புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
prajai
சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_m10சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 4:30 pm

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!

பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Evening-Tamil-News-Paper_57813227177
காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை எம்.பி நகரை சேர்ந்த ஷகிலாபேகம். அவர் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக சத்துமாவு கூழ் பருகுவது வழக்கத்தில் உள்ளது. தினசரி காலை ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் சத்து மாவை போட்டு காய்ச்சி டீ, காபிக்கு பதிலாக குடிப்பார்கள். சத்துமாவுக்கு இருக்கும் தேவையை அறிந்து போகன்வில்லா மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரித்து விற்க முடிவு செய்தோம். எங்களுக்கு தனியாக பயிற்சி தேவைப்படவில்லை. வீட்டில் தயாரித்த அனுபவமே கைகொடுத்தது. நாங்கள் தயாரித்த சத்து மாவை தெரிந்தவர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்றோம்.

எங்கள் தயாரிப்பின் சுவை, மணம், தரம் அவர்களை கவர்ந்தது.தானியங்களை முளை கட்டி, காய வைத்து, அரைக்கும் வேலை மிச்சமானதால் தொடர்ந்து எங்களிடம் வாங்கினர். இதன்மூலம் எங்கள் தயாரிப்பு பிரபலமானது. பின்னர் படிப்படியாக புதிய வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மாவை அறிமுகப்படுத்தினோம். கடைகளுக்கும் விற்றோம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள ஏற்ற தொழில் இது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவை விற்கிறோம் என்ற மனநிறைவு இத்தொழிலில் உண்டு.

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.

தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம் (ரூ.25), ஓமம் 50 கிராம் (ரூ.15), சுக்கு 50 கிராம் (ரூ.15), பிஸ்தா 50 கிராம் (ரூ.20), ஜாதிக்காய் 2 (ரூ.5), மாசிக்காய் 2 (ரூ.5),
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

6 மாதம் கெடாது

சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.

சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்...ARRKAY BLOGSPOT ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 29, 2012 4:44 pm

மிகவும் அருமையான தகவல்...பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 4:45 pm

நல்ல தகவல் பிரசன்னா. பகிர்வுக்கு நன்றி



சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Uசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Dசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Aசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Yசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Aசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Sசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Uசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Dசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Hசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 7:36 pm

எங்கள் வீட்டில் இந்தச் செய்தியை படித்துவிட்டு, சிறிய அளவில் சோதனை முறையில் சத்து மாவு தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 11:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் வீட்டில் இந்தச் செய்தியை படித்துவிட்டு, சிறிய அளவில் சோதனை முறையில் சத்து மாவு தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சி
நல்ல விஷயம் ஐயா.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 12:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் வீட்டில் இந்தச் செய்தியை படித்துவிட்டு, சிறிய அளவில் சோதனை முறையில் சத்து மாவு தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சி

அப்ப இது பயனுள்ள பகிர்வு தான்... நன்றி அய்யா...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 31, 2012 12:39 pm

பிரதி எடுத்து கொண்டேன் ...நன்றி. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Jan 31, 2012 12:51 pm

இந்த மாவு சென்னைல் பல கடைகளில் தேடி பார்திருக்கிறேன் ஆனால் கிடைக்கவில்லை அதிர்ச்சி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! Mgr
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக