புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்!
'மு.க.அழகிரியும் அவரது அடி யாட்களும் சேர்ந்து மதுரையில் தா.கிருட்டிண னை படுகொலை செய்த இடத்தின் அருகில் குடியிருக்கும் மிக...மிக முக்கியமான கண்ணால் கண்ட சாட்சியுமான நான் எங்கே, எப்பொழுது, யாரால், எப்படி மிரட்டப்பட்டேன் என்பதையும்...
முன்பு, தங்களின் பொற்கால ஆட்சிக் காலத்தில் தைரியமாக கீழ்கோர்ட்டில், நான் பார்த்தவற்றையும் நடந்தவற் றையும் கூறினேன். பிறகு ஏன் மேல்கோர்ட்டில் கூறவில்லை என்பதை தங்களின் ஆணைக்கு இணங்க நீதியின் முன்பாக தைரியமாக, பயமில்லாமல் கூறி அழகிரி வகையறாக்களுக்குத் தகுந்த தண்டனையை
பெற்றுத்தர உண்மையுடனும் உறுதியுடனும் நீதியின் பக்கம் நின்று செயல்படுவேன் என்று தங்களின் பொற்பாதங்களில் இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்’ - தா.கிருட்டிணன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிளம்பர் பிரபாகர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதி, மதுரை தி.மு.க. சர்க்கிளை அதிர விட்டிருக்கிறார்!
தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான பிரபாகரை, வழக்கில் 22-வது சாட்சி யாக சேர்த்திருந்தது போலீஸ். ஜெ. பேரவையின் வட்ட இணைச் செயலாளராக பிரபாகர் இருப்பதால், இவர் எந்தக் காலத்திலும் புரண்டு பேச மாட்டார் என மலை போல் நம்பியது போலீஸ். ஆனால், பிறழ் சாட்சியாகிப் போனார் பிரபாகர். இதற்கு நடுவில் தான் வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுக்கு மாறியது. அதில் மிரண்டு போய்த்தான், பிறழ் சாட்சியம் அளித்து தன்னையும் தனது குடும்பத்தையும் தற்காத்துக் கொண்டதாக இப்போது வாய் திறக்கிறார் பிரபாகர்.
பிரபாகரை அவரது வீட்டில் சந்தித்தோம். ''மோட்டார் ரிப்பேர் பார்த்த பணத்தை வாங்குறதுக்காக அன்னைக்கு அதிகாலை 5 மணிக்கு கௌம்பிப் போனேன். போற வழியில, அந்த நேரத்துல நாலஞ்சு பேரு சீருல்லாம நின்னுக்கிட்டு இருந்தாங்க. பக்கத்தில யமாஹா பைக் ஒண்ணு ஹெட் லைட் எரிஞ்ச மேனிக்கு உறுமிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி இன்னொரு பைக்கும் நின்னுச்சு. பக்கத்துல போனதும்தான் தெரிஞ்சுது... அவங்க அத்தனை பேரும் தி.மு.க.காரங்க. 'இவனுக எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்குறானுங்க'ன்னு சந்தேகப் பட்டுக்கிட்டே, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னேன்.
அப்ப, ஒரு பெரியவர் அந்த வழியா நடந்து வந்தார். அவரைப் பார்த்து அவனுக கையெடுத்து
கும்பிட்டானுங்க. பதிலுக்கு அவரும் கும்பிட்டார். கண் இமைக்கிற நேரத்தில அவரை நெருங்குனவங்க, சினிமா கணக்கா சட்டுபுட்டுனு அரிவாளை எடுத்து கழுத்தை அறுத்துப் போட்டுட்டு வண்டியை கௌப்பிட்டாய்ங்க. என்னையை கிராஸ் பண்ணுற சமயம், 'கெழவனை முடிச்சுட்டோம்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிருவோம்டா’னு ஒருத்தன் சொன்னது என் காதுல விழுந்துச்சு. அவங்க போனதுமே பதறிக்கிட்டு ஓடிப்போயி பார்த்தேன். வெட்டுப் பட்டுக்கிடந்தது 'தா'வன்னா கிருஷ்ணன்னு அப்பத்தான் தெரிஞ்சுது. தொண்டைக்கும் நெஞ்சுக் குமா இழுத்துக்கிட்டு இருந்தவரை தூக்குறதுக்கு முயற்சி செஞ்சேன் என்னால முடியல.
அப்ப, எனக்குத் தெரிஞ்ச அந்த ஏரியா பால்காரர் வந்தாரு. 'அண்ணே... ஒரு கை போடுங்க; இவரை தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துருவோம்’னு சொன்னேன். 'டேய்... என்ன காரியம் நடந்துருக்கு! நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு சொல்லி என்னைய அதட்டுனார். அப்புறம்தான் எனக்கே சீரியஸ்னஸ் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் அந்த இடத்துல நிக்காம வீட்டுக்கு வந்துட்டேன். விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட, 'நான் பார்த்ததை சொல்றேன். ஆனா, என்னைய சாட்சியாப் போடாதீங்க; எனக்கும் குடும்பம் குட்டி இருக்கு’ன்னு சொன்னேன். அதையும் மீறி என்னைய சாட்சியாக்கி ரகசிய வாக்குமூலம் கொடுக்க வெச்சாங்க. அதுல இருந்தே எனக்குப் பிரச்னைதான்'' என்று பழைய சம்பவங்களைச் சொன்னவர்... அடுத்து நடந்ததாக சில சம்பவங்களை விவரித்தார்.
''நான் சாட்சி சொல்லக்கூடாதுன்னு பல வழிகளிலும் மிரட்டுனவங்க, என்னோட கடைசிப் பையன் கபிலனைக் கடத்துற அளவுக்கு துணிஞ்சப்பத்தான் பதறித் துடிச்சிட்டேன். இது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னாடி நடந்தது. அப்ப கபிலனுக்கு மூன்றரை வயசு. வீட்டு வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டான். முதலில், தா.கி. வழக்கில் அழகிரிக்காக ஆஜரானவரும், ஆட்சி மாறியதும் அரசு வக்கீலாகவும் இருந்த மோகன்குமார் கொஞ்ச நேரத்தில எனக்கு போன் பண்ணி, 'உம் புள்ளயைத் தேட வேண்டாம்; பத்திரமா இருக்கான்’னு சொன்னார். ஒருநாள் முழுக்க நாங்க நெருப்புல விழுந்தாப்புல தவிச்சோம்.
மறுநாள் காலையில, அவரே காருல என்னைய ஏத்திக்கிட்டு தி.மு.க. முக்கியப் புள்ளியோட வீட்டுக்கு போனார். தா.கி. வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் அங்க இருந்தாங்க. அழகிரிக்கு வேண்டப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள் இரண்டு பேரும், ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தாங்க. அவங்க முன்னாடியே, 'மோகன்குமார் சொல்றபடி நடந்துக்க’னு முக்கியப் புள்ளி மிரட்டினார். 'நீங்க சொல்றதக் கேக்குறேன்; எம் புள்ளயக் குடுத்து ருங்க’னு கதறுனேன். அதுக்கப்புறம்தான் கபிலனைக் கண்ணுல காட்டுனாங்க.
அப்புறமும் என்னை விடலை. சித்தூர் கோர்ட்டுக்கு நான் சாட்சி சொல்லப் போறதுக்கு மூணு நாள் முன்கூட்டியே என்னையும் என் மனைவி மக்களையும் அவங்க கஸ்டடிக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களை அவசரமா மதுரை ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயி, சென்னைக்கு ஃபிளைட் ஏத்திட்டாங்க. சென்னை ஏர்போர்ட்டுல இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் எங்களை ரிஸீவ் பண்ணி இம்பாலா ஹோட்டல்ல தங்க வெச்சார்.
அங்கருந்து சித்தூருக்கு ஏ.ஸி. கார்ல கூட்டிட்டுப் போயி, சித்தூர் கோர்ட்டுக்கு எதிர்லயே காஸ்ட்லி ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. அப்ப எங்களை சந்திச்ச மதுரை போலீஸ் ஆட்கள், 'இவனுக உங்க அம்மாவையே (ஜெயலலிதா) படாதபாடு படுத்துறானுங்க. உனக்கு எதுக்கு பொல்லாப்பு? பேசாம, 'எனக்கு எதுவும் தெரியாது’னு சொல்லிட்டுப் போயிக் கிட்டே இரு’ன்னாங்க. குடும்பத்தைக் பணயம் ஆக்கி மிரட்டுனதால, நானும் அவங்க சொன்னபடியே மனசாட்சியை ஒதுக்கி வெச்சிட்டு பிறழ் சாட்சியம் சொல் லிட்டு வந்துட்டேன். வரும்போதும் அதே மாதிரி ஃப்ளைட்ல எங்களை மதுரைக்கு அனுப்பி வெச்சாங்க.
அத்தோட முடிஞ்சிடுச்சினுதான் நெனச்சேன். ஆனா, 'தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்போம்’னு அம்மா சொன்னதும்தான் எனக்கு புது தைரியமும் தெம்பும் வந்துச்சு. அப்புறம்தான் கடந்த ஜூலை மாதம் அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். நான் எழுதுன கடிதம் உடனடியாக மதுரை போலீஸுக்கு வந்து, துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவிக் கமிஷனர் வெள்ளத்துரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்கிட்டயும் மனைவி மற்றும் மகனிடமும் விசாரிச்சாங்க. அம்மா ஆட்சியில் தா.கி. கொலை வழக்கை மறுவிசாரணை நடத்தினால், யாருக்கும் பயப்படாமல் கூண்டில் ஏறி உண்மையைச் சொல்வேன்'' என்றார்.
இவரது அதிரடி குற்றச்சாட்டு குறித்து, அழகிரிக்காக ஆஜராகும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, ''சித்தூர் கோர்ட்டில் வழக்கு நடந்த நேரத்தில் நான் அரசு வழக்கறிஞராக இருந்ததால், அந்த வழக்கை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த பிரபாகர் ஒரு டூப் மாஸ்டர். அந்தாளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை நான் எனது காரில் அழைத்துச் சென்றதாக சொல்வது, அவரது மகன் தொடர்பாக நான் போனில் பேசியதாகச் சொல்லி இருக்கும் விஷயங்கள் உள்பட அனைத்துமே அக்மார்க் பொய். அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது இப்படியரு புகார் கொடுக்க வைக்கப்பட்டிருக்கிறார் பிரபாகர். புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை போலீஸ் தாராளமாக விசாரித்துப் பார்க்கட்டும்'' என்று சொன்னார்.
மதுரை அரசு வழக்கறிஞரும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளருமான தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ''தா.கி. கொலை வழக்கில் முக்கியமான 20 சாட்சிகளை விசாரிக்கவே இல்லை கோர்ட். 'அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை’ என்று வி.ஏ.ஓ. மூலமாக சான்றளிக்க வைத்து சித்தூர் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறது, அப்போது வழக்கை கவனித்த போலீஸ். தா.கி-யின் மனைவி பத்மாவதி யையே கண்டுபிடிக்க முடியவில்லை என்று எழுதி இருக்காங்க! முக்கிய சாட்சியான பிரபாகரின் மனைவி, குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி நடந்தால் மட்டுமே தானும் தன்னுடைய குடும்பமும் பத்திரமாய் இருக்க முடியும் என்பதால் பிரபாகர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். தா.கி. வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானது'' என்று சொன்னார்.
போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக் கரசுவோ, ''தனக்கு எதுவும் தெரியாது என நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்துவிட்டு வந்து இப்போது, 'மிரட்டப்பட்டதால் தான் அப்படிச் சொன்னேன்’ என்கிறார் பிரபாகர். இதை வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து சட்ட நுணுக்கங்களைப் பார்க் கணும். விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்'' என்கிறார்.
போலீஸ் வட்டாரத்திலோ, ''பிரபாகரின் மகனைக் கடத்தியவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லாம்’ என்று ஸ்டேட் பி.பி. ஒப்பீனியன் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. அதன் பேரில் நடவ டிக்கை எடுத்தால் அழகிரிக்கே பிரச்னை வரலாம். எங்கள் அதிகாரிகள் தயங்குவதுதான் எங்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது'' என்கிறார்கள். ஆக, எட்டு ஆண்டுகளை கடந்தும் படபடத்துக் கொண்டே இருக்கிறது தா.கி. கொலை வழக்கு!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதன் பெயர் தான் அராஜகம் என்பதா ? கொடுமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1