புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? [38Vote ]

  • மரபுக் கவிதை

    924%
  • புதுக் கவிதை

    2976%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 30, 2012 10:25 pm

First topic message reminder :

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 05, 2012 10:52 pm

இன்றுதான் இந்த திரியில் அருமையான விவாத மேடையைப் பார்த்தேன்.
பாராட்டுகள். நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் ரசித்துப் படித்தேன்.

மரபு கவிதைகள் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படவேண்டும்.
புதுக்கவிதைகள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அதாவது பாமரனும் புரிந்துகொள்ளும்படி எழுதப்படவேண்டும். பட்டுக்கோட்டையார் முதல் நமது இன்றய இளைய தலைமுறைகள் அதிகம் ரசித்து எழுதுவது புதுக்கவிதைகள் தான்.

' எனக்கு ரோஜா மலர்களைவிட
முட்களைத்தான் அதிகம் பிடிக்கும்
காரணம் அவை தொட்டவுடன்
ரத்த பாசத்தைக் காட்டுகின்றன.....'

இது கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகள். இந்த சுவையான புதுக்கவிதையில் அல்லவா மனிதநேயம் மிளிர்கிறது. மரபு கவிதைகளின் காலம் இன்னும் முற்று பெறவில்லை.. ஆனால் புதுக்கவிதைகள் நவீனக்கவிதைகளோடு கைகோர்த்து சிம்மாசனத்தில் இன்றும் அமர்ந்து அரசாட்சி செய்து வருகின்றன என்பதை எவறாலும் மறுக்கப்படாத உண்மை.

கவிதைகளின் அணிவகுப்பில் தலைமையேற்கிறது புதுக்கவிதைகள்.

நல்ல சுவையான விவாதத்தில் பங்கு கொண்டது மனதுக்கு நிம்மதி.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 10:56 pm

முன்பு, இசைத்தமிழை, சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த எல்லாச் செய்திகளையும் மழுங்கடித்து, தமிழ் இசை என்று இருந்ததையே கர்நாடக இசை என்று மாற்றி, தமிழில் பாடவே வராது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசை என்றால் தெலுங்குதான் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து அதில் வெற்றியும் பெற்றனர் ஒரு சாரார். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் பிறந்து, ஆந்திரா எங்கிருக்கிறது என்றுகூட அறியாமல், நமது கோவில்களைச் சுற்றியே வளர்ந்து, தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இருந்து கருவை எடுத்துக்கொண்டு அதையே தெலுங்கில் எழுதிவைத்தவர்களை பெரிய ஆட்கள் ஆக்கி ஆஹா ஓஹோ என்று புகழந்து அவர்களை மும்மூர்த்திகள் ஆக்கி, இசை என்றால் தெலுங்கு தான் என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். அம்மாதிரியே இப்போது புதுக்கவிதை, புதுக்கவிதை என்று தமிழில் புதுக்கிக்கொண்டு ஜப்பானிய ஹைகூவுக்கும், சென்ரியு வுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு உள்ளது ஒரு கூட்டம். இதை அறியாமல் நமது இளைஞர்களும் புதுக்கவிதை என்றும், ஹைக்கூ, ஹைக்கூ என்றும் கூகை போல் கூவிக்கொண்டு திரிவது மிகவும் வேதனையாக உள்ளது.

தரத்தை தழுவித் தமிழ்கவி நாளும்
சிரத்தை எடுத்து உலகம் முழுதும்
மரபால் தொடுத்து மணம்போல் பரப்பி
கரத்தை உயர்த்துவோம் பார்

ஐயா,
தாங்கள் அடிக்கடி கூறுவது போல், ஹைகூ எழுத எடுக்கும் ஆர்வத்தை, குறள் எழுத எடுத்தால், மிகவும் நன்றாக இருக்கும். காரணம், அதனை அறிந்தால் கிடைக்கும் சுகமும், அறிய அறிய உண்டாகும் ஆர்வமும், தனித்துவம் கொண்டது. இதை நான் அனுபவித்து இருக்கிறேன், அது தங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், இன்னும் சில காலங்களில், நம் ஈகரையில் மரபுக் கவி எழுதுவோர் எண்ணிக்கை உயரும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாய், விரைவில், தம்பி கார்த்தி எம் ஆர். மரபுக் கவிஞராய் வளம் வருவார்
அவர் அதற்கான முயற்சியில் ஆர்வமுடன் இறங்கியுள்ளார்.

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 05, 2012 11:06 pm

பிஜிராமன் wrote:
முன்பு, இசைத்தமிழை, சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த எல்லாச் செய்திகளையும் மழுங்கடித்து, தமிழ் இசை என்று இருந்ததையே கர்நாடக இசை என்று மாற்றி, தமிழில் பாடவே வராது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசை என்றால் தெலுங்குதான் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து அதில் வெற்றியும் பெற்றனர் ஒரு சாரார். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் பிறந்து, ஆந்திரா எங்கிருக்கிறது என்றுகூட அறியாமல், நமது கோவில்களைச் சுற்றியே வளர்ந்து, தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இருந்து கருவை எடுத்துக்கொண்டு அதையே தெலுங்கில் எழுதிவைத்தவர்களை பெரிய ஆட்கள் ஆக்கி ஆஹா ஓஹோ என்று புகழந்து அவர்களை மும்மூர்த்திகள் ஆக்கி, இசை என்றால் தெலுங்கு தான் என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். அம்மாதிரியே இப்போது புதுக்கவிதை, புதுக்கவிதை என்று தமிழில் புதுக்கிக்கொண்டு ஜப்பானிய ஹைகூவுக்கும், சென்ரியு வுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு உள்ளது ஒரு கூட்டம். இதை அறியாமல் நமது இளைஞர்களும் புதுக்கவிதை என்றும், ஹைக்கூ, ஹைக்கூ என்றும் கூகை போல் கூவிக்கொண்டு திரிவது மிகவும் வேதனையாக உள்ளது.

தரத்தை தழுவித் தமிழ்கவி நாளும்
சிரத்தை எடுத்து உலகம் முழுதும்
மரபால் தொடுத்து மணம்போல் பரப்பி
கரத்தை உயர்த்துவோம் பார்

எனக்கு இந்த கருத்தில் உடன்பாடில்லை.
அப்படியென்றால் திருக்குறளைக் கூட
மரபில்லாத வடிவம் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன்.
கண்ணதாசன் கவிதைகள் காலம் கடந்து நிற்பது எதனால்? பாமரனும் ரசிக்கும் படியான புதுக்கவிதையின் வடிவம் அல்லவா? சிந்தித்து செயல்படுவீர்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 05, 2012 11:07 pm

மரபுக்கவிதை சேலை கட்டிய தமிழ்ப்பெண்..
புதுக்கவிதை ஜீன்ஸ் போட்ட புதுப்பெண்.

இரண்டுமே அழகுதான்.

எனவே நான் வாக்கிடவில்லை.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 11:16 pm

எனக்கு இந்த கருத்தில் உடன்பாடில்லை.
அப்படியென்றால் திருக்குறளைக் கூட
மரபில்லாத வடிவம் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன்.
கண்ணதாசன் கவிதைகள் காலம் கடந்து நிற்பது எதனால்? பாமரனும் ரசிக்கும் படியான புதுக்கவிதையின் வடிவம் அல்லவா? சிந்தித்து செயல்படுவீர்.

ஐயா, இந்த கருத்தில் எதற்கு உடன்பாடு இல்லை என்று கூறினீர்கள் என்றால், என்னால் தங்களுக்கான பதிலை தர முயல்கிறேன்.

குறளை எப்படி ஐயா, மரபில்லா வடிவம் என்று கூறுவேன். அவை குறள் வெண்பா வகையில் வருகின்றனவே.

நான் அந்தக் கருத்தை, எந்த கருத்திற்கு கீழ் கொடுதுள்ளேன் என்று பாருங்கள் ஐயா.

நன்றிகள் ஐயா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Feb 07, 2012 12:42 am

சதாசிவம் wrote:அழகான கருத்து பதிக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி. நீண்ட நாட்களாக இது குறித்து பெரிய விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

மரபுக் கவிதைகள் வைரம் போல்,

அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.

இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.

வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.

இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.

புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?

ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.

இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.

நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.

முதலில் தங்கள் பாராட்டுக்கு நன்றி.
தங்களது மரபுக்கவிதை, புதுக்கவிதை பற்றிய கருத்து சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ளது. "இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது." என்ற தங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல என்பது தங்கள் கருத்துக்குச் சான்றாகும். தாங்கள் கூறுவது போல இலக்கண வரையறை தான் தமிழ் மொழியை இன்னும் வாழவைக்கின்றது.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Feb 07, 2012 12:53 am

Kaa Na Kalyanasundaram wrote:இன்றுதான் இந்த திரியில் அருமையான விவாத மேடையைப் பார்த்தேன்.
பாராட்டுகள். நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் ரசித்துப் படித்தேன்.

மரபு கவிதைகள் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படவேண்டும்.
புதுக்கவிதைகள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அதாவது பாமரனும் புரிந்துகொள்ளும்படி எழுதப்படவேண்டும். பட்டுக்கோட்டையார் முதல் நமது இன்றய இளைய தலைமுறைகள் அதிகம் ரசித்து எழுதுவது புதுக்கவிதைகள் தான்.

' எனக்கு ரோஜா மலர்களைவிட
முட்களைத்தான் அதிகம் பிடிக்கும்
காரணம் அவை தொட்டவுடன்
ரத்த பாசத்தைக் காட்டுகின்றன.....'

இது கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகள். இந்த சுவையான புதுக்கவிதையில் அல்லவா மனிதநேயம் மிளிர்கிறது. மரபு கவிதைகளின் காலம் இன்னும் முற்று பெறவில்லை.. ஆனால் புதுக்கவிதைகள் நவீனக்கவிதைகளோடு கைகோர்த்து சிம்மாசனத்தில் இன்றும் அமர்ந்து அரசாட்சி செய்து வருகின்றன என்பதை எவறாலும் மறுக்கப்படாத உண்மை.

கவிதைகளின் அணிவகுப்பில் தலைமையேற்கிறது புதுக்கவிதைகள்.

நல்ல சுவையான விவாதத்தில் பங்கு கொண்டது மனதுக்கு நிம்மதி.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Feb 07, 2012 12:58 am

அய்யம் பெருமாள் .நா wrote:அருமையான செய்திகளை உள்ளடக்கிய விவாத திரி !

புது கவிதையோ , மரபு கவிதையோ வெவ்வேறானதல்ல என்பது என்னுடைய உளப்பாடு. ஏனென்றால் இரண்டிற்கும் கவினயம் அவசியம்.

இலக்கணத்திற்கு தலைவணங்கி எழுதுவது மரபு கவிதை ;
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது புது கவிதை :

மரபு கவிதையில் கவினயம் இல்லை என்றால் அது வெறும் செய்யுளாகிவிடும்
புது கவிதையில் கவினயம் இல்லை என்றால் அது உரைநடையாகிவிடும்
:

ஆக நான் விரும்புவது உணர்வுகளை கவினயத்தோடு வெளிப்படுத்துகிற படைப்புகளை.
நாம் மிகவும் ஒன்றிப்போய்விட்ட ஒரு படைப்பு அல்லது நம்மை மிகவும் கவர்ந்த ஒரு படைப்பு பாகுபாடு அற்றது.

இந்த பாகுபாடு அற்ற நிலை உடையவர்கள் தான் கவிதை ரசிகர்கள் என்பது என் கருத்து. ஆக புதுக்கவிதை , மரபு கவிதை என்கிற வேறுபாடு எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட ஒரு விவாதம்.

தங்கள் கருத்தை முழுநிறைவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Feb 07, 2012 1:00 am

இளமாறன் wrote:விவாதங்கள் அருமை ...நடத்துங்கள் கவிகள் பேசுவதும் கலையே மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Feb 07, 2012 1:24 am

சதாசிவம் wrote:மிக நீண்ட அறிய பதிவுக்கு நன்றி ஐயா. புதுக்கவிதையின் வரலாறு ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கருத்தை மும்மொழிகிறேன்.

வெறும் வாக்கெடுப்பு மூலம் ஒரு கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. இங்கு புதுக்கவிதை குறித்த பலரும் கூறுவது இது எங்களுக்கு புரிகிறது, சுவைஞர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சரி என்று முடிவு செய்வது சரி என்றும் கூறப்படுகிறது. உண்மையில் புரிதலை மட்டும் வைத்துக் கொண்டு கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்பது என் கருத்து. ஹைகூ கவிதைக்கு இலக்கணம் இருப்பது போல் இன்றைய புதுக்கவிதைக்கும் என் இலக்கணம் பார்க்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது யோசிக்க வேண்டியது தான்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் மொழியின் வளமை அறியா வறுமையில் உள்ளனர். புதுக்கவிதையில் ஒழுங்கு, இலக்கணம் என்று வகுத்தால் பலர் கவிதை எழுதுவதை நிறுத்திவிடுவர். அந்தக் காலத்தில் யாப்பு தெரிந்து புகழ்ப்பட பாடல்களைப் பாடியவர்களை புலவர் என்று கூறினோம். பாடல் எழுதிய அனைவரையும் புலவர் என்று அழைத்தனரா என்று தெரியவில்லை. ஆனால் இன்று சுடுதண்ணி வைக்கத் தெரிந்த ஒருவரை சமையலில் சிறந்தவள் என்று கூறுவது போல் எதை எழுதினாலும் அவரை கவிஞன் என்று கூறத்தொடங்கி விட்டனர். இதில் யார் சிறப்புக் கவிஞர், இதற்கு என்ன வரையறை என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. இதில் மேலும் வருத்தம் எழுதிய புதுக்கவிதையில் கேள்வி கேட்டாலோ, வார்த்தைகளை மாற்றி அமைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கும் போது கவிதை எழுதுபவருக்கு வரும் கோபம் ஆச்சரியப்பட வைக்கிறது.

சிறந்த நடிகர் என்றால் அவருக்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். அது போல் கவிதையை தொழில், அல்லது முழு நேர பொழுபோக்காக வைத்து இருப்பவர்கள் யாப்பு பயில வேண்டும் என்பது என் அவா.

எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம் இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக