புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 8%
heezulia
மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 05, 2012 6:28 pm

மெரினா

எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து ,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின் புகழ்ப் பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும் காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா இயக்குனர்களையும் அமர வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித் திருத்த வேண்டும் .

துளி கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை .கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம் நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .மெரினா கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள் செத்துத் தொலைய வில்லை என்று திட்டுவதுக் கேட்டு ,வீட்டை விட்டு வெளியேறி வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன் தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய பாத்திரம் ,மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப் பாடகராக வரும் பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம் குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர் அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .குதிரை பயிற்சியாளர் என எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம் முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை .

மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன் ,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள் .இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் . காதல் பற்றி சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள்

படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார் .காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப் பார்க்க , பார்க்க உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி சட்டினியும் இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப் பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில் பசங்க திரைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள் .அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல எத்தனிக்கும்போது தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச் சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் .

முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால் தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .

சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .

இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம் முடிந்தவுடன் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Feb 05, 2012 8:08 pm

விரைவில் அரங்கில் சென்று பார்க்க வேண்டும் ....
முக்கியமாக பாண்டிராஜ்க்கும், சிவா கார்த்திகேயனுக்காகவும் ....
நன்றி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 05, 2012 8:12 pm

மிக்க நன்றி .அவசியம் பாருங்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 9:29 pm

உண்மையிலேயே மிகவும் உன்னதமான படம்.

ஆனால், நம் தமிழ் ரசிகர்களின் ரசனை எவ்வளவு மட்டமாக உள்ளது என்று, இந்த படத்தை பார்த்து விட்டு, வெளியே வரும் பொழுது, மற்றவர்கள் கூறிய கேவலமான விமர்சனம் நிரூபித்தது.

நிச்சயம் தேசிய விருதிற்கு தகுதி உடைய உன்னதப் படம்.

நன்றிகள் கவிஞர் அவர்களே....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 05, 2012 11:25 pm

இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 11:29 pm

அசுரன் wrote:இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா

ஒருத்தன் கத்தி மச்சினு சொல்றான், ஒருத்தன் உக்கார முடியலைனு சொல்றான், ஒருத்தன் இதுக்கு வீட்டுலையே இருந்திருக்கலாம் நு சொல்றான், இந்த படத்தை வேறொரு படத்துடன் இணைத்து பேசினார்கள், அந்த படம் பெயர், மயக்கம் என்ன, இந்த படத்கைப் போலவே மெரீனாவும் கத்தியாம்.

மாயம் என்ன படமும் நல்ல படம் தான். நல்ல கதை தான். இவங்களை எல்லாம் என்ன சொல்றதுணு ஒண்ணும் புரியல சார்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 06, 2012 12:23 am

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா

ஒருத்தன் கத்தி மச்சினு சொல்றான், ஒருத்தன் உக்கார முடியலைனு சொல்றான், ஒருத்தன் இதுக்கு வீட்டுலையே இருந்திருக்கலாம் நு சொல்றான், இந்த படத்தை வேறொரு படத்துடன் இணைத்து பேசினார்கள், அந்த படம் பெயர், மயக்கம் என்ன, இந்த படத்கைப் போலவே மெரீனாவும் கத்தியாம்.

மாயம் என்ன படமும் நல்ல படம் தான். நல்ல கதை தான். இவங்களை எல்லாம் என்ன சொல்றதுணு ஒண்ணும் புரியல சார்.......
விடுங்க ராமன். சினிமாவை எண்ணி கவலை படவேன்டாம். அதை நம் நினைவிற்குள் கொண்டுபோவதே தவறு. நானெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 06, 2012 7:15 am

மிக்க நன்றி .இந்தப் படம் உறுதியாக வெற்றி பெரும் .நம்பிக்கை உள்ளது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக