புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Manimegala
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
420 Posts - 48%
heezulia
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:22 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


1. கேள்விகளே சாவிகள்!

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:23 pm

23. தடங்கலுக்கு மகிழ்கிறோம்!

அகில இந்திய வானொலி செல்வாக்காக இருந்தது ஒரு காலம். அப்போதும் அடிக்கடி மின்தடங்கல் ஏற்பட்டு, "தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருப்பார்கள்.

வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்குத் திருமணம் செய்ய வேண்டி ஒரு நண்பர் வீட்டில் பெண் கேட்டோம். பெண் மறுத்துவிட்டாள். ""தடங்கலுக்கு வருந்துகிறோம்'' என்று அடிக்கடி வருந்துகிற மாப்பிள்ளை வருந்தி வருந்தியே இளைத்துவிடுவார் என்று பெண் கிண்டலடித்தாள்.

தடங்கலுக்கு வருந்தும் வியாதி வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கும் தொற்றிக் கொண்டது. நல்ல வேளை... இப்போதெல்லாம் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதோடு சரி... வருந்துவது இல்லை.

வாழ்க!

தடங்கலுக்கு வருந்த என்ன இருக்கிறது?

தடைகள் வெற்றியின் புதையல். தடங்கல் வெற்றியின் தடங்கள்.

அண்மையில் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரிப் பேரவை விழாவில் பேசிக்கொண்டிருந்தேன். வெற்றிகரமான என் உரையை மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஒரு தடங்கல். பொறியியல் கல்லூரிகளை எல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் ஆய்வுப் பணிக்காக அதன் துணைவேந்தர் திடீரென்று கல்லூரிக்கு வந்துவிட்டார். என் பேச்சை இடையில் நிறுத்தி, அவர் பேசிவிட்டுப் புறப்பட வேண்டும்.
என் பேச்சை இடையில் நிறுத்தும் எண்ணம் யாருக்குமே ஏற்பட முடியாது. என்றாலும் தவிர்க்க முடியாத நிலையில் ஒரு பேராசிரியர் தயங்கித் தயங்கி என்னிடம் மிக்க மரியாதையுடன் விஷயத்தை விளக்கினார். உணர்ச்சிமயமான பேச்சை இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்குவது உண்மையில் படு சிரமமான விஷயம். என்றாலும் துணைவேந்தரைக் காக்க வைப்பதும் தவிர்ப்பதும் கல்லூரிக்குக் கவலையளிக்கும் பிரச்சினை.

மாணவர்கள் நன்மை கருதி, துணைவேந்தரை இடையில் பேச அனுமதிப்பது என்று தீர்மானித்தேன்.

மாணவர்களைப் பார்த்து, ""துணைவேந்தர் இப்போது பேச வந்துள்ளார். எமது நிகழ்ச்சியின் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று சொல்லமாட்டேன்... உங்களுக்கு நன்மை செய்ய அவர் வந்திருப்பதால் தடங்கலுக்கு மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றேன்.
மாணவர்களின் கரவொலி வெற்றி முரசாக ஒலித்தது.

இன்னும் உயர்ந்த விஷயம் சொல்கிறேன்.

இயேசு பிரான் தமது இறைச்செய்தியை வழங்க நினைத்தபோது அது எளிமையாக முடிந்ததா? தடங்கல் வரவில்லையா? தச்சன் ஜோசப்பின் அதிகப்பிரசங்கி மகனாக அல்லவா உலகம் அவரை அடையாளம் கண்டது! முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு முள்மகுடம் அல்லவா வைத்தது!
மறந்துவிடாதீர்கள்... சிலுவையில் அறைந்ததால்தான் இயேசு இன்னமும் ஜீவிக்கிறார்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:24 pm

மிகச் சுலபமாக அவர் மதம் பரவியிருந்தால் கடவுள் பெயரால் வயிறு வளர்த்த சமயச் சொற்பொழிவாளனாக அந்த மரியாளின் மகன் மரித்திருத்துப்பார்.
கவனத்தில் வையுங்கள். தடைகள் வெற்றியின் புதையல். தடங்கல் வெற்றியின் தடங்கள்.

ஸல் அல்லாஹு ஸல்லம் நபிகள் நாயகம் மூலம் திருமறை தரையிறங்கியது. உலகு உடனே ஒப்புக்கொண்டதா? மெக்காவில் இருந்து மதீனா வரை அவரை ஓடவிட்டதே..! ஆனால் இன்றைக்கு... உலகமே அவர்களது புனித பூமியை நோக்கி ஓடுகிறதே!

கவனத்தில் வையுங்கள், தடைகள் தடைகளே அல்ல... தடங்கல் வெற்றியின் தடங்கள்.

கந்த புராணத்தைக் கச்சியப்பர் அரங்கேற்றியபோது இலக்கண விளக்கம் கேட்டு அரங்கேற்றத்தையே ஒரு தமிழ்ப் புலவர் தடுத்தார். ஆனால் முருகனே முன்வந்து விளக்கம் கூறியதால் கந்த புராணம் தமிழகம் எங்கும் தழைக்கத் தொடங்கியது.
கவனத்தில் வையுங்கள்... தடைகள் தடைகளே அல்ல... வெற்றியின் புதையல்.

ஒரு கதை சொல்லட்டுமா..?

அவர் ஒரு விசித்திரமான அரசர். தம் மக்களைப் பற்றியே எப்போதும் கவலை அவருக்கு! மக்கள் அதிகமாகக் கடந்து போகும் மலைப் பாதையின் குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்தார். அந்த வழியில் பயணப்பட்ட பலர் கல்லைக் கண்டு எரிச்சல்பட்டார்கள். சிலர் வெகுதூரம் ஒதுங்கி வேறு வழியாகப் பயணப்பட்டார்கள். சிலர் ராஜாவை வெகுவாகத் திட்டினார்கள்.

""என்ன அரசாங்கம்! பொறுப்பற்ற அரசு அதிகாரிகள்... மக்களுக்கு இடையூறு உள்ளதே... நீக்க வேண்டாமா?'' என்று புலம்பினார்கள்.
சிலர் சிரமப்பட்டுப் பாறாங்கல் மேல் ஏறி இறங்கி அவர்களாகவே ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் ஒருவருக்குக்கூடப் பாறாங்கல்லைப் பாதையைவிட்டு நகர்த்த வேண்டும் என்று தோன்றவில்லை. பலரோ, பாறாங்கல்லைப் பார்த்ததும் பயணம் தடைப்பட்டது என்று பயணத்தையே நிறுத்திவிட்டு, பாறாங்கல்லை நகர்த்திய பிறகு பயணப்படலாம் என்று சாலை ஓரத்தில் படுத்துவிட்டார்கள்.
ஆவேசமாக அங்கு வந்த இளைஞன் ஒருவன் மட்டும் அந்தக் கல்லை நகர்த்த முயற்சி செய்தான். பலர் பரிகசித்தார்கள். சிலர் ராஜதண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார்கள். வெகுசிலர் உதவிக்கு வந்துவிட்டு, நம்மால் முடியாது என்று கைவிட்டனர். அவன் விடாப்பிடியாகப் போரடினான். கல் நகர்ந்தது. கல்லைச் சரிவில் உருட்டினான். கல்லுக்குக் கீழே ஒரு கடிதமும் பையும் இருந்தன.

"இந்தக் கல்லை யார் நகர்த்துகிறார்களோ அவர்களுக்கு அரசரின் அன்பளிப்பு ஆயிரம் பொன்' என்று இருந்தது!

கவனத்தில் வையுங்கள்... ஒவ்வொரு தடங்கலிலும் ஒரு புதையல் ஒளிந்திருக்கிறது. தேடி எடுத்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:25 pm


24. மரமா! மனிதனா?


கோபத்தில் திட்டுகிறபோது, ""ஏன் இப்படி மாடு மாதிரி நிக்கறே!'', ""மரம் மாதிரி வளர்ந்துட்டே!'' என்று ஏசுகிறோம். இது சரிதானா? இயற்கையையும், பிற உயிர்களையும் தகுதியற்ற மனிதனோடு ஒப்பிட்டுப் பேசுவது அநீதி அல்லவா?

காரணம்... மாடு இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய் விலை போகிறது. இவன் போவானா?

மரம் நிழல் தரும்... காய் தரும்... கனி தரும்... செத்தாலும் விறகாக தன்னையே தரும். ஆனால் இந்த மனிதன் செத்தாலும் தானாக எரியமாட்டான். கொஞ்சம் விறகு (மரம்) வைத்துதான் எரிக்க வேண்டியுள்ளது.

எனவே மரம் போல, மாடு போல என்று மனிதனைத் தாழ்த்துவதாக நினைத்துப் படைப்பைத் தாழ்த்தக் கூடாது.

எனக்கு இந்தக் கோபம் எப்போது ஏற்பட்டது தெரியுமா? திருக்குறள் படிக்கும்போது திருவள்ளுவர் மீது ஏற்பட்டது. உரம் என்கிற ஊக்கம் இல்லாத ஒருவனை மரம் என்று திட்டுகிறார் திருவள்ளுவர்.

"உரம் ஒருவனுக்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு' என்பது குறள்.

ஒருவருக்கு ஊக்கம் மிகுதியே வலிமையாவது. அவ்வூக்கம் இல்லாதார் மக்களாகார். மரங்கள் ஆவார் (வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களில் இருந்து வேறுபட்ட தன்மையாகும்) என்பது பொழிப்புரை.

ஊக்கம் இல்லாத மனிதனை மரம் என்கிறார் வள்ளுவர்.
நியாயமா?
கண்டிப்பாக நியாயம் இல்லை!
ஏன்?
மரம்கூட உயிர் வாழ வேண்டும், உயர வேண்டும் என்ற வேட்கையும் முயற்சியும் ஆவேசமும் உடையது! அதுவும் இல்லாத மனிதனை மரம் என்று எப்படிச் சொல்லலாம்?

எல்லா மரமும் ஒளியை நோக்கியே தன் பயணத்தைத் தொடங்கும். எப்படியாவது வெளிச்சத்தில் பிரவேசிக்க ஏங்கும் தாவர தர்மம்கூட இன்றி இருட்டில் புதைய விரும்பும் மனிதன் மரமா? மரத்தைவிட மட்டமா?

மாமரத்தின் ஒரு கிளையை எப்போதாவது முறித்தது உண்டா? அப்படி முறித்தால் மாமரம் மெüனமாக உங்கள் அழிப்பை ஆமோதித்தது உண்டா? எங்கு முறித்தீர்களோ அதன் அடிப்பகுதியில் இருந்து பத்துப் பதினைந்து கிளைகளாக ஆவேசமாக எட்டிப் பார்க்கும் தாவர அகங்காரத்தை நீங்கள் தரிசித்தது உண்டா?
""படவா... என் ஒரு கிளையையா முறித்தாய்... பார்... பார்... பத்துக் கிளையாய்ப் படந்து பரப்பி நான் தழைத்து நிற்கிறேன் பார்'' என்று காற்றில் தலையாட்டும் மாமரத்தின் மமகாரம் மகத்துவம் மிக்கது!

பலமற்ற மரம் முருங்கை. ஆடிக் காற்று ஆட்டிப் பார்ப்பது மட்டுமல்ல, அடியோடு அதை வீழ்த்தி விளையாடும். மொளுக்கென்று முறியும் முருங்கைக்குக்கூட மூர்க்கம் உண்டு. கவனித்தது உண்டா? வெட்டி எறிந்த வெற்றுத் துண்டுகூட வேர்விடத் துடிக்கும். தளிர்களை விரிக்கும். விருட்டென்று எழுந்து விருட்சமாய் விஸ்வரூபம் காட்டும். மாமரம் வெட்டிய இடத்தில் முளைக்கிறது! முருங்கையோ வெட்டி எறிந்த துண்டுகூட தழைக்கிறது!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:25 pm

வாழ வேண்டும் என்கிற வைராக்கியம், வெறி, வேகம் மரத்திற்கு இருக்கிறதே! எத்தனை மனிதருக்கு இருக்கிறது?

ஆஸ்திரேலியக் காடுகளில் ஒருவகைப் புல் மரம் இருக்கிறது. புல் மரமா? ஆம் புல் மரம்! கொடிய தீ பரவிக் காட்டையே அழித்தாலும், அத்தனை மரங்களும் செத்து விழுந்தாலும் தான் மட்டும் அழிவதில்லை... அந்தப் புல் மரம். மேல் பகுதி கருகினாலும் அதன் குருத்து மட்டும் அழிவதே இல்லை. என்றாவது மழை பெய்ததும் குருத்து கிளம்பும். தாவரம் சிலிர்க்கும்... புல் மரம் புத்துயிர் பெற்றுப் பூரித்து நிற்கும்!

எத்தனை மனிதர்களால் இப்படிச் சிலிர்க்க முடிகிறது? இந்த மரங்கள் என்ன மனிதனைவிட மட்டமா?
வாழ வேண்டும் என்கிற வைராக்கியம், ஆவேசம் மரம் நடத்தும் மகத்தான பாடம். இந்த உயர்ந்த மரங்களை ஊக்கம் இல்லாத மனிதனோடு வள்ளுவர் ஒப்புமை காட்டி விட்டாரே! வள்ளுவரை மறுக்கலாமா? ஏன் மறுக்கக் கூடாது?

ஒரு மருத்துவமனையில் இருந்து இறந்து போனவர்களின் பிணங்களை போஸ்ட் மார்ட்டம் செய்துவிட்டு வேனில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். பாதி வழியில் ஒரு பிணம் எழுந்து உட்கார்ந்தது! டிரைவர் தோளைத் தட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டது! டிரைவர் அலட்சியமாக, ""செத்தவனுக்கு எதுக்குத் தண்ணீர்? பேசாமப் படு'' என்றார். பிணம் அலறியது... ""ஐயா... நான் சாகவில்லை. உயிரோடு இருக்கிறேன்'' என்றது. டிரைவர் அலட்சியமாக, ""எவ்வளவு பெரிய டாக்டர் அவரு... அவரே சொல்லிட்டார் செத்துட்டே அப்படீன்னு... அவரு சொன்னால் சொன்னதுதான். நீ உயிரோடு இருக்கேன்னு சொன்னால் நம்புவோமா?'' என்றார்.
இந்தக் கதை மாதிரி வள்ளுவர் சொன்னால் சொன்னதுதான் என்று சாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.

அழிப்பை எதிர்க்கும் ஆவேசத்தை மரங்களிடம் இருந்து படியுங்கள்..! ஒரு மரத்துக்கு இருக்கும் ஊக்கம் உங்களுக்கு இருக்குமென்றால் வெற்றி நிச்சயம்.

மாமுனிவன் வள்ளுவன் எதிர்பார்க்கும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் வெற்றி சர்வ நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:26 pm


25. விஞ்ஞானி ஆன வேலைக்காரி!


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே போகவேண்டுமென்றால் இப்போதெல்லாம் யாரிடம் விடுகிறார்கள்? பாட்டி, தாத்தாவிடமா? இல்லை. பட்டணத்து வீடுகளில் பாட்டி, தாத்தாக்களுக்கு விஸô கிடைப்பது கஷ்டம். வீடு கடத்தப்படுவார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள "கிரெச்' வந்துவிட்டது. சில பெற்றோர்கள் தனி நபர்களைச் சம்பளத்துக்கு நியமிக்கிறார்கள். சென்னையில் அந்தப் பெண்மணிகளின் செல்லப் பெயர் "ஆயா'.
கணவனும் மனைவியும் "ஹாயா'க இருக்க வீட்டில் பிள்ளைகளைப் பேணும் பெண்மணியின் பெயர் ஆயா..!

பிரான்ஸ் நாட்டில் இப்படிப்பட்ட ஆயா ஒருத்தி உலகப் புகழ் பெற்றாள். மறக்க முடியாத மாமனிதர் பட்டியலில் இடம் பெற்றாள். சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதித்துக் காட்டினாள். யார் அவள்? மேரி... தெரியவில்லையா? இன்னும் கொஞ்சம் சொன்னால், ஆம்... ஆம்... என்று தலையாட்டுவீர்கள்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு பணக்கார வீட்டில் குழந்தைகளைப் பேணும் (பேபி சிட்டர்) ஆக வேலைக்குச் சேர்ந்தாள் மேரி. பதினெட்டு வயது நிரம்பிய அழகிய பெண். அன்பு ததும்ப தன் பணிகளைப் புரிந்த அவள் மீது அந்த வீட்டின் மூத்த மகனுக்குக் காதல் அரும்பியது. அவ்வளவுதான். அந்தப் பையனின் பாணக்கார அப்பா நம்மூர் பண்ணையார்கள் பாணியில் ஆடித் தீர்த்துவிட்டார்.

கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் அந்தக் குடும்பத்துக்கு மருமகளாய், அடுத்த வீட்டில் சாப்பாட்டுக்குக் கையேந்தும் மேரி எப்படிக் குடியேற முடியும் என்று அவமானப்படுத்தினார். கேவலப்படுத்தினார். வீட்டை விட்டு வெளியேறினாள் மேரி. பாரீஸýக்கு வந்தாள். தனது நெடுநாள் கனவுகளுடன் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தீவிரமாகத் தொடங்கினாள். அவமானம் அவளை வீறு கொண்டு எழச் செய்தது. சாதிக்கும் வெறி அவளுள் ஊதி ஊதி உலை வைத்தது. உலகமே வியக்கும் யுரேனியக் கதிர் வீச்சைக் கண்டறிந்தாள். புற்று நோய்க்கான முறிப்புச் சக்தியை யுரேனியக் கதிர் வீச்சில் கண்டறிந்து முன்
வைத்தாள். நோபல் பரிசு பெற்றாள். நினைத்தபடி தான் காதலித்த அந்தப் பணக்கார வாலிபனைக் கைப் பிடித்து உலகப் புகழ் பெற்றாள். யார் அவர்? மேடம் மேரி க்யூரி அம்மையார்! ""

ஜாதகம் சரியாக இருந்தால் சாதிப்பேன்... சாதகமாகப் பலர் இருந்தால் சாதிப்பேன்'' என்று நழுவாது விடாமுயற்சி செய்து வெற்றி பெற்றார், மேடம் க்யூரி. நீங்கள் எப்படி?

ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தமது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்த சோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்..? தோல்வி... தோல்வி... எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி! மேலும் மேலும் அவமானப்பட அவரால் முடியவில்லை. பல முறை முயன்றும் தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்தபடியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஓர் ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.

வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி. தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் எட்டுக் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை... தனது உணவுகளைப் பிடிக்கும் படைக்கான அணிவகுப்பை... வலைப் பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது சிலந்தி. வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:26 pm

மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும்போது, காரிய சாதனை செய்யும்போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது. போரைச் சந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது!

முடியாது... என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் ஒதுங்கலாமா? அவமானப்படுத்தப்பட்ட மேரி... அங்கீகரிக்கப்பட்ட
மேடம் மேரி க்யூரி ஆகவில்லையா? நீங்கள் அப்படி ஆக முடியாதா? முடியும்... முடியும்... உங்களால் முடியும். அதற்கு என்ன வேண்டும்? முயற்சி வேண்டும்.
தமிழ்க் கிழவன் வள்ளுவன் சொன்னது தெரியுமா?

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்' என்றார். (குறள் - 611).

தமிழ்நாட்டுப் புலவர்கள் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை எழுதினார்கள். பிரான்ஸ் நாட்டு மேடம் க்யூரியும் ஸ்காட்லாந்து புரூஸýம் வாழ்வுரை வழங்கினார்கள். உங்கள் அபிப்ராயம் எப்படி? பொழிப்புரை எழுதி இரண்டு மதிப்பெண் பெற்றால் போதாது... வாழ்வுரை எழுதி வளமை சேருங்கள். வாழ்ந்து காட்டுங்கள். முடியாது...

முடியாது என்று ஒதுங்காமல், முடியும்... முடியும்... என்று முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக