புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதான உயிரணுக்களை நீக்கினால் ஆயுள் நீளும்!
Page 1 of 1 •
`பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே'. இது, போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை தீயிலிட்டு அழித்து, புதிய பொருட்களை வாங்குவதற்காகச் சொல்லும் பழமொழி.
இந்தப் பழமொழி, நுகர்பொருட்களுக்கு மட்டுமல்லாது மனித உடலின் உயிரணுக்களுக்கும் பொருந்தும் என்கிறது அமெரிக்காவின் மேயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று.
இது உண்மைதான் என்கிறார், ஆராய்ச்சியாளர் டேரன் பேக்கர். வேகமாக வயதாகும் தன்மையுள்ள ஓர் எலியின் ஆயுட்காலத்தில் பல முறை உடலின் முதிர்ந்த, சேதமடைந்த உயிரணுக்களை நீக்கினால், அந்த எலிகளுக்கு கண்புரை நோய், விரைவாக முதிர்ந்துவிடும் தோல் மற்றும் தசை இழப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். வயதான உயிரணுக்களை நீக்கினால் உடல் ஆரோக்கியத்தில் எவ்வித மாற்றமிருக்கும் என்பதை விரைவாகத் தெரிந்துகொள்ள, இச்சோதனை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு விரைவாக வயதாகும்படி மருந்துகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனித உடலின் இயல்பான வளர்ச்சியின்போது, உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்றுநோய்கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால் அந்த உயிரணுக்களை நம் உடலானது செயலிழக்கச் செய்துவிடும். இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று, இறந்து போவது. மற்றொன்று, செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கொண்டு காலம் கழிப்பது!
சரி, இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்து விட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. இறக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரணுக்கள், `உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதைப் போல' தங்கள் பங்குக்கு தேவையில்லாத, உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய `தவறான புரதங்களை' உற்பத்தி செய்கின்றனவாம். இந்த உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் ரசாயன சமிக்ஞைகள், சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு திசுவும் முதிர்ச்சியடையும்போது, வயதான உயிரணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. திசுக்களிலுள்ள இவற்றின் எண்ணிக்கை சுமார் 15 விழுக்காடு இருக்கும் என்கிறார்கள். ஆனால், இது வெறும் 15 சதவீதம்தானே என்றும் அலட்சியப்படுத்த முடியாது. ஏனென்றால் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடுமாம். உதாரணமாக, வயதான இந்த உயிரணுக்கள் ஒரு திசுவின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையே தடைசெய்யும் திறனுள்ள தவறான மரபணுக்களை தூண்டிவிட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆய்வில், விரைவாக வயதாகிவிடும் வகையில் எலிகள் வளர்க்கப்பட்டன. அவற்றுக்கு 10 மாதமாகும்போது கண்புரை நோய், சக்தியிழந்த தசைகள் மற்றும் கொழுப்பு படிவதில் குறைவு போன்ற நோய்கள் இருந்தது மட்டுமில்லாமல், அவை இருதய நோயால் இறந்துவிட்டன. ஆனால், சில எலிகளுக்கு மட்டும் மூன்றாவது வாரத்தில், வயதான உயிரணுக்கள் `உயிரணு தற்கொலை' செய்துகொண்டு இறந்துபோகும் வண்ணம் ஒரு மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும், இதே மருந்து சிகிச்சை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை அளிக்கப்படாத எலிகளுடன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு உறுதியான தசைகள், குறைந்த எண்ணிக்கையில் கண்புரை நோய் மற்றும் சுருக்கம் குறைந்த தோல் (தோலில் கொழுப்பு படிதல் சரியாக இருப்பதால்) போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
சோதனைக்குட்படுத்தப்பட்ட எலிகளில் மற்றொரு பிரிவுக்கு, 5 மாதங்கள் வரை மருந்துச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்த எலிகளுக்கு 5-வது மாதத்தில் கண்புரை உள்ளிட்ட மூப்படைதலுடன் தொடர்புடைய நோய்கள், தசை இழப்பு மற்றும் கொழுப்புச் சத்தில் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் மருந்துச் சிகிச்சையை தொடர்ந்தபோதும், ஏற்பட்ட குறைபாடுகளை நீக்க முடியவில்லை. ஆனால், குறைபாடுகள் மேலும் தொடராத வண்ணம் தடுக்க முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வயதான உயிரணுக்களைத் தற்கொலைக்குத் தூண்டும் மருந்துச் சிகிச்சையால் மூப்படைதலுடன் தொடர்புடைய மாற்றங்கள் நிறுத்தப்படவுமில்லை, ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. ஆனால் ஆரோக்கியமான ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நோய் நொடியில்லாமல் 50 வருடம் வாழ்வதற்கும், நோய் நொடியுடன் 100 ஆண்டு காலம் வாழ்வதற்குமான வித்தியாசம்தான் ஆரோக்கியமான ஆயுட்காலத்துக்கும், ஆரோக்கியமற்ற ஆயுட்காலத்துக்குமான வித்தியாசம். வயதான உயிரணுக்களை நீக்குவதால், மனித உடலில் இறப்பை உண்டாக்கும் வயதான உயிரணுக்களின் பாதிப்புக்கு அப்பாற்பட்ட பிற ரசாயன மாற்றங்கள் மற்றும் உடலியல் நிகழ்வுகளை தடுக்க முடியாது என்பதாலேயே, இச்சிகிச்சையால் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை மட்டுமே நீட்டிக்க முடியும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.
இதே வகையான ஆய்வை சாதாரண எலிகளைக்கொண்டும் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதன் முடிவை அறிய சில ஆண்டு காலம் பிடிக்கும். காரணம், சாதாரண எலிகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடங்கள். மேலும், இச்சோதனை எலிகளின் மீது நடத்தப்பட்டது என்பதால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்துச் சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகு காலம் பிடிக்கும். இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள ஒரு பிரத்தி யேகமான மரபணுவை மனித சிசுக்களின் உடலினுள் வெற்றிகரமாகச் செலுத்தியாக வேண்டும் என்பதும் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஆனாலும் கவலையில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் பேக்கர். ஏனென்றால், மனமிருந்தால் மார்க்கமுண்டு! என்ன ஒன்றும் புரியவில்லையா? அதாவது, இச்சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகுகாலம் பிடிக்கும் என்பதால், இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் புரிதல்களைக்கொண்டு வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, வயதான உயிரணுக்களை தாக்கி அழிக்கும் வண்ணம் மனித உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம்.
`முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்று நமக்குத் தெரியும். ஆனால் முயற்சி செய்வோரை ஊக்குவிக்காமல் போனால் மனமிருந்தும் மார்க்கமில்லாமல் போய்விடக்கூடும். அதனால் ஆராய்ச்சியாளர் பேக்கரின் மேலதிக ஆய்வு முயற்சிகள் வெற்றியடைந்து, நமக்கு நல்ல சிகிச்சை முறைகள் கிடைக்க அவரை மனமார வாழ்த்துவோம்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1