புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
1 Post - 2%
prajai
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_m10சனிப் பெயர்ச்சி  பலன்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப் பெயர்ச்சி பலன்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:21 pm

நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.

கன்னி ராசியில் அமர்ந்து பலரையும் கலங்கடித்து கதற வைத்த சனிபகவான் அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்கும், வசதி, வாய்ப்புகளும் மக்கள் அடிமையாவார்கள். சுற்றுலாத்துறை மேம்பாடடையும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமைப் பிறக்கும். துணிமணிகள் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் அரசால் சில சலுகைகள் அடைவார்கள். வளர்ந்த நாடுகளுக்கு ஈடு இணையாக இந்தியாவில் நவீன வாகனத் தயாரிப்பு தொழிற் கூடங்கள் அமையும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் அசுர வளர்ச்சியடையும். மறுமணம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வேலையாட்களின் தினக்கூலியும், மாத சம்பளமும் உயரும். பணியாட்களின் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் பல புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும். சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகும். பிரபலங்கள் வாகன விபத்துக்குள்ளாவர். நீதிபதிகள் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஜனநாயகம் தழைக்கும். வி, ஸி, றி, ஜி, க்ஷி ஆகிய எழுத்துக்களில் பெயருடையவர்கள் பிரபலமாவார்கள்.

26.3.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்தமர்வதால் அக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள். அரசாங்கத்திற்கும் தனியார் பள்ளி நிர்வாகிக்களுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ்வல் கம்யூனிக்கேஷன், சுற்றுலா, சட்டம் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவுகளில் சேர்ந்துப் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கம்‌ப்பியூட்டர் துறை மேலும் வளரும். ஆனால் 2014 தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.

இந்தியாவின் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தொழில் தொடங்க இந்தியாவில் முதலீடு செய்யும். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜ தந்திரத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். மேலும் நவீன செயற்கை கோள்களை இந்தியா ஏவும். மத்திய அரசு தடுமாறும். அரசியலில் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் போக்கும் அதிகரிக்கும். தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் ஒருபகுதி வெளியாகும்.

பசு, குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். ஆடுகள் மேலும் அழியும். வன விலங்குகள் பாதுகாப்பின்றி அலையும். கிரேணட், மார்பல், டையில்ஸ் விலை குறையும். மணல், சிமெண்ட், கம்பி, செங்கல் விலை உயரும். நாட்டில் புகழ் பெற்ற வீடு கட்டுமானப் பணி நிறுவனங்கள் வீழ்ச்சியடையும். இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். மின், பேருந்து, ரயில், வானுர்திக் கட்டணங்கள் உயரும். தங்கம் விலை குறைந்து 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012 பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோல் திரவ நிலையிலுள்ள தங்கமாகும். சமையல் எரிவாயு விலை உயரும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:22 pm

கண் மற்றும் பிறப்புறுப்புகளை, விந்தணுக்கள், கருப்பைகளையும் பாதிக்கும் கிருமிகள் பரவும். பருவ நிலை மாறி மழைப் பொழிந்தாலும் நீர் நிலைகள் நிரம்பி வெ‌ள்ளப் பெருக்கால் நில அரிப்பு, நிலச் சரிவு அதிகரிக்கும். பெரிய அரிய வைரங்கள் கண்டறியப்படும். நிழல் உலக தாதாக்கள், மோசடிப் பேர்வழிகளால் பரம்பரை பணக்காரர்கள் பாதிப்படைவார்கள். சிறுபான்மையின மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும். வைணவ‌த் தலங்கள் பாதிப்படையும். வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும். புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும். விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க புது சட்டம் வரும்.

விபரீத ராஜயோகம்!

ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும். மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மத்திம‌ப் பலன்கள் உண்டாகும். மேஷம், கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகளும், விபத்துகளும், சிறுசிறு அவமானங்களும் வந்து நீங்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்!

சித்திரை 3-ல் 21.12.2011 முதல் 25.03.2012 வரை
சித்திரை 2-ல் 26.03.2012 முதல் 08.05.2012 வரை

சித்திரை 1-ல் 09.05.2012 முதல் 29.07.2012 வரை
சித்திரை 2-ல் 30.07.2012 முதல் 11.09.2012 வரை

சித்திரை 3-ல் 12.09.2012 முதல் 9.10.2012 வரை
சித்திரை 4-ல் 10.10.2012 முதல் 8.11.2012 வரை

சுவாதி 1-ல் 9.11.2012 முதல் 12.12.2012 வரை
சுவாதி 2-ல் 13.12.2012 முதல் 24.4.2013 வரை

சுவாதி 1-ல் 25.4.2013 முதல் 8.9.2013 வரை
சுவாதி 2-ல் 9.9.2013 முதல் 12.10.2013 வரை
சுவாதி 3-ல் 13.10.2013 முதல் 9.11.2013 வரை
சுவாதி 4-ல் 10.11.2013 முதல் 11.12.2013 வரை

விசாகம் 1-ல் 12.12.2013 முதல் 29.1.2014 வரை
விசாகம் 2-ல் 30.1.2014 முதல் 28.04.14 வரை

விசாகம் 1-ல் 29.4.2014 முதல் 18.5.2014 வரை
சுவாதி 4-ல் 19.5.2014 முதல் 10.9.2014 வரை

விசாகம் 1-ல் 11.9.2014 முதல் 13.10.2014 வரை
விசாகம் 2-ல் 14.10.2014 முதல் 13.11.2014 வரை
விசாகம் 3-ல் 14.11.2014 முதல் 16.12.2014 வரை

வக்ர காலம்!

4.2.2012 முதல் 25.03.2012 வரை சித்திரை 3-ல் (துலாம்)
26.3.2012 முதல் 08.05.2012 வரை சித்திரை 2-ல் (கன்னி)
9.5.2012 முதல் 22.06.2012 வரை சித்திரை 1-ல் (கன்னி)

17.2.2013 முதல் 24.04.2013 வரை சுவாதி 2-ல்
25.4.2013 முதல் 22.06.2013 வரை சுவாதி 1-ல்

05.03.2014 முதல் 28.04.2014 வரை விசாகம் 2-ல்
29.04.2014 முதல் 18.05.2014 வரை விசாகம் 1-ல்
19.05.2014 முதல் 18.07.2014 வரை சுவாதி 4-ல்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:25 pm

மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 10, 11-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ஆமிடத்தில் உலவுகிறார். இது கண்டகச் சனியின் காலமாகும். சனி 10-ஆம் வீட்டோனாகி, 10-க்கு 10-ஆமிடமான 7-ல் தன் உச்ச ராசியில் உலவுவதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணம் ஈடேறும். பகுதி நேரத் தொழிலில் ஈடுபட்டு வருமானம் பெற வாய்ப்புக் கூடிவரும்.

சரராசிக்கு அதிபதியான சனி மற்றொரு சர ராசியில் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் விசேடமான ஆதாயம் கிடைக்கும். சனி காற்று ராசியில் இருப்பதால் ஆகாயம் சம்பந்தப்பட்ட இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். பயணம் பயன்படும். சொத்துக்கள் சேரும். காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம் மற்றும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். சனி 11-ஆம் இடமான பாதக ஸ்தானத்துக்கு உரியவராகி 7-ல் உலவுவதால் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து செல்லவும் நேரலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். அணுகுமுறையைச் சரிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை சனி கன்னியில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். செய்தொழிலும் சீராக இருக்கும். எதிர்ப்புக்கள் குறையும். திறமைக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.

26-6-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதியவர்கள் அறிமுகமாகி, உங்களுக்கு நலம் புரிவார்கள். குறுக்கு வழிகளில் திடீர்ப் பொருள்வரவு உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரப் பயணத்தின் மூலம் பயன் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். மகன் அல்லது மகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ வாய்ப்புக் கூடிவரும். ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக்காலத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:26 pm

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு யோக காரகனான சனி தன் உச்ச ராசியான துலாத்தில், 6-ஆமிடத்தில் சஞ்சரிப்பது மிக மிக விசேடமானதாகும். எதிரிகளை வெல்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனோபலம் கூடும். தன்னம்பிக்கை பெருகும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கடன் உபத்திரவம் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் ஆகியோர் வெற்றி நடைபோடுவார்கள். புனிதப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரலாம்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தாய் நலம் சிறக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபடுவீர்கள்.

26-6-2012 முதல் 4-11-2013 வரை உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதிகள் கூடும். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். கறுப்பு நிறமுள்ளவர் உங்களுக்கு உதவுவார்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

வாழ்க்கைத்துணைவரின் மூலம் நலம் உண்டாகும். பூர்விகச் சொத்துக்கள் கிடைக்கும்.

மொத்தத்தில் சுபிட்சம் கூடும் காலமிது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:27 pm

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 4-ல் உலவிக் கொண்டிருந்த சனி 5-ஆமிடம் மாறி இருக்கிறார். கோசாரப்படி இது சிறப்பானதாகாது. என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 8, 9-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி 5-ல் இருப்பதால் சில நன்மைகளும் உண்டாகும். 8-ஆம் வீட்டோன் 5-ல் இருப்பதால் மக்களால் மன வருத்தம் ஏற்படும். புத்திர சோகமும் உண்டாகும். பிள்ளைகளில் நடத்தை சீராக இராது. அவர்களது கல்வியில் தடை ஏற்படவும் காரணம் உண்டு. கருச்சிதைவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். கெளரவம், மதிப்பு குறையும். பூர்விகச் சொத்துக்களை இழக்க நேரலாம். 9-ஆம் வீட்டோன் சனி 5-ல் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பணிகள் ஈடேறும். குல தெய்வத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நீண்ட காலத் தேவைகள் நிறைவேறும். பொருளைச் சேமிக்கவும் செய்வீர்கள்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிரச்னைகள் குறையும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நிகழும். கடன் உபத்திரவம் குறையும்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தாயாராலும், உற்றார்-உறவினர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

11-10-2012 முதல் 4-11-2013 வரை எதிரிகள் விலகுவார்கள். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் அதில் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட இப்போது உங்களுக்கு உதவுவார்கள். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருள் வரவு அதிகமாகும். பெரியவர்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். மக்கள் நலம் பாதிக்கும் என்றாலும் தெய்வ அருளால் சீராகிவிடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தந்தையாலும், தந்தை வழி உறவினராலும் நலம் உண்டாகும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். அலைச்சலும் உழைப்பும் இந்த நேரத்தில் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு உண்டாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:27 pm

கடகம்:

ராசிக்கு 4-ஆமிடத்துக்குச் சனி வந்திருக்கிறார். அர்த்தாஷ்டம சனியின் காலமிது. 7-ஆம் வீட்டோன் 4-ல் இருப்பது சிறப்பாகும். இதனால் சொத்துக்கள் சேரும். சுகம் கூடும். மனைவி வழியில் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் வீட்டோன் சனி 4-ல் இருப்பதால் சுகபங்கம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள், வழக்குகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். இருப்பிட மாற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் பாதிக்கும். கால்நடைகளால் அதிகம் ஆதாயமிராது. வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். அலட்சியப் போக்கு அடியோடு கூடாது. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. சனிக்கு 8-ஆம் வீட்டு ஆதிபத்தியமே வலுப்பெறுவதால் துன்பம், துயரம் ஆகியவை உண்டாகும். முக்கிய நண்பர்கள், உறவினர்களை விட்டுப் பிரிய நேரலாம். சிலர் மனதுக்குப் பிடிக்காத இடத்தில் வசிக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் நலம் கூடும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சகோதரரால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது ஈடேறும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள்.

23-12-2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் உண்டாகும். முக்கிய உறவினரையோ, நண்பரையோ பிரிய வேண்டிவரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். 31-5-2013 முதல் சுபச் செலவுகள் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனச் சேர்க்கை நிகழும். கடன் தொல்லை குறையத் தொடங்கும். சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். மாணவர்கள் வளர்ச்சிகான மார்க்கத்தைக் காண்பார்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் கெடுபலன்களே அதிகம் உண்டாகும் என்பதால் சனிப் பிரீதியை அவசியம் செய்யவேண்டும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாடு மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:28 pm

சிம்மம்:

ஏழரைச் சனியின் காலம் முடிந்துவிட்டது. சனி 3-ல் உலவுவது மிகவும் விசேடமாகும். அதுவும் அவர் தனது உச்ச ராசியில் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கவே செய்யும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள் சேரும். மேலதிகாரிகள், முதலாளிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகி, உயர் பதவியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உடல்நலம் திருப்திகரமாக இருந்துவரும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 3-ல் தன் உச்ச ராசியில் இருப்பதால் எதிர்பாராத தனப்பிராப்தியைப் பெறுவீர்கள். 7-ஆம் வீட்டோன் வலுத்திருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.

சிறுசிறு பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளவும் அதனால் அனுகூலம் பெறவும் வாய்ப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பொது ஜனத்தொடர்பு வலுக்கும். உயர்பதவிகள், பொறுப்புகள் தேடிவரும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய சொத்துக்கள் சேரும். பெற்றோரால் நலம் பல பெறுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் நலம் கூடப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சனி வக்கிரமாக இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.

கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். அதன்பிறகு சனி துலாத்துக்கே திரும்பி வந்துவிடுவார். துலாம் சர ராசி என்பதாலும் உபசய ராசி என்பதாலும் சுக்கிரனின் ராசி என்பதாலும் வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும். சுபபலன்கள் தொடரும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை புதியவர்களது நேசம் கிடைக்கும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, தோல், கறுப்பு நிறப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி பாட்டனாரால் நலம் பெறுவீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். சூதாட்டம், பங்கு மார்க்கெட், மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் பெரும் பணம் கைக்கு வந்து சேரும். குறுக்கு வழிகளில் செல்வம் சேரும் நேரமிது. ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்கள் மூலமாகவும் ஆதாயம் பெருகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை மகப்பேறும் மக்களால் பாக்கியமும் பெறும் நேரமிது. ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.

புத்திசாலித்தனம் பளிச்சிடும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வருமானம் கூடப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டாகும். பி.எஃப், பென்ஷன், உயில் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

செல்வச் செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பதவிச் சிறப்பு உண்டாகும். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். இந்த நல்ல நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:29 pm

கன்னி:

உங்கள் ராசிக்கு 5, 6-ஆம் இடங்களுக்குரிய சனி 2-ஆமிடத்தில் உலவுகிறார். ஏழரைச் சனி தொடர்கிறது. என்றாலும் உங்கள் ராசிநாதன் புதனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் என்பதாலும், சனி தன் உச்ச ராசியில் உலவுவதாலும் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் பெரும்பாலான காலம் சனியானவர் குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களின் அளவு கூடி, கெடுபலன்கள் குறையும் என்று சொல்லலாம். 5-ஆம் வீட்டோனான சனி 2-ல் பலம் பெற்று இருப்பதால் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். பங்கு மார்க்கெட், ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சனி 6-ஆம் வீட்டுக்கு அதிபதியாகி 2-ல் உலவுவதால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். கண், முகம், வாய், பல் மற்றும் வாயு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை முயற்சி வீண்போகாது. கடுமையாக உழைப்பதன் மூலம் வருமானம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். உடல்நலம் சீராகும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். 17-5-2012 முதல் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். ஆகஸ்ட் 2012 முதல் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.

பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சகோதர நலம் பாதிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். கண், வாய், பல், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

11-10-2012 முதல் 4-11-2012 வரை பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவும் காலகட்டமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல், போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, நவீன விஞ்ஞானத்துறை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட இனங்களால் வருமானம் பெருகும். அயல்நாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். 23-12-2012 முதல் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புதிய சொத்துக்கள் இந்த நேரத்தில் சேரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். குடும்ப நலம் சீராகும். சுகானுபவம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். செய்து வரும் தொழில் லாபம் தரும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். 19-6-2014 முதல் முயற்சி வெற்றி தரும். மகன் அல்லது மகளால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செல்வச் செழிப்புக் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்வாழ்க்கை சிறக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழும் பொருளும் பெறுவார்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு சென்று பொருள் திரட்ட வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். 12-7-2014 முதல் அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். சனிப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவரவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:29 pm

துலாம்

உங்கள் ராசிக்கு 12-ல் உலவிக் கொண்டிருந்த சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறி இருக்கிறார். ஏழரைச் சனியின்காலத்தில் ஜன்மச் சனியின் காலம் ஆகும் இது. கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் சனியானவர் உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி, ஜன்ம ராசியில் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் நலமே புரிவார். இதுவரையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் விலகும். வீண் விரயங்கள் இனிமேல் இருக்காது. உடல்நலமும் சீராகும். மன பலம் கூடும். சுகானுபவம் உண்டாகும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். நல்ல இடமாற்றம் உண்டாகும். தொழிலிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். அயல்நாட்டுத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். கலைஞானம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்குக் கைகூடும். சொத்துக்கள் சேரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலைச்சலும் உழைப்பும் அதிகமானாலும் கூட அதனால் பயனும் அதிகமாகும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். செல்வ நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் பெருகும். கூட்டாளிகள் உதவுவார்கள். நிலபுலங்களால் வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். 16-5-2012 முதல் 4-8-2012 வரையிலும் உள்ள காலத்தில் சற்று எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச் செலவுகளும் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. அதன்பிறகு நிலைமை சீராகும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை அந்நிய மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். திடீர்ப் பொருள்வரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் மேன்மை அடையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை இந்த நேரத்தில் கிடைக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 23-12-2012 முதல் அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; விழிப்புடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை நலன் கவனிக்கப்பட வேண்டிவரும்.
31-5-2013 முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகள் நிறைவேறும். பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவதுடன், ஆதரவும் தருவார்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தொலைதூரப் பயணம் ஆக்கம் தரும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. எதிர்ப்புக்கள் இருக்குமென்றாலும் சமாளிப்பீர்கள். உடல்நலம் அவ்வப்போது கவனிக்கப்பட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன்வாங்க வேண்டிவரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். குறுக்கு வழிகளில் பிரவேசிக்கலாகாது. செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் தேவை. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் ஆகியோருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். இல்லையென்றால் அவர்களது கோபத்துக்கு ஆளாகி, சங்கடப்பட நேரும். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவு சிறப்பாக இருக்கும். இந்த சனிப் பெயர்ச்சிக் காலம் முழுவதும் ராகு, கேதுக்களின் நிலை சிறப்பாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது அவசியமாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:30 pm

விருச்சிகம் :

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் உலவிக் கொண்டிருந்த சனி, விரய ஸ்தானத்துக்கு இடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. கோசாரப்படி இது அனுகூலமான நிலை ஆகாது. என்றாலும் சனி 3, 4-ஆம் இடங்களுக்கு அதிபதியாகி, 12-ல் தன் உச்ச ராசியில் இருப்பதாலும், 3, 4-ஆம் இடங்களுக்கு அனுகூலமான இடத்தில் சனி உலவுவதாலும் சில நன்மைகளும் உண்டாகும். உடன்பிறந்த இளைய சகோதர, சகோதரிகளின் வாழ்வு சிறக்கும். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். மக்களால் சில பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. வீண்விரயம் ஏற்படும். தேவையில்லாத, அனாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். மேலும் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ரிஷபத்திலும், கடகத்திலும் குரு உலவும் நிலை அமைவதாலும், பெரும்பாலான காலம் சனி குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களும் உண்டாகும் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் ஜனன கால ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும் கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் சனிப் பிரீதி அவசியம் செய்யவேண்டும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை செல்வ நிலையில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. சுப காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் பெறுவீர்கள். மக்கள் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பொறியியல் துறை லாபம் தரும். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் பொருள்வரவு கூடும். வாழ்க்கைத்துணைநலம் சீராகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். 26-6-2012 முதல் நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும், வண்டி, வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 23-12-2012 முதல் கால் பாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். பயணத்தின்போது பொருள் காணாமல் போகும். வீண்செலவுகளும் இழப்புகளும் கூடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். தூக்கம் கெடும். மனதில் ஏதேனும் பயம் இருக்கும். தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 31-5-2013 முதல் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் மன அமைதி கெடும். இருப்பிடத்தில் மாற்றம் செய்து கொள்வீர்கள். அந்த மாற்றமும் திருப்திகரமாக அமையாது. குரு, சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை பண வரவு அதிகரிக்கும் நேரமிது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் பங்கு கொள்வீர்கள். மக்கள் நலம் சீராகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் புகழும் பொருளும் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். 19-6-2014 முதல் தொலைதூரத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும். மதிப்பு உயரும். முயற்சி வீண்போகாது. ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால் ஆதாயமிராது. தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவது நல்லது. 12-7-2014 முதல் ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். அந்நிய மொழி, மதக்காரர்களால் நலம் உண்டாகும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். மக்களால் சில பிரச்னைகள் தலைதூக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். வீண் விவகாரங்களில் தலையிடவேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சனிக்குரிய பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக