புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:06 pm

புரட்சி wrote:தேனி , போடி , கம்பம் , பாலயம் , மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் தினமும் ஒவ் ஒரு சங்ககளின் சார்பில் கடை அடைப்பும் , உண்ண விரத போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன ..

கேரளா அரசு மற்றும் கேரளா முதல்வரய் கண்டிது நகர் எங்கிலும் சுவர் ஒடீகள் ஓட்ட பட்டு இருக்கின்றன .. பேருந்துகளிலும் ஒட்ட பட்டு இருக்கின்றன ..
மகிழ்ச்சியான செய்தி சூப்பருங்க அருமையிருக்கு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:11 pm

மகா பிரபு wrote:
புரட்சி wrote:தேனி , போடி , கம்பம் , பாலயம் , மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் தினமும் ஒவ் ஒரு சங்ககளின் சார்பில் கடை அடைப்பும் , உண்ண விரத போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன ..

கேரளா அரசு மற்றும் கேரளா முதல்வரய் கண்டிது நகர் எங்கிலும் சுவர் ஒடீகள் ஓட்ட பட்டு இருக்கின்றன .. பேருந்துகளிலும் ஒட்ட பட்டு இருக்கின்றன ..
மகிழ்ச்சியான செய்தி சூப்பருங்க அருமையிருக்கு

அடிவயிறு எரியுது ! மகிழ்ச்சியான செய்தியா ? மண்டையில் அடி

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 3:14 pm

புரட்சி wrote:இந்த நிலையில் கேரளாவில் காய் கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ...

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தடை செய்ய பட்டதால் இந்த நிலை ,,..

தக்காளி கிலோ - ரூ 160 கேரளாவில்
இதை தானே அனைவரும் எதிர்பார்த்தோம். இந்த நிலை தொடர்ந்தால் அங்கு நிலைமை இன்னும் மோசமாகி அவர்களாகவே முல்லை பெரியார் அணைய
பத்தி நினைக்க கூட மாட்டார்கள்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Uமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Dமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Aமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Yமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Aமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Sமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Uமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Dமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Hமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 A
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 8:35 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ராஜபாளையம் செங்கோட்டை பாதை
இன்னும் பிளாக் செய்ய படவில்லையா புரட்சி ?

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு- போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் அவதி

செங்கோட்டை, டிச. 8-

முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு பிரச்சினை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செங்கோட்டை, நாகர்கோவில், கம்பம், கோவை, பாலக்காடு வழியாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் செங்கோட்டை வழியாகவே செல்வார்கள். தற்போது முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் கம்பம், குமுளி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இதனால் அய்யப்ப பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதன்காரணமாக சபரிமலைக்கு செங்கோட்டை வழியாக செல்லும் தமிழக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த வழியாக பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் தினமும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்தநிலையில் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புளியரை எஸ்.வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் 3 மணி நேரம் ஸ்தம்பித்தன. ஏற்கனவே இப்பகுதி ரோடுகள் குண்டும்,குழியுமாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் போக்குவரத்து நெருக்கடி பயணிகள், பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக- கேரள போலீசார் இரவும் பகலும் கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் இரு மாநில போலீசாரும் தீவிர சோதனை நடத்துகின்றனர்.

அதன்பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள கார்ட்டூன் அகாடமி சார்பில் கொல்லம் பகுதிகளில் ஆங்காங்கே கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 8:38 pm

கூடலூர்: கேரளாவுக்கு காய்கறி, பால் கொண்டு செல்லும், செங்கோட்டை வழியையும் அடைக்கும் வரை ஓய்வின்றி போராடுவோம், என்று கூடலுரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசமாக பேசினர்.

பெரியாறு அணைப்பிரச்னைக்காக, தேனி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை, பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். கூடலூரில் இருந்து குமுளி வழியாக, கேரளா செல்லும் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சபரிமலையில் இருந்து ஊர் திரும்பிய, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் மீது, கேரளாவில் உள்ள முண்டக்கயம் என்ற இடத்தில், கேரள கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் காயம் அடைந்தார். போலீசார் உதவியுடன் இவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் குமுளி வழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு கூடலூர் வந்த போது, அங்கிருந்த தமிழக போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கூடலூர் மக்களுக்கு தெரியவந்ததால், நேற்று அதிகாலையிலேயே கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ரோட்டின் குறுக்கே கயிறு கட்டி அமர்ந்தனர். அதன்பின் குமுளி நோக்கி ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். அவர்கள் மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே தமிழகப்பகுதியில் இருந்து கேரள பகுதிக்கு கடந்த ஐந்து நாட்களாக வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று சபரிமலையில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளா செல்லும் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இவ்வழியாக கேரளாவுக்கு பால், காய்கறி, பலசரக்கு உள்ளிட்டவைகள் கொண்டு செல்லாததால் இடுக்கி மாவட்டத்தில் இப்பொருட்களுக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், தமிழகத்தில் இருந்து மற்றொரு பாதையான செங்கோட்டை வழியாக அனைத்துப் பொருட்களும் கேரளாவுக்கு தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன. பெரியாறு அணைப்பிரச்னை முடியும் வரை இப்பாதையையும் அடைக்க வேண்டும். அதுவரை ரோடு மறியலை நிறுத்தப்போவதில்லை என மறியலில் ஈடுபட்ட பெண்களும், பொதுமக்களும் தெரிவித்தனர். இப்பிரச்னையால் கூடலூரில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தினர் பண்ணைக்கு போலீஸ் காவல்: முல்லை பெரியாறு பிரச்னையால், தேவாரம் பகுதியில் கேரளாவை சேர்ந்தவர்களின் தோப்புகள், பண்ணைகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ., தலைமையில்,தேவாரம் போலீசார் கேரளாவை சேர்ந்தவர்களின் தோட்டங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வைக்கோல் தேக்கம்: உத்தமபாளையம்: பெரியாறுஅணை போராட்டங்களால், தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏற்றுமதியாகும் வைக்கோல் தேக்கமடைந்துள்ளது. இதனால் கேரளாவில் கார்டுபோர்டு, பிளைவுட் தயாரிப்பு தொழில் பாதிப்படைந்துள்ளது. தேனி மாவட்டம் வழியாக தினசரி கேரளாவிற்கு செல்லும் காய்கறிகள், பால், அரிசி, மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது முழுமையாக தடைபட்டுள்ளது. 14 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடியாகும், கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து, கேரளாவிற்கு வைக்கோல் கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மாவட்டத்தில் 10 ஆயிரம் டன் வைக்கோல் தேக்கமடைந்துள்ளது. அறுவடை சீசன்களில் கேரள வியாபாரிகள் இங்கிருந்து, மொத்தமாக விலைக்கு வாங்கிச் செல்வர். கேரளாவில் கார்டுபோர்டு, பிளைவுட் தயாரிப்பு தொழிலுக்கு இந்த வைக்கோலே பிரதானமாக உள்ளது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கில், முதல் போக நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. போராட்டங்களால் கேரள வைக்கோல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். இதனால் எர்ணாகுளம், கொச்சி, கோழிக்கோடு, ஆழப்புலா பகுதிகளில் வைக்கோலை மட்டுமே பிரதானமாக கொண்ட கார்டுபோர்டு, பிளைவுட் தயாரிப்பு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 11, 2011 8:23 am

கூடலூர்:தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

பெரியாறு அணை பிரச்னையில், கடந்த ஒரு வாரமாக, தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில், பெரும் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு,குமுளி வழியாக போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.சபரிமலை சென்று விட்டு, திரும்பும் தமிழக பக்தர்கள் மீது, கேரள கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இது தமிழக மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.இந்நிலையில், கேரள சட்டசபை விசேஷ கூட்டத்தை கூட்டி, "பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும்; தற்போதைய நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. கேரள அரசின் இந்த செயல் தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்து விட்டது.

50 ஆயிரம் பேர் திரண்டனர் : கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உட்பட 26 கி.மீ., சுற்றளவில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூடலூரில் திரண்டனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். இவர்கள் அனைவரும், கேரள எல்லையான குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த 1,500 போலீசார் தடுக்க முயற்சி செய்தும், 50 ஆயிரம் மக்கள் திரண்டதால், தடுக்க முடியாமல் தவித்தனர். கூடலூர், பகவதியம்மன் கோவில், லோயர்கேம்ப் பகுதியில் இரண்டு இடங்கள் என ஐந்து இடங்களில் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். போலீசாரின் தடைகளை தகர்த்த மக்கள், குமுளியின் தமிழக பகுதிக்குள் நுழைந்தனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஒன்று திரண்டனர்.அங்கு தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ்,தேனி கலெக்டர் பழனிசாமி ஆகியோர் பேச்சு நடத்தினர்.

"கேரளா செல்லும் 13 பாதைகளையும் உடனே சீல் வைத்து மூட வேண்டும்; கேரளாவிற்கு எதிரான

பொருளாதார முற்றுகையை உடனே துவக்க வேண்டும்;தமிழக சட்டசபையின் விசேஷ கூட்டத்தை கூட்டி, அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என, மக்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், இந்த கோரிக்கைகளை உடனே அரசுக்கு தெரிவிப்பதாகவும், மக்கள் கோரிக்கையை அமல்படுத்தும் வகையில், குமுளி பாதையை உடனே மூடுவதாகவும் தெரிவித்தார்.

கலெக்டர் பழனிசாமி, "அரிசி, பால், காய்கறி, மணல் உட்பட எதையும் நாங்கள் கேரளாவிற்கு அனுப்ப மாட்டோம்; தடை விதித்து விடுகிறோம். அரசின் தடைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். பின், தொடர்ந்து கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

குமுளியில் கடைகள் அடைப்பு ரோடுகள் வெறிச்சோடின:குமுளியில் தமிழக குமுளி, கேரள குமுளி என இரண்டு குமுளிகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழக குமுளியில் கூடினர். மக்கள் கூடியிருந்த இடத்தை அடுத்து, குமுளி தமிழக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதை ஒட்டி, குமுளி கேரள பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மக்கள் கூடியிருந்த இடத்தில் இருந்து, இரண்டு நிமிடத்திற்குள், கேரள குமுளிக்குள் புகுந்து விட முடியும்.கேரள குமுளியில் இருந்த மக்கள், தமிழக மக்கள் திரண்டு வந்து நிற்பதை, வாசலிலும், தங்கள் வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். கேரள தரப்பில், இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ் வர்க்கீஸ் தலைமையில்,100 போலீசார் மட்டுமே எல்லையில்
நின்றிருந்தனர்.மக்கள் குமுளிக்குள் புகுந்தால், விபரீதம் ஏற்பட்டு விடும் என, பயந்த கேரள வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர். மக்கள் வீடுகளை பூட்டி விட்டனர். மக்கள் திரண்ட ஓரிரு நிமிடத்தில், கேரள குமுளி முழுக்க வெறிச்சோடி விட்டது.

திரண்டு எழுந்த திராட்சை விவசாயிகள் : கம்பம்: நேற்று காலை கம்பம் அருகே உள்ள, சுருளிப்பட்டி கிராமத்தில் இருந்து, திராட்சை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், 3,000 பேர், ஊர்வலமாக புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊர்வலத்தில் வந்தனர்.

சுருளிப்பட்டியில் இருந்து நடந்தே வந்த இவர்களை கம்பம், வ.உ.சி., திடலில் போலீசார், மறித்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, பொதுமக்கள் கூட்டம் குமுளி ரோட்டில் சென்றது. பின்னர் கம்பம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர், நடந்தே லோயர்கேம்ப் சென்று, அங்கு கூடியிருந்த கூடலூர் மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013339720_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013346552_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013353563_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013400415_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_01340799_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013415798_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013422534_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013428365_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013435204_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013442339_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_01345087_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013457848_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013509350_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013519242_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013527212_365329முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 7 Gallerye_013551123_365329

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 11, 2011 12:11 pm

கேரளா எல்லையை நோக்கி , மதுரை , தேனி , கம்பம் மாவட்டதை சேர்ந்த 25000 பேர் ஊர்வலம்... எல்லையில் பதற்றம் ..

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 11, 2011 12:12 pm

தமிழகத்திலிருந்து அத்துமீறி நுழையும் தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு

தேனி: கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த குமுளிக்கு சென்றனர். அவர்கள் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் குமுளிக்குள் செல்ல முயன்றனர்.

குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது கேரளாவைச் சேர்ந்த சிலர் கல் வீசித் தாக்கினர்.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே பலர் நுழைந்தனர். அவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் நுழைய ரோசாப்பூ கண்டம் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ஒரு கேரள மாநிலத்தவர் வீட்டை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த 10 பேரையும் தாக்க துரத்தினர். அவர்களில் 6 பேர் தப்பி தமிழகத்திற்கு வந்துவிட்டனர். சிக்கிய 4 பேரை அப்பகுதி மக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடிவந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து குமுளிக்குள் அத்துமீறி நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 11, 2011 12:19 pm

கம்பத்திலிருந்து குமுளி நோக்கி மக்கள் பேரணி; பதட்டம்

கம்பம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, தேவன்பட்டி, நாராயணசேவல்பட்டி, சுருளிபட்டி, தேனிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பேரணியில் ஒரு லட்சம் மக்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எல்லை தாண்டுபவர்களை சுட கேரள மாநில போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 11, 2011 12:59 pm

தொடர்ந்து இரு சக்கர , நான்கு சக்கர வாகனங்களில் சுற்றிலும் உள்ள கிராமத்தினர் குவிந்த வண்ணம் , அணையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர் ...

Sponsored content

PostSponsored content

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக