புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
2 Posts - 3%
prajai
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
2 Posts - 3%
Shivanya
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
Karthikakulanthaivel
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காலண்டரின் வரலாறு  Poll_c10காலண்டரின் வரலாறு  Poll_m10காலண்டரின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலண்டரின் வரலாறு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 1:32 am

கிரேக்கர்கள்தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.

கி.மு.700-ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12-வது மாதங்கள்)இருந்தன.

கி.மு.46-ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது. இதில்தான் சாதா ஆண்டு, லீப் ஆண்டு முறையை கொண்டு வந்தார்கள். இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் முறையே கிரிகோரியன் காலண்டர்.

பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.

ஏசு கிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது.

கிரிகோரியன் காலண்டர் கணக்குபடி ஜனவரி 1-ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31-ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752-ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது. டெயில் பீஸ் - ஜூலியன் காலண்டர் வழக்கத்திற்க்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்திருக்கின்றனர்.

1582 -ல் ஏற்பட்ட காலாண்டர் பிரச்சினை

இன்று பிறந்துள்ள 2012-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். பொதுவாக ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் ஆகும். லீப் வருடத்தில் மட்டும் 366 நாட்கள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.

பூமி ஒரு தடவை சூரியனை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு ஆகும். மிகத்துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிட முடியாது. அதனால் 365 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு வருகிறோம்.

மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) நான்கு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிலெடுத்துக் கொண்டு அதை ஒரு நாளாக கணக்கில் கொள்கிறோம். அதைத்தான் லீப் ஆண்டில் சேர்த்துக் கொள்கிறோம். 366 நாட்கள் உள்ளதை லீப் ஆண்டு என்கிறோம்.

இந்த ஆண்டில் வரும் அந்த ஒரு நாளை எதில் சேர்ப்பது? என்ற குழப்பத்திற்கு நானிருக்கிறேன் என்றபடி வரிந்து கட்டிக் கொண்டு பிப்ரவரி இருக்க, அதில் கொண்டு போய் சேர்த்தார்கள். லீப் ஆண்டு வருகையில் பிப்ரவரி மாதம் 29 நாட்களை கொண்டிருக்கும். சரி, இந்த மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) கணக்கில் கொள்ளாமல் விட்டால் அது பல நாட்களை சேர்த்துக் கொண்டு போய் முடியும். அப்புறம் ஆங்கிலப்புத்தாண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கும். அதனால் 1582- அக்டோபரில் ஒரு பிரச்சினையே நிகழ்ந்திருக்கிறது.

கிரிகோரியர் காலத்தில் ஜூலியன் காலாண்டர் முறைப்படி வருடத்திற்கு 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகிப்போனது. இதை சரி செய்ய 1582 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10 நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது. இதன் மூலம் 10 நாட்கள் பிந்தி வருவது சரிசெய்யப்பட்டது. அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதிய முறை கையாளப்பட்டது.

ஆங்கில மாதங்களின் பெயர்க்காரணங்கள்...

ஜனவரி, பிப்ரவரி என வரிந்து கட்டிக் கொண்டு வரும் ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. அவைகளை இங்கே காண்போம்:-

ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தனவாம்.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச். ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் கடவுளின் மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே. ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன். ஜூலை: ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்: ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்: அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்: நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காலண்டரின் வரலாறு  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 10:14 am

நல்ல தகவல்



காலண்டரின் வரலாறு  154550காலண்டரின் வரலாறு  154550காலண்டரின் வரலாறு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காலண்டரின் வரலாறு  154550காலண்டரின் வரலாறு  154550காலண்டரின் வரலாறு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக