புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 2 of 17 •
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை
- GuestGuest
அணை கட்ட நிதி: தமிழக தொழிலாளர்களை மிரட்டி வசூல், பெண்களிடம் அத்துமீறல் முயற்சி
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட நிதி கேட்டு ஒரு கும்பல் தமிழக தொழிலாளர்களை மிரட்டிப் பணம் வசூலித்துள்ளது. பணம் தர மறுத்த பெண்களிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கேரள இளைஞர் காங்கிரஸார் நேற்று முல்லைப் பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்து தமிழக பொதுப் பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை சூறையாடி பணியில் இருந்தவர்களையும் தாக்க முயன்றுள்ளனர். அந்த ஊழியர்கள் உயிருக்கு பயந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர்.
காங்கிரஸார் அணைக்கு ஊர்வலமாக வந்து அங்கிருந்த தமிழ் விளம்பர போர்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கினர். இதையடுத்து அணையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
தோட்ட உரிமையாளர்கள் தமிழக தொழிலாளர்களை ஜீப் வைத்து அழைத்துச் செல்கின்றனர். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று காலை வழக்கம் போல் தமிழக தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஜீப்களை கம்பம் மெட்டில் வைத்து ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அவர்கள், முல்லைப் பெரியாறு அணை அருகே அணை கட்ட நிதி திரட்டுமாறு எங்கள் அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவுக்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளது.
இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு ‘டிரைவர்ஸ் அசோசியேஷன்’ என்று மலையாளத்தில் அச்சடிக்கப்பட்ட ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதிவெண்ணே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சில ஜீப் டிரைவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஜீப்களில் இருந்த தமிழ் பெண்களை கீழே இழுத்து தள்ளிவிட்டு அவர்களிடம் அத்துமீறி நடக்க முயன்றனர். இதை பார்த்த மற்ற பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பயத்தில் பலர் வேலைக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.
இதனால் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வீண் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு கேரளா வன்முறையைத் தூண்ட முயல்வதாக தொழிலாளர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

கேரள வன்முறைக்கு கம்பத்தில் பதிலடி-கேரளத்தவரின் ஜீப், லாரி, திராட்சைத் தோட்டம் தீவைத்து எரிப்பு
கம்பம்: கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் தேனி மாவட்டம் கம்பத்தில் கேரளத்தினருக்குச் சொந்தமான லாரி, ஜீப் மற்றும் திராட்சைத் தோட்டம் ஆகியவை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கேரள மாநிலம் குமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கினர். தமிழர்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கினர். இந்தத் தகவல் பரவியதும் கம்பம், கூடலூரில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. குறிப்பாக கம்பத்தில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு கேரளத்தினருக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.
கம்பம் மெயின்ரோட்டில் உள்ள 2 ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல்பொருள் அங்காடி ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.
அதேபோல, காமயகவுண்டன்பட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி லாரியில் திராட்சை பழங்கள் ஏற்றி செல்வதற்காக வந்தனர். அந்த லாரியை ஒரு கும்பல் தீவைத்து எரித்தது. இதில் லாரியின் முன்குதி எரிந்து சாம்பலானது.
நாராயணத்தேவன்பட்டியில் உள்ள கேரளாவை சேர்ந்தவரின் ஒரு திராட்சை தோட்டத்தை தீவைத்து எரித்தனர். அந்த தோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜீப் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ பிடித்து எரிந்தன. தோட்டத்தில் இருந்த ஜெனரேட்டரும் தீ பிடித்து வெடித்து சிதறியது.
தொடர்ந்து நிலைமை பதட்டமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களை சிறைப் பிடித்து வைத்ததாலும், பெண் தொழிலாளர்களை மானபங்கப்படுத்த கேரளத்தவர் முயன்றதாலும் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளத்தவருக்கு எதிராக மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். இதனால்தான் தமிழகத்திலும் வன்முறை வெடித்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

கேரளாவுக்கு சிமென்ட் தருவதை எதிர்த்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் முற்றுகைப் போராட்டம்
நெல்லை: கேரளாவுக்கு சிமென்ட் அனுப்புவதை எதிர்த்து நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டும், கேரள லாரிகளை மறித்து நிறுத்தியும் போராட்டம் நடந்துள்ளது.
தாழையூத்து அருகே உள்ள சங்கர் நகரில் இந்தியா சிமென்ட் ஆலை உள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கு பெருமளவில் சிமென்ட் அனுப்பப்படுகிறது. இனிமேல் இங்கிருந்து சிமென்ட் அனுப்பக் கூடாது என்று நெல்லையில் நடந்த மக்கள் சக்தி மன்றம் சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளனர்.
இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியா சிமென்ட் நிறுவனத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மக்கள் சக்தி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் நகருக்குத் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது சிமென்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு வந்த கேரள மாநில லாரிகளை தடுத்து மறுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு பிரச்னையால், தமிழகம் - கேரள எல்லையில், இரண்டாவது நாளாக பதட்டம் நீடிக்கிறது. கம்பம் மெட்டு பகுதியில், 200 தமிழக ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியாறு அணை விவகாரத்தால், தமிழக ஐயப்ப பக்தர்கள், பெரும் பாதிப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரள கட்சிகளின் அடாவடி செயல்களால், தமிழகத்தின் எல்லையோரப்பகுதிகளான தேனி, கம்பம், கூடலூர், போடியில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்தனர். வாகனப்போக்குவரத்தை முழுமையாக, நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். கம்பத்தில் கடையடைப்பு நடத்தி, உம்மன் சாண்டி உருவ பொம்மைகளை எரித்தனர். வன்முறைச் சம்பவங்களும் அரங் கேறின. கேரளாவில் ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். 500 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின், நேற்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போலீஸ் ரோந்து: இரு மாநில எல்லையில் பதட்டம் தொடர்வதால், தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தலைமையில் திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் படை போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். 25க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்களில் போலீசார் சுற்றி வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக, தமிழக பகுதிகளில் போராட்டத்தின் தீவிரம் நீடித்தது. கம்பத்தில், கடைகள் அடைக்கப்பட்டன. தேவாரம், சின்னமனூர், பாளையம், பெரியகுளம் உட்பட பல பகுதிகளில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், கம்பம் உட்பட பல பகுதிகள் வெறிச்சோடின. கூடலூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. கம்பம், கூடலூர், போடியில் இருந்து கேரளத்திற்குச் சென்ற வாகனங்களையும் மக்கள் அனுமதிக்கவில்லை. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
காய்கறிகள் தேக்கம்: இந்த பதட்டத்தின் எதிரொலியாக நேற்று காலை, கம்பம் வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனை மந்தமாக இருந்தது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் தேங்கியுள்ளன. கேரளாவில் இருந்து கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் வரவில்லை. இதே போல, உழவர் சந்தையிலும் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள காய்கறிகள் தேங்கியுள்ளன.
200 ஜீப்புகள் சேதம்: அதேசமயம், தமிழகத்தில் இருந்து ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 1,000 ஜீப்புகளில், 200க்கும் மேற்பட்ட
ஜீப்புகளை புத்தடி, மந்திப்பாறை, கம்பமெட்டு பகுதிகளில் நேற்று மாலை, கேரள போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். நடுரோட்டில், 20க்கும் மேற்பட்ட ஜீப்புகளை கவிழ்த்து சேதப்படுத்தினர். கம்பமெட்டு போலீஸ் ஸ்டேஷன் முன், நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்தவரின் சுமோ காருக்கு தீ வைக்கப்பட்டது. இதில், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. போலீசார் அதை வேடிக்கை பார்த்தனர். இதை யடுத்து, கம்பமெட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பமெட்டில் நெடுங்கண்டம் ரோட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் மீது, கேரளகும்பல் தாக்குதல் நடத்தியது.
ஐயப்ப பக்தர்கள் அவதி: குமுளி பகுதி வழியாக சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை, நேற்று முன்தினம் இரவு சிலர் தடுத்து நிறுத்தி, அதில் பயணம் செய்த ஐயப்பபக்தர்களை வாகனங்களில் இருந்து இறக்கி, ஓட ஓட விரட்டி தாக்கினர். மேலும், அங்கிருந்த தமிழர்களின் ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றை உருட்டுக் கட்டையால் தாக்கி சேதப்படுத்தினர். சில தினங்களாக நடந்து வரும் இக்கொடுமையால் அச்சமடைந்த வியாபாரிகள், தங்களது கடைகளை மூடினர்.
ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், உத்தமபாளையம் லோயர் கேம்ப்பகுதியில் இருந்து, கூடலூர் வரை 11 கி.மீ., தூரத்திற்கு, வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டன.
அவற்றில் பயணித்த பக்தர்கள், உணவு கூட கிடைக்காமல் அவதியுற்றனர். சபரிமலை சீசன் உச்ச கட்டத்தை அடைந்த நேரத்தில், இதுவரை இல்லாத வகையில், பக்தர்கள் தங்கள் பயணத்தை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
செங்கோட்டை வழியாக பயணம்?: தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக, சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. கூடலூர் வரை வந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களை, கூடல் சுந்தர வேலவர் கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கூடலூர் வரை வந்த பக்தர்கள் திரும்பி, மாற்றுப்பாதையான செங்கோட்டை வழியாக செல்லலாம் என திட்டமிட்டு உள்ளனர்.
பல கி.மீ., தூரம் சுற்றி, செங்கோட்டை வழியாக செல்லும் போது, அங்கும் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது என, பக்தர்கள் புலம்பி வருகின்றனர். இதனால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பயணம், தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி ராஜா என்ற பக்தர் கூறுகையில், "தமிழர்களுக்கு எதிராக, கேரளாவில் நடந்து வரும் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழருக்கு ஆதரவு தெரிவித்து, இந்தாண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லாமல், புதுச்சேரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, எங்களது விரதத்தை முடிக்க உள்ளோம்.
இன்று மாலை ஊருக்கு திரும்ப உள்ளோம்' என்றார். ஆனால், எத்தனை நாட்களானாலும், சபரிமலைக்கு சென்று விட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக பலர் தெரிவித்தனர்.
தினமலர்
- GuestGuest
சென்னை, தஞ்சையில் கேரள வியாபாரிகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன- ஆலுக்காஸ் கடைக்கு பாதுகாப்பு
தஞ்சாவூர்: கம்பத்தைத் தொடர்ந்து தஞ்சாவூரில் கேரள வியாபாரிகளின் கடைகள் இன்று அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து ஆலுக்காஸ் நகைக் கடைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்சைத் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கி சூறையாடினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கி சூறையாடப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பட்டையி்ல்
இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடைக்குப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இப்பிரச்சனைக்கு இந்தப் போராட்டம் ஒரு முடிவைத் தரும் என எதிர்பார்க்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வன்முறையில் ஈடுபட வேண்டாம், கேரள மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்பது கற்பனையான பிரசாரம் என்று குறிப்பிட்ட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, `இந்த பிரச்சினையில் வன்முறையில் ஈடுபடவேண்டாம்' என்று, கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
சென்னை, டிச.7- கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையினால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் நீர்ப்பாசன வசதி பெற்று வருகின்றன.
பீதியை கிளப்பும் கேரளா
இந்த அணை பாதுகாப்பானது அல்ல என்று கூறி, புதிய அணை கட்டுவதற்கு கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நில நடுக்கங் களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பீதியை கிளப்பி வரும் கேரள அரசு, புதிய அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கேரளாவில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்து உள்ளன.
எல்லையில் பதற்றம்
இதனால், தமிழக-கேரள எல்லை மாவட்டங்களான தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கூடலூர், கம்பம், குமுளி பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த இரண்டு நாட்களாக அந்த வழியாக போக்குவரத்து முடக்கப்பட்டு, பதற்றம் நீடித்து வருகிறது.
தமிழக எல்லைப் பகுதியில் மோதலை தவிர்ப்பதற்காக, கூடுதலாக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதா வேண்டுகோள்
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அணைக்கு ஆபத்து என்பது கற்பனையான பிரசாரம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சினை
"தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனம் கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி எனக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனங்கள் வேண்டுமென்றே தாக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்துக்கும், கேரள அரசுகளுக்கும் இடையே உள்ள முல்லைப் பெரியாறு பிரச்சினைதான்.
சரியான வழியில்...
இதுபோன்ற ஒரு குறுகிய மனப்பான்மையில் பிரிவு உணர்ச்சியில், சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கு யாரும் இரையாக வேண்டாம் என்று படித்த மற்றும் அறிவுள்ள இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் காரணங்களுக்காக கற்பனையான மற்றும் அச்சுறுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள சூழ்நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அவர்களை சமுதாயத்தின் முக்கியஸ்தர்கள் சரியான வழியில் நடத்துவது அவசியம்.
பழமையான கல்லணை
முல்லை பெரியாறு அணை பலவீனமானது என்றும், பாதுகாப்பற்றது என்றும், அது உடைந்து இடுக்கி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுவதை நம்ப முடியாது. அந்த அணை சரியாக பராமரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலங்களில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அணையின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், உயர்ந்த தகுதியைக் கொண்ட நிபுணர்கள் அதை சோதித்து, அந்த அணை முழுக்க, முழுக்க பாதுகாப்பாக இருக்கிறது என்று திரும்ப திரும்ப கூறியிருக்கின்றனர். 116 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதற்காக அந்த அணை பாதுகாப்பற்றது என்று சந்தேகிக்கக்கூடாது. தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலசோழன் கட்டிய கல்லணைதான் உலகத்திலேயே அதிக வயதான அணையாகும். அது இன்னும் நிலைத்து நின்று பாதுகாப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
999 ஆண்டுகள் ஒப்பந்தம்
கிறிஸ்துவின் இறப்புக்கு பின் கட்டப்பட்ட அந்த அணை 1900 ஆண்டுகளை கடந்து முழு பாதுகாப்போடு விளங்குகிறது. கல்லணை எந்த கல்லால் (சுண்ணாம்பு கல்) கட்டப்பட்டதோ அதே கல்லால்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டு உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணை தரமான கட்டுமானத்துடன் இல்லை என்றும், அதிக பழமையாகி விட்டதால் அதன்மூலம் அச்சங்கள் ஏற்படுகின்றன என்பதும் தேவையற்ற ஒன்று.
இந்த அணை நீண்ட நாட்களாக நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில் அடிப்படையில்தான் சென்னை மாகாணத்துக்கும், திருவாங்கூர் மாகாணத்துக்கும் இடையே அப்போது இருந்த ஆங்கிலேயர் அரசு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அணை நில அதிர்ச்சி ஏற்படக்கூடிய பகுதியில் இருக்கிறது என்று சமீபத்தில் புரளி மூலம் பரவலாக பீதியை கிளப்பி உள்ளனர்.
அடிப்படை ஆதாரமற்றது
இந்திய நில அதிர்வு வரைபடத்தை வைத்து பார்க்கும்போது, கேரளா முழுமையும் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பாகங்களும், சென்னையும் நில அதிர்வு 3-ம் மண்டலத்துக்குள் வருகின்றன. இங்கு மிதமான நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வரைபடத்தை வலைதளங்களில் எளிதாக டவுன்லோடு செய்து பார்க்க முடியும்.
அப்படி ஒரு நில அதிர்வு ஏற்பட்டால் கூட அதன் அளவு 3 ரிக்டரை தாண்டாது. 2-ல் இருந்து 2.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வை பொதுவாக உணரவே முடியாது. ஆனால் அதை பதிவு செய்யலாம். இப்படிப்பட்ட அதிர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் ஏற்படுகின்றன. இவையெல்லாம் வானிலை ஆய்வுத் துறைக்குதான் தேவையான அளவுகளாகும்.
அதுபோல் 3-ல் இருந்து 3.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வு சில நேரங்களில் உணரப்படும். அந்த அளவின்படி மிக அரிதாகத்தான் பாதிப்புகள் ஏற்படும். அந்த அதிர்வுகளும் பரவலாக உள்ளன. ஆனால், அவை கவலைக்குரியது அல்ல. இப்படி இருக்கும் நிலையில், ஒரு பெரிய நில அதிர்ச்சி ஏற்பட்டு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உருவாக்கப்படும் கற்பனையான அச்சம் அடிப்படை ஆதாரமற்றது.
அழிவை உருவாக்கும் எண்ணம் இல்லை
இது கேரளாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனாலும், சில உள்நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் இப்படி ஒரு அச்ச உணர்வை உருவாக்கி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று கூறி வருகிறார்கள். தமிழகத்தின் மிக நெருங்கிய மாநிலம் கேரளா. உண்மையிலேயே 1950-ம் ஆண்டுக்கு முன்பாக 2 மாநிலங்களும் ஒன்றாக இருந்தவை. கலாச்சாரம் மற்றும் மொழி, பாரம்பரியத்தில் மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் பங்கு உண்டு.
கேரளாவில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அதேப் போலவே தமிழகத்திலும் ஏராளமான மலையாளிகள் உள்ளனர். தமிழர்களும், மலையாளிகளும் எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கேரள மக்களுக்கு எதிராக அழிவை உருவாக்கும் எண்ணம் தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ கிடையவே கிடையாது.
இரையாக வேண்டாம்
அந்த அணை முழு பாதுகாப்போடு இருக்கிறது என்ற உறுதியும், ஆதாரமும் இருப்பதால்தான் அப்படி சொல்கிறோமே தவிர பாதுகாப்பற்ற அணையை பாதுகாப்பான அணையாக நாங்கள் நிச்சயம் சொல்லமாட்டோம். பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் இந்த செய்தியை பொறுப்புணர்வோடும், கட்டுப்பாட்டுடனும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் கேரள மக்களை மிகுந்த அக்கரையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பும் பண்பாடற்ற, நாகரீகமற்ற, நல்லெண்ணம் இல்லாதவர்களின் செயல்பாட்டுக்கு இரையாக வேண்டாம் என்பதுதான்.
உறவுகளை அழித்து விடாதீர்கள்
காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும்.
2 மாநில மக்களுக்கு இடையே இருக்கும் இதயபூர்வமான உறவுகளை உடைக்கும் வகையில், உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

டிசம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து - திரையுலகினர் உண்ணாவிரதம்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அக்கிரமங்களைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் தமிழகம் முழுக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி ஒருநாள் முழுக்க அனைத்து திரைப்பட காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில், "முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் வருகிற 15-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது.
அன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும். மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். உண்ணாவிரதத்துக்கான இடம் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக நடிகர் சங்கம் அல்லது 'பிலிம்சேம்பர்' வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்போம்.
தியேட்டர் அதிபர்களுடன், தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.
காட்சிகள் ரத்து
அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,450 தியேட்டர்கள் உள்ளன. அத்தனை தியேட்டர்களிலும் 15-ந் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்," என்றார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர் உடனிருந்தார்.

- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 17