புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram

51 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Poll_c10 
417 Posts - 48%

287 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:53 am

First topic message reminder :

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Astrology_aniசனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Astro_header_sani_a

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 SaniHead
கணித்தவர்:-

`எண்கலை வித்தகர்' `ஜோதிடக் கலைமாமணி' சிவல்புரி சிங்காரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Aries சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Taurus சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Gemini சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Cancer சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Leo சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Virgo
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Libra சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Scorpio சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Sagittarius சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Capricorn சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Aquarius சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Pisces

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:33 pm

மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

பத்தாமிடத்தில் சனி! முத்தான தொழில்வரும் இனி!

எந்த காரியத்தை எந்த நேரத்தில் செய்தால் எளிதில் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் மகர ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால், நியாயத்திற்கும், நேர்மைக்கும் நீங்கள் துணை போவீர்கள். நிலத்தில் வியர்வை சிந்தி பாடுபட்டால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று சொல்வீர்கள். பேச்சில் கடுமை இருந்தாலும், பழகுவதில் இனிமை இருக்கும்.

கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், கடவுள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது தான், திறமையும் பளிச்சிடுகிறது. திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பும் கிட்டுகிறது.

உங்கள் ராசிநாதனாக சனி விளங்குவதால், உங்களைப் பொறுத்தவரை சனி நல்லவரே! எனவே, சனியின் சார பலமறிந்து அதற்குரிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்துச் செய்தால் பணவரவு பெருகும். பாராட்டும், புகழும் கூடும்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சிதானா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

பத்தாமிடத்திற்கு வரும் முத்தான சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெறுகிறார் அல்லவா? எனவே, உற்சாகத்துடன் பணிபுரிந்து உள்ளம் மகிழும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகிறீர்கள். அதன் பார்வை (4, 7, 12) நான்கு, ஏழு, பனிரெண்டு ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் விளை வாக, சுக ஸ்தானம், தாய், வாகனம், களத்திரம், ஊர்மாற்றம், பயணங்கள், குடும்பச்சுமை, செலவு நடை, குழந்தைகள் நலன், இடம், பூமி விற்பனை, விலை உயர்ந்த பொருள் சேர்க்கை போன்றவற்றிற்குரிய ஆதிபத்தியங்களில் எல்லாம் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார்.

சனிப்பெயர்ச்சி காலத்தில் விரயாதிபதி குரு சனியைப் பார்ப்பதால் விரயங்களே அதிகரிக்கும் என்றாலும், ரிஷப குருவின் பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக குரு பார்க்கப் போவதால் குருப்பெயர்ச்சிக்கு மேல் சனிப் பெயர்ச்சி சாதகமான பலன்களை அதிக அளவில் அள்ளி கொடுக்கலாம்.

தொடக்கத்தில் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால், அதன் வக்ர கால இயக்கம் முடியும் வரை ஆரோக்யத்திலும் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிகப் பிரயாசை எடுக்கும் காரியங்களிலும் தாமதம் ஏற்படலாம். செவ்வாய் தோறும் அம்பிகை வழிபாடும், சனிக் கிழமை தோறும் சனீஸ்வரர் வழிபாடும் செய்து வருவதோடு, காகத்திற்கு எள் கலந்த சோறு வைப்பது நல்லது.

அன்ன தானம் மற்றும் வஸ்திர தானங்களில் அக்கறை காட்டினால் எண்ணிய காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்

உங்கள் ராசிக்குப் பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 4, 7, 12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அதன் பார்வை பதியும் இடங்களில் இனி பலவித மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக சுக ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதால் ஆரோக்யம் சீராகும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. 7-ஆம் இடத்தைச் சனி பார்ப்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். வரன்கள் வாயில்தேடி வந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் செவ்வாய் மற்றும் சனியின் அமைப்பு மற்றும் பொருத்தங்கள் வந்த வரனில் திருப்தியாக இருக்கிறதா என்பதை அறிந்து முடிவெடுப்பது நல்லது.

சனியின் பார்வை பனிரெண்டாமிடத்தில் பதிவதால் தனாதிபதியின் பார்வை விரய ஸ்தானத்தில் பதியும்பொழுது எதிர்பாராத சில விரயங்கள் ஏற்படும். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி போன்றவைகளின் சேர்க்கையும் ஏற்படும். பொதுவாக இது போன்ற விரத காலங்களில் சனிக்கிழமை விரதமிருந்து அனுமனை வழிபடுவது நல்லது.

குருப்பெயர்ச்சி காலம்!

துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறது. 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 13.6.2014-ல் கடக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை நேரடியாக உங்கள் ராசியில் பதிகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசிக்கு 1, 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. அதன் விளைவாகப் பூரண வியாழ நோக்கம் ஏற்படுகிறது. கல்யாணக் கனவுகள் நனவாகும். களத்திர ஒற்றுமை பலமாகும். தந்தை வழி ஒற்றுமை கிடைக்கும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது 2, 10, 12 ஆகிய இடங்களில் அதன் பார்வை பதிவதால் தொழில் வளம் மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். கடல் பயண வாய்ப்பு கைகூடும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிவதால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். தொழி லில் லாபம் இருமடங்காக உயரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேர்வர்.

குருவின் பார்வை முழுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நமக்கு வரம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்தால் வளர்ச்சி அதிகரிக்கும். அந்த அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள திருக்கோஷ்டிïர் சௌமிய நாராயணப் பெருமாள், இலக்குமியையும் வழிபடுவதோடு, காரைக்குடி அருகில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடிக்கும் சென்று அங்குள்ள திருவேங்கட முடையானையும், அலர்மேலு மங்கைத் தாயாரையும் வழிபட்டு வாருங்கள். வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

2.12.2012-ல் துலாம் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள். முதல் ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். மூலதனம் இல்லாமலேயே செய்த தொழிலுக்கு மூலதனம் வந்து சேரும். பழைய கூட்டாளிகள் விலகுவர். தாய்வழித் தனலாபம் கிடைக்கும். என்ன தொழில் செய்தால் லாபம் வரும் என்பதை ஜாதகப்படி அறிந்து செய்தால் பொன்னான எதிர்காலம் அமையும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் நீண்டதூரப் பயணங்கள் வந்து சேரும். நேசித்தவர்களுடன் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். சகோதரர்கள் வழியில் ஏற்படும் சுபகாரியங்களை முன்நின்று நடத்தி வைப்பீர்கள். சிவகங்கை அருகில் உள்ள கொல்லாங்குடி காளியம்மன் வழிபாடும், கீழச்சிவலப்பட்டியில் உள்ள மாரியம்மன் வழி பாடும், தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் வழிபாடும் உகந்ததாக அமையும்.

சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம்பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிநாதனாகவும், 2-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மருத்துவச் செலவு கூடும். குடும்பப் பிரச்சினை தலை தூக்கலாம். இதுபோன்ற காலங்களில் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் உள்ள சரஸ்வதி கோவிலில் வழிபாடு செய்து அதற்கு அருகில் உள்ள ராமர் தசரதருக்கு திதி கொடுத்து வழிபட்ட திலதர்ப்பணபுரிக்கும் சென்று வழிபட்டு வந்தால் வக்ரகாலம் கூடப் பொற்கால மாக மாறும். அனுமனை சனிக் கிழமை தோறும் வழிபட்டு வருவது நல்லது.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

பத்தாமிடத்துச் சனி பக்கபலமாக இருக்குமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 9 மிடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானமாகும். ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் பொழுது தொழில் வளம் மேலோங்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள், கூட்டுத்தொழில் செய்யும் வாய்ப்புகளும் உருவாகும். ராசிநாதனின் பலத்தைப் பொறுத்தே தனித்தியங்குவதா? கூட்டாக செய்வதா? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

`பத்தில் சனி வந்தால்
பார்போற்றும் நிலை அமையும்!
மெத்தவே சுகம் கிடைக்கும்!
மேலோரின் பாசம் வரும்!
பெற்றவரின் பாசம் வரும்!
பிள்ளைகளும் ஒத்து வரும்!
முத்தான சனியதனை
முறையாக வழிபடுவீர்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பத்தாமிடத்திற்குச் சனி வந்தால் முத்தான தொழில் வாய்க்கும். பழைய தொழிலில் இருந்து மாற்றம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்கு ம்பொழுது குடும்பத்தில் யார் பெயருக்கு தொழில் ஸ்தானம் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் பெயரில் தொழில் தொடங்குவதே நல்லது.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

செயல் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, நீங்கள் செய்யும் காரியங்களைச் சிறப்பாக முடித்துக் கொடுக்கவும், வாரந்தோறும் சனீஸ்வர வழிபாட்டை மேற் கொள்வதோடு, சிறப்பு வழிபாடாக சேலம் அருகில் உள்ள நாமக்கல் விஸ்ரூப ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளவும். மேலும் திருச்சியில் உள்ள கல்லுக்குடி ஆஞ்சநேயரையும், காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடி சிவ ஆஞ்சநேயரையும் வாய்ப்பிருக்கும் பொழுது வழிபட்டு வாருங்கள்.

அனுமன் சந்நிதியில்
`உந்தன் பெயரை உச்சரித்தோம்!
உள்ளத்தில் ராமனை
நினைக்கின்றோம்!
வந்தனை செய்தே போற்றுகிறோம்!
வரத்தைத் தருவாய் அனுமானே!'

என்று பாடுங்கள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:40 pm

கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் சனி! பொன் பொருள் சேரும் இனி!!

எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலாவது பயன்பட வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் எந்தக் காரியத்தையும் நிதானமாகவே செய்வீர்கள். அமைதியைக் கடைப்பிடித்து அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்பவர்கள் நீங்கள்.

தன்னம்பிக்கையை இழக்கிற பொழுதெல்லாம், ஆன்மீகப் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் வழியே நடந்து வெற்றி பெறுவீர்கள். ராசிநாதனாக மட்டுமல்லாமல், பனி ரெண்டாமிடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால் ஒரு பிரச்சினை முடிந்தவுடன், அடுத்த பிரச்சனை தானாகவே உங்களைத்தேடி வரும்.

குடும்ப ஸ்தானாதிபதியாக உங்களுக்கு குரு அமைந்தாலும் கூட சப்தமாதிபதியாக சூரியன் இருப்பதால், பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது.

இளமையில் உங்களுக்கு போராட்டமான வாழ்க்கை அமைந்தாலும், நடுப்பகுதி முதல் நல்ல வாழ்க்கை அமையும். இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பலன் களைத் தருமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஒன்பதாமிடத்துச் சனி பொன்- பொருளைத் தருமா?

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களைப் பார்த்து பலன்களை வழங்கப் போகிறார். உச்ச சனியாக இருந்து பார்ப்பதாலும், அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் முடிவடைவதாலும் அற்புத பலன்கள் இனி உங்களுக்கு வந்து சேரப் போகின்றன.

இந்த நேரத்தில் பெயர்ச்சிக்கு முன்னதாகவே திருநள்ளாறுக்குச் சென்று நளதீர்த்தமாடி, அன்ன தானம், வஸ்திர தானம் செய்து, வழிபட்டு வருவது நல்லது. அதோடு, திருப்பத்தூர் அருகில் உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊருக்கு அருகாமையில் வன்னிமரத்தடியில் சனி பகவான் வாசம் செய்கிறார். அந்த சனி பகவானையும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலுக்கும் சென்று அக்னீஸ்வரரையும், பஞ்சினும் மெல்லடியாள் அம்பிகையையும் வழிபட்டு வந்தால், நெஞ்சில் வஞ்சமில்லாது பழகுபவர்களின் எண்ணிக்கையும் கூடும். நிகரில்லாத வாழ்க்கையும் அமையும்.

பொதுவாக, சனி விலகும் பொழுது நல்லதையே செய்வார். யோக பலம் பெற்ற நாளில் சுய ஜாதக ரீதியாக வழிபாடுகளையும் மேற்கொண்டால், மாலை கிடைக்காதவர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை பிறக்காதவர்களுக்கு மழலை பிறக்கும். வேலை கிடைக்காதவர் களுக்கு வேலை கிடைக்கும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். செவ்வாய் பலம் பெற்றிருப்பவர்களுக்கு வீடு கட்டும் யோகம் வந்து சேரும். குரு பலம் பெற்றிருப்ப வர்களுக்கு பதவி வாய்ப்புகள், அரச யோகம் வந்து சேரும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. இதுவரை மன அமைதியின்றி தினமும் பிரச்சினைக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு மன நிம்மதி கூடப்போகிறது.

சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு சச்சரவுகளைக் கொடுத்தாலும் முடிவில் உங்கள் கருத்திற்கு ஒத்து வருவர். தொழில் ரீதியாக உடன்பிறப்புகள் வழியில் சேர்ந்த கூட்டு இனிப் பிரியலாம். தனித்து இயங்கினாலும், தக்க ஒருவருடைய உதவியோடு செயல்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். காரணம் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் 4 மற்றும் 10-ல் இருப்பதால் ஆறாமிடத்தைச் சனி பார்ப்பதால் எதிரிகள்சரணடைவர்.

இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோக உயர்வு, உத்தியோக மாற்றம், இலாகா மாற்றங்களை எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிகளில் கடனுதவி பெற்றுச் சுயதொழில் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கலாம்.

ஆனால் ஆறாமிடத்தைச் சனி பார்ப்பதால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடலாம். எனவே ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மேலும் சனி விலகும் இந்த நேரத்தில் தேனீ அருகில் உள்ள குச்சானூர், நாகை மாவட்டம் திருநள்ளாறு பொங்கு சனீஸ்வரர் வீற்றிருக்கும் திருக்கொள்ளிக்காடு சிவகங்கை மாவட்டம் பெருச்சி கோவில் இவற்றில் ஏதேனும் ஒரு கோவிலைத் தேர்ந்தெடுத்து, அங்கு அடியெடுத்து வைப்பதுடன் அதற்கு மறுநாளே ஒரு அனுமன் கோவில் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

குருப்பெயர்ச்சி காலம்!

துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடை பெறுகிறது. 17-5-2012ல் ரிஷப ராசியிலும், 28-5-2013ல் மிதுன ராசியிலும் 13-6-2011ல் கடக ராசியிலும் குரு பகவான் சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே இழப்புகளை ஈடு செய்யும் வாய்ப்புக் கிட்டும். அஷ்டமத்துச் சனியால் மூடிக்கிடந்த தொழிலில் திறப்பு விழாச் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும்.

பகை வீட்டில் குரு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் வீற்றிருந்து அருள் வழங்கும் கண்ணாத்தாள் அம்பிகையும், அதன் அருகில் உள்ள கீழக்கோட்டையில் நினைத்ததை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கும் காளியம் மன் மற்றும் அய்யனார் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

காரைக்குடியில் இருந்து கல்லல் செல்லும் வழியில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியில் அதன் பார்வை முழுமையாகப் பதிகிறது. அதோடு 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், துணையாக இருந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிகள் வந்து சேர முன்னோர் படைப்புகளையும், மனித தெய்வ வழி பாடுகளையும் மேற்கொள்வது நல்லது.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மின்சார சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சிக் காலம்!

2-12-2012ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். 21-6-2014ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு - கேது பெயர்ச்சிக் காலத்தில் பூர்வீக சொத்துக்களில் இருந்த வழக்குத் தீரும். பங்காளிப் பகை மாறும். கூட இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் வந்து சேரலாம். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து சேரும். நிம்மதியும், நிலையான செல்வமும் வந்து சேர சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்வது நல்லது. அஷ்டமத்தில் சஞ்
சரிக்கும் ராகுவிற்கு அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும்.

சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற....

துலாம் ராசியில் சனி உச்சம் பெறும்பொழுது ஐந்து முறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-க்கு அதிபதியாகவும் இருப்பதால் இந்த வக்ர இயக்கம் வளர்ச்சியையும் கொடுக்கும், தளர்ச்சியையும் கொடுக்கும். உடல் நலத்திற் கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். பொது வாழ்வில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். இக்காலத்தில் எள் தீபம் ஏற்றி சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

ஒன்பதாமிடத்துச்சனி உன்னதமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குமா?

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், இப்பொழுது ஒன்பதாம் இடத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறார். ஒன்பதில் உச்சம்பெறும் சனி பொன், பொருள்களையும் கொடுப்பார்.

`ஒன்பதில் சனி வந்தால்
உயர்வுகள் வந்து சேரும்!
பண்பிலார் பழக்கம் மாறும்!
பகையெல்லாம் விலகி ஓடும்!
நண்பர்கள் அதிகம் சேர்வர்!
நல்லதோர் பதவி வாய்க்கும்!
கண்படும் விதத்தில்- உங்கள்
கனிவான வளர்ச்சி கூடும்!' என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் தொழிலில் லாபம் கூடும். தொல்லை தந்த எதிரி கள் விலகுவர். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். நண்பர்கள் நல்ல காரியத்தை முடித்துக் கொடுப்பர். வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டாகும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

ராசிநாதன் சனி உச்சம் பெறுவதால் நன்மைகளையே அதிகம் சந்திப்பீர்கள். சனிக்கிழமை விரதமிருந்து காகத்திற்கு எள் அன்னம் வைப்பது நல்லது. புதுக்கோட்டை அருகில் உள்ள திருவேங்கிவாசலுக்கு சென்று அங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர், சதுர்வேத நாயகியை வழிபட்டு, அருகில் உள்ள திருக்கோகர்ணத்தில் உள்ள கோகர்னேஷ்வரர் - உமாதேவியையும் வழிபட்டு வாருங்கள். அங்குள்ள குருவின் சன்னதியில்

குருவே நீ பார்த்தால் போதும்!
கோடியாய் நன்மை சேரும்!
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக்கின்றோமே! என்று பாடுங்கள்.

ஒரு முறை குருவின் பார்வை உங்கள் மீது பட்டாலே ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:47 pm

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

எட்டாமிடத்தில் சனி! எச்சரிக்கை தேவை இனி!

நேரம், காலம் பார்த்து செய்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

வளைந்து கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள். அடுத்தவர்கள் மீது அதிக அளவு அன்பு செலுத்தி அதன் மூலம் ஏமாற்றங்களைச் சந்திப்பவர்களும் நீங்கள்தான்.

உங்கள் ராசிநாதனாக தேவகுரு அமைவதால், சமூகத்தில் உயர்ந்த மதிப்பும், மரியாதையும் உண்டு.

உங்கள் ராசிநாதனுக்கு எதிரியாக சுக்ரன் இருப்பதால், திருமண காலத்தில் அதிகபட்ச பொருத்தம் இருப்பதோடு, வரனின் ஜாதகத்தில் தெசா சந்தி இல்லாமல், லக்னப் படியும் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் தேர்ந்தெடுத்தால் தான் சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள இயலும்.

கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் கறாராக இருப்பீர்கள்.

குறிப்பாக உங்கள் ராசிநாதன் குரு இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் பணவரவும் பெருகும். பாராட்டும்படியான வாழ்க்கையும் அமையும்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அடியெடுத்து வைக்கிறது அஷ்டமத்துச்சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு முறையாக, 2, 5, 10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் சனி, எதையும் திட்டமிட்டு செய்ய இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கத்தில் அடிக்கடி ஆரோக்யத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, நோய்க்கான அறிகுறி தெரியும் முன்பே அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி பனிரெண்டாமிடத்திற்கும் அதிபதி என்பதால், `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கிணங்க, நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியைக் கொடுக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

இருப்பினும், சனியின் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் உங்களுக்கு சந்தோஷங்களே நாளும் வந்து சேரவும், பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலவும், பிரச்சனைகளி லிருந்து விடுபடவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பதோடு, எட்டு எள்தீபம் ஏற்றி, சனி கவசம் பாடி சனி பகவானை வழிபட்டு வாருங்கள். கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் வனதுர்க்கை, மதுரை நகரின் மத்தியில் உள்ள நன்மை தருவார் கோவில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விஸ்வரூப நந்தீஸ்வரர் ஆகிய தெய்வ வழிபாடுகளை இது போன்ற காலங்களில் மேற்கொண்டால், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குல தெய்வ வழிபாட்டிலும் கவனத்தை செலுத்துங்கள்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும் சேமிப்புகள் கரையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான்.

வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாயாக இருப்பதால், யோக பலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் எனப்படும் செவ்வாயும், ராசி நாதன் குருவும்தான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறார். எனவே சான் றோர்கள், ஆன்மீகப் பெரியோர்களிடம் ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெற்று நடப்பது நல்லது.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக தீரும். அவர்களின் உயர் கல்விக்காகச் செலவிடுவீர்கள். பூர்வீக சொத்துக் களில் இருந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரலாம். ஆனால் கூட்டாளிகள் சரியானவர்களா? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் சரியாக அமையாவிட்டால் ஏமாற்றத்தைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் அல்லவா? எனவே விழிப்புணர்ச்சி கூடுதலாகச் செலுத்த வேண்டிய நேரமிது. பெற்றோர்களின் உடல்நலத்திலும் கவனம் தேவை.

குருப்பெயர்ச்சிக் காலம்!

துலாம் ராசியில் சனிபகவான் சஞ் சரிக்கும் பொழுது மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 17.5.2012ல் ரிஷபத்திலும், 26.5.2013ல் மிதுனத்திலும் 13.6.2014ல் கடகத்திலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை பலத்தால் 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே கல்யாணக் கனவுகள் நனவாகும். கொடி கட்டிப் பறந்த குடும்ப பிரச்சனைகள் அகலும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும் ஆலங்குடியில் உள்ள குரு தெட்சிணாமூர்த்தி, திருவெண்காடு, மேதா தெட்சிணாமூர்த்தி, திருச்செந்தூர் முருகப் பெருமான் மற்றும் தெட்சிணாமூர்த்தி, திசைமாறிய தென்முகக் கடவுளான சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தெட்சிணாமூர்த்தி நெடுங்குடி கைலாச நாதர் திருக்கோவில் தெட்சிணாமூர்த்தி மற்றும் அறுபத்து மூவர் வழிபாடுகளையெல்லாம் தாராபலம் பெற்ற நாட்களில் செய்து வந்தால் தடைக் கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். இடைïறாக வந்த எதிரிகளும் விலகுவர்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 9, 12 ஆகிய இடங்களில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவி வாய்ப்புகள் வந்து சேரும். வீடு கட்டிக் குடியேறும் முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

2.12.2012ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலாவரப் போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

அடுத்த ராகு கேது பெயர்ச்சிக் காலத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் ஆகும் வாய்ப்பு கிட்டும். சுய ஜாதகம் வலுவாக இருந்தால் அந்நிய தேசப் பயணம் கூட கிட்டும். மன நிம்மதிக்கு கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் சென்று துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 2, 9-க்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் சிவகங்கை மாவட் டம் குன்றக்குடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆறுமுகப் பெருமான், வள்ளி -தெய்வானையையும் வழிபட்டு வாருங்கள்.

சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து, நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 11, 12-க்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால் வளர்ச்சியும், தளர்ச்சியும் இணைந்தே செயல்படும். 12-க்கு அதிபதி வக்ரமடைவது நல்லதுதான். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். லாபாதிபதி வக்ரம் பெறுவதால் உடனுக்குடன் அது செலவாகி விடும். எனவே இந்த வக்ரகாலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

அஷ்மத்துச் சனியில் அதிக கவனம் தேவை!

இதுவரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், ஏராளமான குடும்பப் பிரச்சனைகளைச் சந்திக்க வைத்திருப்பார். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், லாபத்தைக் கொடுத்தாலும் இருமடங்கு விரயத்தையும் கொடுத் திருப்பார். வங்கிச் சேமிப்பு கரைந்திருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலைத் தொல்லைகளைக் கொடுத்து மனநிம்மதியையும் இழக்க வைத்திருக்கலாம்.

`எட்டில் சனி வந்தால்,
எதிர்பாரா மாற்றம் வரும்!
பெட்டிப் பணத்திற்கும்
பெரும் விரயம் காத்திருக்கும்!
ஒட்டும் உறவெல்லாம்,
ஒதுங்கிவிடும் என்றாலும்,
வெற்றி வர சனியதனை,
விரும்பி வணங்கிடுவீர்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

சனியை நம்பினால் சந்தோஷம் கிடைக்கும். பணியில் ஏற்பட்ட தொய்வும் அகலும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும். வீடு மாற்றம், இடமாற்றங்கள், நாடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவைகள் விரும்பியபடியே அமையும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

வியாழன் தோறும் விரதமிருந்து தெட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமை தோறும் அனுமனையும் வழிபடுவது நல்லது. சிவகங்கை மாவட்டம் இளையாற்றாங்குடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் நித்யகல்யாணி - கைலாசநாதரையும், காரைக்குடி அருகில் இரும்பைத் தங்கமாக மாற்றிய திருக்கோவில் மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் பெரியநாயகி அம்மனையும், அங்குள்ள மாப்பிள்ளை நந்தியையும் வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டால் யோகங்கள் வந்து சேரும், பொன்னமராவதி அருகில் உள்ள சாம்பிராணி வடிவில் சாட்சி சொல்லிய வேலங்குடி கருப்பரை தாராபலம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள்.

சனியின் சந்நிதியில் வழிபடும் பொழுது,

எதிர்ப்புகள் விலகி ஓட,
இன்பங்கள் நாளும் சேர,
மதிப்புடன் வாழ-ஈசா!
மனங்கனிந்து அருள்வாயே! என்று பாடுங்கள்.

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2011 1:05 pm

நன்றி நன்றி தல , எனக்கு இவரின் ஜாதக கணிப்புகள் மிகவும் பிடிக்கும். இவரின் சனிப்பெயர்ச்சி குறிப்புகளுக்காக தான் காத்திருந்தேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:11 pm

சிவா wrote:
எனவே, எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்யுங் கள். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று விநாயகப் பெருமானையும், அனுமானையும், சனீஸ்வரரையும் அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள். அர்ச்சனைகள் செய் தால் பிரச்சினைகள் தீரும்.

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2011 1:16 pm

சிவா wrote:கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் சனி! பொன் பொருள் சேரும் இனி!!

எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலாவது பயன்பட வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் எந்தக் காரியத்தையும் நிதானமாகவே செய்வீர்கள். அமைதியைக் கடைப்பிடித்து அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்பவர்கள் நீங்கள்.
நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 1:16 pm

நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Dec 21, 2011 3:24 pm

ராஜா wrote:
சிவா wrote:கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் சனி! பொன் பொருள் சேரும் இனி!!

எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலாவது பயன்பட வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் எந்தக் காரியத்தையும் நிதானமாகவே செய்வீர்கள். அமைதியைக் கடைப்பிடித்து அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்பவர்கள் நீங்கள்.
நன்றி நன்றி

அப்பாடா, இப்பவாச்சும் நாலு நல்ல வார்த்தை சொன்னீங்களே! சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 3:26 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
சிவா wrote:கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் சனி! பொன் பொருள் சேரும் இனி!!

எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலாவது பயன்பட வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் எந்தக் காரியத்தையும் நிதானமாகவே செய்வீர்கள். அமைதியைக் கடைப்பிடித்து அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்பவர்கள் நீங்கள்.
நன்றி நன்றி

அப்பாடா, இப்பவாச்சும் நாலு நல்ல வார்த்தை சொன்னீங்களே! சிரி
வாங்க பிச்ச.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 3:33 pm

///மகரம்: 7-ஆம் இடத்தைச் சனி பார்ப்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். வரன்கள் வாயில்தேடி வந்து கொண்டிருக்கும்.///

எப்பூடி! சிரி

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக