புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
75 Posts - 46%
ayyasamy ram
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
49 Posts - 30%
i6appar
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
75 Posts - 46%
ayyasamy ram
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
49 Posts - 30%
i6appar
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_m10இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? [38Vote ]

  • மரபுக் கவிதை

    924%
  • புதுக் கவிதை

    2976%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 30, 2012 10:25 pm

First topic message reminder :

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.



உங்கள் யாழ்பாவாணன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 02, 2012 7:49 am

அன்புள்ள நண்பர்களே!
இந்தக் கருத்துக்கணிப்பு; பலரது எண்ணங்களை வெளிப்பட வைத்திருக்கிறது. இதிலிருந்து, பாபுனைவோர் வாசகர் நிலையறிந்து பாபுனைய வழிகிடைத்துள்ளது. மரபுக் கவிதை காலத்தால் அழியாது என்றால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது. இதற்குப் பாவலர்கள் காரணமல்ல, சுவைஞர்களின் தீர்ப்பே! தொடரட்டும் இது பற்றிய கருத்துக்கணைகள்...



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 5:07 pm

"அன்புள்ள நண்பர்களே!
இந்தக் கருத்துக்கணிப்பு; பலரது எண்ணங்களை வெளிப்பட வைத்திருக்கிறது. இதிலிருந்து, பாபுனைவோர் வாசகர் நிலையறிந்து பாபுனைய வழிகிடைத்துள்ளது. மரபுக் கவிதை காலத்தால் அழியாது என்றால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது. இதற்குப் பாவலர்கள் காரணமல்ல, சுவைஞர்களின் தீர்ப்பே! தொடரட்டும் இது பற்றிய கருத்துக்கணைகள்..."


ஒரு 75 % புதுக்கவிதைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார்கள் என்பதால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது என்று பொருளாகாது. அது உண்மையில், தமிழின் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. சோகம்

ஆங்கில கல்வி மோகம், சினிமாவின் தாக்கம், பிற மொழிகளின் ஆதிக்கம், வானொலி, டெலிவிஷன், மற்றும் பத்திரிகைகளின் ஈர்ப்பு, வெளிநாட்டின் மேலுள்ள வாஞ்சை என்ற பல காரணங்களால் உண்மையாக தமிழ் கல்வி பயில்பவர்கள், தமிழ் இலக்கியம் எடுத்துப் படிப்பவர்கள் குறைந்து, தமிழின் தரம் தாழ்ந்து போய் விட்டது என்பது கண்கூடு. இட்டலி, தோசைக்கு இருக்கும் மவுசு குறைந்து, இளையோர் மத்தியில் சீனத்து நூடுல்ஸ்சும், இத்தாலி நாட்டின் பிசா, பர்கர் போன்றவைகள் மேல்ஏற்பட்டுள்ள மோகம் போல்த்தான் இந்த புதுக்கவிதையும்.

வெறும் 25 % பேர் தான் வாக்களித்துள்ளனர் என்பதால் மரபுக்கவிதை அழிந்துவிடும், அழிந்து வருகிறது என்று பொருள் கொண்டு மகிழவேண்டாம். மரபுக் கவிதை பயிலவேன்றே நமது ஈகரையிலேயே ஓர் அழகிய திரி, கவிதைக் களஞ்சியத்தில் உள்ளது. வெண்பா வடிக்கலாம் வா, விருத்தம் எழுத வருத்தம் எதற்கு, கவிதை இயற்றிக் கலக்கு போன்ற திரிகள்/வலைப்பூகள் உள்ளன. அவற்றில் நிறையப்பேர் மரபுக்கவிதைகளைப் பயின்று வருகின்றனர். ஆகவே மரபுக்கவிதை அழியாது. தமிழ் உள்ளளவும் யாப்பு நிலைத்து நிற்கும் என்பதை அறிவீராக.

புதுக்கவிதை என்பது ஒரு காளான் போலத்தான். நேற்றுப் பெய்த மலையில் முளைத்தது. இருபதாம் நுற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்திலும், பிரான்சிலும் இந்த புதுக்கவிதை முளை விட்டது. நமது மகாகவி பாரதியும் கூட அதைத்தொடர்ந்து நவகவிதை என்றும் வசனக்கவிதை என்றும் எழுதத் தொடங்கினார். பிறகு எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டார்கள். கவிதைக்கு இலக்கணம் தேவையில்லையாம். யார் வேண்டுமானாலும் எழுதலாமாம். கொண்டதே கோலம்,கண்டதே கவிதை என்றாகிவிட்டது.

ஆனால் இப்படிச் சொல்லும் இவர்களே ஜப்பான் தேசத்தில் இருந்து ஒரு கவிதை வடிவத்தை இறக்குமதி செய்து அதை ஜப்பான் முறைப்படியே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஹைக்கூ கவிதைகள் என்றும், சென்ரியு என்றும், லிமரைக்கூ என்றும் பெயராம். அதை எப்படி எழுத வேண்டும், 5-7-5 என்றால் என்ன, முதல் வரி எப்படி இருக்க வேண்டும், மூன்றாம் வரி எப்படி இருக்க வேண்டும் என்று புத்தகம் எழுதி பதிப்பித்து விற்பனை செய்கின்றார்கள். கவிதைக்கு யாப்பு தேவை இல்லை, சீர்,தொடை எதுவும் வேண்டாம் என்று சொல்லும் இந்த கும்பல் ஹைக்கூ இப்படித்தான் இருக்க வேண்டும், சென்ரியு இப்படி என்று வகைப்படுத்தி இலக்கணம் வகுக்கும் போதுதான் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

முன்பு, இசைத்தமிழை, சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த எல்லாச் செய்திகளையும் மழுங்கடித்து, தமிழ் இசை என்று இருந்ததையே கர்நாடக இசை என்று மாற்றி, தமிழில் பாடவே வராது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசை என்றால் தெலுங்குதான் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து அதில் வெற்றியும் பெற்றனர் ஒரு சாரார். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் பிறந்து, ஆந்திரா எங்கிருக்கிறது என்றுகூட அறியாமல், நமது கோவில்களைச் சுற்றியே வளர்ந்து, தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இருந்து கருவை எடுத்துக்கொண்டு அதையே தெலுங்கில் எழுதிவைத்தவர்களை பெரிய ஆட்கள் ஆக்கி ஆஹா ஓஹோ என்று புகழந்து அவர்களை மும்மூர்த்திகள் ஆக்கி, இசை என்றால் தெலுங்கு தான் என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். அம்மாதிரியே இப்போது புதுக்கவிதை, புதுக்கவிதை என்று தமிழில் புதுக்கிக்கொண்டு ஜப்பானிய ஹைகூவுக்கும், சென்ரியு வுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு உள்ளது ஒரு கூட்டம். இதை அறியாமல் நமது இளைஞர்களும் புதுக்கவிதை என்றும், ஹைக்கூ, ஹைக்கூ என்றும் கூகை போல் கூவிக்கொண்டு திரிவது மிகவும் வேதனையாக உள்ளது. என்ன கொடுமை சார் இது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 05, 2012 5:18 pm

ஒரு 75 % புதுக்கவிதைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார்கள் என்பதால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது என்று பொருளாகாது. அது உண்மையில், தமிழின் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. சோகம்
புதுக்கவிதையால் தமிழின் தரம் தாழ்ந்து விட்டது என்ற கருத்தை ஏற்க இயலாது !...தரத்தை நிர்ணயிப்பது உள்ளடக்கமே தவிர ..! வடிவம் இல்லை !...
மோசமான மரபுக்கவிதையும் இருக்கிறது ......
நல்ல புதுக்கவிதையும் இருக்கிறது ! புதுக்கவிதையே வேண்டாம் என்று மறுப்பது பின்னோக்கி செல்வததான் இருக்கும். மரபை நான் ஆதரிக்கிறேன் ..புதுக்கவிதையை விரும்புகிறேன்
இரண்டையும் தகுதி அறிந்து சுவைக்க வேண்டும் ..இதுதான் என் நிலை ! கருத்துக்கு நன்றி ஐயா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 5:44 pm

நாற்காலி என்று ஏன் சொல்லுகிறோம்? அதற்க்கு நான்கு கால்கள் இருப்பதினால்தானே? சரி...மூன்று கால்கள் இருந்தால் .. அது முக்காலி ஆகிவிடுகிறது. ஆக நாற்காலிக்கும் முக்காலிக்குமே இப்படி சீரான காரணமாம் இருக்கிறது. அது முறையாக வகுக்கபட்டிருக்கிறது. அப்படியே, அம்மா, அப்பா, அக்கா , அண்ணன் என்று எல்லோருக்கும் ஒரு வரம்பு, முறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக எல்லாவற்றிக்கும் சீரான இலக்கண வரம்பு தொல்காப்பியர் காலத்தில் இருந்தே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கவிதை என்று வரும்போது மட்டும் அதற்கு இலக்கணம் தேவையில்லையாம்! ஏன் ? கவிதை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாமாம்! அது எண்ணங்களின் பிரதிபளிப்பாம். எழுத்துக்களால் கட்டுப்படுத்தக் கூடாதாம். இது என்ன ஞாயம்? சோகம்
யாப்பு அறியாதவன் எழுதிடும் கவிதை
பூப்படையாத சிறுபெண் போல .....
என்று யாரோ ஒரு கவிஞன் எழுதியதை முன்பு படித்தது ஞாபகம் வருகிறது.

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 6:17 pm

கே. பாலா wrote:
ஒரு 75 % புதுக்கவிதைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார்கள் என்பதால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது என்று பொருளாகாது. அது உண்மையில், தமிழின் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. சோகம்
புதுக்கவிதையால் தமிழின் தரம் தாழ்ந்து விட்டது என்ற கருத்தை ஏற்க இயலாது !...தரத்தை நிர்ணயிப்பது உள்ளடக்கமே தவிர ..! வடிவம் இல்லை !...
மோசமான மரபுக்கவிதையும் இருக்கிறது ......
நல்ல புதுக்கவிதையும் இருக்கிறது ! புதுக்கவிதையே வேண்டாம் என்று மறுப்பது பின்னோக்கி செல்வததான் இருக்கும். மரபை நான் ஆதரிக்கிறேன் ..புதுக்கவிதையை விரும்புகிறேன்
இரண்டையும் தகுதி அறிந்து சுவைக்க வேண்டும் ..இதுதான் என் நிலை ! கருத்துக்கு நன்றி ஐயா !
இது தான் சரியானது என்று நானும் நினைக்கிறேன் அண்ணா. எனக்கும் புதுக்கவிதைகள் தான் பிடிக்கும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 6:46 pm

கே. பாலா wrote:
ஒரு 75 % புதுக்கவிதைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார்கள் என்பதால் புதுக்கவிதை இன்றைய காலத்தால் ஏற்கப்படுகிறது என்று பொருளாகாது. அது உண்மையில், தமிழின் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. சோகம்
புதுக்கவிதையால் தமிழின் தரம் தாழ்ந்து விட்டது என்ற கருத்தை ஏற்க இயலாது !...தரத்தை நிர்ணயிப்பது உள்ளடக்கமே தவிர ..! வடிவம் இல்லை !...
மோசமான மரபுக்கவிதையும் இருக்கிறது ......
நல்ல புதுக்கவிதையும் இருக்கிறது ! புதுக்கவிதையே வேண்டாம் என்று மறுப்பது பின்னோக்கி செல்வததான் இருக்கும். மரபை நான் ஆதரிக்கிறேன் ..புதுக்கவிதையை விரும்புகிறேன்
இரண்டையும் தகுதி அறிந்து சுவைக்க வேண்டும் ..இதுதான் என் நிலை ! கருத்துக்கு நன்றி ஐயா !

நன்றி ...பாலா அவர்களே...உண்மையில் நான் என் எண்ணத்தைத் தொகுத்து எழுதிவிட்டு பின்பு நீங்களும் சதாசிவமும் கூறிய கருத்துக்கு வரலாம் என்று இருந்தேன். அதற்குள் பின்னுட்டம் இட்டுவிடீர்கள். நீங்க கூறுவதும் சரிதான். மோசமான மரபுக்கவிதைகள் இருக்கலாம். அதை இனம் கண்டுகொள்ள உங்களுக்கு முதலில் முழுமையான யாப்பு தெரிந்திருக்க வேண்டும். நானும் சில மோசமான கவிதைகளைப் படித்திருக்கிறேன்.
"குப்பனும் குளிக்கப் போனான்
கூடவே நானும் போனேன்
---------- -------------- ----------------
------------- -------------- --------------
எப்படா வந்தாய் என்றான்
இப்பத்தான் என்றேன் நானும்"

[இடையில் இரண்டு வரிகள்ஞாபகம் இல்லை ]
புதுக்கவிதைகளிலும் இப்படி எத்தனையோ உள்ளது. உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம்:
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்

புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா

நான் சொல்லவந்த உட்கருத்தை நீங்கள் புரிந்தீர்களோ இல்லையோ அறியேன். புத்க்கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை என்று சொல்பவர்கள் ஏன் ஹைகூவுக்கும் சென்ரியுவுக்கும் அவ்வளவு சீரும் சிரத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 6:58 pm

தம்பி சதாசிவம் நல்ல கருத்துக்களை பதித்திருந்தார். அவருக்கும், பாலாவுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு மூன்று நீண்ட வரியுள்ள செய்தியை உடைத்து நான்காகவோ எட்டாகவோ மடக்கி எழுதினால் அது புதுக்கவிதை ஆகிவிடுகிறது. ஒவ்வொரு புதுக்கவிதையிலும் நான் கிழே கொடுத்துள்ள வார்த்தைகளில் இரண்டோ அல்லது குறைந்த பட்சம் ஒன்றோ இருக்க வேண்டும். இந்த வார்த்தைகள் இல்லை என்றால் அது புதுக்கவிதையாக இருக்காது.
"சூரியன், அஸ்தமனம், மௌனபாஷை, லிபி, கலாசிருஷ்டி, பரிச்சை, பரிச்சயம், எக்காளம், சத்தியவான், ராத்திரி, சகுனி, நவராத்திரி, குசேலன், ஓவியப்புல், நிஜமாகவே, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், அதிகாரவர்க்கம், ஆகாயம், காமத்துப்பால், தாயம், ஜன்னல், ஆரோக்கியம், விஷயம், பரமபதம், சர்ப்பயாகம், கட்டியங்காரன், உலோபி, இயந்திர ரோஜா, நிஜம், "
ஆங்கிலம்: எம்ப்ளாய்மெண்ட், எக்சேஞ்சுக்கு, ரெனிவல், பஸ், கார், பக்கெட், தார்ரோடு, எவரெஸ்ட்
[இது நான் படித்த 50-60 பக்கமுள்ள இரண்டு புதுக்கவிதைப் புத்தகத்தில் இருந்து எடுத்தது] சோகம்
ஆக இவர்கள் புதுக்கவிதை எழுதி யாரைப் புதுக்குகிறார்கள், என்ன நோக்கத்தோடு இந்த சொற்களைச் சேர்க்கிறார்கள் என்பது விளங்குகிறதா உறவுகளே சோகம் அதிர்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 7:14 pm

புதுக்கவிதை சுருக்கமான வரலாறு
புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம் மிகமிகப்பரவலானதும் பல்நோக்கு பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரநது விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான ஓர் மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது.

புதுக்கவிதை என்ற பெயரை இதற்கு போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். ஆங்கிலத்தில் new poetry என்ற சொல்லை எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் பயன்படுத்திருப்பதைக் கண்ட இவர் ”அப்டீண்ணா நமக்கும் இருக்கட்டும் ஒண்ணு…என்னங்கிறேள்?” என்று தன் தோழர் சி.சு.செல்லப்பாவுடன் பூரிக்கு தொட்டுக்கொள்ள புதினாச் சட்டினி கொடுக்கும் ஒரு ராயர் காபி கிளப்பைத் தேடி திருவல்லிக்கேணிவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது சொன்னார் என்பது வரலாற்றுத்தகவல். அதற்கு சி.சு.செல்லப்பா ”கெடந்துட்டு போகுது களுத… ஓஞ்சவேளைக்கு போது போகும்” என்று ஆமோதிப்பு அளித்தார்.

உடனே வீடு திரும்பிய க.நா.சுப்ரமணியம் தன் பழைய நாட்குறிப்பை எடுத்து அதில் உள்ள அன்றாடக்குறிப்புகளை எஸ்ரா பவுண்டின் கவிதைகளின் வடிவுக்கு மடக்கி எழுதலானார். நாற்பது கவிதைகளை இவவறு பெருமாச்செட்டி பென்சிலால் பிரதி எடுத்தபின் விடியற்காலையில் பிளாஸ்கில் எஞ்சியிருந்த காப்பியையும் குடித்தபின் அவற்றின் அடிப்படையில் எஸ்ரா பவுண்டின் புகழ்பெற்ற புதுக்கவிதை இலக்கணத்தின் சாயலில் [A retrospective to modernism] இவர் புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம் உருவாக்கினார் அவையாவன:

1 ஒருவரி எக்காரணத்தாலும் சாதாரண அளவுள்ள விரலில் ஒரு விரலுக்கு அதிகமாக நீளக்கூடாது. [வரி நீளமாக அமையும்போது அதற்கேற்ப விரலை நகட்டி அளவிடுதல் தகாது]

2 வரிகளை கீழ் கீழாக எழுதும்போது எதுகை மோனை முதலிவை நிகழாமல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்

3 பெண்கள் என்றால் மார்புகள், கூந்தல், இடுப்பு ,உதடுகள் மற்றும் அல்குல் போன்ற உறுப்புகள் வர்ணிக்கப்படலாகாது

4 ஆண்கள் என்றால் தோள்கள், புஜங்கள், மீசை போன்றவை வர்ணிக்கப்படக்கூடாது.

6 ஆண்களும் பெண்களும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விதி 3,4 லில் இருந்து விலக்கு உண்டு

7. வரிகள் எந்நிலையிலும் எவராலும் பாடும்படி அமையலாகாது

8 மளிகைப்பட்டியலை எண்வரிசை இல்லாமல் எழுதியதுபோன்ற வடிவம் கொண்டிருக்கவேண்டும்

9 தினத்தந்தி நாளிதழ் பயன்படுத்தாத எந்தச் சொல்லையும் பயன்படுத்தக்கூடாது. குறைந்தபட்சம் தினமணியாவது அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்

10 ஒருசொல் சிற்றிதழில் உருவானதாக இருந்தால் விதி 9 ல் இருந்து விலக்கு உண்டு

11 பிரசுரிக்கும் இதழாசிரியருக்குப் பொருள் புரியக்கூடாது.

12 இதழாசிரியரே அக்கவிதையை எழுதினார் என்றால் விதி 11 ல் இருந்து விலக்கு உண்டு. ஆனால் அதை அவர் அனுபவித்தாகவேண்டுமெனக் கட்டாயமில்லை.

13 வாசகர்கள் [இருக்கும் பட்சத்தில்] தங்களுக்கு தோன்றிய பொருளை அளிக்கும்படி சொற்சேர்க்கை இருக்க வேண்டும்.

14 கவிதை வாசகர்களுக்குப் புரியும்படி இருக்குமென்றால் கவிஞரே அதை விளக்கி பேட்டிகள் கொடுத்து கவிதையாக ஆக்க உரிமை உண்டு.பேட்டிகளை விளக்க மேலும் பேட்டி கொடுக்கலாம்.

15 சராசரிக் கைவிரலில் ஒரு விரல் அளவுக்கு கவிதையின் நீளம் அமையலாம். அதற்குமேல் நீளுமென்றால் அதேயளவுள்ள பத்திகளாக அமைக்கலாம்.

இந்த இலக்கண அடிப்படையில் அன்று காலையிலேயே க.நா.சுப்ரமணியம் கீழ்க்கண்ட விமரிசனமதிப்பிடுகளை உருவாக்கினார்

1. சிறந்தகவிதை சி.சு.செல்லப்பா எழுதாததாகவே இருக்க இயலும்.

2 புதுக்கவிதையில் மேஜர் போயட் என க.நா.சுவை சொல்லலாம். பிறர் எதிர்பார்க்கப்படுகிறார்கள்

3 சிறந்த கவிதை கவிதைபோல இருக்காது. உரையாடல் போல இருக்கும். நல்ல உரையாடல் எங்ஙனம் கவிதையாக உள்ளதோ அதைப்போல

அதே நாளில் கிட்டத்தட்ட அதே வேளையில் அதே திருவல்லிக்கேணியில் அரிக்கேன் விளக்கொளியில் சிசு.செல்லப்பாவும் புதுக்கவிதைக்கான இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். எஸ்ரா பவுண்டின் அதே கட்டுரையை அவரும் வாசித்திருந்தமையால் கிட்டத்தட்ட அதே இலக்கணங்களையே அவரும் உருவாக்கியிருந்தார். உபரியாக அவர் உருவாக்கிய இரு இலக்கண விதிகள் கீழ்கண்டவை

1. புதுக்கவிதை அலங்காரமில்லா மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உதாரணம், ‘அதற்கு’ என்பது அலங்கார மொழி. ‘அதுக்கு’ என்பது கவிதைமொழி

2. தமிழ்பண்டிதர்களை தூக்கிலே போடவேண்டும். சேர்த்துப் போடுவது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும் என்றால் ஒவ்வொருவரையாகப் போடலாம். அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ”யாரையோய் நீ?” என்று கேட்டால் ”யாரைப்பாத்து ஓய்னு சொல்றே?” என்று கேட்காதவர்கள் தமிழ்பண்டிதர்கள்.

இதைத்தவிர அவர் மூன்று விமரிசனக் கோட்பாடுகளை உருவாக்கினார். அவையாவன:

1. சிறந்தகவிதை க.நா.சுப்ரமணியம் எழுதாததாகவே இருக்க இயலும்.

2 புதுக்கவிதையில் ‘மேஜர் போயட்’ என சி.சுசெல்லப்பாவைச் சொல்லலாம். பிறர் எதிர்பார்க்கப்படுகிறார்கள்

3 சிறந்த கவிதை கவிதைபோல இருக்காது. உரையாடல் போலவும் இருக்காது. அது பாட்டுக்கு இருக்கும்.

விளைவாக மறுநாள் காலை பத்துமணி அளவில் திருவல்லிக்கேணி ராயர் காபிகிளப்பில் வைத்து புதுக்கவிதை இயக்கம் வரலாற்றுச்சிறப்புமிக்க பிளவுக்கு ஆளாகியது. கோபத்துடன் வீடுதிரும்பிய சி.சு.செல்லப்பாஉடனே தன் கையாலேயெ தலைப்பை வரைந்து எழுத்து என்ற சிற்றிதழை உருவாக்கினார். இவ்விதழ் தமிழ்ப்புதுக்கவிதைக்கான அடிப்படைகளை அமைத்தது

இவ்விதழில் பல இளைஞர்களை திரட்டி எழுதவைத்து தன் தரப்பை வலுவாக நிறுவினார் செல்லப்பா. தன் வீட்டுமுன் பெட்டிக்கடை வைத்திருந்த நாரண நாயுடு என்பற்றை பற்றி ந.பிச்சமூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையை புதுக்கவிதை வடிவுக்கு ஒடித்து அமைத்து இவர் இதழில் வெளியிட்டார். ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற அக்கவிதையின் சாயலில் எழுதுபவர்களின் பெயர்கள் வெளியே விடப்படமாட்டாது என்ற உறுதியையும் அளித்தார்.

தொடர்ந்து எழுத்து இதழில் ஏராளமான பேர் எழுதினாலும் மூவர் முக்கியமான முன்னூதாரணங்களாக அமைந்தனர். நாகர்கோயிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி என்பவர் பசுவய்யா என்ற மாற்றுப்பெயரில் ‘அம்மா இங்கே வா வா’ கவிதையால் ஊக்கம் பெற்று அவர் எட்டாம் வகுப்பில் படித்தபோது டிரில் வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடத்தை மையக்கருவாகக் கொண்டு ”நகத்தை வெட்டு உன் நகத்தை வெட்டு!” என்ற கவிதையை எழுதினார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரும் சிறிய செவிச்சிக்கல் கொண்டவருமான டி.கெ.துரைசாமி என்பவர் நகுலன் என்று பெயர் சூட்டிக் கொண்டு அவரது சமீபத்திய தடுமாற்றம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

”ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றான்
ராமச்சந்திரன்தானா என்றேன்
ஆமாய்யா என்றான்
ராமச்சந்திரனேதானா என்றேன்
டேய் ஆமாடா என்றான்”


என்ற இக்கவிதையை மேலும் சுருக்கி சி.சு.செல்லப்பா தன் இதழில் வெளியிட அது புகழ்பெற்றது.

மறுமாதத்திலேயே சிவராமன் என்ற இலங்கைக்காரர் தருமு சிவராமு என்றும் சீவராம் பிரமிள் என்றும் பலவாறாகபெயர் சூட்டியபடி அவர் ஹோமியோபதி மருத்துவருக்கு தன் நோய் குறித்து எழுதியளித்த குறிமானத்தை கவிதைவடிவிற்கு மாற்றி அனுப்பி அச்சாயிற்று. ‘புறந்தோலில் அழுக்குத்தேமல் மருதி புணர்ந்து பாயும் விந்து..”என்ற அவ்வரிகள் அவரது கையெழுத்து புரியாமையால் ”பூமித்தோலில் அழகுத்தேமல் பரிதி புணர்ந்து பாயும் விந்து” என்று பிரசுரமாகி தமிழில் படிமக்கவிதைக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

டைரிக்குறிப்பு, தடுமாற்றம், படிமம் என்ற இம்மூன்று அம்சங்களின் நீட்சியாகவும் கலவையாகவும் தமிழில் புதுக்கவிதைகள் சரமாரியாக உருவாயின. இவற்றுக்கு இரு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு உருவாகி வந்தது. தமிழ்ப்பேராசிரியர்கள் எதிர்த்தமைக்குக் காரணம் புதுக்கவிதைக்கு உரை போட முடியாது என்று கோனார் நிறுவனம் மறுத்துவிட்டமையே.

க.கைலாசபதி,நா.வானமாமலை போன்ற இடதுசாரிகள் எதிர்த்தமை அரசியல் நெடுநோக்கினால். எதிர்காலத்தில் புரட்சி வெடித்து சோஷலிஸ ஆட்சி ஏற்பட்டு அவர்கள் கலாச்சார கம்மிஸார்களாக உருவாகும்போது கவிதை எழுதுபவர்களை எதிர்புரட்சிக்க்காக கைதுசெய்து ராஜ்ஸ்தானில் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகையில் தங்களுடையது கவிதையல்ல லாண்டிரி பட்டியல் அல்லது மச்சினிக்கு கடிதம் என்று சொல்லி புதுக்கவிதையாளர்கள் தப்பிக்க வழியிருக்கிறது என அவர்கள் அஞ்சினர். மேலும் கவிதைகளை கண்டுபிடிக்கும் தானியங்கிக் கருவிகள் உருவாக்கப்படும்போது அவற்றுக்கு குழப்பம் வராமலிருக்க தெளிவான திட்டவட்டமான வடிவம் இருப்பது அவசியம். அது யாப்பே என்றனர் இவர்கள்.

குடத்திலிட்ட விளக்காக வெளியே புகை மட்டும் விட்டுக்கொண்டிருந்த புதுக்கவிதை இயக்கத்தை மேடைகளுக்குக் கொண்டுவந்தவர்கள் நா.காமராசன், மு.மேத்தா, அப்துல் ரகுமான் ஆகியோர். இவர்கள் வானம்பாடிகள் என்ற இதழை நிறுவி கவிதைகளை வெளியிட்டமையால் வானம்பாடிக் கவிஞர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சி.ஆர்.ஐ முறுக்குக் கம்பிகளின் விளம்பரத்தை அடியொற்றி மு.மேத்தா எழுதிய ஒரு நெம்புகோல் கவிதையால் இவர்களை நெம்புகோல்கள் என்றும் அழைக்கத்தலைப்பட்டார்கள்.

மேற்கண்ட நெம்புக்கவிதை வானம்பாடிகளுடைய அதிகார பூர்வ பிரகடனமாக வரலாற்றில் இடம்பெற்றது. பிற்காலத்தில் ஒரு விருதுவழங்கும் விழாவில் தொழிலதிபர் ஒருவர் ”இவர் இந்தப் பந்தையெல்லாம் போட்டு நெம்புற அந்தக் குச்சி பத்தி எழுதின ஒரு கவிதை…” என்று நெற்றியைத் தட்டியதாகவும் விடலைகளின் நகைப்பை தவிர்க்க அருகே அமர்ந்திருந்த அமைச்சர் ”கால்·ப்– கால்·ப்” என்று அடியெடுத்துக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

வானம்பாடிக் கவிதைகளின் இலக்கணம் மூன்று. அவையாவன

1 உரக்கச்சொல்லபப்டும் வரிகளே கவிதை எனப்படுகின்றன.

2 சொற்றொடர்களுக்கு முன் ஆ! ஏ! ஓ! போன்ற உயிரெழுத்துக்கள் அமைதல் வேண்டும்.[ அதிகப்பிரசங்கித்தனமாக ஈ!, ஊ! என்றெல்லாம் எழுதலாகாது]

3 ஒவ்வொருவரியையும் இரண்டுமுறை சொல்லுதல் வேண்டும்.[கைதட்டலை எதிர்பார்த்து அதிகபட்சம் நான்குமுறை மட்டும் சொல்லாம்.மேலே போவது அடுத்த கவிஞரின் நேரத்தை எடுத்துக் கொள்ளுதலாகும்]

4 கைத்தட்டல் எப்பகுதியில் விழ வேண்டும் என எழுதும்போதே கவிஞனே முடிவுசெய்து அதற்காக இடைவெளிவிட்டு காத்து நிற்றல் வேண்டும்.

5 எதுகைமோனைகளை எங்கு வாய்ப்புகிடைத்தாலும் சேர்க்கலாம்.

6 சொற்பொழிவுக்கும் கவிதைக்கும் ஒரே வேறுபாடுதான், பிந்தையது கவியரங்கத்தில் ஒலிக்கும்

7 முதிர்கன்னிகள், வண்ணத்துப்பூச்சிகள், தீக்குச்சிகள், அக்கினிக்குஞ்சுகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு கவிதையாவது எழுதியிருக்கவேண்டும்

எழுபதுகளில் இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தபோது வானம்பாடிகள் மறைந்தார்கள். கோவை ஞானி தலைமையில் சிறு குழு மட்டும் எஞ்சி ராப்பாடிகள் என்று பெயர் மாற்றி சிலகாலம் இயங்கியதாக தெரியவருகிறது. இவர்களில் பலர் பின்னர் திரைப்படப் பாடல்கள் எழுதத் தலைப்பட்டார்கள். ஆவாரம்பூ என்ற பூவை திரைப்பாடலில் அழுத்தமாக நிறுவியவர்கள் இவர்களே. எதற்கெடுத்தாலும் லாலால லாலா என்று மோகனத்தில் மெட்டமைத்த இளையராஜாவே இதற்குக் காரணம் என்று ஒரு கவிஞர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்

வானம்பாடிகளின் சாதனை என்பது கவிதையை மக்கள் மயமாக்கியது. இவர்களின் கவிதைகளைக் கேட்கும் எவரும் ”இம்புட்டுத்தானா? தாளி , இதை நானே எழுதுவேனே” என்ற தெளிவை அடைந்தமையால் எங்கும் கவிதை பெருகியது. இளைஞர்களின் செலவில்லா பொழுதுபோக்காக கவிதை மாறியது. காதல்கடிதங்கள் புதுக்கவிதையில் எழுதபப்ட்டன. இவ்வகைப்பட்ட கவிதைகள் ஏறத்தாழ ஒரு லட்சத்தி அறுபதாயிரம் வரை ஒரு மாதத்தில் வெளியாவதாக தெரியவருகிறது. சமீபத்திய தொகுதிச் சீரமைப்பில் நெல்லை பணகுடி நடுவே இவர்கள் ஒரு தனித்தொகுதி கேட்டு போராடியிருக்கிறார்கள்

இவ்வகைக் கவிதைகள் மூன்று வகை என விமரிசகர் வகுத்துள்ளனர்

1.’அடி இவளே’ பாணி . இதற்கு முன்னோடியாக விளங்குபவர் அண்ணன் என்று சான்றோரால் அழைக்கப்படும் அறிவுமதி அவர்கள். உதாரணம்

”இனியவளே
நான் என் காதலை விளக்கினேன்
நீ வாரியலால் விளக்கினாய்”

2 ‘ஏ சமுதாயமே!’ பாணி. இவ்வகைக் கவிதைகளுக்கு எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் முன்னோடியாவார். உதாரணம்

குனிந்து பெருக்காதே
நிமிர்ந்து கூட்டு!
புதிய திட்டம் வகுத்திடு!

3 ‘ஓ இளைஞனே’ பாணி. இவ்வகைக்கவிதைகளுக்கு முன்னோடி என திரைப்படத்துக்கு எழுதுவதற்கு முந்திய வைரமுத்து குறிப்பிடப்படுகிறார். பள்ளிமாணவர்கள் அதிகமும் இதை எழுதுகிறார்கள். உதாரணம்

இளைஞனே நீ
பேனாவை எடு
அது போர்வாள்
ஒழிக சார்வாள்!

புதுக்கவிதையின் வளர்ச்சிப் படிக்கட்டில் உச்சநிலை திரைப்பாடலாக அதன் பரிணாமம். இரு கவிதைகள் இதன் சிறந்த உதாரணங்களாகும்

மாறுகோ மாறுகோ மாறுகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்ன்னா குமுக்குதான்!


புதுக்கவிதையின் பிதாமகர்கள் விழைந்த முடிவிலாது பொருள் கொள்ளும் தகைமை கொண்டவரிகளை இங்ஙனம் தமிழ்ப்புதுக்கவிதை அடைந்தேவிட்டது!
-----ஜெயமோகன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 05, 2012 7:17 pm

மொழியின் மீது ஆளுமை இருப்பவர்களால்தான் மரபுக்கவிதை எழுதமுடியும்
மொழிபற்றிய ஞானமோ !...திறனோ இல்லாதவர்கள் கூட "புதுக்கவிதைபோல " எழுதமுடியும்.
மரபில் மணிகள் அதிகம் உண்டு ...பதர்கள்....சிலவே இருக்கும் !
புதுக்கவிதையில் மணிகள் சில ...பதர்கள் பல.....
இரண்டுகவிதைக்குமான ஒப்பீட்டை சதாசிவம் சிறப்பாக சொல்லியிருந்தார் அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் !
மரபு தெரிந்துகொண்டு ..புதுக்கவிதை எழுதுங்கள் என்று ஒரு முறை வைரமுத்து சொல்லியிருந்தார் . இது ஒரு நல்ல அறிவுரை!
புதுக்கவிதை செய்த சாதனை
"எல்லோரையும் கவிஞன் ஆக்கியது"
சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 05, 2012 7:25 pm


நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்
புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள்.
முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர் எழுதிவிட்டார்கள். இனியும் எழுதுவார்கள்.சிறந்த புதுக்கவிதை கொந்தளிப்புகளை உருவாக்கும்– அக்கவிதையில். அதைப்படிப்பவர்கள் உச்சகட்ட எதிவினைகளை உருவாக்குவார்கள், தங்கள் கவிதைகளில். ஆகவே கவிதை என்பது கவிதைக்காக மட்டுமே நிகழும் ஒருசெயல் என்பதை மீண்டும் நினைவுகூருங்கள்.

ஆரம்பிக்கும் முன்பாக உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். பின்நவீனத்துவக் கவிஞர் என்றால் பின்பக்கமாக. முற்போக்கு பின்நவீனத்துவம் என்றால் நீங்கள் பின்னால் திரும்பி அமரவேண்டும். உங்கள் புனைவுத்திறனின் உச்சம் வெளிப்படும் தருணம் ஆரம்ப கணத்திலேயே தேவையாகின்றது என்பதே கவிதையெழுத்தின் வசீகரமான ரகசியம். ஆம், உங்களுக்கு ஒரு பெயர் தேவை. புனைபெயர்! புனைபெயரில்லாத கவிஞன் மல்லிகைசூடாத விலைமகள் போல. கண்ணடித்தாலும் கண்டுகொள்ளாமல் கண்நோய்க்கு கைமருத்துவம் சொல்வார்கள்.

புனைபெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணவேண்டாம். உங்கள் அனைத்துக் கவிதைகளுக்கும் அர்த்தம் அளிக்கும் முதல் புள்ளி புனைபெயர்தான் என்பது புதுக்கவிதையின் ஆரம்பப் பாடம்.

‘அம்மணக் குழந்தையின்
அர்ணாக்கொடியில்
ஆடுகிறது
மாலைகாற்று’

என்ற கவிதையை ‘பிரபஞ்சாதீதன்’ எழுதியிருந்தால் என்ன பொருள், ‘செந்நிலவன்’ எழுதியிருந்தால் என்ன பொருள்வேறுபாடு, ‘சங்கிலிக்கருப்பு’ எழுதியிருந்தால் என்ன உட்பொருள் என யோசியுங்கள். முறையே உள்ளொளி,புரட்சி,தலித் கவிதைகளாக இது ஆகிவிடுகின்றதல்லவா? நீங்கள் யார் என்பதை உடனடியாக முடிவுசெய்யுங்கள்.

சுயபெயரிட்டுக் கொள்ள இரு தளங்கள் உள்ளன. ‘அண்டபேரண்டன்’ போன்ற பெயர்கள் ஓர் எல்லை. அப்படிப்பட்டபெயர்கள் அதிகம் காதில்விழுந்தால் ‘சுப்பம்பட்டி குப்புசாமி’ போல மறு எல்லைக்குப் போகலாம். பெயரைக் கேட்ட எவருமே ”யார்யா இவன்?” என்று அரைக்கணம் யோசிக்க வேண்டும். கவனியுங்கள் ஒரு கவிஞனின் பெயரை நினைவுகூரும்போது அதற்கு பாடபேதம் உருவானால் மட்டுமே அது நல்லபெயர். உதாரணமாக முகுந்த் நாகராஜன் என்ற கவிஞரை ”…இந்த உயிர்மையில ஒரு கவிஞர்…பேரு…ஒருமாதிரி…முதுகு.. பாம்புன்னுகூட ஏதோ வரும்சார்…அந்தமாதிரி …ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க…” என்று ஒரு வாசகர் நினைவுகூர முற்பட்டார்.

நீங்கள் எந்தவகைக் கவிஞர் என்பதை முதலில் வகுத்துக் கொள்ளுங்கள். இ.இ கவிஞர்,வா.இ கவிஞர்,சி.இ கவிஞர் என கவிஞர் மூவகைப் படுவர். இ.இ கவிஞர் இலவச இணைப்புகளில் கவிதை எழுதுகிறார்கள். ,வா.இ வார இதழ்களில். மூன்றாமவர் சிற்றிதழ்களில்.

காரைக்குடி கணேசன், ஆர்.அமிர்தகடேசன் வத்ராயிருப்பு போன்று பெயரிட்டு எழுதப்படும் கவிதைகள் கவிதைகள் அல்ல.அசின்பிரியா, ‘தமனா’கிருஷ்ணன் போன்ற பெயர்கள் போட்டுக் கொண்டு எழுதப்படும் இ.இ கவிதைகளில் இருந்தே தமிழ்ப்புதுக்கவிதை தொடங்குகிறது. காதல், சமூகக் கோபம், தன்னம்பிக்கை ஆகிய மூன்று தலைப்புகளுக்குள் பலநூறு விஷயங்கள் எழுதப்படலாம்.

கண்ணே
நீ லிப்ஸ்டிக் போடாதே
உனக்கு
‘செவ்வாய்’ தோஷம் என்பார்கள்!!!

என்பது போன்ற வரிகளில் முதலிரு தலைப்புகளையும் வெற்றிகரமாக நாம் இணைக்க முடியும். இ.இக்கள் அவற்றை ஒன்றுக்குமேற்பட்ட ஆச்சரியக்குறிகளுடனும் இண்டியன் இங்கில் வரையப்பட்ட தபால்தலையளவு நவீன ஓவியத்துடனும் [கண்கள் நடுவே மூக்குக்குப்பதில் பௌண்டன் பேனா!] முழு விலாசத்துடனும் வெளியிடும்போது உங்களுக்கு ‘மஞ்சுளாதாசன்’, ‘பருவம்’குமார், மிருதுளா கண்ணன்,செல்வக்குமரி தங்கரத்தினம் போன்றவர்களிடமிருந்து வாசகர் கடிதங்கள் வரும். அஞ்சக்கூடாது. அவர்களும் கவிஞர்களே. அனைவரும் ஆண்கள் என்பதை அறிகையில் மனம் உடைவதும் கூடாது.

வாஇ என்பது டூட்டோரியல் கல்லூரிகள் போல. அங்கே கவிஞர் ஆகவேண்டுமென்றால் நீங்கள் ஒன்று இஇ கவிதைகளிலிருந்து தேறி வந்திருக்கவேண்டும். அல்லது சிஇ கவிதைகளில் இருந்து தவறி வந்திருக்க வேண்டும். நேரடியாக பிரசுரம் பெற இயலாது. அங்கே காதல் மட்டுமே பாடுபொருள். கல்யாணமான பெண்கள் வேறு தலைப்பில் எழுதலாம்– கசந்த காதல் பற்றி. கவிதைகள் புகைப்படங்களுக்கு அடிக்குறிப்பாக ஆவது குறித்த கவலையை விட்டுவிடுங்கள். தலையில் டர்க்கிடவல் கட்டி குனிந்து கோலமிடும் பெண்கள், ரெட்டைச்சடை போட்டு தாவணி உடுத்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் கொண்டுசெல்லும் பெண்கள் என பலவிதமான பெண்கள் உங்கள் கவிதைகளை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

‘இரட்டைச்சடை அசைவில்
தார்க்குச்சி தட்டும் வண்டிக்காளைகள் போல
ஒற்றையடிப்பாதையில் விரையும் என் பாலியம்’

போன்று காமம் கலந்த இறந்தகாலஏக்கங்களுக்கு இக்கவிதைகளில் மைய இடமுண்டு. காதலைச் சொல்வது, சொல்லமுடியாமல் போவது, காதல் மறுக்கப்படுவது, ஏற்கப்படுவது, இழந்தகாதல் நினைவுகூரப்படுவது என பல தளங்கள் இருந்தாலும் பழைய காதலியை முப்பதுவருடம் கழித்து சந்தித்தபோது அவள் செயற்கைப்பல் கட்டியிருந்த விஷயத்தைக் கவனித்து அதைக் கவிதையாக்கிய கெ.ஸ்ரீனிவாசநரசிம்மன் என்ற ஆழ்வார்பேட்டைக்காரர் வார இதழ்களால் அவரது வீட்டுக்கே ஆளனுப்பி மிரட்டப்பட்டார் என்ற தகவலையும் நினைவில் வையுங்கள்.

சிஇ கவிதைகளை நீங்கள் எளிதில் எழுதிவிடமுடியாது. முதலில் சிற்றிதழ்களை ஆறுமாதம் கூர்ந்து நோக்குங்கள். அப்போது கவிதைகளின் ஒரு பொதுவான சித்திரம் உங்களுக்கு பிடிகிடைக்கும். சிற்றிதழ்களையே பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். வண்ண அட்டை இதழ்கள் , கோட்டோவிய இதழ்கள்.

இரண்டாம் வகை இதழ்கள் மனிதனா தவளையா என்று தெரிந்துகொள்ள முடியாத விசித்திர உடல்களை ஆதிமூலபாணி எழுத்துக்களுடன் அட்டையில் போட்டு காசாங்குப்பம், முனியமேடு போன்ற ஊர்களிலிருந்து ராஜாளிவேந்தன், சித்திரவதையன் போன்ற புனைபெயருள்ளவர்களால் மும்மாதமொருமுறை என்ற நம்பிக்கையில் எப்போதாவது வெளியாகும் இதழ்கள். ‘காசுள்ளபோதே [பகைவரை] தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வெளியாகக் கூடியவை. அவற்றுக்கு நீங்கள் கவிதைகளை தபாலில் அனுப்பிவிட்டு உடனடியாக மறந்துவிடவேண்டும்.அனுப்பிக் கொண்டே இருந்தால் அவை எங்கோ எப்படியோ வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் இதனால் பெரும்பாலும் பயன் கிடையாது. இவை சந்திரமதி தாலிபோல யார்கண்களுக்கும் படாத வரம் கொண்டவை.

வண்ணஅட்டைச் சிற்றிதழ்களுக்கு வாசகர் கடிதத்துடன் கவிதை அனுப்புவது சிறந்த வழிமுறை. அதன் ஆசிரியரால் எழுதப்படும் கட்டுரைகளுக்கு பாராட்டுடன் அனுப்புவது மேலும் சிறந்தது. அவ்வாசிரியர் தன் எதிரி இதழுக்கு சவால்விட்டு எழுதிய கட்டுரையைப் பாராட்டி எழுதுவது மேலும்மேலும் சிறந்தது. சாது ஆத்மாக்கள் ஆயுள் சந்தாவுடன் கவிதை அனுப்பலாம். ஒருசிற்றிதழில் கவிதை வெளிவந்தால் உடனே அதன் போட்டிச்சிற்றிதழுக்கு அனுப்புவது உடனடி பலனளிக்கிறது. பொதுவான வண்ணஅட்டைச் சிற்றிதழ்கள் இக்காலத்தில் தமிழ்ப்பெண்களை கவிஞர்களாக்கும் வேள்வியில் ஈடுபட்டிருப்பதனால் பெண்பெயரில் கவிதைகளை அனுப்பலாம். கவிதையில் ‘நீ என்னை புணரும்போது’ போன்ற வாக்கியங்கள் முக்கியம்.

சிற்றிதழ்க் கவிதைகளைப்பற்றிய ஒரு பொது வடிவநிர்ணயம் இன்றைய அவசியத்தேவை. தேர்ந்த திறனாய்வாளர்களால் உருவாக்கபப்ட்ட அவ்விதிகளை கீழே அளிக்கிறோம். இவை கவிதை எழுதுவதற்கான பயிற்சியுமாகும்.

1 எழுவாய் பயனிலை கொண்ட வரிகள் எழுவதால் பயனில்லை. ” நான் நேற்று ஒரு மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்ற வரி கவிதை அல்ல. ‘ நீலவானத்தை ஒரு மஞ்சள் பறவை சிறகடித்துப் பறக்கப் பார்த்தபோது’ என அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

2 வரிகள் ஒழுங்காக அமைந்திருப்பது நவீன கவிதை அல்ல. உடையுங்கள். கைக்குழந்தை தோசையைப் பிய்ப்பதுபோல நடுவே பிடித்து பிய்த்தெடுங்கள். ‘சிறகடித்து நீலவானத்தைப் பறந்த ஒரு பறவையின் மஞ்சளைப் பார்த்து ‘ கவிதைமாதிரி ஆகிவிட்டதல்லவா?

3 உடைந்த தனிச்சொற்களின் சேர்க்கையே கவிமொழியாகும். இதை உருவாக்க சிறந்த வழி அவ்வப்போது சில சொற்களை வெட்டி விடுவதே. ஒரு தமிழ்க் கவிஞர் படிக்கத்தெரியாத தன் எல்கெஜி குழந்தையிடம் கொடுத்து ‘உனக்கு பிடிக்காத வார்த்தையை வெட்டு பாப்பா” என்று சொல்லி கவிதைகளை உருவாக்குகிறார். கிளிகளையும் பயன்படுத்தலாம் ‘சிறகடித்து ஒரு வானநீலப் பறவை மஞ்சள்’ அற்புதமான ஒரு புதுக்கவிதையின் நுனியை இப்போது நீங்கள் பார்த்து விட்டீர்கள்!

4 கண்ணால் கண்ட ஒரு காட்சியை என்ன ஏது என்றெல்லாம் சிந்திக்கப் புகாமல் இம்மாதிரி கவிதையாக கலைத்துவைப்பது போதுமானது.

பயிற்சி: ”நான் நேற்று மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அதன் சிறகுகள் அழகாக இருந்தன. அவற்றில் இருந்து ஒரு இறகு விழுந்து தரையில் கிடந்தது. எடுக்கப்போகும் முன் காற்றில் பறந்துபோய்விட்டது. எடுத்திருந்தால் ஆனந்தமாக காதுகுடைந்திருக்கலாம். இப்போது என் காதுக்குள் ஒரே நமைச்சல். அடுத்த பறவை எப்போது வரும்?’ இதை புதுக்கவிதையாக ஆக்குங்கள் பார்ப்போம்.

சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை நீங்கள் எழுதிவிட்டபின்னர் ஒரு கவிஞன் என்ற தகுதி உங்களுக்கு வந்துவிட்டிருப்பதை அந்தரங்கமாக உணர்வீர்கள். இது பதின்பருவத்தில் உணர நேர்ந்த பல அந்தரங்கக் கண்டடைதல்களுக்கு நிகராகவே மனக்கிளர்ச்சி ஊட்டுவதென்பதை அறிவீர்கள். இதன் பின் நீங்கள் தொகுப்பு போடாமலிருக்க முடியாது. அரசு வேலையில் இருப்பீர்கள் என்றால் வைப்புநிதியில் கடன் பெறுங்கள். இல்லாவிட்டால் தொடக்க வேளாண் வங்கியில் [மனைவி] நகைக்கடன்.

ஒரு கவிதைத் தொகுதிக்கான இலக்கணங்கள் சில.

1. ஐம்பது கவிதைகளுக்கு குறைவிலாதிருக்க வேண்டும். குறைந்தால் நவீன கோட்டோவியங்களைப் போடலாம்.

2. வண்ண அட்டையில் நவீன வண்ணஓவியங்கள் தேவை. ஆதிமூலம் வரைவது தொல்மரபு. மருது, சந்தானம் பின் மரபு. இணைய இறக்கமே இந்நாள் வழக்கம்.

3 கவிதைத்தொகுதிக்கான தலைப்புகள் நான்கு வகை. அவையாவன.

அ] பன்மைப்பெயர்கள். உணர்ச்சிப்பூக்கள், ஏறாத குன்றுகள், நிலவுமழைகள் போல பன்மையில் சூட்டப்படும் பெயர்கள். இவை அதிகமும் உருவகங்கள். இவை பொதுவாக இ.இ கவிதைகளுக்கு உரியவை.

ஆ] கடிநாக்குப் பெயர்கள். வாசகனின் நாவை பல் கடிக்கும் வாய்ப்புள்ள பெயர்கள் இவை. இதில் இரண்டுவகை. சுரோணிததளம், அட்சரலட்சியம் போல சம்ஸ்கிருதப் பெயர்கள். நிலையிலியலை, பிரதியழிந்தசுவடி போல தமிழ்ச் சொற்கள்

இ] முன்னது இரண்டிலிருந்தும் முற்றாக வேறுபடும் நோக்கம் கொண்ட தலைப்புகள். ‘சைக்கிள்’ ‘சின்னமைத்துனி’ போல. ஆனால் இத்தகைய தலைப்புகளுடன் கொடுக்கப்படும் படங்களில் கவனம் தேவை. சைக்கிள், இளம்பெண் படங்கள் அளிக்கப்பட்டால் முறையே சுயபராமரிப்பு அல்லது பலான நூல் என்று மயங்கி வாசகர் வாங்கி ஏமாறக்கூடும். முறையே நெருக்கக் காட்சியில் தொப்புள், உரித்து தொங்கபப்ட்ட மாட்டுத்தொடை போன்ற படங்கள் இருப்பது இது கவிதைநூல் என்ற எண்ணத்தை உருவாக்கும்

ஈ] கிராமத்து தலைப்புகள். ”மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்!” ”கம்மங்கூழ்” போன்ற தலைப்புகள். இங்கும் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. இத்தகைய நூல்களின் அட்டை அதிநவீன முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் குஜிலி இலக்கியம் என்ற வாசகர் மயங்குவர்

4.கவிதைகளை பெயர் போட்டோ போடாமலோ அச்சிடலாம். கவிதைக்கு மேலேயோ அடியிலோ வெற்றிடம் விடலாம். பதிலுக்கு விடலாகாது. வெள்ளைத்தாள் என்பது வரிகளை கவிதையாக ஆக்கும் தன்மை கொண்டது. முழுத்தாளின் கீழ் நுனியில் ‘காகம் கறந்து போயிற்று /காவென்று’ என்று ஒரு வரி மட்டும் இருந்தால் அது கவிதையாக ஆகும் விந்தை சிந்தைக்கு இன்பமளிப்பது

5. பின்னட்டையில் இருவகைக் குறிப்புகள் இருக்கலாம் என ஆய்வறிஞர் வகுத்துள்ளார்கள். ”தன்னிலையழிந்த கீழைமனத்தின் இன்னுமுணரப்படாத மெய்ப்பாடுகளில் உறங்கும் தொன்மங்களிலும் வாழ்க்கைநுண்மைகளிலும் அழியாது வாழ்ந்துகொண்டிருக்கும் ஓராயிரம் புராதனச் சொற்களின் வழியாக பீறிட்டெழும் கனவுகளில் இருந்து வழியும் குருதியும் சுக்கிலமும் பற்பல நிலவெளிகளின் வழியாக அருவிபோல ஒலித்து ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் அறியும் மௌனத்தைப்பேசுபவை இக்கவிதைகள்’ என ஏதாவது மூத்த எழுத்தாளர் அல்லது கவிஞரிடமிருந்து சொற்களை வாங்கிபோடலாம். அற்றகைக்கு நாமே இவ்வாறு சொற்றொகை எழுதலும் ஆகும்

அல்லது ஒரு கவிதைவரியை மட்டும் எடுத்து கொடுக்கலாம்

‘நினைவின் காட்டுப்பாதை
கரிய குதிரை
நான் அலையும்போது
யாரின் குரல்?’

போதும். இது கவிதைத்தொகை என்ற இறும்பூது வாசகர்களுக்கு ஏற்படுதல் திண்ணம். பொதுவாக கவிதைத்தொகுதிகளின் பின்னட்டைக்குறிப்பென்பது வேறுநூலென எண்ணி வாங்கும் வாசகர்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டதென உணர்க.

ஒரு மாற்றத்துக்காக கவிஞரின் கையெழுத்திலேயே கவிதையை வெளியிடலாம்.

‘எதிரே போன பெண்ணின் [ பசுவின்]
நடை[இடை] அசைவில் பறக்கும்[ ஆடும்]
வண்ணத்துப்பூச்சி [பட்டாம்பூச்சி]
முந்தானை [வால்]சிறகடிப்பு”

என்று ஒரு வரி பின்னட்டையில் உரிய அடித்தல்களுடன் இருந்தால் கவிஞன் சிந்தனைப் பழக்கமுள்ளவன் என்பதற்கு உறுதியான சான்றாக ஆகிறது.

6. உள்ளே கவிஞனின் முன்னுரை அவசியம். அது சலிப்பின் குரலில் அமைந்திருத்தல் வேண்டும். ‘இருப்பின் துயரவெளிகளில் அலையும்போது மடியில் கட்டப்பட்டிருக்கும் பொரிகடலை எனக்கு கவிதை’ போன்ற சில சொற்றொடர்கள்

7. மூத்த கவிஞர் ஒருவரின் முன்னுரையும் நல்லதே. ஆனால் அவர் ‘இனிமேலாவது ஒழுங்கா எழுதுடா மசிரே’ என்ற பொருளில் ”…அண்டபேரண்டனிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்’ என்று எழுதிவிடலாகாது.

கவிதைநூல்களை கவிஞனே அச்சிடுவது பழைய வழக்கம். பதிப்பகத்தாருக்கு பணம் கொடுத்து வெளியிடுதல் புது வழக்கம். நாமே அச்சிடும்போது அன்பளிப்பாக அளித்த எண்பது பிரதிகள், மதிப்புரைக்கனுப்பிய இருபது பிரதிகள் தவிர மீதி எண்ணூற்றித் தொண்ணூற்றியெட்டை என்ன செய்வதென்று சிக்கல் ஏற்பட்டு மனைவியால் தினமும் ‘சனியன்பிடிச்ச பொஸ்தகங்கள் .இத எங்கிணயாம் கொண்டு போறேளா இல்ல வெந்நீரடுப்பில செருகவா?’ என்று வசைபாடப்படும். பதிப்பகத்தார் எனில் அவர்கள் நமக்களிக்கும் நூறு பிரதிகளுக்கு மேலாக ஐந்து பிரதிகள் மட்டுமே அச்சிட்டு புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் வைப்பார்கள் என்பதனால் அப்பிரச்சினை இல்லை. நம் நூல் உலகலாம் வாசிக்கப்படுகிறதென்ற இன்பமும் நமக்குண்டு.

மதிப்புரைகள் பொதுவாக வருவதில்லை என்பதனால் பிரச்சினை இல்லை. கவிஞர் தன் கவிநண்பர்களுக்கு உரியமுறையில் கப்பம் கட்டியிருந்தால் மதிப்புரைகள் வரும். மதிப்புரைகள் என்பவை சொற்களே. கவிதைமதிப்புரைகள் என்பவை கலைந்த சொற்கள்.கவிதை என்பது பறவையடைந்த மரம் மீது வீசப்பட்ட கல் அல்லவா? ஆகவே ”மொழியின் நுண்காடுகளில் அலையும் சொற்களின் பிரதிமைகளின் பேச்சுமொழி அண்டபேரண்டனின் கவிதைகளின் பிரதித்தன்மையிலிருந்து கமழ்கிறது…” என்பது போன்ற வரிகளுடன் அவை சிற்றிதழ்களில் வெளிவரலாம்.

புதுக்கவிதை எழுதுவதனால் என்ன லாபம் என்ற வினா எப்போதாவது வந்து உங்களை மதுக்கடை நோக்கி உந்தக்கூடும். புதுக்கவிதை எழுதுபவனுக்கு பணமோ புகழோ கிடைப்பதில்லையாயினும் தமிழ்மக்களின் கவிதையுணர்வை குறைசொல்லவும் தமிழ்க் கவிதையின் தரவீழ்ச்சியைப்பற்றி வருந்தவும் உரிமை கிடைக்கிறது, இது வாழ்நாள் முழுக்கச் செல்லுபடியாகக் கூடியதுமாகும். ஆகவே எழுதுக கவிதை!

பிகு

பயிற்சிக்காக நீங்கள் எழுதிய கவிதை கீழே காணும் கவிதையின் எழுபது விழுக்காட்டை அடைந்திருந்தால் நீங்கள் கவிதைத்தேர்வில் வென்றிருக்கிறீர்கள் என்று பொருள். வாழ்த்துக்கள்

சிறகடித்து ஒரு வானநீலப்
பறவை மஞ்சள்
சிறகுகள் உதிர் இறகு
காற்றில்
பறக்க
எடுத்திருந்தால்
என் ஆனந்தக் காது.
நமைச்சல்
எப்போது
அடுத்த பறவை?

----ஜெயமோகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக