புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 12:52 pm

First topic message reminder :

“இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்”

ஒரு புதிய உடன்படிக்கையின் மூலமாக

வேதாகமத்திலுள்ள உடன்படிக்கைகள்


உடன்படிக்கை“ என்பது இரு சாரார் சில குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களையோ அல்லது நிபந்தனைகளையோ நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுத்து, செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும்.

1
“நிபந்தனைக்குட்பட்ட” உடன்படிக்கை என்றால், இருவரில் ஒருவர் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் ஒன்றைச் செய்வதாக மற்றவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் ஆகும். “நீ அதைச் செய்தால் நான் இதைச் செய்வேன்”.

2
“நிபந்தனையற்ற” உடன்படிக்கை என்றால் எந்த நிபந்தனையுமில்லாத வாக்குத்தத்தம் ஆகும். “நீ என்ன செய்தாலும், அல்லது செய்யா விட்டாலும், நான் இதைச் செய்வேன்”.

வேதாகமத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பல சுவாரசியமான, முக்கியமான உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன:

1. ஏதேனில் - தேவனுக்கும் மனுக்குலத்துக்கும் இடையே

2. ஆதாமோடு - தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே

3. நோவாவோடு - தேவனுக்கும் நோவாவுக்கும் இடையே

4. ஆபிரகாமோடு - தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே

5. மோசேயோடு (பழையது) - தேவனுக்கும் .ஸ்ரவேலருக்கும் இடையே

6. தாவீதோடு - தேவனுக்கும் தாவீதுக்கும் இடையே

7. புதிய ஏற்பாடு - தேவனுக்கும் சபைக்கும் இடையே

“ஏற்பாடு” என்பதற்கும் “உடன்படிக்கை” என்பதற்கும் அர்த்தம் ஒன்றே.

வேதாகமம் பழைய மற்றும் புதிய “ஏற்பாடுகளாகப்” பிரிக்கப்பட்டிருப்பதை
நாம் அறிவோம்.

திட்டவட்டமாக குறிப்பிட வேண்டுமானால், “பழைய ஏற்பாடு” தேவனுடைய நியாயப் பிரமாணத்தை அடிப்படையக் கொண்டிருந்த, மோசேயின் உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

“புதிய ஏற்பாடு” - தேவனுடைய கிருபையை அடிப்படையாகக் கொண்ட புதியதும் இன்னும் சிறப்பானதுமான உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

இப்போது இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் விளக்கமாகப் காண்போம்.

தொடரும்...





dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:13 am

சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 18, 2012 7:54 am

கிறிஸ்துவைப் போலாவதற்கு விடுதலை ”
“சத்தியம் மற்றும் அன்பின் ஆளுகை”


நமக்குள்ள‌ேயுள்ள பரிசுத்தாவியானவரின் கட்டுப்பாடு நம்மைப் பாவம் மரணம் இவைகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து விடுதலையாக்குகிறது. பரிசுத்தாவியானவரின் உள்ளான அதிகாரம் நியாயப்பிரமாணத்தின் சக்தியைவிட அதிக வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது. உண்மையில், நியாயப்பிரமாணத்தினால் அது எதிர்பார்க்கும் நீதியை ஒரு போதும் உருவாக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரின் அதிகாரமும் வல்லமையும் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

அடுத்த இரண்டு வசனங்களில் பவுல் இந்த சிந்தனையை விரிவுப்படுத்துகிறார்: “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”.

“அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக் கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தை போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாதாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்க‌ே அப்படிச் செய்தார்” (ரோமா்: 8:1-4).

நமது பழைய பாவகரமான இயல்பும் “மாம்சம்” என்று அழைக்கப்படுகிறது. “மாம்சத்தில் வாழ்வது” என்றால், நமக்குள்ளேயுள்ள பிரமாணக் காவலருக்கு (பரிசுத்த ஆவியானவர்) அப்பாற்பட்டு, நமது சொந்த முயற்சிகளால் வாழ்வதாகும்.

அப்படிச் செய்வது நம்மை மறுபடியுமாக நியாயப்பிரமாணத்துக்குள்ளும் அதன் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளும் கொண்டு வருகிறது. அது தோல்விக்கும் குற்ற உணர்வுக்கும் மட்டுமே நம்மை வழி நடத்தும் என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். நாம் மறுபடியும் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்துக்குள் கட்டப்படுவோம்!!

“ஆவியில் நடப்பது” என்றால் ஆவியின் கனியின் மூலமாகவும் (கலாத்தியர்: 5:22 - “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்”) , பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலமாகவும் வரும் சுய கட்டுப்பாட்டில் நடப்பதாகும்.

“ஆவியில் நடப்பது” ஜீவனைக் கொண்டு வருகிறது. நம்மை நாமே பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில் ஒப்புக் கொடுப்பதின் மூலம் நாம் ஆவியில் நடக்கிறோம். ஆவியில் ஜீவிக்கிறோம்.

அவர் எப்போதுமே சத்தியத்திலும் அன்பிலும் நமது வாழ்க்கையை ஆளுகை செய்வார். அவர் நமக்கு ஒரு போதும் ஆக்கினைத் தீர்ப்பை அளிக்க மாட்டார் என்பதோடே கூட, நாம் பாவம் செய்யும் போது அதை உடனடியாக நமக்கு உணர்த்துவார்.

தேவனுடைய பரிசுத்த அன்பின் பிரமாணத்தை நாம் மீறும்போதெல்லாம் அவர் உண்மையுடன் நாம் அதை அறியும்படிச் செய்வார். மேலும், நாம் தோற்றுப் போகாதபடி அந்தப் பிரமாணத்தின்படி வாழும் வல்லமையையும் நமக்கு அருளுவார்.

பரிசுத்த ஆவியானவர் நமது இருதயத்துக்கு தேவனுடைய கிருபையின் எவ்வளவு அருமையான ஈவாக இருக்கிறார்! அவர் நமது தேற்றரவாளன் என்று அழைக்கப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை - அவர் எப்போதும் நம்மோடிருக்கும் ஆலோசகராகவும் துணைவராகவும் இருக்கிறார்.

நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தை, உங்கள் சித்தம் அனைத்தும் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்றன.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 18, 2012 8:55 am

“ஒரு உள்ளான வாஞ்சை மற்றும் வல்லமை”


இந்த இடத்தில் இரண்டு காரியங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

எச்சரிக்கை: 1. பரிசுத்தாவியானவர் தேவனுடைய வார்த்தையின் (வேதாகமம்) இடத்தில் அதற்குப் பதிலாக வந்திருக்கிறார் என்று நாங்கள் கூறவில்லை. சிலர் இப்படிப் போதிக்கிறார்கள். ஆனால் அது தவறாகும்.

வார்த்தையை நமக்கு விளக்கிக் கூறவும். அதை நமது வாழ்க்கையில் செயல் பூர்வமாக ஆக்கும்படியாகவும் பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார். வேத வசனங்கள் இல்லாமல் அவருக்கு விளக்கிக் கூறுவதற்கு வேறெதுவும் இல்லை.

நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதுமே தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தோடு ஒத்துப் போகும்.

நமது அன்றாட வாழ்க்கையில் திரு வசனத்தின் பொருத்தத்தை எடுத்தக் கூறுவதே அவருடைய வாஞ்சையாக இருக்கிறது.

பரிசுத்த ஆவியானவர் எழுதப்பட்ட வார்த்தையை நமது இருதயங்களில் ஜீவனுள்ள வார்த்தையாக மாற்றுகிறார். நமது விசுவாசத்தின் முக்கியமான மையப் பார்வையாக அதை ஆக்குகிறார். ஆண்டவராகிய இய‌ேசு நமக்கு முன் மாதிரியான சகோதரனாக இருக்கிறார். இங்கே பூமியில் தமது பிதாவானவரின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக அவர் தேவனுடைய ஆவியானவரையும் சார்ந்திருந்தார். நாமும் அப்படியே செய்ய வேண்டும்.


தொடரும்...



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 8:58 am

சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 19, 2012 7:12 am

“ஒரு உள்ளான வாஞ்சை மற்றும் வல்லமை” தொடர்ச்சி...


எச்சரிக்கை: 2. மற்றொரு முக்கியமான கருத்து. ஆவியானவரில் நமது சுயாதீனத்தைக் குறித்ததாக இருக்கிறது.

நாம் பிரமாணமற்ற விருப்பப்படியான வாழ்க்கை வாழும்படியாக பரிசுத்த ஆவியானவர் நம்மை நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுவிக்கவில்லை.நாம் நமது இருதயங்களில் எழுதப்பட்டுள்ள பிரமாணத்துக்குக் கீழ்ப்படியும்படியாக, அவர் நம்மைக் கற்பலகைகளில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவித்திருக்கிறார்.

ஒரு மேலான பிரமாணம் அல்லது கட்டுப்பாடு இருக்கிறது. நமக்குள்‌ள‌ேயுள்ள இந்த பரிசுத்த ஆவியானவரின் மேலான பிரமாணம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆளுகை செய்யும்.

கற்பலகைகளில் எழுதப்பட்ட எந்தப் பிரமாணமும் நமது வாழ்க்கையில் நாம் எதிர் நோக்கும் வெவ்வேறான சூழ்நிலைகள் அனைத்தையும் கவனிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தேவனுடைய உள்ளான அன்பின் பிரமாணத்தைச் சூழ்நிலைக்கேற்றபடி செயல்படும்படிச் செய்ய முடியும்.

நாம் நமது மாம்சத்தின் இச்சைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும்படியாக விடுவிக்கப்படவில்லை. உண்மையில் நாம் கிறிஸ்துவில் நமக்கு உரிய தேவனுடைய சித்தத்தில் குறைவுபடுவோமானால், பரிசுத்த ஆவியானவர் உடனடியாக நமது குற்றத்தை நமக்கு உணர்த்தி, நம்மை சரிப்படுத்துவார்.

நம்மை இயேசுவானவரைப் போலாக்குவது - அவருடைய சாயலுக்கொப்பாக நம்மை மறுரூபப்படுத்துவது - அவருடைய நோக்கமாக இருக்கிறது.

கிறிஸ்துவின் ஆவியானவராக, அவர் நமக்கு நமது உள்ளான ஜீவனின் பிரமாணமாக ஆகிறார். நாம் இனி மேலும், “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று கூறும் வெளியான பிரமாணத்தினால் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், ஆண்டவராகிய இயேசுவைப் போலாக வேண்டும் என்ற உள்ளான வாஞ்சையும் வல்லமையுமே நம்மை நெருக்கி ஏவுகிறது.

“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2கொரிந்தியர்: 3:18).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 19, 2012 7:29 am

“ஒளியில் நடப்பதற்கு” விடுதலை
எப்போதுமே விடுதலை


ஆண்டவருடைய மகிமை மகிமையான ஒளியாக இருக்கிறது. மேலும், “அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான்: 1:5). என் உடன் பரிசுத்தவான்களே, நீங்கள் ஆண்டவரில் நடப்பீர்களானால், உங்களிலும் எந்த இருளும் இருக்கக் கூடாது.

ஆக்கினைத் தீர்ப்பின் மேகம் அகற்றப்பட்டு விட்டது. பயத்தின் இருண்ட நிழல் விரட்டப்பட்டு விட்டது.

நீங்கள் உங்கள் ஆவியை தேவ ‌ஆவியானவருக்கும், உங்கள் சிந்தையை அவருடைய வார்த்தைக்கும் ஒப்புக் கொடுத்திருப்பீர்களானால், மெய்யாகவே, நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சில தவறுகளைச் செய்யலாம்; ஆனால், தேவன் இவைகளையும் கூட உங்கள் நன்மைக்காகவும், தமது மகிமைக்காகவும் மாற்றும்படி கிரியை செய்ய உண்மையுள்ளவராயிருக்கிறார்.

நீங்கள் அவரை அனுமதிப்பீர்களானால், அவர் அன்போடு உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குப் பயிற்றுவித்து, உங்களை ஒழுக்கத்துக்கு உட்படுத்துவார்.

தேவனைத் துதியுங்கள், அவர் நமக்கு ஒரு புதிய இருதயத்தையும், ஒரு புதிய ஆவியையும், ஒரு புதிய உடன்படிக்கையையும் கொடுத்திருக்கிறார்.

நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம் - கிறிஸ்துவில் நமது சுயாதீனம் நித்தியமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது!


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 19, 2012 7:48 am

“சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த தேவனுடைய வழி”


அன்புள்ள உடன் பரிசுத்தவான்களே, தமது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களையும், பயன்களையும் நீங்கள் அனுபவிக்க வ‌ேண்டுமென்று தேவன் வாஞ்சிக்கிறார். கிறிஸ்து இயேசுவில் அது அவருடைய கிருபையின் ஈவாக இருக்கிறது. அவருடைய பரிசுத்த ஆவியானவர் இப்போது உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார்.

மேலும், “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2கொரிந்தியர்: 3:17). அது பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாகும்.

தேவனுடைய அன்பின் பிரமாணம் உங்கள் இருதயத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் ஆலோசகரும், தேற்றரவாளனுமாகிய பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதைக் செயல்படுத்திக் காட்டுவார்.

அவர் உண்மையுடன் உங்களைச் சிட்சித்து, ஆண்டவருடைய வழிகளில் உங்களுடைய வாழ்க்கையை நடத்துவார். இதுவ‌ே உங்களுக்கான , சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த தேவனுடைய வழியாக இருக்கிறது.

அன்பான நண்பரே, நீங்கள் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அடைய முடியும்! பிரமாணத்தின் அடிமைத்தனத்தின் கீழாக நீங்கள் எப்போதாவது விழுந்து போகும்படி சோதிக்கப்படுவீர்களானால், ரோமர்: 8:1,2 வசனங்களில் உள்ள இந்த உறுதிப்படுத்தும் வார்த்தைகளை மறுபடியும் மறுபடியுமாகச் சொல்லி பாருங்கள்:

“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னை... விடுதலையாக்கிற்றே”.

“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடக்கும்படிக்கு” அது என்னை விடுதலையாக்கிற்று (1யோவான்: 1:7). தேவனுடைய அன்பு மற்றும் கிருபையின் மகிமையான ஒளியாக இது இருக்கிறது.

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550 இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550 இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 30085028457471489388610


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 19, 2012 6:25 pm

கர்த்தருடைய வார்த்தை நம்பினால் இக்கட்டுகளில்ருந்து விடிவிப்பார்..! சூப்பருங்க நன்றி அண்ணா தொடருங்கள்..!
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 23, 2012 7:14 am

அருண் wrote:கர்த்தருடைய வார்த்தை நம்பினால் இக்கட்டுகளில்ருந்து விடிவிப்பார்..! சூப்பருங்க நன்றி அண்ணா தொடருங்கள்..!


லைக் செய்யப்பட்டது.

தங்களைப் போன்றோா் தரும் ஊக்கமே என்னை தொடா்ந்து உவகையுடன் முன்னொக்கி செல்ல உதவும் உந்து சக்தியாக இருக்கிறது.

நன்றி திரு.அருண் அவா்களே நன்றி அன்பு மலர்



இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக