புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 23%
heezulia
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 19%
i6appar
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 12%
Jenila
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
போராளி-திரை விமர்சனம் Poll_c10போராளி-திரை விமர்சனம் Poll_m10போராளி-திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராளி-திரை விமர்சனம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 3:17 pm

போராளி-திரை விமர்சனம்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 02, 1:33 PM IST
'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம் கொடுத்த வெற்றி தான்.

சசிகுமாரும்(குமரன்), அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன் தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ் செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.

சசிகுமார் குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில் சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும் ஆரம்ப சந்திப்புகளில் மோதிக்கொண்டாலும், பின்னர் ஏற்படும் சில நிகழ்வுகளால் காதல் வயப்படுகின்றனர்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சசி குமார், அல்லரி நரேஷ் மற்றும் தமிழ் செல்வி ஆகியோர், இப்படியே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, புதுமையான முறையில் யோசித்து 'கட்டண சேவை' என்ற ஒரு புது சேவையை ஆரம்பிக்கின்றனர்.

ஒருவருக்கு அவரது வீட்டு எலெக்ட்ரிக் பில் கட்டுவது அல்லது வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது என எந்த வேலை என்றாலும் இந்த கட்டண சேவை பிரிவிற்கு தகவல் தெரிவித்தால் போதும். சசிகுமார் குரூப் அந்த வேலையை செய்து முடித்து விட்டு, அந்த சேவைக்கு உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்கிறது.

இந்த புதிய சேவை மக்களிடம் பிரபலமாக இவர்களது பிஸினெஸிம் சீக்கிரமாக வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் சசிகுமாரை தேடி சிலர் வருவது மட்டுமின்றி, அவரை ஒரு பைத்தியக்காரன் என்று அங்கிருப்போர்களிடம் சொல்லுகின்றனர். இவர்களை கண்டதும் சசிகுமாரும் ஓடி ஒளிகிறார்.

அங்கே துவங்கும் பிளாஷ் பேக்கில் சசிகுமார் இரண்டு பேரை கொலை வெறிகொண்டு துரத்துகிறார். அங்கே வருகிறது இடைவேளை...

சசி குமார் ஏன் அவர்களை பார்த்து ஓடினார்? பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை வெறியோடு துரத்துகிறார்? உண்மையில் சசி குமார் யார்? சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது? இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது? என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.

சசி குமார் ஏற்கனவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தில் மற்றொரு முறை அதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் சென்னையில் நடக்கும் காட்சிகளிலும் சரி இரண்டாம் பாதியில் அடர்ந்த முடியோடு காணப்படும் தோற்றத்தோடும் சரி கனகச்சிதமாக அந்த பாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்.

சுவாதி இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க, அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா? என சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.

அல்லாரி நரேஷின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் எப்போதும் நட்பு உயர்த்தி வைக்கப்படும். அதே பார்முலாவை இப்படத்தில் அல்லாரி நரேஷ் மூலம் காட்டியிருப்பது படு நேர்த்தி.

சுவாதி தனது பகுதியை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன்களை கண்டால் ஓடி ஒளியும் சசிகுமாரிடம் எத்தனை நாள்தான் இப்படி ஓடிக் கொண்டிருப்பது? எதிர்த்து திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா? என்பது போல் சசிகுமாருக்கு ஊக்கம் தரும் நாயகியாக வரும் போது நம் நினைவில் மிளிர்கிறார்.

மற்ற நடிகர்களான நிவேதா, வசுந்தரா, பரோட்டா சூரி, படவா கோபி, ஞானசம்பந்தம் படத்திற்கு படு பொருத்தம்.

ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டு அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.

படத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.

படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர் சி. பாபு.

குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.

'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம். போராளி-போராட்டத்தில் வெற்றி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போராளி-திரை விமர்சனம் Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 03, 2011 6:42 pm

இன்னைக்கு பார்க்க தான் போறோம்.. பார்த்துட்டு சொல்றேன் ஜாலி




போராளி-திரை விமர்சனம் Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:08 pm

பார்க்கவேண்டும் .....நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Dec 03, 2011 8:12 pm

பார்க்க வேண்டுமே ... சசி அண்ட் சமுதிரகணி என்றால் சொல்ல வேண்டுமா என்னா ...

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 03, 2011 8:56 pm

பார்த்தேன் ..நல்ல திரைப்படம் .. பாராட்டுகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக