புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
3 Posts - 2%
prajai
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
1 Post - 1%
Pampu
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_lcapவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_voting_barவிசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 04, 2011 12:24 pm

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினை இப்போது மிகவும் தீவிரம் அடைந்து உள்ளது. 116 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அணை நல்ல நிலையில் வலுவாக இருந்த போதிலும், அது உடைந்து விடும் ஆபத்து இருப்பதாகவும், எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா தேவை இல்லாமல் பீதியை கிளப்பி வருவதால் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது.

சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவரங்களை பார்ப்போம்.

மன்னர் சேதுபதியின் முயற்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது முல்லைப் பெரியாறு அணை.

அதாவது முல்லை என்ற நதியும், பெரியார் என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் தமிழகம்-கேரள எல்லையில், அதாவது கேரளாவில் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது இந்த அணை. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழ்நாட்டுக்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது.

1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.

பென்னி குயிக்

அதன்பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு வித்திட்டவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு ராணுவ என்ஜினீயராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் ஆவார். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் சென்று கலப்பதை பார்த்த அவர், அதன் குறுக்கே ஓர் அணையை கட்டி வடக்கு நோக்கி திருப்பி விட்டால், தமிழ்நாட்டில் வறண்டு கிடக்கும் நிலங்கள் விளைநிலங்களாக மாறிவிடும் என்ற தொலை நோக்குடன் திட்டமிட்டார்.

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை JOHNPENNYCUICK

அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அணையை கட்டுவதற்கு ஆங்கிலேய அரசின் அனுமதியையும் பெற்றார். அதன்படி 155 அடி உயரத்தில் அணையை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் ஆனது.

இந்த திட்டத்தின் படி, அணையில் தேங்கும் நீரை எதிர்ப்புற திசையில் இருந்து 6,500 அடி நீள வாய்க்கால் வழியே கிழக்கு நோக்கி கொண்டு வந்து, பின்னர் மலையை கடக்க மலையின் உள்ளே 5,900 அடி நீளத்துக்கு சுரங்கம் அமைத்து நீரை வைரவன் ஆற்றில் கலக்கச் செய்வது என்றும், பின்னர் அதை சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொந்த பணத்தில் அணை கட்டினார்

இதன் அடிப்படையில், ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இங்கிலாந்து ராணுவத்தின் கட்டுமான துறை அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்ற பல்வேறு இடைïறுகளை சமாளித்து அணை பாதி கட்டப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் பென்னி குயிக் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் அணைக்கு மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கையை விரித்து விட்டது. என்றாலும் பென்னி குயிக் மனம் தளராமல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தனது குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார்.

3 ஆண்டுகள் நடைபெற்ற அணையின் கட்டுமான பணிகள் 1895-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அணையை கவர்னர் வென்லாக் திறந்துவைத்தார்.

நீர்மின் நிலையம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வைகை அணையை அடைகிறது.

1,200 அடி நீளம் மற்றும் 155 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 15.662 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 136 அடி உயரத்துக்கு தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது 10.563 டி.எம்.சி. தண்ணீர்தான் தேக்கி வைக்கப்படுகிறது. (இந்த அணையில் அதிகபட்சமாக 1943-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி 154.8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.)

பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு கேரள அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் 140 மெகாவாட் திறன் கொண்ட மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகும்.

விவசாயம்

அந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. முல்லை ஆற்றின் வழியில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி மற்றும் பல ஊர்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த முல்லை ஆறு தேனி நகருக்கு கிழக்கு பகுதியில்தான் வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது.

இந்த கால்வாய் அதன்பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், தள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கிடைக்கும் நீர் வசதியால் நெல், கரும்பு, தென்னை, வாழை போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.

2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனம்

முல்லைப் பெரியாறு அணையினால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

தனது சொந்த முயற்சியால், வறண்டு கிடந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னி குயிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளுக்கு நிகராக கருதி வணங்குகிறார்கள். சில கோவில்களில் அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது. பயிர் செய்யும் போதும், அறுவடையின் போதும் மக்கள் பென்னி குயிக் உருவப்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்கும் நடைமுறையும் சில பகுதிகளில் உள்ளது. மார்க்கேயன்பட்டி, அம்மாபட்டி, பாளையம் போன்ற பல கிராமங்களில் பென்னி குயிக் பெயரில் பேரவைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த ஆங்கிலேயரான பென்னி குயிக்குக்கு தமிழர்கள் காட்டும் நன்றி இது.

----

999 ஆண்டு ஒப்பந்தம்

முல்லைப் பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் (தற்போதைய கேரளா) இருந்ததால் அந்த சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் (தற்போதைய தமிழ்நாடு) அணை அமையும் இடம், லாபப் பங்கீடு தொடர்பாக 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி அணையில் தண்ணீர் தேங்கும் பகுதியான 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணை கட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக ஆயிரம் ஏக்கர் ஆக மொத்தம் 8,100 ஏக்கருக்கு குத்தகை பணம் செலுத்த வேண்டும் என்பது 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை DAMMAP03

இதற்கு தமிழகம் குத்தகை தொகையாக 1896-ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் எனறு கொடுத்து வந்தது. 1970-ம் ஆண்டு கேரளா அந்த ஒப்பந்தத்தை திருத்தி குத்தகை தொகை ஏக்கருக்கு ரூ.30 என மாற்றி, அணையிலும் அதை சார்ந்த நீர்ப்பிடிப்பு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையை தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 104 அடிக்கு மேல் தேங்கும் நீர் குகை மூலம் வைகை படுகைக்கு திருப்பி விடப்படுகிறது.

தினதந்தி

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 05, 2011 3:13 pm

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக