புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:22 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


1. கேள்விகளே சாவிகள்!

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:42 pm

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது... குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலை வைத்துப் படுத்திருந்தார். ஒருத்தி, ""யாரோ மகான்'' என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள். மற்றொருத்தியோ, ""ஆமாம்... ஆமாம்... இவரு பெரிய சாமியாருக்கும்... தலையணை வைச்சுத் தூங்கற சுகம் மாதிரி வரப்பு மேல தலை வைச்சுத் தூங்கறான் பாரு... ஆசை பிடிச்சவன்'' என்று கடுஞ்சொல் வீசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், ""ஆஹா... நமக்கு இந்த அறிவு இது நாள்வரை இல்லையே'' என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து இறங்கிக் கீழே தலை வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, ""பார்த்தியாடி... நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு... இப்பவாவது ஒத்துக்கோ... இவரு மகான்தானே..!'' என்றாள்.
அவளோ, ""அடி போடி... இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறான்... அதைப் பத்திக் கவலைப்படறான் இவனெல்லாம் ஒரு சாமியாரா?'' என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை.

தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:43 pm

17.வெறி முதல் வெற்றி வரை!

"டேய்... வேலை விஷயமா எம்.பி.யைப் பார்த்துட்டு வான்னு சொல்றேன். போகலயா?' அப்பா அலறுகிறார்.
""போப்பா... அந்த ஆள் நூறு தடவை அலைய விடறான். செய்யறதா இருந்தா முதல் தடவையிலயே செய்யமாட்டானா?'' பொருமுகிறான் மகன். ஒரு விஷயத்திற்காக ஒருவரிடம் மூன்று, நான்கு முறை போக நேர்ந்தால் இன்றைய இளைஞர்களுக்குக் கடுப்பாக இருக்கிறது. உண்மைதானே!

எந்த விஷயமும் எடுத்த எடுப்பிலேயே, முதல் முயற்சியிலேயே வெற்றியாகி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் குழந்தைத்தனமானது. மீண்டும் மீண்டும் முயலும் விக்ரமாதித்த முயற்சியே இளமையின் இலக்கணம். அது இல்லாத இளைஞர்கள் மீசை முளைத்த பாப்பாக்கள். தாடி மழித்த குழந்தைகள். ""நான் முயற்சி செய்தேன். வெற்றி கிடைக்கவில்லை'' என்று சொல்லாதீர்கள். வெற்றி பெறும்வரை முயற்சி செய்தீர்களா? வெற்றி பெறும் வரை ஏன் நீங்கள் முயற்சி செய்யவில்லை? என் கேள்விக்குப் பதில் சொல்லிப் பாருங்கள்.

முயற்சி போதாது. விடாமுயற்சி வேண்டும். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது. மாறி மாறி முயன்றால்தான் நடக்காததும் நடக்கும்... கிடைக்காததும் கிடைக்கும். எனவே முதல் முயற்சியில் வெற்றியில்லை என்று வெளியேறி விடாதீர்கள். வெற்றி கிடைக்கும்வரை முயன்றுகொண்டே இருங்கள்.
தமிழக வரலாற்றில் புரட்சிச் சாமியார் ஒருவர் இருந்திருக்கிறார். இராமானுஜர் என்று பெயர். அவருக்குத் திருக்கோட்டியூர் நம்பி என்பவர் ஒரு குரு. அவரிடம் "நமோ நாராயணா' என்கிற மந்திர அர்த்தத்தைப் பெற முதல் முறை போனார். ""பிறகு பார்க்கலாம்'' என்றார். ஒரு முறை... இருமுறையல்ல... பதினெட்டு முறை நடந்தார். உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் பதினெட்டு முறை படையெடுப்பீர்களா? ""ஆமாம்... இவன் பெரிய இதுவாக்கும்'' என்று அவரை அலட்சியப்படுத்துவீர்கள். ""இந்த விஷயம் இல்லைன்னா என்ன? என்னால வாழ முடியாதா? இதென்ன அவ்வளவு பெரிய விஷயமா?'' என்று இலட்சியத்தையே காலில் போட்டு மிதிப்பீர்கள். பதினெட்டு முறை படையெடுக்கும் ஆர்வம், ஆவேசம், வெறி, தீர்மானம் உங்களிடம் உண்டா? உண்டு என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

அந்தத் திருக்கோட்டியூர் நம்பி மனசைக் கரைக்கச் சாகும்வரை உண்ணுவதில்லை என்று சாதனை செய்தார் இராமானுஜர். அவர் இறந்துவிடுவாரோ என்று அஞ்சி குருவிடம் பலர் போய் தகவல் தந்தனர். ""செத்து மேலே போனால் நாராயணனே மந்திரம் சொல்வார். தப்பி உயிர்பிழைத்தால் நான் சொல்லுவேன்'' என்று உறுதி காத்தார் குருநாதர். முடிவில் மனமிரங்கி உபதேசித்தார். இராமானுஜர் வெற்றி பெற்றார். ஒன்றும் வேண்டாம் என்று உதறிவிட்டுப் போன ஒரு சாமியாருக்குள் இவ்வளவு பிடிவாதம், உறுதி, வெறி இருக்கிறதே... எல்லாம் வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுக்குள் உறுதி, வெறி ஏன் இல்லை? இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஜெயிப்பது நிஜம். ஒன்றை அடையும் வரை ஓயாதீர்கள். பின்வாங்காதீர்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்'... யார்? "திண்ணியர்' என்கிறார் திருவள்ளுவர். நீங்கள் திண்ணியரா?

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:44 pm

"என்ன சார்... ஒரே சாமியார் சமாச்சாரமாகச் சொல்றீங்களே... வேறு யாரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?' என்னைக் கேட்கச் சிலர் நினைப்பது புரிகிறது. சக்ஸஸ்புல் சாமியார்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள் வேண்டுமளவு புதைந்திருக்கும். புரிகிறதா? இதைப் புரிந்து கொண்டதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்!

சரி... உங்களுக்காக ஒரு இன்னொருவர் - இல்லத்தார் - வெற்றிக் கதையைச் சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினான் அந்த இளைஞன். தோற்றுப்போனான். மாகாண சட்டசபைக்குப் போட்டியிட்டான். மண்ணைக் கவ்வினான். தொழிலிலும் தோல்வி. காதலியும் மறைந்தாள்... அவன் அசரவேயில்லை. நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது. போராடி மீண்டு மறுபடியும் தேர்தலில் குதித்தான். தோல்விதான் அவனைத் தழுவியது. முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. பின்னர் மக்கள் மன்றத் தேர்தலிலும் தோல்வி. நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி மேல் தோல்வி. ஆனால் 52-வது வயதில் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தான். வெற்றி அவனை முத்தமிட்டது. அதன் பிறகு அவன் புகழ் உலகெங்கும் பரவியது. அவன் தொட்டது

துலங்கியது. அவனது பெயரை உலகில் உள்ள எல்லா நாடுகளின் வரலாற்று ஆசிரியர்களும் உச்சரித்தனர். உலக வரலாற்றிலேயே அவனுக்கென்று ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டது. அவன் பெயர்... மன்னிக்கவும்... அந்த மாமனிதர் பெயர் ஆப்ரஹாம் லிங்கன். அவனுள் கனிந்த அக்கினி - ஆங்கிலத்தில் சொன்னால் அஎஞசவ - உங்களுக்குள் இருக்கிறது. தப்பில்லை. இந்த நியாயமான வெறி கனிந்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:45 pm

18. எது வெற்றி?

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.
இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை - பிறரது தோல்வியை - தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

இப்படிச் சொல்லுகிறேன். நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! ஓர் உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். ""அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?'' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ""அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு'' என்றார் மகளிடம். ""ஆங்... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?'' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இப்போது சொல்கிறேன். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது.
உடனே அம்மாவுக்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும்.


சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா?

கேட்டது கிடைப்பது வெற்றி. கொஞ்சம் முன் பின்னாகக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாதபடி சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு.

வளர்ந்த பிறகும் இந்தக் குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள்... முதலில் மறுத்துவிட்டுப் பிறகு மனம் மாறிக் கணவன் வாங்கிக் கொடுத்தால் கட்டமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் நோகச் செய்து தோற்கடிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைவார்கள்.
நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது? இன்று நமது அரசியல்வாதிகள் பிறரைத் தோற்கடிக்கவே, தேர்தல், பாராளுமன்றம், சட்டமன்றம் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
அதனால்தான் பகை வளர்கிறது. தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:48 pm

19. பிடிவாதம் வெற்றியின் அடிநாதம்!

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளோ பிடிவாதம் பிடிக்கும். எனக்கென்னவோ பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ரொம்பவும் பிடிக்கும். ஏன்? வெற்றி என்பது ஒரு கீதம். இந்தப் பிடிவாதம், வெற்றியின் அடிநாதம். பிடிவாதம் ஒரு தவறான குணம் அல்ல. எதற்காகப் பிடிவாதம் என்பதுதான் முக்கியமான விஷயம்.

இந்தியாவில் பிரபலமான துருவன் கதை தெரியுமா? அப்பாவின் மடியில் உட்காரப் போனான் குழந்தை. பிடித்துத் தள்ளினாள் சித்தி. அழுது கொண்டே அம்மாவிடம் போனான் துருவன். "கடவுளிடம் போய் முறையிடு' என்று கடவுளிடம் கை கழுவினாள் கையாலாகாத அம்மா. பிடி பிடி என்று கடவுளையே பிடிக்கிற பிடிவாதம் அந்தப் பிள்ளைக்கு இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிற குழந்தையின் கன்னத்தைத் தன் சங்கினால் தட்டி எழுப்பினான் திருமால் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். அப்பாவின் மடியில் இடம் கேட்ட குழந்தை ஆண்டவன் மடியில் உட்கார்ந்து கொண்டான் என்கிறது கதை. இந்தக் கதையில் திருமாலின் கருணையைச் சிலாகிப்பது சமயச் சொற்பொழிவு. துருவனுடைய பிடிவாதத்தைக் கொண்டாடுவது சுய முன்னேற்றச் சிந்தனை. இரண்டையும் இரண்டு கண்களாகப் பார்ப்பது எனது லட்சியம்.

பிரகலாதன் சரித்திரம் தெரியுமோ? ஆசிரியர் கண்டித்தும், அப்பா தண்டித்தும், அம்மாவே விஷம் கொடுத்தும், மலையில் இருந்து வீசியும் உருட்டியும் மிரட்டியும் பிரகலாதன் தன் கருத்தில் இருந்து இம்மியும் மாறவில்லை. இந்தப் பிரகலாதப் பிடிவாதம் உங்களுக்கு உண்டா? பிரகாசமான எதிர்காலம் உண்டு.
மழைக்காகப் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. எல்லோரும் வெறும் கையை வீசிக்கொண்டு வந்தனர். பிஞ்சுப் பிள்ளை மட்டும் கையில் குடையுடன் வந்தது. பிரார்த்தனை முடிந்ததும் மழை வரும் என்கிற அந்தப் பிஞ்சு மனத்தில் முளைவிட்ட நம்பிக்கை, கடவுளையே யோசிக்க வைத்தது. அவநம்பிக்கையுள்ள ஆயிரம் பேரைத் தண்டிப்பதை விட நம்பிக்கை உடைய குழந்தைக்காக மழை பெய்விப்பது தன் கடமை என்று கடவுள் புரிந்து கொண்டார்.

குழந்தைப் பருவம் என்பது வெறும் அசட்டுத்தனத்தின் அரங்கேற்ற மண்டபம் அல்ல. அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் ஆரம்பப் பருவம்... அது உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு வெற்றி நிச்சயம். "பெர்சீவியரென்ஸ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு எலும்பும் சதையுமான மொழிபெயர்ப்பாக நீங்கள் இருங்கள். வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வரும். ஒரு வேளை கதவு தாளிடப்பட்டிருந்தால் தள்ளிக் கொண்டு வந்து வெற்றி உங்களைத் தழுவிக் கொள்ளும்.

அவள் ஒரு எட்டு வயதுக் குழந்தை. அவளுக்கு ஒரு சின்னத் தம்பி. தம்பிக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்பது மட்டுமே அவளுக்குப் புரிந்து கொள்ளும் வயது. என்ன நோய்? எப்படிச் சரியாகும் என்பதெல்லாம் புரியமுடியாத பருவம். திடீரென்று அவள் குடியிருந்த வீட்டை விட்டு அம்மாவும் அப்பாவும் மிகச் சிறிய வீட்டுக்கு மாறினார்கள். தம்பியின் மருத்துவச் செலவு, மருந்துச் செலவு, உணவுச் செலவு இவற்றைச் சரிக்கட்ட பெற்றோர் வீடு மாற வேண்டி வந்தது. அந்தச் சின்னப் பையனைத் தக்க வைக்க ஆயிரம் ஆயிரமாய்க் கரைந்துகொண்டிருந்தது. இந்தக் கஷ்டம் அந்த எட்டு வயதுக் குழந்தைக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தனர்.

ஒரு நாள் பெற்றோர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த போது, ""ஏதாவது அதிசயம் அல்லது அற்புதம்தான் இந்தச் சின்னப் பையனைக் காப்பாற்ற வேண்டும்'' என்று அழுதனர். அடுத்த விநாடி அந்தச் சிறுமி தன் நெடுநாள் சேமிப்பு உண்டியலைக் கவிழ்த்தாள். ஒரு டாலர் ஏழு சென்ட் வரை சில்லறைக் காசு கிடைத்தது. அவசரமாக அதை அள்ளிக் கொண்டு வீட்டுப் பின் வாசல் வழியாக ஓடினாள். அடுத்த தெருவில் இருந்த மருந்துக் கடைக்குப் போய்ச் சில்லறையை மேசையில் கொட்டி, ""அற்புதம் கொடுங்கள்... அல்லது அதிசயம் கொடுங்கள்'' என்றாள்.

மருந்துக் கடைக்காரர் புரியாமல் விழித்தார். கடையில் ஏதோ வாங்க வந்திருந்த கனவான் ஒருவர் ஆச்சரியமாய் அந்தச் சிறுமியைக் கவனித்தார். முகம் வாடிப் போனவளைத் தேற்றி விவரம் கேட்டறிந்தார். உலகப் புகழ் பெற்ற நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சார்ட்லன் ஆர்ம்ஸ்ட்ராங் அவர். தனது காரில் அந்தச் சிறுமியை ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கு வந்தார். சிறுமியின் தம்பிக்கு நிகழ்த்த வேண்டிய அறுவைச் சிகிச்சையை உணர்ந்தார்.
அந்தச் சிறுமியிடம் ஒரு டாலர் ஒரு சென்ட் பெற்றுக் கொண்டு அந்த அறுவைச் சிகிச்சையைத் தமது மருத்துவ மனையில் இலவசமாக நடத்தினார். நம்ப முடிகிறதா?

பிள்ளைப் பருவத்தின் பிடிவாதத்தால் ஓர் அதிசயம் நடந்தேவிட்டது. அற்புதம் நிகழ்ந்தேவிட்டது. பிடிக்க வேண்டிய விஷயத்தில் பிடிவாதமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:50 pm


20. கறுப்பு நண்பர்களே, காலரை உயர்த்துங்கள்!


"ஆறே வாரத்தில் சிகப்பழகு' என்று ஒரு விளம்பரம் தொலைக்காட்சியில் மின்னுகிறது. இது காதில் பூ சுற்றுகிற வேலையானால்கூட மன்னிக்கலாம். இளைய மனசுகளில் தார் பூசுகிற அசிங்கம் இது.

"வெள்ளைக்காரன் ஒசத்தி' என்கிற பழைய இந்தியப் பிச்சைக்காரத்தனத்தின் மிச்சசொச்சம் இது. சிவப்பழகு ஒரு முக்கிய உயர்ந்த விஷயம் என்று மூளைச்சலவை செய்கிற எந்த விஷயத்தையும் விரட்டி அடியுங்கள். காரணம், "கறுப்பு தாழ்ந்ததல்ல' என்று இந்தியன் உணர வேண்டும்.
"கறுப்பாக இருக்கிறோம். இது தாழ்வானது' என்கிற அபிப்ராயத்தை மறைவாக உண்டுபண்ணும் இந்தக் கொடிய விளம்பரம் இளைஞர்களைப் பலவீனப்படுத்தும். கறுப்பு நிறம் வெட்கப்படவேண்டிய விஷயம் அல்ல.

காட்டிலும் மேட்டிலும் கழனிகளிலும் பாடுபடும் உழைக்கும் வர்க்கத்தின் தோல் கறுத்துப் போவது உழைப்பைப் பாராட்டிச் சூரியன் கொடுத்த பட்டமளிப்பு; அல்லது பாரம்பரியத்தின் பரிசளிப்பு. அது பழிக்கப்படும் என்றால், சூட்டிலும் கோட்டிலும் ஒளிந்து கொள்ளும் வெள்ளை கொண்டாடப்படும் என்றால் அதைச் சகித்துக் கொள்ளாதீர்கள்.

கறுப்பாக இருப்பது ஒரு பாவமல்ல... பழியல்ல... படுபாதகமான இழிவல்ல. பாரத கௌரவம். பாரம்பரியப் பண்பு.

வெள்ளைப் பணத்தைவிடக் கறுப்புப் பணத்தைக் கொஞ்சி மகிழும் இந்தியப் பொருளாதாரம் கறுப்பு நிறத்தை மட்டும் தாழ்வாக நினைப்பது தவறல்லவா? சலவைக்கல்லில் கிரானைட்டுகளில் ஜெட் பிளாக்தான் விலை அதிகம். சிலைகளில்கூடக் கறுப்புக் கல்லில்தான் கலை அதிகம்.
இந்தியத் தலைமகன் ராமன் கறுப்பு. கிருஷ்ணன் கறுப்பு. துரியோதனன் கனவிலும் நனவிலும் காமத்தை உண்டு பண்ணிய துருபதையோ கவர்ச்சிகரமான கறுப்பு. கிளியோபாட்ரா கறுப்புத்தானாம். அவ்வளவு ஏன்? "கன்னடத்துப் பைங்கிளி' என்று கலையுலகைக் கலக்கிய நடிகையும் கறுப்பு. அப்புறம் என்ன கறுப்பின் மீது வெறுப்பு.

கறுப்பு இந்தியனின் சராசரி நிறம். நாம் ஒரு சராசரி இந்திய நிறத்தில் இருக்கும்போது வெட்கப்பட என்ன இருக்கிறது. பெருமையல்லவா அடைய வேண்டும்.
கறுப்பு நண்பர்களே... காலரை உயர்த்துங்கள். கண்களில் ஒளி உமிழுங்கள். பகல் மட்டும் உலகிற்குப் போதாது. இருட்டும்தான் உலகை வாழ்விக்கிறது. வெள்ளை பகல் என்றால் கறுப்பு இருட்டல்லவா? கடவுள் குடியிருக்கும் கருவறையே இருட்டல்லவா? கம்பீரமாக நிமிர்ந்து உட்காருங்கள்.
நிறபேதம் உலகெங்கும் பரவிய நீச நோய்.

அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூட வாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டிருந்தான். தன் வியாபாரம் குறையும்போதெல்லாம் கொத்துக் கொத்தாக பலூன்களைக் கட்டி இன்னும் உயரமாகப் பறக்கவிடுவான். வியாபார வித்தை இது. குழந்தைகள் குதூகலித்துக்கொண்டு இன்னும் கூட்டம் கூட்டமாக அவனை நோக்கி ஓடிவந்தன. வியாபாரம் பிரமாதமாக நடந்தது.

அவனது வண்டியில் பச்சை, நீலம், மஞ்சள், கறுப்பு என்று பலவித நிறங்களில் பலூன்கள் குதித்துக் குதித்து ஆடிக் கொண்டிருந்தன. குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கின. ஆனால் கறுப்பு பலூனை மட்டும் எந்தக் குழந்தையும் விரும்பிக் கேட்கவே இல்லை. அது சோகமாய் வண்டியில் குதித்துக் கொண்டிருந்தது.
ஒரு குழந்தை பலூன் வியாபாரியைப் பார்த்து, ""உயரத்தில் பறக்கும் பச்சை, நீலம், மஞ்சள் பலூன் மாதிரி இந்தக் கறுப்பு பலூனும் பறக்குமா? அல்லது கறுப்பு உயரத்தில் பறக்க முடியாதா?'' என்று சோகமாய்க் கேட்டது.

பலூன் வியாபாரி சிரித்துக் கொண்டே, ""கறுப்பாக இருப்பது உயரப் பறக்க ஒரு தடையே அல்ல. மற்ற வண்ண பலூன்கள் மாதிரியே கறுப்பு பலூனும் உயரத்தில் பறக்கும். உயரே போக நிறம் ஒரு தடையே அல்ல... உள்ளே இருக்கும் சரக்குதான் முக்கியம்'' என்றான்.

உள்ளே இருக்கும் காற்றுதான் உயரே பறக்க மூல காரணம். நிறமா காரணம்?

அந்தக் குழந்தை, ""அப்படியானால் அந்தக் கறுப்பு பலூனைத் தாருங்கள்'' என்று மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டது. அந்தக் குழந்தைதான் அமெரிக்காவின் நிறவெறியை உலுக்கி அசைத்த மார்ட்டின் லூதர் கிங்.

இந்தியர்களின் கறுப்பு நிறத்தைக் கேலி செய்து ஒரு வெள்ளைக்காரர் பேசியபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
""கடவுள் கேக் செய்தார். அவசர அவசரமாக வெந்துவிட்டதா, வெந்துவிட்டதா என்று திறந்து திறந்து எடுத்த கேக்குகள் வெள்ளை வெள்ளையாக வந்தன. ஆனால் அவை அரைவேக்காடுகள். கொஞ்சம் முறுகிய பிறகு எடுத்த கேக்குகள் கொஞ்சம் கறுப்பாக இருந்தன. ஆனால் அவை வெந்து கமகமவென்று பக்குவமாக இருந்தன. நாங்கள் கடவுள் படைப்பில் கறுப்புக் கேக்குகள். ஆனால் பக்குவமாக இருக்கிறோம். வெள்ளைக் கேக்குகள்தான் அரைவேக்காடுகள்'' என்றார்.

தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:20 pm


21. விரல்களா, மோதிரங்களா எது முக்கியம்?


"உங்களுக்கு இன்னும் கலைமாமணி விருது கிடைக்கவில்லையா?' என்று சிலர் கேட்கிறார்கள். இன்னும் சிலரோ குரூரமாக, "ஒரு கலைமாமணிகூட வாங்கலைன்னா எப்படி? உங்க பாப்புலாரிட்டியை வளர்த்துக்குங்க சார்' என்று யோசனை சொல்வார்கள். நான் லேசாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்வேன்.
என் திறமை என்பது விரல்கள் போல. அதற்கான அங்கீகாரம் விரல்களில் மின்னும் மோதிரம் போல. எனக்கு வேலை செய்ய விரல்கள்தான் வேண்டுமே ஒழிய விரல்களில் மின்னும் மோதிரங்கள் அவசியமில்லை. நான் விரல்களை விரும்புகிறேன். ஆனால் மோதிரங்களை வெறுப்பதில்லை.

இதை எப்படி எல்லோருக்கும் புரியவைப்பது?

இன்றைக்குப் பட்டங்கள், பரிசுகள் என்கிற மோதிரங்களை வைத்திருக்கும் சிலருக்கு... பாவம், விரல்கள் இல்லை. இன்னும் சிலருக்கோ அவர்களது குழைந்து போன விரல்களில் மோதிரங்கள் அவமானத்துடன் அசிங்கப்படுகின்றன.

ஒரு முக்கியமான விளக்கம். பட்டங்கள் பெற்ற எல்லோரையும் காயப்படுத்தும் சிறுமையுடன் சொல்லவில்லை. பலர் தகுதியானவர்கள். சிலர் பட்டங்களை விடவும் பல மடங்கு மேலானவர்கள். அவர்களுக்கு வாய்த்த விரல்கள் மோதிரங்களைவிட அழகானவை. வெகு சிலரோ பட்டங்களுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்கள்... தன் அளவு இல்லாத மோதிரங்களை நூல் சுற்றி மாட்டிக் கொள்ளுகிற மாதிரி பலரது கால் சுற்றிப் பட்டம் மாட்டிக் கொள்கிறவர்கள். இருக்கிற மோதிரத்திற்கேற்ப விரல்களைத் தரித்துக் கொள்ளும் இவர்களைப்போல் இருக்க வேண்டுமா என்ன?

பிறரது அங்கீகாரத்திற்கு ஏங்கும் ஒவ்வொரு திறமைசாலிக்கும் என் ஆலோசனை இதுதான். விரல்களை நேர்த்தியாக வைத்திருங்கள். மோதிரங்களுக்கு ஏங்காதீர்கள். நம்மைப் புரிந்து கொள்வது, அங்கீகரிப்பது, பாராட்டுவது, பின்பற்றுவது இவையெல்லாம் சமூகத்தின் பொறுப்பு. அதை ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் அங்கீகாரம் கிடைக்கும்போது அதை எதிர்க்காதீர்கள். இந்தப் பட்டத்தைவிட, பாராட்டைவிட நான் பெரியவன் என்று
உளறாதீர்கள். தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் வேறுபாடு தெரியாமல் தாறுமாறாகப் புலம்பாதீர்கள்.

இன்றைக்குச் சிலர் ஒரு புது சுடிதார் போட்டால் ஒரு இருபது பேராவது தன்னைப் பார்க்க வேண்டும், பத்துப் பேராவது தன்னைப் பாராட்ட வேண்டும் என்று பரபரக்கிறார்கள். "மச்சி... இந்த டீ சர்ட்ல நீ அஜீத் மாதிரி அசத்தற...' என்கிற நண்பர் படையின் பாராட்டைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மாதிரி எதிர்பார்க்கிறார்கள். இது சரியா? பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அங்கீகரிக்காத போது உங்கள் நிலை என்ன? தோல்வியா? தோற்காதீர்கள். கலைஞர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், இப்படிப் பல்துறையில் வளரும் இளைய தலைமுறையினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய உங்கள் அங்கீகாரமே உங்கள் அஸ்திவாரம். பிறரது அங்கீகாரம் வெறும் அலங்காரமே.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:20 pm

ஒருகாலத்தில் என்னைப் பத்துப் பேருக்குத் தெரியும். பிறகு ஆயிரம் பேருக்குத் தெரியும். இப்போது பல்லாயிரம் பேருக்குத் தெரியும். ஆனால் அன்றும், இன்றும், என்றும் நான் - அதே நான்தான். அங்கீகாரத்தின் பரப்பளவு கூடியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட விஷயம் அன்றும் இன்றும் என்றும் ஒன்றே! எனவே உங்களைப் பிறர் அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கிடைக்காதபோது ஏமாந்து வருந்தாதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்கள் திறமையை வாட வைக்கும்.

மகாகவி பாரதியை அவரது சமகாலத்தில் மகாகவியாக யாரும் அங்கீகரிக்கவில்லை. "பிழைக்கத் தெரியாதவன்' என்பதே சமூகம் அவர் மீது வைத்திருந்த அபிப்ராயம். ஆனால், பாரதி தன் மீது வைத்திருந்த அபிப்ராயம் முற்றிலும் வேறு.

"புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்தது' என்பதே பாரதிக்கு, பாரதி மீதான அபிப்ராயம். பிறரது அங்கீகாரங்களைவிட அவரது அங்கீகாரங்களே, அபிப்ராயங்களே ஜெயித்தன. கடும் தமிழில் கொடும் தொனியில் இலக்கணச் செய்யுள் பாடிய தமிழ்ப் பண்டிதர்கள் பலர் பாரதியின் பாடல்கள் பாமரத்தனமானவை என்று எள்ளியபோது, "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது,
சோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி தன் பாடல்களைப் பற்றிப் புரிந்துவைத்திருந்தார்.
பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் பாராட்டும்போது எதிர்க்காதீர்கள். மாலைகளை எதிர்பார்த்துக் குனிந்து, குழைந்து, வளைந்து, நெளிந்து, தலை தாழ்த்தி நிற்க வேண்டாம். ஆனால் மாலைகள் வரும்போது தலை குனிந்து வாங்கிக்கொள்ள மறுக்க வேண்டாம். நாம் யார் என்பது நமக்குத் தெரியும். பிறருக்கு எப்படித் தெரியும்? நம்முள் கனிந்துள்ள திறனைப் பிறர் உள்ளது உள்ளபடி ஒரு போதும் அறிந்திருக்க முடியாது. எனவே பிறரால் நம்மை ஒரு போதும் சரியாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பற்றிக் குறைவாக இருந்தால் அது குறித்து வருந்த வேண்டாம்.
நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையைச் சொல்லட்டுமா? அவரது குடும்பம் கூட்டுக் குடும்பம். ஐம்பது அல்லது அறுபது பேர் கொண்ட பெரும் கூட்டம் அது. அதில் பிள்ளைகள் பிறந்தநாளைக் கொண்டாடுகிற முறையே புதுமையானது. ஒவ்வொரு பிள்ளை பெயரிலும் ஒரு நோட்டுப் புத்தகம் இருக்கும். அதில் அந்தக் குடும்பத்துப் பெரியவர்கள் பிள்ளைகளைப் பற்றித் தங்கள் பாராட்டை, விமர்சனத்தை, கருத்தை எழுதுவது வழக்கம்.

ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் அன்று அவன் பாட்டி எழுதிய வரிகள் என்ன தெரியுமா?

"ரவியைப் பற்றிச் சொல்ல உருப்படியாக எதுவும் இல்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ, பெரிய ஆளாக அவன் வருவான் என்று தோன்றவில்லை. மற்ற பிள்ளைகள் மாதிரி அவன் புத்திசாலியாக இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது' என்று பாட்டி எழுதியிருந்தார். மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதே இன்று தெரியவில்லை. உருப்பட மாட்டான் என்று பாட்டி பதிவு செய்தவர்தான் உலகின் புகழ்பெற்ற உருப்படியானார். பிறரது அங்கீகாரங்கள் பெரிய விஷயமல்ல... உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயங்களே முக்கியம். புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:21 pm

22. எதிர்ப்பிலேயே வாழுங்கள்!

ஒரு கப்பல் கடலுக்குள் போவதில் எவ்வளவு கஷ்டங்கள் காத்திருக்கின்றன. புயல் அடிக்கலாம். பாறையில் மோதிக் கப்பல் டைட்டானிக் மாதிரி உடைந்து போகலாம். திமிங்கிலங்கள், சுறா மீன்கள் கப்பலைக் கவிழ்க்கலாம். குடிநீர், உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம். திசை தடுமாறித் திண்டாடி வாடலாம். இப்படி எண்ணற்ற வாய்ப்புகள் - ஆபத்துகள் கடலில் காத்திருக்கின்றன. எப்போது அதற்கு ஆபத்து இல்லை? கம்பீரமாகக் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது என்றால் அழிவில்லை; ஆபத்து இல்லை.

ஆனால் கரையில் பாதுகாப்பாக நிற்பதற்காகவா கப்பல் கட்டப்பட்டது! கடலின் ஆபத்துகளைக் கபளீகரம் செய்து கொண்டு கரை மாறிக் கரை சேர்ந்து கடலில் பயணிக்கத்தான் கப்பலே ஒழிய, கரையில் பாதுகாப்பாக நிற்க கோடி கோடியாகக் கொட்டி யாராவது கப்பல் கட்டுவார்களா? ஆகாய விமானம் ஆபத்து இல்லாமல் இருப்பது எங்கே? தரையில்தான். என்ஜின் கோளாறு வராது. தீப்பிடிக்காது. விண்நோக்கிப் பாயும்போது புவி ஈர்ப்புச் சக்தியால் விழுந்து நொறுங்காது. கடத்தப்படும் வாய்ப்புக் கிடையாது. இன்னொரு விமானத்துடன் மோதாது. தரையிறங்கும்போது அதன் சக்கரங்களை வெளித்தள்ளுமே... அப்படித் தள்ள முடியாமல் போனால் தரையில் மோதித் தீப்பிடிக்குமே! அந்த ஆபத்து துளிக்கூட இல்லை. எனவே விமானத்தை விண்ணிலே செலுத்தாமல் மண்ணிலேயே வைத்திருக்கலாமா?
தரையில் இருக்கும் விமானமும் கரையில் இருக்கும் கப்பலும் பாதுகாப்பானவைதான். ஆனால் அவை அதற்காக உருவாக்கப்படவில்லையே. ஆபத்துகளை எதிர்கொண்டு சவால்களைச் சந்தித்துச் சாதித்துக் காட்டவே கோடி கோடியாகக் கொட்டி அவற்றை உருவாக்கினோம். பய உணர்ச்சியும் பாதுகாப்பு உணர்ச்சியும் தேவைதான். ஆனால் அது மானுட முன்னேற்றத்தை மழுங்கடித்துவிடக் கூடாது. தடைகளை விலக்கி ஜெயிக்கத்தான் மனிதப் பிறவி நமக்குத் தரப்பட்டுள்ளது. அதுவே மானுட மகத்துவம். தடைகள், சவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உங்களை உலகுக்கும் அடையாளம் காட்டும். எதிர்ப்பற்ற வாழ்க்கைக்கு ஒரு போதும் ஏங்காதீர்கள். விடுதலை இந்தியாவில் பிரதமராய்ச் சிரித்து ஜொலித்த ராஜீவ் காந்தியைக்கூட வரலாறு என்றைக்காவது விழுங்கி விடும். அடிமை இந்தியாவில் அணுஅணுவாய்ப் போராடி, அங்குலம் அங்குலமாக நாட்டை மீட்ட மகாத்மா காந்தியை வரலாறு ஒரு போதும் விழுங்காது. விழுங்க நினைத்தால் வரலாற்றை உலகம் விழுங்கிவிடும்.

ராஜகுமாரர்களின் மணி மகுடங்களைவிட தேவகுமாரனான ஏசுவின் முள்மகுடம் உலகப் புகழ் பெற்றது. அவ்வளவு ஏன்? இன்று ஏசுவின் பெயரால் போப்பாண்டவர் கழுத்தில் சுமக்கும் தங்கச் சிலுவையைவிட ஏசுபிரான் சுமந்த மரச்சிலுவையே மகத்துவம் மிக்கது. காரணம், தங்கச் சிலுவை, ஏற்பாளர்களின் பரிசளிப்பு. மரச்சிலுவை எதிர்ப்பாளர்களின் "அன்பளிப்பு'!

நண்பர்கள் நம்மைச் செதுக்குவதைவிடப் பகைவர்களே நம்மைச் செதுக்குகிறார்கள். சாதகமான விஷயங்கள் நம்மைச் சரி செய்வதைவிடப் பாதகமான விஷயங்களே நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே தடைகள், தடங்கல்கள், சவால்கள், இடையூறுகள், எதிர்ப்புகள், ஆபத்துகள் குறித்துக் கலங்க வேண்டாம். அவற்றைக் கொண்டாடுங்கள். குதூகலியுங்கள். குதித்து மகிழுங்கள்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 5:22 pm

தேர்தலில் நின்று மக்களிடம் தீர்ப்புக் கேட்பது ஓர் அரசியல்வாதிக்கு ஆபத்தான வேலைதான். சிறந்த அரசியல்வாதி அதற்குத் தயங்கலாமா? ஜெயித்தாலும் சரி... தோற்றாலும் சரி... மக்கள் முன்பு தம்மைத் தயங்காது நிறுத்தி அக்னிப் பரிட்சைக்குத் தயாரான அரசியல்வாதிகளே அதிக உயரம் பறந்தார்கள். பாதுகாப்பான மேல்சபை உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்பிய தலைவர்களை மக்கள் முதல்வராக்கவில்லை. பிரதமராக்கவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே இருக்க வைத்தார்கள். சவால்களை எதிர்கொள்ளும் மனோநிலையே வெற்றிக்கான வீரிய விதை.

ஒன்று சொல்கிறேன்... ஆபத்துகளைப் பற்றிய கற்பனைகளை விட்டொழியுங்கள். அவை ஆபத்துகளைவிட ஆபத்தானவை. அளவற்ற பாதுகாப்பு, பய உணர்ச்சியிலிருந்து வெளியில் வாருங்கள். அபிமன்யு போல வாழப் பழகுங்கள். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி தனது வீர உரையில், ""எனது ராணுவத்தில் சேர்ந்துள்ள உங்களுக்குச் சம்பளம் கண்டிப்பாக உண்டு. அந்தச் சம்பளம் மரணம்'' என்றார். அதனால்தான் அவர் மரணமே அடையவில்லை.

ஒரு மகத்துவம் மிக்க கவியாக வாழ்வதில் பாரதிக்குப் பல சிக்கல்கள் இருந்தன. பாதுகாப்பு உணர்ச்சியால் அவர் சில சமரசங்கள் செய்து கொண்டிருந்தால் பணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டின் எத்தனையோ "சுப்புணி'களில் ஒருவனாகச் செத்திருப்பான் அந்தச் சுப்பிரமணியன். ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆவேசம்... அந்த ஆனந்தப் பரவசம்... அதுவே அவனை மகாகவியாக்கியது.

தந்தை பெரியார் ஒரு தன்னிகரற்ற தலைவர். கடும் எதிர்ப்புகளுக்குக் கடுகளவும் கவலைப்படாது தன் கருத்துகளை மக்கள் முன் வைத்தவர். ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது ஒரு செருப்பு அவர் மீது வீசப்பட்டது. அவர் தயங்கினாரா? ""ஒரு செருப்பை வீசினா எப்படி? இன்னொன்றையும் வீசு... ஜோடியா வைச்சுக்கலாம். உனக்கும் பிரயோஜனம் இல்லாம, எனக்கும் பிரயோஜனம் இல்லாம ஒண்ணை வீசிறியே?'' என்றார். அவரல்லவா துணிவுடையவர். அந்தத் துணிவே அவர் வெற்றியின் ரகசியம். எதிர்ப்பிலேயே வாழுங்கள். வெற்றி நிச்சயம்!

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக