புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
1 Post - 50%
heezulia
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
20 Posts - 3%
prajai
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:25 am

ஆளைப் பார்த்து தான் தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொள்ளும் போல. உத்தர பிரதேசத்தில் எவரைக் கேட்டாலும், "தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவா, தங்கமான அதிகாரியாயிற்றே' என்று தான் சொல்கின்றனர். நம்மூர் நரேஷ் குப்தா, பிரவீண் குமார் போல, இவருக்கும் மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அவர்களைப் போலவே மிக எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறார். தேவையான அளவு வார்த்தைகளை மட்டுமே எச்சரிக்கையாக உச்சரிக்கிறார்.
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Tamil_News_large_402167
கடுமையான தேர்தல் பணி நெருக்கடிக்கிடையில், அவர் "தினமலர்' இதழுக்கு அளித்த பேட்டி:

இதுவரை இல்லாத அளவு, ஏழு கட்டத் தேர்தலுக்கு என்ன அவசியம் வந்தது?
உத்தர பிரதேசம், ஒரு மிகப் பெரிய மாநிலம். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பதட்டமும், பிரச்னையும் கொண்டது. இங்கு தேர்தல் நடத்துவதே ஒரு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள, நல்ல முறையில் திட்டமிடுவது அவசியம். எனவே, ஏழு கட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பே பெரிய சவாலாக இருந்திருக்குமே...
மக்கள் தொகையில் 62 சதவீதம், வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது கமிஷன் கணக்கு. அந்த இலக்கை அடைந்து விட்டோம். முன்பு, இது 54 சதவீதமாக இருந்தது. 98 சதவீத வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை, 12.57 கோடி. இதில் 1.37 கோடி பேர், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள்.

இது எப்படி சாத்தியமானது?
ஏராளமான தொண்டு நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இரவு, பகல் பாராமல் வேலை பார்த்ததன் மூலம் சாத்தியமானது.ஒவ்வொரு கிராமத்திலும், போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், "நம்பிக்கைச் சீட்டு' என்ற ஒன்றை வழங்கினோம். அதில், காவல் துறை மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்கள், தொலைபேசி எண்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. வெறும் எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலே பூத் ஸ்லிப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்தினோம். தேர்தலுக்காக, 400க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

உ.பி.,யில் அதிகபட்ச ஓட்டுப்பதிவே 57 சதவீதமாகத் தான், அதுவும் 1977ல் தான் இருந்துள்ளது. இம்முறையாவது அதிகரிக்குமா?
மிகப் பெரியளவில் அதிகரிக்கும். வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்தளவு விழிப்புணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கிறோம். அது, எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்ன?
உ.பி., தேர்தல், எப்போதுமே ஒரு மைல் கல்லாகத் தான் பார்க்கப்படுகிறது. 2007ல் நடந்தது, நாட்டின் மிகச் சிறந்த தேர்தலாக அறியப்படுகிறது. 2009ம் ஆண்டிலும் மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வது தான் உண்மையான சவால். புதிய அணுகுமுறைகள் மூலம் மீண்டும் அதை செய்து காட்டுவோம்.

தமிழகம், பீகாரில் நடந்த தேர்தல்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீர்களா?
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். ஒரு மாநிலத்தில் கையாளப்படும் சிறந்த நடைமுறையை தேர்தல் கமிஷன், பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறது. தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவில் கிடைத்த பலன்களை பார்க்கும்போது, உ.பி.,யிலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

அரசு இயந்திரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
மிகச் சிறப்பாக. அனைவருமே கமிஷனின் அங்கமாக மாறிவிட்டனர். நேர்மையான, அமைதியான மற்றும் சுமுகமான தேர்தலை நடத்த, அனைவருமே பங்களிக்கின்றனர். சில இடங்களில், புகாருக்குள்ளான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக் கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பலன் கிடைத்தது?
சட்டம், ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் பதட்டமோ, பரபரப்போ கிடையாது. 42 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும், சோதனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இடமாற்றம், அதிகாரிகள் மத்தியில் ஒரு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்பாதா?
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தேர்தல் கமிஷன், அவர்களின் பணியை முழுமையாக கண்காணிக்கிறது. அவர்கள், தவறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அகற்றிவிடுகிறது. அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது கட்டாயம். விதிமீறல் இருக்கும் இடங்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி குற்றம்சாட்டுகிறது...
குற்றம் சாட்டுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.

யானை சிலைகளை மூடுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவை தானா?
இது, கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்துக் கட்சிகளும் சமநிலையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. அதனால் தான், அரசு விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைச் சிலைகள் மூடும் திட்டத்தை, ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு உமேஷ் சின்கா கூறினார்.

தினமலர்



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Feb 09, 2012 12:59 pm

உ.பிதேர்தலில் 64 சதவிகிதம் ஒட்டு பதிவாகி உள்ளதை மக்கள் ஜனநாயக படுத்தயுள்ளனர் என்பது தெளிவகயுள்ளது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக