புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
52 Posts - 45%
heezulia
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
3 Posts - 3%
Manimegala
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
2 Posts - 2%
prajai
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
416 Posts - 49%
heezulia
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
28 Posts - 3%
prajai
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_m10மாவீரம் { தினம் ஒரு பூ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரம் { தினம் ஒரு பூ)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 24, 2011 6:05 pm

27 ந் திகதி வரையும் 3 நாட்களுக்கு இன்னும் தினம் 1 கவிதை

மாவீரம் 1
கடுமற முடனும் திடமெடு மனமும்
கல்லெனும் தோளுரமும்
விடுஎன அதிரும் விளைவொடு திமிறும்
வீங்கிய திடமார்பும்
கொடுமை கண்டுழற குமுறிடும் மனமும்
கூழென தீ பாயும்
சுடுஎரி மலையின் சொரிகனல் சினமும்
சூழ்வலி மைந்தர்களே!


கொடுமை செய்படையும் கூடியபோரும்
கொன்றுநம் மினமழிய்
எடுகரமீதில் இதையெனக் கொண்டு
இயல்பொடு தலைநிமிர
நெடுமுள தாகத் தமிழினில் மோகம்
நிறைதலை வரும் இவரை
தடு எனவிழியில் ஒருஇமைஅசைய
தடபுட லென மைந்தர்

கிடுகிடு எனவே களமிடை புகவும்
பொடிபடும் பகைவர்களே
நடுவினில் பகையின் வளைபெருவியூகம்
நொறுங்கிட உடைமறவர்
தொடு விரிவானின் சுடர்தரும் ஒளியும்
அதைவிடப் பெரிதெனவும்
எடுமறவீரன் எம்துடை தலைவன்
இயம்பிட வினைமுடிப்பர்


வடுவிலதமது வஞ்சியர் மேனி
வளமொடு உயிர் காப்போன்
கெடுஎனக் குதறும கீழ்மகன் சிங்கம்
தொடும்விலை உயிரெனவே
சடுகுடு ஆட்டம் புலியுடன் ஆடும்
எனமகிழ் வொடுஆடும்
கொடுமையை நீக்க குழுமியமைந்தர்
கொண்டபுகழ் கடலே

குடிபல கொல்லும் கொடியவ னரசும்
கொலையிடும் விலங்கினமும்
அடிதடிப் படையென் றொருதிரு நாமம்
இடுஎன ஈந்தணியாய்
பிடிஎவன் தமிழன் பிரிஅவ னுயிரை
பிணமெனப் புதையெனவே
கொடிதிவர் உலகை கூட்டியே எம்மை
கொன்றது இழிசெயலால்

படைவர மைந்தர் களமிடைபுகவும்
கிடுகிடு எனவெடியும்
குடைசரிந் துடையும் அரசுடை
வளவும் குழுமிய எதிரிகளும்
தொடையது நடுங்கி தொகையென வீழும்
துணைப்படை வகைஎண்ணி
உடை விழ ஓடும் பகைவரென்றாகும்
நிகழ்வினைச் சொலவழகே

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 6:13 pm

ஒரு "ஈழத்து பரணி" யாய் ....விளங்கிடும் கவிதந்த உங்களுக்கு நன்றி ! மாவீரர் தினம் !....மாவீரர்கள் புகழ் வளர்க !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 8:45 pm

"ஜெயங்கொண்ட '' வரிகள் .....ஓசைநயத்துடன் பரணிக்கே உரிய தனிச் சிறப்புடன் மிளிர்கிறது ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 25, 2011 12:10 pm

கல்லறையில் பூக்கும் மலர்கள்
(
ஒரு சிறுவன் வீரமைந்தரின் கல்லறையின் முன் நின்று பாடுவது)

வளையும் விதமேஅறியா துணிவாய் வீர்ம்கொண்டு
விதைகள் என்றே புவியில் போனாய் வேங்கைஅண்ணா
மழலைசிறுவர் நாமோ இறைவன் மறதிக் கிரையாய்
முதுகில் பாவச் சுமையை ஏற்றி மண்ணில் வந்தோம்
விளையும்பயிரும் மழையில்நின்றால் வளரும் உயரும்
வசந்தம் வீசும் வயலில் கதிரும் வளைந்தேஆடும்
முளையில் பயிரைபோலே நின்றோம் மேகக் கூட்டம்
முழுதும் குண்டைச் சிதறிக்கொட்டும் வாழ்வைக் கண்டோம்

அழவே இல்லை அண்ணா நாங்கள் அழவேயில்லை
அழுதால் கண்ணீர ஊற்றும் விழியுள் எதுவும் இல்லை
தொழவே இல்லை இறைவன் நாமம் சொலவேயில்லை
தொழுதால் கருணை தருமோர் தெய்வம் அதுவும் இல்லை
விழவே இல்லை என்றும் நாங்கள் விழவேயில்லை
வெறுமை வெளியில் கிடந்தோம் விழவோர் இடமும் இல்லை
எழவேஇல்லை இடரைக்கண்டும் எழவேயில்லை
எழுந்தால் விடியும் ஆனால் துணையாய் எவரும் இல்லை

செழுமை மலர்கள் பூக்கும் சிரிக்கும் சிறப்பேகொள்ளும்
சிவக்கும் அடிவான் கதிரைக் கண்டு சிந்தும் எழிலும்
அழுகை ஒன்றே எங்கள் இதயத் தகமே கொள்ளும்
அழலில் இதயம் எரியும் அங்கே இருளே கவ்வும்
மெழுகும் தீயில் எரியும் உருகி முடிவில் அழியும்
மெதுவாய் பரவும் மௌனம் போலெம் மனதும் உடலும்
வழுகித் தென்றல் வானில் முகிலை உரசித் தள்ளும்
வாழ்வில் துன்பம் எம்மைத் தள்ளி உயிரைக் கொல்லும்

உலகில் கண்ணை மூடிகொண்டு உறங்கும் அண்ணா!
உன்னை நெஞ்சில் எண்ணப் பொங்கும் உணர்வுமேனோ?
நிலமும் மீட்க நின்றீர் நெஞ்சில் கனலைக் கொண்டு
நிமிரும் உடலில் புதிதோர் இனிதாம் உணர்வைக் கண்டீர்
மலரின் வாசம், மதியின் குளுமை, மயக்கும் தென்றல்,
மன்னன் புகழும், மலையின் திடமும் மற்றும் எதுவோ
பலதும் உணரும் தன்மை உண்டாம் சுதந்திரத்தின்
பக்கம்நிற்போர் கென்றும் வாழ்வில் பயமே இலையாம்

எதுதான் பார்க்கும் ஆசைகொண்டேன் எடுத்துச்சொல்லும்
எதுவோ பாதை ஏறிச்செல்வேன் இடையில் ஏதும்
புதுமை உண்டோ பொன்னாய் வீசும் ஒளியும்தெரியும்
போயே இருளும் விடுமென்றார்கள் பொய்யோ சொல்லாய்
இதுதான் மண்ணின் சுதந்திரமென் றினிதாய்வீசும்
எழிலாம் எங்கள் உரிமை என்னும் மலர்கள் வாசம்
பொதுவாய் காணும் வாழ்வில் புகுமோர் வழியைச் சொல்லும்
எதுவுமின்றி மெழுகாய் நாமும் அழியும் முன்னே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 25, 2011 12:18 pm

உலகோடு தமிழ்வாழ்வு

தவம் செய்து வரமொன்று பெற்றோம் - ஒரு
தலைவனென் றுத்தமர் பெருவீரர் பெற்றோம்
இவர் கண்ட இறைமை கொள்தேசம் ஒன்று
உருவாகி தமிழ்வாழ உல்லாசம் கொண்டோம்
எவன் வந்தும் ஈழமண் தொட்டும் - எம்மை
இழிமைசெய் யானென்று இறுமாப்பில் நின்றோம்
புவியதில் ஒருநிலம் ஆண்டோம் - இவன்
பெரிதெனக் புகழையும் பெருமையும் கண்டோம்

அவலங்கள் எதுதானு மில்லை - இந்த
ஆட்சியில் மக்களின் மனம் பூத்த முல்லை
தவறென்று எதுவுமே இல்லை இவன்
தமிழ் மீது காண்அன்புக் கில்லையோர் எல்லை
அவனியில் இவன் சொன்ன சொல்லை யாரும்
அறிவார் அப்பொன்னான வார்த்தைகள் கல்லில்
அகம்மீது எழுதிப் பல்லாண்டு வாழும்
அனைவரும் காத்திடும் எதிர் கால உண்மை


குவலயம் தன்னிலே படைகள் - நீரில்
கொண்டு வான் பூமியில் வல்ம்வந்தபோது
புவனமும் அரசாளும் திறமும் -கண்டு
புழுங்கிடப் பிறந்ததே பெரியதோர் கொடுமை
அவமானம் அரும்பெரும் தேசம் - யாவும்
அடியோடு தலைமாறி செய்திட்ட நீசம்
உவமானம் எதுதானும்சொல்ல - இவர்
ஊறிடும் சாக்கடைப் புழுதானோ என்ன?

சவமான உடல்கிழித் தெங்கும் செய்த
சாதனை கொஞ்சமோ சரித்திரப் புகழே
எவனோவந் தெம்மீழப் பெண்கள் - பாலர்
இளையவர் வயதான முதியோருங் கொல்ல
சிவனே என்றுயிரற்ற வீழும் -எழில்
சுவரிலே போட்டிடச் சித்திரம் செய்தார்
கவலைகள் அற்றதாய் உலகம் -பெரும்
கண்காட்சி கண்டவர் கண்வியக்கச் செத்தோம்

நவநாக ரீகத்தில் தோய்ந்த - பல
நாடாளும் அரசுகள் நடுநிலைஎன்று
தவ ஞானக்குரு வேடம்போட்டு - ஆப்பம்
சரிபாதி பிரித்துண்ட குரங்காக ஏய்த்தார்
இவரா இவ்வுலகினில் மனிதர் - பெரும்
இடர்செய்யும் நேர்மையின் எதிரிக்கு நண்பன்
தவறாமல் பனமென்னும் பேய்கள் - கோரப்
பசிகொண்ட தேவைக்குப் பலியாகும் பூக்கள்

ஒருவனா இருவரா லட்சம் - என்று
ஒருமித்து உயிரோடு குழிவெட்டி மூட
தருமமே எனசாட்சி சொல்லும் - வெறும்
தவளைகள் ஆயின தலைமைசெய் யரங்கு
எரியடா உயிரோடு என்று - இளனி
எடுப்பிலே வெட்டுவோன் எம்தலைசீவி
கருகிட எரிக்கின்ற போதும் - இந்த
காரியம் கண்டுமா கண்மூடி நின்றார்

ஒருவரோ ஓருநாடு வந்தோ - இதனை
உரியதா அடுக்குமா என்றுண்மை காத்து
தரும் வாழ்வுஎன் றெண்ணிக் நின்றோம் - இந்த
தரணியில் தேசங்கள் தவறிடச் செத்தோம்
பெருகிடப் புதைகுழி தோண்டி - எம்மை
பிரளயம் வந்ததாய் புதைக்கின்ற போதும்
கருகிட நஞ்சினைக் கொட்டி - எரி
காடென்று ஊரையும் உயிர் கொன்றபோதும்

வருந்தவே யில்லை இவ்வுலகு - இங்கு
வாழ்வது ஏன்தானோ எறும்பிலும் சிறிது
கரும்பினில் பிழிந்திடும் சாறு - என்று
கன்னியர் மேனியை வதம்செய்து ஆறு
குருதியா யோடவும் வெட்டி - பெரும்
குடங்குட மாகக் குளித்தனன் பார்த்து
விருதினை தந்தது உலகு அந்த
விந்தையாம் வஞ்சகக் கொலைஞர்கை கோர்த்து

நெஞ்சமோ அழுகுது ஐயோ - அந்த
நீதியை யாரிடம்கேட்பது பொய்யோ
கொஞ்சமா போயின நாட்டில் - ஒரு
குழந்தையும் வையாது கொன்றானே தீக்குள்
பஞ்சமா பாதகக் கொடியோன் - அவன்
பாரிலே அரசாளப் பல்நாடு தோழன்
நஞ்செனப் பிரபஞ்சம்மீது - பூமி
இறைவனும் வேண்டாமென் றெறிந்திட்ட பந்தோ

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 25, 2011 2:23 pm

மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 உருக்கமான வரிகள் ......அருமை மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550 மாவீரம் { தினம் ஒரு பூ) 154550

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 2:28 pm

அருமை வரிகள் அண்ணே ... மாவீரர்களை எண்ணுவோம், செய்ய வேண்டியதை முன்னெடுப்போம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 26, 2011 6:33 am

அனந்தம் ஜிவ்னி, மற்றும் புரட்சி இருவருக்கும் அன்பான நன்றிகள்!
இது பிறந்த நாளில் உதித்து வா எனபோற்றுதலுக்காக

சூரியனே வருவாயா ?


உதயத் தொளிரும் சூரியனே
. ஒருமுறைஉன்னைக் காணவென
இதயத் தாசை கொண்டவராய்
. இரவில் ஏங்கித் தவிக்கின்றோம்
விதவிதமாக விடியலிலே
. விடுதலைபூக்கள் விரிகையிலே
அதிசய மாய்வான் வீதியிலே
. ஆதவன் மைந்தா வருவாயோ

இருள்கொள் மேகம் விலகட்டும்
. இரவுகள் முழுதும் விடியட்டும்
பருவத் தென்றல் வீசட்டும்
. பயமெனும் உணர்வு போகட்டும்
அருமை சுதந்திரப் பூவாசம்
. அங்கேகாணும் பசுமை வளம்
உருகும் பனிகொள் இளங்காலை
. உதயச் சூரியன் வருவாயோ

ஊற்றென உரிமை பெருகிவர
. உள்ளம் களிப்பில் உவந்தாட
ஆற்றின் அலையாய் வாழ்வோங்க
. அதிலே இறைமை குதிபோட
பேற்றில் தேசியம் பெரும்பேறாய்
. பெற்றே நம்மைநாம் ஆள
காற்றில் சுதந்திரக் கொடியாட
. கதிரே நீயும் வருவாயோ

சேற்றில் பூக்கும் பூக்களெனச்
. சூழும்துயரில் வாழ்மக்கள்
நாற்றை நட்டு விளைநெல்லாய்
. நாட்டில் விதைத்த மைந்தர்களால்
போற்றும் வகையில் கதிராகிப்
. புதுநெல் கண்டு அறுவடையாய்
ஏற்றோர் இறைமை தேசத்தை
. எழிலாய் ஆக்க வருவாயோ

கீழடி வானம் சிவந்ததென
. கெடுதல் செய்தோர் மனம்சிவக்க
தோளுடை தீரம் கொண்டவரின்
. தூய்மைகண்டு முகில்ஓடும்
போல் இவர் ஓடப் பாதகர்கள்
. பிழையை எண்ணிப் பதறியழ
காலிடை மண்ணில் உரிமைகொளக்
. கதிரே நீயும் வருவாயோ

கொடியும் திரளப் பெருவலியாம்
. குடிகள் திரளப் பெரும்பலமாம்
விடியும் வாழ்வுக் கிவையெல்லாம்
. வேண்டும் வென்றோர் வாழ்வினிலே
துடிகொள் சிறுவர் மங்கையரும்
. சுதந்தர கீத இசைபாடக்
கொடியும் ஆடக் குரல்கேட்கக்
. கதிரே விடிவைத் தாராயோ?

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 26, 2011 10:36 am

kirikasan wrote:


ஊற்றென உரிமை பெருகிவர
. உள்ளம் களிப்பில் உவந்தாட
ஆற்றின் அலையாய் வாழ்வோங்க
. அதிலே இறைமை குதிபோட
பேற்றில் தேசியம் பெரும்பேறாய்
. பெற்றே நம்மைநாம் ஆள
காற்றில் சுதந்திரக் கொடியாட
. கதிரே நீயும் வருவாயோ
என்று கனியும் அக்காலம் ? மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 677196 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 மாவீரம் { தினம் ஒரு பூ) 2825183110 மாவீரம் { தினம் ஒரு பூ) 224747944 மாவீரம் { தினம் ஒரு பூ) 224747944 மாவீரம் { தினம் ஒரு பூ) 224747944

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 27, 2011 2:48 pm

இன்றையமலர். ( 1)

உறங்கடா மகனே (ஒரு காட்சி)

முகையும் அவிழும் மலரென் நகையும் முழுமதியின்
வகையின் குளுமை விழியும் எழிலென் வதனமதும்
பகையும் பெயரில் பயமும் கொள்ளும் நிலையதுவும்
தகமை கொள்ளும் தலைவன் ஆளும் வேளையிலே

தரையும் வானில் திரியும் படகும் கடலதிலே
விரையும் பெரிதென் வீரப்படைகள் வேங்கையென
திரையும் மேகம் தென்றல் செல்ல முன்னோடி
அரையென் நொடியில் ஆடிக் களமும் வெல்வாரே

இருளும் பெரிதும் கருமை இரவின் போதெல்லாம்
சுருளும் அரவம் சீறும் ஒற்றைப் பாதையிலே
அருகில்ஆந்தை அலறக் கொடிதாம் விலங்குகளும்
மருளும்வண்ணம் மைந்தர் களமும் புகும்வேளை

இடியும் அதிரும் தடதடவென்றே ஓசைதனில்
கொடியில் தொட்டில் குழந்தை அஞ்சத் தாய்கண்டே
”விடியும் வானின் வெள்ளிகிணையாம் வீரரடா
கொடிதும் பகைவர் கூட்டம் வெல்லும் குமரரடா

உயிரும் மெமதாம் உடைமை தேசம் இறைமையுடன்
வயிரம் கொள்ளும் வாழ்வும் பெரிதாம் சுதந்திரமும்
மயிரும் போனால் உயிரும் விடுமான் கவரியென
துயரம் நீக்கத் துடித்தே அண்ணர் செல்லுகிறார்

துயிலும் பயமும் இலவே தொலையத் துணிவொன்றே
பயிலும் மனமும் பாதைத் தெளிவும் பகலவனாம்
மயிலில் உலகை வலமும் வருவோன் முருகனென
வெயிலின் குணமும் கொண்டோன் ஆணை நிறைவேற்றிக்

கயமை கொடுமை இழிமை நெஞ்சில் வஞ்சமென
தயவும் கருணை இல்லாக் கொலைஞர் கூட்டமதை
நியதி எதுவோ நீக்கும் செயலே நிறைவென்று
செயலில் காணும் தீரம் கொண்டே செல்கின்றார்

புயலென் றாடிக் களமும் புகுவர் புதல்வரிவர்
சுயமே வெற்றிப் பழமே கொண்டு திரும்பிடுவர்
துயரே கொள்ள ச் சேதி வருமே தீதென்றால்
உயிரே நீதான் களமும் புகுதல் வேண்டுமடா

எனவே கண்கள் மூடித்துயிலும் கொள்வாய்நீ
கனவோ காண்பாய் ஈழத் தேசம் முருவாக்கி
எனதே என்னும் இறைமை கொண்டோர் மண்மீது
இனிதே வாழும் வரையில் பகையை எதிர்கொள்வாய்

பொன்னே முத்தே பொருளில் பெரிதோர் முழுமணியே
உன்னை நம்பி எங்கள் தேசம் உள்ளதடா
சின்னோர் விழியும் மூடித் துயிலும் கொள்வாய் நீ
உந்தன் நேரம் வருமே அப்போ விழித்திடடா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக