புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_m10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_m10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_m10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_m10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_m10பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் உட்கார்ந்த நாற்காலி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 11:56 am

பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Bharathi1"இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர்.

''இந்த வீதிக்குப் பெயர்..?''

''ஈசுவரன் கோயில் தெரு!''

கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது.

''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ
தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான்
பாரதியார் குடியிருந்த வீடு!''

கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற அந்த
இல்லத்தின் தோற்றம், என் உள்ளத்தில் ஏதேதோ சிந்தனைகளைக் கிளறிவிட்டன.

பாரதியாரின் இல்லத்துக்கு அடுத்த வீட்டு வாசல் திண்ணையில், சாதுவாக ஒரு
மனிதர் உட்கார்ந்தபடி எங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் நெற்றியிலே
பளிச்சென்று திருநீறு ஒளி வீசிக்கொண்டிருந்தது.

''அடுத்த வீட்டில்தானே பாரதியார் குடியிருந்தார்?'' என்று மெதுவாக அவரிடம் விசாரித்தேன்.

''ஆமாம். இப்போது அது என் வீடு. 1953-ல் நான் விலைக்கு வாங்கிவிட்டேன்.
பத்து வருஷமா சும்மாவேதான் பூட்டி வெச்சிருக்கேன். போன வருசமே சர்க்கார்லே
இந்த வீட்டை வாங்கறதா இருந்தது. இந்த வருசத்துக்குள்ளேயாவது முடிஞ்சுடும்னு
எம் புத்தியிலே படுது. தனிப்பட்டவங்க யாருக்கும் இதை விக்க றதா
உத்தேசமில்லை. சிவாஜி கணேசன் கூட வந்து பார்த்துட்டுப் போனாரு...''

''நீங்க பாரதியாரை நேரிலே பார்த் திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா?''

''பார்க்காமல் என்ன? அடுத்த வீட்டு லேதானே பத்து வருசத்துக்கு மேல இருந்
தாரு! கவர்மென்ட்டுக்கு விரோதமாக இங்கே வந்தாரு. தங்கமான குணம்.
எல்லார்கிட்டேயும் சகஜமா பழகுவாரு. குழந்தைங்களைக் கண்டால் தூக்கிட்டுப்
போய் விளையாடுவாரு. குழந்தைங்க ஏணையிலே தூங்கிக்கிட்டு இருந்தாக் கூட
தூக்கிட்டுப் போயிடுவாரு. குழந் தைங்கன்னா அவ்ளோ பிரியம்! அவரும் சரி, அவர்
பெண்ஜாதியும் சரி... ரொம்ப நல்ல குணம். ஒருத்தரையும் கடுமையாப்
பேசமாட்டாரு. யார் கூப் பிட்டு சாப்பாடு போட்டாலும் சாப்பிடு வாரு.
வித்தியாசமே கிடையாது.''

''பார்க்க எப்படி இருப்பார்?''

''எப்பப் பார்த்தாலும் கறுப்புக் கோட்டு ஒண்ணு போட்டுக்கிட் டிருப்பாரு.
தலையிலே ஒரு துணியைச் சுத்திக்குவார். மாடி மேலே உலாத்திக் கிட்டே
பாடிக்கிட்டிருப்பார்.''

''எந்தப் பாட்டாவது ஞாபகம் இருக்குதா?''

பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Bharathi2''அதெல்லாம்
ஒண்ணுமில்லீங்க. அந்தக் காலத்திலே இவர் இவ்வளவு பெரிய ஆசாமியாவார்னு
தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் உன்னிப்பாவே கவனிச்சிருக்கலாம்!''

''அவர் உங்களோடு பேசி யிருக்காரா?''

''ஆமாம். 'என்ன செட்டி யாரே'ன்னுதான் கூப்பிடு வார்.''

''உரக்கப் பாடுவாரா?''

''பெரிய குரல் கொடுத்துத் தான் பாடுவார். பேச்சும் அப்படித் தான்
ஆவேசமாயிருக்கும். எப்ப வும் ஒரு வேகம்தான்; ஆவேசந்தான். சில சமயம் 'ஓம்
சக்தி! ஓம் சக்தி'ன்னு கூவுவாரு. சின்னக் குரலே கிடையாது. உறைப்பாப்
பேசுவாரு. அடிக்கிறாப் போல இருக்கும். 'என்னடா இவர் இப்ப டிப் பேசறாரே'னு
கூடத் தோணும். அது அவரு சுபாவம். கவர்மென்ட் பேரிலே இருக்கிற வெறுப்பு
அப்படி...''

''உங்க பேரு?''

''கு.மா.சி.எம். அண்ணாமலைச் செட்டியார்.''

''செட்டிநாடா?''

''இல்லே. இந்த ஊரேதான். இவர் என் மகன். காளத்தின்னு பேரு.''

''எதிர் வீட்டிலே ராஜரத்தினம் செட்டியார் இருக்கிறார். அவருக் கும்
பாரதியாரோடு பழக்கம் உண்டு. அவர் வீட்டிலே பாரதி யார் உட்கார்ந்த நாற்காலி
கூட ஒண்ணு இருக்குது. பார்த்துட்டுப் போங்க. வாங்க, நானே அழைச் சிட்டுப்
போறேன் அவரிடம்'' என்று கூறி, எங்களை எதிர் வீட் டுக்கு அழைத்துச் சென்றார்
காளத்தி.

''ரொம்பக் கஷ்டம்தாங்க அவ ருக்கு, அந்தக் காலத்திலே! எந்த நேரமும் யூனியன்
போலீஸ் ஸி.ஐ.டி-ங்க தெருக் கோடியிலே இருந்துக்கிட்டு 'வாச்' பண்ணிக் கிட்டே
இருப்பாங்க. அப்பெல் லாம் அவரைக் காப்பாத்தினது ரௌடி வேணுதான்'' என்றார்
ராஜரத்தினம் செட்டியார்.

''என்ன? ரௌடி வேணுவா?!''

''ஆமாங்க! பாரதியார்கிட்டே அவனுக்கு என்னவோ அவ்வளவு அன்பு. அவர் கூடவே
இருந்து பந்தோபஸ்து கொடுப்பான். பாரதியார் அவன் கூடத்தான் தென்னந்தோப்புப்
பக்கமெல்லாம் உலாத்தப் போவாரு. 'பாரதியாரை புதுச்சேரி பார்டர் தாண்டி இட்
டுக்கிட்டு வந்துடு. ஆயிரம் ரெண் டாயிரம் தரேன்'னு இங்கிலீஷ் போலீஸ்
சொல்லுவாங்க. ஆனா லும் வேணு ரொம்ப நேர்மையான வன். பாரதியாருக்கு உண்மையாய்
இருந்தான். கடைசி வரைக்கும் அவரைக் காப்பாத்தினான்.''

''உங்களுக்கு அப்ப என்ன வயசு இருக்கும்?''

''இருபதுக்குள்ளே இருக்கலாம். அவருக்கு முப்பது இருக்கலாம்.''

''அவர் பாடறப்போ நீங்க கேட்டிருக்கீங்களா?''

''உம். மெத்தையிலேருந்து உரக்கப் பாடுவாரு. காளி பூஜை பண்ணுவாரு.
சுதேசமித்திரன் ஆபீசிலேருந்து மாசா மாசம் முப்பது ரூபா வரும் அவருக்கு.
அதிலேதான் ஜீவனம். ஏழு ரூபாயோ என்னமோதான் வாடகை. அதையே அவரால கொடுக்க
முடியாது. ஒரு நாள் அவர் சம்சாரம் வந்து 'ராஜம்! - அந்தம்மா என்னை ராஜம்
ராஜம்னுதான் கூப்பிடும் - அவச ரமா எனக்கு ஏழு ரூபா கொடு. இந்த நாற்காலியை
வெச்சுக்கோ. இதை விலைன்னு வெச்சுக்க வேணாம். உதவி செய்யறதா நினைச்சுக்
கொடு'ன்னாங்க. இன்னுங்கூட அந்த நாற்காலி இருக்குது. பத்திரமா வெச்சிருக்
கேன். பிரம்பு பின்னின நாற்காலி. நாலு ரூபா கூட பெறாது. பிரம்பு கூட
மேலேதான் பின்னினோம். அடியிலே இருப்பது அப்படியே தான் இருக்குது.
மாத்தல்லே. கடையிலே இருக்குது நாற்காலி. போய்ப் பாருங்க. டேய்... இவங் களை
அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டுடா! ரொம்பப் பேரு வந்து பாக்கறாங்க.
'எனக்குக் கொடுத் துடு'ன்னு கேக்கறாங்க. பாரதியார் ஞாபகார்த்தமா
இருக்கட்டும்னு யாருக்கும் கொடுக்கல்லே!'' என் றார் ராஜரத்தினம்
செட்டியார்.

அவருடைய பேரனுடன் சென்று அந்த நாற்காலியைத் தரிசித்தோம்.

சித்திரக்காரர் அதைப் படம் வரைந்துகொள்ளும் நேரத்தில் நான் அதைத் தொட்டு,
நகர்த்தி, நிமிர்த்திப் புரட்டிச் சாய்த்துக் கவிழ்த்து ஒருக்களித்து
எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் பார்க்கமுடியுமோ அத்தனை கோணங்களிலும் ஆசை
தீரப் பார்த்தேன்.

கடைசியாகக் கவியரசரின் ஆசனத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் புதுவையிலிருந்து ஒரு புதிய உணர்ச்சியோடும் ஊக்கத் தோடும் திரும்பி வந்தேன்.

என் மூச்சிலே இப்போது ஒரு சக்தியே பிறந்திருக்கிறது!

****

புரட்சி தெரியுமா புரட்சி?


பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Bharathiஇன்றும் நாம் நடைமுறைப்படுத்தத் தயங்கும் விதவை மறுமணத்தை வலியுறுத்திய முதல் தமிழன் மகாகவி பாரதி!

பாரதி எழுதி முற்றுப்பெறாத 'சந்திரிகையின் கதை' என்ற நாவலில் விதவை
மறுமணத்தை வலியுறுத்து கிறார். கோமதி என்ற பெண் தன் மரண காலத்தில்,
அருகிலிருந்த விசாலாக்ஷி என்பவளிடம் கூறுகிறாள்...

''... நீ விவாகம் செய்துகொள். விதவாவிவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்
களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப்
பெண்கள் அடிமைகளாய், ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடியவேண்டிய
அவசியமில்லை! ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல
சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன்
சென்னைப் பட்டணத்துக்குப் போய், அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி
செய்யும் ஸபையாரைக் கண்டு பிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத்
தேடி, வாழ்க்கைப்படு..!''

- 'சந்திரிகையின் கதை' முதல் அத்தியாயத்தில்!



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 12:08 pm

மிகவும் நன்றி...ரேவதி அவர்களே ...நல்ல பதிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 12:36 pm

எனக்கு உடல் சிலிர்த்தே விட்டது அக்கா நன்றிகள் அக்கா பாரதியின்
சில சரித்திர நினைவுகளை பகிர்ந்தமைக்கு சூப்பருங்க நன்றி



பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 599303
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 12:39 pm

கோவிந்தராஜ் wrote:எனக்கு உடல் சிலிர்த்தே விட்டது அக்கா நன்றிகள் அக்கா பாரதியின்
சில சரித்திர நினைவுகளை பகிர்ந்தமைக்கு சூப்பருங்க நன்றி
உண்மைதான் கோவிந்த் நானும் பள்ளி சுற்றுலாவில் அந்த வீட்டை பார்த்து இருக்கிறேன் நடனம் நடனம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 12, 2011 1:32 pm

நல்ல பயனுள்ள பதிவு ரே நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:00 pm

பதிவிற்கு வணக்கமும் வாழ்த்துகளும் !

பாரதி........ இந்த மந்திர சொல்லின் ஆணிவேர் எப்போதும் வறுமையினால் வைராக்கியம் பெற்று வளர்ந்தவை. சீட்டுக்கவி எழுதி கொடுத்த காலத்தில் கூட எதையும் பிச்சையாய் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இவருக்கு அன்பளிப்பு கொடுப்பவர்கள் எல்லாம் ( மேற்பட்ட பதிவில் வருகிற செட்டியார் உள்பட ) பாரதி என்கிற மகா கவியரசருக்கு கப்பம் கட்டுகிறோம் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அன்பளிப்பு அளித்தோம் என்று கூறவில்லை.

எதற்கும் யாரிடமும் தலை குனியாத பாரதியின் கவிவரிகள் இப்போது.. படு கேவலமாய் பயன்படுத்த படுகிறது. சினிமா துறைக்கு பின்பு இப்போது விளம்பரத்திலும் பாரதியின் பாடல் வரிகள் பயன்படுத்த படுகின்றன. இதற்கு ஒரு முடிவில்லையா ?

அவன் கண்ணீரை புட்டியில் அடைத்து
புளிக்க வைத்து விற்று விடாதீர்கள்
-- வைரமுத்து
சினிமா துறையினருக்கு கேட்டுக்கொண்டது. இதனை விளம்பர நிறுவனங்களிடமும் கேட்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர்
காணி நிலம் வேண்டும் பாராசக்தி என்று கூறுவது வேதனை தருகிறது.



பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:04 pm

நன்றி நன்றி அன்பு மலர்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 12, 2011 2:06 pm

மிகவும் நல்ல பதிவு, படிக்க படிக்க, என்னுள் எழுந்த உணர்வுகள், வார்த்தையால் கூற முடியாதவை......பகிர்விற்கு மிக்க நன்றிகள் ரேவதி....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 12, 2011 5:04 pm

நல்ல பதிவு சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 1357389பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! 59010615பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Images3ijfபாரதியார் உட்கார்ந்த நாற்காலி! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 5:06 pm

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக