புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
58 Posts - 59%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
53 Posts - 58%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
22 Posts - 24%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:37 am

நடுத்தரமான கூரை வீடு. சாணம் மெழுகிய திண்ணையில் தூக்கம்வராமல் புரண்டுபுரண்டு படுத்துக்கிடந்தான் மூர்த்தி. காதுகளில் தொடர்ந்து ரீங்கரித்தபடியிருந்தது கொசு. மின்விசிறியில்லாததால் பயங்கரப் புழுக்கம். தூக்கமா, விழிப்பா, கனவா என்று தெரியாத நிலை. இந்த வீடு, கிராமத்துவீட்டை அவனுக்கு ஞாபகப்படுத்திற்று.

தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியபின்,வெகுநேரம் அவன் மடியில்படுத்து அழுதுகொண்டிருந்த நந்தினி, பக்கத்துக் கிராமத்திலிருந்த தன் தாத்தா வீட்டுக்கு அவனை அழைத்துப்போயிருந்தாள். விபரத்தைக் கேட்டு மூர்த்தியை வெகுவாகப் பாராட்டினார் நந்தினியின் தாத்தா.

“இருந்தாலும் பொம்பளைப் பிள்ளைக்கு இப்பிடி ஆக்ரோஷம் வரப்பிடாதுப்பா..அவ அம்மாவும் அப்பிடித்தான், இவளை அநாதையா விட்டுட்டு இதே ரயில்லேதான் விழுந்து உயிரை மாச்சுக்கிட்டா..இப்ப இவ..வாழையடி வாழையா வருது..”-கவலையுடன் சொல்லிப்புலம்பினார் தாத்தா. மேலும் அவர், “நா வயசானவன்..எப்பிடிப்பா இவளைக் கட்டிக்குடுக்குறது? அவளுக்கும் இருபத்திநாலு வயசாச்சு..ம்ம்..அந்தக்கதையெல்லாம் எதுக்கு உனக்கு?" என்று பெருமூச்சுவிட்டார்.

அப்புறம் சாப்பிடுவதற்கு சோளக்கஞ்சியும், கருவாட்டுக்குழம்பும் கொடுத்தார். அப்போது அது அவனுக்கு தேவார்மிதமாக இருந்தது. பசி அடங்கினாலும், புது இடமாகையால் தூக்கம்வரவில்லை.

நந்தினி வீட்டுக்குள் படுத்துக்கிடந்தாள். தாத்தா முற்றத்தில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் படுத்து குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் அடர் இருள் இருந்ததால், மணி இரண்டரை அல்லது மூன்று இருக்கும் என்று அனுமானித்துக்கொண்டான்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க தாத்தா கொடுத்திருந்த பழைய போர்வையொன்றை இழுத்து முகத்தையும் சேர்த்துமூடிக்கொண்டு வலிய கண்ணைமூடி தூங்க யத்தனித்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் கால்களில் ஏதோ பூச்சி ஊறுவதுபோல்பட,போர்வையை விலக்கிப்பார்த்தான்.

அங்கு நந்தினி நின்றிருந்தாள். சட்டென எழுந்த மூர்த்தி,“என்ன?” என்று சற்று சத்தமாகக்கேட்க, மூர்த்தியின் வாயைப் பொத்திவிட்டு “உஸ்..சத்தம்போடாதீங்க..” என்று அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். அவன் கையைப்பிடித்திழுத்து, வீட்டின் பின்புறத்துக்கு அழைத்துப்போனாள்.

அங்கு இருட்டு அப்பியிருந்த கிணற்றடி மேட்டில் அவனை அமரச்செய்த அவள், அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள். சற்று திகைத்துப்போனாலும் எதற்கும் எதிர்ப்புத்தெரிவிக்காமல் இருந்தான் மூர்த்தி.

சற்றுநேரத்தில் அவன் பாண்ட்டில் சூடான நீர்ச்சொட்டுகள் விழுந்தன. “யேய்..நந்தினி..ஏன் இப்போ அழுவுறே?” என்றவன், அவளது தோள்களில் தட்டிக்கொடுத்து, “அழாதே..இனி உனக்கு நான் இருக்கேன்..”

இப்போது மேலும் உடைந்தழுதாள் நந்தினி.அழுகையினூடே, “நீங்க இல்லாட்டி இந்நேரம் தலைதனியா, முண்டம்தனியா கெடந்திருப்பேன்..” என்று முனகினாள். அழுகை கலந்து வந்த அவள் குரலில் ஒருவித கவர்ச்சியிருந்ததை உணரமுடிந்தது. அவள் உடம்பிலிருந்து வந்த வியர்வைகலந்த புணுகு வாசம், அவனுக்கு மெல்லிய போதையாகி தடுமாறச்செய்தது.

சற்றுநேரத்தில், கிணற்று மேடை கட்டிலாக, அடர்இருள் கூரையாக, புணர்ந்துகிடக்கும் நாகங்களாய் நெளிந்துகொண்டிருந்தார்கள் இருவரும். இது முதல் நிகழ்வாகையால் மிகுந்த சக்தியுடன் இயங்கிக்கொண்டிருந்தான் மூர்த்தி.

கொல்லைப்புற மரமொன்றிலிருந்து பின்னனி இசைபோல் மாற்றிமாற்றி குரலெழுப்பிக் கொண்டிருந்தன இரண்டு கரிச்சான் குருவிகள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:38 am

சரளைக்கற்கள் நிறைந்த குளக்கரை. வேப்பங்குச்சியால் பல்விளக்கியபடி பாதிமட்டும் நிரம்பிக்கிடக்கும் குளத்துநீரைப் பார்த்து நின்றான் மூர்த்தி.நடுஇரவில் நடந்த 'அந்த' சம்பவம், அவன் மூளையில் மீண்டும் மீண்டும் காட்சியாகிக் கொண்டிருந்தது.குளத்தின் எதிர்க்கரையில் ஒரு பெரிய அரசமரம்..அதையொட்டி ஒரு பிள்ளையார்கோயில். அருகாமை வீடுகளிலிருந்து குளத்தில் நீரெடுத்துச்செல்லும் செட்டிநாட்டுப் பெண்கள்..சிலுசிலுவென உடம்பைத் தழுவிச்செல்லும் காற்று.

ஊர், உலகம், படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கேயே தங்கிவிடலாம்போல தோன்றியது.அடடா..என்ன ஒரு அழகு இந்தக் குளமும் அதன் சூழலும்!

மிகவும் ஆழமாக, கிட்டத்தட்ட பெரிய அகண்ட கிணறுபோல் தோற்றமளித்த குளத்தைச் சுற்றிலும் பெரிதும் சிறிதுமாய் வேப்பமரங்கள்.மூர்த்திக்கு வேப்பமரத்தின் குளிர்ந்தடர்ந்த நிழல் மிகவும் பிடிக்கும். கிராமத்தில் அவன் வீட்டு முற்றத்தில் வரிசையாக மூன்று வேம்புகள் இருந்ததை அவன் சிறுவயதில் பார்த்திருக்கிறான். பிறகு, அப்போது அடித்த சூறாவளியொன்றில் இரண்டுமரங்கள் வேறோடுசாய்ந்துபோக, இன்னும் நிற்கிறது மிஞ்சிய ஒருமரம்.

எல்லார் வாழ்விலும் சிறிதும்பெரிதுமாய் சூறாவளிகள் அடித்துக்கொண்டுதான் இருக்கும்போல. நந்தினியின் வாழ்வில்தான் எத்தனையெத்தனை சூறைக்காற்றுகள்! எவ்வளவுதூரம் நிலைகுலைந்து போயிருக்கிறாள் அவள்! சேச்சே! தலையை பலமாகக் குலுக்கிக்கொண்டான் மூர்த்தி. விளக்கிக்கொண்டிருந்த வேப்பங்குச்சியை எறிந்துவிட்டு, குளத்தில் இறங்கி வாய்கொப்பளித்து முகம்கழுவினான்.எதிர்க்கரையில் ஒரு குடத்தில் நீரெடுத்து லாவகமாக இடுப்பில்வைத்துக்கொண்டுபோனாள் ஒரு நடுவயதுப்பெண். அடுத்து வந்த சுமார் எட்டுவயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி ஒரு செந்நிற ப்ளாஸ்டிக் குடத்தில் நீரைமொண்டபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு இந்த சரளைக்கற்கள் நிறைந்த செட்டிநாடு பூமி மிகவும் பிடித்திருந்தது. இங்குள்ள வீடுகள் அந்தக்காலத்தில் சிங்கப்பூர், மலேசியா சென்று சம்பாத்தித்த பணத்தில் அரண்மனை போன்று கட்டப்பட்டவை. இப்போது அவை ஆளற்ற பாழ்மண்டபங்களாய்க் காட்சியளித்தன. பொதுவாக வயதானவர்களாலும், ஒருசில வேலைக்காரப் பெண்களாலும் நிரப்பப்பட்டிருந்தன அவ்வீடுகள். தெருச்சாலையின் ஒருபக்கத்தில் ஆரம்பித்து பின்புற வீதிவரை நீண்டிருந்தன இந்த செட்டிநாட்டு அரண்மனைகள். இதெல்லாம் புதிரானதொரு நிலப்பரப்பில் வாழ்வதான ப்ரம்மையை அவனுள் உண்டுபண்ணின.

காலம் தன் நீண்டநெடுங்கரத்தால் இவ்வீடுகளை இப்போது ஒளியிழக்கச் செய்திருந்தாலும் இவ்வீடுகள் பழங்காலக் கலைப்பொக்கிஷங்களாய், வலிமையுடனும் கம்பீரத்துடனும் நின்றுகொண்டிருந்தன.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:38 am

இப்படியான ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருந்த நந்தினியை, வயதானவரான வீட்டு முதலாளி பலதடவை 'முயன்று' பார்த்திருக்கிறார். அவர்பிடியில் சிக்காமல் அவள் தப்பிக்க முயற்சித்ததில் அவளுக்கு வேலை பறிபோக, யாருமற்ற அநாதையான நந்தினி, வயிற்றுப்பசியின் கொடும்பிடியில் சிக்கித்தவித்து, 'தொழில்' முறை ஏஜண்டுகளின் பிடியில் வீழ்ந்து, சீரழிய இருந்த கணத்தில்தான் அவளுக்கு இந்த தற்கொலை எண்ணம் தலைதூக்கிருக்கிறது.

பெருமூச்சுவிட்டுக்கொண்டான் மூர்த்தி. நந்தினியின் தாத்தா வீட்டைநோக்கி நடந்தான்.

தாத்தா எங்கோ வெளியில் போயிருக்க, கொல்லைப்புறத்தில் குளித்துக்கொண்டிருந்தாள் நந்தினி. அவன் வருவதையறிந்து நாணிக்குறுகிய அவளை இப்போதுதான் பகலொளியில் முழுமையாகப் பார்க்கிறான்: மாநிறத்தில், ஒரு பூங்கொடிபோல், அதீத நளினத்துடன் காணப்பட்ட அவள்,"போங்க..அங்கபோய் வீட்டுலே இருங்க..இதோ குளுச்சு முடிச்சிட்டு வந்திர்றேன்.." என்றாள், நாணம் நிரம்பிய குரலில். அடடா..என்ன ஒரு மென்குரல்! ஒரு வெண்ணிறப்பாவாடையை மார்புவரை ஏற்றிக்கட்டிக்கொண்டு கிணற்றில் நீரிரைத்து தலையில் ஊற்றிக்கொண்டிருந்தாள். வாளி கிணற்றில் இறங்கையிலும், மேலேறுகையிலும் துருப்பிடித்திருந்த உருளைக்கப்பி 'கீச்கீச்' என ஒலியெழுப்பிற்று. நந்தினியில் ஈர உடலில்பட்டு எதிரொளித்தது சூரியக்கதிர்.சுற்றிலும் வீடுகள் ஏதுமற்று ஏகாந்த அமைதியில் உறைந்திருந்தது சூழல். அருகிருந்த புளியமரத்தில் இரு காகங்கள் இவர்களைப்பார்த்தபடி மௌனித்து அமர்ந்திருந்தன.

"நந்தினி, நான் வேணா தண்ணியெறைச்சுக்குடுக்கவா?" என்றபடி கிணற்றுக்கருகில் போனான் மூர்த்தி.

"அய்யோ..வேணாம்! சொன்னாக்கேளுங்க! யாராவது பாத்துறப்போறாங்க!" என்று கிளியெனக் கீச்சிட்ட அவளை, ஈரம்சொட்டசொட்ட அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு கொல்லைப்புற வாசல்வழி வீட்டுக்குள் நுழைந்தான் மூர்த்தி.

புலியின் வாயில் முயல்குட்டியென அவன் கரங்களின் வலியபிடியில் அசைவற்றுக்கிடந்தாள் நந்தினி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:39 am

கல்லூரி வளாகத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த தட்ஷினியும் வனஜாவும் மூர்த்தி சொன்னதைக்கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

"நீ செத்துட்டேன்னே நினைச்சுட்டோம் மூர்த்தீ..இப்பிடி திரும்பிவந்து கதைவிட்டே அறுக்கிறியே.. அதுக்கு நீ அவனுங்க கையாலே அடிபட்டு செத்தே தொலைஞ்சிருக்கலாம்.." என்றுவிட்டு வாயில் கை வைத்து கண்ணில் நீர்வரச் சிரித்துக்குலுங்கினாள் தட்ஷிணி.

"ஆமா, இப்பிடிக் கதைகதையா சொல்றீயே, உனக்கு மூளைகீளை கொழம்பிப்போச்சோ!" என்று படுஅக்கறையோடு விசாரித்தாள் வனஜா.

மூர்த்திக்கு என்னசொல்வதென்று தெரியவில்லை.

"இவன் மூஞ்சியையும் முழியையும் பாத்தா அப்பிடித்தாண்டி தோணுது! பேசாம இவனைக் கீழ்ப்பாக்கத்துக்கு பஸ் ஏத்திவிட்ருவோம், வா.." என்று வனஜாவிடம் சொன்னாள் தட்ஸ்.

மூர்த்திக்கு திகைப்பு அதிகரிக்க, அவன் திடீரென பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

"பாத்தியா..நான் சொன்னேல்லே! இவனுக்கு உண்மையாலுமே பைத்தியம்தாண்டி.. தண்டவாளமாம்.. நந்தினியாம்.. சோளக்கஞ்சியாம்.. கிணற்றுமேடாம்.. இந்த நாயி ஏதோ பண்ணுச்சாம்! கதைவிடுறதுக்கு ஒரு அளவில்லையா.." -தட்ஷினி பேச்சைமுடிப்பதற்குள் குறுக்கிட்ட்டான் மூர்த்தி:

"ஆமாங்கடி...நான் பைத்தியம்தான், என்னைக் கீழ்ப்பாக்கத்துக்கு இப்பவே பஸ் ஏத்திவிட்ருங்கடி... நடந்ததைச் சொன்னா, நம்பமாட்டேன்றீங்க, இதுக்குமேலே நான் என்னதான் பண்றது,சொல்லுங்கடி! உங்களோட இருக்கேன்லே, கீழ்ப்பாக்கம்தான் போகணும், வேறென்ன பண்றது!" என்று கத்தினான்.

அவன் கண்ணில் தெரித்த கோபப்பொறியில் ஒருகணம் ஆடிப்போய் நின்றார்கள் தட்ஷினியும், வனஜாவும். இப்படியெல்லாம் இவனுக்கு கோபம் வருமா என்ன!

மூர்த்திக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிற்று! அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான்:

"சரீ..அப்பிடியே வச்சுக்கோங்க..எல்லாம் கதைதான்..நான் சொன்னதெல்லாம் கதைதான்.. ஆனா ஒண்ணு, எனக்கு மட்டும் அது கதை இல்லே! உங்களுக்கு இதையெல்லாம் ஜீரணிக்க முடியாமப்போனா நீங்க அதை கதைன்னே வச்சுக்கலாம்!"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:39 am

அவனது உரத்த கத்தலில் நிலைகுலைந்து வாயடைத்துப்போய் நின்ற தட்ஷினி,

"அப்பிடிப்பாத்தா ஸ்ரீதர் எவ்ளவோ தேவலாம்..! நீ போய் ஊராராப் போய் பொறுக்கிட்டுல்லெ வந்திருக்கே! அதுக்கு அவனே தவ்ஷண்ட் டைம்ஸ் பெட்டெர்: இப்பப் பாரு, கொஞ்சநேரத்துலே இங்க வருவான்... நான் போய் 'மூர்த்தி ஏதோ தெரியாமப் பண்ணிட்டான், அவனை மன்னிச்சுடு ஸ்ரீதர்'ன்னு சொன்ன உடனே அவனும் ஒத்துக்கிட்டான்! உன்னை மாதிரி லொள்லொள்னு விழுந்து புடுங்கலே! ஏன் இப்பிடி வெறிபிடிச்ச நாய்மாதிரி கத்துறே...நந்தினிட்டே போனியில்லே, இனி அவகிட்டயே போய்ப்படிச்சுக்கோ.. இனி ஓங்கூட சேர்ந்து படிச்சோம்னா, அப்றம் அதோகதிதான்!"

அப்போது சரியாக அங்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீதர்! "வா ஸ்ரீதர்.." என்று அவனை வரவேற்றாள் தட்ஷினி. வனஜா சுருங்கிய முகத்துடன் ஏதும்பேசாமல் நின்றுகொண்டிருந்தாள்.

மூர்த்தியைப் பார்த்த எதுவும் பேசாமல் விலகிக்கொண்ட ஸ்ரீதர், தட்ஷினியைப் பார்த்து, "தெர்மல் நோட்ஸ் உங்கிட்டே இருக்கா?" என்றான்.

"ம்! எல்லாம் இருக்கு! வா...போய்ப்படிக்கிற வேலையைப் பார்ப்போம்! இனிமே டெய்லி வந்துடு!" என்றுவிட்டு அவனுடன் லெக்சர் ஹாலைநோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவளைத் தொடர்ந்து ஸ்ரீதரும் கையில் புத்தகக்கட்டுடன் நடந்தான். எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டதுதான்போல!

டக்கெனத் திரும்பி கல்லூரி விடுதியைநோக்கி நடக்க ஆரம்பித்த மூர்த்தியைப் பார்த்து, "ஏய் மூர்த்தீ...எங்கபோறே? நீயும் வா.. படிப்போம்..." என நைந்துபோன குரலில் சொன்னாள் வனஜா. அது ஏதோ ஒப்புக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதைப் புரிந்துகொண்ட மூர்த்தி,அவளைத் திரும்பிப்பார்த்து, "தாங்க்ஸ் வனஜா...நான் இனி படிக்க வரமுடியாது...நீங்க படிங்க!" என்று பதில்சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:39 am

விடுதியறையின் தூசுபடிந்த கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்தான் மூர்த்தி. இந்த வாழ்க்கை வெறும் பாழாகத் தோன்றிற்று அவனுக்கு. இதில் ஏதும் அர்த்தமோ சாரமோ இருப்பதாய்த் தெரியவில்லை. தான் ஒரு கொந்தளித்தோடும் காட்டுவெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தான் மூர்த்தி. இதிலிருந்து மீளும் வழிதான் என்ன?

படக் படக்கெனச் சப்தமாய்த் துடித்துக்கொண்டிருந்தது இதயம்.

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா...'அவன் தாத்தா இப்படி தனக்குத் தானே சொல்லிக்கொள்வார் அடிக்கடி!

தன் நெஞ்சை ஒருமுறை தடவிப்பார்த்துக்கொண்டான்...இது உண்மையில் வெறும் காற்றடைத்த பைதான்போல...ச்சே! என்ன இது தத்துவ மழை தன்னால் பொங்குது! வாழ்வில் தோற்றவனே தத்துவம் பேசித்திரிவான் என்று எங்கோ படித்ததுவேறு அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

தட்ஷினி இப்படி உக்கிரகாளியாக மாறுவாள் என்று அவன் முற்றும் எதிர்பார்க்கவில்லை! என்ன ஒரு சூடு அவள் வார்த்தைகளில்! என்னாயிற்று அவளுக்கு?

ஒருவேளை நான் 'நந்தினி சமாச்சார'த்தை அவளிடம் இப்படிப் பச்சையாகச் சொல்லியிருக்கக் கூடாதோ? ஏன் இதையெல்லாம் அவள்களிடம் உளறித்தொலைத்தேன்! ஏன் இப்படி சரியான ஓட்டைவாயனாக மாறினேன்?

வரவர தன் சுயநிலையில்- தன் சுயகட்டுப்பாட்டில் தான் இல்லை என்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தான் மூர்த்தி.

அவனுள் திடீரென ஒரு பலம் பெருக, சட்டென எழுந்து பாத்ரூம்போய் குளித்து, உடைமாற்றி அவசரஅவசரமாய் மாமி மெஸ்ஸ¤க்கு நடந்தான். இப்போது உச்சிக்கு ஏறியிருந்த வெயில் அவன் தலைப்பரப்பில் உக்கிரமாய்த் தாக்கிற்று.

கொல்லங்காளி கோயிலை நெருங்கியபோது, கல்லூரி வளாகத்தைவிட்டு ஸ்ரீதரும், தட்ஷினியும் சாலையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்தே மூர்த்தியைக் கவனித்த ஸ்ரீதர், தட்ஷினியிடம் ஏதோசொல்லிச் சிரித்துக்கொண்டான். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

வனஜா ஏன் அவர்களுடன் வரவில்லை? முன்பே விடுதிக்குப் போயிருப்பாளோ?அவன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், வனஜாவும் அவர்களுக்குப் பின்னால் சற்றுதள்ளி வந்துகொண்டிருந்தாள். அவளும் மூர்த்தி வருவதைக் கவனித்து அவனுக்குக் கைகாட்டினாள். பதிலுக்கு மூர்த்தி கைகாட்டாமல் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிட்டான்.

மூர்த்தி சாலையின் திருப்பத்தை அடையவும், கோயில் ஸ்டாப்பில் ஒரு டௌன் பஸ் வரவும் சரியாக இருந்தது. பஸ் கிளம்புமுன் ஓடிப்போய் அதில் ஏறினான் மூர்த்தி.அவன் பஸ்ஸில் ஏறப்போவதை தடுப்பதுபோல், அவனைநோக்கி மீண்டும் கையசைத்தபடி ஓடிவந்தாள் வனஜா. அவளுக்குப் பாரமுகம்காட்டி,முகத்தைத் திருப்பிக்கொண்டு ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டான் மூர்த்தி. அதற்குள் பஸ் கிளம்பிவிட, ஏமாந்த முகபாவத்துடன் நின்று மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் வனஜா.

ஒருவித ப்ரத்யேக சப்தத்துடன் கிளம்பி நகர்ந்து வேகமெடுத்துப்போனது டௌன் பஸ்.

மெஸ்ஸில்போய், மாமியிடமோ புவனவிடமோ நந்தினி விஷயமாக ஏதும் உளறிவிடக்கூடாது எனத் தீர்மானித்துக்கொண்டான் மூர்த்தி.

அவன் முகத்தில் இப்போது சூடான வெக்கைக்காற்று வீசியபடியிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:40 am

பஸ்ஸை விட்டிறங்கி சற்றுதூரம் வெயிலில் நடந்து மெஸ்ஸை நெருங்கினான் மூர்த்தி. முகத்தில் வியர்வை ஆறாய்ப் பொங்கிற்று. கர்ச்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். அபரிமிதமான பசி! காலையில் நந்தினி வீட்டிலிருந்து கிளம்பி, டீக்கடையொன்றில் ஒரு வடையும் டீயும் மட்டும் சாப்பிட்டதுதான்.

"வாடாம்பி வா! எங்கேடாம்பீ போய் ஒளிஞ்சிட்டே, எங்களையெல்லாம் மறந்துட்டு? பயங்கரப் படிப்போ?" என்று கண்கள் அகலக் கேட்டாள் மாமி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமி..வேறொரு பிரச்சினை.. எல்லாம் சரியாயிடுச்சு..இனிமே நான் கம்பைண்ட் ஸ்டடிக்கெல்லாம் போகப்போறதில்லே! அதுனாலேதான் எல்லாப் ப்ராப்ளமும்!" என்று பதில் சொல்லியபடி பெஞ்சில் உட்கார்ந்து பெருமூச்சிட்டான்.

"ஏன்டாப்பா இப்பிடி? என்ன நடந்ததுன்னுதான் சொல்லேன்..மூஞ்சியெல்லாம் பேயறைஞ்சாப்பிலன்னா ஆயிருக்கு!" என்றாள் மாமி சற்று பதைபதைத்த குரலில்.

"எல்லாத்தையும் சாப்பிட்டுட்டுச் சொல்றேன் மாமி..இப்போ பசி புடுங்குது.."

"அடப்பாவமே..நோக்குச் சாதம் வைக்க மறந்துட்டுத்தான் பேசிண்டிருக்கேனா பாவி!"

அவசர அவசரமாய் அவனுக்கு இலைபோட்டு சாதம் பரிமாறினாள் மாமி.

ஆவலோடு ‘அபக், அபக்’ கெனச் சாதத்தை விழுங்கிய அவனெதிரே ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டாள்: "மெதுவா, மெதுவா..! நல்லா மென்னு ருசிச்சுத்தாண்டா சாப்பிடணும் கொழந்தே! இப்பிடி அவக்காச்சியெடுத்து முழுங்கினா அப்புறம் சத்து எப்பிடி உடம்புலே தங்கும்?தொண்டையிலே அடைச்சிக்கப் போவுது..இந்தா தண்ணி குடி."

அவள் எடுத்துக் கொடுத்த தண்ணீர் டம்ளரை வாங்கி மடக்..மடக்கெனக் குடித்தான். நீர் நாசித்துவாரத்தில் புகுந்து பொறையேறிற்று. சட்டென அவன் தலையில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள் மாமி. அவளது உள்ளங்கை புசுபுசுவென பஞ்சுபோல் அவன் உச்சந்தலையில் இறங்கிற்று. அவன் அதுவரை அறிந்திராத தீண்டல் அது.

"போதும் மாமி, போதும்!"

"சும்மார்றா கொழந்தே! கண்ணுலெ பாரு தண்ணி!"

பொறையினால் கண்ணில் வழிந்த நீரின் இடைவெளியில் மாமியின் முகம் ஒரு நவீன ஓவியமாய்த் துலங்கிற்று. அவளது உடம்பிலிருந்து வீசிய கதகதப்பும் ஒருவித வாசனையும் அவனுள் ஒரு கிறுகிறுப்பை உண்டாக்கிற்று.

அப்போதுதான் கவனித்தான்: மாமியின் கண்கள் பளபளத்து மின்னிற்று. அவளது விழிகளில் ஏதோ மாற்றம் தெரிந்தது. உற்றுக் கவனித்தபோது அவள் தன் இமைகளைச் சுற்றி பட்டையாக மைபூசியிருந்தாள்!

"என்ன மாமி, உங்க மொகத்துலே ஏதோ மாற்றம் தெரியுது?"

"மைபூசினதைச் சொல்றியா..காலையிலே போரடிச்சது..சும்மா பூசிப் பார்த்தேன்..நல்லாருக்காடா கொழந்தே?"

"பத்துவயசு கொறைஞ்சா மாதிரி இருக்கு மாமி.. உங்க பாஷையிலே சொன்னா, பேஷ்!பேஷ்!ரொம்ப நன்னாருக்கு!"

களுக்கெனக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் மாமி: "வரவர ரொம்பத்தான் முத்திப்போயிட்டேடாம்பீ! என்னமாப் பேசறே? எங்கண்ணே பட்டுடும் போலருக்கு!"

"இப்போ உங்க கண்ணுதான் மாமி பட்டுண்டிருக்கு! அதைத்தானே சொல்றேள்?"

"அய்யோ.. ரொம்ப அறுக்கறேடா கொழந்தே! இந்தப்பேச்சை ரெண்டுமூனு நாள் கேட்காமே பாதி ஜடமாயிட்டேன் தெரியுமோ?" என்றவள், திடீரெனத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளது அச்சுப்போன்ற செம்முகம் லேசாய்த் துவண்டு தளும்பிற்று.

“"இப்போ ஏன் மாமி அழுவுறீங்க? இனிமேதான் எங்கேயும் போமாட்டேனே! இன்னும் கொஞ்சநாள்தான் மாமி இருக்கு எக்ஸாமுக்கு..படிச்சாகணும்..எனக்கு அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க மாமி!"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:40 am

கண்ணைத் துடைத்தபடியே "அதைத்தானேடா கொழந்தே நோக்கு அன்னிக்கே சொன்னேன்! நீதான் கேட்காமெ வெளிலே கெளம்பிட்டே..அன்னிக்குப் போனவன் நாலுநாள் கழிச்சு இப்பத்தானேடா வர்றே!"

"நீங்க சொல்றது சரிதான்..ஒரு எடத்துலே இருந்து படிச்சாத்தான் படிக்கலாம்..ஊரூரா அலைஞ்சு இப்போ எக்ஸாமுக்கு நாள் நெருங்கினதுதான் மிச்சம்! இன்னம் அஞ்சாறு நாள்தான் இருக்கு!"

"அதெல்லாம் படிச்சிறலாம்டா..நீ படிச்சிருவேடா..எனக்கு நம்பிக்கையிருக்கு, நீ நன்னா படிச்சு பாஸ் பண்ணிருவேடா கண்ணூ!”"

"ரொம்ப தாங்ஸ் மாமி!"

"எதுக்குடா தாங்ஸ்லாம்..இனி, ராப்பகலா படிக்கிற வேலையைப்பாரு! அப்பத்தான் நான் சொன்னது பலிக்கும்!"

"சரி மாமி..ஆமா, புவனா எங்கே மாமி?"

"அவாளோட ஆஸ்பத்ரி போயிருக்கா."

"அய்யர் எப்போவந்தார் மாமி? புவனாவுக்கு என்னாச்சு?"

"அய்யர் முந்தாநா நைட்டே வந்துட்டார்டா..நைட்டெல்லாம் புவனாக்குட்டிக்கு ஒரே வயித்துவலி..அதான்."

"நைட்டு புவனா அப்பிடி என்ன சாப்பிட்டா?"

"அதில்லேடா..இது பொம்பளைங்க சமாச்சாரம்!"

ஒருவித வெட்கத்துக்கு ஆளான மூர்த்தி, பேச்சை மாற்றுவதற்காக, "அய்யர் மெட்ராஸ் போன காரியம் என்னாச்சு?" என்று கேட்டான்.

"கார்யம் கைகூடிரும்ணு நினைக்கிறேன்..அடுத்தவாரம் புவனாவை பொண்ணுகேட்டு வர்றாளாம்.."

"புவனாவுக்கு கல்யாணமா..அவ பச்சைப்பிள்ளையாட்டமில்லே இருக்கா?"

"அவளா பச்சைப் புள்ளே..விட்டா உன்னையே கடத்திட்டுப் போயிருவா!"

“போங்க மாமி.. அவளைப் பாத்தா எனக்குக் கொழந்தையாட்டம்தான் தெரியுது!”

"அப்பாடா! இப்பத்தாண்டாம்பீ நேக்கு நிம்மதியாருக்கு! புவனாவுக்கு கண்ணாலம்னதும் உனக்கு ரொம்ப வருத்தமாயிடுமோன்னு பயந்தேன்.. "

"என்ன மாமி இப்பிடிச் சொல்லிட்டீங்க? நான் படிக்க வந்தேனா, யாரையும் லவ் பண்ண வந்தேனா?"

"நீ ஒண்ணும் பண்ணலேடா..அவளுக்குத்தான் உம்மேலே ஒரே ப்ரீதி.."

“அந்த நெனப்ப உடனே மாத்திக்கச் சொல்லுங்க..”

அவனையே சற்றுநேரம் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், "ம்ஹம்ம்..இப்பத்தாண்டாப்பா என் வேண்டுதல் பலிச்சிருக்கு!"

"என்ன வேண்டுதல் மாமி?"

"அதை அப்புறம் சொல்றேன்..இப்போ உன் ரூம்லே போய் ஒரு தூக்கம்போட்டுட்டு, நைட் பூரா படிக்கிற வேலையைப் பாரு..நீ விடிய விடிய படிச்சாலும்,உன்கூடயே இருந்து காப்பி, டி·பன்லாம் குடுக்கவேண்டியது என் பொறுப்பு.." என்றாள் மாமி, உறுதியான த்வனியில்.

"ரொம்ப தாங்ஸ் மாமி.." என்றவன், மெஸ்ஸை விட்டெழுந்து மாமியிடம் சாவி வாங்கிக்கொண்டு பக்கவாட்டு அறைக்கு நடந்தான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:41 am

தலைக்குமேல் கலகலவென்று சுழன்றுகொண்டிருந்தது மின்விசிறி. சாயந்திரம் ஹாஸ்டலுக்குப் போய் அறையைச் சுத்தமாகக் காலிசெய்துவிட்டு வந்திருந்தான் மூர்த்தி. இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு இனி இந்த அறையில்தான் வாசம்..

கொஞ்சநாளில் என்னென்னெவெல்லாம் நடந்தேறிவிட்டது! எல்லாம் அவன் சக்தியை மீறி தன்னாலேயே நடந்ததாகத்தான்பட்டது. எதுவும் அவன் பிடியில் இல்லை. காற்றிலாடும் பட்டமென விதியின்போக்கில் இயங்கி இப்போது இந்த இடத்தில் இருப்பதாக அவனுக்குத் தோணிற்று. நடந்துகொண்டிருக்கும் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்றும் தோணவில்லை.
அடுத்த செமஸ்டர் ஹாஸ்டல் இல்லாவிட்டால் ஸ்காலர்ஷிப் அளவு குறைந்துவிடும். பிறகு மெஸ்பில்லை சமாளிப்பது அப்பாவுக்கு சிரமமாகிவிடும்..இதையெல்லாம் அய்யரிடமும், மாமியிடமும்-புவனாவும் கேட்டுக்கொண்டிருந்தாள்- சற்றுமுன் மெஸ்சில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் சொல்லிவைத்தான்.

"அதுக்கென்ன ஸார்..நீங்க எவ்ளோதான் சாப்பிட்றப்போறீங்க? முடிஞ்சவரைக்கும் ஹாஸ்டலைவிட இங்கே உங்களுக்கு கம்மியா வர்றாப்லெ பாத்துக்கிறோம்..படிப்பு விஷயத்துக்கு உதவாமே வேறெதுக்கு உதவப்போறோம்?" என்றார் அய்யர். அவர் அவனை ‘ஸார்’ என்று அழைப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் அவன் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அது அவர் இஷ்டம் என்று விட்டுவிட்டான்.

இனி, படிப்பு,படிப்பு, படிப்புதான்.. வேறெதைப்பற்றிய சிந்தையும் தனக்குள் எட்டிப்பார்க்கக்கூடாது..எல்லாம் ஓரளவு ‘செட்டில்’ ஆகிவிட்டபடியால் இனி நிம்மதியாகப் படிக்கலாம்..

ஒருமுறை அறையை நோட்டமிட்டான்: எவ்ளோ சுத்தம்! அவன் ஹாஸ்டலுக்கு அறையைக் காலி செய்யப்போன சமயத்தில், இந்த அறையைக் கழுவிச் சுத்தமாக்கி சாம்பிராணிப் புகையெல்லாம் காட்டி கமகமக்கச் செய்திருந்தாள் மாமி. இந்தச் சூழல் போதும், தான் வெற்றிகரமாகப் படித்துமுடிக்க என்று நினைத்துக்¦ காண்டான் மூர்த்தி.

சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தான். பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதே நேரம் மாமி தன் வீட்டுக்கூடத்திலிருந்து உள்பக்கக் கதவைத் தட்டினாள்.

"என்ன மாமீ?"

"டீ வேணுமாடா கண்ணூ?"

"வேணாம் மாமி..நீங்க தூங்குங்க.."

இடையில் அய்யரின் குரல்: "எங்க ஸார் தூக்கம் வர்றது..? நாங்க தலைசாய்க்க அந்த அந்தான்னு ஒண்ணு, ஒண்ணரை ஆய்டும்..அதெப்பத்திக் கவலைப்படாதேங்கோ! ஒரு டீ குடிச்சுட்டுட்டு படிங்கோ! அப்பத்தானே நன்னா படிக்கலாம்! இல்லென்னா தூக்கம் கண்ணெக் குத்துமோனோ?"

மூர்த்திக்கு டக்கெனப் பதில் சொல்ல வாய் வரவில்லை. எதையோ சொல்ல நினைக்கையில், அவன் வாய் குழறித் தடுமாறினான்.

"என்ன ஸார்..பேச்சையே காணோம்?"’ என்று கதவின் மறுபக்கமிருந்து கேட்டார் அய்யர்.

"இல்லே ஸார்..உங்களுக்கெதுக்கு செரமம்னு பார்த்தேன்.." என திக்கித் திக்கி மெதுவான குரலில் பதிலளித்தான்.

"அதெல்லாம் சிரமம் ஒண்ணுமில்லே! எங்களுக்கு புவனாவைத் தவிர யாருமில்லே! ஒங்க படிப்புக்காவது உதவாமெ என்ன செய்யப்போறோம், சம்பாரிச்சு? எங்களுக்கும் ஒரு அர்த்தம் வேணுமோனோ..கதவைத் தொறங்கோ!"

அவசரமாய்க் கட்டிலை விட்டெழுந்து உள்பக்கக் கதவைத் திறந்தான் மூர்த்தி. அய்யரும் மாமியும் சொல்லிவைத்தார்போல அறைக்குள் பிரவேசித்தார்கள்..

"ஒரேயடியா படிச்சிண்டேயும் இருக்கப்படாது பாருங்கோ! அதான் தொந்தரவு பண்ணிண்டிருக்கோம்! உங்களைக் கேட்காமலே இவ டீ போட்டு எடுத்தாந்துட்டா! ஆறிடுமோனோ..அதான் சீக்கிரம் கதவெத் தெறக்கச் சொன்னேன்..இனி நான் அடிக்கடி இங்க வந்து தொல்லை பண்ணமாட்டேன்..ஆனா, கதவைத் தொறந்திண்டு எப்பவேணா நீங்க எங்க ஹாலுக்கு வரலாம்..புவனாதான் தூங்குமூஞ்சி, சீக்கிரமே மூதேவி பிடிச்சிண்டிடும் அவளுக்கு..நாங்கெல்லாம் ஒருமணிக்கு மேலதான் தலைசாய்க்கிறது!" என்று அவன் முகத்தை நேராகக் கூர்ந்து பார்த்துப் பேசினார் அய்யர். அவரது மழிக்கப்படாத முகத்திலும், தலையிலும் பாதிக்குப்பாதி நரைமுடிகள்..புருவம் மட்டும் கருப்பாயிருந்தது..
மாமி டீ டம்ளரை அவனிடம் நீட்டினாள். டீ டம்ளரின் சூடு அவன் உள்ளங்கைகளில் கதகதப்பாய் இறங்கிற்று.

"ரொம்ப சூடில்லெடாம்பீ! நல்லா ஆத்திட்டேன்..சரியாருக்கும், குடி" என்றாள் மாமி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:41 am

கட்டிலில் உட்கார்ந்துகொண்டு,டீயை நுனிநாக்கில் ஒரு சிப் உறிஞ்சிய மூர்த்தி, "டீ ரொம்ப நல்லாருக்கு ஸார்.." என்றான் அய்யரைப் பார்த்து. அய்யர் மீசையை முற்றுமாய் மழித்திருந்தபோதும், அதன் நரைத்த சுவடுகள் அவரது மேலுதட்டை நிரப்பியிருந்தன. ‘நல்ல லாட மீசை வைக்கலாம் இவர்..’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் மூர்த்தி. பின் மாமியைப் பார்த்து, "நைட் ஒருமணிவரைக்கும் என்ன பண்ணிட்டிருப்பீங்க மாமி?" என்று கேட்டான். மாமி சட்டென முகம் சிவந்து, "அதெ அவாளைக் கேட்டுத் தெரிஞ்சிக்கோடாம்பீ!"என்றாள்.

அவன் அய்யரைக் கேள்விக்குறியோடு பார்க்க, "ரெண்டுபேரும் ஒருத்தர் முகத்தைப் பார்த்து எதாவது கதைபேசிண்டிருப்போம் ஸார்.." என்று இழுத்தார்.

"ஏன் பொய் சொல்றேள்! உள்ளதைச் சொல்லுங்கோ! பாஷன் டீவீ பார்க்கமாட்டேள்?" என்று குட்டை உடைத்தாள் மாமி: "புவனாக் குட்டி அப்பிடி கட்டில்லெ விழுந்துட்டாப் போதும், அவா பாஷன் டீவியெ வெச்சுண்டு பார்ப்பார் பாரு, அப்பிடிப் பார்ப்பார், கண்ணைக்கூட சிமிட்டாமெ!" என்றாள் குலுங்கிச் சிரித்தபடி.

"சீ, போடி கழுதே! படிக்கிற புள்ளையாண்டே எதெதெப் பேசுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்? சரீ,வா..ஸார் படிக்கட்டும்!"

"என்ன இது..சின்னப் புள்ளையெப்போய் சார், மோருன்னுட்டு? பேசாமே, வாடாம்பீ, போடாம்பீன்னு கூப்டுங்கோ!" என்றாள் மாமி.

அய்யர் ஏதும் பேசாமல் அவன் முகத்தைப் ஏறிட்டார்.

"ஆமா ஸார்! சும்மா வாடா, போடான்னே கூப்டுங்க.." என்றான் மூர்த்தியும்.

"சரீ..கூப்டாப் போச்சு..அப்ப வரட்டுமா ஸார்..?" என்று லேசாய்ச் சிரித்துவிட்டு அறையைக் காலிசெய்தார் அய்யர்.

அவர் போகையில், சற்று நன்கு திறந்த கதவின் வழி அய்யர் வீட்டு ஹால் முக்கால்பாகம் தெரிந்தது. ஹாலைத் தாண்டியிருந்த அறையில் புவனா தூங்கிக்கிடப்பதும் அறைகுறையாகப் பட்டது. பாவம்..புவனாவுக்கு உடம்புக்குச் சரியில்லை போலும்.அவனிடம் அவளால் சரியாகப் பேசமுடியவில்லை.

அதுவரை அவனெதிரே நின்றுகொண்டிருந்த மாமி, இப்போது கட்டிலுக்கெதிரே சுவரோரமாய்க் கிடந்த மர ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டாள்.

"டீ நல்லார்ந்துச்சாடாம்பீ?" என்று கேட்டாள் அவன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்து. அவளது மையிட்ட கண்கள் இப்போது மேலும் அகண்டு ஒளிவீசின.

"பிரமாதம் மாமீ.. அய்யர் குடுத்து வச்சவர், இல்லையா மாமி?"

"நீயும்தாண்டா குடுத்துவச்சவன்! என் சமையலைத் தானேடாம்பீ நீயும் சாப்பிடப்போறே இனி..?" என்றவள், கலகலவெனச் சிரித்துக்கொண்டாள். அவளது சிரிப்பில் ஒரு ஆழமும் முழுமையும் இருப்பதாகப்பட்டது.

மூர்த்தி சிரிப்பில் மலர்ந்து இளகிய அவளது அளவான, செதுக்கிவைத்ததுபோன்ற சிவந்த முகத்தை, ஆழ்ந்த ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

"காலெல்லாம் பயங்கர வலிடாம்பீ! பகல் பூரா மெஸ்லெ நிக்கிறோமா.." என்ற மாமியின் முகபாவத்தில் ஒருவித மெல்லிய வலி தென்பட்டது. சற்றுநேரம் அவனது முகத்தை கூர்மையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவள் ஸ்டூலில் அமர்ந்தபடியே தன் இடதுகாலை எடுத்து வலதுகாலில் அட்டணக்கால் போட்டுக்கொண்டு சற்று ஓய்வாக அமர்ந்தாள். அப்போது செம்பூக்கள் நிறைந்திருந்த அவளது சேலை சற்றே மேலேறி அவளது சிவந்த,வாளிப்பான முழங்கால்களைக் காட்டின. அவற்றின் வளமையும் பளபளப்பும் அவன் கண்களில் மின்னித்தெறித்தன.

படிப்பதற்காக தன் கையில் எடுத்த பாடப்புத்தகத்தை மூடிவைத்தான். ஒரு சிறுபெண்ணின் உற்சாகத்துடன் தொடர்ந்து பழங்கதைகளைப் பேச ஆரம்பித்தாள் மாமி. அவள் பேசியதை மனதில் வாங்காமல் வெறுமனே தலையாட்டியபடி அவளது முழங்கால்கள் மற்றும் பாதங்களின் வளைவு நெளிவுகளையும் அசைவுகளையும் ரசித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக