புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_m10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10 
30 Posts - 83%
heezulia
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_m10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_m10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_m10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_m10குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 22, 2011 9:35 pm

குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு:நஷ்டத்திலும் தமிழக அரசு தாராளம்!

குடிசைகளுக்கு, தமிழக அரசு வழங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் லேப்-டாப் பயன்பாட்டுக்கு, கூடுதல் மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கினாலும், அரசின் சார்பில், இலவச மின்சாரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலவச மின்சாரத்திற்கான தொகையை அரசு வழங்கினாலும், கட்டணத்தை மிகவும் குறைவாகவே கணக்கிட்டுத் தருகிறது. இதனால், மின் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

ஒரு விளக்கு...இந்த நிலையில், "ஒரு விளக்கு' என்ற பெயரில், குடிசைகளுக்கு மட்டும், இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40 வாட்ஸ் திறனுள்ள ஒரே ஒரு பல்பு மட்டும், குடிசைகளில் பயன்படுத்தலாம். கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவசமாக "டிவி' கொடுத்ததால், "டிவி'யை பயன்படுத்துவதற்காக, கூடுதலாக 70 வாட்ஸ் திறன் அனுமதி தரப்பட்டது. இதனால், ஒரு விளக்குத் திட்டம், "ஒரு விளக்கு' மற்றும் ஒரு "டிவி' திட்டமானது.

தற்போது, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசில், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இவற்றையும், குடிசைவாசிகள் பயன்படுத்தும் வண்ணம், இலவச திட்டத்தின் சலுகையை அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மிக்சி, கிரைண்டர்,லேப்-டாப்இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றிற்கு, தலா 40 வாட்ஸ் திறன் என, கூடுதலாக 160 வாட்ஸ் வழங்கப்படும். இதனால், குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை வழங்கப்படும். இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், சலுகைக்கான அனுமதி கேட்டு, மின் துறை விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில், மொத்தம் 17.41 லட்சத்து 131 குடிசை இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு, இலவச மின்சாரம் என்பதால், மீட்டர்களே கிடையாது. அதனால், இந்த குடிசைகளுக்கு இலவச மின்சார திறன் நிர்ணயிக்கப்பட்டாலும், மீட்டர்கள் இல்லாததால், குடிசை இணைப்புகளில் எவ்வளவு மின்சாரம் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
அளவே தெரியாமல்..."ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச மின்சாரத்தின் அளவையாவது குறித்து வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவே தெரியாமல், தோராயக்கணக்கில், ஆண்டுக்கு 120 ரூபாய் என, வாரியம் கணக்கிட்டு, அதற்கு அரசிடம் நடப்பாண்டு மானியமாக, 20.89 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதன்மூலம், ஒரு குடிசைக்கு, மாதம் 10 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், 110 வாட்ஸ் திறன் பத்துமணி நேரம் பயன்படுத்துவதாக கணக்கிட்டால், தினமும் 1.1 யூனிட் வீதம், மாதம் 33 யூனிட் செலவாகும். இவற்றிற்கு, வீடுகளுக்கான குறைந்த கட்டணமான யூனிட்டிற்கு, 65 பைசா கணக்கிடும் போது, மாதம் 21.45 ரூபாய் கணக்காகிறது. ஆண்டுக்கு, 257.40 ரூபாய் செலவாகிறது.

அரசின் சார்பில், பாதிக்கும் குறைவான தொகையாக, மாதம் 120 ரூபாய் மட்டும், வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும், குடிசை இணைப்புகளுக்கான இலவச மின்சாரத்தால், வாரியத்திற்கு மாதம் ஒரு குடிசை இணைப்பிற்கு, 137.40 ரூபாய் வீதம், 17.41 லட்சத்து 131 குடிசைகளுக்கான மின் வினியோக கட்டணம், 23.92 கோடி ரூபாய் நஷ்டமாகிறது.

பெரும்பாலான குடிசை இணைப்புகளில், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை விட, அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மீட்டர் வைத்தால் தான் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீட்டர் வைக்காமல், குறிப்பிட்ட அளவை நிர்ணயிப்பது, எந்த வித பயனையும் தராது என்பது, மின்துறை வட்டாரக் குமுறலாக உள்ளது.இதேபோல், லட்சக்கணக்கான இலவச இணைப்புகளிலிருந்து, வணிகப் பயன்பாடுகளுக்காகவும், ஆடம்பரச் செலவுகளுக்கும் மின்சாரம் திருடப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், மின் துறையினரின் நீண்ட கால புலம்பலாக உள்ளது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 9:43 pm

நடக்கட்டும் நடக்கட்டும்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! 1357389குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! 59010615குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Images3ijfகுடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 23, 2011 10:03 am

நமக்கும் தரலாமே. சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 10:06 am

அவர்களாவது நல்லா இருக்கட்டும் குடிசைகளுக்கான இலவச மின்சார சலுகை அதிகரிப்பு! 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக