புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_c10இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_m10இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_c10இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_m10இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:04 pm

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி!
on Tuesday, February 7, 2012 | 0 Comment

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Anbalagan_111c
கால்பிரெய்த் செஸ்டர்பௌல்ஸ் போன்றோரெல்லாம் முதன்மை வாய்ந்த பெரிய நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கத் தூதர்களாக வந்தார்கள். ஒவ்வொரு கட்டங்களில் அமெரிக்க அரசுக்குப் பொருளாதார நிலைகளில் அறிவுரைகள் வழங்கியவர்கள் அவர்கள். தாங்கள் சார்ந்த கட்சிக்குப் பதவியிறக்கம் நேரிடுகிறபோது, அவர்கள் ஏற்கெனவே தாங்கள் பணிபுரிந்து இடையே விட்டுவிட்டு வந்த பேராசிரியர் பதவிகளுக்குத் திரும்பப் போய்விட்டார்கள்.

நம்முடைய இன்பத் தமிழ்நாட்டில் மந்திரிகளாக இருக்கிறவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிக்குப் பதவியிறக்கம் நேரிட்ட மறுநாளே மத்திய சிறைச்சாலைகளை நிரப்பப் போய்விடுகிறார்கள். புழல் சிறைச்சாலையிலிருந்து திகார் சிறைச்சாலை வரை இவர்களால் நிரம்பாத சிறைகளே இல்லை. இவர்களில் பலர் சாதிவாரியான மந்திரி பட்டியலை நிரப்ப வந்தவர்கள் என்பதால் ஏற்கெனவே அரசியலுக்கு வரும்போது இவர்கள் விட்டுவிட்டு வந்த பணிகளுமில்லை. ஆகவே, பழைய பணிகளுக்குத் திரும்புவது என்னும் நிலைகளும் இல்லை.

சேலம் மந்திரி, திருச்சி மந்திரி, ஈரோடு மந்திரி, விழுப்புரம் மந்திரி, கன்னியாகுமரி மந்திரி, திருவொற்றியூர் மந்திரி, திருச்செந்தூர் மந்திரி, கோயமுத்தூர் மந்திரி என்று எத்தனை எத்தனை மந்திரிகள்; எத்தனை எத்தனை சிறைச்சாலைகளில்!

இவர்கள் நீங்கலாக, முன்னாள்-இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் அவர்கள்
தகுதிக்கேற்ற உள்ளூர் நீதிமன்றங்கள்; உள்ளூர்ச் சிறைச்சாலைகள்! தலைவரின் குடும்பத்துக்கு மட்டும் தில்லி நீதிமன்றம்; திகார்ச் சிறைச்சாலை! ரொட்டி, ஆலு, கரம் சாயா!

இதுபோக, மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள் இவர்களுக்கெல்லாம் கிளைச் சிறைச்சாலைகள்!

அடுத்துவரும் புதிய ஆட்சியினர்க்கு முதல் தலைவலியே நிரம்பி வழியும் சிறைச்சாலைகளில் அவர்களுக்கு இடவசதி செய்துகொடுப்பதுதான்!
இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Pala_karupaiya
முன்னாள் மந்திரி துரைமுருகன் இந்த நிலையை வெல்லும் சொற்களால் விளக்கினார்:

கட்சியினரெல்லாம் சிறையிலே பாதி;
மறைவிலே பாதி!'
இந்தக் காட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது!
"ஜெயிலிலே பாதி; பெயிலிலே பாதி!'

“நிலப் பறிப்பு; போலி ஆவணங்கள்; அடாவடித்தனங்கள் என்று எண்ணிலடங்காப் பிரிவுகளில் வழக்குகள் விரிகின்றன! ""நிலப்பறிப்பு என்பது சிவில் வழக்கு. அதைக் கிரிமினல் வழக்காக மாற்றுவது பழி வாங்கும் நடவடிக்கையாகும்'' என்றார் மருத்துவர் ஐயா இராமதாசு!

பங்குபாக வழக்குகள் சிவில்தான்! நிலப்பறிப்பும் போலி ஆவணங்கள் தயாரித்து அடாவடித்தனம் புரிவதும் கிரிமினல் இல்லையா?

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! 04raja4
ஒரு சிரிப்பு நடிகர் நேற்றுவரை தன்னுடையது என்று உரிமை பாராட்டிய சொத்தை ஆட்சிமாற்றம் நிகழ்ந்தவுடன் தேடிப்போய் ஒப்படைத்துவிட்டாரே! இது அவருடைய மனமாற்றத்தையா குறிக்கிறது?

இரவோடிரவாக வரப்பைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டான் என்பதற்காகக் கொலைப் பழிகளெல்லாம் கடந்த காலங்களில் நிகழ்ந்ததுண்டு. எவனோ ஒருவனுக்குச் சொந்தமான சொத்தைத் தெக்கத் தெளியத் தன்னுடையதாக்கிக்கொண்டு உடையவனை ஓட ஓட விரட்டிவிடுகின்ற நிலைகள் சென்ற காலங்களில் இல்லை.

இது ஒரு வகையான புதிய குற்ற நடத்தை! இந்தக் குற்ற நடத்தையினர் தாலிச் சங்கிலி அறுப்பவர்களைப் போன்ற ஏனோதானோக்கள் அல்லர். மிகவும் விவரமானவர்கள்! பெரும்பகுதி ஆளும் கட்சியினரோ அல்லது அவர்களின் ஆதரவு உடையவர்களோதான் இத்தகைய குற்றத்தைச் செய்துவிட்டுச் சுதந்திரமாக உலவ முடியும்!

இது புதுவகையான குற்றம் என்பதாலும் அரசியல் செல்வாக்கு உடையவர்களின் செயல்
என்பதாலும், நாடு முழுவதும் கடந்த காலங்களில் பெருவழக்காக நடைபெற்றதாலும், சாதாரணக் காவல்துறையால் இதைக் கையாள முடியாது என்பதாலும் சிறப்புக் காவல் பிரிவை 36 இடங்களில் உருவாக்க நேரிட்டது என்பது மட்டுமல்ல; 25 சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. பறிகொடுத்தவர்களில் கடந்த 5 ஆண்டுகளாக அமுங்கிக் கிடந்தவர்களெல்லாம் வெளிக்கிளம்பி வந்து தைரியமாக இதுவரை கொடுத்துள்ள புகார்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து500.

தலைநகரில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நெடுநாட்கள் சிறை வைக்கப்பட்ட ஒருவர் விடுதலை பெற்று அல்ல; வெறும் பிணையில் வெளியே வருகிறார் என்பதற்கே, அவருக்கு விண்ணூர்தி நிலையத்தில் அளிக்கப்படும் வரவேற்பு, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கூனை நிமிர்த்தி விட்டு பம்பாய்த் துறைமுகத்தில் வந்திறங்கிய எம்மான் காந்திக்குக் கூட அளிக்கப்படவில்லை.

மேளதாளங்கள்; சரவெடிகள்; வரவேற்பு வளைவுகள்; தலை வெளிப்பட்டவுடன் கூட்டம் எழுப்பும் ஆரவாரம்; உரியவரைச் சுற்றி எழும் நெரிசல்; "நாளைய தமிழகமே' என்னும் வாழ்த்து முழக்கங்கள்!

பிணையில் வெளிவந்தவரே, "ஓ! நாடு மேலும் மேலும் இத்தகைய செயல்களைத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது போலும்' என்று மேலும் மேலும் குற்றம் புரிகிற அளவுக்கு இத்தகைய வரவேற்புகள் ஊக்கப்படுத்தாதா?

"புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி!

ஆனால், இங்கே புகழ் என்பது விலைக்குரிய பண்டம்! செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்; தந்திக் கம்பத்துக்குத் தந்திக் கம்பம் வரவேற்புத் தட்டிகள்; பிடித்து வரப்பட்ட கூட்டம்; இவைபோதும் பிணையில் வந்தவரைப் பெம்மான் காந்தி ஆக்குவதற்கு!

பொய்யை மெய்யாக்கலாம்; இருளை ஒளியாக்கலாம்; சிறுமையைப் பெருமையாக்கலாம்; வான்கோழியை மயிலாக்கலாம்; கோட்டானைக் குயிலாக்கலாம்!

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Karu
அண்மையில் கருணாநிதி ஒரு தலைவரை நட்புப் பாராட்டிவிட்டு, அவரோடு வேறுபட்டதற்குக் காரணம் அவர் திராவிட இயக்கத்தைப் பழித்துவிட்டார் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.

என்னைப் பழித்தால் பொறுத்துக் கொள்வேன்; என் முன்னோர்களைப் பழித்தாலும் பொறுத்துக் கொள்வேன்; ஆனால், திராவிட இயக்கத்தைப் பழித்தால் ஒரு காலத்திலும் பொறுக்க மாட்டேன் என்று கொதித்திருக்கிறார்!

காலத்துக்கேற்ற புதிய கருத்துகளை வைப்பதற்குச் சமூக அமைப்புகளும் அதன் முரண்பாடுகளும் தலைமைக்குப் புரிய வேண்டும்.

அந்த வகையில் காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் புதிய இயக்கம் காணும் ஆற்றல் சான்ற தலைவர்களாகப் பெரியாரும், அண்ணாவும் விளங்கினார்கள். தாழ்ந்த நிலையில் இருந்த தமிழனைத் தன்மான உணர்வு கொள்ளச் செய்தார் பெரியார்.

வீரமணியைப்போல் நீடித்த விசுவாசம் காட்டி திராவிடர் கழகத்தின் மடாதிபதியாக ஆகிவிடாமல், பெரியாரோடு முரணிப் புதிய இயக்கம் கண்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார் அண்ணா!

பெரியாருக்குத் தாய்மொழி குறித்துப் பெருமித உணர்வு ஏதும் இல்லை; ஆனால், அண்ணாவுக்கு இருந்தது.

இந்திக்கு எதிராகத் தமிழை நிறுத்தினார் அண்ணா. இந்தி என்பது இந்தி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசாச் சிறுபான்மை மக்களின் மீது செலுத்தும் அரசியல் ஆதிக்கம். அது தமிழை அழிக்க வந்த இந்தி என அடையாளப்படுத்தப்பட்டது. திராவிட இயக்கம் முறுக்கேறத் தொடங்கியது. சிங்களப் பேரினவாதம் தமிழ்ச் சிறுபான்மையரை ஈழத்தில் இடறிக் கொண்டே இருப்பது கண்டு மனம் நொந்தார் அண்ணா!

வடபுல ஏகாதிபத்திய எதிர்ப்புப் பதாகையைத் தூக்கிப் பிடித்தார்.

"வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது' என்பது அண்ணாவின் போர் முழக்கம்.

டால்மியாக்கள் கொழிக்கிறார்கள்; கல்லக்குடிகள் அடையாளம் இழக்கும் அளவுக்குத் தேய்ந்துவிட்டன.

இவை அண்ணாவின் நிலைப்பாடுகள்!

முதலாவது, உலகமயமாக்கலில் வடநாட்டுக்காரனெல்லாம் ஆங்கிலம் படிக்கக் கிளம்பி விட்டான். அவன் இந்தியை மறந்துவிட்டான். நம்முடைய திராவிட இயக்கக் காளை டி.ஆர். பாலுதான் மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து மந்திரியாக இருந்தபோது மைல் கல்லில் இந்தியைப் போட்டுக் கொண்டு திரிந்தார்!

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Kani_624464e
இரண்டாவது, மையத்திலிருந்த சோனியாவின் அரசு முற்ற முழுக்கத் தன் தயவில் இருந்தபோது, ஈழத் தமிழனின் மீது கை வைத்தால் நீ எதிர்க்கட்சியாகி விடுவாய் என்று அச்சுறுத்தி அடக்கி வைப்பதற்குப் பதிலாக, ஈழம் மயானமாவதற்குக் காரணமானார் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அண்ணா தந்த கொடி, அண்ணா தந்த சின்னம், அண்ணா தந்த பெயர் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அண்ணா தந்த தமிழினக் கொள்கையை ஆழக் குழி தோண்டி திருவாரூர் தலைவர் புதைத்தபோது, அப்போதும் மௌன சாட்சியாய் பக்கத்தில் இருக்க அன்பழகனால்(பேராசிரியர்) எப்படி முடிந்தது?

"எற்றுஎன்று இரங்குவ செய்யற்க' (655) என்ன செய்தோம்; ஏன் செய்தோம் என்று நெஞ்சு பதறும்படியான காரியங்களைச் செய்து விடாதே என்று பதறுவான் வள்ளுவன். கருணாநிதி தன் சொந்தக் காரணங்களுக்காகச் செய்த மனப் பதற்றமான காரியத்துக்குத் துணை இருந்துவிட்டு, எப்படி அன்பழகனால் இன்றுவரை தூங்க முடிகிறது?

இதிலே அண்ணா விருது பெறச் செழியனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்னும் கேள்வி வேறு!

அண்ணா விருதைப் பெற அண்ணாவுக்கு அடுத்த தகுதியுடையவர் செழியன்தான்!

அண்ணாவின் புகழைப் பேசாநாளெல்லாம் பிறவா நாளே என்று வாழ்பவர் அவர்!

அண்ணா விருதைப் பெறச் செழியனுக்குத் தகுதி இல்லை என்றால், அந்தத் தகுதிக்கான இவரினும் மேலாக யாருக்கும் இல்லை என்று அந்த விருதையே ஒழித்துவிடலாம்.

அண்ணாவின் மூன்றாவது கொள்கை "வடக்கு வாழ்கிறது' என்னும் கொள்கை.

அந்தக் கொள்கை ஒன்றைத்தான் கருணாநிதி நிறைவேற்றினார்.

இனமான (!?) பேராசிரியரே உங்களால் எப்படி தூங்க முடிகிறது? பழ.கருப்பையாவின் நயமான கேள்வி! Ramadoss_and_karuna
மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்கும் என்றோ, திமுக தயவில் காங்கிரஸ் உயிர்த்திருக்கும் காலம் வரும் என்றோ அண்ணா நினைத்தவரில்லை.

டால்மியாக்கள் பல ஆண்டுகளாகச் சுரண்டிக் கொண்டு போனதற்கும் பல ஆயிரம் மடங்கு கூடுதலாக ஆ. இராசாவை விட்டுச் சுரண்டிக்கொண்டு வந்துவிட்டார் கருணாநிதி. இதற்காக மகள் சிறை செல்ல நேரிட்டது. மகளின் தாய் கூறினார்: "என் மகள் குடும்பத்திற்காகச் செய்த தியாகம் இது!'

வேறொரு குடும்பம் அனுபவித்தது; என் மகள் சிறைக்குப் போனாள் என்பது அதன் பொருளாய் இருக்கலாம்!

இராசாத்தி அம்மையார் இதைவிடப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம், அண்ணாவின் வடபுல ஏகாதிபத்திய எதிர்ப்பில் வெல்ல, ஆ. இராசாவோடு கூட்டணி அமைத்துச் செய்த தியாகம் இது.

திராவிட இயக்கத்தை வெறும் பழிச் சொற்களால் வீழ்த்த முடியாது; அதுவும் வேற்றாரால் வீழ்த்த முடியாது. பையின் உள்பக்கத்தை வெளியே பிதுக்கிப் பார்ப்பதுபோல, உள்ளார்ந்து பார்த்தால் முன்னாள் முதல்வருக்கு திராவிட இயக்கம் தன்னையல்லால் வேறு யாராலும் வீழ வல்லது அல்ல என்னும் உண்மை முழுமையாய் விளங்கும்!

இதனை "புறம் அறிப் பாராய்' என்று மணிமேகலை கூறும் (4 : 121).

நன்றி : பழ.கருப்பையா (தினமணி)

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக