புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
284 Posts - 45%
heezulia
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை


   
   

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.


avatar
Guest
Guest

PostGuest Mon Dec 12, 2011 6:11 pm

தமிழக, கேரளா எல்லையில் பதற்றம்: கம்பம்மெட்டில் விவசாயிகள் மீது போலீஸ் திடீர் தடியடி!

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் இன்றும் குமுளியை நோக்கி 1 லட்சம் மக்கள் படையெடுத்துள்ளனர். கம்பம் மெட்டு பகுதியில் திரண்ட 20 ஆயிரம் பேரை போலீசார் திடீரென தடியடி நடத்தினர்.இதனால் விவசாயிகள் மலைப் பாதையில் உருண்டும், அடிபட்டும் சிதறி ஓட வேண்டியநிலை ஏற்பட்டது. போலீஸாரின் இந்த திடீர் தடியடியால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்படுகிறது.

தமிழக கேரள எல்லையில் பதற்றம்

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் தமிழக – கேரளா எல்லையில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணையை நோக்கி பேரணி

இதனிடையை கடந்த சனிக்கிழமையன்று தேனி மாவட்ட விவசாயிகள் திடீரென கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனையடுத்து அவர்களை கேரள எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் வீட்டிற்கு திரும்பி செல்ல வலியுறுத்தினர். ஞாயிற்றுக்கிழமையன்றும் லட்சக்கணக்கான விவசாயிகள் கேரளா எல்லையை நோக்கி படையெடுத்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று அஞ்சிய போலீசார் அவர்களை எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கேட்டுக்கொண்டும் அவர்கள் பின்வாங்காமல் அணையை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது.

மூன்றாவது நாளாக ஊர்வலம்

இந்த நிலையில் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர், சடையனூர், மார்க்கேயன் கோட்டை, உ.அய்யம்பட்டி உள்பட 25 கிராம மக்கள் திரண்டு கூடலூர் சென்றனர். பின்னர் அவர்கள் டிராக்டர், வேன், லாரிகளில் குமுளியை நோக்கி புறப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் கையில் தடி, இரும்பு கம்புகளுடன் இருசக்கர வாகனங்களில் சென்றனர். மூன்றாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் நேரம் செல்ல செல்ல மேலும் சில கிராம குவிந்த வண்ணம் உள்ளதால் தமிழக எல்லை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு 5 அடுக்குப் பதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

கம்பம் மெட்டில் தடியடி

இதனிடையே குமுளி வழியாக செல்ல தடை உள்ளதால் கம்பம் மெட்டு வழியாக 20 ஆயிரம்திற்கும் மேற்பட்டோர் கேரளாவிற்கு செல்ல முயன்றனர். அப்பகுதியில் 144 தடியடி உள்ளதை சுட்டிக்காட்டிய போலீசார் மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறை வாகனங்களை அடித்து உடைத்தனர். இதனையடுத்து போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கம்பம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி உத்தமபாளையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. பின்னர் கடுமையான சோதனைக்குபின்னரே கம்பம் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 12, 2011 7:36 pm

தகவலுக்கு நன்றி புரட்சி
:வணக்கம்:

aswin2304
aswin2304
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 09/12/2010

Postaswin2304 Mon Dec 12, 2011 7:52 pm

சூடு சொரணையற்ற த்மிழா இனியாவது பொங்கியெழு மலையாளத்தானை ஓட ஓட விரட்டு.

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 8:58 am

பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகளுடன் போன 3 வாகனங்கள் சிறைபிடிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற 3 சரக்கு வாகனங்களை கேரளாவில் சிறை பிடித்துள்ளனர். அந்த வாகனங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து எந்த சரக்கு வாகனமும் கேரளாவுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவுக்குப் போகும் தமிழக வாகனங்களை தொடர்ந்து அங்குள்ள விஷமிகள் தாக்கி வருகின்றனர்.இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் கேரள வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரள எல்லையில்தான் இதுவரை பிரச்சினை இருந்து வந்தது. தற்போது பொள்ளாச்சியிலிருந்து போன வாகனங்களுக்கும் கேரளாவில் சிக்கல் எழுந்துள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 3 சரக்கு மினி ஆட்டோக்கள் கேரளாவுக்குச் சென்றன. அங்கு அந்த ஆட்டோக்களை விஷமிகள் சிறை பிடித்துக் கொண்டு சென்றனர்.அந்த ஆட்டோக்களின் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி வந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவை எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து எந்த சரக்கு வாகனத்தையும் கேரளாவுக்கு அனுப்புவதில்லை என்று சரக்கு வாகன உரிமையாளர்கள் தீர்மானித்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் டிஎஸ்பியை நேரில் சந்தித்து தங்களது வாகனங்களை மீட்டுத் தருமாறும், பாதுகாப்பு அளிக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் மலையாள நாளிதழ் தீவைத்து எரிப்பு

இதற்கிடையே, கோவையில் மலையாள நாளிதழை தீவைத்து எரிக்கும் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். மேலும் கோர்ட் வளாகத்தி்ல் உள்ள ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மலையாள எழுத்துக்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர்.

உடுமலையில் மினி ஆட்டோக்கள் ஸ்டிரைக்

கேரள அரசைக் கண்டித்து உடுமலையில், மினி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஆட்டோக்களை ஓட்டாமல் ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 8:59 am

அச்சுதானந்தனுடன் இணைந்து பிரதமரை சந்திக்கும் சாண்டி-ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?

திருச்சூர்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் தயார் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உம்மன் சாண்டி தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.

இதுகுறித்து திருச்சூரில் அவர் கூறுகையில், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், முதல்வர் சாண்டியுடன் இணைந்து அவரை சந்திக்க நான் தயார்.

முதல்வருடன், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்தால் சுமூக தீர்வு காண முடியும், அதற்கு இந்தப் பயணம் உதவும் என நம்புகிறேன் என்றார் அச்சுதானந்தன்.

ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?

இருப்பினும் இந்த சந்திப்புத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்சினையைத் தீர்ப்பதை விடவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி தரும் விஷயங்களில்தான் கேரள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி வருவதாக கருதப்படுகிறது.

உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமரைச் சந்தித்தால், இதேபோன்ற கோரிக்கை தமிழகத்திலும் எழும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக தெரிகிறது. அப்படி கோரிக்கை எழுந்தால், நிச்சயம் அது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் தர்மசங்கடத்தில் ஆழ்ததும், நிச்சயம் இருவரும் இணைந்து பிரதமரைச் சந்திக்க மாட்டார்கள். இதை வைத்து பாலிடிக்ஸ் செய்யலாம் என்பது கேரளத் தரப்பின் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேசமயம், கேரளாவில் அத்தனை கட்சிகளும் ஒருமித்த கருத்தில், ஒரே மாதிரியான முடிவில் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து அவருக்கு நெருக்கடி தரும் வகையிலும் சாண்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 9:02 am

கம்பம்மெட்டு பகுதியில் பெண்கள் மீது போலீசார் தடியடி! : கேரள எல்லையை நோக்கி மக்கள் ஆவேச பயணம்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Gallerye_013710566_366441முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Gallerye_013720238_366441முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Gallerye_013729727_366441முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 10 Gallerye_013736904_366441

தே
னி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் வலுக்கிறது. கம்பம்மெட்டு, கேரள எல்லையில் நேற்று முற்றுகையிடச் சென்ற பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த மக்கள், போலீசார் மீது கல் வீசி தாக்கினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முல்லைப் பெரியாறு உரிமைக்காக ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக லட்சம் மக்கள் திரண்டு, குமுளி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் போராட்டப் பகுதிக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மீது, மக்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு பதட்டம் நிலவுகிறது. நேற்று காலை அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காக்கில்சிக்கைய கவுண்டன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர், கேரள எல்லையான கம்பம்மெட்டில் போராட்டம் நடத்தச் சென்றனர். அவர்களை கம்பம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் அருகில், டி.ஐ.ஜி., சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தடுத்தனர்.

தடையை மீறி கும்பல் சென்றது. பின்னர் கம்பம் மெட்டு போலீஸ் சோதனைச் சாவடியில், தேனி ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் தடுத்தனர். அதையும் மீறி பொதுமக்கள் ஊர்வலமாக கம்பம்மெட்டு நோக்கி சென்றனர். மலை ரோட்டில் ஐந்தாவது கி.மீ.,ல் போலீஸ் வாகனங்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி, தடை ஏற்படுத்தினர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, 500க்கும் மேற்பட்ட பெண்கள், டி.ஐ.ஜி.,யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார், பெண்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

கோபமடைந்த மக்கள், கற்கள் மற்றும்


செருப்புகளை போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். ஆத்திரமடைந்த போலீசார் மலைப்பாதையில் மக்கள் மீது தடியடி நடத்தினர்.

இதில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்து காட்டுக்குள் தப்பி ஓடினர். இதையறிந்த கீழே இருந்து புறப்பட்டு வந்த மற்றொரு கூட்டம், போலீஸ் வாகனங்களை உருட்டுக்கட்டைகளாலும், கல் வீசியும் தாக்கினர்.

இதில், திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் கார் உட்பட ஐந்து போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல் வீச்சின் போது டி.ஐ.ஜி., அமல்ராஜ் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால், கம்பம்மெட்டு மலைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ், கம்பம் மெட்டில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தமிழக - கேரள எல்லையில் போலீசார் குவிப்பு : செங்கோட்டை பகுதியில் கேரள எல்லையான புளியரை வரை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கேரள எல்லைப் பகுதியான குமுளியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி, கேரள எல்லைகளை அடைக்க கோரி வருகின்றனர். இதனால், குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மாற்றுப் பாதையில்
செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள், ராஜபாளையம், செங்கோட்டையைக் கடந்து, கேரள எல்லையான புளியரை வழியாக அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, புளியரை வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 9:04 am

அணைப் பிரச்சனை: மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது: கருணாநிதி

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன் தலைமையில் நடந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கருணாநிதி பேசினார்.

“இப்பிரச்சனையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது, வேடிக்கையாகவும் இருந்துவிடக் கூடாது. எப்போதும்போல் தாமதமாக முடிவெடுப்பதைப்போல் இப்போதும் செயல்படக் கூடாது. உடனிடயாகத் தலையிட்டு அமைதி ஏற்பட உதவிட வேண்டும்” என்று கருணாநிதி பேசினார்.

கேரள அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க முல்லைப் பெரியாறு அணை 15 ஆண்டுக்காலத்தில் எப்படியெல்லாம் பலப்படுத்தப்பட்டது என்பதை புள்ளி விவரத்துடன் விளக்கிய கருணாநிதி, இதற்குப் பிறகும் அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறுவது அர்த்தமற்றப் பேச்சு என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை நில நடுக்கத்தை தாங்கக் கூடிய அளவிற்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக கேரள மக்களுக்கு எந்த அச்சமும் வேண்டாம் என்றும் கூறிய கருணாநிதி, தமிழனின் குருதி வீதியில் சிந்துவதற்கு முன்னர் மத்திய அரசு தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரள அரசின் அடாவடித்தனம்

வெப் துனியா தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 9:05 am

முல்லை பெரியாறு அணை: சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை

புதடில்லி: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2 மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கிறது. தமிழக- கேரள மாநிலங்களுக்கிடையே சர்ச்சைக்குள்ளாக்கிய முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இதில் முல்‌லை பெரியாறு அணைக்கு மத்திய கம்பெனிப்படை பாதுகாப்பு தர வேண்டும் எனவும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு ‌,திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருவதை தடுக்க கூறியும் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக தி.மு.க.வும் ஒரு மனுதாக்கல் செய்துள்ளது. அதில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய கோரியும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திட சுப்ரீம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றிட கோரியும் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 9:26 am

பிரச்சனை எப்போதுதான் முடியும் ??? அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 9:30 am

இன்று தேனி மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு , தேனி மாவட்ட வியாபாரி சங்கத்தின் சார்பில் முடிவு செய்ய பட்டு நடத்த பட்டு வருகிறது..

இன்று காலை முதல் பெட்டிக்கடை முதல் , பெரிய பலசரக்கு கடைகள் வரை அடைக்க பட்டு உள்ளது ...

தேனி நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது ..

Sponsored content

PostSponsored content



Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக