புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
79 Posts - 68%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
4 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
1 Post - 1%
nahoor
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
133 Posts - 75%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
7 Posts - 4%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:46 pm

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்

1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்

""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:47 pm

2. அனுமனிஸம் தெரியுமா?

சின்னஞ் சிறுசுகள் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். "குபீர் குபீர்' என்று சிரிப்பொலி, "ஓ... ஆ...' என்கிற ஒலி அலைகள் இவையெல்லாம் இளசுகளின் முரசுகள். காரணம் இன்றியே கலகலப்பாக இருத்தல் இளமையின் இயல்பு. அதனால்தான் திருவெம்பாவையில் இளம்பெண்களை எழுப்பும் பாடல்களில், "முத்தன்ன வெண்நகையாய்', "ஒள் நித்தில நகையாய்' என்று நகையை, சிரிப்பைக் குறித்து விளிப்பதாக மணிவாசகர் பாடுகிறார். காசு கொடுத்தாலும் கலகலப்பு வராத காலம் முதுமை. சாப்பிடும்போது கூட, "அந்தப் பாயசத்தைப் போட்டுத் தொலை', "அந்தச் சனியனை எடு' என்று அலுத்தும் சலித்தும் உண்ணுவதே கிழத்தனம். வாழ்க்கை வறண்டுவிட்டது.

உற்சாகம் செத்துவிட்டது. மனம் மரணித்துவிட்டது. "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் ஆட்டிப் படைக்கிறது. இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு. ஆனால் இளமையிலேயே சோர்வு இருந்தால் வாழ்க்கை என்னாவது? ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல் என்று இளைஞர்கள் சோர்ந்து வழிகிறார்கள். இத்தகைய உடற்குறைபாடுகள் காரணத்தால் வந்த சோர்வு எளிதாகக் களையத் தக்கது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, அரைக் கீரை, உளுத்தங்கஞ்சி, பேரீச்சம் பழம், முட்டை, பால், தயிர் என்கிற உயிர்ச்சத்தும் இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டுச் சேர்த்தால் உடற்சோர்வை விரட்டலாம். விசையுறு பந்தினைப் போல் விண்ணில் குதிக்கலாம்.

மனச்சோர்வு (டிப்ரஷன்) வந்தால் என்ன செய்வது? பூலோக சுவர்க்கமான அமெரிக்காவில் சின்னஞ்சிறிசுகள், பள்ளிப் பிள்ளைகள், கை நிறையக் காசு கொழிக்கும் இளைய தொழிலதிபர்கள், வாலிப வணிகர்கள்கூட இன்று டிப்ரஷனில் சோர்ந்து போகிறார்கள். சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. சம்சாரிப்பதில் அக்கறை இல்லை. எதிலும் அலட்சியம், ஈர்ப்பில்லை. மானுட மண்புழுக்களாக வட்டமடித்துப் புதைந்து கொள்ளும் மனச் சோர்வில் தவிக்கிறார்கள். என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? இரண்டாயிரத்து இருபதில் உலகம் ஒரு கொள்ளை நோயால் கொண்டு போகப்படும். அது எய்ட்ஸ் அல்ல. டிப்ரஷன் என்பது அமெரிக்க உளவியல் ஆய்வு! அதற்கு என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? வாழ்வின் எதார்த்தமான உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களின் அலை வீச்சே மனம்... மனத்தின் இயக்கம். ஒரு அலை எவ்வளவு உயரமாக எழுந்து ஆடுகிறதோ அவ்வளவு மூர்க்கமாகத் தரையில் எறியப்படும். ஓங்கி அடி விழும். எழுச்சியைத் தொடர்வது வீழ்ச்சி.

ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில்தான் முடிவடையும். இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் சோர்வடைகிறார்கள். ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு இயற்கை, வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக்கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் இந்தக் கடல் அலைகளின் எழுச்சி, வீழ்ச்சியைப் பூமி தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி, மனசின் எழுச்சி, வீழ்ச்சியை உடம்பு தாங்க முடிவதில்லை.

எனவே உடம்பைப் பலப்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை விளங்ள்கிக்கொண்டால் மீதி வெற்றி. இதற்கு மேலும் சோர்வு தாக்காமல் இருக்க அருமையான யோசனை சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு "மகா உத்சாகாய' என்று ஒரு நாமம் உண்டு. மிகவும் உற்சாகம் - சுறுசுறுப்பு உள்ளவன் என்று பொருள். அவன் சோர்ந்த இடங்கள் இல்லையா? உண்டு. சீதையைத் தேடிப் போகும்போது கடல் கடக்க வேண்டிய இடம். எல்லோரும் நம்மால் முடியாது என்று சோர்ந்து சுருண்டபோது அனுமனும் சுருண்டு சோர்ந்தான். எவ்வளவு பெரிய மனிதனுக்கும் டிப்ரஷன் வரும் என்பதற்கு இதுவே அடையாளம். அப்போது ஜாம்பவன்தான் அனுமனைத் தட்டி எழுப்பினார். ""அடேய்... இந்தக் கடலைக் கடப்பது உனக்கு சிறிய வேலை'' என்று சொல்லிச் சோர்வை விரட்டினார்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:48 pm

அனுமனது நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி உலை வைத்தார். விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான் ஆஞ்சநேயன். என்ன பொருள்? நாம் சோர்வடையும்போது நமது பலத்தை நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம்கூட இருந்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை தூண்டப்பட்டால் வெற்றி நிச்சயம். அதையும் தாண்டிக் கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும் சோதனை. சோர்வு. எப்படி? மைந்நாக மலை. அங்கார தாரை, சுரசை என்ற மூவரால் தொடர்ந்து தொல்லைகள் வந்தன.

தன்னம்பிக்கை தள்ளாடியதும் கடவுள் நம்பிக்கைக்குத் தாவுகிறான் அனுமன். ராம நாமத்தை ஜபித்தால் துன்பம் நீங்கும் என்று "ராம என எல்லாம் மாறும்' என்று ராம நாமம் சொல்லுகிறான். கவலையைக் கடந்து இலங்கையை மிதிக்கிறான். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. அரிசியும் கோதுமையும் மாதிரி. ஒன்று இல்லாதபோது மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காரில் மலைப்பாதையில் போகிறபோது ஒரே கியரில் வண்டி போகுமா? போகாது. கியர் மாற்றி கியர் போட்டுக் காரை மலைமீது ஓட்டவில்லையா? அப்படித்தான்.

வாழ்க்கைப் பாதையும் மலைப் பயணம் மாதிரிதான். கியர் மாற்றி கியர் போடுகிற மாதிரி தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப் பயணத்தை நிகழ்த்தலாம். "தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிடக் கூடாது... கடவுள் நம்பிக்கை உள்ளவன் சுயமுயற்சி செய்யமாட்டான்...' என்கிற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு முன்னேறுகிற வழியைப் பாருங்கள். தன்னம்பிகையோடு இரு... அது தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு... அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையைப் பயன்படுத்து. தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப் பார். இதுவே அனுமனிஸம்... நண்பனே... இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:49 pm

3. நீங்கள் பணக்காரரா? பிச்சைக்காரரா?



பிறரிடமிருந்து நமக்கு ஏதாவது கிடைக்கிறதா? பிறர் நமக்கு எதையாவது தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்பது, ஏங்குவது பிச்சைக்காரத்தனம். காசு வாங்கும் பிச்சைக்காரர்கள்... சாப்பாடு எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் மாதிரி, பிறர் உழைப்பை எதிர்பார்ப்பவரும் பிச்சைக்காரர்கள் என்கிறேன்! இது சரியா என்று யோசியுங்கள்.

""அம்மா... என் பனியன் எங்கே..? துண்டு எங்கே..?'' என்று பனியனுக்கும் துண்டுக்கும்கூட அம்மாவை எதிர்பார்க்கும் இருபது வயசுப் பாப்பாக்களாக இளைஞர்கள் இருக்கலாமா? எதெற்கெடுத்தாலும் இப்படி அம்மாவைச் சார்ந்திருப்பவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்டாட்டியைச் சார்ந்து விடுவார்கள். அதுதான் பிரச்சினை. அதனால் அம்மாவை ஓரம் கட்டுவார்கள். பிற்காலப் பிரச்சினைகளுக்கு இந்த அம்மா சார்பு ஒரு காரணம்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு இந்த மனோபாவத்தை வளர்க்கின்றன. படிப்பிலும் கம்ப்யூட்டரிலும் மூழ்கி இருக்கும் பிள்ளைகளுக்கு வீவாவும் காம்ப்ளானும் கொண்டுவந்து கையில் நீட்டும் விளம்பரத் தாய்மார்கள் எதிர்காலத் தலைமுறையை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். நமக்கு எல்லாமே பிறர்தான் செய்ய வேண்டும் என்கிற சார்பு மனோபாவம் இளைய தலைமுறையிடம் வளரக் கூடாது. அன்பும் உபசரிப்பும் குற்றம் அல்ல. ஆனால் சாக்ûஸத் துவைக்கப் போடுவது... தேடும்போது எடுத்துக் கொடுப்பது - யூனிஃபார்ம் அயர்ன் செய்ய ஞாபகமாகத் தருவது - புத்தகங்களையும் தொலைத்த பொருள்களையும் தேடித் தேடி எடுத்துக் கொடுப்பது, இவை யாவும் அம்மா, அக்கா, அண்ணா, அப்பாவின் வேலைகள் என்று பிறரைச் சார்ந்து வளரும் பண்பு வளரக் கூடாது.

நாம் நமது காலில் நிற்க முடியாமல் போனால் உடல் ஊனம் என்கிறோம். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்திருப்பதும் ஒருவகை ஊனமே. இந்த ஊனம் வெற்றியின் விரோதி. எனவே இதை விட்டு விலகிச் சொந்தக் காலில் நில்லுங்கள். இல்லையேல் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி நொந்து நூலாகி விடுவீர்கள்.

உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை. இன்னொன்று... முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. "திருச்சியின் அழகிய கிழவர்' கேள்விப்பட்டதுண்டா? முத்தமிழ்க் காவலர் அமரர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள். நெடிய உருவம், அழகிய வடிவம். எண்பது வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல்... தடுமாற்றம் இல்லாத பேச்சு... பல்லாண்டுகட்கு முன்பு ஒரு விழாவுக்காகச் சென்னை வந்த அவரை, ரயில் நிலையத்தில் வரவேற்று அழைத்துப் போகக் காத்திருந்தேன். பயணக் களைப்பே இன்றி ரயிலில் இருந்து இறங்கினார். கையில் இருந்த சின்னப் பெட்டியை, மரியாதை நிமித்தம் வாங்குவதற்குக் கை நீட்டினேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:50 pm

""விடு... பெட்டியைப் பிறரிடம் கொடுத்துத் தூக்கச் சொல்லுமளவு எனக்கு வயதாகவில்லை'' என்று கூறியபடி விடுவிடு என்று நடந்தார். அப்போது அவர் வயது எழுபது! எழுபது வயதிலும் பிறர் உழைப்பை, உதவியை எதிர்பாராத பெருஞ்செல்வம் அவர் மனத்தில் இருந்தது. அதனால்தான் அவர் "திருச்சியின் அழகிய கிழவர்' எனப்பட்டார். பிறர் உழைப்பை எதிர்பாராததே அவர் இளமையின் இரகசியம்.

அண்மையில் மூன்று திருமணமாகாத இளைஞர்கள் குடியிருக்கும் அறைக்குள் போக நேர்ந்தது. க்ஷஹஸ்ரீட்ங்ப்ர்ழ்ள் க்ங்ய் என்பது சரிதான். களைந்த நிலையிலேயே சுருண்ட ஜட்டிகள் நாலைந்து ஆங்காங்கே. பூமியில் வட்ட வடிவில் கழற்றி விடப்பட்ட லுங்கிகள். அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள். குடலைக் குமட்டும் விவரிக்க முடியாத வாசனைக் கலவை... ""ஜன்னலைத் திறக்கக் கூடாதா?'' என்றேன். ""யாரு திறக்கறது... யாரு அடைக்கிறது... போர் அடிக்கிற வேலை சார்... அது... ஞாபகமா சாயங்காலம் சாத்தாட்டி கொசு வரும். மழைத்தண்ணி உள்ள வந்துடும்'' என்று பெரிய பட்டியல் இட்டார்கள். ஜன்னலை நாள்தோறும் திறந்து சாத்துவது பெரிய வேலையாகத் தோன்றுகிறது அந்த இளைஞர்களுக்கு... இவர்கள் வெற்றி பெறுவார்களா? யோசியுங்கள். உழைக்கத் தயங்கலாமா?

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் நிதானமாகத் தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துத் கொண்டிருந்தார். அவருடன் வெளியில் போக வேண்டி புகழ்பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார். அதிர்ச்சியுடன், ""என்ன மிஸ்டர் லிங்கன்... உங்கள் ஷூவுக்கு நீங்கள் பாலிஷ் போடுகிறீர்கள்?'' என்று இழுத்தார். ""ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுக்கு பாலிஷ் போடுவீர்கள்?'' என்று கேலியாகத் திருப்பினார் லிங்கன். உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிச்சைக்காரர்களே!

உழைப்பை நேசிப்பவர்களுக்குப் பொற்காலம் காத்திருக்கிறது. வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:51 pm

4. திறமைக்கு ஏது தோல்வி?

அவர் ஒரு தமிழ்ப் புலவர். அரசரிடம் போய்ப் புகழ்ந்து பாடினால் பிழைக்க முடியும் என்கிற அந்தக் காலத்தில் வாழ்ந்தவர். அவர் பார்க்கப்போன அரசன் புலவரைப் புலவராகப் பார்க்காமல் பிச்சைக்காரனைப் போல எண்ணிவிட்டான். புலமையைக் கண்டறிந்து பரிசு தராமல் காவலனிடம் சிறிய பரிசைக் கொடுத்தனுப்பி விட்டான். கிடைத்தது போதும் என்று வாங்கும் இரவலன் இயல்பு இல்லாத புலவர் கொதித்துப்போனார். ""காணாது ஈந்த பரிசிலைப் பெறும் வாணிபப் பரிசிலேன் நான் அன்று'' என்று கோபித்துக் கொண்டு புறப்பட்டுப் போனார். போகிற போக்கில் புலவர் உலகத்தைப் பற்றிச் சொன்ன ஒரு சொல் அற்புதம்... அபாரம்... அருமையோ அருமை. உலகம் என்ன அவ்வளவு சிறியதா? பெரியது. காப்பாற்ற இவன் ஒருவன்தானா? பலர் இருக்கிறார்கள்... என்கிற அர்த்தத்தில், ""பேணுநர் பலரே... பெரிதே உலகம்'' என்று சிலிர்த்துக் கொண்டார்.

இந்த நம்பிக்கை உங்களுக்கு உண்டா? ""இருக்கிற இந்தச் சின்ன வேலையையும் விட்டுவிட்டால் நாளைச் சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வது'' என்ற கவலையோடு சின்ன வேலையிலேயே செத்துப் போவது புத்திசாலித்தனமா? இன்றைக்குப் பெரும் புகழோடும் பணத்தோடும் வாழும் பலர் துணிந்து முடிவு எடுத்ததால்தான் பெரிய மனிதர்களாக மலர்ந்து நிற்கிறார்கள். எழுத்தாளர் அமரர் அகிலன், டைரக்டர் கே. பாலசந்தர் ஆகிய பலரும் இத்தகைய பட்டியலில் அடக்கம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வறுமை மிகுந்த குடும்பம் அது. தகப்பனார் பெருங் குடிமகன்! குடும்பப் பொறுப்பில்லாத தப்பான அப்பா. தாயார் இசைப் பாடம் நடத்தி கைக்கும் வாய்க்குமாய் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். அவர்களது அழகு நிறைந்த அருமை மகன் படிப்புக்குச் செலவழிக்க அவளிடம் வசதி இல்லை. ஏதோ ஒரு அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துவிட்டாள் அன்பான அம்மா. அம்மா படும் கஷ்டத்தை அந்த அன்பு மகனால் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் விருப்பத்திற்காக அந்த அசட்டு வேலையில் அவனால் தங்க முடியவில்லை. திட்டும் ஏச்சும் பேச்சும் வாங்கும் எடுபிடிப் பயலாய்த் தன் வாழ்வு வீணாகிவிடுமோ என்று அஞ்சினான். மனப் போராட்டத்தில் எதிர்கால வாழ்வு பாழாகிவிடும் என்கிற பயமே விஞ்சியது. வேலையை ராஜிநாமா செய்துவிட்டுத் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், ""அம்மா... கடவுள் கொடுத்தது ஒரே ஒரு வாழ்க்கை. அதையும் ஆபீஸ் பையனாகவே வீணாக்குவது புத்திசாலித்தனமல்ல... அதனால் வேலையில் இருந்து விலகிவிட்டேன்'' என்று எழுதினான்.

வாழ்க்கை அவனைத் தோல்விகளால் வளைக்கப் பார்த்தது. அவன் அந்தத் தோல்விகளால் தழும்பேறி வாழ்க்கையைத் தன் வசம் வளைக்கும் வலிமையேறியவன் ஆனான். நாவல்கள் எழுதினான். தோல்வி. கலை, இசை விமர்சனகர்த்தாவாக அவதாரம் எடுத்தான். ஒன்றும் பயனில்லை. அவன் திறமைக்கேற்ற திருப்புமுனை திறக்கவேயில்லை. மீண்டும் அவன் ஒரு அவதாரம் எடுத்தான். நாடக ஆசிரியனாக மாறினான். அப்போதுதான் ஒளிவெள்ளம் அவன்மீது பாய்ந்தது. ஓஹோ என்று புகழ் பெற்றான்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:51 pm

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவனைச் சென்றடைந்தபோதுதான் அவன் அன்றெடுத்த முடிவு - ""ஆபீஸ் பையனாக என் வாழ்வை வீணாக்கமாட்டேன்'' என்ற தெளிவு - எவ்வளவு உன்னதமானது என்று புலப்பட்டது. யாரந்த நாடகப் புலவன்? பெர்னார்ட் ஷா. அவனது விடாமுயற்சியும் தளர்ச்சியற்ற தைரியமும் உங்களுக்கு உண்டா? உண்டு என்றால் வெற்றி நிச்சயம்.

"ஷா' அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி. பழைய நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் ஆதரவாளர்கள் இந்தப் புதிய நாடக ஆசிரியர் புகழை வெறுத்தனர். "ஷேக்ஸ்பியர் நாடகங்களோடு ஒப்பிட்டால் இவர் எழுத்துகள் வெறும் குப்பை' என்றனர். ஷேக்ஸ்பியர் பற்றி "ஷா'வைப் பேச வைத்து அவமதிக்க அழைப்பு விடுத்தனர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிப் பேசிய பெர்னார்ட் ஷா சில வசனங்களை, சொல்லாட்சியை ஷேக்ஸ்பியரிலிருந்து எடுத்துக் கூறிச் சபையை ரசிக்க வைத்தார். வசனங்களை ஆஹா... ஓஹோ... என்று சபை பாராட்டிக் கைதட்டிக் கொண்டாடி முடித்த பிறகு சபையின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த ஷா, ""நீங்கள் முற்றிலும் பாராட்டி ரசித்துக் கைதட்டிய வசனங்கள் எவையும் ஷேக்ஸ்பியருடையவை அல்ல. முற்றிலும் அவை என் வசனங்கள். நான் எவ்வளவு பெரிய எழுத்தாளன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்'' என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். சபையோர் முகத்தில் ஈயாடவில்லை.

அழைத்து அவமானப்படுத்த நினைத்தவர்கள் அவமானப்பட்டார்கள். திறமைசாலிகள் தோற்பதில்லை. அவர்களைப் பிறர் தோற்கடிக்க முடிவதில்லை. உங்களுக்கும் இத்தகைய திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:53 pm

5. அடிமையாகாதே... அடிமையாக்காதே!

கண் விழித்துப் படிக்கும் அருமைப் பிள்ளைக்குக் காபி டம்ளரைக் கையில் கொடுத்துவிட்டு, காபி குடித்ததும் டம்ளரைக் கையில் வாங்கிப் போகும் இந்தியப் பெற்றோர்கள் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறார்களா? இல்லை உருக்குலைக்கிறார்களா என்றால், உருக்குலைக்கிறார்கள் என்பதே என் கருத்து.

தன் வேலைகளைத் தானே பார்க்காதவனே தலைவன், மேலாளர், மேம்பட்டவன், மேஸ்திரி என்கிற அபிப்ராயம், அடிமைப் புத்தி இந்தியாவின் பலவீனம். வளர்ந்த நாடுகளில் இந்த அடிமைத்தனம் இல்லை. முன்னேறிய நாடுகளின் ஹோட்டல் அறைகளில் தவறாமல் "காபி மேக்கர்' இருக்கும். அவரவர் காலைக் காபியை அவரவர் தயாரித்துக்கொள்ள வேண்டும். தனக்கான காபியைத் தயாரிக்கிற மாதிரியே தனக்கான வாழ்க்கையையும் அவர் அவரே தயாரித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அங்கே இருக்கிறது.

அளவுக்குமேல் பிறரைச் சார்ந்திருக்கும் அடிமைத்தனத்தை விட்டு இந்தியர்கள் வெளியில் வர வேண்டும். அடிமையாய் இருப்பதில் இந்தியனுக்கு ஏனோ ஆனந்தம் இருக்கிறது. இல்லை என்றால், "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதி, "என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று கொதித்துப்போய்ப் பாடியிருப்பானா? அடிமை மோகம்... அடிமை மோகம். இந்தியரின் சாபக்கேடு.

அண்மையில் மதுரையிலிருந்து ரயிலில் வரும் சமயம், ஒரு சுயமரியாதைச் சுடர் அதே ரயிலில் பயணம் செய்தது. முதல் வகுப்புப் பெட்டியில் எனக்கு அடுத்த பிரிவில் இருந்த அந்தத் தலைவருக்கு ஏ.சி. பெட்டியில் இடம் கிடைத்ததாகத் தகவல் தரப்பட்டது. தனது மெல்லிய துண்டை மட்டும் சுமந்தபடி இறங்கி, அடுத்த பெட்டியில் அந்தத் தலைவர் ஏறினார். பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சுயமரியாதை ஜோதிகள் - தொண்டர்கள் தொண்டை கிழிய அடிவயிற்றில் இருந்து "வாழ்க' என்று கோஷம் போட்டார்கள். அவரது கைப்பையில் இருந்து, புத்தகக் கட்டுகள் வரை, தொண்டர் படையால் ரயிலின் அடுத்த பெட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டன. தலைவர்கள் தங்களது எந்தச் சுமையையும் தாங்கள் சுமக்கக் கூடாது என்கிற இந்திய அடிமைப் புத்தி ஒளிவீசியது.

கொஞ்சம் யோசியுங்கள்... ஒரு தனிமனிதனின் வருகைக்கும் வழி அனுப்புதலுக்கும் நூற்றுக்கணக்கான தனிமனிதர்கள், அதுவும் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் காத்திருக்க வேண்டுமா? இதுதான் பகுத்தறிவா..? வேலைவெட்டி இருந்தால் இளைஞர்கள் இப்படி நேரத்தை வீணாக்குவார்களா? எங்கே போனாலும் பாழாய்ப்போன சாமியார்கள், சமயத் தலைவர்கள் தங்களுக்கு ஜே... ஜே போட, ஜெய... ஜெய பாட இப்படி ஒரு வெட்டிக் கூட்டத்தைக் கூட்டுவதை நம்மால் சகிக்கவே முடியவில்லை. அவர்களாவது சிந்திக்காத சமயவாதிகள். இதைக் கண்டித்து எழுந்த- மக்களைத் திருத்தப் பிறந்த- பகுத்தறிவுச் சிங்கங்களும் இந்தப் பாழாய்ப்போன வெட்டிவேலையில் வெட்கமின்றி இளைஞர்களை ஈடுபடுத்துவது சகிக்கும்படியாகவா இருக்கிறது?

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:53 pm

என் இனிய நண்பர்களே..! எந்தத் தலைவனுக்கும் ஜே போடாதீர்கள். பெட்டி தூக்காதீர்கள். அடிமைகளாகிச் சுயமரியாதையை இழக்காதீர்கள். சமயத் தலைவர்கள் கடவுளின் பெயரால் சிந்திக்காத அடிமைகளை உண்டாக்கினார்கள். பகுத்தறிவுவாதிகளும் இயக்கங்கள் பெயரால் சிந்திக்காத அடிமைகளை இன்று உருவாக்குகிறார்கள்.

பிறருக்கு அடிமையாகும் நிலையை வெறுக்கிறேன். பிறரை அடிமையாக்கும் தலைமையை அறவே வெறுக்கிறேன். பிறருக்கு அடிமையாவது தவறு. பிறரை அடிமையாக்குவது பெரும் தவறு.

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாதபாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலைவாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, ""அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே... நீயும் அவர்களோடு சேர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?'' என்று கேட்டான். குழுத் தலைவன், ""நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்... அவர்களோடு சமமாக நான் வேலை செய்ய முடியுமா?'' என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்திரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்துவிட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, ""இனி இப்படிக் கடினமான வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்'' என்று உரக்கச் சொன்னான்.

""நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது?'' என்று அலட்சியமாகக் குழுத் தலைவன் கேட்டான்.

""நானா... ஜார்ஜ் வாஷிங்டன். உங்கள் தலைமைத் தளபதி'' என்று அழுத்தமாகக் கூறிவிட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய்ப் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன். அந்த நாட்டு வெற்றியின் ரகசியம் புரிகிறதா?

அடிமையாக ஆசைப்படும் மக்கள் நிலைமை அபத்தமானது! அடிமையாக்க ஆசைப்படும் தலைமை ஆபத்தானது! சுயமரியாதையுடன் வாழுங்கள். கெüரவம் நிச்சயம்... கெüரவமான வெற்றி சர்வ நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:55 pm

6. கமலைவிட ரஜினிக்கு செல்வாக்கு ஏன்?

தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் கதைக்கென்று வழக்கமான "ஃபார்முலா' ஒன்று உண்டு. ஒரு கதாநாயகன்... கதை முழுவதும் அவனை எதிரியாக நினைத்துப் போராடும் ஒரு வில்லன். வில்லன் இல்லாத திரைப்படம் உண்மையில் அதிசயமே! ஆனால் நிஜ வாழ்க்கையில் கதாநாயகனுக்கு வில்லன் எதிரி அல்ல... இன்னொரு கதாநாயகனே எதிரி.

விடுகதை போடாமல் விஷயத்துக்கே நேரே வருகிறேன். ஒவ்வொரு திரைப்படத்திலும் அமரர் எம்.ஜி.ஆருக்கு அமரர் எம்.ஆர். ராதாவோ, அசோகனோ அல்லது நம்பியாரோ வில்லன். ஆனால் திரைத்துறையில் தொழில் ரீதியாக அவருக்கும் நம்பியாருக்கும் போட்டியே கிடையாது. அமரர் சிவாஜி கணேசன்தான் அவரது தொழில்முறை எதிரி. யார் படம் நூறு நாள்கள் ஓடியது? ஹவுஸ்புல் காட்சிகள் எத்தனை? மத்திய - மாநில அரசுகளின் விருதுகள் யாருக்கு? ரசிகர் படை யாருக்கு அதிகம்? வசூல் அதிகம் எவருக்கு? - என்கிற போட்டி எப்போதும் இருவருக்கும் இடையே இருந்துகொண்டே இருந்தது. திரையுலக வளர்ச்சிக்கே இந்தப் போட்டி அவசியம் என்று பலர் கருதினார்கள். இருவரும் நட்பாக, அன்பாக நடந்துகொண்டாலும் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான அறிவிக்கப்படாத யுத்தம் எப்போதும் நடந்துகொண்டே இருந்தது. மாபெரும் திறமைசாலி, பிறவிக் கலைஞன், நடிப்பில் இமயம் என்று சிவாஜி வெற்றி பெற்றார்.

எம்.ஜி.ஆரோ, பல லட்சம் மக்களின் அபிமானத்திற்கும் அன்பிற்கும் உரிய "எங்க வீட்டுப் பிள்ளை'யாகி, தலைவராகி, முதல்வராகி, கடற்கரையில் அறிஞர் அண்ணாவுக்கு நிகராக நினைவிடம் கொள்ளும் வெற்றி பெற்றார். இருவரும் வெற்றி பெற்றார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் வெற்றி - அதன் அகல ஆழம் - சிவாஜி அடைய நினைத்து அடைய முடியாமல் போனது! தனிக் கட்சி நடத்தித் தலைவராகப் பயணம் செய்தும் எம்.ஜி.ஆர். அடைந்த அரசியல் உயரத்தை சிவாஜி எட்டாமல் போனதற்கு என்ன காரணம்? சிவாஜியின் கலை உலக இமயத்தை எம்.ஜி.ஆர். எட்டாதது வேறு விஷயம். இருவர் மீதும் முழு மரியாதையுடன் யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

சரி, இதை விடுங்கள். சகலகலா வல்லவனாய்க் கலை உலகில் விதவிதமாய்த் திறமை காட்டும் கமலஹாசனைவிட, அப்படிப்பட்ட சகலகலா வல்லமை காட்டாத ரஜினிகாந்த் அதிக செல்வாக்குடன் இருக்க என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? காரணம் சொல்லுகிறேன்.

திறமைசாலிகள் தங்கள் திறமைகளை மட்டுமே நம்புகிறார்கள். தங்கள் திறமை மீதான மெல்லிய கர்வம் மற்றவர்களிடமிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துவிடுகிறது. மற்றவர்களின் லாப நஷ்டங்களை விடவும் தம்முடைய திறமையின் மீதான கவனம், கர்வம் அவர்களை மெல்ல மெல்லப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்துகிறது.

மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்கிறார்கள்? திறமைசாலிகளையா? இல்லை. உங்கள் திறமை யாருக்கு வேண்டும்..? நீங்கள் திறமைசாலியாக இருந்தால் மக்களுக்கு என்ன லாபம்? நீங்கள் மக்கள் மீது அன்பும், மரியாதையும், நட்பும் வைத்திருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள். ஒன்று சொல்லுகிறேன். நாம் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது.. மக்கள் மீது அன்பும் அக்கறையும் நம்பிக்கையும் மரியாதையும் உடையவர்களாக இருப்பது வெகு வெகு முக்கியம். அதனால்தான் "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' என்று பாடிய எம்.ஜி.ஆர். ரசிகனைப் பார்த்து, "அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்' என்று அறிவித்தார். புரட்சி நடிகராக இருந்தவரைப் புரட்சித் தலைவராக உயர்த்தியவர்கள் மக்கள்தானே!

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக