புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
96 Posts - 49%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
7 Posts - 4%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
223 Posts - 52%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
16 Posts - 4%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
5 Posts - 1%
Barushree
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 11:02 pm

“தேவனுடைய இரட்சிப்பின் ஈவு”


இது ஒரு இலவசமான ஈவு ஆகும்.

“ஈவு” - என்றால் என்ன?

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஒரு ஈவைக் குறித்த அதிகாரப்பூர்வமான வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அதைக் கொடுக்க வேண்டும்

2. யாரேனும் ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

3. அதை பெற்றுக் கொள்ளுபவர் அதற்காகக் கிரயம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு ஈவு என்பது இலவசமாகக் கொடுக்கப்பட்டு, கிரயம் செலுத்துவதற்கான எந்த எண்ணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 5:42 am

“நம்மால் அதை சம்பாதித்துக் கொள்ள முடியாது”


ஓர் ஈவு என்பது இலவசமாக அருளப்படும் ஒன்றாகும். எந்த விலை செலுத்துதலும் கிடையாது; அப்படியிருக்குமானால், “ஈவு” விலைக்கு வாங்கும்” ஒன்றாகி விடும். தேவனுடைய இரட்சிப்பின் ஈவு இலவசமாக கொடுக்கப்படுகிறது. நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒன்றை அவர் நமக்குக் கொடுக்கவில்லை. அவர் நமக்கு ஓர் ஈவை அருளுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் “எல்லோரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” (ரோமர்: 3:23) என்று நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆனால் அடுத்த வசனத்திலேயே தேவனுடைய இரட்சிப்பின் இலவச ஈவைப் பெற்றுக்கொள்பவர்கள் அனைவரும் “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” என்ற நற்செய்தியை நமக்கு அறிவிக்கிறார் (ரோமர்: 3:24).

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு இலவசமாக கொடுக்கப்பட்டது என்பதை சிலர் முழு‌மையாக புரிந்து கொள்வதில்லை. எனவே, தேவனுடைய தயவை சம்பாதித்துக் கொள்ள முயலுவதின் மூலம் அந்த ஈவை விலை கொடுத்து வாங்கும் பொருளாக மாற்ற முயலுகிறார்கள்.

உலகில் ஒரு கூட்ட மக்கள் தங்கள் முயற்சியை சோகமான உச்சகட்டத்திற்கே கொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள். அவர்கள் “கசை நோன்பாளர்கள்” (Flagellists) என்று அழைக்கப்படுகிறார்கள். உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் பெரிய வெள்ளிக்கிழமையன்று அவர்கள் தங்களுக்கு தாங்களே கசையடி கொடுத்து் கொண்டிருக்கிறார்கள். கசையடியினால் அவர்கள் முதுகில் இரத்தம் பொங்கி பெருகியோடும். சிலர் ஒரு சிலுவையில் தங்களை வைத்து ஆணியடித்துக் கொள்ளக்கூடச் செய்கிறார்கள்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் பெயரால் மக்கள் ஏன் இவ்வளவு பயங்கரமான காரியங்களை செய்ய வேண்டும்? தங்கள் இரட்சிப்பு ஓர் இலவச ஈவு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதபடியினால்தான் அப்படியெல்லாம் செய்கிறார்கள். நித்திய ஜீவன் தேவனிடமிருந்து வரும் ஓர் ஈவாக இருக்கிறது.

தேவனுடைய தயவை சம்பாதிக்க நம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் கிரியைகளினால் அல்ல; கிருபையினாலேயே இரட்சிக்கப்பட்டோம். அப்படியிருக்குமானால் நமது முயற்சிகளுக்காகப் பெருமைப்பட வாய்ப்பிருக்குமே (எபேசியர்: 2:8,9).

நமது இரட்சிப்புக்கான கிரயம் கல்வாரியில் (சிலுவையின் மரணத்தில்) “முழுமையாக செலுத்தித் தீர்க்கப்பட்டது.” இயேசுவானவர் சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த போது, அவர் “முடிந்தது” என்று கூறினார். எனவே, நமது விசுவாசம் முற்றிலுமாக கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த கிரியையிலேயே இருக்கிறது.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 6:14 am

“நம்மால் அதை சம்பாதித்துக் கொள்ள முடியாது” தொடர்ச்சி...

“கசை நோன்பாளர்கள்” (Flagellists) என்று அழைக்கப்படுகிற மக்கள் தங்கள் செயலில் உண்மையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். தேவனுடைய இரட்சிப்பின் மேன்மையை அவர்கள் அறியவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இரட்சிக்கப்படுவதை விரும்புகிறார்கள். நாடுகிறார்கள்.

ஆனால் அதை தங்கள் சொந்த வழியில் செய்ய முயலுகிறார்கள். அவர்கள் வைராக்கியமும் ஆர்வமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வைராக்கியமும், உண்மையுணர்வும் நம்மை இரட்சிக்க முடியாது. நாம் உண்மையாகச் செயல்பட்டாலும் தவறான காரியத்தைச் செய்யலாம்.

இப்படிச் சமய வைராக்கியம் கொண்டவர்களைப் பற்றி பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார். “தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்து சாட்சி சொல்லகிறேன்; ஆகிலும், அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல,

எப்படியென்றால், அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்படியாதிருக்கிறார்கள்,

விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமானத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோமர்: 10:2-4).

நாம் என்ன முடிவுக்கு வர முடியும்? அந்த மக்கள் உண்மையுடன் செயல்படுகிறார்களா? ஆம். வைராக்கியமுள்ளவர்களா? ஆம். தவறாகச் செயல்படுகிறார்களா? ஆம், ஆம் - அறியாமையின் காரணமாக.

நமது சொந்த முயற்சிகளோலோ அல்லது கிரியைகளாலோ நாம் ஒரு போதும் தேவனுக்கு முன்பாகச் சரியானவர்கள் என்ற நிலையை எட்ட முடியாது. நித்திய ஜீவனுக்‌கான (முடிவில்லா பரலோக வாழ்வு) தேவனுடைய ஒரே வழி இதுவாகவே இருக்கிறது. இரட்சிப்பு ஓர் ஈவு - வாங்கக் கூடிய ஒன்றல்ல. நாம் செய்யும் எதைக் கொண்டும் அதை வாங்க முடியாது. இரட்சிப்பின் கிரியை ஏற்கனவே கிறிஸ்துவால் சிலுவையில் செய்து முடிக்கப்பட்டாயிற்று. நமது பங்கு இலவசமாக அருளப்படும் அந்த ஈவை ஏற்றுக் கொள்வது தான். வேறு வழி கிடையாது.

அநேகர் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறார்கள். என்றாலும், சிலுவையில் கிறிஸ்து செய்து முடித்த கிரியையோடு தாங்கள் எதையாவது கூடச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களூம் இருக்கிறார்கள். அவர்கள் சரீரப்பிரகாரமாக தங்களுக்கு கசையடி கொடுத்துக் கொள்ளாவிட்டாலும் வேறுவழிகளில் தங்களை தண்டித்துக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய ஒப்புதலை பெறுவதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருபொதும் முழைமயாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்வைப் பெறுவதில்லை.

அவர்கள் எப்போதுமே, இன்னும் மேலான இலக்கை எட்ட முயலுகிறார்கள்; ஆனால், எப்போதுமே தோல்வியடைகிறார்கள். பிறகு குற்ற உணர்வினாலும், குற்றத் தீர்ப்பினாலும் தங்களை கடுமையாக தண்டித்துக் கொள்ளுகிறார்கள்.

உண்மையுள்ளவர்களா? ஆம். வைராக்கியமுள்ளவர்களா? ஆம். தவறாக செயல்படுகிறார்களா? ஆம். அவர்கள் தங்கள் இரட்சிப்பை இழந்து போகவில்லை. ஆனால் அறியாமையின் காரணமாக தங்கள் இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து போய்விட்டிருக்கிறார்கள்!

தொடரும்....






சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 6:58 am

ஒரு ஈவைப் பெறுவதற்கு நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எவரும் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?


தேவன் தமது ஒரே பேறான குமாரனைக் கொடுத்தபோது, தமது ஈவை அருளினார். என்றாலும், அது ஏற்றுக்கொள்ளப்படும் வரையிலும் அது சட்டப்பூர்வமான” ஓர் ஈவாகாது. அவர் ‌ தமக்கு சொந்தமானதிலே வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” (யோவான்: 1:1) என்ற வசனம் கூறுகிறது.

இயேசுவானவரின் நாட்களில் வாழ்ந்த யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாதபடியினால், தேவனுடைய ஈவின் பயனையும், ஆசீர்வாதத்தையும் அவர்கள் பெறவில்லை. ஆனால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை போ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” ‌ (யோவான்: 1:12).

மாபெரும் நற் செய்தியாளரான பில்லி கிரஹாம் ஒருமுறை “இரட்சிப்பின் பெரிய புதிர்களில் ஒன்று அநேக மோசமான மனிதர்கள் பரலோகத்திற்கு செல்லும் அதே வேளையில் , அந‌ேக நல்ல மனிதர்கள் நரகத்திற்கு செல்லுவார்கள்” என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

ஏன் அநேக மோசமான மனிதர்கள் பரலோகத்துக்குச் செல்லுவார்கள்?

ஏனென்றால், அவர்கள் தேவனுடைய நித்திய ஜீவனின் ஈவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிலுவையில் இயேசுவானவரின் அருகில் தொங்கிய கள்வனை, அவன் மரிக்கும் வேளையில், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்: என்று வ‌ேண்டிக் கொண்டான். இயேசுவானவர் உடனடியாக அவனுக்குப் பதிலளித்தார்; “இன்றைக்கு நீ என்னுடைனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்” (லூக்கா: 23:39-43).

அந்தக் கள்வனின் எளிய வேண்டுதல் விசுவாசம் நிறைந்ததாக இருந்தது. இரட்சிக்கும் விசுவாசத்தின் அனைத்து அம்சங்களும் அதில் காணப்பட்டது. அவை என்னென்ன?:

1. அவன் இயேசுவானவரே ராஜா (ஆண்டவர்) என்று விசுவாசித்தான்

2. அந்த ராஜா ஒரு ராஜ்யத்தைப் பெறுவார் என்று அவன் விசுவாசித்தான்

3. அந்த ராஜ்ஜியத்தில் தன்னையும் சோ்த்துக் கொள்ளுமாறு அவன் கேட்டுக் கொண்டான்.

“இன்றைக்கு நீ என்னு‌டனே கூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசுவானவர் அவனுக்கு பதிலளித்தார். (லூக்கா: 23:43). அந்தக் கள்வன் தம்மை இரட்சகர் என்றும் ராஜா என்றும் விசுவாசித்தபடியால் இயேசுவானவர் அவனை ஏற்றுக் கொண்டார்.

ஏன் அந‌ேக நல்ல மனிதர்கள் நரகத்திற்கு செல்லுவார்கள்?

ஏனென்றால், அவர்கள் தேவனுடைய ஈவை மறுத்து, தங்கள் சொந்த “நற்கிரியைகளை” நம்பினார்கள்.

இயேசுவானவர் பரிசேயர்களுக்கு இத‌ே கருத்தை வெளிப்படுத்தினார்.
அவர்கள் சமயவாதிகளாக இருந்த போதிலும் இழந்துபோனவர்களாக இருந்தார்கள். “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்ன‌ே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிற‌ேன்” (மத்தேயு: 21:31).

ஏன் அப்படிப்பட்ட பாவிகள் ராஜ்ஜயத்துக்குள் பிரவேசிக்க வ‌ேண்டும்?

பரிசேயர்கள் வெளியே தள்ளப்பட வேண்டும்?


பரிசேயர்கள் அதிக சமய நம்பிக்கையுள்ளவர்களாக ஆலயத்திற்கு சென்றார்கள். ஜெபித்தார்கள். காணிக்கை தசமபாகம் செலுத்தினார்கள். பண்டிகை நாட்களையும், உபவாச நாட்களையும் ஆசரித்தார்கள்; ஓய்வு நாளை ஆசரித்தார்கள்; ஆனால், தேவனுடைய ஈவாகிய இரட்சிப்பை ஏற்றுக் கொள்ள வில்லை.

ஏன் பரிசேயர்கள் நரகத்துக்கும், வேசிகள் பரலோகத்திற்கும் செல்ல வேண்டும்?

ஏனென்றால், வேசிகள் தேவனுடைய ஈவை ஏற்றுக் கொண்டார்கள்; பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் தங்களுடைய சொந்த நீதியின் கிரியைகளின் மூலமாக தங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் முயன்றார்கள். நித்திய ஜீவனை நோக்கிச் செல்லும் தெய்வீக வழி அவர்களுக்கு முன்னால் இருந்தது; அவர்களோ, தங்கள் சொந்த வழியில் செல்லுவதைத் தெரிந்து கொண்டிருந்தார்கள்.

தேவ நீதிக்கு கீழ்ப்படிதல்” என்ற சொற்றொடரை ரோமர்: 10:3 வசனம் குறிப்பிடுகிறது. அது கிறிஸ்து இயேசுவில் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே வரும் தேவனுடைய இரட்சிப்பின் ஈவை ஏற்றுக் கொள்ளுவதைக் குறிப்பிடுகிறது.

நம்மில் பலருக்கு எதற்காவது கீழ்படிவது கடினமான காரியமாயிருக்கிறது. நம்மில் ஏதோ ஒன்று எந்த வகைப்பட்ட அதிகாரத்தையும் - அது ஞானமும் அன்புமுள்ள தேவனுடைய அதிகாரமாக இருந்தாலும் சரி - எதிர்த்து நிற்கிறது.

தொடரும்...







சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 1:31 am

“அந்த ஈவுக்கான கிரயத்தை தேவன் முழுமையாக வசலுத்தித் தீர்த்திருக்கிறார்”

நமது சிருஷ்டிகர் - மீட்பர்


தேவனுடைய பிதாவுக்குரிய அன்பின் இருதயத்தை தெளிவாகக் காட்டும் ஒரு அருமையான உண்மைக் கதை பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. இதில் தேவன் தம்மை - பிதா - சிருஷ்டிகராக மட்டுமின்றி, பிதா மீட்பராகவும் வெளிப்படுத்துகிறார்.

தேவனுடைய குணாதிசயத்தின் இந்த இரட்டை வெளிப்பாட்டை ஏசாயா தீர்க்கதரிசி கண்டார். “இப்போதும் யாக்கோபே உன்னை சிருஷ்டித்தவரும் , இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லகிறதாவது: பயப்படாதே: உன்னை மீட்டுக் கொண்டேன், உன்னை போ் சொல்லி அழைத்தேன் நீ என்னுடையவன்” (ஏசாயா: 43:1)

சிருஷ்டித்த த‌ேவன் மீட்கவும் செய்கிறார். மனிதனை வாங்கி மறுபடியுமாகத் தம்முடைய நோக்கத்துக்குள் கொண்டு வரும்படியாக, பித‌ாவானவர் தமது சொந்தக் குமாரனின் ஜீவனையே கிரயமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. நம்மை மறுபடியுமாக வாங்க, நம்மை மீட்டுக் கொள்ள அவருடைய ஜீவன் - ஒரு பலியாடாக - கொடுக்கப்பட்டது.

தொடரும்...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 2:02 am

“ஆபிரகாமும் ஈசாக்கும்

மீட்கும் அன்புக்கு ஒரு தீர்க்கதரிசன சித்திரம்


“இந்த காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார். அவன் “இதோ அடியேன்” என்றான்.

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின் மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும், தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக் கொண்டு , தகனபலிக்கு கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்கு குறித்த இடத்திற்கு புறப்பட்டுப் போனான்.

மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்தப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விட மட்டும் போய் தொழுது கொண்டு உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

ஆபிரகாம் தகனபலிக்கு கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையுமு், கத்தியையும் எடுத்துக் கொண்டான்; இருவரும் கூடிப் போனார்கள்.

அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான். அப்பொழுது அவன்: இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்” (ஆதியாகமம்: 22:1-7).


இந்த இடத்தில் நாம், தேவன் ஏன் ஒருவனை அவனுடைய சொந்த மகனையே கொல்லும்படி சொல்ல வேண்டும்? என்று நினைக்கலாம். ஈசாக்கு (ஈசாக்கு - என்ற சொல்லின் பொருள் “நகைப்பு” என்பதாகும்) பிறக்கும்போதே அற்புதவிதமாக பிறந்தவன். ஆபிரகாம் சா‌ராள் இருவருமே பிள்ளை பெறும் வயதைத் தாண்டி விட்டிருந்தார்கள்.

என்றாலும், தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைத் தருவதாக வாக்குத்தத்தம் அருளியிருந்தார். அவா் தமது வார்த்தையை காப்பாற்றியிருந்தார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு ஆபிரகாம் 25 ஆண்டுகள் காத்திருந்தான். ஈசாக்கு பிறந்த போது அதிகமாக களிப்படைந்தான். இப்போது ஆபிரகாமிடம் அவனுடைய இந்த குமாரனைப் பலியிடும்படிக்கு கூறுகிறார்.

உண்மையின் தேவன் அப்படியொரு காரியத்தை செய்வாரா? அப்படியானால் ஏன்?

இந்த உண்மைக் கதை வேதாகமத்தில் இருப்பதற்கு ஒரு தெய்வீக் நோக்கம் இருக்கிறது. ஒரு முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்துவதே இந்த நோக்கமாகும். இந்தக் கதை தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு ஒரு தீர்க்கதரிசன சித்திரமாக இருக்கிறது. நமக்கு இரட்சிப்பை பெற்றுத் தருவதற்காகப் பிதாவானவரும் குமாரனும் ஆற்ற வேண்டிய பங்கை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

தொடரும்....


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 2:17 am

“ஈசாக்கு - குமாரன்


ஒரு கீழ்ப்படிதலுள்ள குமாரனாகிய ஈசாக்கு ஆண்டவராகிய இயேசுவின் மாதிரியாக (தீர்க்கதரிசன சித்திரமாக) இருக்கிறான் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மலையின் மீது ஏறியபோது, பலிக்குரிய கட்டைகள் ஈசாக்கின் ஈசாக்கின் முதுகில் ஏற்றப்பட்டது. 2000 வருடங்களுக்குப் பிறகு தேவனுடைய ஒரே பேறான குமாரன் மற்றொரு மலையாகிய கல்வாரி மலையின் மீது ஏறியபோது, அவர் முதுகில் மரச்சிலுவை வைக்கப்பட்டது; அவர் அதைச் சுமந்து சென்றார்.

ஆபிரகாம் மற்றும் ஈசாக்கை குறித்த இந்த நிகழ்ச்சி மோரியா மலைப் பகுதியில் நடைபெற்றது. எருசலேமுக்கு வெளியே இருக்கும் இதே மலைத் தொடரில் தான் தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்து நமது பதிலாளாக பலியிடப்பட்டார்.

ஆபிரகாம் நமது பிதாவாகிய தேவனுடைய ஒரு மாதிரியாக இருந்தான் என்பதை நாம் சில வேளைகளில் காணத் தவறி விடுகிறோம். தன் கையில் நெருப்பையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு அவன் சென்றபோது, அவன் இருதயத்து வேதனையை நம்மால் உணர முடிகிறதா?

ஈசாக்கின் மூலமாக வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்ற ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்டு வரப்போவதாகத் தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் அருளியிருந்தார். ஈசாக்கு மரித்துப் போவானானால், உயிர்த்தெழுதலின் நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும்? (எபிரேயர்: 11:17-19).

தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 5:09 am

“விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் திடமான அடிகள்”


“இருவரும் கூடிப்போனார்கள்” என்று நாம் வாசிக்கும்போது, அது நம்முடைய இருதயத்தை உருக்குகிறது அல்லவா? அவர்கள் இருவரும் அமைதியாக அருகருகே நடந்து சென்றார்கள் - ஒரு அன்பான தகப்பன் தன் குமாரனுடன்! ஒரு அன்பான குமாரன் தன் தகப்பனுடன்!

தகப்பனாகிய ஆபிரகாம் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் திடமான அடிகளை எடுத்து வைத்து நடந்தான் ஆனால், அவனுடைய இருதயம் அளவற்ற வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. அதை அமைதிப்படுத்தவது தேவனுடைய வாக்குத்தத்தின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே! இறுதியாக அந்த அமைதி ஈசாக்கின் உதடுகளிலிருந்து எழுந்த ஒரு கேள்வியினால் குலைக்கப்பட்டது: “ஆட்டுக்குட்டி எங்கே?”

ஆபிரகாமின் பதிலில் தேவனுடைய மேன்மையான மீட்கும் அன்பில் அருமையான தீர்க்கதரிசன சித்திரம் மறைந்திருக்கிறது: “என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்” (ஆதியாகமம்: 22:8).

“கூடிப்போய்” என்ற வார்த்தை இரண்டாம் முறையாக வருகிறது. அது அதிகமான அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. அது ஒருவர் மற்றவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பைக் குறிப்பிடுகிறது. அது தேவன் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் கூடக் குறிப்பிடுகிறது.

ஆபிரகாம் ஈசாக்கிடம் அவனுடைய மரணத்தைக் குறித்த தேவனுடைய சித்தத்தைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய வாக்குத்தத்தைப் பற்றியும் கூடக் கூறியிருக்க வேண்டும். இருவரும் சோ்ந்து தேவனுடைய வார்த்தைக்குத் தங்களை ஒப்புக் கொடுக்கச் சித்தமுள்ளவர்களாக இருந்தார்கள். ஈசாக்கு வலுவான இளைஞனாக இருந்தான்; அவன் எளிதாக தனது வயது முதிர்ந்த தகப்பனாரை எதிர்த்திருக்கலாம்.

இது தேவனுடைய அன்பைக் குறித்த எப்படிப்பட்ட தீர்க்கதரிசன வெளிப்பாடாக இருக்கிறது! ஒரு தகப்பன் தன் அன்பிற்குரிய குமாரனை பலியிடச் சித்தமாக இருந்தான். குமாரன் அந்த பலியாகத் தன்னை ஒப்புக் கொடுக்க சித்தமாக இருந்தான். நாம் வியப்போடு அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்க மட்டுமே முடிகிறது.

இந்த நிகழ்ச்சியின் முடிவை நாம் நிச்சயமாக அறிவோம். கடைசி கணத்தில் தேவன் ஒரு பலியை ‌ கொடுக்கவே செய்தார். புதரில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடா பலியாகக் கொடுக்கப்பட்டது. ஈசாக்கின் ஜீவன் காக்கப்பட்டது. தேவன் ஆபிரகாமுக்குத் தம்முடைய வாக்குத்தத்தைப் புதுப்பித்தார். ஈசாக்கின் மூலமாக வரும் மக்கள் கூட்டத்தினர் உலகத்தின் சகல இனத்தாருக்கும் ஆசீர்வாதமாக் இருப்பார்கள்.

தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 7:06 am

“தேவன் நமக்கு ஒரு ஆட்டுக்குட்டியை கொடுக்கிறார்”

2000 ஆண்டுகளுக்குப்பின்னர் அதே கதை விரிவுப்படுத்தப்படுவதை பார்க்கிறோம். ஆனால் இந்த முறை தமது ஜீவனைபலியாக ஒப்புக் கொடுத்தவர் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்படவில்லை.

“தம்மை தேவாட்டுக் குட்டியானவராக” ஒப்புக் கொடுத்த தேவனுடைய ஒரே பேறானவரைக் குறித்தே நாம் கூறுகிறோம். தேவத்துவத்தின் பிதா - குமாரன் உறவுக்கு ஆபிரகாமும் ஈசாக்கும் சிறந்த மாதிரியாக இருக்கிறார்கள்.

வேதாகமத்தில் ஒரு முக்கியமான வார்த்தையோ அல்லது
கருத்தோ முதன் முறையாக தோன்றும் போது, பின்னாலும் அது பயன்படுத்தப்படுவதற்கேற்ற ஒரு மாதிரியை உருவாக்குகிறது. எனவே, அந்த சொல் காணப்படும் பின்னணி ஒரு தனிச் சிறப்பான அர்த்தத்தை கொண்டிருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அது தகப்பன் மகன் மீது கொண்டுள்ள அன்பைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அது ஈசாக்கின் மீது ஆபிரகாம் கொண்ட அன்பாகும். “உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை” (ஆதியாகமம்: 22:2).

புதிய ஏற்பாட்டில் “அன்பு” (ந‌ேசம்) என்ற சொல் முதன் முறையாக சுவிஷேசங்களில் இந்தப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு: 3:17; மாற்கு: 1:11; லூக்கா: 3:22). ஆபிரகாம் தன் ஒரே பேறான குமாரனை நேசித்திருப்பானேயாகில், தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இன்னும் எவ்வளவு நேசித்திருப்பார்!

யோவானின் சுவிஷேசம் தேவனுடைய அன்பின் சுவிஷேசமாக இருக்கிறது. இந்த தனிச்சிறப்பான நூலில் தேவனுடைய மேன்மையான அன்பைப்பற்றி முதன் முறையாக எப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது? அது என்னவென்பதை நாம் அறியும்போது தாழ்மையோடு கூட வியப்பில் ஆழ்கிறோம்.

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஆம், பிதாவானவர் எப்போதுமே தமது குமாரனிடம் அன்பு காட்டி வந்திருக்கிறார். நித்திய காலமாக அவரை நேசித்து வந்திருக்கிறார். (யோவான்: 17:24). உண்மையில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எவ்வளவாக நேசிக்கிறார்கள்! அந்த அன்பில் நமக்கு இடம் உண்டு. பிதாவானவர் தமது சொந்த குமாரனை நேசிப்பதுபோல நம்மை நேசிக்கிறார் என்று இயேசுவானவர் கூறியிருக்கிறார்.(யோவான்: 17:23).

இது நமது அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்த போதிலும், பிதாவும் குமாரனும் உலகம் படைக்கப்பட்டதற்கு முன்பாகவே நமது மீட்பைக் குறித்து அன்புடன் திட்டமிட்டார்கள். உங்கள் மீதும் என் மீதும் அவா்கள் கொண்ட அன்பில் “இருவரும் கூடிப் போனார்கள்”. அதற்கும் மேலாக அவர்கள் சிலுவையில் அதை ஒன்று சோ்ந்து நிறைவேற்றினார்கள்.

தொடரும்....



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 7:50 am

“பயங்கரமான கிரயம்”


தமது சொந்தக் குமாரன் “கைவிடப்பட்டு” சிலுவையில் தொங்கிய அந்தப் பயங்கரமான நேரத்தில் பிதாவானவர் அவரை விட்டு எந்த பாதிப்புமில்லாமல் விலகியிருந்தார் என்ற தவறான கருத்தை நம்மில் அநேகர் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பரிசுத்த தேவனால் பாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். கிறிஸ்து சிலுவையில் நமது பாவத்தை தம்மீது
சுமந்தார். “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” (2கொரிந்தியர்: 5:21).

அதற்காக சிலுவையில் குமாரன் வேதனையை அனுபவித்தபோது, பிதாவானவர் எந்த வேதனை‌யும் படவில்லை என கூற முடியாது. தூய்மையானவரும், பரிசுத்தமானவரும், பாவமற்றவருமான தேவ குமாரன் நமது பாவத்தை தம்மீது சுமந்தபோது பயங்கரமான ஒரு காரியம் நடைபெற்றது. நித்தியத்திலும் முதன்முறையாக பிதாவானவரோடு அவருடைய உறவு முறிக்கப்பட்டது.

பாவம் பிரிக்கிறது. ஆவிக்குரிய மரணம் தேவனிடமிருந்து பிரிக்கப்படுவதாகும். “மனுஷகுமாரனாக” (இயேசுவானவர் பயன்படுத்திய தீர்க்கதரிசன பெயர் - மத்தேயு: 8:20; 17:12, 22 போன்ற வசனங்கள்) இயேசுவானவர் நமது பாவங்களுக்கான முழுத் தண்டனையையும் செலுத்தித் தீர்த்தபோது, சிலுவையில் தனித்து விடப்பட்டவராக இருந்தார்.

ஆனால், பிதாவானவரும் அந்த தண்டனையின் முழு வேதனையையும் உணர்ந்தார். உறவு முறியும் போது இரு சாராருமே பாதிப்பில் பங்கடைகிறார்கள். அவர்கள் இறுதி வரை அந்த வேதனையான பாதையில் ஒன்றாக நடந்தார்கள். தமது குமாரனைப் பலியிட வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் ஆபிரகாம் வேதனைப்பட்டது போல, நமது பாவத்துக்காக தமது ஒரேபேறான குமாரன் மெய்யாகவே பலியாக்கப்பட்டபோது தேவனுடைய இருதயம் மெய்யாகவே வேதனையை அனுபிவித்தது.

இந்த வேதனையான - ஆனால், அற்புதமான - சத்தியத்தின் அர்தத்ததை பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்: “(பிதாவாகிய) தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களை தமக்கு ஒப்புரவாக்கி” (2கொரிந்தியர்: 5:19). இதுவே பரிசுத்த திரித்துவத்தின் புதிரின் ஒரு பகுதியாக இருக்கிறது. “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்” என்று இயேசுவானவர் கூறியிருக்கிறார். (யோவான்: 14:10,11).

இயேசுவானவர் கன்னியிடத்தில் பிறந்த போது, “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்தேயு: 1:23). இயேசுவானவரைப் பார்த்தவுடனே யோவான்ஸ்நானகன், “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி” என்று கூறினான். (யோவான்: 1:29)

ஆபிரகாம் ஈசாக்கிடம் “என் மகனே தேவன் தமக்குத் தேவையான ஆட்டுக்குட்டியை பார்த்துக் கொள்வார்” ( ஆதியாகமம்: 22:8) என்று கூறியது நமக்கு நினைவு இருக்கிறது அல்லவா?

இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் தேவன் நம்மீது கொண்ட தனிப்பட்ட அன்பின் அருமையாக சித்திரமாக இருக்கின்றன. நமது பாவத்துக்கான பலியான ஆட்டுக்குட்டியை தேவன் தாமே அருளுவார்.

நாம் இரட்சிக்கப்படுவதற்குத் தேவையான வழியை அளிக்கும் பொறுப்பை அவர் தாமே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தொடரும்....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக