புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:30 am

உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Newsஉச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  UCHITHANAI-750x1024ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது. இன்று, முன்னோட்ட (பிரிவியூ) காட்சிகளில் அந்தப் புனித நதியின் அமைதியான நகர்வைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ஒவ்வொருவரின் கண்ணீரிலும் உங்கள் கண்ணீரைத் தான் பார்க்கிறேன் ஏகலைவன்.

நேற்று, லண்டன் வானொலிக்காக சகோதரி ரூபிகுமார் எடுத்த பேட்டியின்போது, உரிமையோடு ஒரு வேண்டுகோள் வைத்தேன். “உச்சிதனை முகர்ந்தால் – மூலம் எங்கள் இனத்துக்குச் செய்யவேண்டிய கடமையை நாங்கள் செய்திருக்கிறோம். இந்தப் படத்தை முன்பதிவு (ரிசர்வ்) செய்து குடும்பத்தோடு சென்று பார்ப்பதன் மூலம், உங்கள் கடமையை நீங்கள் செய்யவேண்டும். இந்தப் படத்தின் வெற்றிதான் இதுபோன்ற இன்னும் நூறு படங்கள் வர வழிவகுக்கும்” என்று ரூபிகுமார் மூலம் நான் வைத்த வேண்டுகோள், உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கு மட்டுமல்ல ஏகலைவன், இங்கேயிருக்கிற தமிழர்களுக்கும் பொருந்தும்.

படம் வெளியாவதிலிருந்து முதல் பத்துநாட்கள் – டிசம்பர் 16 முதல் 26வரை – முன்பதிவு செய்து குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதன் மூலம், குத்துப்பாட்டுகளிலேயே குடியிருக்கும் தமிழ் சினிமாவின் தலையில் ரெண்டு தட்டு தட்டவேண்டாமா தமிழினம்? இந்தப் படத்தை முன்பதிவு செய்து பார்க்காமல் வேறெந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் நம் சொந்தங்கள்! இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான தகுதியை – காற்றுக்கென்ன வேலி – எனக்குக் கொடுத்திருக்கிறது ஏகலைவன். அந்த உரிமையோடும் தகுதியோடும் தான் உலகெங்கிலும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கும், இங்கேயிருக்கிற நம் தமிழ் உறவுகளுக்கும் இதைச் சுட்டிக்காட்டினேன். லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, புதன்கிழமையே முன்பதிவு செய்து விடுவதாக சொல்கிற உறவுகளின் குரலைக் கேட்கும்போது கண்கலங்கி விடுகிறேன் ஏகலைவன். அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சம்பாதித்திருக்கிறேன்? இதுபோதும் ஏகலைவன்.

சென்ற வாரம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அபஸ்வரம் மாதிரி ஒலித்த நக்கீரன் நிறுவன நிருபரின் குரல் கூட – உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்குத் தரப்பட்ட நற்சான்றிதழ் என்றே நான் நினைக்கிறேன் ஏகலைவன். “புலிகள் உங்களுக்கு 25 கோடி கொடுத்தார்களாமே” என்று அந்த அன்புத் தம்பி அதிமேதாவித்தனத்துடன் கேட்டபோது, காற்றுக்கென்னவேலி – நாட்களிலிருந்து தடம்மாறாமல் தடுமாறாமல் தெளிவான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற பெருமித உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, அந்தத் தம்பியின் மீது கோபம் வரவில்லை. “சொல்வதுதான் சொல்கிறீர்கள், 500 கோடி ஆயிரம் கோடி என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்” என்று சிரித்தபடியே நான் திருப்பிக் கேட்டபோது, அந்தப் பரபரப்புப் பத்திரிகைத் தம்பியின் முகம் போனபோக்கை நீங்கள் பார்த்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் விட்டால் நமக்கு வேறென்ன அடையாளம் இருக்கமுடியும் ஏகலைவன்? எனக்கும் உங்களுக்க்கும் மட்டுமல்ல, நக்கீரன் நிறுவனத்தின் அந்தப் பரபரப்புத் தம்பிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் கோபாலுக்கும் அன்புத் தம்பி காமராஜுக்கும் கூட பிரபாகரனை விட்டால் வேறென்ன அடையாளம்? உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்காக விடுதலைப் புலிகள் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று அந்தப் பரபரப்புத் தம்பி நினைக்கிறாரென்றால் – உச்சிதனை முகர்ந்தால் – தன்னுடைய கடமையை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதானே பொருள்! அதற்காகப் பெருமைப்படாமல் நாம் கோபப்பட முடியுமா?

பொழுதுபோக்க அல்ல… அழுது தீர்க்க… என்று தமிழக பண்பலை வானொலிகளில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய விளம்பரத்தின்போது அறிவிக்கப்படுவதைப் பற்றியும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அழுவதற்கு மட்டுமா – என்று கேட்கிறார்கள் நண்பர்கள். இல்லை ஏகலைவன்.. பெண் போராளிகளுடன் புனிதவதிக்கு இருக்கிற நட்பைப் பார்த்து மகிழ்வீர்கள். “எங்க அக்காமார் துவக்கு வைச்சிருப்பாங்க… அவர்களைப் பார்த்தால் ஆர்மி கூட நடுங்கும்” என்று அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு சிலிர்ப்பீர்கள். என்றாலும் படம் முடியும் போது புனிதவதி என்கிற குழந்தைக்காக அழுவீர்கள். அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கோபாவேசத்தை எழுப்பும். இன்னும் 3 நாளில் உலகம் இதை உணரும் ஏகலைவன். அந்த நாளுக்காக – டிசம்பர் 16ம் தேதிக்காக உங்களைப் போலவே நானும் தவிப்புடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய படத்தைப் பாருங்கள் – என்று கெஞ்சிக் கேட்கவேண்டிய நிலைக்கு உங்களில் எவரும் என்னைத் தள்ளிவிடவில்லை ஏகலைவன். இந்தப் படத்தை முன்பதிவு செய்து பாருங்கள் – என்று உரிமையுடன் சுட்டிக்காட்டும் இடத்தில் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அன்பும் பாசமும்தான் என்னை இயங்கவைக்கிறது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நான் நன்றி சொல்லவேண்டியிருக்கிறது.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது ஏகலைவன். புனிதவதி என்கிற அந்தப் புனித நதி எவருடைய குழந்தையோ அல்ல.. நம் ஒவ்வொருவரின் குழந்தை. அந்தக் குழந்தை இங்கே வரும்போது ஒட்டுமொத்தத் தமிழகமும் அந்தக் குழந்தையை அன்புடன் அணைக்கும். அவளது கைகளைப் பற்றி நம்முடைய கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது, அந்தப் பிஞ்சுக் கரங்களை நம்முடைய கண்ணீர் நனைக்கும். அந்தக் கண்ணீர், 26 கிலோமீட்டர் இடைவெளியைக் கூட இணைக்கும். எந்தக் கனவையும் நிறைவேற்ற முடிகிற நம்மால் இந்தக் கனவை நிறைவேற்ற முடியாதா ஏகலைவன்?

- என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
12.12.2011.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் தளம்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:32 am

"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்!

உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படம் ஈழத்து தயாரிப்பாளர்களால் படமாக்கப்பட்ட திரைப்படமாகும். 13 வயதுச் சிறுமி ஒருவரை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுகு ஈடுபடுத்திய உண்மைச் சம்பவத்தை இயக்குனர் புகழேந்தி அவர்கள் தத்துரூபமாகப் படமாக்கியுள்ளார். இப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர் கசியும் என காசி ஆனந்தன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார். இத் திரைப்படம் 16ம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப் புகைப்படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது. அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது. தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே- இது சிங்கள இனவெறியர் கொடுமை அல்ல- அக்கொடுமையின் பொல்லா விளைவு. தேம்பித் தேம்பி நம்மை அழவைக்கும் திரை ஒவியம்.

Is Paris Burning (பாரீசு நகரம் எரிகிறது) என்னும் திரைப்படம் எப்படி இனவெறியன் இட்லரின் கொடிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ- Omar Muktar (உமர் முக்தார்) என்னும் திரைப்படம் எப்படிக் கொடுங்கோலன் முசோலினியின் முகமூடியைக் கிழித்து எரிந்ததோ- அப்படி- உச்சிதனை முகர்ந்தால் என்னும் திரைப்படம் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்சேவின் கொடிய கொலைவெறி முகத்தை உடைத்தெரிகிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முதல் திரைப்படத்தை (காற்றுக்கு என்ன வேலி) உருவாக்கியவ்ர் புகழேந்தி தங்கராசா. இப்போது அவர் உருவாக்கி தந்துள்ள உச்சிதனை முகர்ந்தால் தொடர்நது தமிழீழ விடுதலைப் போரில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது.அவர் படைப்புகளான இந்த இரு திரைப்படங்களுக்கும் நிகராக தமிழ்நாட்டில் இதுவரை ஈழம் குறித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது பச்சை உண்மை. படை மட்டுமல்ல- ஒரு படமும் தமிழீழத்திற்காக போராட முடியும் என்பதை இயக்குனர் புகழேந்தி தங்கராசா தன் திரைப் படைப்பினால் நிறுவியிருக்கிறார்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் தமிழீழ விடுதலைக்கான உரத்த போர் முழக்கமே அன்றி வேறில்லை. கடல்நீர் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் பிரிக்கலாம்- ஆனால், தமிழனின் கண்ணீர் இவ்விரு நாடுகளையும் எப்போதும் இணைக்கும் என்பதையும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நமது கவனத்தை பதிக்கிறது. கொடுமைக்கு இரையாகும் ஒரு பெண்ணாக அல்ல. கொடுமைக்கு இரையாகும் ஒரு தேசிய இனமாக புனிதவதி இத்திரைப்படத்தில் வடிவம் கொள்கிறாள். உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தங்கள் உரிமைப் போராட்ட உணர்வினை மேலும் கூர் தீட்டிக்கொள்ள உச்சிதனை முகர்ந்தால் நிச்சயமாக உதவும். தமிழீழ மக்களின் கண்ணீரை இத்திரைப்படம் நெருப்பாக்கும். தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும்.தமிழருவி மணியன் இயல்பான-சூடான திரை உரையிலும், இசையமைப்பாளர் இமானின் நெஞ்சைப் பிழியும் தமிழிசையிலும் உச்சிதனை முகர்ந்தால் தனி மிடுக்குடன் தமிழுலகில் உலா வருகிறது.

ஈழவிடுதலையில் எப்போதும் தனி ஆர்வம் கொண்டுள்ள நடிப்பின் செல்வர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் ஈடிணையற்ற பங்களிப்பினை நல்கி உள்ளார்.சீமான், சங்சீதா, நாசர்,லட்சுமி போன்றோரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை சீராட்டாமல் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீக்கமற திரைப்படம் பார்த்த தலைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறாள் புனிதவதியாக நீநிகா.

உலக விருது பெறும் இத்திரைப்படம் என்று உறதியாக கூறலாம். புகழ் அனைத்தும் புகழேந்திக்கே.

காசி ஆனந்தன்.
சென்னை. தமிழ்நாடு.
வன்னி ஆன்லைன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 2:06 pm

நிச்சயம் நல்ல விருதுகள் கிடைப்பதுடன் சிங்கள் கிழித்து ஏறிய வேண்டும் என்று விரும்பிகிறேன். நன்றி தம்பி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 2:12 pm

படம் பார்க்கணுமே அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக