புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:42 am

அந்த வைகறை அவனுக்குப் புத்துணர்வுமிக்கதாக அமைந்தது. திறந்திருந்த அவனது ஜன்னலில் இளம் தென்றல் நுழைந்து அவன் மெலிந்த வெற்றுடம்பில் மோதியது. நேற்றிரவின் நிகழ்ச்சிகளை அவன் மீண்டும் தன் மனத்திரையில் சுழலவிட்டான்...

மாமி அரைமணிநேரத்துக்கும் மேலாக அவனிடம் பேசியிருந்துவிட்டு "இனி படிக்கிற வேலையைப் பாருடா கண்ணு... ஏதோ இதெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணித்து,சொன்னேன்... என்னோட வாழ்க்கையெல்லாம் நினைச்சுப்பாத்தா எனக்கு அழுகையே வந்துடும்டாம்பீ...ஏதோ நீ இங்கே இருக்கறதாலெ கொஞ்சம் உங்கிட்டே சொல்லி ஆசுவாசப்படுத்திக்கிறேன்...இனி நீ படிக்க ஆரம்பிச்சுடு..என் கதையைக் கேட்க ஆரம்பிச்சா அப்றம் விடிஞ்சிடும்..!" மனசில்லாமலே அறையைவிட்டுப் போய்விட்டாள். போகும்போது அவள் முகத்தில் ஒரு திருப்திகலந்த நிம்மதி தென்பட்டதை கவனித்தான் மூர்த்தி. அவள் போனதும் அறையில் சட்டென ஒரு வெறுமை படர்ந்துவிட்டதையும் உணர்ந்தான்.

மாமி பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க அவளுக்கு ஒரு ஆள்வேண்டும்! தான் பேசுவதை யாராவது உன்னிப்பாகக் கேட்பதில் அவளுக்கு பரமதிருப்தி, அவ்வளவுதான்! அலுக்காமல் சளைக்காமல் எப்படி ஒரு ஈடுபாட்டுடன் கோர்வையாகக் கொட்டித் தீர்க்கிறாள்!



அவளது குழந்தைத்தனமான பேச்சிலும் முகபாவங்களின் அபிநயிப்பிலும் அவனுக்கு ஒரு ஆர்வமும் உற்சாகமும் கிட்டியிருந்தது..அவளது குரலும் களங்கமற்ற முழுமையான சிரிப்பும் அவனுள் ஓர் ஆழ்ந்த உவகையை முகிழ்க்கச் செய்தன..அவளது அருகாமையில் அவனுக்கு விவரிக்க இயலாததொரு அமைதியும் ஆசுவாசமும் கிட்டிற்று.

சூரியன் வரவர தன் செங்கதிர்களை வெளியே நீட்ட ஆரம்பித்தான். தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்களில் பலப்பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகளைப்போல மினுமினுத்தன வண்ணவண்ண வட்டங்கள்.

மாமியின் முகத்தை உடனே பார்க்கணும் போல் தோண, பக்கத்து அறைகளை வாடகைக்கு விடும்பொருட்டு ஓரமாய் தனியே கட்டப்பட்டிருந்த குளியலறைக்குச் சென்றான். குளித்துக் கொண்டிருக்கையில் அவனுள் ஒருவித உற்சாகம் தலைகாட்ட, அவன் வாய் ஏதோவொரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தது. விரைந்து எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அவசரமாய்க் கிளம்பி முன்புற வாசல் வழியாய் மெஸ்சுக்குப் போனான். மெஸ் பூட்டப்பட்டிருந்தது. கதவை உற்றுக் கவனித்தான். அதில் இன்று மெஸ் விடுமுறை என்று ஒரு அட்டை தொங்கிற்று. அந்த அட்டையை ஒட்டி ஒரு வெள்ளைத்தாளில் ஏதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தான். அவசரமாய் அதை எடுத்துப்பிரித்தான். அதில்,

"மூர்த்திக்கு, புவனாவுக்கு உடம்புக்கு மிக மோசமாகிவிட்டதால், அவசரமாய் ஆஸ்பத்ரி போகிறோம். நீ இன்று வேறெங்காவது சாப்பிட்டுக்கொண்டு, தொடர்ந்து படி..எங்களைப் பார்க்க எங்கும் வரவேண்டாம்.."

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:42 am

அவனை சட்டென ஓர் வெறுமை சூழ்ந்துகொண்டது. எந்த ஆஸ்பத்ரிக்குப் போயிருப்பார்கள். காரைக்குடியில் ஆங்காங்கே ஏழெட்டு தனியார் ஆஸ்பத்ரிகள் இருக்கும்.. எதில் போய்ப் பார்ப்பது?

புவனாவுக்கு என்ன ஆச்சு! நல்லாத்தானே இருந்தாள்! கடவுளே.. புவனாவுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது! நெஞ்சு படபடத்தது மூர்த்திக்கு..

கால்கள் துவள, சரளைக்கல் சாலையில் ஏறி தார்ச்சாலை நோக்கி நடந்தான்.. இப்போது இளவெயில் அவன் கண்களைக் குத்திற்று. கண்களை லேசாகக் கசக்கிவிட்டுக் கொண்டான். ஏதோ தூசுபட்டது போல் வலது கண்ணில் எதுவோ உறுத்திற்று..மேலும் கசக்கினான்.. கண்களில் நீர் பொங்கி, பார்வையை மறைத்தது..கடவுளே..புவனாவுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது..அவள் நலமாய் சிரித்தபடி வீடுதிரும்பவேண்டும்!

தார்ச்சாலை பஸ் நிறுத்தத்தில் புவனா போலவே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.. எப்படி அழகாகச் சிரிப்பாள் புவனேஸ்வரி.. அவளிடம் பேசி எத்தனை நாட்களாகிவிட்டன!

கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்தபடி பஸ் நிறுத்தத்தை அடைந்தான் மூர்த்தி. சாப்பிட எங்கு போவது? ஒரே குழப்பமாக இருந்தது. இன்று கல்லூரி வளாகத்தில் தட்ஷினியும் வனஜாவும் ஸ்ரீ£தருடன் சேர்ந்து படிப்பார்கள்..

தனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது, எதுவும் ஒரு சீராக இல்லாமல்! திடீரென அவனுக்கு வீட்டு ஞாபகம்வேறு வந்துதொலைத்தது. ‘காரைக்குடியில் பிள்ளை சமத்தாகப் படிச்சுக்கிட்டிருக்கும்..’ என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.. அப்பாவுக்கு ரொம்ப நாளா ஒரு ·போன்கூட செய்யவில்லை..(அவர்கள் வீட்டில் ·போன் இல்லை.. கிராமத்தின் கடைத்தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில்தான் ·போன் இருக்கிறது.. கடைக்காரரிடம் விஷயத்தைச் சொன்னால் அது அப்பாவுக்குச் சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும்.. அவர்கள் கிராமத்திலிருந்து இன்ஜினியரிங் படிக்கும் முதல் ஆள் இவன்தான் என்ற மரியாதைவேறு ஊர்க்காரர்களுக்கு உண்டு.) ஸ்டடி லீவ் விட்டிருப்பதுகூட அவர்களுக்குத் தெரியாது..சொன்னால், ‘ஏம்ப்பா, இங்கெ வந்து வீட்டுலெ கஞ்சி தண்ணியெக் குடிச்சுக்கிட்டு ஆத்தங்கரைப்பக்கமோ, மாந்தோப்புக்கோ போயி காத்தாடப் படிக்கவேண்டியதுதானே..' என்பார் அப்பா..

யோசித்தபடியே நடந்து மெயின் ரோட்டின் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றான். அங்கு பஸ்ஸ¤க்காக நின்றிருந்த பெண் தன் இடக்கையை நீட்டி அப்போது வந்த டௌன் பஸ்ஸை நிறுத்தினாள்..அந்தப் பஸ்சின் நெற்றியில் எழுதப்பட்டிருந்த ஊர்ப்பெயரைப் படித்துப்பார்த்தான்.. அது..ந..நந்தினியின் ஊராயிற்றே! ஒருகணம் யோசித்த மூர்த்தி, பஸ் கிளம்பும் தருவாயில் கம்பியைப் பிடித்துத் தொற்றிக்கொண்டான். அப்போது நந்தினியின் முகமும் அவள் கண்களில் மெலிதாய்ப் படர்ந்திருக்கும் சோகத்தின் சாயையும் அவனுக்கு ஞாபகம் வந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:51 am

நந்தினியின் கிராமமான புதுக்குடியில் மூர்த்தி இறங்கியபோது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. பஸ் ஸ்டாப்பில் ஒரு பெரிய அரசமரம். அதன் இலைகள் ஏறுவெயிலுக்கு பளபளத்து மின்னின. சற்றுநேரம் அதன் நிழலில் ஒதுங்கிநின்றான் மூர்த்தி. அரச இலைகள் காற்றின் விசைக்கேற்ப சளசளத்தன. அரசமரத்தினடியில் ஒரு சிறு வேப்பமரம்..அந்த இடமே குளுகுளுவென்றிருந்தது...

சற்றுநேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு அரசமரத்துக்கு நேர் எதிரே ஊருக்குள் சரிந்து செல்லும் செம்மண்சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சாலையோரம் கருவமரங்கள் அடர்ந்திருக்க, அதன் காய்களைத் தின்ன எம்பிக்கொண்டிருந்தன சில ஆடுகள். வேறு உயரமான மரங்கள் ஏதும் அங்கு இல்லாததால் கன்னத்திலும் தலையிலும் சுள்ளென்று அறைந்துகொண்டிருந்தது வெயில். சற்றுதூரம் நடந்ததும், இரண்டாகப் பிரிந்துபோனது தெருச்சாலை. திடீரென எந்தச் சாலையில் போவதென்று விளங்காமல் திகைத்துநின்றான் மூர்த்தி. எதிரே சில கிராமவாசிகள் அவனை உற்றுப்பார்த்தபடி நடந்துவந்தார்கள். யாரிடமாவது கேட்கலாமென்றால் அது அவ்வளவு உசிதமாகத் தெரியவில்லை.

அவனுக்கு வலப்புறமாய்ப் பிரிந்த மண்சாலையில் நடக்க ஆரம்பித்தான். சாலையோரமாய் ஒரு கீற்றுக்குடிசை. அதில் ஒரு டீக்கடை. அங்கு ‘நந்தினியின் வீட்டுக்கு எப்படிப் போவது?’ எனக் கேட்க முனைந்தான். கடைக்கார ஆள் கருப்பாய் உடம்பில் சட்டையில்லாமல் இருந்தான். வயது நாற்பது, நாற்பத்தைந்து இருக்கும். மேலேற்றி முறுக்கப்பட்ட அடர்ந்த மீசையுடன் சாலையை வெறித்துக்கொண்டிருந்தான். அவன் முகக்குறிப்பில் தெரிந்த கேள்விக்குறியைக்கண்டு சற்று பயந்துபோனான் மூர்த்தி. அவன் பார்வை ‘நீ யார்?’ என்று கேட்பதுபோல் இருந்தது. வேண்டுமானால், ஒரு மரியாதைக்காக ‘நீங்க யார்..எங்கேருந்து வர்றீங்க?’ - இப்படிக் கேட்கக்கூடும் அவன். என்ன பதில் சொல்வது..

மூர்த்தி போனவாரம் இங்கு வந்ததோ நட்டநடு நிசியில்.. ரயிலில் விழுந்து சாகப்போன நந்தினியின் வறண்ட எலும்புகள் துருத்திய கரங்களைப் பற்றியபடி அந்தக் கும்மிருட்டில் அவன் இந்த ஊருக்குள் நுழைந்தபோது அவனை யாரும் பார்த்திருக்கவில்லை. பிறகு மறுநாள் திரும்பிப் போகும்போது மணி எட்டாகியிருந்தது. தட்ஷிணியுடன் படிப்பதற்காக நேரமாகிவிடும் என்பதால் நந்தினி தடுத்தும் விரைந்து கிளம்பிவிட்டான். ஊருக்குப் புதிதாகையால் இங்கு நீண்டநேரம் தங்கியிருப்பதும் நல்லதில்லை என்றும் தோணிற்று. கிளம்பும்முன் நந்தினியை இரண்டாம் முறையாக முழுமையாக புசித்திருந்தான். கொல்லைக்கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தவளை ஈரம் சொட்டச்சொட்ட அள்ளிக்கொண்டுபோய் நடுவீட்டில் சாணம் மெழுகிய தரையில் போட்டு.... சில நொடிகளில் உலர்ந்து ஆவியானது அவளது மெல்லிய ஈர உடல். அந்த இளம்காலையில் அவள் மிகவும் வேர்த்துப்போனாள். அவன் தோள்களில் ஒரு பூங்கொடிபோல் படர்ந்துகொண்ட அவள், “என்னை நீங்க எப்பவும் மறந்துறப்பிடாது..ஆமா..”என்று மயங்கிய குரலில் சொல்லிவிட்டு திடீரென்று அவன் மார்பில் ஆழமாகக் கடித்துவிட்டாள். ‘படிக்கிறதுக்காக சீக்கிரம் ஹாஸ்டலுக்குப் போகணும்’ என்று அவன் முனகியபோது, அவனைப் பிடிவாதமாய்ப் பிரிய மறுத்து தன் பிடியை மேலும்மேலும் இறுக்கிக்கொண்டாள்..

டீக்கடையைத் தாண்டி கொஞ்சம் வேகம்கூட்டி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அந்தக் டீக்கடைக்காரன் "அலோ..இங்கே கொஞ்சம் வாங்க." என்று அவனைக் கூப்பிட்டேவிட்டான்.. போச்சு..

அடிவயிற்றில் அமிலம் சுரக்க, மெதுவாகத் திரும்பி, "எ..என்ன.." என்றான் மூர்த்தி.

"இல்லே.. ஒங்களெ எங்கியோ பாத்திருக்கனே தம்பீ.. யார் வீட்டுக்கு வந்திருக்கியே இப்ப..டீ சாப்டுறீயளா?" என்றான் டீக்கடைக்காரன்.அப்போது டீக்கடைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தாள் ஒரு சின்னப்பெண்..

"அப்பா..இவர்தாம்ப்பா அன்னிக்கு நம்ம நந்தினியக்காவெ காப்பாத்துனவரு. நந்தினி தாத்தாகூட உங்ககிட்டெ சொன்னார்லெ?" என்றாள் அவள்.

"அடடே..வாங்க ஸார்.. நீங்கதானா அது.. அன்னிக்கு நீங்க பஸ்ஸேறப் போனப்போ இங்கேதான் உட்கார்த்திருந்தார் நந்தினி தாத்தா.. உங்களைக் கூப்ட்டார். நீங்க காதிலே வாங்காமப் போயிட்டீங்க.. அப்பொ உங்களைப் பின்னாலேர்ந்து பாத்தது."

"அப்டீங்களா.. எனக்கு அவர் அப்பக் கூப்ட்டது காதுலே விழலையே."

"நந்தினி பாவம்..அவளுக்கு எங்கியாவது ஒரு வேலைவாங்கிக் குடுத்தீங்கன்னா உங்களுக்குப் புண்ணியாமாப்போகும். அதோட தாத்தா வயசானவர். தன் வயித்தக் கழுவுறதே அவருக்குச் செரமம். சாப்பாட்டுக்கு வழியில்லாமெ ரொம்பத் தவிக்குது நந்தினி. ரொம்பப் பரிதாபமாயிருக்கு காரைக்குடிலெ ஏதாவது ஆஸ்பத்ரி இதுகள்லே. ஒரு ஆயா வேலையாவது வாங்கிக் குடுத்தீங்கண்டா..."

"ட்ரை பண்றேன் ஸார்.."

"நீங்க படிச்சபுள்ளே..உங்களுக்கு நாலுபக்கம் தொடர்பு இருக்கும்.."

"ம்ம்..இருக்கு..பாப்பம்.."

"இப்டி உக்காருங்க தம்பீ..நீங்க டீ சாப்ட்டுத்தான் போகணும்.."

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:51 am

அங்கிருந்த மரப்பெஞ்ச்சில் உட்கார்ந்துகொண்டான்.. ச்சே. இவரைப்போய் தப்பா நினைச்சுட்டோமே. இனி உருவத்தையும் மீசையையும் வைத்து யாரையும் எடைபோடக் கூடாது போல!

"இவ என் மக..எட்டாங்கிளாஸ் படிக்கிறா." என்றபடி டீயை ஆற்றினார். அவரது மகள் உள்வாசலில் நின்று மூர்த்தியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். யாரோ ஒரு நடுவயதுப் பெண் உள்ளிருந்து எட்டிப்பார்த்து "வாங்க." என்றாள். டீக்கடைக்காரரின் மனைவியாக இருக்கலாம். நந்தினியைக் காப்பாற்றியதால் தன்னை பெரிய ‘ஹீரோ’ என்று நினைத்துகொண்டார்களோ என்னவோ..!

கடவுளே..! ஏன் இப்படியெல்லாம் சொல்லிவைச்சதுமாதிரி நடக்குது! எனக்கு இது நல்ல காலமா, பொல்லாத காலமா.. இதெல்லாம் எல்லாருக்கும் நடக்கக்கூடியதா, இல்லை எனக்குமட்டும்தான் இப்படியா..

"தம்பீ..நீங்க இனி நமக்குச் சொந்தக்காரர்போல.. எப்பவேணாலும் நம்மகடைக்கு வாங்க.. போங்க. நந்தினி வீட்லதான் இருக்கா. பாவம் இப்பக்கூட சாப்ட்டுச்சோ இல்லியோ. இங்கேதான் அப்பப்போ வரும்..கடைச் சாமாங்களெ வெளக்கிக்கழுவிப்போடும்..அப்டியே ரெண்டு இட்லியெத் தின்னுட்டுப்போகும், பாவம்..”

மூர்த்தி சற்றே எரிச்சலடைந்தான்.. ஏன் எப்போதும் நந்தினியை ‘பாவம்..பாவம்..’ என்கிறார் இந்த ஆள்..

"அவ எனக்கு மக மாதிரி தம்பீ..நந்தினி அம்மா எனக்கு மாமா மகதான். முதல்ல நாந்தான் அவளைக் கட்டிக்கிறதா இருந்தேன். ஆனா திடீர்னு பக்கத்தூர்க்காரனுக்குக் கட்டிக்குடுத்துட்டாங்கெ! நந்தினி அப்பன் ஒரு சந்தேகப் பிராணி. நந்தினி தனக்குப் பொறக்கலேன்னு சொல்லி அவளைத் தொரத்திவிட்டுட்டான். மொடாக்குடியன். நந்தினி அம்மாவும் இங்கேயேதான் கடையிலேயே கெடப்பா..”

இப்போதுதான் எல்லாம் புரிந்தது மூர்த்திக்கு..அடச் சை!! அசிங்கம்பிடிச்ச உலகம்டா இது.. ‘வாழ்க்கை வெறுக்குதய்யா..’ என்று பாடவேண்டும்போல் தோணியது அவனுக்கு.

"அப்றம் பாருங்க, மீனா..அதான் நந்தினியோட அம்மா..அவபோய் யார்ட்டயும் சொல்லாமே ரயில்லேபோய் விழுந்து உயிரெ மாச்சுக்கிட்டா." ஆற்றி முடித்து டீயை அவனிடம் நீட்டினார். அவரது கண்கள் பனித்திருந்தன. அவர் கிட்டத்தட்ட அழுதுவிடும் தருவாயில் இருந்தார்..

டீயை அவசர அவசரமாகக் குடித்துமுடித்தான். அப்போதுதான் அவனுக்கு தான் இன்னும் சப்பிடாதது ஞாபகம் வந்தது. எங்குபோய் ஒளிந்துகொண்டதோ பசி..

டீக்கு காசுகொடுக்க முனைந்தபோது கட்டாயமாக வேண்டாம் என்று மறுத்துவிட்டார் டீக்கடைகாரர்..மேலும் தன் மகளைக் கூப்பிட்டு "வேதவள்ளி..ஸாரை கூட்டிட்டுப்போய் நந்தினி வீட்லே விட்டுட்டு வா." என்றார்.

மூர்த்தியோடு நடக்கும்போது "சார்..அன்னிக்கு கொளத்துலே நான் தண்ணிதூக்க வந்தப்ப நீங்க பல் விளக்கிட்டிருந்தீங்களே, ஞாபகம் இருக்கா சார்." என்று திருத்தமாக் கேட்டாள் வேதவள்ளி..

"ம்ம்..நீதானா அது." என்று இழுத்தான் மூர்த்தி..

"நீங்க கொளத்தங்கரைக்குப் போனப்ப நந்தினிக்கா இங்க வந்து அவரைப் போய் பாத்துக்கோன்னு சொல்லிவிட்டுச்சு சார். புது ஊரா, யாரும் எதும் கேட்பாங்கன்னு.. அதான் நான் தண்ணிதுக்குறாப்லே வந்தேன் சார்.."

"யாரும் கேட்டா என்ன சொல்லிருப்பே.."

"எங்க சொந்தக்காரங்கன்னு சொல்லிருப்பேன்.. நந்தினிக்காதான் அப்டி சொல்லச் சொல்லுச்சு.." - சிறு பெண்ணுக்கான உற்சாகக்குரலில் சொல்லிவிட்டு அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் முகம் சிவப்பாய் வட்டமாய் இருந்தது. காதுகளில் சிறிய தங்கச் சிமிக்கிகள் வெயிலில் பளபளத்து ஆடின..

நம்மைச் சுற்றி நம்மையறியாமல் என்னென்னவெல்லாம் நடக்கிறது! ஒரே ஆச்சர்யமாயிருந்தது மூர்த்திக்கு..

"நீ ஒரே பொண்ணா..அண்ணந் தம்பீ யாராவது.."

"யாருமில்லே சார்..நந்தினிக்காதான் எனக்கு சொந்த அக்காமாதிரி.. அப்பா அடிக்கடி சொல்வார்.நந்தினிக்காவுக்கு அன்னிக்கு எதாவது ஆகிருந்தா நாங்கள்ளாம் வாழ்க்கையே வெறுத்திருப்போம்.."

"சரி..சரியான வாயாடியா நீ இருக்கியே வள்ளி.. நந்தினி உன்னை மாதிரி வாயாடியா, இல்லே, பேசுறதுக்குக் கூலி கேக்குமா?"

டக்கென வாயில் கைவைத்து வெட்கிச்சிரித்தாள் வேதவள்ளி "நா வாயாடியா..எங்கூர்லே அவ அவ எப்டியெல்லாம் பேசுவாளுக தெர்யுமா சார்..எல்லாம் டீவீ பாத்துக் கெட்டுப்போச்சுங்க சார்.."

அடர் ப்ரௌன் கலரில் பாவாடையும் அதே கலரில் உடம்பைப் பிடித்ததுபோன்ற சட்டையும் அணிந்திருந்தாள் வேதவள்ளி..அவளது வெடிச் சிரிப்பும் இளமை ததும்பும் துள்ளல் நடையும் அவனுள் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தின..

அவன் அங்கு வருவதை முன்கூட்டியே அறிந்தவள்போல் ஓட்டமும் நடையுமான பாய்ச்சல் நடையில் அவனைநோக்கி வந்துகொண்டிருந்தாள் நந்தினி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:52 am

நந்தினி வீட்டு முற்றத்தில் கிடந்த பழைய கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தான் மூர்த்தி. அங்கிருந்த புளியமரத்தில் சளசளத்துவிட்டு அவனது பனியன் போட்ட உடம்பை ஆரத் தழுவிற்று மாலைத் தென்றல். மேற்கே இறக்கும் தருவாயில் இருந்த சூரியன் தன் கடைசி நேரக் கதிர்களை மஞ்சள் கலந்து தெளித்துக் கொண்டிருந்தான். காலையில் அவனை அங்கு விட்டுவிட்டுப் போன வேதவள்ளி இப்போதுதான் வந்திருந்து அவனெதிரே தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்: சிறுபெண் என்று சொல்லிவிடமுடியாத வளமை அவளது உடலில் விரவியிருந்தது. நந்தினியின் தாத்தா வெளியூர் போயிருந்ததால், காலையிலிருந்து நந்தினியோடேயே கழிந்தது பொழுது.அவனுக்காக உள்ளே அடுப்படியில் எதையோ சாப்பிட தயார் செய்துகொண்டிருந்தா நந்தினி. அடுப்படியிலிருந்து வந்த உணவின் வாசம் அவன் மூக்கைத் துளைத்தது.

"நந்தினி அப்பிடி என்ன தயார் பண்ணுது வள்ளி..ஒரே கமகமப்பா இருக்கு?" என்று வள்ளியிடம் கேட்டான்.

"அது சஸ்பென்ஸ்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் வள்ளி: "அக்கா சொல்லக்கூடாதுன்னிடுச்சு"

"இன்னிக்கு ஸ்கூலுக்குப் போனியா?"

"இன்னிக்கு ஸ்கூல் கெடையாது..அரையாண்டு லீவு.."

"நீ எத்தனாங் கிளாஸ் படிக்கிறே?"

"சொல்லமாட்டேன்..அதான் அன்னிக்கே அப்பா சொன்னாரே, காதுலெ வாங்கலியா" மீண்டும் சிரித்தாள் வள்ளி. அவளது பற்கள் வரிசையாக இல்லாவிட்டாலும் அவளது சிரிப்பு அவனைக் கவர்ந்திழுத்தது.

"நல்லா அழகா சிரிக்கிறே வள்ளி..வேதவள்ளி..பேரும் அழகா இருக்கு.."

"சும்மாருங்க சார்.. நந்தினிக்கா கேட்டா உங்களை அடுச்சுப் போட்டுரும்.."

"ஏன் அடிக்கும்கறே?"

"ஆமா சார்.. அக்கா உங்க மேலே உயிரையே வச்சுருக்கு.. நீங்க என்னையெ கிண்டல் பண்ணா அது எப்டி சார் பொறுத்துக்கும்?"

"அதெல்லாம் கோவிச்சுக்காது.. சரி அதெ விடு..நீ எத்தனாங் கிளாஸ் படிக்கிறே அதைச் சொல்லு.."

"பத்தாங்கிளாஸ் சார்.."

"காலையிலே உங்கப்பா நீ எட்டாங்கிளாஸ் படிக்கிறதா சொன்ன ஞாபகம்.."

களுக்கெனச் சிரித்தாள் வள்ளி: "அதான் தெரியுதுல்லே..அப்றம் ஏன் சார் கேட்டீங்க?"

"சும்மா உன்னைய டெஸ்ட் பண்ணத்தான்.."

"நீங்க பயங்கரமான ஆளு சார்.. பேசியே எல்லாரையும் கவுத்துடுவீங்க சார் நீங்க.." சொல்லிவிட்டு அவனது முகத்தையே ஆர்வமாகப் பார்த்தாள்.

"அப்போ நான் அழகா இல்லேங்கறியா?"

"அய்யய்யோ.. அப்டி எப்ப சார் சொன்னேன்? நல்லாப் பேசுறீங்கன்னுதானே சொன்னேன்.. அப்றம் ஒரு ரகசியம் சார்.. நான் இப்போ ஒன்பதாங் கிளாஸ் படிக்கணும்.. உடம்புக்கு சுகமில்லாமே ஒரு வருஷம் ஸ்கூலுக்குப் போகலே.."

"அப்டியா.. ஒனக்கு என்ன உடம்புக்கு? நல்லா கிண்ணுனுதானே இருக்கே?"

"போங்க சார்.. உங்களுக்கு எப்பப்பார்த்தாலும் கிண்டல்தான்! எனக்கு அப்பப்போ வலிப்பு மாதிரி வரும் சார்.. போன வருஷம் அடிக்கடி வந்ததாலே ஆஸ்பத்ரிலே போய் மாசக்கணக்கா தங்கி நிறைய செலவு பண்ணி என்னைக் காப்பாத்துனாங்க சார்!" - அவளது குரல் தழுதழுத்தது..

"ஏய்..வள்ளி.. அதான் எல்லாம் சரியாயிடுச்சே..அப்றம் ஏன் ரொம்ப ·பீல் பண்றே?"

"இல்லே சார்.. இன்னம் சரியாகலே சார்.. தலையிலே எதோ ஆப்ரேஷன் பண்ணணுமாம்.. அப்பத்தான் சுத்தமாக் குணமாகுமாம்.."

"அடடே..அப்டியா.." - உண்மையிலேயே வருத்தமாயிருந்தது மூர்த்திக்கு.

"ஆனா உன்னைப் பார்த்தா அப்டித் தெரியலே வள்ளி..நல்ல ஆரோக்கியாமாத்தான் தெரியிறே.."

"ஏன் சார் இப்டி ஜொள்ளு விடுறீங்க? நந்தினிக்கா வரப்போவுது..உங்களுக்கு அடி விழுகப் போகுது!"

"அவ கெடக்குறா.. நான் உன்னையத்தான் லவ் பண்றேன்.. வர்றீயா எங்கேயாவது ஓடிப்போவோம்?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:52 am

"அய்யோ, அய்யோ.. ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் சார்.." என்றவள் "அக்கா..அக்கா..இங்கே பாருங்கக்கா இவரை.. சீக்கிரம் அடை சுட்டு எடுத்துட்டு வாங்கக்கா.. இல்லேன்னா இவர் என்னைக் கொன்னுடுவார் போலருக்கு.." என்றபடி வேகமாய் எழுந்து அடுப்படிக்கு ஓடினாள்.

சற்று நேரம் கழித்து அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்த நந்தினி, " அவளை என்னங்க பண்ணீங்க?" என்றபடி ஒரு எவர்சில்வர் தட்டில் இரண்டு அடைகளை வைத்து எடுத்துவந்தாள்.

"குடு..குடு..பயங்கரமாப் பசிக்குது..கலையிலேர்ந்து சரியாவே சாப்பிடல" என்று அவசரமாய் அடையை வாங்கி அதில் ஒரு விள்ளலைப் பிய்த்து விழுங்கினான்.

"ஏன் சாப்பிடலே? அதான் மத்தியானம் பழைய சாதத்தை ஒரு புடி புடிச்சீங்களே?"

"அட ஆமா..சாப்பிட்டேன்ல? மறந்தே போச்சு!"

"ம்..மறக்கும்,மறக்கும்... எல்லாமே மறந்துருக்குமே.. அப்றம் நான் ஊட்டி விட்டதெல்லாம் மறந்துருக்குமே!"

"அய்யோ! அதை மறப்பேனா..என்னென்னல்லாம் குடுத்தே!"

"பேசாமே அடையைத் தின்னுட்டு ஊருக்குப் போங்க.. போய் படிக்கிறதுக்குப் புத்தகம்லாம் எடுத்துக்கிட்டு ராத்திரிக்கே இங்க வந்துடுங்க ஆமா.. இல்லாட்டி பரீட்சையெல்லாம் அம்போதான்..புரியுதா..?' என்று அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள் நந்தினி.

"சரி..உத்தரவு.. இனி எல்லாம் நந்தினிம்மா கட்டளைப்படிதான் நடக்கும்.."

"ரொம்பத்தான் ஐஸ் வக்காதீங்க..ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்ம்பாங்க...எல்லாம் மோகம் தீர்றதுவரைக்கும்தான்!அப்றம் எல்லாத்தையும் மறந்துட்டுப் போய்டுவீங்க!"

"சேச்சே..நான் அப்டிச் செய்ய மாட்டேன் நந்தினி.." என்றவன் அடைத் தட்டை கட்டிலின் ஓரத்தில் வைத்துவிட்டு அவளைத் திடீரெனக் கட்டித் தழுவினான்.

"அய்யோ விடுங்க.. உள்ளேர்ந்து வள்ளி வந்துடப் போகுது!" என்று அவன் பிடியிலிருந்து விலகியோடினாள் நந்தினி.

"நந்தினி..நில்லு.. என்று அவளைத் துரத்திக்கொண்டு அடுப்படிக்கு ஓடினான் மூர்த்தி..அங்கு அடுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த வள்ளி, அவன் வருவதைப் பார்த்து, "நா வீட்டுக்குப் போறேன்க்கா" என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

"சரி.. இப்பப் போயிட்டு நைட்டு இங்கே படுக்க வந்துடு.." என்றாள் நந்தினி.

"அதான் சார் துணைக்கு இருக்காரேக்கா.." என்றாள் வள்ளி பளிச்சென.
சற்று கூசிப்போன நந்தினி, " அவரு இப்ப போயிருவாருடீ..நீ வந்துரு.." என்றாள் முற்றத்தை நோக்கி வந்தபடி.

"சரி.. அப்போ நைட்டு எட்டு மணிக்கு வற்றேங்க்கா.." என்று கூறிவிட்டுப் போய்விட்டாள் வள்ளி.

நந்தினியின் முதுகுக்குப் பின் நின்று வள்ளியின் தலை மறைந்ததும் அவளை இறுக்கமாகத் தழுவிக்கொண்ட மூர்த்தி, "வள்ளி வர்றான்னா நான் புக்ஸ் எடுக்கப் போகலே..நைட் இங்கேயே தங்கிடப் போறேன்.."

"அய்யே..ஆசையெப் பாரு.. அவ சின்னப் பொண்ணுங்க..இன்னும் வயசுக்கே வரலே.." அவன் பிடிக்குள் திணறியபடி சொன்னாள் நந்தினி.

"அப்போ வரவச்சுடுவோம்!"

"ச்சீ, பேச்சைப்பாரு.. விடுங்க என்னை.. யாராவது வந்துறப் போறாங்க!"

"வீடோ தனீ வீடு! நேரமோ அந்தி நேரம்.. இப்ப யாரு வரப்போறா நந்தினி?"

"பேச்சுக்கு மட்டும் கொறைச்சல் இல்லே!"

"பேச்சு மட்டுமில்லே.. செயல்லேயும் காட்டுறேன் பாரு இப்போ.."

"புக் எடுக்கப் போகலீயா?"

"புக்காவது, ஒண்ணாவது! எல்லாம் அப்பப்போ படிச்சாச்சு! எக்ஸாம்லாம் கலக்கிருவேன் கலக்கி!"

"அப்போ நைட்டு இங்கதானா?"

"ஆமா..ஆமா..ஆமா..இப்போ படிக்க வேண்டியது இந்தப் புத்தகம்தான்!" என்றபடி அவளை முற்றத்துக் கட்டிலுக்கு அணைத்தபடியே தள்ளிக்கொண்டு வந்தான்.

முற்றத்தில் ஏற்கனவே அந்தி மறைந்து நல்ல இருள் அப்பியிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:53 am

பெண்கள் விடுதியின் மொட்டை மாடியில் தட்ஷிணியும் வனஜாவும் எதிரும் புதிருமாக உலாத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருந்த தேர்வுக்கான நோட்டுகள்..கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாக படித்துப்படித்துக் களைத்துப்போயிருந்தார்கள்..சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கைமறைக்கும் அந்தி அவர்களைச் சூழ்ந்திருந்தது.

"நான் சொல்லச் சொல்லக் கேட்டியா..இப்போ அனுபவி..!" என்று கோபம் தொணிக்க சொல்லிக்கொண்டிருந்தாள் வனஜா.

"இந்த ஸ்ரீதர் இப்டிப்பண்ணுவான்னு நினைக்கலையேடி! அப்டியே நாயாட்டம் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு அலையிறான் நாயி.."

"சரி அதெ விடு! இனி என்ன பண்ணப்போறே, அதைச்சொல்லு!"

"அவ்வளவுதான்...கம்பைண்ட் ஸ்டடிக்கு முழுக்குதான் இனி!"

"பேசாமெ மூர்த்தியோடயே படிச்சிருக்கலாம்...நீதான் அநியாயத்துக்குச் சொதப்பிட்டே! இப்போ தெர்மோடைனமிக்ஸ்லே ஊத்திக்கப்போவுது.."

"அது உனக்கு..நான் பாஸ் பண்ணிடுவேன்.."

"என்னெமாதிரி மரமண்டைக்கு அழகாப் புரியிறாப்லெ சொல்லிக்குடுத்தான் மூர்த்தி..அதிலே மண்ணு விழுந்துடிச்சு"

"எப்டியாவது படிச்சுறுவோம்டி..ஏன் ரொம்ப அலட்டிக்கிறே?"

"ஏய்..அதெ நீ சொல்லாதே! மூர்த்தி போன நாள்ளேர்ந்து அதிகம் அலட்டிக்கிர்றது நீதான்! உன் ரூம் மேட் நானு..என்கிட்டயே கதையா?"

"ச்சீ! அதெல்லாம் ஒண்ணுமில்லேடி! சும்மா அறுக்காதே! பேசாமேப் படி!"

"ஆ வூன்னா பேச்சை மாத்திர்றே! மூர்த்தி இன்னம் உன் மனசெவிட்டுப் போகலே! ஏண்டி அதை மறைக்கிறே!ஏங்கிட்டே உள்ளதைச் சொல்லக்கூடாதா!"

x

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:53 am

பெண்கள் விடுதியின் மொட்டை மாடியில் தட்ஷிணியும் வனஜாவும் எதிரும் புதிருமாக உலாத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருந்த தேர்வுக்கான நோட்டுகள்..கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாக படித்துப்படித்துக் களைத்துப்போயிருந்தார்கள்..சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கைமறைக்கும் அந்தி அவர்களைச் சூழ்ந்திருந்தது.

"நான் சொல்லச் சொல்லக் கேட்டியா..இப்போ அனுபவி..!" என்று கோபம் தொணிக்க சொல்லிக்கொண்டிருந்தாள் வனஜா.

"இந்த ஸ்ரீதர் இப்டிப்பண்ணுவான்னு நினைக்கலையேடி! அப்டியே நாயாட்டம் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு அலையிறான் நாயி.."

"சரி அதெ விடு! இனி என்ன பண்ணப்போறே, அதைச்சொல்லு!"

"அவ்வளவுதான்...கம்பைண்ட் ஸ்டடிக்கு முழுக்குதான் இனி!"

"பேசாமெ மூர்த்தியோடயே படிச்சிருக்கலாம்...நீதான் அநியாயத்துக்குச் சொதப்பிட்டே! இப்போ தெர்மோடைனமிக்ஸ்லே ஊத்திக்கப்போவுது.."

"அது உனக்கு..நான் பாஸ் பண்ணிடுவேன்.."

"என்னெமாதிரி மரமண்டைக்கு அழகாப் புரியிறாப்லெ சொல்லிக்குடுத்தான் மூர்த்தி..அதிலே மண்ணு விழுந்துடிச்சு"

"எப்டியாவது படிச்சுறுவோம்டி..ஏன் ரொம்ப அலட்டிக்கிறே?"

"ஏய்..அதெ நீ சொல்லாதே! மூர்த்தி போன நாள்ளேர்ந்து அதிகம் அலட்டிக்கிர்றது நீதான்! உன் ரூம் மேட் நானு..என்கிட்டயே கதையா?"

"ச்சீ! அதெல்லாம் ஒண்ணுமில்லேடி! சும்மா அறுக்காதே! பேசாமேப் படி!"

"ஆ வூன்னா பேச்சை மாத்திர்றே! மூர்த்தி இன்னம் உன் மனசெவிட்டுப் போகலே! ஏண்டி அதை மறைக்கிறே!ஏங்கிட்டே உள்ளதைச் சொல்லக்கூடாதா!"

"ஏய்! சொன்னாக் கேளு! பேசாமெப் படி, ஆமா!சும்மா எப்பப்பார்த்தாலும் அறுத்துக்கிட்டு!" வெடுக்கென்று சொல்லிவிட்டு மாடிப்படியில் கிடுகிடுவென இறங்கி தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள் தட்ஷிணி.

வனஜாவுக்கு அவளை நினைத்தால் பாவமாக இருந்தது..மூர்த்தியின் பிரிவை தட்ஷிணியால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை அவன் போன முதல்நாள் இரவே கண்டுபிடித்துவிட்டள் வனஜா அன்றிரவு முழுக்க விடியவிடியத் தூங்கவில்லை தட்ஷிணி! 'அம்மா..அம்மா..' என்று விடியவிடியப் புலம்பிக்கொண்டே இருந்தாள்..ஏதோ ஓர் ஆவேசத்தில் மூர்த்தியைத் திட்டி அனுப்பிவிட்டாளே தவிர, அவனை அவள் மறக்கவில்லையென்பதை வனஜா நன்கு உணார்ந்தாள்.

ஸ்ரீதருடன் சேர்ந்து படிப்பதை இரண்டாவது நாளே விட்டுவிட்டார்கள்.

"ஸ்ரீதர் முகத்தைப் பார்த்தாலே வ்வே,கொமட்டிகிட்டு வருதுடி!" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டாள் தட்ஷிணி.

"அப்றம் ஏண்டி மூர்த்திகிட்டெ அப்டி மூர்க்கமா நடந்துக்கிட்டே?" என்று வனஜா கேட்டபோது, மெளனம் காத்தாள் தட்ஷிணி!

அப்போது தட்ஷிணியின் முகத்தைப்பார்த்துத்தான் தட்ஷிணி மூர்த்தியின் மீது அதீதப் பிரியம் வைத்திருப்பதை முதன்முதலாக உணர்ந்துகொண்டாள் வனஜ்! வாழ்க்கையில் எல்லாம் விநோதம்தான்! ஆச்சர்யம்தான்!! கோபம் என்றால் அது கோபம் மட்டும் இல்லை! அன்பான பேச்சு என்றால், அது அன்பாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை! "ம்கூம்.." என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டாள் வனஜ். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்தாள்..அதில் இப்போது ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து கண்சிமிட்டின: வானம் எவ்ளோ பெரிசு..அதில் எத்தனையெத்தனை நட்சத்திரங்கள்! அடாடா..அந்தக் கோடியில் முகம் காட்டும் பிறை நிலா எத்தனை அழகு! வனஜாவுக்கு மேனி சிலிர்த்தது..அப்படியே மொட்டை மாடியின் வெதுவெதுப்பான டைல்ஸ் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டாள்.விரிந்து பரந்துகிடந்த வானம் அவளை எப்போதுமே ஆச்சரியப்படவைக்கும் ஒன்று.கிராமத்தில் கூரைவீடாதலால் அவளுக்கு இப்படியொரு வசதி கிட்டியதில்லை..படிக்கக் கொண்டுவந்த நோட்டை தன் மார்பில் வைத்துக்கொண்டு வானத்தை, அதன் இருமையை, அதன் புதிரை வேகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தாள் வனஜா.

திடீரென அவளுக்கு மூர்த்தியின் ஞாபகம் வந்தது. 'இப்ப எங்கே,என்ன செஞ்சுக்கிட்டிருக்கானோ! அன்னா அவன் பாஸ் பண்ணிருவான் எல்லாத்திலேயும்! அவனுக்கு கம்பைண்ட் ஸ்டடி தேவையே இல்லை! அவன் வந்ததே தட்ஷிணிக்காகத்தானே! தட்ஷிணியும் சும்மாவா! அவள் ஆடிய நாடகம் எல்லாம் மூர்த்தியை ஸ்ரீதரிடமிருந்து காப்பாற்றத்தானே! இதையெல்லாம் மூர்த்தியிடம் சொல்லத்தான் அன்று வேகமாய் ஓடிவந்து மூர்த்தியைச் சந்திக்க நினைத்தாள் அதற்குள் பஸ் ஏறிவிட்டான் மூர்த்தி.. திடீரென மெஸ்ஸ்உக்கு நேரமாகிவிடும் என்று தோண, எழுந்து மெதுவாக மாடிப்படியில் இறங்கினாள். தன் அறையை நெருங்கி கதவைத் தட்டினாள்: உள்ளிருந்து தட்ஷிணியின் அழுத்தமான தொடர்விம்மல் கேட்க, அப்படியே உறைந்துபோய் நின்றாள் வனஜா.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:53 am

மாமி வீட்டு ஹாலில் மழை பெய்வதுபோல் சுழன்றுகொண்டிருந்தது மின்விசிறி. நந்தினி வீட்டிலிருந்து அப்போதுதான் வந்திருந்தான் மூர்த்தி. புவனாவுக்கருகில் நின்று அவளையே பார்த்தபடியிருந்தான்.

‘அம்மா...’ என்று விட்டு விட்டு முனகியபடி கட்டிலில் சுருண்டு கிடந்தாள் புவனா.அவளது அகண்ட விழிகள் துவண்டு, அறைகுறையாய்த் திறந்திருந்தன. போர்வையை விட்டு விலகித்தெரிந்த அவளது சிவந்த, கொலுசிட்ட பாதம் தன் மினுமினுப்பை இழந்திருந்தது.

ஹாலின் மத்தியில், ரெட் ஆக்ஸைட் தரையில் இரு கால்களையும் நீட்டி பின்னால் கைகளை ஊன்றி ஓய்வாக அமர்ந்திருந்தாள் மாமி. அவளது கத்தரிப்பூ நிறச்சேலையின் முந்தானை தளர்ந்து விலகிக்கிடந்தது.

"புவனாவுக்கு என்னதான் ஆச்சு மாமி..?" என்று கவலைதோயக்கேட்டான் மூர்த்தி.

"மொதல்லே நீ அப்டி அந்தச் சேர்லே உக்காரு.." என்று ஹாலின் ஒரு மூலையில்கிடந்த மடக்கு நாற்காலியைக் காட்டினாள் மாமி, "மணி பத்தரை ஆச்சு..சாப்ட்டியாடா..?"

மடக்கு நாற்காலியைப் பிரித்துப் போட்டு மாமிக்கும் புவனாவுக்கும் இடையில் அமர்ந்துகொண்டு, "சாப்ட்டேன் மாமி..புவனாவுக்கு என்னாச்சு சொல்லுங்கோ!" என்றான்.

"அவளுக்கு தீட்டுப் பிரச்சனைடா..நேத்திக்கு ஒரே நாள்லெ ரெண்டாயிரம் செலவு.. கார்த்தாலே போனமா..ராத்ரி பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கே வந்தோம்.. டாக்டர் ஆயிரத்து ஐநூறுக்கு மேலே மாத்திரை மருந்தெல்லாம் எழுதிக்குடுத்து, இனி எல்லாம் சரியாய்டும்னுட்டார்.."

"புவனா நல்லாத்தானே இருந்துச்சு..?"

"இதெல்லாம் நோண்டிநோண்டிக் கேட்காதே! நாளைக்குப் பரீட்சையோனோ.. போய்ப்படி..கா·பி டீ எதுவேணாக் கேளு..இந்தக் கதவைத் தொறந்து வச்சுக்கோ.." என்று ஹாலுக்கும் அவனது பக்கவாட்டு அறைக்குமான கதவைச் சுட்டினாள்.

"பேசாமெ இந்தக் கதவுலே வட்டமா ஒரு ஓட்டைபோட்டு கௌண்டர் மாதிரி பண்ணிரலாம் மாமி..இப்பிடியே டீ கா·பியெல்லாம் வாங்கிக்கலாம்ல்லெ..?"

"அது ஏண்டாம்பீ ஓட்டை போடுறே..? கதவையே முழுசாத் தொறந்து வச்சுக்கோயேன்.." என்றவள், "ஆமா..நேத்திக்கு முழுக்கப் படிச்சியா, வேறெங்கியும் போயிட்டியா.. ஏன் நைட்டுக்கூட வரலே?" என்று சட்டெனக் கேட்டாள்.

மூர்த்தி சற்றுத் தடுமாறி, "வந்து..எங்க சொந்தக்காரங்க வீடு ஒண்ணு புதுக்குடிலே இருக்கு மாமி.. சும்மா அப்டியே போய்ப் பார்த்துட்டு வரலாம்னு." என்று இழுத்தான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:54 am

"பரீட்சை நேரத்துலே ஊரூராச் சுத்தலாமோ! நீ படிக்கணும்னுதானேடா உங்கிட்ட சொல்லாமக்கூட ஆஸ்பத்ரிக்குப் போனோம்.. நீ என்னன்னா அங்கே போனேன், இங்கே போனேன்னு இப்பவந்து நிக்கறே! நீ எங்கே போய்த் தொலைஞ்சியோன்னு விடியவிடிய நேக்குத் தூக்கம்கூட வரலேடாம்பீ..கெட்டகெட்ட கனவா வேறே வந்து தொல்லை பண்ணிடுச்சு."

"ஏன் மாமி..நான் என்ன சின்னக்கொழந்தையா! அவங்க நைட்டு அங்கேயே தங்கச் சொல்லி கட்டாயப்படுத்திட்டாங்க.. பஸ் வேறே நைட்டு எட்டுமணிக்கு மேலெ இல்லே..அதான்.." பொய் சொன்னதால் அவன் குரலில் சுரத்தில்லை..

"இல்லையே.. நீ பொய் சொல்றாப்லன்னா தெரியுது.. மூஞ்சியே சொல்றதேடா..சொந்தக்காராளா, சும்மா, தெரிஞ்சவாளா..?" அவன் முகத்தை நேராகப் பார்த்துக்கேட்டாள்.

"தூரத்துச் சொந்தம் மாமீ..அப்பா அட்ரெஸ் சொல்லிருந்தார்..அதான் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு.." கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சமாளித்தான்.

"படிக்கறதை உட்டுட்டு வீடுவீடா அலைஞ்சியாக்கும்! சரி, அங்கேபோய் என்ன சாப்பிட்டே?"

மூர்த்திக்கு சட்டென நா குழறியது, "ம்ம்..? சாப்பாடா..வழக்கம்போல இட்லி, தோசைதான்.."

"திருப்பி பொய்சொல்றேடா! கிராமத்துலே ஏதுடாம்பீ இட்லியும்,தோசையும்! நேக்குத் தெரியாதா..புதுக்குடிலேர்ந்துதான் நம்ம மெஸ்லே ஒரு பொண்ணு வேலை பார்த்தா..அவா வீட்லே எப்பவும் பழையகஞ்சி, கருவாடுதானாம்!"

"எனக்கு அதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் மாமி!" பட்டெனச் சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தான் மூர்த்தி. அவன் சிரிப்பில் லயித்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி.

"அப்போ ஒங்க சொந்தக்காரா வீட்டுலே அதான் சாப்பிட்டேன்னு சொல்லு!" என்று அவளும் சிரித்தாள்.

"ஆமா மாமி..புவனாவுக்குக் கூட அதெல்லாம் குடுக்கலாம் மாமி!"

"எதெ! கருவாட்டையா!" என்று சொல்லிவிட்டு சப்தமிட்டு சிரித்துக் குலுங்கினாள்.சிரிப்பின் வேகத்தில் அவள் கண்களின் ஓரத்தில் நீர் திரண்டது.

"அவ சாப்ட்டா கருவாடு, மீன், முட்டையெல்லாம் குடுக்கலாமே மாமி! அப்பத்தானே உடம்பு தேறும்!"

இப்போது மெதுவாக கண்திறந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் புவனா. ‘இந்த உன் பேச்சுக்குத்தாண்டா இத்தனைநாள் காத்திருந்தேன்..’ என்பது போலிருந்தது அவள் பார்வை.

"அவா வீட்டுச் சாப்பாட்டெ ரொம்ப ருசிச்சுச் சாப்பிட்டிங்களோ!" என்று மெல்லிய குரலில் கேட்டாள் புவனா.

"ஆமா புவனா! அங்கே உன்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கா.. இதெல்லாம் நல்லா சமைப்பா!"

அப்போது அவனுக்கு நந்தினியின் சிரிப்பு தேங்கிய முகம் நினைவில் வந்தது. இதெல்லாம் தெரிந்தால், 'வரவர நல்லா புழுகக் கத்துக்கிட்டீங்க..' என்று சொல்லி சிரித்திருப்பாள்...

"வ்வே! அப்டியே கொமட்டிண்டு வர்றதுடா! இதெல்லாம் சொல்லாதேடா!" என்றாள் மாமி,குறுக்கிட்டு.

ஆனால், புவனா புன்னகைத்தபடி, "நீங்க எதுவேணா பேசுங்க மூர்த்தி..எனக்கொண்ணும் கொமட்டிண்டு வரலே.. நீங்க சொன்னா நான் எதெ வேணாலும் சாப்பிடுவேன்.." அவள் குரலில் அப்பட்டமாய்த் தெரிந்தது குழந்தைத்தனம்.

"எப்பப் பார்த்தாலும் புவனாவுக்கு இட்லி, தோசைன்னு சாப்ட்டு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு மாமி..அதான் இப்பிடிப் பேசுது."

"அப்போ! ஏங் கைப்பக்குவம் சரியில்லேன்றியாடாம்பீ..?" செல்லமாய்க் கோபித்துக்கொண்ட மாமி, தன் சேலையைச் சரி செய்தபடி எழுந்து, இடுப்புவரை பிரிந்துகிடந்த அடர் கருங்கூந்தலை இரண்டு கைகளாலும் அள்ளி 'லூசாய்' ஒரு ஊசிக்கொண்டை போட்டுக் கொண்டாள்.

அப்போது புவனா வலியில் துடித்து முனகினாள், "நேக்கு வலி உயிர்போறதே..! காப்பாத்துங்கோளேன்..அய்யோ..!"

Sponsored content

PostSponsored content



Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக