புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:26 am

கல்லூரி விடுதிநோக்கி நடந்துகொண்டிருக்கையில் ஏதோவொரு மாயவலையில் தான் சிக்கியிருப்பதாய் உணர்ந்தான் மூர்த்தி.

அவன்மீது அடித்த பத்துமணி வெயில் அவனது இந்த மயக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? தனக்குமட்டும்தானா, இல்லை எல்லா இளைஞர்களுக்கும் இதே கதியா? அவனை உள்ளிருந்து இயக்கும் அந்த சக்தி எது? அதன் ஆதாரமூலம் என்ன? ஏன் தான் இப்படி நாயாக அலையணும்? பேசாமல் கிராமத்துக்கே போய் தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருந்திருக்கலாமே!

தன்னை நினைத்து தானே வெட்கினான் மூர்த்தி. இனி, தட்ஷிணி...அவளுடன் சேர்ந்து கூட்டுப்படிப்பு மேற்கொள்ளவேண்டும்...

அதற்குள் விடுதி வந்துவிட்டிருந்தது. அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டுவிட்டு, "உஸ் அப்பாடா..."என்றபடி கட்டிலில் ஓய்வாக அமர்ந்து பின்னால் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான் மூர்த்தி. அவனுக்கு நேரே எதிர்ச்சுவரில் புன்னகை பூத்துக்கொண்டிருந்தாள் ரவீணா டாண்டன்...அவளது முகவெட்டில் ஏதோவொரு கவர்ச்சியிருப்பதை அவன் மீண்டும் மீண்டும் உணர்ந்தான்.

மாயம்...பெண்மாயம்...வலை...மாயவலை...இது, இந்த மாயமே வாழ்க்கையோ...இதில் சிக்கிச்சிக்கி நாராய்க் கிழிபட்டுத்தான் ஆகவேண்டுமோ!

மணி பத்தரை...தட்ஷிணி இந்நேரம் கல்லூரி வளாகத்துக்கு வந்து இவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பாள்...

படிக்கத் தேவையான புத்தகம், நோட்டுகளை கையில் எடுத்துக்கொண்டு ஒரு அவசரகதியில் அறையைவிட்டு வெளியேறினான்...தட்ஷிணி இன்று என்ன உடுப்பில் வந்திருப்பாள்?

கல்லூரி வளாகம் நோக்கி விரைகையில், தட்ஷிணியின் மெல்லிய உருவம், புன்னகை, அங்க அசைவுகள் அவனுக்கு காட்சியாயின...அவளது தோழிகள் கூடவந்திருந்தால் என்னசெய்வது, அவள்களோடு தன்னந்தனியாய் மாட்டிக்கொண்டு?

பார்க்கலாம்...

வழியிலிருந்த கொல்லங்காளிகோயில் அவனை ஈர்த்தது...

தரிசனத்துக்காக கோயிலுள் நுழைந்தான்...கோயில் அமானுஷ்யமான அமைதியில் உறைந்திருந்தது. கோயிலின் பளிங்குத்தரை, அவன் பாதங்களில் ஒரு இதமான ஜில்லிப்பை உண்டுபண்ணியது.

மிகவும் பயபக்தியுடன் அம்மனைத் தரிசித்தான் மூர்த்தி. அம்மன் ஒருவித தாய்மையுடன் அவனையே உற்றுப்பார்ப்பதாய்ப்பட்டது... திடீரென்று அவனது கண்களில் நீர் முட்டிற்று...

கையிலிருந்த நோட்டு, புத்தகங்களை காளிக்கு முன்பு வைத்துவிட்டு,

"நான் படிக்கணும், நான் நல்லாப் படிக்கணும், அதுக்கு ஏதாவது செய் தாயே" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டான்...

திடீரென அவன் அம்மா, அப்பா முகங்கள் அவனுக்குக் காட்சியானது. விவசாய வேலை செய்து, காட்டிலும் மேட்டிலும் அலைந்தல்லவா என்னைப் படிக்க வைக்கிறார்கள்? நான் அவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளவேண்டாமா?...கடவுளே!

தாயே! நற்புத்தி கொடு...நற்புத்தி கொடு...நற்புத்தி கொடு! அவன் கண்கள் குளமாயின. பொங்கிவழிந்த கண்ணீர் அவனது பார்வையை மறைத்தது.

கண்ணீரின் ஊடாக அவன் காளியைத் தரிசித்தான்: நீதான் தாயே எல்லாம்...இந்த மண்ணையும் விண்ணையும், அண்டசராசரத்தையும் ஆட்டுவிப்பவள் நீயே...என்னைக் காப்பாற்று...என்னைக் காப்பாற்று...காப்பாற்றிவிடு!

அப்படியே காளிக்குமுன் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டான்...காளியைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு மேலும்மேலும் அழுகை பொங்கிற்று.

திடீரென அவன் முதுகில் ஏதோவொரு கரம் பட்டது. திடுக்கிட்டுத் திரும்பினான்...அவனுக்குப் பின்னால் தட்ஷிணி மெலிதாய்ச் சிரித்தபடி நின்றிருந்தாள், பச்சைக்கலர் சுரிதாரில்: "படிக்க வாடான்னா, இங்க உக்காந்துட்டு என்ன பண்ணிட்டிருக்கே!"

மூர்த்தி சட்டெனக் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"என்ன ஒரே பக்திப் பரவசமாயிட்டே போலருக்கு...அழுதிருக்கே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லெ தட்ஷிணி...சும்மா...."

"சரி அதை விடு. இப்போ படிக்க வர்ரியா, இல்லே, வேறெதும் ப்ளான் வச்சிருக்கியா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே...அங்கதான் வந்துட்டிருந்தேன்...வழிலே..."

"காளிக்கிட்டே நல்லாப் படிக்கணும், படிப்பு நல்லா மண்டையிலே ஏறணும்னு வேண்டிக்கிட்டியாக்கும்?" அவனை ஒரு அழகான குழந்தையைப்பார்ப்பதுபோல பார்த்தாள் தட்ஷிணி...அவள் பார்வையில் ஒரு கேலி தெரிந்ததை உணர்ந்துகொண்டான் மூர்த்தி.

"நீ இப்பதான் வந்தியா, முன்னாடியே வந்துட்டியா?" என்று கேட்டான்.

"ஏன்...நீ காளிகிட்டே ஹோ..ஹோன்னு அழுதது தெரிஞ்சுபோயிருக்குமோன்னுதானே கேக்கிறே?"

"அட நாயே, முன்னாடியே வந்துட்டியாடி அப்போ" ஒரு ஆச்சர்யத்தில் கிட்டத்தட்ட கத்தியேவிட்டான்.

"ஆமாடா நாயே!" என்று அழுத்திச்சொல்லிவிட்டு குபுக்கெனச் சிரித்தாள் தட்ஷிணி.

இருவரும் கோயிலைவிட்டு வெளியேறினார்கள். "நீ சாமிகும்பிடலே?" என்று தட்ஷிணியின் முகத்தைப் பார்த்துக்கேட்டான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:26 am

"சாமியெல்லாம் இங்கே இருக்குடா!" என்று தன் நெஞ்சில் கைவைத்துக்காட்டினாள் தட்ஷிணி! அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

"என்ன முகத்தைத் திருப்பிக்கிறே?"

"இல்லே...நீ கைவச்சுக்காட்டுன எடத்தைப் பாக்கமுடியல"

"ச்சீப்போ நாயே! இந்த நாய்ப்புத்தி மட்டும் போகாதே உங்களுக்கெல்லாம்..."

"சரி பேசாம வா...டாபிக் மாறுது...பேசாமப் போய் படிக்கிற வேலையே மட்டும் பாப்போம்"

"பின்னே? வேறெ எதுனாச்சும் ஐடியாவோட வந்தியா அப்புறம்? அதுக்குத்தாண்டா வனஜாவைக் கூட்டிட்டு வந்திருக்கேன்,அதோ...அங்கே நிக்கிறா பாரு!"

மூர்த்திக்கு ஒருபுறம் ஏமாற்றமாக இருந்தாலும், மறுபுறம் நிம்மதியாக இருந்தது.

வனஜாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் வகுப்பில் வனஜா, தட்ஷிணி இருவர்தான் பெண்கள்...இன்னொருத்தி-பேர் ஈஸ்வரி. அவர்களோடு கொஞ்சநாள் படித்துவிட்டு பாதியில் படிப்பைவிட்டுவிட்டுப் போய்விட்டாள்...ஏதோ அவசரக் கல்யாணமாம்...

"தட்ஸ்...நம்ம ஈஸ்வரியப் பத்தி எதாவது தெரியுமா?"

"இப்ப ஏண்டா அவளை இழுக்கிறே? அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு கனடா போய் செட்டில் ஆயிட்டா, தெரியும்லே?"

"அதெல்லாம் தெரியும்...இப்போ குழந்தை, குட்டி ஏதாவது...?"

"அதெல்லாம் ஏன் உனக்கு?"

"சும்மாதான்"

"என்ன சும்மா? அவளுக்கு கொழந்த இல்லாட்டி நீபோய் குடுக்கப் போறியா?"

"அபிஸ்டு...அபிஸ்டு...அப்படியெல்லாம் பேசப்பிடாது! அதும் ஒரு கண்ணாலம் பண்ண பொம்மனாட்டி பத்தி!"

"என்னடா திடீர்னு அய்யர் பாஷையிலே பேசறே!..அய்யர் மெஸ், அய்யர் மெஸ்ஸ¤ன்னு போறியே அங்க எதும் கோத்துட்டியா?"

"சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல...நீ வேறே!"

"இல்லையே...வரவர உன் நடத்தையே ஒரு மாதிரி ஆயிட்டிருக்கே! நான் படிக்கக்கூப்பிட்டா, கோயில்லே உக்கார்ந்து அழுதிட்டிருக்கே? என்னடா ஆச்சு உனக்கு?"

அதற்குள் அவர்கள் படிக்கவேண்டிய கட்டிடம் வந்துவிட்டது. அங்கு இவர்களுக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்த வனஜா, "வா மூர்த்தி" என்றாள் கண்கள் விரிய: "உன் முகத்தைப் பாத்தாத்தான் எங்களுக்கு படிப்பு மண்டையிலே ஏறும்!"

சிரித்துக்கொண்டான் மூர்த்தி: "இன்னும் ஒரு மண்ணும் படிக்கலே வனஜ்"

"அதெல்லாமில்லே...இந்நேரம் பாதியை கரைச்சுக் குடிச்சிருப்பே...இல்லாட்டி எப்பிடி உன்னால கிளாஸ் ·பர்ஸ்ட் வரமுடியுது?"

"ஏதோ கடைசி நேரப்படிப்புதான்...இதுக்கெல்லாம் அலட்டிக்கவே கூடாது.. இப்பப் பாரு எத்தனை அரியர் வக்கிறேன்னு!"

"சும்மா புழுகாதே மூர்த்தி...மாத்ஸ், ப்ராப்ளமாடிக் சப்ஜெக்ட்டிலெல்லாம் நீதான் புலி...அதுனாலதானே உன்னைய கம்பைண்ட் ஸ்டடிக்கு நாங்க கூப்பிட்டது!"

"அப்போ எல்லாம் சுயநலம்தான்னு சொல்லு...எங்கேயும் உண்மையான,பயன்பாராத அன்பு இல்லவே இல்லை...சரியா?"

"ஆரம்பிச்சிட்டியா உன் தத்துவ விசாரத்தே? நிறுத்து, நிறுத்து, அதெல்லாம் எங்களுக்குப் புரியவே புரியாது..."

வனஜாவின் திருநெல்வேலிப் பேச்சு அவனுக்கு எப்போதும் ஆச்சர்யமூட்டியது. அந்தப் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் ஏதோ ஒரு இசைக்குறிப்பு ஒளிந்திருப்பதாய்ப்பட்டது அவனுக்கு. அதனாலேயே அவனுக்கு வனஜாவைப் பிடிக்கும்: நல்லெண்ணெய் நிறம்...கிராமத்தின் நிர்மலமான முகம்-பேச்சு-அவளைப்பார்த்தால் அவனுக்கு எதுவும் 'தப்பாக'த் தோணுவதில்லை. அவளிடம் ஒரு சகோதரப்பாசம் அவனுக்கிருந்தது...

அவர்கள் திறந்துகிடந்த அந்த லெக்சர் ஹாலில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள்...அகண்ட ஜன்னல்கள் வழியே காற்று சரசரவென்று வீசியது. ஆங்காங்கே இருந்த வேப்ப மரங்களூடாய் சில காகங்கள் ஓய்வாக அமர்ந்து இடைவெளிவிட்டுக் கரைந்துகொண்டிருந்தன. மரங்களின் இடைவெளிகளில் பாதரசம்போல் கொட்டிக்கொண்டிருந்தது வெயில்.

மூர்த்திக்குப் பசிக்க ஆரம்பித்தது.

"மணி ஒன்றரை ஆயிடுச்சு...ஹாஸ்டல்லே சாப்பாடு முடிஞ்சிடும்...நாங்க போறோம் மூர்த்தி" என்றாள் தட்ஷிணி.

"நானும் லேடீஸ் ஹாஸ்டலுக்கு சாப்பிட வரவா?" என்று கேட்டான் மூர்த்தி.

"ம்...வா...நல்லா ஒதை கிடைக்கும் " என்றாள் வனஜா.

புத்தகங்களை தாம் கொண்டுவந்திருந்த லேடீஸ் பேக்குகளில் வைத்துக்கொண்டு டெஸ்க்கைவிட்டு எழுந்தார்கள் தட்ஷிணியும் வனஜாவும்.

அவர்கள் வராண்டாவில் நடந்துகொண்டிருந்தபோது விடுதிப்பக்கமிருந்து அவர்களைநோக்கி வந்துகொண்டிருந்தான் ஸ்ரீதர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:26 am

தட்ஷிணியும் வனஜாவும் லேடீஸ் ஹாஸ்டலுக்குப் பிரிந்த சாலையில் போய்விட்டிருந்தார்கள்.

"என்னடா மாப்ளே, இந்தப்பக்கமிருந்து வர்றே?" என்று கேட்டபடி மூர்த்தியைநோக்கி வந்தான் ஸ்ரீதர்.

"ஒண்ணுமில்லடா...சும்மா..."

"தட்ஸோட கம்பைண்ட் ஸ்டடியா?"

"அதெல்லாம் இல்லடா...சும்மா கொஞ்சம் 'ப்ராப்ளம்' சொல்லிக்குடுத்தேன்"

"அதாண்டா மாப்ளே ப்ராப்ளமே...அப்படியே உன்னை அவளுகளோட வலையிலே கவுத்துருவாளுகடா, ஜாக்ரதை!"

"சேச்சே, தட்ஸ¤ன் வனஜ்ஜும் நல்ல பொண்ணுங்கடா"

"ஆமாமா...அப்படித்தான் தோணும்! அப்புறம் கண்கெட்டபின்னாடி சூர்ய நமஸ்காரம் ஆயிடுண்டா!"

"சும்மா போடா! எதாவது உளறிக்கிட்டு..." லேசாய் எரிச்சலடைந்தான் மூர்த்தி.

"மச்சி! அப்பிடித்தாண்டா தோணும் உனக்கு! நீ ஒரு ஜொள்ளுப்பார்ட்டியாச்சே, உங்கிட்டேப்போய் நான் அட்வைஸ் பண்றேன் பாரு, எம்புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்!"

"ஏன் அடிச்சுக்கோயேன்!"

"போடா ...!"

"நாயே! என்னடா கெட்டவார்த்தையில திட்டறே?" என்றபடி ஸ்ரீதரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் மூர்த்தி.

ஸ்ரீதர் பதிலுக்கு அவன்மீது ஆக்ரோஷத்தோடு பாய்ந்தான்.

இருவரும் ஒருவர்மீது ஒருவர் ஓங்கி ஓங்கி குத்திக்கொண்டார்கள். மூர்த்தியின் கையிலிருந்த நோட்டும் புத்தகமும் கிழிந்து மண்ணில் சிதறி விழுந்தன.

மூர்த்தியின் சட்டையைப்பிடித்து அவன் நெஞ்சில் ஒரு குத்துவிட்டான் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் கைகளை மடக்கிப்பிடித்து அவனை ஒரே சுழட்டாய்ச் சுழட்டி தூரத்தள்ளினான் மூர்த்தி.

ஸ்ரீதர் அங்கிருந்த வேப்பமர வேரில்போய் 'பொத்'தென்று விழுந்தான்.

"டேய், ஸ்ரீதர்! எங்கிட்ட வச்சுக்காதே! பல்லுக்கில்லெல்லாம் தட்டிடுவேன் தட்டி!" கண்களில் கோபம் தகிக்கக் கத்தினான் மூர்த்தி.

"எங்க தட்டுடா பாக்கலாம்!" என்றபடி வேகமாய் எழுந்து அவன்முன் வந்து நின்றான் ஸ்ரீதர்.

"டேய்! பேசாமப்போயிடு! இதுக்குமேலே எங்கிட்டே நிக்காதே, அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன்!" உறுமினான் மூர்த்தி.

முகத்தில் அழுகை முட்ட, சட்டெனத்திரும்பி ஹாஸ்டல் நோக்கிப் வேகமாகப் போனான் ஸ்ரீதர்.

அவன் மூக்கில் லேசாய் ரத்தம் கசிவதைக் கவனித்து, சற்றே திடுக்கிட்டான் மூர்த்தி.

கசங்கியிருந்த சட்டையைச் சரிசெய்துகொண்டு மாமி மெஸ்ஸைநோக்கி நடக்க ஆரம்பித்தான் மூர்த்தி.

அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இந்த ஸ்ரீதர்நாய் ஏன் இங்கு வந்தான், சம்பந்தா சம்பந்தமில்லாமல்?

எனக்குமட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகிறது? என்மீது ஏன் ஸ்ரீதர் பொறாமை கொள்ளவேண்டும்?

ஒருவேளை அவனுக்கு தட்ஷிணியின் நட்பு கிடைக்காமல் போனதால் வந்த எதிர்வினையோ இது?

ஸ்ரீதரின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது மூர்த்திக்குப் பீதியைக் கிளப்பியது. அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால்...?

மெஸ்ஸ¤க்குள் நுழைந்தபோதே புவனா அவனிடம் "என்ன ரொம்ப சோகமா வர்றீங்க? ஏன் இவ்ளோ லேட்டு?" என்று கேட்டாள்.

"ஒண்ணுமில்லை" என்று அவளிடம் சற்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, சாப்பிட அமர்ந்தான். மெஸ்ஸில் யாருமில்லை.

ஏதும் பேசாமல் அவனுக்கு சாதம் பரிமாறினாள் புவனா. அவள் முகம் சற்றே கூம்பிப்போயிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்தான் மூர்த்தி.

'இவளிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது?' என்று நினைத்துக்கொண்டு, ஏதும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான் மூர்த்தி.

உள்ளிருந்து வந்த மாமி, அப்போதுதான் குளித்திருப்பாள்போல, மிகவும் களையாக இருந்தாள், என்ன மூர்த்தி, நேரத்துக்கு சாப்பிட வர்றதில்லையா? மணி ரெண்டுக்கு மேலாகுதே" என்று கேட்டுவிட்டு அடுத்திருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:27 am

மூர்த்தி மௌனமாக இருந்தான்.

"என்னான்னு சொல்லுங்கோ! ஏன் இப்பிடி சோகமா இருக்கேள்? மூஞ்சியெல்லாம் பேயறைஞ்சது மாதிரின்னா இருக்கு!"

"சொல்றேன் மாமி...இப்போ எனக்குக் கொஞ்சம் தலை வலிக்குது...ரூமைத் தொறந்துவிட்டீங்கன்னா நல்லாருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் நான் இப்போ"

மாமி ஏதும் பேசாமல் வீட்டுக்குள் போய் அவன் இரவு தங்கியிருந்த அறையின் சாவியை எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.

மூர்த்தி அறையைத் திறந்து, மின்விசிறியைப் போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தான். திறந்திருந்த ஜன்னல் வழியே உள்நுழைந்த வெளிச்சம் அறையின் இருளைக் குறைத்திருந்தது.

தன்னையறியாமல் தூங்கிப்போயிருந்தான் மூர்த்தி.

விழித்தபோது ஜன்னலில் இருட்டு அப்பியிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் 'டிக்டிக்' மட்டும் அவன் இதயத்துடிப்போடு ஒத்திசைந்து மெலிதாய் ரகசியம்போல் அடித்தபடியிருந்தது.

நிதானமாய் எழுந்து ட்யூப் லைட்டைப் போட்டுவிட்டு, அந்த சாக்லேட்நிற சுவர்க்கடிகாரத்தில் மணிபார்த்தான். எட்டரையாகியிருந்தது!

குளியலறை போய் முகம் கழுவிவிட்டு மெஸ்பக்கம் வந்தபோது மெஸ்ஸில் யாருமில்லை. வீட்டுக்குள் எட்டிப்பார்த்துவிட்டு மெதுவாய் உள்ளே நுழைந்தான் மூர்த்தி. அவன் நாசியில் ஊதுவத்தி வாசனை மெலிதாயும் அழுத்தமாயும் வீசிற்று.

மாமி வீட்டுக்குள் டீவி பார்த்துக்கொண்டிருந்தாள். புவனா அங்கிருந்த கட்டிலில் படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

மூர்த்தி வருவதையறிந்து, "வாடாப்பா...உன் கோபமெல்லாம் வடிஞ்சிருச்சா? மதியம் ஏன் அப்பிடி கடுகடுன்னு இருந்தே?" என்று அவனை ஒருமையில் விளித்து கேட்டாள் மாமி.

சற்றே ஆச்சரியமான மூர்த்தி, அவளருகே இருந்த நாற்காலியில் மெதுவாக அமர்ந்து டீவி பார்த்தான்.

"எங்கே, எழுப்பிவிட்டா என்னை அடிச்சிடுவியோன்னுதான் எழுப்பவேயில்லே!" என்றவள் அவனருகே தன் நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் முகத்தை தன் வலக்கரத்தால் நிமிர்த்தி, "ஏண்டாப்பா! பேசவே மாட்டியா? ஊமையாயிட்டியா?" என்று கேட்டாள்.

மூர்த்திக்கு அழுகை முட்டியது. அவன் ஸ்ரீதரிடம் தான் சண்டைபோட்டதை ஒன்றுவிடாமல் மாமியிடம் சொல்லிமுடித்தான்.

"ப்பூ! இதுக்குத்தான் இவ்ளோ அலட்டிண்டியாடாப்பா?" என்றவள் அவன் தலையில் கைவைத்து முடியைக் கோதி ஆறுதல் சொன்னாள்.

மூர்த்திக்கு சற்று நடுக்கமாயிருந்தது. "மாமி... புவனா தூங்கிட்டாளா?" என்றான்.

"நீ வருவே, வருவேன்னு பாத்துட்டு களைச்சுப்போய் தூங்கிட்டா! இனிமே அவ அடிச்சாக்கூட எழமாட்டா!" என்றவள், அங்கிருந்த டீப்பாய அவன் முன்னால் இழுத்துப்போட்டு அவனுக்கு இட்லி பரிமாறினாள்.

"என்ன மாமி இட்லி இன்னும் சூடா இருக்கு"

"எல்லாம் உனக்காகத்தாண்டாப்பா! தலை வலிக்குதுன்னு வேறே சொன்னியோல்லியோ...சரி... வேகமாச் சாப்பிடு, கா·பி போட்டுத்தாறேன்...தலைவலிக்கு நல்லது!"

எல்லாம் ஆயிற்று.

"சரி...ரூம்லபோயி தூங்கிக்கிறேன் மாமி" என்றுவிட்டு கிளம்பினான் மூர்த்தி. "இப்பத்தானே தூங்கியெழுந்தே! அதுக்குள்ள என்னா தூக்கம்?' என்றவள், "இன்னிக்கு இங்கியே படு, டீவி பாத்துட்டு!" என்றபடி அவனுக்கு பெட்ஷீட் எடுத்துப் போட்டாள்.

அவனுக்கு அடிவயிற்றில் லேசாய் குடைச்சலெடுத்தது. மாமியின் முகத்தை உற்றுப்பார்த்தான். அதில் ஏதோ ஒரு தீர்மானம் ஒளிந்திருப்பதாய்ப் பட்டது அவனுக்கு.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:27 am

"என்னமோடாப்பா...இன்னிக்கு மாதிரி நான் சிரிக்கவும் இல்லே, இன்னிக்கு மாதிரி அழுததும் இல்லே...உன் முகத்தைப் பாத்தா இதெல்லாம் செய்யணும்னு தோணுதுடாப்பா!" மாமி பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தாள்.

"நாங்க உன்னையே இங்க எங்களுக்கு பாதுகாப்பா வச்சிருக்கிறதுக்கு காரணம் இருக்கு... இங்க சில நாய்ங்கள்லாம் புவனா மேல ஒரு கண்வச்சுக்கிட்டு அலையுதுங்க! அவனுவளுக்கு எங்க ஏலாமை, வறுமை எல்லாம் தெரியும்! எப்படியாவது எங்களைக் கவுத்துடணும்னு பேயா அலையுதுங்க அந்த நாய்ங்க! அதுங்ககிட்டேருந்து தப்பிக்கணும்னா உன்னைமாதிரி ஒருத்தன் எங்களுக்கு காவலுக்கு வேணும்!"

"அப்புறம் இன்னொரு ப்ராப்ளமும் இங்க இருக்கு: இங்க 'தொழில்' பண்றவா ஜாஸ்தி...ஊருக்கு ஒதுக்குப்புறமா முந்திரிக்காடுவேற இருக்கா, வசதியாப் போயிடுத்து அதுங்களுக்கு! புதுக்கோட்டையிலேர்ந்தெல்லாம் இதுக்காக வர்றாளுங்களாம்... அதுங்களுக்கு கஸ்டமர்களே உங்க காலேஜ் பசங்கதான். இதெல்லாம் தெரியுமோ நோக்கு?"

"இல்லையே மாமி, அதெல்லாம் ஒண்ணுமில்லையே, எங்க பசங்கள்ளாம் நல்ல பசங்களாச்சே!"

"மூர்த்தி, நீ ஒரு கொழந்தைடா! அவா அவா எப்பிடியெல்லாம் வாழுறாண்ணு உனக்கு எப்பிடிடா தெரியும் கொழந்தே?" - கண்கள் அகல அவனை உற்றுநோக்கினாள் மாமி.

மூர்த்தி தன் மீது ஏதோ ஆயிரம் வாட் மின்பல்பின் ஒளி பாய்வதுபோல் உணரவாரம்பித்து சற்றே கூசினான். மாமி வாயை மூடுவதாய் இல்லை. அவள் தன் பேச்சை, தானே ஒரு இசையென ரசிப்பதாகப்பட்டது அவனுக்கு.

இளம் செந்நிறத்தில் பட்டுப்போல் மின்னும் வண்ணவண்ணக் கட்டங்களாய்ப் போட்டிருந்த சேலையில் மாமி மிகவும் களையாக இருந்தாள். அந்தச் சேலை அவளை இன்னும் இளமையாகக் காட்டிற்று.

"என்ன ரொம்ப யோசனையா இருக்கே? ரொம்ப அறுத்துட்டேனோ?" என்றாள் மாமி.

"அதெல்லாம் இல்லை...நீங்க உள்ளதைத்தானே சொல்றீங்க..."

இப்போது புவனா புரண்டு படுத்தாள். ஆனாலும் எழுந்திரிக்கவில்லை. தூங்குகிறாளா, தூங்குவதுபோல் நடிக்கிறாளா?

"அப்றம் இன்னொன்னு, இங்க பேய், பிசாசுத் தொல்லையும் ஜாஸ்தியாயிடுச்சு!"

"சும்மாருங்க மாமி! பேயாவது, பிசாசாவது! எல்லாம் கட்டுக்கதை! எதைவேணா சொல்லுங்க, இதைமட்டும் சொல்லாதீங்க!நான் இதை நம்பத் தாயாரில்லே."

"என்னடாப்பா இப்டிச்சொல்லீட்டே! ஆத்துக்காரா இல்லாட்டி எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குதுடாப்பா. ஒருநா அப்பிடித்தான் அவா ஊருக்குப்போயிருந்த சமயம், நான் மெஸ்ஸை மூடிட்டு இங்கதான் தரையிலே படுத்துத் தூங்கப்போனேன்! என்னை ஏதோ ஒரு கை தொட்டுத் தடவுறாப்போல இருந்துச்சா, உடனே எழுந்து லைட்டைப்போட்டுப் பார்த்தா, யாரையும் காணோம்!"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:28 am

கண்கள் அகல அவளையே பார்த்தபடியிருந்தான் மூர்த்தி.

"சொன்னா நம்பமாட்டே, நேத்திக்கு நைட்டு நீ இங்க சைடு ரூம்ல தங்கியிருந்தப்பக்கூட இப்பிடித்தான் நடந்துச்சு! புவனாகூட ஏம்மா முழிச்சுண்டே கெடக்குறேன்னா! நைட்டு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லடாம்பி! அதுனாலதான் உன்னை இங்கேயே எங்க கூட படுத்துக்கச்சொல்றது!"

"அதுக்கில்லை மாமி, யாருனாச்சும் வந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா மாமி?"

"போடா அசடு! ஏதாவது தத்துப்பித்துன்னு உளறாதே! நீ என்ன எங்களை முழுங்கிடவா போறே? படிக்கிற புள்ளே, எங்களுக்கு ஒரு ஆதரவா வந்து தங்கிருக்கே, எவன் வந்து இப்பிடிக் கேட்டவுடனே ஹெல்ப் பண்ணுவான் சொல்லு!"

அவள் பேச்சுக்கு பின்னிசைபோல, டீவியில் பழைய பாடலொன்று ஓடிக்கொண்டிருந்தது. புவனா தூங்குவதால், ஒலியை மிகவும் குறைத்துவைத்திருந்தாள். பழைய கருப்பு வெள்ளைப் படத்தில் அவனுக்கு பேர் தெரியாத ஒரு கதாநாயகி, ஜெமினிக்கு முன் நின்று அபிநயித்து பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.

"சின்ன வயசுலே நல்லா வசதியாத்தான் வளந்தேன். அப்பா பாங்க் ·பீஸர். ஆனாலும் அப்பவெல்லாம் பொண்ணுங்களை இப்ப மாதிரி பட்டமெல்லாம் படிக்கவைக்கமாட்டா. நான் ஒம்பதாங்கிளாஸ் வரைக்கும் படிச்சேண்டா! அப்பத்தான் அச்சு அசல் உன்னை
மாதிரியே எனக்கு ஒரு க்ளாஸ்மேட் இருந்தான். அவன் மேல எனக்கு ஒரு கட்டுங்கடங்காத அன்பு இருந்தது...ம்ஹ¥ம்!! அதெல்லாம் பழங்கதை!"

இதையெல்லாம் இவள் ஏன் தன்னிடம் கொட்டித்தீர்க்கவேண்டும்? தான் பேசுவதைச் செவிமடுக்க ஆள் இருந்தால், இப்படித்தான் செய்வார்களோ?

கொட்டாவிவிட்டான் மூர்த்தி. "மணி என்ன இருக்கும் மாமி?" என்றான்.

நாற்காலியைவிட்டு எழுந்துபோய் டீவி மீதிருந்த கடிகாரத்தைப்பார்த்தவள், மணி பதினொண்னு பத்துடாப்பா! சரி தூங்கு! நானும் புவனாவும் இப்பிடித் தரையிலே படுத்துக்குவோம். நீ கட்டில்லே படுத்துக்கோ, சரியா?"

"சரி மாமி"

அடக்கமாக இருந்த அந்த அறையில், கட்டிலுக்கருகே பெட்ஷீட் விரித்து, புவனாவை கஷ்டப்பட்டு எழுப்பி அதில் படுக்கவைத்துவிட்டு, அங்கிருந்த மெத்தையில்லாத இரும்புக்கட்டிலில் ஒரு புதிய பெட்ஷீட் விரித்து, தலையணை வைத்து, " ம்ம்! படுத்துக்கோ! தண்ணி ஏதும் வேணுமா?" என்றாள்.

"ஆமா மாமி..."

சமையலறைக்குப்போய் ஒரு எவர்சில்வர் கூஜாவில் தண்ணி எடுத்துவந்து, "குடிச்சிட்டு இதைப் பக்கத்துலேயே வச்சுக்கோ."அப்புறம் தேவைப்பட்டா குடிச்சுக்கலாம்" என்று அவனிடம் கூஜாவைக் கொடுத்தாள்.

அந்தக்கூஜா மிகவும் 'ஜில்'லென்றிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:31 am

விடிகாலையிலேயே விழிப்புத்தட்டிவிட்டது , மூர்த்திக்கு. சமையலறையில் லைட் எரிந்துகொண்டிருந்ததைக் கவனித்தான். சமையல்கட்டின் வாசலில் உட்கார்ந்து அவனையே பார்த்தபடி காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தாள் புவனா.அவளது விழிகள் வழக்கத்தைவிட அகண்டிருப்பதாய்ப்பட்டது. அதற்குள் குளித்துவிட்டிருப்பாளோ?

இரவில் அணிந்திருந்த பாவாடை, தாவணியை மாற்றிவிட்டு, இப்போது கருப்பு நிறக்கலவையிலான பூப்போட்ட சேலையில் இருந்தாள்.ஜாக்கெட்டும் கருப்புதான். இப்போது அவளது உடலின் தகதகப்பு சற்றுக் கூடியிருப்பதாய்ப்பட்டது.

“குட் மானிங் புவனா” என்றான்.

ஒருகணம் தயங்கிவிட்டு “குட் மானிங்” என்றவள்,புத்தம்புது மலரென அகண்ட புன்னகையொன்றை உதிர்த்துவிட்டு, “நன்னாத் தூங்கினேளா?” என்றாள்.

அவளது அந்தப் புன்னகையும் பார்வையும், அவளுக்கு அவனிடம் நிறையப் பேசவேண்டும் என்ற விருப்பத்தையும் ஏக்கத்தையும் காட்டுவதாய்ப்பட்டது அவனுக்கு. அவள் எதையோ சொல்லவந்து பின் சொல்லாமல் போனதை அவளது இதழ்களின் நெகிழ்வு காட்டிற்று. தான் சொல்லவந்ததை இதழோரம் அகண்ட தன் மாயப்புன்னகைக்குள் ஒளித்துவிட்டிருந்தாள் புவனா.

"என்ன வச்சகண்வாங்காமே பாத்துண்டேருக்கேள்? நன்னாத் தூங்கினேளான்னு கேட்டேனே, காதிலெ விழுந்ததா?"

“ம்ம்? ம்ம்...நல்லாத் தூங்கினேன்...அது கெடக்கட்டும்...நீ என்ன புவனா இப்பிடி எமத்தூக்கம் போடுறே! கொலையே நடந்தாலும் எழுந்திருக்கமாட்டேபோலருக்கு!”

“ம்ம்..ஆமா.. அப்றம் அம்மா என்ன சொன்னா என்னைப்பத்தி...என்னைப்பத்தி மட்டமா சொல்லிருப்பாளே, அறிவில்லாதவ, மரமண்டைன்னு ஏதாவது சொல்லிருப்பாளே?"

"அது எப்பிடி உனக்குத் தெரியும்? அதான் நீ தூங்கிட்டியே?"

"நான் தூங்குனா சாமான்யமா எழமாட்டேன்தான்...ஆனா, நேத்தும் நான் தூங்கியிருப்பேன்னு எப்பிடி நினைக்கிறேள்?"

"மாமிதான்...நீ..."

"தடுமாறாதீங்க மூர்த்தி...நீங்கள்ளாம் நிறையப் படிச்சவா...நான் மரமண்டைதான்...ஆனாலும் எனக்கும் உயிர் இருக்கே?"

"அப்போ நீ நைட்டு என்னதான் பண்ணிட்டிருந்தே தூங்காமே, நாங்க அவ்ளோ நேரம் பேசிட்டிருந்தோமே?"

"அம்மாவுக்கு அவபாடு! எனக்கு என்பாடு! அவளுக்கென்ன தெரியும், நான் விடியவிடிய தூங்காம துடிச்சுக்கெடந்தது!”

"நீ சொல்லிருக்கவேண்டியதுதானே, ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு, பேசாமத் தூங்குங்கம்மான்னு?"-மூர்த்தி படுக்கையைவிட்டு எழுந்துகொண்டான்.

அவனுக்கு புவனா சொல்வது ஆச்சர்யமாய் இருந்தது.

"அப்போ மாமி சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டேதான் படுத்திருந்தியா?”

“ஆமா, ஆமா, ஆமா!...ஒருவரிவிடாமக்கேட்டேன், போதுமா? ”

“இப்போ மாமி எங்கே..?”

“குளிச்சிண்டிருக்கா...அவளும் விடியவிடியத் தூங்கலே...அதுதெரியுமா உனக்கு?”

“ஏன் புவனா இப்படி?உங்களுக்கெல்லாம் என்னதான் ஆச்சு?"

புவனா திடீரெனத் தேம்பியழ ஆரம்பித்தாள்,தன் வலது புறங்கையை கண்களில் வைத்து மூடிக்கொண்டு.

மூர்த்தி கட்டிலைவிட்டு எழுந்து அவளருகில் போய் நின்றபடி, "அழாதே...இப்போ ஏன் அழறே? என்னாச்சு உனக்கு?" என்றுகேட்டான்.

"ஒண்ணுமில்லை மூர்த்தி...நீங்க போங்க...அம்மா வந்துடுவா...அப்பறமா பேசலாம்"

"அப்புறமா என்ன பேசப்போறே? அப்பிடியென்ன ரகசியம் இருக்கு என்கிட்ட பேசுறாப்லே?"

"நிறைய இருக்கு மூர்த்தி...மூட்டைமூட்டையா இருக்கு...சொல்றேன்...எல்லாத்தியும் உன்கிட்டதானே சொல்லியாகணும்...வேறே யாரு இருக்கா எனக்கு பேசுறதுக்கு?" அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.

மூர்த்திக்கு புவனா இப்போது ஒரு அழும் செல்லக்குழந்தைபோல் தெரிந்தாள்.

அப்போது குளியலறையிலிருந்து மாமி வருவது கேட்டது.

புவனா சட்டெனக் கண்களைத் துடைத்துக்கொண்டு காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்.

மூர்த்தி கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டான்.

"என்னடாப்பா நல்லா தூங்கினியா?" என்று கேட்டபடி ஈரச்சேலையுடன் அவன்முன் வந்துநின்றாள் மாமி.அவளிடமிருந்து ஒரு அடர்த்தியான வாசனை அவன் நாசியைத் துளைத்தது.அவள் உபயோகித்த சோப்பின் வாசனையாக இருக்கலாம்.

"என்னடீம்மா! காய் நறுக்கிட்டியா, இல்லை மூர்த்திகிட்டே அரட்டை அடிச்சிண்டிருந்தியா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி, அவ அவபாட்டுக்கு காய் நறுக்கிக்கிட்டுத்தான் இருக்கா..." என்றான் மூர்த்தி.

"நீ என்னடாப்பா, புதுசா அவளுக்கு வக்காலத்து! நான் பாத்ரூம் போய்வர்றதுக்குள்ளே என்னடாப்பா நடந்துச்சு?"

"ஏம்மா இப்பிடி, அவரைப்போட்டுப்படுத்தறே? அவர் அப்பாவிம்மா... அவர் நம்ப துணைக்காக வந்திருக்காருன்னா, அதுக்கு நன்றி சொல்லாமே, அவரைப்போட்டு ஏம்மா அறுக்கிறே?"

புவனாவை ஒருகணம் உற்றுப்பார்த்த மாமி, "பகவானே!" என்று பெருமூச்சுவிட்டபடி உடைமாற்றுவதற்காக உள்ளறைக்குப் போனாள்.

x

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:32 am

புவனாவை ஒருகணம் உற்றுப்பார்த்த மாமி, "பகவானே!" என்று பெருமூச்சுவிட்டபடி உடைமாற்றுவதற்காக உள்ளறைக்குப் போனாள்.

மூர்திக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு நடப்பதெல்லாம் ஒரு தொலைக்காட்சித் தொடர்போல் இருந்தது.

"மூர்த்தி, தோ வந்துர்றேண்டா, கா·பி கலந்து தர்றேன், எங்கேயும் போயிடாதே" என்றாள் மாமி,உள்ளறையிலிருந்தபடியே.

அவள் குரலில் ஏதோவொரு இனம்புரியாத ஈர்ப்பு இருந்ததை அந்தக்கணத்தில்தான் உணர்ந்தான் மூர்த்தி.

அவன் கட்டிலில் மீண்டும் குப்புறப்படுத்துக்கொண்டு, புவனாவைப் பார்த்தான். அவள் கண்களில் சாரைசாரையாய்க் கண்ணீர்!அவ்வப்போது மூக்கைவேறு உறிஞ்சிக்கொண்டாள்,அவன் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு.

மணி ஏழரை...

ஜன்னல் வழியே வந்த மெல்லிய வெளிச்சம் அவனது பனியன்போட்ட உடல் மீதுபட்டு அவனுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கிற்று.

இன்று மீண்டும் தட்ஷிணியோடு படிக்கப்போகணும்.அங்கு போய் படிச்சாத்தான் ஏதாவது உருப்படமுடியும்...நேற்று படித்தது எவ்வளவு உபயோகமாய் இருந்தது! இன்றும் காளிகோயிலுக்குப் போயிட்டுத்தான் போகணும்.

மாமி ஒரு டம்ளரில் கா·பியுடன் வந்தாள்.கா·பியை அவன் கையில் கொடுத்தபோது அவளது நுனிவிரல் அவன் விரல்களில்பட்டு, ஒரு சிலிர்ப்பை உண்டாக்கிற்று.

அவள் மேனியிலிருந்து வந்த அடர்ந்த மல்லிகைவாசம் அவன் மூக்கைதுளைக்க, "என்ன மாமி, உங்ககிட்டேருந்து 'குப்'புனு ஏதோ வாசம்!" என்று கேட்டுவிட்டான்.

அவனுக்கருகில் கட்டிலில் அமர்ந்தபடி லேசாய் முகத்தைத் தூக்கி கடகடவெனச்சிரித்தாள் மாமி.அப்போது அவள் நாசித்துவாரங்கள் விரிந்து , அவளது மூக்குத்தியின் பொற்சுரைகள் அவன் கண்களில்பட்டு மின்னின.

அவளது அருகாமை அவனுக்கு ஒருவித இனம்புரியா ஈர்ப்பை உண்டுபண்ணியதை அவன் இப்போது உணர்ந்திருந்தான்.அவனை இந்த மெஸ்சைநோக்கி ஈர்க்கும் சக்தி எது? சற்றே குழம்பிப்போனான் மூர்த்தி. அவனுக்குத் தலைசுற்றியது.சில விஷயங்களை நினைக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!

புவனா எதுவோ ரகசியம் சொல்லப்போவதாய்ச் சொன்னாளே,அது என்னவாக இருக்கும்? எவ்வளவு அந்நியோன்யமாக தாயும் மகளும் இருப்பதாய் நினைத்திருந்தான்!அவர்களுக்குள் இத்தனை பிணக்கா? வாழ்க்கை ஒரு புரியாத புதிர்தானோ? அவன் புத்தகங்களில் படித்ததெல்லாம் உண்மைதானோ? வாழ்க்கை அர்த்தமேதுமற்ற வெறும் கானல் நதியோ? வாழ்க்கை ஒரு பேய்க்கனவுபோல! யாரால் வெல்லமுடியும் எந்தப் பிடிக்குள்ளும் அடங்காத வெற்றுக்கனவை?

"எழுந்துபோய் குளிச்சுட்டு வாடாப்பா...மெஸ்ஸ¤க்கு வேறே யாராவது கஸ்டமர் வரப்போறா...ஈ ஓட்டிண்டிருந்தாலும் நம்பளை நம்பி சில ஜீவன்கள் இருக்கறதுகள், இல்லையா?" - சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள் மாமி, ஏதோ ஜோக்கை உதிர்த்துவிட்டதுபோல.

எனினும் அவனுக்கு அவளின் சிரிப்பு மிகவும் தேவையான ஒரு வஸ்துபோலப்பட்டது. அந்தச் சிரிப்பொலி ஒரு பெரும் போதையாய் அவன் தலையுள் புகுந்தது. அதன் அதிர்வுகள், அவன் நாளங்களில் ஒரு புதிய ராகமெனப் படர்ந்து அவனுள் ஒரு புத்துணர்வை முகிழ்க்கச்செய்தது!

மெதுவாய் கட்டிலைவிட்டெழுந்து மாமியிடம் சாவி வாங்கிக்கொண்டு பக்கத்து அறைக்குக் கிளம்பினான் மூர்த்தி.

"நல்லாத் தூக்கம் வந்தா நாளைக்கும் இங்கியே தங்கிக்க மூர்த்தி...பக்கத்து ரூம்லே உனக்குத் தூக்கம் சரியா வரலேன்னு சொன்னியோல்லியோ..."

"பார்க்கலாம் மாமி...ஊருக்கு வேற போயிட்டு வரலாம்னு தோணுது, அப்பா ஏன் லீவுக்கு வரலேன்னு கேட்பார்..."

"ஆமாடாப்பா...நீ என்ன சின்னக்கொழந்தையா? இன்னும் அப்பா, அம்மான்னுட்டிருக்கே? படிக்குற புள்ளே, ஒழுங்காப் படிச்சு முன்னேர்ற வழியைப் பாப்பியா...ஊருலே படிக்க வசதியில்லை மாமின்னு சொன்னியோல்லியோ?" சட்டெனச் சொன்னாள் மாமி.

அவள் குரலில் தெரிந்த அழுத்தம் அவனது ஊருக்குப்போகும் ஆசையை முளையோடு கிள்ளிவிட்டது.

"நீங்க சொல்றதும் சரிதான் மாமி...ஊருக்குப்போனா படிக்க வழியேயில்லைங்கிறது உண்மைதான்..."

அவன் சற்று அழுத்தமாய்த்தான் இதைச் சொன்னான்.அது மாமியின் முகத்தில் ஒரு நிம்மதிப்புன்னகையை வரவழைத்திருந்ததையும் அவன் கவனிக்கத்தவறவில்லை.

"ம்ஹ¤ம்...அப்பாடா...கார்த்தாலே குளிக்கவும்தாண்டா கலகலப்பா இருக்கு...ராத்திரி பூரா தூக்கமே இல்லைடா கண்ணு!" என்ற மாமி, புவனாவைப் பார்த்து, "இதோ இந்த கடங்காரி இருக்காளே, தூங்கினா அவ்ளோதான்,அப்பறம் பொணம்தான்...குடுத்துவச்ச மகராசி..." - சொல்லிவிட்டு தன் வழக்கமான பாணியில் உடல்குலுங்கச் சிரித்தாள்.அந்தக் குலுங்கலில் ஒரு அபூர்வ நாட்டியத்தின் லயம் இருந்ததை உணர்ந்து, அதை முழுமையாயும் நுண்மையாயும் சுகித்தான் மூர்த்தி.அவள் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே இருக்கணும், அதை நான் எப்போதும் அருகிருந்து பார்த்துப்பார்த்து ரசிக்கணும் என்று தோணிற்று அவனுக்கு.

காய்கறியை நறுக்கிமுடித்து எழுந்துகொண்ட புவனா, மூர்த்திமீது ஒரு ஓரப்பார்வையை வீசிவிட்டு சமையற்கட்டுள் நுழைந்தாள்.

அவள் உள்ளே போய்விட்டதை அறிந்துகொண்ட மாமி, "சின்ன வயசுலே இப்ப இருக்கறதைவிட பத்துமடங்கு அழகாயிருப்பேண்டாம்பி! இது என்ன வளப்பம், அப்போல்லாம் ஊரே என்னைச் சுத்திச்சுத்தி வரும்னா பாத்துக்கோயேன்! இப்பெல்லாம் முடி சுத்தமா கொறைஞ்சு கொட்டிப்போச்சுடா...அப்போ எனக்கு பதினாறடி இருக்கும், பாதத்துலே வந்துவிழும்டாம்பி கூந்தல்!" - சொல்லிவிட்டு அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி.

அவனுக்கு 'ஒரு மாதிரி' ஆகிவிட, ஒருநிமிஷம் நின்று அவளையே உற்றுநோக்கிவிட்டு,"இதோ...குளிச்சுட்டு வந்துர்றேன் மாமி." என்று சொல்லிவிட்டு பக்கவாட்டு அறைக்குப்போனான் மூர்த்தி. அவன் நடையில் ஏதோவொரு அவசரகதி தொற்றிக்கொண்டிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:32 am

பக்கவாட்டு அறையின் இரும்புக் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தான் மூர்த்தி. சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் மையத்திலிருந்த தங்கநிறப் பூ டிசைன் தகதகப்பான வட்டங்களாய் விரிந்துகொண்டிருந்தது. மெஸ்ஸிலிருந்து வாடிக்கையாளர்களின் பேச்சுச்சத்தம் விட்டுவிட்டுக் கேட்டபடியிருந்தது. கூட்டம் ஓய்ந்தபின் மெஸ்பக்கம் போகலாம் என்றிருந்தான் மூர்த்தி. தன்னை ஏதோ இனம்புரியாத சக்தி இங்குமங்கும் ஈர்த்து தன்னை மிகவும் அலைக்களிப்பதாய் உணர்ந்தான். இதிலிருந்து விடுபடும் வழி என்ன? விடுபட்டுத்தான் ஆகணுமா?

"மூர்த்தீ...மூர்த்தீ...எங்கேடா போயிட்டே, இவ்ளோ நேரமா ரூமுக்குள்ளே அடைஞ்சு என்னடாப்பா பண்ணிண்டிருக்கே?" ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் மாமி.

"பசிக்கலையாடா நோக்கு...மெஸ்ஸிலே எல்லாம் சாப்பிட்டுப் போயிட்டா...நீயும் நானும்தான் பாக்கி...மணி ஒன்பதரை ஆச்சு...வா, சாப்பிடுவோம்..."

அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தான் மூர்த்தி.

"இனி இந்த ரூம் சாவியை நீயே வச்சுக்கோடா...நீதான் இங்கே வந்துறப்போறியே...நீ வரும்போது நாங்க எங்கனாச்சும் போயிருந்தாக்கூட, நீ தங்கிக்கலாமோல்லியோ?"

மாமியின் முகத்தில் ஏறுவெயில் சுள்ளென்று அடித்தது. முகம் லேசாய் வியர்த்திருக்க, தன் மஞ்சள்-சிவப்பு வண்ணக் கலவையிலான சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். அவளது வளர்த்தியும், எடுப்பான முகமும் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணிற்று.அவளைப் பின்தொடர்ந்து முன்வாசல்பக்கமாய் மெஸ்ஸ¤க்குப் போனான் மூர்த்தி.

"இன்னொரு ஐடியா மூர்த்தி...நீ இனி மெஸ்ஸ¤க்கு இப்பிடி சுத்திச் சுத்தி வரவேணாம்...உன் ரூம்லே ஒரு உள்பக்கக் கதவு இருக்கே கவனிச்சியா, அதை அந்தாண்டே பூட்டி வச்சுருக்கோம்...அதை இப்பவே திறந்துவிட்டிர்றேன்...அப்றம் அப்படியே வந்துக்கலாம், போயிக்கலாம்..."

"வேணாம் மாமி, உங்க வீட்டுக்குள்லே நுழைஞ்சு வந்தா உங்களுக்கு ஒரே டிஸ்டர்பன்ஸா ஆயிடும்..."

"நீ ஒண்ணுடா...எல்லா நாய்ங்களையுமா அந்த வழியா விடப்போறோம்? நீ மட்டும்தானேடா அந்த வழியா வரப்போறே?"

"ஏன் மாமி, எனக்கு மட்டும்? என்கிட்டே அப்பிடி என்ன இருக்கு மாமி?"

"அதாண்டா தெரியலை! நேத்து நீ பகல்லே படிக்கப் போயிட்டியோன்னோ, அதுவே எனக்குத் தாங்கலைடா...உன் பேச்சைக் கேட்டுண்டே இருக்கணும்போலிருக்குடாம்பி!...இன்னிக்கும் காலேஜுக்குப் படிக்கப்போறியா என்ன?" மாமி குரலில் ஒருவித ஏக்கத்துடன் அவன் முகத்தை ஏறிட்டாள். அவன் ஒருகணம் பதில் சொல்லமுடியாமல் திணறினான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:33 am

"நீ இங்கிருந்தே படியேண்டா மூர்த்தி...அந்த ரூம் உனக்கு வசதிபோதலேன்னா சொல்லு, உள்ளே எங்க வீட்டுக்குள்ளே இருந்து படி...உன்னை நாங்க யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டோம்... உனக்கு கா·பி, டீ எது வேணுமோ கேளு,நொடிலே போட்டுத்தாறோம்!" - இலைபோட்டுத் தண்ணீர்வைத்தபடி சொன்னாள் மாமி.

பெஞ்ச்சில் உட்கார்ந்து அவள் முகத்தை ஏறிட்ட மூர்த்தி, "இல்லே மாமி...அது சரியா வராது!அங்கே காலேஜ்லேபோய் படிச்சாத்தான் நல்லாருக்கும், நாங்க ·ப்ரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து ஒண்ணாப் படிக்கிறோம்"

"யாருடாப்பா ஒனக்கு ·ப்ரெண்ட்?அதான் ஸ்ரீதரை மூக்கை உடைச்சுட்டு வந்துட்டியே?"

"இல்ல மாமி, கேர்ள் ·ப்ரெண்ட்ஸ் மாமி...தட்ஷிணி, வனஜான்னு ரெண்டுபேர்கூடத்தான் படிக்கிறேன்"

"அப்பிடியா!" என்றவள், கண்கள் அகல, "அதுங்க எங்கேருந்துடா வர்றதுகள்?" என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"லேடீஸ் ஹாஸ்டல்லேருந்துதான் மாமி"

"அங்கேருந்து எப்படிடா வெளிலே வர்றது?"

"வரலாம் மாமி....கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ்லே இதெல்லாம் பெரிய விசயமில்லே..."

மாமி, சேலைத்தலைப்பால் மீண்டும் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.அவளையே சற்றுநேரம் உற்றுப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மூர்த்தி.சில கணங்கள் எதுவும் பேசத்தோணாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். உள்ளிருந்து வந்த புவனா, அவனுக்கு வெண்பொங்கல் பரிமாறினாள். பொங்கலின் நெய்மணம் அவன் நாசியில் கமகமத்தது. எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே போய்விட்டாள் மாமி.

"நீங்க படிக்கப் போங்க மூர்த்தி...அம்மா பேச்சைக்கேட்டு இங்கியே இருந்தீங்கன்னா உருப்டாப்புலேதான்!" என்று தாழ்வான குரலில் கிசுகிசுத்தாள் புவனா. அவளை நிமிர்ந்து பார்த்த மூர்த்தி, அவள் முகத்தில் தெரிந்த அப்பட்டமான குழந்தைமையையும், கள்ளங்கபடமற்ற தன்மையையும் கண்டு ஒருகணம் ச்சர்யப்பட்டான்.

வீட்டினுள் எட்டிப்பார்த்த புவனா, அம்மா உள்ளறைக்குப் போய்விட்டதை உறுதிசெய்துவிட்டு, மூர்த்தியைப் பார்த்தாள். அவள் கண்களில் எதையோ ரகசியத்தை வெளிப்படுத்தப்போகும் பீடிகை தென்பட்டது.

"மூர்த்தி...இப்பச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.இவ என்னோட சொந்த அம்மா இல்லைங்க மூர்த்தி! எங்கம்மா செத்துப்போயி பத்துவருஷம் ஆச்சு. அப்றம்தான் அப்பா இவளைச் சேர்த்துண்டார்...இவ யாரு, எந்த ஊருன்னு இதுவரைக்கும் யாருக்கும் உருப்படியாத் தெரியாது.அப்பா இவளை எட்டு வருஷத்துக்கு முந்தி எங்கிருந்தோ அழைச்சிண்டு வந்து "இனி இவதான் உனக்கு "அம்மா" ன்னார்..." சொல்லும்போதே குரல் உடைந்து கண்கலங்கினாள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக