புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 17, 2012 7:36 pm

First topic message reminder :

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?



மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)


ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.


குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .



விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.


அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 3:27 pm

இரா.பகவதி wrote:சரி , மகாபிரபு அண்ணா யார் முதலில் வந்தது

இந்தியாவிற்கு முதலில் வந்ததவர்கள் போர்தூகீசியர்கள் தான். இதியாவிற்கு வணிகம் செய்ய வந்த வெளிநாட்டினரை வரிசை படுத்தினால்,

போர்துகீஸ்
டச்
ஆங்கிலேயர்
டேனிஷ்
ஃபிரெஞ்சு


என வரிசை படுத்தலாம், அதே சமயம் கிழக்கிந்திய கமபணியை யார் முதலில் துவங்கினார் என்று வரிசை படுத்தினால்,

டச் (1602)
ஆங்கிலேயர் (1611)
டேனிஷ் (1616)
ஃபிரெஞ்சு (1664)


என வரிசை படுத்தலாம். அதே போல் தொழிற்சாலை துவங்கியவர்களை வரிசைப் படுத்தினால்

போர்ச்சுகீஸ் (1502 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமா வால் கொஞ்ச்சினில் அமைக்கப்பட்டது)

டச் (1605 ஆம் ஆண்டு மசூலிப்பட்டணத்தில் அமைக்கப்பட்டது)

ஆங்கிலேயர் (1616 ஆம் ஆண்டு தெற்கில் மசூலிப்பட்டணத்திலும், 1633 இல் கிழக்கிந்தியாவில் ஹரிகர்பூர் மற்றும் பெலசூர் (ஒரிஸ்ஸா) லும் தங்கள் முதல் தொழிற்சாலையை துவங்கினர்)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 3:34 pm

சூப்பர் டூப்பர் தகவல்.ஆனால் ஆண்டு இடம் ஆகியவற்றை நினைவில் வைப்பது சற்று சிரமம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 18, 2012 3:50 pm

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வாச்கோடாகாமா முதன் முதலில் 1498 இல் கேரளாவில் உள்ள கள்ளிகோட்டை எனும் கொழிகோடை அடைந்தார். இதுவே உலக நாடுகள் இந்தியா மீது ஆர்வம கொண்டு வணிகம் செய்ய வர அடிகோலியது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 3:52 pm

இதுவரை, உள்ள தகவல்களில் யாருக்கேனும், சந்தேகம் இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம், அடுத்து, கலகங்கலைப் பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் காண உள்ளோம்.

இந்த கேள்வியின், முக்கியமானப் பகுதியாக இவை இருக்கும்.





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 4:21 pm

அதிபொண்ணு wrote:சூப்பர் டூப்பர் தகவல்.ஆனால் ஆண்டு இடம் ஆகியவற்றை நினைவில் வைப்பது சற்று சிரமம்


நன்றிகள் தோழி, ஆம், சற்று சிரமம் தான், ஆனால், மறு வாசிப்பிற்கு விடும் பொழுது, ஆண்டுகள், எளிதாய் நினைவில் வந்துவிடும். ஒவ்வொன்றிலுமொரு குறிப்பிட்ட வருடத்தை நினைவில் வைத்திருந்தால், போதும், அனைத்தையும் நினைவில் வைக்க வேண்டியது இல்லை.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வாச்கோடாகாமா முதன் முதலில் 1498 இல் கேரளாவில் உள்ள கள்ளிகோட்டை எனும் கொழிகோடை அடைந்தார். இதுவே உலக நாடுகள் இந்தியா மீது ஆர்வம கொண்டு வணிகம் செய்ய வர அடிகோலியது.


ஆம், அண்ணா, இது தான் முக்கிய காரணம். வாஸ்கோ ட காமாவை பற்றி பேசும் பொழுது, அவர் எந்த வழியாக இந்தியா வந்தார் என்பதையும், என்ன காரந்த்திற்காக வந்தார் என்பதையும் தெரிய வேண்டும்.

அவர் ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக கடல் வழி வாணிபம் செய்ய, ஒரு சிறந்த கடல் வழியை கண்டறியவே வந்தார். அதன் படி சிறந்த கடல் வழியையும் கண்டறிந்தார். காரணம் அதற்கு முன்பு சில்க் ரோட் கேரவன் ரூட்ஸ் என்ற கடல் வழியை பயன்படுத்தி வந்துள்ளனர், அதில் செல்ல பெரும் பணம் செலவானதாலௌம், அந்த வழி பாதுகாப்பாற்று இருந்ததாலுமே இந்த முயற்சியை வாஸ்கோ ட காமா கையில் எடுத்தார்.

இவர் கோழிக்கோடு வரும்பொழுது அங்கே ஜமோரின் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார்.





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 8:36 pm

சரி நண்பர்களே கலகங்களைப் பற்றி காண்போம்,

ஜாட்ஸ் கலகம் (Rebellion of Jats)1669

காரணம்

1. இஸ்லாம் மீது பற்று கொண்ட ஔரங்கஷிப், இந்தியாவை இஸ்லாம் தேசமாக மாற்ற நினைத்து, இஸ்லாமை அரசின் மதமாக அறிவித்தது.

2. இஸ்லாம் அல்லாத பிற மதங்களுக்கும், அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்கு தடை விதித்து, இஸ்லாம் வழிவகைகளை மக்களிடையே ஊக்குவித்தது .

3. இஸ்லாம் அல்லாதவர்களை, இஸ்லாமிற்கு மாற கட்டாயப்படுத்தியது. இந்து கோவில்களை இடித்து அழிக்க உத்தரவிட்டு அழித்தது. கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டது.

4. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, கடுமையான வரிவிதிப்பு, அதாவது அக்பரால், ஒழிக்கப்பட்ட ஜெஸ்ஸியா வரியை (Jiziya Tax)மீண்டும் கொண்டு வந்தது,

5. உற்பத்தியாளர்கள் தங்களின் மொத்த உற்பத்தியில், பெரும் பகுதியை ஜாகிர் (Jagir) ஆக அரசற்கு செலுத்த ஆணையிட்டது.

5. இந்த கட்டணத்தை வசூலிக்கும் ஜாகிர்தார்களின் அடிக்கடி இடமாற்றம். இந்த இடமாற்றத்தால், உற்பத்தியாளர்கள் இரண்டு முறை ஜாகிர் செலுத்த வேண்டி வந்தது, அதாவது, ஏற்கனவே இருந்த ஜாகிர்தாரிற்கும் செலுத்த வேண்டும், புதிதாக வந்தவருக்கும் செலுத்த வேண்டும், இது ஒரே உற்பத்திக்கு இரண்டு முறை ஜாகிர் செலுத்தும் படி ஆனது.


இது போன்ற ஔரங்கஷிப் இன் சமயக்கொள்கைகளும், மக்கள் மீதான அடக்குமுறைகளும், ஜாட்ஸ் கலகத்திற்கு வழிவகுத்தன.

ஜாட்ஸ் கலகத்தின் முக்கிய நிகழ்வுகள்

1. ஜாட்ஸ் கலகம் 1669 இல் கோகுலா (Gokula) என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது.

2. இதன் முதல் கலகம் இந்துக்களின் மீதான சமய அடக்குமுறைக்கு எதிராகவும், ஔரங்கஷிபின் ஆட்சிக்கு எதிராகவும் நடத்தப்பட்டது.

3. ஔரங்கஷிப் ஆல் நியமிக்கப்பட்ட, அதிகாரி அப்துன் நபி (Abdun Nabi) 1661 இல் மதுராவில் (Mathura) இருந்த இந்துக் கோவிலை இடித்து, அங்கிருந்த இந்து பெண்களை இழிவாகப் பேசி, அந்த கோவில் இருந்த இடத்தில், மசூதியை எழுப்பினார்.

4. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவே, 1669 இல் ஜாட்கள் கோகுலாவின் தலைமையில் அப்துன் நபியை (Abdun Nabi) கொன்று, டெக்ஸில் ஆஃப் சதாபாயை (Looted Tehsil of Sadabai) கவர்ந்துகொண்டு வந்தனர்.

5. இதன் பின்ன 1670 இல் கேஷவ் ராய் (Temple Keshav Rai) கோவிலை இடித்து தள்ளும் படி ஔரங்கஷிப் உத்தரவிட, அந்த கோவிலும் இடித்து தள்ளப்பட்டது. மேலும், இந்து கோவில்களை புதுப்பிக்கவும் கட்டவும் தடைவிதிக்கப்பட்டது, ஏற்கனவே ஔரங்கஷிப் ஆல் இடிக்கப்பட்டு புதிபிக்கப் பட்ட கோவில்கள் மீண்டும் இடிக்க உத்தரவிடப்பட்டது.

6. இதனால் கொதித்த கோகுலா, 20000 பேரை திரட்டிக்கொண்டு, தனக்கு எதிராக ஔரங்கஷிப் ஆல் அனுப்பப்பட்ட, சில முஸ்லிம் படைகளை எதிர்த்து வெற்றி கண்டார். இருந்தும் டில்பத் போரில் (Battle of Tipat), கோகுலா வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார். பின் ஜாட்கள் கடுமையாக தண்டனைக்குள்ளானார்கள்.

7. கோகுலாவிற்கு பின், ராஜா ராம் (Raja Ram) தலைமைப் பொறுப்பை ஏற்று, மொகலாயர்களுக்கு, தங்களால் ஆனா, எதிர்ப்புகளை தந்த வண்ணம் இருந்தனர். இவரும் 1688 இல் கொல்லப்படவே, இவருக்கு அடுத்த்தாக சுரமான் (Churaman) (Nephew of Raja ram), ராஜா ராமின்அண்ணன் மகன் ஆவார், இவர் ஜாட்களுக்கு தலைமை வகித்தார்.

8. இவ்வாறு ஒருவர் பின் ஒருவர் ஜாட்களை தலமை தாங்க, ஜாட்களின் கலகம், ஔரங்கஷிப் இறக்கும் வரை இருந்து கொண்டே இருந்தது.

9. இறுதியில் ஜாட்கள் தங்கள் சுய ராஜியத்தை, தலைநகர் பரத்பூரில் (Capital of Bharatpur) நிறுவினர்


இவ்வாறு ஔரங்காஷிப்பின் சமய கொள்கையாலும், இந்துக்கள் மற்றும் இஸ்லாம் சாராதவர்கள் மீதான அடக்கு முறையாலும், மக்களிடம் அவப்பெயரைப் பெற்றார். .




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 19, 2012 9:51 am

இதுவரை கண்டவற்றைப் பற்றிய சிறு குறிப்பு : மறு அலசல்

1. மொகலாயப் பேரரசைப் பற்றி மிகச் சிறு குறிப்புடன் துவங்கி, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கலகங்களை வரிசை படுத்தினோம் (ஜாட்ஸ் கலகம், சத்னமீஸ் கலகம், சீக்ஸ் கலகம்)

2. மொகலாயர் ஆட்சி காலத்தில் தான், ஆங்கிலேயர் உள்ளே வருகின்றனர், அப்படியென்றால், முதலாவதாக வந்த ஆங்கிலேயர் (கேப்டன் வில்லியம் ஹக்கீன்ஸ் Captain William Hawkins) யார் என்பது பற்றி அலசினோம்.

3. ஆங்கிலேயர்களுக்கும், மொகலாயர்களுக்கும் ஏற்பட்ட முதல் போர் பற்றி (பிளாசிப் போர் 1757 Battle of Plassey) பற்றியும், இது ஏற்பட காரணமாக இருந்தது (பிளாக் ஹோல் ட்ராஜடி Black Hole Tragedy) என்றும் அறிந்தோம், மட்டுமின்றி, மொகலாயர் ஆட்சியின் பெரும்பான்மையை முடிவிற்கு கொண்டு வந்த (பக்ஸார் போர்1764 Battle of Buxar) பற்றியும் அறிந்தோம்.

4. இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவரை, அவர்கள் வந்த ஆண்டை வைத்தும், கிழக்கிந்திய கம்பனியை தொடங்கியதை வைத்தும், தொழிற்சாலைகளை முதலாவதாக யார் துவங்கினார்கள் என்பதை வைத்தும் வரிசை படுத்தினோம்.

5. இறுதியாக, கலகங்களைப் பற்றி அறிய துவங்கி, ஜாட்டுகளின் கலகம் (Rebellion of Jats) பற்றி, அறிந்து கொண்டோம்.

இது வரை நாம் கண்டுள்ளவை இவையே. இவற்றில் இருந்தே, நுண்ணறிவைப் பெற நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கலாம். உதாரணமாக சில கேள்விகள்,

1. பிளாக் ஹோல் ட்ராஜடி (Black Hole Tragedy) என்று கூறினோமே, அது என்ன, எப்பொழுது நடந்தது, அந்த நிகழ்வின் விளைவு என்ன? எனக் கேள்வி எழுப்பலாம்?

2. ஔரக்ங்கக்ஷிப் இன் ஆட்சிக் காலத்தில் மட்டும் தான் கலகங்கள் ஏறப்பட்டனவா, மற்ற அரசர்களின் காலத்தில் ஏற்படவில்லையா, அப்படி ஏற்பட்டு இருந்தால், அக்கலகங்கள் யாவை, அவற்றின் காரணம் யாவை, அப்படி எந்த ஒரு கலகமும் ஏற்படவில்லை என்றால், அதற்கு நிச்சயம் அரசர்களின் சிறந்த ஆட்சியே காரணமாக இருந்திருக்கும், அப்படி சிறப்பாய் ஆட்சி புரிந்தவர்கள் யார். என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பலாம்.

3. ஔரங்காஷிப் இன் சமயக் கொள்கைகள் தான், ஜாட்களின் கலகத்திற்கு காரணம் என்றால், இதற்கு முன் ஆட்சி புரிந்து வந்த ஷாஜகான் பின்பற்றி வந்த சமயக் கொள்கை யாது, அதற்கு முன்பிருந்தவர்களின் சமயக் கொள்கைகள் யாவை? என கேள்வி எழுப்பலாம்.


இது போன்று சில கேள்விகளை எழுப்பி, விடையை தேடி அலசி, முக்கிய விஷயத்தை பொறுக்கி, கோர்த்து அறிந்தாலே, நாம் இந்த தலைப்பில் நுண்ணறிவைப் பெற்று விட முடியும்.

அடுததாக, சத்னமீஸ் கலகத்தை பற்றி காண்போம், அதற்கு முன் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம், மேல உள்ள உதாரண கேள்விகளுக்கு யாரேனும், விடை காண முயற்சிக்கிறேன் என்று விரும்பினால், தெரிவிக்கலாம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 19, 2012 5:40 pm

அடுத்து,

சத்னமீஸ் கலகம் (Rebellion of Satnamis) 1672

காரணங்கள்

1. ஜாட்களின் கலகத்திற்கு காரணமாக இருந்த, இஸ்லாமிய சமயக் கொள்கைகளும், இந்து கோவில் இடிப்பும், ஜெஸ்சியா வரியை மீண்டும் கொண்டு வந்ததும் காரன்மாக்க இருந்தன.

2. ஆனால், சத்னாமிக்களை இந்த காரணங்கள் கலகம் செய்யும் அளவு தூண்டவில்லை. காரணம்,

3. மொகலாய வீரர் ஒருவர், சத்னாமி ஒருவரை கொன்றதான், விளைவாகவே, 1672 இல் சில சத்னாமிகள் ஒன்றாய் இணைந்து, அந்த வீரரை கொன்றதுவே, கலகத்தின் துவங்க காரணமாக அமைந்துள்ளது.


நிகழ்வுகள்

1. மொகலாய வீரர், சத்னாமியைக் கொன்றதும், அதற்கு பலி தீர்க்கும் விதமாக சத்னாமிகள் ஒன்றிணைந்து அந்த வீரரை 1672 இல் கொன்றதும் கலகத்தின் முக்கிய நிகழ்வில் ஒன்றாகும்.

2. ஆனால், சரியான படை பாலமோ ஆயுத பலமோ இல்லாத, சத்னாமிகள் பெரும்பான்மையான இடங்களில், மொகலாயப் படைகளால், வீழ்தப்பட்டனர்.

3. இந்த செயலால், கோவமுற்ற ஔரங்கஷிப், ரடன்டஸ்கான் என்பவரின் தலைமையில் படையை அனுப்பி 5000 கும் மேற்பட்ட சத்னமிகளை கொன்று குவித்தனர்.

4. இருந்தும் சத்னாமிகள், மொகலாயர் மீது கொண்டிருந்த சீற்றம் குறையவில்லை, சத்னாமி சமூகத்தை சார்ந்த வணிகர்கள், உழவர்கள், பொற்கொல்லர்கள், என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து, மசூதிகளையும் தகர்ந்தேறிந்துள்ளனர், இவர்களின் சீற்றத்தை, மொகலாய வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்பவரான, சகி முஸ்டைத் கான் (Saqi Mustaid Khan) தனது குறிப்பில் வியந்து கூறியுள்ளார்.

5. இவர்களின் இந்த செயலால், நாட்டின் ஒரு சில பகுதிகளில், அதாவது ஆக்ரா மற்றும் அஜ்மர் போன்ற இடங்களில் உள்ள இந்துக்களிடம் ஒன்றுமையும், ஔரங்காஷிபிற்கு எதிராக குரலெழுப்பும் ஒரு ஆர்வமும் ஏற்பட்டது எனலாம்.

6. இதனால் ஆத்திரமுற்ற ஔரங்காஷிப், தனது சொந்த கட்டளையிடு, 10000 ஆயிரம் போர் வீரர்களை அனுப்பி, சத்னாமிகளை அடக்கினார்.

இவையே சத்னமீஸ் கலகத்தின், முக்கிய காரணங்களும், நிகழ்வுகளும் ஆகும்.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 21, 2012 10:17 am

சீக்ஸ் கலகம் (Rebellion of Sikhs)(1708 முதல் 1799)

காரணம்

1. சீக்ஸ்களின் கலகத்திற்கு, காரன் என்று பார்த்தால், மொகலாயர்களின் சமயக் கொள்கையோ, மற்ற கடுமையான சட்டங்களோ முக்கிய காரணமாக இல்லை.

2. சீக்ஸ் குருவான குரு கோவிந்த் சிங் மீதும் அவரைப் பின்பற்றியவர்கள் மீதும், ஹிந்து மற்றும் மொகலாய அரசர்கள் மேற்கொண்ட தாக்குதலே காரணமாக அமைந்துள்ளது.

3. மற்றுமொரு முக்கிய காரணமாக இருந்தது சீக்கியர்களின் கொள்கை, அதாவது, அனைத்து மக்களுக்கும், சமமான நீதி, அது அரசியல், சமய , பொருளாதாரம் என ஏதுவாக இருந்தாலும், அனைவருக்கும் சம உரிமை என்ற அவர்களின் இந்த கொள்கையும் இக்காலகத்திற்கு காரணமாக அமைந்தது.

நிகழ்வுகள்

1. பண்டா சிங் பகதூர் தலைமையிலான சீக் படைகள் மொகலாயர்களுடன் போரிட்டு பல இடங்களை தங்கள் வசம் கொண்டது, அவற்றில் சில சிர்கிண்ட்(Sirhind), சமனா(Samana), காபுரி(Kapuri) மற்றும் பல இடங்களை அவர்கள் கைப்பற்றினர்.

2. மேலும் பஞ்சாப் முதல் லாகூர் வார பல இடங்களை, பண்டா சிங் பகதூர் தலைமையிலானா படைகள் கைப்பற்றின.

3. கொரில்லா போர்களும்1716-1768, இந்த கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 21, 2012 10:23 am

நன்றி பிஜி முகலாய பேரரசை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்...அப்படியே பேரரசை ஆண்ட மன்னர்களின் சிறப்பையும் சொல்லவும்



Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக