புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_m10அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 05, 2012 11:59 pm

எனது நண்பர் ஒருவர் வேறு ஒரு தளத்தில் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்தது என்னை மிகவும் கவர்ந்ததுடன் தமிழரின் பெருமையை நினைத்து மிகுந்த கர்வம் கொள்ள செய்தது. அதை இங்கு அப்படியே நான் நமது நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.


எனது முதல் பணியான கப்பற்படையில் என்னை கவர்ந்தவர், இன்று இப்புவுலகை நீக்கி அமரராக ஆனாலும் என் நினைவில் ஒரு ஹீரோவாக என்றென்றும் நிலைத்திருப்பவர் கடற்படையில் பணியாற்றி சாதனைகளை பல புரிந்த அட்மிரல் என். கிருஷணன் [நீலகண்ட கிருஷ்ணன்]. அவரை பற்றிய சில சுவராசியமான சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிரேன்.

நெல்லை சீமையிலே [திருநெல்வேலி] பிறந்ததனால் நேவியில் சிங்கமென உலா வந்தவர். கிருஷ்ணன் என்றாலே புளியை கரைக்கும் பலரது வயிற்றில் எதிரிகளுக்கு சொல்லவே வேண்டாம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர்.

இவரின் வீரதீர செயல்களுக்காக பல பதக்கங்களை இந்திய அரசாங்கத்தாலும் ராணுவத் துறையாலும் பெற்றிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மணி மகுடமாக இருந்த்து இவருக்கு பிரிட்டிஸ் கிரௌனால் வழங்கப்பட்ட DSC [Distinguished Service Cross ] மெடல்தான், ஏற்கனவே இங்கிலாந்து குயினால் இந்த மெடலை பெற்ற நெப்போலியன் போனாபட், அலச்சாண்டர் த கிரேட் போன்ற மாபெரும் வீரர்களின் பட்டியலில் இவர் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியதல்லவா.

இவர் நமது இந்திய கடற்படையை சேர்ந்த INS MYSORE, விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT-[both decommissioned now] போன்ற பல பெரிய கப்பலுக்கும் நடுத்தர வர்க்க கப்பலுக்கும் கேப்டனாக பணி புரிந்தவர். மிகவும் துணிச்சல் மிக்கவர்.

அந்நியரின் ஆதிக்கத்திலிருந்த கோவா நம் நாட்டுடன் இணைந்ததற்கு ராணுவத்தின் ஆணையையும் மீறி INS MYSORE [CRUISER] என்ற கப்பலின் கேப்டனாக ‘மை சிப், மை கமாண்ட்’ என்ற இவருடைய துணிகர செயலான கோவா ஆப்ரேஷன் கோவாவை நம்முடன் இணக்கும் நிகழ்ச்சிக்கு வித்திட்டதென்றே சொல்ல்லாம்.

[ நண்பர்களே நாட்டின் பதுகாப்பு நலன் கருதி சிலவற்றை விளக்கமாக கூற முடியாமைக்கு வருந்துகிரேன் ]

அதனால் தண்டனையாக ஆறு மாத சீனியாரிட்டியும் குறைக்கப்பட்டது. அதேசமயம் கேலண்ட்ரி ஆக்டுக்காக அவார்டு கொடுத்து கௌரவிக்கவும் பட்டார்.

மற்றொரு செயல் ஒரு சாதாரண வீரனுக்காக –

ஒரு சமயம் இவரது கப்பல் மும்பை துறைமுக நுழைவாயில் நேவல் டாக்யார்டுக்கெதிரில் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்த்து.

அதே கப்பலில் பணிபுரிந்த ஒரு செயிலர் - சாதாரண வீரன் [அவனும் தமிழகத்தை சேர்ந்தவன்தான்] தனக்கு கிடைத்த அரியர்ஸ் பணத்தை செலவழிக்க ஆசைப்பட்டு மும்பை தாஜ் ஹோட்டலில் சாப்பிட வேண்டி செல்ல. அங்கு ப்ராப்பர் டிரஸ் கோடில் இல்லையென்று அவனை அனுமதிக்க மறுத்து விட்டனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

ஏமாற்றத்துடன் கப்பலுக்கு திரும்பிய அவன் [அன்று ஞாயிறு விடுமுறை நாளென்பதால் மூன்றில் ஒரு பகுதியினராகிய டூட்டி வாட்சை தவிர்த்து மற்ற அனவரும் வெளியில் சென்றிருநத சமயம்]. அன்று ஏதோ காரணத்தால் கப்பலிலேயே தங்கி விட்ட கேப்டன் கிருஷணனிடம் தனது ஆதங்கத்தை கூறவும்.

அவரது அடுத்த ஆர்டர் ‘ஹீவ் ஆங்கர்’ என்பதுதான். கப்பலில் இருந்தவர்களை கொண்டு கப்பலின் நங்கூரம் எடுக்கப்பட்டது [பொதுவாக சாதாரண நாட்களில் ஒரு கப்பலை இம்மியளவு நகர்த்துவதாக இருந்தாலும் அந்தந்த கமாண்டின் தலைமையகத்தின் அனுமதியின்றி நகர்த்த கூடாது].

பவர் இல்லாமலேயே கப்பலை நகர்த்தி மும்பை கேட்வே ஆப் இண்டியாவுக்கு முன் கொண்டுவந்து கப்பலை நங்கூரம் போட்டு நிறுத்திய கேப்டன் கிருஷ்ணன், அந்த கப்பலின் முக்கிய ஆயுதமான 60 அடி நீளம் 12 இன்ஞ் கேலிபர் கொண்ட பீரங்கியை [turret] தாஜ் ஹோட்டலை குறி பார்க்க திருப்பி நிறுத்தி கொள்ள. அதே சமயம் நேவி யூனிபார்மில் மீண்டும் தாஜ் ஹோட்டலுக்கு சென்ற அதே வீரன் கிருஷ்ணனிடமிருந்து கொண்டு சென்ற செய்தியை தர, அதை படித்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அதிர்ந்து விட்டனர்.

செய்தி இதுதான் - இப் யு ஆர் நாட் பர்மிட் மை பாய் இன் டு யுவர் ஹோட்டல், எ சிங்கிள் செல் ப்ரம் மை டாரெட் ஈஸ் எனாப் டு ரிமூவ் யுவர் ஹோட்டல் ப்ரம் தெர்.

அந்த பீரங்கியின் தன்மையையும், அதை விட சொல்வதை செய்யக் கூடியவர் கிருஷணன் என்பதையும் நன்கு அறிந்திருந்த பிர்லாவின் ஹோட்டல் நிர்வாகம் உடனே அந்த வீரனை அனுமதித்ததோடு அவனக்கு ராஜ உபச்சாரம் செய்து அனுப்பியதுடன்,

எங்கள் ஹோட்டல் டிரஸ் கோடு படி யார் வநதாலும் ஆட்சேபனையில்லை என்று ஒரு செய்தியையும் கிருஷ்ணனுக்கு அனுப்பினர் தாஜ் நிர்வாகத்தினர்,

அதற்கு - அவர் டிபன்ஸ் யூனிபார்ம் ஈஸ் சுப்பீரியர் தென் ஆல் யுவர் டிரஸ் கோடு –

என்ற கிருஷ்ணனின் பதிலால் வாயடைத்து போய் விட்டனர். இதற்கும் ஆறு மாத சீனியாரிட்டி கட் – அன் ஆபிஷியலாக பலரது பாராட்டுக்கள் கிடைத்தன.

மற்றும் ஒரு நிகழ்ச்சி –

கப்பல் கேப்டனாக இருந்தவர் பதவி உயர்வு பெற்று விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் தலைமை [கமாண்டர் இன் சீப் ஆப் ஈஸ்டர்ன் நேவல் கமாண்ட்] பொருப்பேற்றிருந்த சமயம்.

ஆந்திராவில் மாநிலம் தழுவிய மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்க. அவர்களின் சில கோரிக்கைகளை முன் நிறுத்தி கடையடைப்பு, வாகன மறியல் என போராட்டம் உச்சம் அடைந்திருந்த தருணத்தில்.

மூன்று ஸ்டாரும் அந்த பதவிக்கான கொடியுடனான அவர் காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணனின் காரை நிறுத்திய போராட்டக்காரர்கள் அவரையும் அவர் காரையும் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்க காரில் இருந்து இரங்கிய கிருஷ்ணன்

– ஐ ஆம் அடமிரல் கிருஷ்ணன், ஆன் த வே டு மை டூட்டி, ஆர் யு கோயிங் டு அலவ் மை கார் ஆர் நாட் - என்று கூட்டத்தினரை பார்த்து கேட்க,


ஊ யெவர் யூ மே பி, வி வில் நாட் அலவ் த வெஹிக்கல் பர்தர் –

என்று போராட்டக்காரர்கள் பதில்லிக்க,

இப் மை கார் நாட் அலவ்டு நௌ, ஐ வில் ரிமூவ் த ஆந்திர பிரதேஸ் ப்ரம் இண்டியன் மேப், யு வில் நாட் கெட் ஈவன் பௌவுடர் ஆப் தட் –

என்ற கிருஷ்ணனின் வார்த்தையால் அதிர்ந்தனர் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களும்.

பத்திரிக்கையாளர் ஒருவர் - அட்மிரல் வாட் நான்சென்ஸ் யு ஆர் டாக்கிங், வி வில் ரிப்போர்ட் திஸ் டு அவர் பி.எம் அண்ட் பிரஸிடெண்ட் - என கூற,

கோ மென் கோ அண்ட் ரிப்போர்ட இட், பி.எம் ஈஸ் மை ரைட் பால் பிரசிடென்ட் ஈஸ் மை லெப்ட் பால் இன் ப்ரன்ட் ஆப் மை டூட்டி –

என்ற கிருஷணனின் காருக்கு வழி விட்டு ஒதுங்கினர் போராட்டக்காரர்கள். ஷிவியர் ரிப்பரிமெண்ட் கிடைத்த்து அந்த ஸ்டேட்மெண்டுக்காக.

மற்றும் ஒன்று –

71 இந்தோ பாகிஸ்தான் போரில் நமது கடற்படை, வெஸ்டரன் செக்டரான அரபிக்கடல் பகுதியில் டிபென்ஸ் [தற்பாதுகாப்பும்]. ஈஸ்டர்ன் செக்டரான வங்க கடல் பகுதியில் முழு நேர அபன்ஸிவ் [சும்மா பூந்து தாக்குதல்] செயல் பட்ட சமயத்தில்.

கிழக்கு பிராந்தியத்தில் அபன்ஸிவை செம்மையாக நடத்த வேண்டுமானால் அதற்கு தகுதியானவர் அப்போது வைஸ் சீப் ஆப் நேவல் ஸ்டாப்பாக இருந்த வைஸ் அட்மிரல் கிருஷணன் மட்டுமே என முடிவெடுத்த ராணுவ அமைச்சகமும், தலைமையகமும் கிருஷ்ணனை கிழக்கு கடற்படை பிராந்தியத்துக்கு மீண்டும் தலைமை வகிக்க உத்தரவு இட.

அதனை ஏற்க ஒரு நிபந்தனை வைத்தார் கிருஷ்ணன். அதாவது மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந் தனது கிழக்கு பிராந்திய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பட வேண்டும் என்ற நிபந்தனை கேட்ட ராணுவ மேல் மட்ட அமைச்சக மற்றும் நேவியை சேர்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் அதிர்ந்தனர்.

காரணம் அந்த போரில் அமெரிக்காவால் பயிற்சிக்கென்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அதி நவீன மயமான சப்மெரின் பி.என்.எஸ் ஹாஜி என பெயரிடப்பட்டு, ஐ.என்.எஸ் விக்ராந்தை [டார்கெட்டாக] அழிப்பதையே நோக்கமாக கொண்டு ஏற்கனவே அது தனது விகராந்தை தேடும் படலத்தை துவங்கியிருந்த சமயம்.

இந்த நேரத்தில் கிருஷ்ணனின் கோரிக்கைப்படி அதை அவரிடம் ஒப்படைத்தால், அது ஓப்பனான அபன்ஸிவ் தியேட்டரான வங்க கடலில் பயணிக்குமேயானால், பாகிஸ்தான் சப்மெரினுக்கு ஈஸியான டார்கெட்டாகி விடுமே என்று பதை பதைத்தனர்.

ஆனால் கிருஷணனின் பிடிவாத குணத்தை அவர்கள் அறிந்திருந்த்தனால் இருதலைக்கொல்லியானது அவர்கள் நிலை. பல காரசார விவாதங்களுக்கு பின் கடைசியாக கிருஷணனின் நிபந்தனையை ஏற்று விக்ராந்தை அவரிடம் ஒப்படைக்க, அவரும் கிழக்கு பிராந்தி தலைமை பொறுப்பை ஏற்றார்.

ஈஸ்டரன் செக்டரில் தரை வழியாக நமது தரைபடையும் வான் வழியாக நமது விமானப்படையும் பல சாகசங்களை செய்து கொண்டிருக்கையில், வங்க கடலில் எங்கோ இருந்து சிட்டுக் குருவிகளென வரும் விக்ராந்தின் விமானங்கள் பல சார்ட்டிகளாக [Sortie] வருவதும். தங்களது தாக்குதலை செவ்வனே முடித்து விட்டு மாயமாய் மறைந்து போய் விடுவதுமாக எதிரிகளை திக்கு முக்காட வைத்த்து.

எங்கிருந்து வந்தன, தாக்குதலை நடத்தி விட்டு பின் எங்கு சென்றன, அவைகளை இயக்கும் தாய் கப்பலான விக்ராந் எங்கு, எந்த பொஸிஷனில் உள்ளது என்று எதிரிகள் மட்டுமல்லாது MOR [Marine Operation Room] ல் இருந்து கொண்டு போரை நடத்திக் கொண்டிருந்த நமது ராணுவ வல்லுனர்களுக்கு புரியாத புதிராக இருந்த்து கிருஷ்ணனின் போர் வியூகம்.

நமது ராணுவம் எதிரியை வதம் செய்து கொண்டிருந்த நேரத்தில்தான். நம்மை பயமுறுத்தவும் முடிந்தால் பாகிஸ்தானுக்கு உதவும் எண்ணத்துடன் அமெரிக்காவின் பலமிக்க ஏழாவது கடற்படை பிரிவு –செவன்த் பிளீட்- நம்ம விக்ராந்தை [16000 DWAT (Deadweight All Tonnage)] விட பல மடங்கு பெரியதும் நூற்றுக்கணக்கான அதி நவீன விமானங்களை தன்னகத்தே கொண்டும் இயக்க வல்லதுமான விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ் எண்டர்பிரைஸ் [76000 DWAT (Deadweight All Tonnage)] தலைமையில் யூ.எஸ்.எஸ் ட்ரிபோலி -[Destroyer] -போன்ற சக்தி வாய்ந்த பல கப்பல்கள் இந்துமகா சமுத்திரத்தின் தென் பகுதியிலிருந்து, போர் நடக்கும் வட பகுதியை நோக்கி நகரவும்.

அதே நேரத்தில் நமது நேச நாடான ரஷ்யா அதே அமெரிக்க பிளீட்டை போன்ற சம அளவு பலம் கொண்ட தனது கப்பற்படை பிரிவு ஒன்றை நமக்கு உதவும் வண்ணம் அனுப்பி வைக்கவும். எங்கே மீண்டும் ஓர் உலக போர் நிகழ்ந்து விடுமோ என உலகமே அஞ்சி உன்னிப்புடன் கவலையோடு கவனித்து வந்தன.

இந்த சிக்கலான நேரத்தில்தான் அப்போதைய ராணுவ அமைச்சரும் இப்போதைய பார்லிமெண்டின் சபாநாயகர் மீராகுமாரி தந்தையுமான ஜெகஜீவன்ராம் புதுதில்லி ராணுவ கட்டுப்பாட்டறையில் இருந்து கிருஷ்ணனை ஹாட் லைனில் தொடர்பு கொண்டு

– கிருஷ்ணன், த செவன்த் பிளீட் ஈஸ் கம்மிங், வாட் யு ஆர் கோயிங் டு டூ -என்று கேட்டவருக்கு.

கிருஷ்ணன் அளித்த எல்லோரும் பெருமைபடக்கூடிய ஒரு வீரமான வீரனின் பதில் என்ன தெரியுமா

– ஹூக்கும் தேதோ சாப், ஐ வில் டேக் தட் ஆன் டூ [too] – [உத்திரவு கொடுங்கள் அதையும் ஒரு கை பார்த்து விடுகிரேன்] – எனபதுதான்

ஒரு சிறிய சிட்டுக்குருவி பலமிக்க ஒரு வல்லூரை எதிர்க்கிரேன் என்று துணிந்தால் அதன் தைரியமும் துணிவும் எத்தகையதாக இருக்கும். அவர் சொன்ன அந்த வீரமிக்க தைரியமான பதில் கேட்ட ஜெகஜீவன் ராம்

ஐ எஸ்பெட்டடு இட், தட் யூ வில் சே த சேம், என்று பெருமை பட்டுக்கொண்டார் மினிஸ்டர்.

இந்த ஒரு வார்த்தைக்காக நான் இன்றளவும் அவரை என் உள்ளம் கவர்ந்த ஹீரோவாக எண்ணி பெருமை படுவதில் தவறில்லையே நண்பர்களே.

கொசுரு –

விக்ராந்தை அழிக்க வந்த பாக்கிஸ்தான் சப்மரின் பி.என்.எஸ் ஹாஜி விசாகப்பட்டின துறைமுகத்தில் வைத்து அழிக்க பட்டது.

போர் முடிவடைந்து சென்னைக்கு வந்த விக்ராந்துக்கு, அன்று MLC யாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் மிக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அதிலிருந்த 2000 பேருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மூலமாக உணவு விருந்தும், அவர்களுக்கு நடிகை நிர்மலாவின் நடன நிகழ்சியும் நடத்தப்பட்டது.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 06, 2012 12:04 am

சல்யூட் கிருஷ்ணன் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 12:13 am

அட்மிரல் கிருஷ்ணன் அசாத்திய அசாதரண மனிதா்தான். அவரைப்போன்ற தளபதிகள் நமது நாட்டிற்கு தேவை.

அட்மிரலுக்கும், அாிய தகவலை சொன்ன உங்களுக்கும் அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 678642 அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550



அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 06, 2012 12:17 am

தமிழனின் பெருமையை உலகரிய வைப்போம். நன்றி நண்பர்களே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 06, 2012 7:08 am

மிகவும் அருமை...அசுரன் அவர்களே....விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 06, 2012 10:58 am

படிப்பதற்கே பெருமையாக இருந்தது , சல்யூட் கிருஷ்ணன் & அசுரன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 11:56 am

படிக்கும் போதே புல்லரித்தது.... சிலிர்த்தது....
Salute to அட்மிரல் என். கிருஷணன் [நீலகண்ட கிருஷ்ணன்]. நன்றி நன்றி நன்றி

உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி அசுரன்... அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 06, 2012 3:46 pm

மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம். இது போன்ற அட்மிரல்கள் இப்போது
குறைந்துவிட்டார்களே என்ற வருத்தம் வருகிறது இந்த பதிவை படிக்கும்போது



அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Uஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Dஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Aஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Yஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Aஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Sஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Uஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Dஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Hஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 06, 2012 4:07 pm

உதயசுதா wrote:இது போன்ற அட்மிரல்கள் இப்போது குறைந்துவிட்டார்களே என்ற வருத்தம் வருகிறது இந்த பதிவை படிக்கும்போது
அணையில் நீர்வரத்து குறைந்து விட்டது என்பது போல சொல்லுரிங்க சிரி சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 06, 2012 5:46 pm

சிறந்த தைரியசாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 1357389அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் 59010615அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Images3ijfஅஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும் Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக