோரேயிலேயே தங்கிவிடலாம் என்றால் அதற்கும் பிரச்சினை. உள்ளூர் போலீஸ், தமிழர்களை அங்கிருந்து கிளப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தது. ஆனால் அந்தக் கஷ்ட காலத்திலும் ஒரு சிறு ஒளி பிறந்தது தமிழர்களுக்கு.

``அப்போது இங்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியாக ஒரு ஆந்திராக்காரர் இருந்தார். தமிழர்களை இங்கிருந்து வெளியேற்ற நடக்கும் முயற்சி பற்றி அவர் அறிந்தார். உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு, குக்கி கிராமத் தலைவருடன் பேசி சமரசம் செய்தார். சுமார் 40 தமிழ்க் குடும்பங்கள் மோரேயில் செட்டிலாகவும் வழி பிறந்தது'' என்கிறார் கே.பி.எஸ். மணியன்.

இவர், மோரேயில் 1967-ம் ஆண்டு தமிழர்களால் தொடங்கப்பட்ட நேதாஜி நினைவு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள, இரு நாடுகளுக்கும் சொந்தமில் லாத நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களாகப் பணிபுரியத் தொடங்கினார் கள் தமிழர்கள்.

ஆனால் தமிழர்களுக்கே உரிய புத்திசாலித்தனமும், உழைப்பும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்தன. கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். சட்டபூர்வமாகவும், கொஞ்சம் சட்டப்பூர்வம் அல்லாமலும் மியான்மருக்கு பொருட்களை அனுப்பத் தொடங்கினார்கள்.

``அப்போதெல்லாம் இங்கே அதிகப் பாதுகாப்புக் கெடுபிடி இல்லை. எனவே தமிழர்கள் வியாபாரத்தில் செழிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் செழுமை, மேலும் பல தமிழர்களை மோரேக்கு ஈர்த்தது'' என்கிறார், மோரேயில் வசிக்கும் தமிழர்களில் மூத்தவரான 92 வயது முத்தையா.

தற்போது மோரேயின் மக்கள்தொகை 30 ஆயிரம். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே. இப்பகுதியின் பூர்வீக குடிகளான குக்கிகள், எண்ணிக்கையில் இரண்டாமிடத்துக்குப் போய்விட்டார்கள்.

``மியான்மரை ஒட்டியிருப்பதால் மோரேயும் மியான்மர் போலத்தான். நாங்கள் இங்கு செட்டிலானதற்கு ஒரு முக்கியக் காரணம், இங்கு கிடைக்கும் பர்மிய அரிசி. நாங்கள் அனைவருமே பர்மிய அரிசிக்கும், அந்நாட்டு உணவுக்கும் பழகிப் போய்விட்டோம். இங்கு தங்களை நிலைநிறுத்திக் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், தங்களைப் போல அகதிகளான தங்கள் உற்றார், உறவினர்களை இங்கு அழைத்துக் கொண்டார்கள். 1990-ம் ஆண்டுவாக்கில் இங்கு தமிழ்க் குடும்பங்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆனது. இப்பகுதியில் தனிப்பெரும் சமூகமாகிவிட்டோம் நாங்கள்'' என்கிறார், மோரே தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக தமிழர்கள் மோரேயில் வசிப்பதால், இங்கு ஒரு நடை போட்டால் எங்கும் தமிழ் அடையாளம். `பளிச்'சென்று வர்ணம் பூசப்பட்ட கோவில்கள், இட்லி, தோசை வியாபாரம் செய்யும் தெருவோரக் கடைகள்... அதைவிட ஆச்சரியம், இங்கு வந்து செல்லும் மியான்மர்காரர்களும், மண்ணின் மைந்தர்களான குக்கிகளும் கூட தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 40 லட்ச ரூபாய் வர்த்தகம் தமிழ் வார்த்தைப் பரிமாற்றத்திலேயே நடக்கிறது. தமிழர்கள், குக்கிகள் கலப்பு மணமும் பரவலாகக் காணப்படுகிறது.

இதெல்லாம் மோரேயின் அழகான பக்கங்கள் என்றால், பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.

இப்பகுதியின் மற்றொரு பூர்வீக இனத்தவரான நாகாக்கள் பிரச்சினையைப் பற்ற வைத்தார்கள். மோரே தங்களுக்குத்தான் சொந்தம் என்று போர்க்கொடி பிடித்தார்கள். தொடர் விளைவாக பல்வேறு சமூகங்களுக்கு இடையே நெருக்கடிகள், புகைச்சல்கள் அதிகரித்தன. 1995-ல் தமிழர்களுக்கும், குக்கிகளுக்கும் இடையிலான மோதலில் இரு தரப்பிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இப்போது நிலைமை பரவாயில்லை என்றபோதும், தமிழர்களுக்கு முந்தைய பாதுகாப்பு உணர்வும், நிம்மதியும் இல்லை. இங்கே எஞ்சியிருப்பது மூவாயிரம் தமிழ்க் குடும்பங்களே. கல்வி வசதி போன்றவை போதுமான அளவில் இல்லாதிருப்பதும் தமிழர்களை தொடர்ந்து மோரேயில் வசிப்பது குறித்துச் சிந்திக்க வைத்திருக்கிறது.

ஆனால் 30 வயதாகும் ஞானசேகர் போன்றோருக்கு மோரேதான் தாய் பூமி. இவர் தலைமுறையினர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். கல்வி, வேலைவாய்ப்பு என்று வெளியிடங்களுக்குப் பறந்தாலும், அவ்வப்போது மோரே வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

``மோரேயில் வந்திறங்கியதும்தான் சொந்த ஊரில் காலடி வைக்கும் உணர்வு ஏற்படுகிறது'' என்கிறார் ஞானசேகர்.

பஸ்களும், ஜீப்களும் புழுதி கிளப்பியபடி ஊர்ந்துகொண்டிருக்க, ஒரு வித்தியாச வரலாற்றைச் சுமந்தபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது மோரே.

தினதந்தி

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2012 12:39 pm

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM01

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM02

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM03

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM04மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM05மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM06

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 21, 2012 1:04 pm

பார் எங்கும் என் தமிழ் மக்கள் உள்ளனர் என்பதில் பெருமிதம் எனக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக