புதிய பதிவுகள்
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
86 Posts - 45%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
63 Posts - 33%
i6appar
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
86 Posts - 45%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
63 Posts - 33%
i6appar
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள் !!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 6 Feb 2012 - 22:18

First topic message reminder :

தெரிந்து கொள்ளுங்கள் !!!

* கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.


* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
***********************
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
***********************



தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
***********************


* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை. 300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

***********************





* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
நன்றி தினமணி!

***********************


* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
நன்றி தினமணி!
***********************


* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 - இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.* 1989 - முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 - கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
நன்றி தினமணி!
***********************


* நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.
நன்றி தினமணி!
***********************


* ஆண்டுதோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் 'வல்கானிக்' என்றும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் 'டெக்டானிக்' என்றும், கடலுக்கடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ' சம்மாரின்' என்றுஇம் அழைக்கப்படுகிறது.
* 1906 - ம் ஆண்டு பசிபிக் கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக் கடுமையான நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.9 ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
* ஜூன் 19 - ம் தேதி உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.* அமெரிக்காவில் வேர்க்கடலையை விட பாதாம் பருப்பின் விலை மலிவு. இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* ஏப்ரல் 23 - ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* ஏப்ரல் 7 - ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நன்றி தினமணி!


* இந்தியாவில் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.
* தாமோதர் நதி வங்காளத் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
* அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
* சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.
* ரைட்டர்ஸ் பில்டிங் என்ற கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.
* ஹெபடைடிஸ் - பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.
* மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான் மின்மினி பிரகாசிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சிகள் வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு நத்தைகள் தான்.
* இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூரு.
* ப்ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
* தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.
* சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.
* இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
* வெளவால்களில் மொத்தம் 2000 வகைகள் உள்ளன.
* கொசுவில் 2700 வகைகள் உள்ளன.
* யானையின் தும்பிக்கையில் 40000 தசைகள் உள்ளன.
* குரங்குகளில் அழகானது மர்மோசைட் என்ற வகை குரங்கு.
* நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
நன்றி தினமணி!
***********************


* ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்க்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்த குறையை ஈடு செய்ய தன் தலையை 180டிகிரி வரை சுற்றி பார்க்க முடியும்.
* மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்துவயதிற்கு மேற்பட்டது.
* எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழக்கின்றனர்.
* ரிசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.
* பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.
* கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் கொட்டுக்கள் வரை இருக்கும்.
* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காணமுடியாதாம்.
* ஆஸ்திரேலிய மலரான கேண்டில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.
நன்றி தினமணி!

***********************


* இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா விருது.
* ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.
* இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலாகப் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.
* ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.
* இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.
* நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.
* தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
* 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
நன்றி தினமணி!





***********************



***********************நன்றி தினமணி!
***********************



*லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிகிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.*தென் அமேரிக்காவைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பான அனகொண்டா ஒன்பது மீட்டர் நீளம் கூட வளரும். இது ஒரு மானையே முழுமையாக விழுங்கும் வலிமை கொண்டது.
*பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு மூக்கல்ல. அதன் பிளவுபட்ட நாக்கு போன்ற உறுப்பே மூக்காகச் செயல்படுகிறது.
*பாம்பு குளிர்ந்த ரத்தம் கொண்ட உயிரி.
*பாம்பின் நஞ்சில் பலதரப்பட்ட நச்சுப் பொருள்கள், புரதங்கள் மற்றும் என்சைம்மன்கள் நிறைந்துள்ளன.
*ம்மபாள், பூம்சிலாங், பஃப் ஆடர்ஸ் ஆகியவை கொடிய விஷமுள்ள ஆப்பிரிக்க பாம்புகள்.*நச்சுப் பாம்புகளில் மிகச் சிறியது சுருட்டை விரியன்.


மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.

ஒவ்வோரு மிருகத்திலும் பல்வேறு இனங்கள் உள்ளன.
ஆனால் சிங்கம் மட்டுமே ஃபெலிஸ் லியோ என்ற ஒரே இனத்தை உடையது.

இப்போது கிரிக்கேட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை முதன்முதலாக பயன்படுத்தி ஆடியவர் ராபர்ட் ராபின்சன் என்பவர் தான். இவர் 1792 மற்றும் 1819 ம ஆண்டுகளில் இன்றைய பேட்டை முதன்முதலாகப் பயன்படுத்தி விளையாடினார்.

சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகிலே அதிக வேகத்தில் பாயும் ஆறு அமேசான் ஆறு தான். இது ஒரு நொடிக்கு 63 லட்சத்து 50 ஆயிரம் கன அடிகள் வீதம் பாய்கிறது.
பக்ராநங்கல் அணையைக் கட்டிமுடிக்க 15ஆண்டுகள் ஆயின. இதன் உயரம் 740 அடி.

அமெரிக்காவின் முத்ல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 200 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பைபிள் மீது கை வைத்து ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ அதே மைபிளின் மீதுதான் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 1357389தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 59010615தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Images3ijfதெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Images4px

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu 9 Feb 2012 - 13:25

[img][/img]

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்
, என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.

குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூ
ர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூ
தபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

Facebook





மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 9 Feb 2012 - 13:36

நானும் குமரிக்கண்டம் பற்றி கொஞ்சம் கேள்விபட்டேன்..
நன்றி பகிர்வுக்கு அருமையிருக்கு




தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Power-Star-Srinivasan
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu 9 Feb 2012 - 21:29

இஸ்ரேல் நாட்டில் அசைவ உணவை சிவப்பு நிற தட்டில் மட்டுமே பரிமாறுவார்களாம்.

மேற்கு வங்காளத்தில் புதிதாக மணமுடித்து செல்லும் பெண்கள், கணவன் வீட்டில் முதலில் அடி எடுத்து வைத்தவுடன் பசுமாட்டின் சாணத்தை மிதிக்க வேண்டுமாம். அது அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என நம்புகின்றனர்.


எகிப்து நாட்டில் முருங்கை மரமே கிடையாது.

கடல் எல்லை

ஒவ்வொரு நாட்டுக்கும் கடல் எல்லையை நிர்ணயித்துள்ளனர். நாட்டின் எல்லை என்பது அந்நாட்டின் கடலில் இருந்து மூன்று கடல் மைல்கள். அதாவது 6080 அடி தொலைவு வரை அந்த நாட்டின் கடல் எல்லை ஆகும்.

மொழிகள்:

ஆங்கிலம் - வணிகத்தின் மொழி
லத்தீன் - சட்டத்தின் மொழி
கிரேக்கம் - இசையின் மொழி
ஜெர்மன் - தத்துவத்தின் மொழி
பிரெஞ்சு - தூது மொழி
இத்தாலி - காதலின் மொழி
தமிழ் - இறக்கம், பக்தியின் மொழி .



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 9 Feb 2012 - 21:35

Raksha wrote:

மொழிகள்:

ஆங்கிலம் - வணிகத்தின் மொழி
லத்தீன் - சட்டத்தின் மொழி
கிரேக்கம் - இசையின் மொழி
ஜெர்மன் - தத்துவத்தின் மொழி
பிரெஞ்சு - தூது மொழி
இத்தாலி - காதலின் மொழி
தமிழ் - இறக்கம், பக்தியின் மொழி .

ஆனால் எல்லா மொழியிலும் காதல் இருக்கிறது...ஆகவே காதல் வந்துவிட்டால் எல்லா மொழியும் இம்சை மொழியே...



தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 224747944

தெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Rதெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Aதெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Emptyதெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 Rதெரிந்து கொள்ளுங்கள் !!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun 15 Apr 2012 - 22:24

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக