புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

First topic message reminder :

நக்கீரன்


தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:46 am

இந்தப் புராணக் கதை ஆரிய வேதமத சாத்திரங்களையும், யாகம் வளர்த்து அதில் ஆடு மாடு போன்ற உயிர்கள் பலியிடப்படுவதையும் எதிர்த்த திராவிடர்களை நாத்திகர்கள் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டது.

பிறப்பில் வேற்றுமைகள். ஏற்றத் தாழ்வுகள். புரோகிதம் செய்ய உயர் சாதியினருக்கே உரிமை,

இன்ன சாதியினர்தான் கடவுளை பூசிக்கலாம், சோறு படைக்கலாம், குளிப்பாட்டலாம்,

சமஸ்கிருதம் தேவ மொழி! தமிழ் நீச மொழி! தமிழ் பைஸாச மொழி, தமிழில் வழிபாடு கூடாது, காரணம் கடவுளுக்குத் தமிழ் புரியாது, தெரியாது.

சூத்திரத் .தமிழன் கோயில் பூசை செய்யக்கூடாது, அவனுக்கு புசை செய்யும் அருகதை இல்லை.

தமிழன் கட்டிய கோயிலுக்குள்ளே அவன் நுளையக் கூடாது. அந்தத் தீட்டைப் போக்க குடமுழுக்கு (கும்பாபிசேகம் ) செய்ய வேண்டும். ஆனால் தமிழில் குடமுழுக்குச் செய்யக் கூடாது, அதனை ஆகமம் அனுமதிக்காது.

இவ்வாறெல்லாம் சாத்திரங்கள் சொல்லுமேயானால் மகாகவி பாரதியார் பாடியிருப்பதைப் போல் அவை சாத்திரங்கள் அல்ல தமிழினத்துக்கு எதிரான சதியென்று சொல்வேன்.

காஞ்சி காமகோடி பீட ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்க் காற்றை சுவாசித்துக் கொண்டு, காவிரித் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தமிழ் நீச பாஷை எனப் பகிரங்கமாக மேடைகளில் பேசுகிறார். இந்துக் கடவுளர்க்கு தமிழ் தெரியாது என்று இறுமாப்போடு சொல்கிறார்.

சந்திரமவுலீஸ்வரருக்கு பூசை செய்யும் நேரம்வரை நீச பாஷையான தமிழில் பேச மாட்டார். தமிழில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக மவுன விரதம் இருக்கிறார்!

தலித்துகளைக் கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்கிற ஜெகத் குருவும் இந்த சங்கராச்சியார்தான்.

அறுபத்து மூன்று நாயன்மார்களை சாதிவாரியாக, அந்தந்த சாதியார் அந்தந்த நாயன்மாரை வழிபட வேண்டும் என்று கூறி வருணதர்மத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறவரும் இவர்தான். அதற்கு சாமரம் வீசுபவரும் இவர்தான். சாதி பேதத்திற்கு புத்துயிர் ஊட்டுபவரும் இவர்தான்.

ஏனைய மதங்கள் மக்களை அணைத்து ஒன்றுபடுத்துகிறது. இந்து மதம் ஆயிரம் சாதிகளாக மக்களைக் கூறு போடுகிறது! தீண்டாமை பாராட்டுகிறது!

மேலே குறிப்பிட்ட சங்கராச்சாரியார் வேறு யாருமல்ல. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்தது, கொலை செய்ய சதி செய்தது போன்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் வேலூர் சிறையில் கம்பி எண்ணிய பின்னர் பிணையில் வெளிவந்துள்ள அதே காஞ்சி காமகோடி பீட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சியார்தான்.

இறைவன் ஒரு மொழிக்கே உரியவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்கு (எல்லாம் தெரிந்தவர்) குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு விருப்பமான மொழி என்றும் விருப்பம் இல்லாத மொழி என்றும் ஒன்றும் இல்லை.

'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்' தமிழ் ஞானசம்பந்தர், 'தமிழோடு இசை பாடல் மறந்தறியாத' அப்பர், 'நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்" என்று பாடிய சுந்தரர் இவர்களைவிட காஞ்சி சங்கராச்சாரியார் பக்தியில் உயர்ந்தவரா? அருளில் சிறந்தவரா? அறிவில் பெரியவரா? ஒழுக்கத்தில் சிறந்தவரா?

இந்து மதத்தில் காணப்படும் மூடபக்தி, சாதி, தீண்டாமை, பிராமணிய ஆதிக்கம், சமஸ்கிருத மேலாண்மை, காலத்துக்கு ஒவ்வாத சாத்திரங்கள், கோத்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது நாத்திகம் என்றால் வள்ளுவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், பாரதியார், சிவவாக்கியார் மற்றும் சித்தர்கள் எல்லோருமே நாத்திகர்கள்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:48 am

தமிழகத்தில் கால் பதித்த மதங்கள்

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழர் பண்பாட்டுக்கு வேலி கட்டிய நூல். ஆரிய தர்மத்தையும் மனு தர்மத்தையும் அடியோடு கண்டித்தும் மறுத்தும் எழுதப்பட்ட ஒழுக்க நூல். நீதி நூல். சிந்திக்கச் சொல்லும் நூல். பகுத்தறிவு புகட்டும் நூல். பொது மறை. திருக்குறளை காய்தல் உவத்தல் இன்றி ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மைகளை புரிந்து கொள்வார்கள்.

தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் இரண்டோர் முறைதான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் சொல்லப்படும் போதும் அது தெய்வம் என்ற பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய எல்லாம் தெரிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், தோற்றமும் அழிவும் இன்றி என்றும் உள்ளவன் என்ற பொருளில் அது கூறப்படவில்லை.

கடவுளுக்கு கற்பிக்கப்படும் எண் குணங்களான -

1) தன் விருப்பம்போல் எதையும் செய்வோன்
2) ஒரே நேரத்தில் முக்காலத்தையும் அறிபவன்,
3) எல்லா அறிவையும் இயல்பாய் உடையோன்
4) அளவிலா ஆற்றல் பெற்றோன்
5) வரம்பிலா இன்பம் உடையவன்
6) பேரருளாளன்
7) பாசங்கள் சாராதவன்
8) தூயவன்


பிற்காலத்தில் எழுந்தவையாகும்.

சங்க காலத்தின் முற்பகுதியில் மதம் இருக்கவில்லை. போரில் விழுப்புண் பட்டு வீரச் சாவு எய்திய படை வீரர்களுக்கு ஊர்ப்புறத்தில் நடுகல் நாட்டி படையல் படைத்து வழிபடும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. சிறு தெய்வ வணக்கம் இருந்திருக்கிறது.

சங்க காலப் பிற்பகுதியிலும் ஒரு நிறுவன மதம் (ழசபயnணைநன) இருக்கவில்லை. ஆனால் ஆரியரரது சமயமான வைதீக நெறியும் ஆரியக் கடவுளரும் தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல கால் பதிக்கத் தொடங்கின. முதலில் நாடாளும் மன்னர்களே வேத நெறியைத் தழுவினார்கள்.

சிலப்பதிகாரம் (இரண்டாம் நூற்றாண்டு) இந்திர விழா எடுத்த காதையில் பிறவா யாக்கை பெரியோன் கோயில், ஆறுமுகத்தையுடைய செவ்வேள் கோயில், பலதேவன் கோயில், நீலமேனி நெடியோன் கோயில், இந்திரன் கோயில், நால்வகைத் தேவர் மூவாறு கணங்கள், பவுத்த பள்ளிகள், சமணப் பள்ளிகள், வேள்விச் சாலைகள் மற்றும் வேறு வேறு கடவுளர் பல்கிப் பெருகி இருந்ததைக் காண முடிகிறது.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களுக்கு கடவுள் வாழ்த்துப் பாடப்படவில்லை. பிற்காலத்தில்தான் பாரதம் பாடிய பெருந்தேவனார் அவற்றுக்கு கடவுள் வாழ்த்துப் பாடினார்.

சிலப்பதிகாரத்துக்கு முந்திய திருவள்ளுவருடைய காலத்தில் சமணம், பவுத்தம், வைதீக மதமான ஆரிய தர்மமும் தமிழகத்தில் ஊடுருவிட்டன.

சமண, பவுத்த மதங்களே தமிழர்களிடையே துறவறத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தின.

திருக்குறளில் சமண, பவுத்த கோட்பாட்டை ஒட்டிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கொல்;லாமை, புலால் மறுத்தல், கள் உண்ணாமை, நிலையாமை, பிறன் இல்விளையாமை, துறவு, வாய்மை, அழுக்காறாமை, வெஃகாமை, அவா அறுத்தல் இந்த இரு மதங்களது கோட்பாடுகளுக்கு இசைவானதாகும்.

சங்க காலத் தமிழரிடையே நிலவி வந்த புலால் உண்ணல், கள் உண்ணல், பரத்தையர் உறவு திருக்குறளில் மிகவும் கண்டிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் மனுதர்ம கொள்கையை மறுத்து உரைக்கிறார். மனுதர்மம் பிறவியினாலே பார்ப்பான் உயர்ந்த சாதி என்கிறது. திருக்குறள் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் மூலம் மனித குலம் ஒன்று அதில் உயர்வு தாழ்வு இல்லை என ஆணித்தரமாக நிலை நாட்டுகிறார்.

மனுதர்மம் ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியன் ஆக மாட்டான், அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாக மாட்டான் என்கிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:49 am

ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு: கர்மஸமாதிசத்?
எதேஸாமேவ வர்ணானாம் கஸ்ரூஷா மனஸ_யயா
(மனுதர்மம்)

திருக்குறள் பிறப்பின் அடிப்படையில் அல்லாது ஒழுக்கத்தின் அடிப்படையில் மட்டும் பார்ப்பனன் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன்தான் என்கிறது.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
(குறள் - 134)

பார்ப்பான் கற்ற மறைகளை மறந்தாலும் மீண்டும் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்தில் இருந்து குறைந்து விடுவானேயானால் அவனுடை குடிப்பிறப்பு கெட்டுவிடும்.

தமிழர்கள் தங்கள் பண்பாடு, நாகரிகம் பற்றி பெருமைப்பட வைக்கும் ஒரே நூல் திருக்குறள்தான்;! தமிழர்கள் உலகுக்குத் தந்த அரிய கொடை திருக்குறள்தான்;! திருக்குறள் உலகப் பொதுமறை என்பது உண்மைதான்!

அதனால்தான் மகாகவி பாரதியார் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனப் போற்றினார்.

மக்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை இன, மொழி, தத்துவம், சமயம் இவற்றுக்கு அப்பால் நின்று உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான விழுமியங்களை இந்த நூல் மூலம் அறிவியல் தளத்தில் இருந்து திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

அடுத்த உலகில் அல்ல இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழி காட்டுகிறார். அவரிடம் தெய்வன்தன்மையோ அருளோ இல்லை.

வாழ்க்கை என்ற ஓடத்தை செலுத்த வழியை மட்டும் காட்டுகிறார். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டிய பொறுப்பு மனிதர்களைச் சார்ந்தது.

பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் திருவள்ளுவரை புலவர்க்கு அரசன் எனப் போற்றியும் திருக்குறளை வேதம் என ஏற்றியும் பாராட்டியுள்ளனர்.

தண்ணிய தமிழில் பாடிய திருவள்ளுவ மாலை என்ற நூலில் கீழ் வரும் பாடல் இடம் பெற்றுள்ளது. பாடலைப் பாடியவர் கல்லாடனார் என்ற புலவர்-

ஒன்றே பொருள் எனின்வேறு என்ப, வேறு எனின்
அன்று என்ப ஆறு சமயத்தார்- நன்றென
எப்பலா லவரும் இயையவே, வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.
(திருவள்ளுவ மாலை 9)

அறுவகை சமயத்தோரும் ஒரு சமயத்தோர் தமது நூலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே என்று நாட்டுவார்கள்.

மற்றொரு சமயத்தார் தம் நூலிலே அதனை மறுத்து அவை வேறாம் என்று நாட்டுவர்.

அப்படி வேறென்று நாட்டின், பின்னொரு மதத்தார் அதனை அன்றென்று மறுப்பர்.

இவ்வாறு சமய நூல்கள் எல்லாம் முரண்படுகின்றன.

திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்ட குறளை நன்றென்று கொள்ளுதற்கு எவ்வகைப் பட்டோரும் உடன்படுவர்.

ஒவ்வொரு சமயத்திலும் அந்த சமயத்துக்குரிய நூல் அல்லது நூல்கள் மனிதர்களால் தங்கள் புத்திக்கெட்டியபடி எழுதப் பட்டவையே. அதனாலேயே அவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சமணமும் பவுத்தமும் வைதீக நெறிகளையும், வேள்விச் சடங்குகளையும், கடவுட் கொள்கைகளையும் மறுத்துக் கூறின. எதிர்த்து வாதிட்டன.

துவைத வேதாந்தக் கோட்பாட்டை அத்வைத வேதாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை. இரண்டும் நேர் எதிரானவை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:50 am

இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை. பொருட் தன்மையில் உயிர் வேறு இறைவன் வேறு. உயிர் இறைவனல்ல என்பதை சித்தாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை.

சங்கரரின் (கிபி 788-820) அத்வைதத்தை (ஆன்மாவே இறைவன்) இராமனுசர் (கிபி 1012-1137) ஏற்க மறுத்து விசிட்டாத்துவைத கோட்பாட்டை உருவாக்கினார்.

பிரமம் நிர்க்குணமா? அல்லது சகுணமா? என்ற கேள்விக்கு பிரம்மம் சகுணம் என்ற கொள்கையை இராமனுசர் கொண்டிருந்தார்.

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம் திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவமும் நீண்ட காலமாக சண்டையிட்டு வந்திருக்கின்றன.

இந்த வைதீக, வேத, சைவ கோட்பாடுகளை கிறித்துவ, இஸ்லாமிய சமயக் கணக்கர்கள் ஒத்துக் கொள்வதில்லை!

கிறித்துவ மதக் கோட்பாட்டை முற்றாக இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. யேசு கடவுளின் மகன் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

இடைக் காலத்தில் வைணவமும் சைவமும் ஒன்றோடு ஒன்று போரிட்டு வந்திருக்கின்றன.

மேலே கூறியது போல் மனிதர்கள் தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டியபடி, தங்கள் தங்கள் பட்டறிவுக்கு எட்டியபடி கோட்பாடுகளை உருவாக்கியதால் அவை ஒன்றுக்கு ஒன்று முரண் பட்டன.

மதக் கோட்பாடுகள் போலவே சமயக் கடவுளரும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவையே. ஒவ்வொரு சமயமும் தங்கள் கடவுளே மெய்யான கடவுள் என்றும் ஏனைய மதக் கடவுளர் பொய்யான கடவுளர் என்றும் சண்டை பிடிக்கின்றன.

திருக்குறளின் பெருமைக்கு பல காரணம் இருக்கலாம். ஆயினும் இரண்டு காரணங்கள் அதன் அத்தனை மாண்புக்கும் அடிப்படையாக இருக்கின்றன. ஒன்று திருக்குறள் மட்டும் -

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப். பொருள் இது என்ற வள்ளுவன்'
(கல்லாடம்-172)

இன்றுள்ள கல்லாடம் என்ற நூல் சிவனுடைய பெருமையைப் பற்றியும், திருவிளையாடல்கள் பற்றியும் போற்றிப் பேசும் நூல்.

சுமய நூல்களில் இதுவொன்றே திருவள்ளுவரை இவ்வண்ணம் போற்றுகிறது. சுமயங்கள் உறுதிப் பொருள் நான்கில் வீடு பேற்றையே வற்புறுத்துகின்றன. திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களைப் பற்றி மட்டும் பேசுகிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கு பிறிதான விடு விடப்பட்டு விட்டது.

மேலே கல்லாடனார் என்ற புலவர் திருவள்ளுவ மாலையில் சொல்லியிருக்கும் அதே கருத்தை சமய நூலான கல்லாடம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:53 am

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா?

திருக்குறள் சமயவாதிகள் கூறும் கடவுள், இந்து, பிரார்த்தனை, தியானம், அர்ச்சனை, அபிசேகம், தீர்த்தம், யாத்திரை, பக்தி, பாவம், புண்ணியம், மோட்சம், பிராமணன், சூத்திரன், சாதி, இவைபற்றி எதுவுமே சொல்லவில்லை! இந்தச் சொற்களே திருக்குறளில் இல்லை!

திருவள்ளுவர் சமயவாதிகளைப் பின்பற்றி அறநெறிகளைக் கூறவில்லை. நாம் வாழும் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறநெறிகள் பற்றியும், பொருள் பற்றியும், இன்பம் பற்றியும் மட்டுமே அறிவுரை சொல்கிறார்.

திருக்குறளில் உள்ள பொருட்பால் இன்று பொருளியல் (Economics) வணிகவியல் (Commerce) முகாமைத்துவம் (Managaement) ஆளுமையியல் (Administration) அரசியல் (Politics) ஆட்சியியல் (Political
Science
) ஆகிய சமுதாயக் கலைகளை உள்ளடக்கி உள்ளது. அதாவது அன்று பொருள் என்ற ஒரே சொல்லில் சொல்லப்பட்ட இயலில் இருந்து இவ்வியல்கள், கலைகள் பிரிந்தன.

கிரேக்கத்திலும் பல இயல்கள் தத்துவம் என்ற ஒரே சொல்லில் அடக்கப்பட்டன. அவற்றை எடுத்துச் சொன்ன அறிஞர்கள் தத்துவவாதிகள் என்ற ஒரே சொல்லால் குறிக்கப்பட்டனர்.

திருவள்ளுவர் அறிவியலுக்கே முதன்மை இடம் கொடுக்கிறார். 'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்றும் 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” எனத் தமிழில் பகுத்தறிவுக்கு இலக்கணம் சொல்லிய முதல் புலவர் அவர்தான்.

அதற்கு முன்னர் கவுதம புத்தர் (கிமு 563-483) அவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். 'மற்ற ஆதாரங்கள் பழக்கவழக்கங்கள் என்பவைகள் எப்படியிருந்தாலும் உன் அறிவைப் பயன்படுத்திக் கொள்! எந்தச் செயலையும் பட்டறிவின்படி ஆராய்ந்து பார்! முன்னாள் பழக்க வழக்கங்கள், பெரியவர்கள் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்கள் சொன்னது, நீண்ட நாளாக இருந்துவருவது என்பதற்காக எதையும் எடுத்துக் கொள்ளாதே” எனப் புத்தர் தனது சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

கிரேக்க தத்துவவாதியான சோக்கிரடீஸ் (கிமு 469-399) 'எதனையும் கேள்விகளை எழுப்பி நுணுக்கமாக ஆராய்ந்து சான்றுகளின் அடிப்படையில் உண்மையை அறிந்து கொள். அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக எதையும் உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் அப்படிப்பட்டவர்கள் குழப்பவாதிகளாகவும் பகுத்தறிவு அற்றவர்களாகவும் இருக்கக்கூடும்” என்றார்.

கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்காத தத்துவவாதிகள் புத்தர், மகாவீரர் (கிமு 540-468) ஆகிய இருவரே! ஏனையோர் ஆராய்ச்சி செய்வதன் மூலம் நித்தியப் பொருளை அறிந்து எண்பிக்க முயன்றனர்.

ஆராய்ச்சி எதுவுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் பரம்பொருளை உணர்ந்தவர்கள் பக்தி நெறியை மேற்கொண்டனர். பக்திநெறி பாமரமக்களுக்காக உருவாக்கப்பட்ட நெறியாகும்.

புத்தர், மகாவீரர் இருவரது கோட்பாடுகள் திருவள்ளுவர் மீது செல்வாக்குச் செலுத்தி இருக்கும் என எண்ணுவதில் தவறில்லை.

புத்தரின் கருத்தையொட்டி 'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” என மெய்யுணர்த்தல் (36) என்ற அதிகாரத்தில் வரும் குறள் (355) மூலம் திருவள்ளுவர் கூறியிருயிக்கிறார்.

எந்தப் பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அத்தோற்றத்தின் படியே கண்டறியாமல் அப்பொருளினுள் நின்று உண்மையாகிய பொருளைக் காண்பதே அறிவாகும்.

மேலும், அறிவுடமை (43) என்ற அதிகாரத்தில் 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் (423) மூலம் சொல்கிறார்.

எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையைக் காண்பதே அறிவாகும்.

'அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற குறளும் (430) அறிவுடமை என்ற அதிகாரத்தில்தான்; ( 43) வருகிறது. அறிவுடமை என்றால் கல்வி கேள்வி இரண்டாலும் வருகிற அறிவோடு உண்மை அறிவைத் தெரிந்து கொள்ளல். இந்த உண்மை அறிவை எல்லோரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தேடவேண்டும். உண்மை அறிவு கைகூடினால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:54 am

திருவள்ளுவர் பகுத்தறிவை வற்புறுத்தியதன் விளைவாகவே திருக்குறள் வேத சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. வேத சமய சேற்றில் புதைந்து போன சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், ஆரியச் சக்கரவர்த்திகள் அதனைப் போற்றாது விட்டார்கள்.

நாம் பெருமை பேசும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்கள், எண்ணாயிரம், திருபுவனை போன்ற ஊர்களை இறையிலி நிலங்களாக நிவந்தம் செய்தும் வேதம் படிக்க வேத பாடசாலைகள் நிறுவியும் அந்தணர்கள் தாள் பணிந்து ஆண்டனரே தவிர அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் நிறுவி திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்கள் என்று வரலாறு இல்லை.

அவர்களது அரசாட்சியில் மனு, மிடாக்சாரம், ஹேமாத்ரி, ஜுமுக வாதனா எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்த சாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

“இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன" என்று சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு - பாகம் 2 -பக்கம் 95) எனும் நூலில் வரலாற்றாசிரியர் திரு.மா. பாலசுப்பிரமணியன் குறித்துள்ளார்.

ஆபாச நூல்களான பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், பகவத் கீதை போன்ற நூல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெருமையில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசர்கள் மற்றம் சமயவாதிகளால் திருக்குறளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஓர் கசப்பான உண்மை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் பகவத் கீதையை திருக்குறளோடு ஒப்பிட்டால் முன்னது உறை போடக்கூடக் காணாது.

ஆகவேதான் பெரியார், அறிஞர் அண்ணா தலைமையில் திராவிடர் இயக்கத்தவர் தமிழர்களை இழிவு செய்து ஆரியக் கருத்துக்களை பரப்பும் இராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று கூறினார்கள். (மேலும் இது பற்றி அறிய விரும்புவர்கள் அண்ணாவின் தீ பரவட்டும் ஆரியமாயை மற்றும் கம்பரசம் ஆகிய நூல்களை வாங்கிப் படிக்கவும்.)

திருவள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனனுக்கும் பிறந்தவர் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை வள்ளுவரை இழிவு படுத்த இட்டுக்கட்டி எழுதப்பட்ட புனைந்துரை. வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட கற்பனைக் கதை.

அப்படிக் கதை புனைந்ததின் நோக்கம் கல்வி பார்ப்பனனுக்கு மட்டும் சொந்தமானது. பார்ப்பனன் மட்டுமே அறிவாளி, பறைச்சி வயிற்றில் அறிவாளியான பிள்ளை பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் பார்ப்பன விந்து சம்பந்தம் ஏதாவது இருந்திருக்க வேண்டும் என்பதை நிலை நாட்டவே தங்களை உயர் சாதியினர், பூதேவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் அப்படி எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் ஏனைய புலவர்களைப் போல கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம்.

கடவுள் என்ற சொல் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமே காணப்படுகிறது.

திருக்குறள் அதிகாரங்களுக்கு அந்த அதிகாரத்தில் காணப்படும் சொற்களைக் கொண்டே தலைப்புக் குறிக்கப்படுவது பெருவழக்காகக் காணப்படுகிறது.

திருக்குறள் 5வது அதிகாரத் தலைப்பு புதல்வரைப் பெறுதல் என்பது தவறானதாகும். மக்கள் பற்றிய ஆரியர்களது கருத்தினை வலிந்து புகுத்தவே பிற்காலத்தவர் அவ்வாறு தலைப்பிட்டுள்ளார்கள். புதல்வரைப் பெறுதல் என்ற சொல் அந்த அதிகாரத்தில் வரும் 10 குறள் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. மக்கட் பேறு என்று இருப்பதே பொருத்தமானது. அதுவே வள்ளுவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களாகும். இந்த அதிகாரத்தில் வரும் முதற் குறளிலேயே வள்ளுவர் 'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவிறிந்த மக்கட்பேறு அல்ல பிற' எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். பேறு என்றால் செல்வம் என்று பொருள்.

தற்கால உரை ஆசிரியர்கள் புதல்வரைப் பெறுதல் என்பதற்குப் பதில் மக்கட் பேறு என்றே தலைப்பிட்டுள்ளார்கள்.

எனவே கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பு இடைச் செருக்கலாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வ. உ. .சிதம்பரனார் போன்ற தமிழ் அறிஞர்; திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என வாதிடுகிறார்.

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. அதில் இந்த 3 அதிகாரங்களையும் நீக்கி விட்டு 130 அதிகாரங்களை வைத்துக் கொண்டால் போதுமானது என்கிறார். வ.உ.சி. தம் கோள் நிறுவப் பல தருக்க நெறிப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:00 am

1) துறவறவியலில் மெய்யுணர்தல் வருகிறது. அப்படியாயின் பாயிரத்தில் வரும் நீத்தார் பெருமை தேவையா? மிகை எனக் கொள்ள வேண்டும்.

2) வான் சிறப்பு வழிபாட்டு நோக்கமுடையதன்று.

3) மூன்று அதிகாரத்துள்ளும் ஏனையவை போலச் சொற்சுவை பொருட்சுவை உடையன அல்ல. அவை வெள்ளைப் பாக்கள்.

4) கடவுள் வாழ்த்துக் கூறுவது பிற்கால வழக்கு. கடவுள் வாழ்த்தில் கடவுள் பற்றிய இலக்கணத்திற்கும் மெய்யுணர்தலில் வரும் இறை இலக்கணத்திற்கும் கருத்துப் பொருத்தம் இல்லை. பரிமேலழகர் தனது கற்பனைத் திறத்தாலேயே பொருத்தம் கண்டுள்ளார்.

5) கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் முதல் குறளில் இடம்பெற்றுள்ள ஆதி பகவன் இரண்டும் வடமொழிச் சொற்கள். ஒப்புயர்வற்றதொரு நூலைத் தமிழ் மொழியில் சொல்லப் புகுந்த தமிழ்ப் புலவனான தமிழ்மகன் ஒருவன் தன் நூலில் முதற்பாவின் கண்ணே ஆரியச் சொற்கள் இரண்டைப் புகுத்தானென்றல் சைவ சமயத்தைப் போதிக்கப் புகுந்த சைவ ஒழுக்கமுடைய சைவ மகனொருவன் புலால் உண்டான் என்றலையொக்கும்.

6) ஆதி பகவன் என்று ஏற்றுக்கொண்டால், புலைச்சி அந்தணன் என்ற பொய்க்கதை மெய்க்கதை எனக் கொள்ளும் புல்லறிவாளர்க்கே சாலும்.

7) இப் பா இரண்டு ஆரியச் சொற்களைக் கொண்டிருத்தல் ஒன்றே இப்பா மேற்கூறிய பொய்க் கதையை மெய்யெனக் கொண்ட பிற்காலத்துப் புலவன் ஒருவனால் பாடப்பட்டதென்பதற்கு போதிய சான்றாகும்.

8) அகரத்தை முதல் எழுத்தாகக் கொள்ளாத மொழிகளும் உண்டு.

9) உலகு என்னும் சொல்லையும் தனித்தமிழ்ச் சொல்லென்று சொல்வதற்கும் இடமில்லை. பிறப்பு என்றும் வாய்ப்பாட்டுச் சொல் ஒன்றில்லாமல் வெண்பாவின் இறுதிச் சீராக முடிந்து வருவது வழக்காயினும் அவ்வாறு அச் சீரில் வெண்பா முடிவது அவ்வளவு சிறப்பன்று.

10) இறுதியில் சொல், பொருள் இழுக்குகளை வைத்து அப்பாவினைப் பார்க்கையிலே நம் திருவள்ளுவர் இயற்றினார் என்றல் அவரது புலமையையும் பெருமையையும் பழித்தேயாக அப்பழிப்பினை செய்யத் துணிந்தாரே இப்பா அவருடையதென்பர். ஏனையோர் இப்பாவை அவருடையதென்னார்! (டாக்டர் தி.லீலாவதி எழுதிய தமிழ் தந்த வ.உ.சி. பக்கம் 98-99)

வ.உ.சி. இன உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி இவற்றுக்கு அடிப்படையான மொழி உணர்ச்சி மிக்கவர். அவர் மகாகவி பாரதியாரின் சம காலத்தவர். அவரால் பாடப்பெற்ற பெருமை பெற்றவர்.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?


என்ற பாரதியாரின் பாடல் வரிகள் (பாரதியார் கவிதைகள் -சுதந்திரப் பயிர்) செக்கிழுத்த வ.உ.சி. யையே சுட்டுகிறது.

கடவுள் வாழ்த்துப் பற்றிய வாக்குவாதத்துக்குள் ஆழமாக நுளைய நான் விரும்பவில்லை. இருந்தும் கடவுள் வாழ்த்துப் பற்றி ஈ.வே.ரா. பெரியார் சொல்லியிருக்கும் கருத்தினை கீழே தருகிறேன்.

1) முதலாவதாக கடவுள் என்ற தத்துவத்தைப்பற்றி குறளாசிரியருடைய கருத்து என்ன?

2) கடவுளை ஒரு பொருளாகக் கொண்டிருந்தாரா? ஒரு பண்பாகக் குணமாகக் கொண்டிருந்தாரா?

3) அந்தப் பண்புக்கு ஆசிரியர் கடவுள் என்ற பெயர் கொண்டு இருந்தாரா?

குறளில் முதலாவது அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்ற பெயர் தலைப்புப் கொடுத்திருப்பது குறள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு யாராலாவது கொடுக்கப்பட்டதா என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த அதிகாரத்துக்கு அப்பெயர் பொருத்தமற்றதாகும் என்பது என் கருத்தாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:01 am

இறைவன் என்றால் அரசன் தெய்வம் என்றால் தேவர்!

திருக்குறளில் உள்ள 1330 பாட்டிலும் ஓர் இடத்திலும் 'கடவுள்' என்கின்ற சொல்லைத் திருவள்ளுவர் கையாளவே இல்லை என்பதைப் பார்த்தோம்.

அன்றியும் முதலதிகாரத்தில உள்ள 10 குறளிலும் கூட ஓர் இடத்திலும் கடவுள் என்ற சொல் காணப்படவில்லை. அதற்கு மாறாக வள்ளுவர் பின்வரும் சொல் அல்லது சொற்றொடரைக் கையாள்கிறார்.

பகவன்
வாலறிவன்
மலர்மிசை ஏகினான்
வேண்டுதல் வேண்டாமையிலான்
இறைவன்
பொறிவாயில் அய்ந்தவித்தான்
தனக்குவமை இல்லாதான்
அறவாழி அந்தணன்
எண் குணத்தான்
இறைவன்


இறைவன் என்ற சொல்லை வள்ளுவர் இருமுறை பயன்படுத்தியுள்ளார். முழுத் திருக்குறளிலும் ஐந்து முறைதான் இதே சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். முதல் அதிகாரத்தில் காணப்படும் இரண்டு இறைவன் நீங்கலாக அதிகாரம் 69 குறள் 690 லும், அதிகாரம் 74 குறள் 733 லும், அதிகாரம் 78 குறள் 778 லும் இறைவன் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்த அதிகாரங்கள் முறையே தூது (69) நாடு (74) படைச்செருக்கு (78) ஆகியனவாகும்.

ஆனால் இந்த அதிகாரங்களில் இறைவன் என்ற சொல்லை வள்ளுவர் அரசன் என்ற பொருளில்தான் குறிப்பிட்டிருக்கிறார். இறைவன் என்ற சொல்லுக்கு வேறு பொருள் கொள்ள இடம் இல்லாதவாறு வள்ளுவர் அந்தச் சொல்லைக் கையாண்டு இருக்கிறார். உண்மையில் அரசனைவிட இறைவன் என்ற சொல்லே தூய தமிழ்ச் சொல்லாகும்!

அரசன் என்ற சொல்லை வள்ளுவர் ஒரே ஒரு குறளிலும் அரசு என்ற சொல்லை மூன்று குறளிலும் கையாண்டிருக்கிறார். பன்மைப் பொருள் காட்ட எளிதாய் இருப்பதற்கு 'படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு' (அதிகாரம் 39 -இறைமாட்சி, குறள் 381) என்கிறார். அஃதாவது சேனை, நாடு, பொருள், அமைச்ச, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்களையும் உடையவன் அரசர்களில் ஆண் அரிமா போன்றவன் என்பதாகும்.

அரசன் அரசு என்று எளிதாகச் சொல்வது போல இறைவன் இறைவு என்று சொல்ல முடியாது. இறைவு என்ற சொல் தமிழில் இல்லை. அதன் காரணமாக அரசு என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியாகத் தெரிகிறது.

எனவே முதல் அதிகாரம் முதல் குறளில் பகவன் என்ற சொல்லை கடவுள் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக வள்ளுவர் பயன்படுத்தினார் என்று பொருள் கொள்ள இடம் இல்லை.

திருக்குறளில் சுமார் 12,000 சொற்கள் உண்டு. இதில் 50 சொற்களுக்கும் குறைவாகவே வேற்றுமொழிச் சொற்களை அவர் ஆண்டு இருக்கிறார். சிலர் 35 சொற்களுக்கும் குறைவாக ஆண்டு இருக்கிறார் என்கிறார்கள்.

எனவே எடுத்த எடுப்பிலேயே முதல் அதிகாரம் முதல் குறளில் இரண்டு வடமொழிச் சொற்களை (உலகையும் சேர்த்து மூன்று வடமொழிச் சொற்கள்) வள்ளுவர் ஆண்டிருப்பார் என்று கொள்ள முடியாது. பகவன் என்ற சொல்லை உச்சரித்துப் பார்த்தாலே அது தமிழ்ச் சொல் அல்ல என்பது எளிதில் புலப்புடும்.

சிலர் ஆதி பகவன் என்பது வள்ளுவரின் தாய் தந்தையரைக் குறிப்பதாகச் சொல்வார்கள். வள்ளுவர் ஆதி என்ற பறைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் ஆபாசக் கதை முற்றிலும் கற்பனையாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:03 am

இந்தப் புளுகுக் கதை கபிலர் என்ற பிற்காலப் புலவர் ஒருவர் எழுதிய கபிலர் அகவலில் காணப்படுகிறது.

அருந்தவ முனியாம் பகவற்குக்
கருவூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி
ஆதி வயிற்றினில் அன்றவதரித்த
கான்முளையாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவர் என்தனைபேர் எனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
யாம் வளர்திறம் சிறிது இயம்புவல் கேண்மின்.

ஊற்றுக்காடு எனும் ஊர்தனில் தங்கியே
வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்

காவிரிப்பூம் பட்டினத்தில் கள்வினைஞர் சேரியில்
சான்றார் அகந்தனில் உறுவை வளர்ந்தனள்

நரம்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியில்
பாணர் அகத்தில் ஒளவை வளர்ந்தனள்

குறவர் கோமான் கொய் தினைப்புனம் சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்

தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்

அரும்பார் சோலைக் கரும்பார் வஞ்சி
அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்

பாரூர் நீர் நாட்டார் ஊர்தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.


கபிலர் அகவல் 138 அடிகள் கொண்டது. பாவகையில் அகவல் பாவைச் சேர்ந்தது. எனவே பாவகை கருதியே அதன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது கிபி 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்டுகிறது. ஆனால் இது வெறும் ஊகமே. சாதியைக் குறிக்க இதில் சொல்லப்படும் சானார் என்ற சொல் பிற் காலத்தது. அதனால் கபிலர் அகவல் 15, 17 அல்லது 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கொள்வாரும் உண்டு. கபிலர் அகவல்களில் பாட பேதமும் காணப்படுகிறது.

பண்டைய காலத்தில் தமிழில் அகராதி இருக்கவில்லை. அதனால் எந்தச் சொல் எந்தக் காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்பதை அறிந்து கொள்ள வழியில்லை.

கபிலர் அகவலின் ஒரு படி பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கண்டெடுக்கப்பட்டது. அது 1887 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது.

கபிலர் அகவலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் வாழ்க்கைத் தத்துவம், கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் எனவே நாளை நாளை என்னாது அறம் செய்து வாழ வேண்டிய கடப்பாடு பற்றிப் பேசுகிறார்.

இரண்டாவது பகுதியில் நால்வகைச் சாதியை நாட்டிய பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடுகிறார். மேல்வகை கீழ்வகை இரண்டும் ஒழுக்கத்தால் வருவது பிறப்பால் அல்ல என்கிறார்.

மூன்றாம் பகுதியில் தன் கூற்றாகத் தானும் தனது உடன்பிறப்புக்களும் பிறந்து எந்தெந்த ஊரில் எந்தெந்தச் சாதியினரது இல்லங்களில் வளர்ந்தார்கள் என்ற கதையைக் கூறுகிறார்.

முதல் பகுதியில் கபிலர் அகவல் தெரிவிக்கும் கருத்துக்கள் மணிமேகலையில் காணப்படும் கருத்துக்கதோடு ஒன்றிப் போவதாக அமைந்துள்ளன.

இரண்டாவது பகுதி பார்ப்பனரது சாதி பேதத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட கேடுகள் பற்றியது.

ஆனால் மூன்றாவது பகுதியான தன் கதை முதல் இரண்டு பகுதிகளோடு முரண்பட்டு நிற்கிறது.

சாதியைக் கடுமையாகச் சாடிய புலவர் தன் குடும்ப வரலாற்றைச் சாதி அடிப்படையில் வௌ;வேறு ஊர்களில் வாழ்ந்ததாகச் சொல்வது சிறிதும் பொருத்தமற்றதாக இருக்கிறது. பின்வந்த யாரோ ஒரு புலவர் செவி வழி ஆதி என்ற புலைச்சியைப் பகவன் என்ற பார்ப்பனன் மணந்து ஊர் ஊராகத் திரிந்து ஆங்காங்கே குழந்தைகளைப் பெற்றதும் அவர்களைக் கைவிட்டு ஏகினர் என்ற கட்டுக் கதையை எழுதிச் செருகி விட்டதாகப் படுகிறது.

இந்தக் கதையின் அடிப்படையில் புலைச்சிக்குப் பிறந்த திருவள்ளுவர் தீண்டத்தகாதவர் அவர் எழுதிய திருக்குறள் தீட்டுப்பட்ட நூல் அதைத் தொடக்கூடாது எனப் பார்ப்பனர்கள் முரண்டு பிடித்து வந்திருக்கிறார்கள்.

1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணி யாற்ற வந்த எல்லீஸ் துரை அவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தான் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்தி தாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் சுவடி கொடுத்ததை சொன்னார். அதற்கு அவர்கள் “அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது” என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 3:04 am

ஏன் இப்படிப் பிராமணர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க "எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆஙகிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819 இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவது மொழி பெயர்க்காமல் போயிற்று. (குறளும் அயோத்திதாசரும்)

ஆதி பகவன் சொற்களும் சரி, ஆதி பகவன் கதையும் சரி தமிழ்ப் பண்பாட்டோடும் வரலாற்றோடும் ஒட்டாது தனித்து நிற்கின்றன.

தொல்காப்பியர் காலம் தொட்டே தமிழில் கடவுளுக்குச் சொல் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் பகவன் என்ற சொல் எங்கேனும் பயன்படுத்தப்படவும் இல்லை.

இஃது திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என்ற தமிழறிஞர் வ..உ.சி. யின் கோட்பாட்டுக்கு அரண் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

முதல் அதிகாரத்தில் கடவுளைக் குறிப்பதாகச் சொல்லப்படும் ஏனைய சொற்கள் மனிதத் தன்மைக்கு மேலான தெய்வத்தன்மையைக் குறிக்கிறதே அல்லாது கடவுள் தன்மையைக் குறிக்கவில்லை.

சமணரது 'கடவுள்' ஆன அருகனது குணப் பண்புகளே முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன என்பது பெரும்பாலான அறிஞர்களது கருத்தாகும். மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், வேண்டுதல் வேண்டாமையிலான் என்ற சொற்றொடர்கள் அருகனையே குறிக்கிறது. அவை புத்தரைக் குறிப்பதாகக் கூடக் கொள்ளலாம். அப்படிக் கொள்ளினும் எஞ்சிய 1320 குறள்களிலும் அதற்கான அரண் இல்லை.

திருக்குறளில் உள்ள 1,330 குறள்களிலும் தெய்வம் என்ற சொல் ஆறு இடங்களில் மட்டும் காணக்கிடக்கின்றன. அந்தக் குறள்கள் 43, 50, 55, 619, 703, 1023 ஆகியனவாகும்.

இந்தத் தெய்வம் என்ற சொல் கடவுளைக் குறிப்பிடுகிறதா? அதாவது இன்றைய சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாமிய மதங்கள் வழிபடும் கடவுளைக் குறிப்பிடுகிறதா?

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் (5) குறள் 43 இல் தெய்வம் என்ற சொல் வருகிறது. இல்வாழ்க்கையில் இருப்பவன் இறந்த முன்னோர் (தென்புலத்தார்) தெய்வம், விருந்தினர், ஏழை உறவினர் தன் குடும்பம் என்ற அவ் அய்ந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்கு தலையாய கடமையாகும். இங்கே தெய்வம் என்ற சொல் தேவர் என்ற பொருளிலேயே வருகிறது.

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் (5) குறள் 50 இல் தெய்வம் என்ற சொல் வருகிறது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்பதில் தெய்வம் வானுறையும் என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்டுள்ளது. இல்லறத்தில் வழுவாது வாழ்பவன் இந்த உலகத்தவனாக இருந்தாலும் அவன் வானுகத்துத் தேவர்களில் ஒருவனாக மதிக்கப்படுவான். அதாவது மனிதனும் தெய்வமாகலாம்! இதிலும் தெய்வம் என்ற சொல் தேவர் என்ற பொருளிலேயே வருகிறது.

இதே அதிகாரத்தில் (5) குறள் 55 இல் “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்ற குறளில் தெய்வம் என்ற சொல் வருகிறது. இந்தக் குறளில் தெய்வம் கணவனை விடத் தாழ்ந்தது என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் (62) குறள் 619 இல் 'தெய்வத்தால் ஆகாதெனினும்' என்ற தொடர் வருகிறது. ஆள்வினை என்றால் இடைவிடாத முயற்சி. தெய்வத்தால் ஆகாதெனினும் உடலை வருத்தி முயற்சி செய்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்பது வள்ளுவர் கோட்பாடு. இங்கு தெய்வம் முயற்சி செய்யும் மனிதனை விடத் தாழ்ந்தது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு அறிதல் என்ற அதிகாரத்தில் (71) குறள் 702 இல் 'தெய்வத் தொடு ஒப்பக் கொளல்' என்ற தொடர் வருகிறது. இதில் தெய்வமும் மனதின்கண் அய்யப்படாது உணரும் அறிவாளியும் சமம் என்று சொல்லப்பட்டுள்ளது.

குடிசெயல்வகை அதிகாரத்தில் (103) குறள் 1023 இல் 'தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்' என்பது தன் குடியை உயரச் செய்யக் கடவேன் என்று சொல்லிக் கொண்டு அதற்கு ஏற்ற செயல்களைச் செய்பவனுக்கு தெய்வம் ஆடையை இறுக்கக் கட்டிக் கொண்டு உதவி செய்யத் தானே முன்வந்து நிற்கும். அதாவது நல்லது செய்தால் நல்லது விளையும் என்பது இயற்கை விதி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக