புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_m10இவள்தான் விலைமாது...!? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் விலைமாது...!?


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 6:00 pm

First topic message reminder :

இவள்தான் விலைமாது...!?





பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!

என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!

இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!

கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!

பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 29, 2011 10:42 am

உங்கள் பின்னூட்டத்திர்க்கு நன்றி சார்லஸ்.

வள்ளுவன், மூதுரை, நம் பெரியவர்கள் இதை மட்டும் ஒழுக்கத்தவறு என்று கூறவில்லை. பொய் சொல்லுதல், புறங்கூறுதல், நன்றி மறத்தல், பயனில பேசுதல், கள் உண்ணுதல் என்றும் இன்னும் பல. இவை அனைத்தும் ஒழுக்கக் கேடுகள் தான், இன்று அடுத்தவரை ஏமாற்றி வாழ்வது திறமை என்று கூறப்படுகிறது. உண்மையில் நாம் அனைவரும் இந்த நூல்கள் கூறிய ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என்றால், அது சாத்தியமா? சமுத்யத்தில் அங்கீகாரம் உள்ள விஷயத்தை ஏற்பதும், அங்கீகாரம் இல்லாத விஷயத்தை ஏற்க மறுப்பதும் புதிதில்லை. ஆதலால் இதை பெரும்பாலானவர்களால் ஏற்க முடியாது. அது எப்படி சமுதாயம் சரி என்ற உடனே அதை சரி என்றும், சமுதாயம் தவறு என்று கூறுவதை தவறு என்றும் நம்மால் மண்டை ஆட்ட முடிகிறது. மகாத்தமாவும் மனிதனாக இருந்து தான் மகாத்மா ஆனார், இதை நாம் மறந்து விடக்கூடாது.

கொழுப்படுத்து இந்த தொழிலுக்கு வருபவர்களை நான் சரி என்று கூறவில்லை. தங்களின் விருப்பம் இல்லாமல் இது போன்ற படுகுழிகளில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். எல்லா நேரமும் நம் வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுக்க முடியாது.

ஒருவனுக்கு 3 இட்லி சாப்பிட்டால் போதும், ஒருவன் 10 இட்லி சாப்பிட வேண்டும். நீங்கள் யோகா செய்து அனைவரைப்போல 3 இட்லி தான் சாப்பிட வேண்டும் என்று கூற முடியுமா? கூறுவது சரியா? காமமும் இது போல் தான் அனைவருக்கும் ஒரே பசி இல்லை. இந்த பசி தீர்க்க ஒரு வடிகால் தேவைப்படுகிறது. இப்படி ஒரு பிரிவு இல்லை என்றால் குடும்பப் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரிக்குமே தவிர குறையாது.

நீங்கள் சொல்லும் உலகம் வர தலைவர்கள் தேவையில்லை. பொய், களவு, கலவு, நன்றிமறத்தல், புறங்கூறுதல் என்று எந்த ஒரு தவறும் செய்யாத மக்கள் வேண்டும். ஒன்றைச் செய்யலாம், அது சரி என்றும் மற்றொன்றை செய்யக்கூடாது தவறு என்றும் நாம் காலத்துக்கு, இடத்துக்கு தகுந்தது போல் முடிவு செய்கிறோம். சரி தவறு என்பது அவர் அவரை சுற்றி உள்ள காரணிகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

காசு, பதவி கிடைத்தால் தங்கள் கடவுளையோ, நாட்டுக்குடிஉரிமையோ இன்றைய மனிதர்கள் மாற்றத் தயங்குவதில்லை.இது சரியா தவறா. சரி என்று நினைத்தவர்கள் மாறினார்கள், இது தவறு கேவலம் என்று நினைத்தவர்கள் அதே இடத்தில் நின்று விட்டனர். இதில் எது சரி எது தவறு.

உலகில் அனைவருக்கும் சரி அனைவருக்கும் தவறு என்ற ஒன்று இல்லை, கடவுள் உட்பட.

சில விஷயங்களை புரிந்து கொள்ள வெளிநாட்டில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உள்நாட்டு, உளவியல் உண்மைகளை உணர்ந்தால் போதும்.






சதாசிவம்
இவள்தான் விலைமாது...!? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 11:20 am

“உண்மையில் நாம் அனைவரும் இந்த நூல்கள்(வள்ளுவம்,மூதுரை) கூறிய ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என்றால், அது சாத்தியமா?”

சற்று சிரமம்தான். அதற்கு அனைவரும் அந்நூல்களை தினந்தோறும் வாசித்து அப்பியாசப்படுத்திட வேண்டும். இது அனைவராலும் கடைபிடிப்பது சற்று நடைமுறை சிரமங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், மனசாட்சிபடி தவறு என உள்ளுணா்வு நம்மை அறிவுறுத்தும்போது அப்படிபட்டவைகளை விட்டு நாம் விலகி செல்வது சாலச் சிறந்தது. அது மட்டுமல்ல., ஒருவன் தன்னை கடவுளிடம், பக்தி மாா்க்கத்திலும், அதன் உண்மை கொள்கைகளிலும் பின்பற்றி, உண்ணா நோன்பு இருக்கும்போது சகல (கா...)இச்சைகளிலிருந்து மற்றும் தீமைகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள முடியும். இது இன்றை நிலையில் சாத்தியம்தானா? என்றால் சாத்தியம்தான். அதில் மனது முழு ஈடுபாடு காட்டும் நிலையில் சாத்தியமே.

“காமமும் இது போல் தான் அனைவருக்கும் ஒரே பசி இல்லை. இந்த பசி தீர்க்க ஒரு வடிகால் தேவைப்படுகிறது. ”

இந்த பசி தீா்க்க ஒரே வடிகால் ஆணுக்கும் சாி; பெண்ணுக்கும் சாி. ஒரே தீா்வு திருமணம்தான். மணவாழ்க்கையை மனிதனுக்கு கடவுள் ஏற்படுத்தின நோக்கமே - பூமியில் மனுக்குலத்தினில் விபசாரம், வேசித்தனம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
எவ்வளவு பசி வந்தாலும் உணவை யாராவது திருடி தின்பாா்களா? நமக்கு சொந்தமானதில்தான் பசி ஆற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, அடுத்தவருக்கு சொந்தமானதில் பசி‌ேயா, தாகமோ தணித்துக் கொள்ளக் கூடாது. காட்டாற்று வெள்ளம் மழைக்காலங்களில் வரத்தான் செய்யும். நாம்தான் அதற்கு அணைபோட்டு வாய்க்கால் வழியாக, வயல்களில் பாய்ச்ச வேண்டுமே தவிர, அப்படியே அணைகடந்த வெள்ளமாக விட்டுவிடுவொமானால் அது பலத்த சேதத்தை ஏற்படுத்திவிடும்.

“இப்படி ஒரு பிரிவு இல்லை என்றால் குடும்பப் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரிக்குமே தவிர குறையாது.”

நல்ல வேடிக்கையான கருத்து நண்பரே! யாராவது தலை அாிக்கிறது என்று சொல்லி கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொாிந்து கொள்வாா்களா? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாச்சு போங்க. இல்லத்தரசி நினைத்தால் அடங்காத இப்படிப்பட்ட காங்கேயங்காளைகளை அடக்கிவிட முடியும். மீண்டும் சொல்கிறேன் இப்படிப்பட்ட வடிகால்கள் குடும்பதிற்கு அழிவை, எய்ட்ஸ் நோயை, அவமானத்தை, தற்கொலையை, கள்ளத்தொடா்புகளை, பொருளாதார இழப்புகளை கொண்டு வந்து விடும். எச்சாிக்கை.

“காசு, பதவி கிடைத்தால் தங்கள் கடவுளையோ, நாட்டுக்குடிஉரிமையோ இன்றைய மனிதர்கள் தயங்குவதில்லை. இது சரியா தவறா.”

உண்மைதான். காசுக்காக ஆண்டவா் இயேசுகிறிஸ்துவை யூதாஸ்காாியோத்து காட்டி கொடுத்ததும், கட்டபொம்மனை எட்டப்பன் காட்டி கொடுத்ததும் சாித்திரத்தில் நடந்த ஒன்றுதான். அதற்காக நாமும் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. சாித்திரத்தில் இப்படிப்பட்ட கரும்புள்ளிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரத்தான் செய்வாா்கள். அவா்களை நாம் பின்பற்றிட வேண்டாம். நல்லதையே பின்பற்றி நலமடன் வாழ்வோம்.



இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 12:49 pm

ஆரோக்கியமான விவாதம் நடைபெறுகிறது. பாராட்டுக்கள் சார்லஸ் மற்றும் சதாசிவம்.

விபச்சாரம் சரியான தொழில் அல்ல, அதில் ஈடுபடுவதற்குக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் சமுதாயத்தின் புண்கள் என்னும் என் சொந்தக் கருத்தை இங்கு முன் வைத்து என் கருத்துக்களைக் கூற விழைகிறேன்.

Adultery மற்றும் prostitution என்ற இரண்டு வகையான விபச்சாரங்கள் காலம் காலமாக அனைத்துச் சமூகங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இங்கு எது adultery என்று சதாசிவம் தெளிவாக விளக்கியுள்ளார்.
சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.


இதுதான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் விவாகரத்து, கொலை, தற்கொலை போன்றவற்றின் காரணிகளாகத் திகழ்கிறது.

prostitution - என்பது களவொழுக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தொழிலை இன்று தாய்லாந்து போன்ற நாடுகள் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களைவிட adultery கேவலமானது என்பதை சதாசிவம் ஆணித்தரமாகக் கூறுவது பாராட்டத்தக்கது.

நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், காம வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாரீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிர் பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.

சார்லஸின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாருமே இருக்க முடியாது, அவ்வளவு அழகாகக் கூறியுள்ளார்.

ஆனால் ஒரு சமுதாயம் என்பது நல்லவர்களை, ஒழுக்கமானவர்களை மட்டுமே கொண்டிருப்பதில்லை, மாறாக சார்லஸ் கூறியுள்ள அத்தனை மனிதர்களும் நிரம்பியதுதான் ஒரு சமுதாயம் எனக் கூறப்படுகிறது. இந்தக் குணமுள்ள மனிதர்களிடமிருந்து குடும்பப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு இந்த விபச்சாரத் தொழில்தான் முக்கிய காரணம்.

திருமணத்தின் மூலமே அந்தரங்க ஆசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சார்லஸ் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதையே நானும் வலியுறுத்துகிறேன்.

ஆனால் விபச்சாரம் என்பதும் தவிர்க்க முடியாத தொழிலாகிவிட்டது இன்றைய சமுதாயத்தில். ஆனால் அதற்கு வறுமை, கட்டாய சூழ்நிலை போன்றவற்றால்தான் இத்தொழிலுக்கு வந்தேன் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்கள்.

எளிதாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறிக்கோள். தமிழ்கத்திலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக மலேசியா வரும் 80% பெண்கள் இந்தத் தொழிலில்தான் ஈடுபடுகிறார்கள்.



இவள்தான் விலைமாது...!? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 1:26 pm

வினவு தளத்தில் இந்தக் கேள்வி பதில் வெளியாகியுள்ளது, இந்த விவாதத்திற்குப் பொருத்தமாக இருக்குமென்பதால் இங்கு பதிவிடுகிறேன்.

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?

- சத்யா

___________________________________________

அன்புள்ள சத்யா,

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.

இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.

பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.

சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.

மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.

ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.

பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.

மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.

8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.

மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.

பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.

சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.

நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.

அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?

காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!

காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.

ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.



இவள்தான் விலைமாது...!? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 2:32 pm

திரு.சிவா அவா்களுக்கு நன்றி. இவள்தான் விலைமாது...!? - Page 2 678642

திரு.சதாசிவத்திற்கு எனது மனமாா்ந்த நன்றிகள். இவள்தான் விலைமாது...!? - Page 2 678642 இவள்தான் விலைமாது...!? - Page 2 678642

இவள்தான் விலைமாது...!? - Page 2 154550 இவள்தான் விலைமாது...!? - Page 2 154550 இவள்தான் விலைமாது...!? - Page 2 154550



இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550இவள்தான் விலைமாது...!? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 29, 2011 3:31 pm

தெளிவான ஆழமான விளக்கத்திற்கு நன்றி அண்ணா.
நன்றி சார்லஸ்.

நன்றி நன்றி



சதாசிவம்
இவள்தான் விலைமாது...!? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக