புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
61 Posts - 44%
heezulia
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
43 Posts - 31%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
9 Posts - 7%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
179 Posts - 40%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
prajai
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:22 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


1. கேள்விகளே சாவிகள்!

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:43 pm

ஒரு நிமிடம்..! அவமதித்தவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அறிவீனம்... அகங்காரம். அவமதித்தவரும் வருந்தும்படியாக - ஏற்கும்படியாக வளர்வதே அங்கீகாரம். உன்னதமான முன்னேற்றம். தன்னை அவமதித்த பிரிட்டிஷ் அதிகாரியும் மதிக்கும்படி விஸ்வரூபம் எடுத்தவர் மகாத்மா காந்தி. மாறாகப் பழிவாங்கத் துடித்தவர்கள் பாழானதுதான் மிச்சம்.

வேடிக்கையான கதை ஒன்று. ஓர் அரசர் அருமையாகப் பாடிய வித்வானிடம், ""பரிசாக என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறோம்'' என்று அறிவித்தார். வித்வானோ, நாள்தோறும் அரசர் குளிக்கும் காவல்குளத்திற்கு அரசரை அழைத்துவந்து குளத்தில் இறங்கி வாய் கொப்பளித்துத் துப்பினார். காவலுக்கு நின்ற சேவகனைப் பார்த்து, ""பார்... பார்... நன்றாகப் பார்த்துக் கொள்'' என்று கத்தினார்.

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தது இதுதான். வித்வான் அரண்மனைக்கு வரும்போது, அது அரசர் குளிக்கிற குளம் என்று தெரியாமல் அதில் இறங்கிக் கைகால் கழுவிவிட்டார். காவலன் அவரை அடித்து, ""ராஜா பார்த்திருந்தால் உன் தலையே போயிருக்கும்'' என்று தள்ளிவிட்டான். தன்னை அவமதித்த காவலனை அரசர் முன்பு பழி வாங்கத் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டார் முட்டாள் பாகவதர். ஆனால் அது சரியல்ல. பின் எப்படி ஜெயிக்க வேண்டும்?

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகன் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டி நாட்டிலிருந்து சினிமாக் கனவுகளுடன் பதினாலு வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு. போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினாலு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு... படுக்கணும்னா நாலணா குடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருந்திருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி "சுமைதாங்கி' என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வரவேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர், பிள்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ""இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது... இதே இடத்தில் இன்று என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது'' என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ, அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:44 pm

12. காதைத் திருகியவர் காது கொடுத்தார்!

ஓர் ஊதுபத்தியின் நறுமணம் எவ்வளவு தொலைவு பரவ முடியும்? ஒரு வீடு முழுவதும்..? சரி. எரிகின்ற சந்தன மரத்தின் நறுமணம் எவ்வளவு தூரம் பரவ முடியும்? ஒரு காடு முழுவதும்..? ரொம்ப சரி. காய்ச்சுகிற நெய்யின் மணம் எவ்வளவு கிலோ மீட்டர் பரவ முடியும்? என்ன கிண்டலா? நெய்யின் நறுமணம் சாப்பிடுகிறவனுக்கும் பரிமாறுகிறவனுக்கும் இடையே பரவினால் அதுவே பெரிய விஷயம். அது எப்படிக் கிலோ மீட்டர் கிலோ மீட்டராகப் பரவ முடியும்..! முடியும் முடியும்... முயன்றால் முடியும்!
கோயமுத்தூரில் ஒரு சின்னக் கடையில் ஸ்ரீமான் மகாதேவ ஐயர் என்பவர் காய்ச்சிய நெய்யின் நறுமணம் கோவை, ஈரோடு, சேலம் வழியாகச் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் வரை பரவி தில்லி வரை பாய்ந்துள்ளது. நம்ப முடியவில்லையா?

ஆம்... நெய் மணம் கமழ ஸ்ரீமான் மகாதேவ ஐயர் கண்ட ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓர் இனிப்புக் கடை என்ற எல்லையை உடைத்தெறிந்து இந்திய அளவிலான ஒரு தரமான தலைசிறந்த தொழில் நிறுவனம் என்பதற்காக விஸ்வேஸ்வரய்யா விருதினைத் தமிழக ஆளுநர் கைகளால் பெற்றுக் கொண்டது. இது எப்படிச் சாத்தியம் ஆனது? முயற்சியில் தொடர்ச்சி... எனவே முன்னேற்றத்தின் வளர்ச்சி. கொஞ்சம் விவரமாய்ச் சொல்கிறேன்.

குறைந்த விலை... நிறைந்த விற்பனை என்கிற வணிக மொழியை வழித்தெறிந்து தரமான பொருள், திறமான விற்பனை. சுத்தத்தில் சுகாதாரத்தில் அக்கறை, வரவேற்பு முதல் வழியனுப்பு வரை வாயெல்லாம் சர்க்கரை, பொறுப்புடன் கூடிய பொதுஜனத் தொடர்பு இத்தனையும் இருந்தால் விலை என்ன விலை? விற்பனை அழகிய கலை(!) என்று நிரூபித்தவர்கள் அமரர் மகாதேவ ஐயரின் அருமைப் புதல்வர்கள் கிருஷ்ணன், முரளி. எந்தக் காரியத்தையும் தொடர்ந்து அக்கறையுடன் செய்தால் சமூக அங்கீகாரம் சாத்தியம்; வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து, சிறந்த தொழில் திறனுக்கான விஸ்வேஸ்வரய்யா விருது அண்மையில் பெற்றனர். வியப்பாக இல்லையா?
உடைக்க முடியாத மைசூர்பாகு பற்றிய ஜோக்குகளையெல்லாம் உடைத்தெறிந்தது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ். ஒரு ஜோக் பாருங்கள். உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு. மனுதாரர், மனைவிக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கும்படி மன்றாடுகிறார். எதற்கு? ""இனி எக்காலத்திலும் "பல்நலம்' கருதி என் மனைவி மைசூர் பாகு செய்யக்கூடாது என்று என் மனைவிக்கு இந்த உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கேட்கிறார்.

இன்னொரு ஜோக். ஒரு பேப்பர் விளம்பரம். ""அன்புள்ள கணவருக்கு, தீபாவளிக்குச் செய்த மைசூர்பாகு முற்றிலும் தீர்ந்துவிட்டது. எனவே இனி அச்சம் இல்லாமல் தாங்கள் வீட்டுக்கு வரலாம். - தங்களைப் பிரிந்துவாடும் மனைவி, மக்கள்.

இப்படிக் கிண்டலடிக்கப்பட்ட மைசூர்பாகு விஷயத்தில் கரைந்து போகும் புதுமையைப் புகுத்தியது முதல் வெற்றி. முழு நெய் என்பது அடுத்து வெற்றி. ஒரு மிட்டாய்க் கடையைத் தொழில் நிறுவனமாக்கியது அதனிலும் பெரிய வெற்றி. எந்தத் தொழிலையும் வித்தியாசமாக, அக்கறையுடன் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:44 pm

இப்போது இன்னொரு ஒற்றை மனிதரின் வெற்றியைச் சொல்லுகிறேன். வானொலி மூலம் வரலாறு படைப்பவர். தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர். யார் தெரிகிறதா? தென்கச்சி கோ. சுவாமிநாதன்.

கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம் வரை, மருத்துவம் முதல் மகத்துவம் வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை. பெரிய பெரிய விஷயங்களைக்கூடத் தெருவோரத்துக் கடையில் மசால்வடை போடும் அலட்சியத்தில் வாரிக்கொட்டுகிற வார்த்தை வளம். பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி... தொடர்ச்சி... வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்.
வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி. ஒற்றை மனிதன்; ஆனால் வெற்றி மனிதன்!

பதினைந்து வயதுப் பையனாக அவர் பள்ளியில் படிக்கும்போது... "கண்ணன்' என்ற சிறுவர் பத்திரிகைக்கு கதை எழுதி அனுப்பியிருந்தார். பள்ளிக்கூட முகவரிக்குத் திரும்பி வந்துவிட்டது. வகுப்பாசிரியர் கையில் கிடைத்துவிட்டது. அவ்வளவுதான். ஆசிரியர் காதைப் பிடித்துக் திருகி அவரைப் படாதபாடு படுத்திவிட்டார். ""படிக்கிற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா இந்தக் கதை எழுதற வேலை. படிப்பில அக்கறையில்லை. வாங்கற மார்க்கைப் பாரு'' என்று கேலி செய்து அவர் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார். அதன் பிறகு எதற்கெடுத்தாலும் காது திருகும் திருப்பணி ஆசிரியர் கைங்கர்யம். அடிக்கடி தென்கச்சியின் காதுகள் ஆசிரியர் வசம்.

பல்லாண்டுக்குப் பிறகு வானொலியில் சேர்ந்து "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் தென்கச்சி புகழ் பெற்ற பிறகு நிலையத்துக்கு ஒரு கடிதம் வருகிறது. ""ஐயா... சென்னை வானொலி நிலையம் கடந்த சில வருடங்களாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சியை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தற்போது இங்கேயுள்ள மடம் ஒன்றில் வேலை செய்துவருகிறேன். தினம்தோறும் வானொலியில் தகவல் தரும் அந்த மதிப்புக்குரிய பெரியவருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எனவே அவருடைய பெயர் என்ன? முகவரி என்ன என்பதைத் தெரியப்படுத்த இயலுமா?'' என்று கேட்டு அடியில் கையெழுத்திட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தை எழுதியவர் வேறு யாருமல்ல. தென்கச்சி சாரின் காதுகளைத் திருகிய அதே ஆசிரியர். பிறகு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கட்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், தனது மாணவன் என்ற நினைவின்றி ஒரு மகாபெரியவர் என்ற நினைவில், ""தினமும் தவறாமல் தங்கள் அறிவுரைகளைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்'' என்று எழுதியிருந்தார். ஒரு காலத்தில் தென்கச்சியின் காது ஆசிரியர் வசம் இருந்தது. தென்கச்சி ஜெயித்ததும் ஆசிரியர் காது இவர் வசம் இருக்கிறது.

வெற்றி நிச்சயம் தொடரில் மேற்கோளாகக் காட்டும் தகுதி ஆப்ரஹாம் லிங்கனுக்கும் ஜார்ஜ் வாஷிங்டன்னுக்கும் மட்டும் இல்லை. வானொலியில் வரலாறு படைக்கும் தென்கச்சிக்கும், இனிப்புத் தொழிலில் சாதனை செய்யும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சகோதரர்களுக்கும் நிச்சயம் உண்டு.
தொழிலில் தொடர்ச்சி + முயற்சி = வளர்ச்சி என்ற சூட்சுமம் புரிந்தால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:45 pm


13. அச்சம் என்பது மடமையடா!


வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறை மரணத்தைச் சந்திக்கிறவன் வீரன். மரணத்திற்கு மத்தியில் எப்போதோ ஒருமுறை வாழ்க்கையைச் சந்திக்கிறவன் கோழை. இந்தியா வீரர்களின் பூமியாக இருந்தது. இன்று கோழைகளின் சிறைக் கூடமாக இருந்து தொலைக்கிறது. இது அவமானப்பட வேண்டிய அசிங்கம்.

மொகலாயப் படைஎடுப்பையும் அதன்பின் நடந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து அடிமைத்தனம் மக்கள் மனத்தில் வேரூன்றிவிட்டது. இந்த மண்ணின் மானப் பசை காய்ந்துவிட்டது. காயடிக்கப்பட்ட மாடுகளைப் போல ஆண்மை அழிந்தொழிந்த அடிமைப் புத்திக்காரர்களாக இந்திய ஜன சமூகம் இருந்தும் இறந்து கிடக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு என்பதைவிட பிணநாயக நாடு என்றே எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது.

கூச்சம் இல்லாமல் கூட்டணி மாறும் அரசியல் வியாபாரிகள், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தெரிவு செய்த கட்சிக்கும் துரோகம் இழைக்கும் அரசியல் வியாதிகள், ஊழலே உருவமான பல தலைவர்கள், உழைக்காமல் பிழைக்கும் பல அரசு ஊழியர்கள், அரசியல் வெறியர்களின் அராஜகம், அக்கிரமத்திற்கு அரசு எந்திரத்தைக் கூட்டிக் கொடுக்கும் சில மானம் கெட்ட அதிகாரிகள், வாதியும், பிரதிவாதியும் செத்த பிறகு தீர்ப்புச் சொல்லும் அதிமேதாவித்தனமான நீதிநியாயங்கள், எடை குறைவான ரேஷன், கண் எதிரில் கற்பழிப்பு, பேட்டை தாதாக்களின் ரவுடித்தனம், லஞ்சம், வஞ்சம், அநீதி, அக்கிரமம், அநியாயம் எதுவுமே இன்று இந்தியரைப் பாதிக்கவில்லை. மாறாகப் பயந்து சாகிறார்கள்.

அன்றைய பாரத புத்திரர் ""சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்'' என்று பாரதி பாடினார். இன்றும் அவனே போலீûஸக் கண்டு அஞ்சுகிறான். பண்ணையாரைக் கண்டு பயந்து நடுங்கிய காலம் போய் பாரத புத்திரன் பணத்தாசை பிடித்த பல அதிகாரிகளைப் பார்த்துப் பயப்படுகிறான்.

""அச்சம் என்பது மடமையடா'' என்று கையைக் காலை ஆட்டி யாராவது பாடினால் கையைத் தட்டுகிற தமிழ்நாட்டு மக்கள், அராஜகத்தின் முன்னால்
கையைக் காலைக் கட்டிக்கொண்டு பயந்து சாகிறார்கள்..! பயம்... பயம்... பயம்... இதிலிருந்து வெளியே வா இந்தியனே..! வெற்றி நிச்சயம்.

ஒரு ரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். நான்கைந்து பிளஸ்டூ மாணவர்கள் என்னைக் காட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சன் டி.வி.யில் பார்க்கிற, தினமணி கதிரில் எழுதுகிற சுகி. சிவம் நான்தானா என்று அவர்களுக்குச் சந்தேகம். ஆனால் என்னிடம் வந்து பேசப் பயம்.

நானே அவர்களை அருகில் அழைத்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பார்த்துப் பேச ஏன் பயப்பட வேண்டும்? இளையபாரதத்தைப் பார்த்து எனக்குக் கவலையாக இருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவன் தயங்கித் தயங்கி ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் கேட்டான்.
பொதுவாக நான் ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் வாங்குவதை விரும்புவதில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கோட்பாடு. இருந்தும் அவனைக் காயப்படுத்தாமல், ""தம்பி ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் வாங்குபவனாக இராதே... அவசியம் என்றால் போடுகிறவனாக இரு'' என்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:45 pm

இதைவிட அந்த இளைஞனுக்கு நான் வேறு நல்லது என்ன சொல்ல முடியும்? மாணவன் முகம் வாடிவிட்டது. இன்றைக்கு மாணவர்கள் ஆசிரியரோடு பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேச அதிகமாகவே பயப்படுகிறார்கள்.

பயப்படாதே! ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முயற்சி செய். தவறாக இருந்தாலும் கவலைப்படாதே... பேசு... அது அந்நிய மொழி. அதைச் சரியாகப் பேசாவிட்டாலும் குற்றம் இல்லை. யாராவது இந்தியருக்கு ஆங்கிலேயர் செய்த குற்றங்களோடு ஒப்பிட்டால் இது மிகச் சிறியது!
தவறைச் சுட்டிக் காட்டினால் வெட்கப்படாதே... நன்றி சொல். பிழையின்றி ஆங்கிலம் பேச அவர் உனக்கு உதவ முடியுமா என்று கேள். மகாத்மா காந்தியின் ஆங்கிலத்தில் ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி பிழை கண்டபோது காந்தி அப்படித்தான் உதவி கேட்டார்.

அப்படிக் கேள். உருப்படுகிற வழியைப் பார்... பயப்படாதே... வீரனாகவே இரு! அடிக்கடிச் சாகாதே! ஒரு முறைதான் சாக வேண்டும். எவ்வளவு
பெரிய மனிதரைப் பார்க்க நேர்ந்தாலும் துணிவுடன், நேராகப் பார். குழப்பம், தலைகுனிதல், தயக்கம், பயம், உளறல் இவற்றைத் தூக்கிக் குப்பையிலே போடு.
இளையபாரதமே ஜெயிக்கிற வழியைப் பார். ஒüரங்கசீப் டில்லி பாதுஷாவாக இருந்த போது அம்பர் என்கிற சின்ன நாட்டிற்கு ஜெயசிங் என்கிற பதின்மூன்று வயதுச் சிறுவன் பட்டத்திற்கு வந்தான். அவனைப் பயமுறுத்தி வைக்கும் எண்ணத்தில் டில்லிக்கு வரும்படி பணித்தார் பாதுஷா.

அவனது தாயும் அமைச்சர்களும் அஞ்சினர். ஆனால் சக்கரவர்த்தி முன்பு நடந்துகொள்ள வேண்டிய மரபுகள், முறைகளைக் கேட்டறிந்து ஜெய்சிங் டில்லி சென்றான். சிங்கக் குட்டியைப் போல் தன்முன் வந்து நின்ற ஜெய்சிங்கை ஒüரங்கசீப் உற்றுப் பார்த்தார்.

நம்மைக் கண்டு இவனுக்குப் பயம் வரவில்லையே என்று கோபம் அடைந்த பாதுஷா, சிம்மாசனத்தில் இருந்து திடுமென்று குதித்து ஜெய்சிங் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்தார். பற்களை நறநற என்று பயமுறுத்தும் பாணியில் கடித்தார். ஜெய்சிங் அஞ்சவில்லை. அசரவில்லை! ஒüரங்கசீப் ஆச்சர்யம் அடைந்தார். ஜெய்சிங் கைகளை இறுக்கியபடி, ""சிறுவனே உனக்குப் பயமாக இல்லையா? இப்போது நான் உன்னைத் தண்டித்தால் என்ன செய்வாய்? எப்படிக் காப்பாற்றிக் கொள்வாய்?'' என்றார்.

ஜெய்சிங் சிரித்துக் கொண்டு, ""இத்தனை பெரிய டில்லி பாதுஷாவே என் கைகளைப் பிடித்து எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும்போது நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாரிடம் பயப்பட வேண்டும்?'' என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினான். அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, ""பலே'' என்று பாராட்டி பக்கத்தில் ஆசனம் அளித்தார் ஒüரங்கசீப் என்கிறது வரலாறு!

அச்சத்தை வென்றால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:38 pm



14. நம்பினோர் கெடுவதில்லை!


சில நூறு மைல் பயணம் செய்வதானால் நீங்கள் எவ்வளவு முன் ஏற்பாடுகள் செய்துகொள்வீர்கள்? வாகன வசதி, உணவு ஏற்பாடு, வழியில் தங்க, ஓய்வெடுக்க வாய்ப்பு உண்டா, என்றெல்லாம் எவ்வளவு கவலைப்படுவீர்கள்?

உடைத்துச் சொன்னால், கார் ரிப்பேர் ஆகலாம்; உணவு கிடைக்காமல் போகலாம்; ஓய்வெடுக்க வசதியான இடம் இல்லாமல் போகலாம் என்று பயப்படுவீர்கள். சுகமாகப் போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையைவிடச் சிரமப்படுவோமோ, போய்ச் சேரமாட்டோமோ என்கிற அவநம்பிக்கைதான் பலருக்கு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு இயற்கை கொடுத்துள்ள அறிவு, வருமுன் காக்கும் திறன். ஆபத்துகளை எதிர்பார்க்கும் முன் எச்சரிக்கை இன்று அவநம்பிக்கையை உருவாக்குகிறது.

ஆனால் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் நம்பிக்கையோடு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக ஒரு பயணம் நிகழ்கிறது. பயம் இல்லை... அவநம்பிக்கை இல்லை... வழியில் உணவு கிடைக்குமா கிடைக்காதா என்கிற கவலை இல்லை... சுகமாக உற்சாகமாக ஆடிப்பாடி அந்தப் பயணம் நடக்கிறது. பயணம் செய்வது யார் தெரியுமா? பட்டாம் பூச்சிகள். வண்ணத்துப் பூச்சிகள். கோடி கோடியாகப் பறக்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தை அவை நம்புகின்றன. உணவளிக்கும், ஓய்வளிக்கும், நமக்கு மரணம் நிகழாது என்று உலகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பட்டாம் பூச்சிகள் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்குக் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பறந்து செல்கின்றன.

நமது தாய்மண் நமக்கு வாழ்வு தரும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஆனால் வேடந்தாங்கலையும் அதில் உள்ள ஏரியையும் அதன் சுற்று மரங்களையும் நம்பி, கண்டம் விட்டுக் கண்டம் கடந்து பட்சிகளும் பறவைகளும் வருடம்தோறும் வருகின்றன. இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும்; உணவளிக்கும்; வாழ இடம் கொடுக்கும்; வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன. அந்தப் பாடத்தை நீங்கள் படித்தது உண்டா? நம்புங்கள்... நம்புங்கள்... வெற்றி உண்டாகும்.

இன்று கணவன், மனைவியை நம்புவதில்லை. மனைவி கணவனை நம்புவதில்லை. அது வீடா... இல்லை. இல்லை. நரகம். நண்பர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. நட்பா அது? இல்லை. இல்லை. அது வியாபாரம். வியாபாரத்திலேயே பங்குதாரர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. தொழில் கூடமா அது? இல்லை துரோகிகளின் கூடாரம்.

கூட்டு வணிகம் செய்யும் இரண்டு பார்ட்னர்கள் இரவு ஒரு திருமண விருந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் அலறினார். ""ஆ! வரும் அவசரத்தில் கடையில் பணப்பெட்டியைப் பூட்டாமல் வந்துவிட்டேன். எவனாவது திருடினா என்னாவது?'' என்றார். இன்னொரு பார்ட்னர் ""டேய்! நம்ம இரண்டு பேருமே இங்க இருக்கோம். அப்புறம் யாரு திருடப்போறா... கவலையை விடு'' என்றார். எப்படி இருக்கு கதை?

பல்லாண்டுகளாகப் பணிபுரிந்தாலும் தன் ஊழியர்களைச் சில முதலாளிகள் நம்புவதே இல்லை. கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் முதலாளிகளின் அன்பை, அக்கறையைச் சில தொழிலாளிகள் நம்புவதே இல்லை. நம்பிக்கை இல்லாத இடம் நரகமே! நரகம் மட்டுமே.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:38 pm

நாலு நண்பர்கள் ஓட்டலுக்குப் போனார்கள். கடைசியாக ஐஸ்கிரீம் வந்ததும் பில்லைப் பார்த்ததும் சுரீர் என்றது. கையில் உள்ள காசைவிட பில் இருபது ரூபாய் அதிகம். ஐஸ்கிரீம் வேண்டாம் என்றால் அசிங்கம். இருப்பதில் சின்னப் பையனைப் பார்த்து ""நீ ஓடிப்போய் வீட்டில் இருந்து இருபது ரூபாய் கொண்டுவா. பில் கொடுக்கலாம்'' என்றார்கள். ""முடியாது... நான் போனதும் நீங்கள் சாப்பிடுவீர்கள்... நான் வருவதற்குள் என் ஐஸ்கிரீம் உருகி இருக்கும். போகமாட்டேன்'' என்றான். ""நீ திரும்பி வரும் வரை சாப்பிடமாட்டோம்'' என்றார்கள். ""நிஜமா?'' என்றான். ""சத்தியமாக'' என்றார்கள். அரை மனதுடன் பொடியன் புறப்பட்டான். கால்மணி ஆனது. அரைமணி ஆனது, பொடியன் வரவே இல்லை. ஐஸ்கிரீம் உருக ஆரம்பித்தது. எல்லோரும் தண்ணி ஐûஸக் குடிப்பதைவிட பொடியன் வந்ததும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவரவர் ஐஸ்கிரீமை வாயில் வைத்ததுதான் தாமதம்... டபக்கென்று ஓடி வந்த பொடியன் லபக்கென்று தன் ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு ""தெரியும்... நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு தெரியும். அதனாலதான் நான் போகவே இல்லை. கைகழுவுற இடத்திலேயே மறைஞ்சிருந்து உங்களை
கவனிச்சுகிட்டே இருந்தேன்'' என்றான். நாலு பேரும் ஹோட்டல்காரனிடம் உதைபட நேர்ந்தது.

மராட்டிய மன்னன் சிவாஜி வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. சிவாஜியைக் கொல்ல படுக்கையறைக்குள் வந்த சிறுவனைக் கைது செய்து மன்னர் முன் கொண்டு வந்தனர். ""ஏன் என்னைக் கொல்லத் துணிந்தாய்?'' என்றார் சிவாஜி. ""வறுமை... என் தாய் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். கையில் பணம் இல்லை. உங்களைக் கொன்றால் பணம் தருவதாக உங்கள் எதிரி ஒருவர் கூறினார். எனவே கொல்லத் துணிந்தேன்'' என்றான். ""மன்னனைக் கொல்ல முயன்றதால் உனக்கு மரண தண்டனை'' என்றார் அருகிலிருந்த தாணாஜி. ""சாவதற்கு முன் என் தாயைப் பார்க்க அனுமதி வேண்டும். ஒரு கைதியாக அல்ல... அவள் துன்பப்படுவாள். சுதந்திரமாக என்னை அனுப்ப வேண்டும்'' என்றான் இளைஞன். ""தப்பியோட எண்ணமா? அனுமதிக்க மாட்டேன்'' என்றார் தாணாஜி. ""நான் மானமுள்ள மராட்டியன். மராட்டியன் சொன்ன சொல் தவறுவதில்லை'' என்றான் இளைஞன். சிவாஜி நம்பினார். அனுமதித்தார். குறித்த நேரத்தில் மன்னர் முன் வந்து மரண தண்டனை தரும்படிக் கேட்டான் இளைஞன். ""உன்னை மாதிரி நம்பிக்கைக்குரியவர்களை யாராவது கொல்வார்களா?'' என்று தன் படையில் இளைஞனைச் சேர்த்துக் கொண்டார் சிவாஜி.
பிறரை நம்புவதில் சில சிக்கல்கள் உண்டு. என்றாலும் நம்புங்கள். பிரபஞ்சத்தை நம்புங்கள். அது நமக்குச் சாதகமானது என்று நம்புங்கள். கடவுளுக்கே நம்பர் என்று ஒரு பெயர் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா? நம்மவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் கடவுள் நம்பர் எனப்பட்டார். பெற்ற தாய், பிள்ளையை நம்பவில்லை என்றால் பெற்ற வயிறு சாக்கடைக்குச் சமம்! பெற்றோரை நம்பாத பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. கொள்ளிகள்.

நம்பினோர் கெடுவதில்லை. நம்புங்கள். நம்புங்கள். வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:39 pm


15. தன்னம்பிக்கை என்பது சாராயம் அல்ல!


தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து இப்போது ஒரு விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் நிறைய சொற்பொழிவுகள், வகுப்புகள், பயிலரங்குகள், பணிமனைகள் நடைபெறுகின்றன.

பயிற்றுநர்கள் பலர் தலைமைப் பண்பு, நிர்வாக இயல் குறித்துப் பயிற்சி தருகிறார்கள். இது நல்ல மாற்றம்தான். ஆனால்...
ஆனால் என்ன ஆனால்? பயிற்றுநர் பலர் வெற்றியாளரா என்றால், பதில் மௌனம். இன்னொரு பக்கத்தில் இன்னொரு ஆபத்து... வெறியேற்றுவது போல, ""முடியும்... முடியும்... எல்லாமே எல்லாராலும் முடியும்'' என்று "மோட்டிவேட்' செய்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள். தன்னம்பிக்கை உரைகள், சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் சாராயக் கடை, கள்ளுக் கடை மாதிரி வெறியேற்றும் என்றால், போதை தரும் என்றால், அவை ஆபத்தில் கொண்டு போய்விடும் என்று எச்சரிக்கிறேன்.

எல்லாராலும் எல்லாமே முடியும். உண்மைதான். ஆனால் அதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படும் தெரியுமா? கால விரயம் கணக்கில் கொள்ள வேண்டாமா? முதலில் அது அவசியமா? சுகி. சிவம் வெற்றிகரமான பேச்சாளர் என்று யாராவது சொன்னால் நான் மறுக்கமாட்டேன். ஒரு வெற்றிகரமான எழுத்தாளரும்கூட என்றால் அது நிரூபிக்கப்பட்ட விஷயம்... ஆனால் சிறப்பாகப் பரத நாட்டியம் ஆடுவார் என்றால் பொய்... பிரமாண்டமான பொய். அதை நிரூபிக்க நான் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன், ஆட முடியாதா? முயற்சி இருந்தால் முடியாதா என்று கேட்டால் ஒரே பதில்... அது என்னளவில் வேண்டாத வேலை!

அதே மாதிரிதான்... ஒருவரால் எல்லாம் முடியும் என்று வெறியேற்றினால் ஒவ்வொன்றாக முயன்று காலத்தை வீணாக்கக் கூடாது. பிறகு தோற்றவர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவாகலாம்.
அவசியமான ஒரு சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதிலும் 1, 2, 3 என்று முக்கியத்துவத்தை வரிசைப்படுத்திக் கொண்டு கவனமாக முயன்று ஒருவர் வெற்றியாளர் ஆக வேண்டும்.

கிராமப்புறங்களில் திட்டுவார்கள்... ""நாய் வாய் வைத்த மாதிரி''. ஒவ்வொன்றிலும் நுழைவது அநாவசியம். தேர்ந்தெடுத்துச் செயல்படுங்கள் - வெற்றி நிச்சயம்.
இன்றைய "மோட்டிவேஷனல்' முயற்சிகள் சிலரை வெற்றிப் போதைக்குள் வீழ்த்தும் சாராயக் கடைகள் மாதிரிப் புறப்பட்டுவிட்டன. அவை குறித்த என் எச்சரிக்கைகளும் கண்டனங்களும் உண்மையானவை. சமூக அக்கறை மிக்கவை. அரைகுறை அறிவுடையவர்கள், வெற்றியின் சூட்சுமம் விளங்காதவர்கள், தோல்வித் தேவதையின் தூதுவர்கள் பலர் இன்று பயிற்றுநர்களாகப் பவனி வருகிறார்கள். எச்சரிக்கை!
யாரோ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு எல்லாமே முடியும் என்று இழுத்துப் போட்டுக்கொண்டு நீங்கள் அவமானப்பட வேண்டாம். நம்மிடத்தில் உள்ள திறமைகளை முதலில் வரிசைப்படுத்திக் கொள்வோம். முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் திறமைகளையும் அடுத்து வரிசைப்படுத்திக் கொள்வோம். பிறகு இரண்டு பட்டியலும் சரி பார்க்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டிய திறமைகளில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றியைக் குவிக்கலாம்; தோல்வியைத் தவிர்க்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:40 pm

அரைகுறையான தன்முனைப்புப் பயிற்றுநர்கள் திருவள்ளுவரிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி ஒன்று இருக்கிறது.

"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்' என்பது அவரது ஆழம் மிக்க குறள்.

ஊக்கத்தின் ஊக்கி என்கிற வேலைதான் மேலே நான் விவரித்தது. அது தோல்வியில் முடியும் என்ற திருவள்ளுவர் கணிப்பு நுட்பமானது, திட்பமானது. அது அனுபவக் கொடை.

ஆஹா... திருவள்ளுவரை நான் வழிமொழிவதா என்று தமிழ்நாட்டின் வறட்டு அறிவாளிகள், செல்லாக்காசுகள் சிலர் புருவத்தை உயர்த்துவார்கள் என்பதை நான் அறிவேன். ஆம், என்னைத் திருவள்ளுவரின் துரோகியாகச் சித்திரித்து ஒரு தோல்வியாளர்கள் கூட்டம் எழுதியும் பேசியும் சந்தோஷப்படுகிறது. அவர்கள் கிடக்கிறார்கள்...

வள்ளுவக் கிழவனின் செல்லப் பேரனாகிய நான் என் வழிவழிச் சொத்தை, பரம்பரைச் செல்வத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன். இந்தக் குறள் விளங்கிய சிந்திக்க வேண்டிய குறள்.

நடிப்பின் இமயமா ரும் நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்து பெரும் துன்பம் அடைந்தார், நினைவிருக்கிறதா?

உன்னதமான கர்நாடக இசையின் சக்கரவர்த்திகள் திரைப்படம் எடுத்துக் கையைச் சுட்டுக்கொண்டார்கள், நினைவிருக்கிறதா?

பாரம்பரியப் புகழ் மிக்க தொழில் நிறுவனங்கள் சில தங்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத புதிய துறைகளில் காலடி வைத்துக் கல்லடி பட்ட கதை உங்களுக்கு மறந்திருக்காதே!

வாயும் வயிறும் வேகவேக ஊர் ஊராகப் போய்ப் பேசிச் சம்பாதித்த பணத்தை ஒரு பைனானஸ் கம்பெனியில் பார்ட்னர்μப் வைத்து, புகழ் பெற்ற ஒரு சமயச் சொற்பொழிவாளர் தொலைத்தார்!

இது பலருக்கும் தெரியாத ரகசியம்! இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன். இவை எதனால் நடந்தன? ஊக்கத்தின் ஊக்கி... இடைக்கண் நிகழ்ந்த முறிவுகள்!
எப்போதும் வெற்றியைப் பற்றி எழுதுகிற சுகி. சிவம் தோல்வியைப் பற்றி எழுதுகிறாரே என்று அஞ்ச வேண்டாம்.
கார் வாங்கும்போது என்ஜின் வேகம், குதிரைத் திறம், பறக்கும் பலம் பார்த்தால் மட்டும் போதாது. பிரேக் பற்றிய பிரக்ஞை வேண்டும். கிரேக்கத்திலிருந்து இந்தியா வரை படை எடுத்து வந்து இடையில் செத்துப்போய் நாடு திரும்ப முடியாமல் போன அலெக்ஸôண்டரின் தோல்வி
வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியது. அதே மாதிரி தெரியாத விஷயங்களிலும் புரியாத தொழில்களிலும் கவனத்தையும் காலத்தையும் தொலைத்துவிட்டு இடைக்கண் முறிதல் வாழ்க்கையில் கவனிக்கப்பட வேண்டியது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.

எனது எழுத்தில் இம்முறை எதிர்மறைச் சிந்தனைகளின் நெடி வீசுகிறதே என்று கவலை வேண்டாம். குண்டும் குழியுமான தோல்வியின் பாதையே இது என்று கண்டுபிடித்து அதைத் தவிர்த்துவிட்டு நீங்கள் பயணம் செய்தால்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 4:41 pm

16. கவலைப்படாதே சகோதரா!

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இதற்கொரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டவர்கள் மட்டுமே பிறரால் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நினைத்த வெற்றிகளைக் குவிக்க முடியும். அளவுக்கு மீறிப் பிறரது விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் குழப்பம் வரும்; முன்னேற்றம் தடைப்படும்.

நமது தோற்றம், நாம் உடுத்தியிருக்கும் துணிகள், தலை அலங்காரம், பயன்படுத்தும் பொருள்கள், தனித் திறன்கள் இவற்றைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். அதிலும் இளைய தலைமுறைக்குச் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என்றால் தளர்ந்து போவதோ, முகமும் அகமும் வாடுவதோ சரிதானா? பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பிறர் கேலி செய்துவிட்டால் தளர்ந்து போவது இளைய தலைமுறைக்குரிய இயல்பான விஷயம். இதிலிருந்து வெளியே வாருங்கள் என்று அழைக்கிறேன்.

ஒரு புகழ் பெற்ற டி.வி. விளம்பரம் பார்த்திருப்பீர்கள். கல்லூரிச் சிறுசுகளின் கலர் கலரான அணிவகுப்பு. ஒரு இளசைச் சில இளசுகள் கிண்டலடிக்கும் விளம்பரம்.
""இந்த வாட்டி நீ பர்ஸ்ட் ரேங்க் வாங்க மாட்ட போல இருக்கு'' என்று ஒருத்தி கேலி செய்ய, ""ஐ டோண்ட் கேர்'' என்று விட்டு விட்டுப் பதில் சொல்லும் ஒரு பாப்பா.
""இப்படித் தின்னுகிட்டே இருந்தா நீ குண்டாயிருவ'' என்று சொல்லிப் பலரும் சிரிப்பார்கள். அதற்கும், ""ஐ டோண்ட் கேர்'' என்பதே பதில்.
""இதென்ன உன் முகத்தில'' என்று ஒரு முகப் பருவை அவள் முகத்தில் சுட்டிக் காட்டியதும், ""அம்மா'' என்று அந்தப் பெண் சிணுங்கியதும் ஒரு முகப்பரு விளம்பரம் திரையில் ஜொலிக்கும்.

இந்த விளம்பரத்தின் முக்கியக் குறிப்பு - பிறர், தங்களது விமர்சனம் நம்மை மிகவும் பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் விமர்சனம் செய்கிறார்கள். இது உண்மை என்றால், நாம் பாதிக்கப்பட வேண்டும் என்றே பிறர் செய்யும் விமர்சனங்களால் நாம் பாதிக்கப்படக் கூடாது என்கிறேன் நான், சரியா?
நம் மீது அக்கறையுடன் விமர்சிப்பவர்கள் விமர்சனத்தை மதிக்கலாம். ஆனால் எல்லோருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நமது வெற்றி மாளிகையின் முக்கியமான படிக்கட்டு என்று நான் கருதுகிறேன்! சரியா?

முற்றும் துறந்து முனிவராகப் போனால்கூட முட்டாள் உலகம் அவரை விடுவதில்லை. குறை சொல்லும்... கேலி பேசும்...

ஓர் உதாரணம் சொல்லட்டுமா?

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி! கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசைகூட இல்லாத சுத்தமான சன்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்ரகிரியாரைச் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக