புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
90 Posts - 72%
heezulia
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_m10வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Nov 19, 2011 7:47 am


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:15 am

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-10

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 P98

அந்த அறிக்கை 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு அனுப்பப் பட்டு இருந்தது. முழு அழிவு நடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை அது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், முற்றாக அழிந்துவிடுவார்களோ என்று அச்சம்கொள்ளத்தக்க வகையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு இருந்த நேரம் அது. வெகுமக்களுக்கான உணவை வாங்கும் பொறுப்பைப் பெற்றிருந்த முல்லைத் தீவு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். மனிதத் துயரங்களைக் காணச் சகிக்க முடியாமல் அவர் எழுதிய இந்தக் கடிதம், மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்கி எடுத்துவிடுகிறது.

”உணவு கிடைக்காமல் தொடர்ந்து மக்கள் பட்டினி இருக்கிறார்கள். காட்டுக் கிழங்குகளையும் இலை தழைகளையும் உண்டு, உயிர் பிழைத்துக்கொள்ள முயற்சிக் கிறார்கள். ஆனாலும், தங்களின் சாவை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன. மருத்துவமனைக்குத் தூக்கி வரப்படுபவர்களில் பலர் இறந்தேதான் கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டினியால் செத்தவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது நாளாக நாளாக இன்னமும் கூடுதல் ஆகலாம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், ”மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த, பட்டினியால் செத்துப்போனவர்களை மட்டும்தான் எங்களால் கணக்கிட்டுச் சொல்ல முடிகிறது. மற்றவர் களை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது. உண்மைதான்… பதுங்கு குழிகளில், சாலைகளில், புதர் மறைவிடங் களில் இருந்தபடி பசித் தீ பற்றிக்கொள்ள… அப்படியே சாய்ந்து மரணமுற்றவர்களின் கணக்கு யாரிடம் இருக்கிறது?

பட்டினி ஒரு வன்முறை. ஆதிக்கச் சக்திகள் தங்கள் அதிகாரத்துக்கு, வெகுமக்களை அடிமைப்படுத்திக்கொள்ள பட்டினி போட்டுப் பார்க்கிறார்கள். இன ஒடுக்குமுறையின் மூலம் தமிழ் மக்களை அடிமையாக்கிக்கொள்ள முயன்று வரும் இலங்கை, குண்டு போட்டு அழிப்பதற்கு இணையாகப் பட்டினி போட்டு அழிப்பதையும் ஒரு கொள்கையாகவே உருவாக்கி வைத்துள்ளது. உள்நாட்டுப் போரும் இடப்பெயர்வும் பதுங்குகுழிகளும் வெளி உலகுக்கு எதுவுமே தெரியாமல் பட்டினிக் கொலை செய்வதற்கு, இலங்கையின் இனவெறி அரசுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டது.

முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய இடப்பெயர்வு காலத்தில், போர்க்களத்தில் சிக்கியுள்ள மக்கள்தொகையைப் பற்றி, இலங்கையின் ராணுவ அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. 2009-ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியான இந்த அறிக்கையின்படி, 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கணக் கிட்டுச் சொல்லி இருந்தார்கள். இது உண்மையானதுதானா என்ற கேள்வி எழுந்தபோது, மற்றொரு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியைத் தரத் தக்கதாக இருந்தது. அரசாங்கம் வகுத்து இருந்த அருவருக்கத்தக்க சூழ்ச்சி ஒன்று அதில் மறைந்து இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆட்சியாளரின் கணக்கெடுப்பின்படி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கிளிநொச்சி, வன்னி ஆகிய இரு மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகை 4 லட்சத்து 20 ஆயிரம். நான்கு மாதங்களில் இது எவ்வாறு 70 ஆயிரமாகக் குறைந்துபோனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இலங்கை அரசு தான் பொறுப்பேற்று உள்ள உணவு விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் இப்படிப் பொய்யான புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருந்தது. பட்டினியால் மக்கள் செத்துப்போக வேண்டும் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:16 am

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 P98b

பட்டினிச் சாவுபற்றிய இந்த அறிக்கையைப்போலவே, உணவுக் கையிருப்புபற்றிய மற்றோர் அறிக்கையும் வன்னியில் இருந்து இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. கிளிநொச்சி மண்டலத்தின் உணவுப் பொருள் வழங்கும் துறையின் துணை இயக்குநர் அனுப்பிய அவசர அறிக்கை அது. இதை ஓர் அபாய அறிவிப்பு என்றுதான் கருத வேண்டும். ”2009-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 83 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதற்கு 4,950 மெட்ரிக் டன் எடை உள்ள உணவுப் பொருட்கள் தேவை. ஆனால், கையிருப்பில் உள்ளது 110 மெட்ரிக் டன் மட்டுமே” என்று கூறுகிறது அந்த அவசர அறிக்கை. இதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால், மக்களின் தேவையில் அரை சதவிகித உணவுகூட, அவர்களின் கையிருப்பில் இல்லை என்று தெரிகிறது. அதைக் கிட்டத்தட்ட உணவற்ற நிலை என்றுதான் கூற வேண்டும். இது பிப்ரவரி மாதக் கடைசி நிலவரம் என்றால், யுத்தத்தின் இறுதிக் கட்டமான மே மாத இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் என்ன நடந்து இருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.

ஒரு பிடி உணவுக்காக அந்த மக்கள் பட்ட அவலங்கள் வார்த்தைகளில் விவரிக்கக் கூடியவையாக இல்லை. வயது முதிர்ந்த தாய் ஒருத்தி, தாம் அடைந்த துயரங்களை இணையதளம் ஒன்றில் பதிவுசெய்து இருக்கிறாள். தாது வருடப் பஞ்சம்பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வறண்டு வெடித்த நிலங்களில் நீர் அற்றுப்போக, மாட்டுக்கு வைக்கப்படும் தவிட்டில் ஒளிந்து இருக்கும் அரிசிக் குருநொய்யைத் தேடிப் பிடிக்க அலைந்து திரிந்ததாகக் கதைகள் உண்டு. தவிட்டை மேலும் மாவாக்கி, அதை அடுப்பில் சூடேற்றி கோரப் பசியைத் தணித்துக்கொண்டதாகவும் பஞ்சம்பற்றிய தகவல்கள் கூறுகின்றன. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், தாது வருஷத்துப் பஞ்சத்தைவிட உணவுப் பஞ்சம் கூடுதலாகிவிட்டது என்பதை அந்தத் தாயின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.

”நஞ்சை வயல்வெளிகள் அமைந்த வன்னி நிலப் பரப்பில், அரைத்து நெல்லை அரிசியாக மாற்றித் தரும் ஆலைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒதுக்குப்புறங்களில் நெல் அரைத்த தவிடும் உமியும் அம்பாரமாகக் குவித்துவைக்கப்பட்டு இருந்தன. உணவு இன்றித் தவித்த நாங்கள், அதைப் பார்த்தோம். பெண்கள் பெருங்கூட்டமாக விரைந்து சென்றோம். தவிடு, உமி நடுவே கொஞ்சமேனும் அரிசி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். காற்றில் தூற்றிப் புடைத்துப் பார்த்து அதில் இருந்து அரிசி குருநொய்யைப் பிரித்து எடுப்பதற்குப் பெரும்பாடுபட்டோம்.

உச்சி வெயிலில் பூமி அனலைக் கக்கிக்கொண்டு இருக்கிறது. இரைச்சல் கேட்கிறது. விமானமா? எல்லோரையும் திகில் பற்றிக்கொண்டது. வயிற்றுப் பசியா… அல்லது மரணமா..? பசியால் துடிதுடிக்கும் பொடிசுகளைப் பற்றித்தான் யோசனை. குண்டுகள் விழுந்து, செத்தாலும் பரவாயில்லை என்று மனப் பயத்தை அடித்துத் துரத்திவிட்டு, குழந்தைகள் உயிர் பிழைக்கும் ஒரு குவளைக் கஞ்சிக்காக, அந்தத் தவிடும் உமியும் குவிந்து உள்ள பொதிகளோடு போராட்டம் நடத்தினோம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக்கெடுத்து ஓடியது. உடல் களைத்து, கண்கள் இருள் அடைந்தன. புடைக்கும் முறத்தை இறுகப் பற்றிக்கொண்டோம். நம் சந்ததி உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்” என்கிறார் அந்த வயது முதிர்ந்த தாய்.

நான்கு மணி நேரம் புடைத்து எடுத்தாலும் இரண்டு படி அரிசிக் குருநொய்யைச் சேகரிப்பதுகூட, மிகவும் கடினமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். கிளிநொச்சி யில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அவர் கள் புறப்பட்டபோது, ஒரு கிலோ அரிசி 40 ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. மே மாதம் 10-ம் தேதிக்கு மேல், ஒரு கிலோ அரிசி 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கடைசி நேரத்தில் குடும்பத்தின் பசியைப் போக்க தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விற்று, இரண்டு படி அரிசியை ஒருவர் வாங்கினார் என்ற தகவல் நமக்கு மயக்கத்தை வரவழைக்கிறது!



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:16 am

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-11

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 P74a

”ஆட்லறி என்று சொல்லப்படும் எறிகணை வானத்தில் வேகமாக வருவது மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. நான் வீழ்ந்துவிட்டேன். ஆனாலும், என் நினைவை நான் இழக்கவில்லை. இடப்பெயர்வு காலம் முழுவதும் என்னுடன் இணைந்து பயணம்செய்துவந்த இரண்டு நண்பர்கள் பக்கத்தில் இறந்துகிடக்கிறார்கள். நான் எழுவதற்குக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. வயிற்றில் ஏதோ பிசுபிசுப்பதைப் போல உணர்கிறேன். தொட்டுப் பார்த்தால் ரத்தம் கொட்டிக்கொண்டு இருக்கிறது. அருகில் ஆள் அரவம் எதுவுமே இல்லை. எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாக என் கண்ணுக்கு மங்கலாகத் தெரிகின் றன. மெதுவாக எழுந்து செல்கிறேன். வீதி ஓன்றில் மயங்கி நான் கிடந்திருக்க வேண்டும். லேசாக மயக்கம் தெளிந்தபோது, மருத்துவத் துறையைச் சேர்ந்த இரண்டு பேர் பேசிக்கொள்வது என் காதுகளுக்குக் கேட்கிறது…” -முள்ளி வாய்க்கால் பேரழிவில் கடைசி நேரத்தில் உயிர் தப்பிய ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் முன்னுரை இது!

உயிர் தப்பியவரின் பெயர் முருகன். மேலும், அவருடைய வாக்குமூலத்தில் இருந்து சில கண்ணீர் வார்த்தைகளை இதயம்கொண்டு படியுங்கள்: ”மருத்துவப் பணியாளர்கள் இரண்டு பேர் பேசிக்கொள்கிறார்கள். இருவருமே இளைஞர்கள்தான் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. மயங்கிய நிலையிலும் இவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது.

‘இவர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவருடைய உடம்பு ரொம்பவும் சேதம் அடைந்துள்ளது’ என்று மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் கூறுகிறார். அதனை மறுத்து இன்னொரு பெண்மணி ‘அவர் சாக மாட்டார். பாதிப்பு உடலில் இல்லை. மூத்திரப்பையில் மட்டும்தான்’ என்கிறார். எனக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பதைப் போலத் தெரிகிறது. நான் மயங்கிக்கிடந்தேன்.

நான் கண் விழித்தபோது யாருமே அங்கு இல்லை. எனக்கு மருத்துவம் அளிக் கப்பட்ட இடம் எறிகணைகளால் தாக்கப் பட்டு இருப்பதை என்னால் யூகித்துக் கொள்ள முடிந்தது. என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதைத் துண்டு களுமாகக் காட்சி அளிக்கின்றன. நான் எழுவதற்குப் பெரிதும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து செல்கி றேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும் எறிகணைகள் பதுங்கு குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே வந்துவிட்டார்கள்.

நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அங்கேயே தங்கிவிடுவதா என்ற குழப்பதில் இருந்தேன். இதற்கு என் தம்பிதான் காரணம். உடன்பிறந்தவர்களில் கடைசியில் பிறந்தவன் அவன். அவன் தன்னுடைய இரண்டு கால் களையும் இழந்து இருந்தான். அவனைச் சுமந்துகொண்டுதான் செல்ல வேண்டும். சுமந்து செல்வதற்கு என் உடல்நிலை இடம் தராது என்பதை என் தம்பியும் நன்கு உணர்ந்தே இருந்தான். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. என் தம்பி என்னை வேகப்படுத்தினான். ‘நீங்கள் போய்விடுங்கள் அண்ணா. கடைசி நேரத் தில் யாராவது என்னைக் காப்பாற்றிவிடுவார் கள். நான் பிழைத்துக்கொள்வேன்’ என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரேயடியாக எல்லோரும் நிர்பந்தித்து என்னை வெளி யேறும்படி வற்புறுத்தினார்கள். தம்பியின் மோசமான நிலையைப் பார்த்துக் கொண்டே அங்கு இருந்து வெளியேற மனமே இல்லாமல் கண்ணீருடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். அங்கு இருந்து முகாம் வந்து, மருத்துவச் சிகிச்சை பெற்றேன். தொண்டு நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டை எனக்குப் பெரிதும் பயன்பட்டது. அதைவைத்து முகாமை விட்டும் வெளியேறிவிட்டேன்.

இன்று உயிர் ஆபத்து நீங்கி, வாழ்க்கை ஒருவிதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றாலும், கடைசியில் முகாமைவிட்டு, வெளியேறும் தறுவாயில் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறிய பின்னர், ராணுவம் அங்கு வந்ததாகவும் வெளியேற முடியாமல் உடல் பாதிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் அங்கேயே இருந்த அனைவரையும் ராணுவம் இயந்திரப் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அப்படியே மண்ணைப்போட்டு மூடிவிட்டதாகவும் செய்தி கிடைத்தது”… என்று முடிகிறது முருகனின் வாக்கு மூலம்!

இதை வாசிக்கும்போதே வலிக்கிறதே… அதை அனுபவித்த முருகனின் வேதனை எப்படி இருக்கும்?

- இப்படி யோசித்த நேரத்தில்தான் தமிழ்வாணி என்ற பெண்ணைப் பற்றித் தெரியவந்தது. அவரது வேதனை, அதீத வேதனையாக இருந்தது!

தமிழ்வாணி… பிரிட்டனில், பயோ- மெடிக்கல் படித்த பட்டதாரி. ஈழத்தில் பல முறை இடப்பெயர்வுக்கு உள்ளாகி, 1994-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைவிட்டு பிரிட்டனுக்குக் குடியேறி, பட்டப்படிப்பை முடித்தவர். இறுதி யுத்தம் நடக்கும்போது ஈழத்தில்தான் இருந்தார். யுத்தப் பிரதேசத் தில் இவர் சிக்கிக்கொள்கிறார். இதற்காக அச்சங்கொண்டு பயத்தில் உறைந்து போகாமல், யுத்தத்தில் பாதிக்கப்பட்டமக்க ளுக்கு, மருத்துவப் பணிகள் செய்யத் தொடங்கிவிடுகிறார்.



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:17 am

யுத்தம் முடிந்த பின்னர், சந்தேகத்தில் முகாமில் வைத்து நான்கு மாதங்கள் விசாரிக்கப்படுகிறார். உலகம் முழுவதிலும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. பிரிட்டன் அரசாங்கமும் தனது நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவரை விடுவிக்க வேண்டும் என்றது. கடைசியில் விடுவிக்கப்பட்டு, பிரிட்டன் போய்ச் சேர்ந்தார். முள்ளி வாய்க்காலில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை உலகுக்குத் தெரிவிப்பதில் முக்கிய நபராக தமிழ்வாணி இன்று கருதப்படுகிறார்.

”போர் 2008-ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. குறுகிய நிலப் பரப்பில் குவிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன என்ற கவலை உலக சமுதாயத்தைக் கவ்விக்கொண்டது. மக்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று மனிதநேயம் கொண்டவர்கள் துடித்துப்போனார்கள்.

அப்போது இலங்கை அரசு, ‘குண்டுகள் வெடிக்காத அமைதிப் பிரதேசங்களை உருவாக்கி, அதில் பொதுமக்களில் ஒருவரைக்கூடச் சாகவிடாமல் பாதுகாப் போம்’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக சமூகத்துக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தது. அது வஞ்சகமான வாக்குறுதி.

நந்திக் கடலுக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதிதான் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது. புதுமாத்தளன் முதல் வெள்ளமுள்ளி வாய்க்கால் வரை பல கடலோரக் கிராமங் களை உள்ளடக்கிய பகுதி அது. இங்கு மக்கள் லட்சக்கணக்கில் வந்து சேர்ந்த பின்னர்தான், இந்தப் படுகொலை நடந்தது.”

- இது தமிழ்வாணியின் சாட்சியம்.

உயிர் ஊசலாட, கொஞ்சம் கொஞ்ச மாக மரணத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் உயிர் நின்றுபோன மருத்துவமனைகளைப் பற்றி தமிழ்வாணி கூறியுள்ளவை நம் ரத்தத்தை உறையவைக்கக் கூடியவையாக உள்ளது.

”மரத்தடி, மருத்துவச் சிகிச்சைக்கான இடமாக மாறியது. பின்னர், அறுவைச் சிகிச்சைகளை எங்கு நடத்துவது… அதுவும் அங்கேயேதான். கை, கால்களை அகற்றி னால்தான் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலைக்குப் பலரும் வந்துவிட்டார்கள். காயம்பட்டவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு சில மருத்துவர்களும் மருத்துவமனைப் பணியாளர்களும் மட்டும் தான் எஞ்சி இருக்கிறோம்.

அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மருந்து இல்லை. இருக்கிற மருந்தில் தண்ணீர் கலந்து மருந்தைக் கொடுத்துப் பார்க்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமல் போய் விடுகிறது. மயக்க மருந்து இல்லாமலேயே மரத்தடியில் அறுவைச் சிகிச்சை நடை பெறுகிறது. ரத்தம் கொட்டுகிறது. அதை அப்படியே பிளாஸ்டிக் பைகளில் பிடித்து, ரத்தத்தை யார் வெளியேற்றினார்களோ அவர்களுக்கே மீண்டும் ஏற்றுகிறோம். காயம்பட்டவர்களுக்குக் கட்டுப்போடு வதற்குப் பழைய கந்தல் துணிகளையும் புடவைகளையும் பயன்படுத்துகிறோம்.

மருத்துவ விஞ்ஞானத்தால் இதனை நம்ப முடியாது என்றாலும் முள்ளி வாய்க் கால் யதார்த்தம் இதுதான். அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தி கிடைக் காமல் போனதால்… என்ன செய்வது என்கிற இக்கட்டான சூழலில் கறி வெட்டு வதற்காகப் பயன்படுத்தப்படும் கசாப்புக் கடை கத்திகளைப் பயன்படுத்தி, அறுவைச் சிகிச்சை செய்தோம்” என்கிறார் தமிழ் வாணி.

இதைப்போலவே அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மனித அவயங்கள் ஒருபுறம் கவனிப்பார் அற்றுக் குவிந்துகிடந்தன என்பதையும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியுமா? அதுதான் முள்ளி வாய்க்காலில் மக்களோடு சேர்ந்து மரண முற்ற மருத்துவத்தின் கதையுமாகும்.



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:18 am

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர் -12 இறுதி

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 P62

முள்ளி வாய்க்காலில் இன அடை யாளங்களை அழிக்க கடைசிக் கொள்ளியை வைக்கும் திட்டத்தில் இருந்தது இலங்கை யின் இனவெறி அரசு. ஓர் ஆண்டுக் காலம் இடப்பெயர்வால் பெரும் துயரில் இருந்த மக்களை முள்ளி வாய்க்கால் வந்து சேருமாறு அரசுத் தரப்பில் கூறினார்கள். குண்டு வீச்சுகள் இல்லாத பிரதேசங்கள் என்று சில பகுதிகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஹிட்லர், யூத மக்களை இவ்வாறு தான் ‘பாதுகாப்பான இட’த்துக்குஅழைத்து வருவதாகக் கூறினான். குழந்தைகளுடன் யூத மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். போர் தந்த கொடுமை யில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஒரு பெருவெளியின் வாசல் கதவு, அவர்களைத் தன் வாய் திறந்து அழைத்தது. சாட்சியங்கள் எதுமே இல்லாமல், யூத மக்களைக்கொன்றுமுடித்த விஷ வாயுக் கூடம் அது.

இலங்கை அரசு அறிவித்து இருந்த, குண்டுகள் வெடிக்காத பிரதேசத்துக்கும் அந்த விஷ வாயுக் கூடங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. விஷ வாயுக் கூடங்களை நான்கு புறமும் விஷ வாயு வெளியேறாத வாறு அமைத்து இருப்பார்கள். யாருமே அங்கு இருந்து தப்பிச் செல்ல முடியாது. முள்ளிவாய்க்கால் பிரதேசமும் யாரும் எங்கும் தப்பித்துக்கொள்ளாதவாறு அமைந்த நிலப் பகுதி. ஒருபுறம் நந்திக் கடல், மறுபுறம் பெருங்கடல். இதற்கு இடைப்பட்ட பகுதி யில்தான் மக்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப் பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இலங்கை அரசு சார்ந்த பத்திரிகையாளர்களுக்குக்கூட, அங்கு அனுமதி இல்லை. ஏன்? சாட்சிகள் அற்ற பிரதேசமாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் உள்ளடித் தந்திரம். குறுகிய இந்த நிலப் பரப்பில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.

மனிதர்கள் இல்லாத வேவு விமானங்கள் அனுப்பப்பட்டு, எல்லா விவரங்களையும் இவர்கள் முன்கூட்டியே சேகரித்துக்கொண்டார்கள். நான்கு புறமும் கவச வாகனப் படைகள் சூழ்ந்து நின்றன. பல்குழல் பீரங்கிகள் தொடர்ந்து அக்னிக் குண்டுகளை உமிழ்ந்துகொண்டே இருந்தன. வான் வழியே விமானங்கள் எட்டிப் பார்த்து, மக்கள் குவிந் துள்ள இடங்களில் குண்டுகளைப் போட்டுக்கொண்டே இருந்தன. பூமி அதிர்ந்தது. கடல் அலைகள் அச்சமுற்று நின்றன. இதுதான் முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கள் சந்தித்த கோரமான கொடுமை!

”பிணங்கள் சூழ்ந்த பிரதேசம்
ஜனக் கடலில் மிதந்தவை
களத்தில் இறந்தவை
கண்ட கண்ட இடமெல்லாம்
வெந்தவை, கிடந்தவை,
அழுகிச் சிதைந்தவை”

என்று தமிழர் வாழ்க்கைபற்றி 1985-ம் ஆண்டில் ஈழத்துக் கவிஞர் மு.பொன்னம் பலம் பாடிய வரிகள்தான், இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன!



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 4:19 am

மனிதர்கள் மட்டும்தான் மரணம் அடை கிறார்கள். மண்ணுக்கான போராட்டங்கள் மரணம் அடைவது இல்லை. அவை தற்காலிகமாக முறியடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. ஆனாலும், லட்சியத்தின் நுழைவாயிலில் அடி எடுத்து வைப்பதற்குப் பல தலைமுறைகள் அவை காத்திருக்கின்றன. எல்லாமே அழிந்து விட்டது என்று எதிரிகள் நிம்மதிகொள்ளும் நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத தருணத்தில், அடிமரம் கிளை வெடித்து, தளிர் அவிழ்த்து, பூப் பூக்கத் தொடங்கி விடுகின்றன… பட்ட மரம் துளிர்விடும் அதிசயத்தைப் போல!

வரலாறு, அந்தந்தப் போராட்டங்களுக் கான வசந்த காலத்தை எங்கோ ஓர் இடத்தில் மறைத்து வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை. வீழ்ந்துவிட்டதாகக் கருதப்படும் ஈழ மக்களின் போராட்டத்துக் கான வசந்த காலமும் காலப் பெருவெளி யில், எங்கோ ஓர் இடத்தில் இருக்கத்தான் செய்யும்.

ஜனநாயக சுவாசத்தை மானுடத்துக்கு வழங்கியது பிரெஞ்சுப் புரட்சி. ஆதிக்கங் கள் அனைத்தையும் கிழித்தெறிந்து, விடுதலை பெற்ற தேசிய இனங்கள்எல்லாம், முழுவதும் அழிந்துவிட்டனவோ என்ற அச்சத்துக்குப் பின்னர்தான், உயிர் பிடித்து தலை நிமிர்ந்து எழுந்து, தங்கள் வாழ்வுரிமை யைச் சாத்தியப்படுத்திக்கொண்டன. 400 ஆண்டுகள் போராடி, தங்கள் உரிமையைப் பெற்ற அயர்லாந்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதைப்போலவே பெல்ஜியத் தில் பிளெமிஸ் மக்களும் பின்லாந்தில் பினிஸ் மக்களும் ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் தங்கள் தாயக உரிமைக்காக நூற்றாண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். வெற்றியின் விளிம்பை இப்போது தொட்டுக்கொண்டு இருக்கிறார் கள் என்பதும் உண்மைதான்!

இன அழிப்பு அரசியல், சித்திரிப்பதைப் போல இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் நிகழ்காலத்தின் வன்முறை அல்ல. காலத்தால் அழிந்துபோகாத மண்உரிமைப் போராட்டம். வரலாறு அறிந்த காலம் முதல், மண்ணில் கால் பதித்தவர்களின் உரிமைக் குரல் இது. இவர்களை விரட்டி அடிப்பது என்றால் யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? முத்துக்குமார்களுக்கு உயிர், தமிழ் மக்களின் உரிமை காக்கும் ஆயுதம் என்றால், ஈழ மக்கள் உயிராயுதம் ஏந்த மாட்டார்களா என்ன? மக்கள் பல்லாயிரமாக முள்ளி வாய்க்காலில் நெஞ்சுரம்கொண்டு நின்றார்கள்.

இலங்கை மண்ணில், பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் வேர் பிடித்து வளர்ச்சி பெற்றிருந்தவர்கள். தமிழ் மக்களின் பண்பாட்டைப்போலவே, அந்த மண்ணில் ஆழப் புதைந்துகிடக்கும் புதைபொருள்களும் கல்வெட்டுகளும் அதற்கான ஆதாரத்தைத் தருகின்றன. தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இலங்கைத் தீவு, தமிழ்த் தொல்குடிகளைத் தன் மார்பில் வளர்த்தெடுத்த தாய்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடக்கூறு கிறார்கள்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தைவிட தாமிரபரணிக் கரை அமைந்த ஆதிச்ச நல்லூர், முந்தையது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதிச்சநல்லூர் மண்பாண்டங்களில் காணப்படும் எழுத்துக்களும் ஈழத்தில் காணப்படும் மண்பாண்ட எழுத்துக்களும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபோல இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சி, சம காலத்தில்தான் வளர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கையைக் கைப்பற்றிக்கொள்ளும் வரை தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனி நாடு, இலங்கையில் இருந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

மானுடத்தை வெட்கித் தலை குனியவைத்த முள்ளி வாய்க்கால் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் தடுக்க முடியாத குற்றத்துக்காக இன்று தலை குனிந்து நிற்கின்றன. இது போர்க் குற்றம்தான் என்று உலக மனித உரிமை அமைப்புகள் ஒன்று கூடி ஒரே குரலில் சொல்லுகின்றன. தொலைக்காட்சிகளில் இந்தக் கொடுமையைப் பார்த்தவர்கள், செய்திகளாக இதைப் படித் தவர்கள், உறக்கம் அற்றுத் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ராஜபக்ஷேயின் உலகம் அதை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தமிழ் மக்களின் அழிவுபற்றிய வெற்றிப் பாடல்களை அங்கு பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெற்றி அடைந்தவர்களுக்குப் பாடல்கள் உண்டு என்றால், தோற்றுப் போனவர்களுக்கு மட்டும் பாடல்கள் இல்லையா? வெற்றிப் பாடல்கள் போதைகொண்டு மயக்கத்துடன் நடன அரங்குகளில் வெறி பிடித்து ஆடுகின்றன. தோற்றுப்போனவர்களின் பாடலோ, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து, மரணத்தில் இருந்து புதிய பிறப்பைக் கருகொண்டு, பெற்றெடுக்க சூல் வலிகொண்டு நிற்கிறது.

‘வீழ்வே னென்று நினைத் தாயோ’ என்று முள்ளி வாய்க்கால் விதைப்பதை விதைத்து முடித்துவிட்டு, அறுவடைக்காகக் காத்து நிற்கிறது!

(முற்றும்)
சி.மகேந்திரன்
ஓவியம் : ராஜ்குமார் ஸ்தபதி

வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 P62b

நன்றி:eelamview.com
நன்றி:விகடன்
நன்றி:திரி துவங்கிய நண்பர் பிரசன்னா



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Dec 10, 2011 6:57 am

மிக்க நன்றி தல... சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
தரவிறக்கம் செய்ய வேண்டாம்... அனைவரும் படிக்கலாம்...

அனைவரும் அறியும் விதம் தலைப்பை இப்படி மாற்றலாமா.....
முள்ளி வாய்க்கால் - ஈழத்தமிழரின் வாழ்க்கை, சி.மகேந்திரன் அவர்களின் வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2012 2:36 am

மீண்டும் உறவுகளின் பார்வைக்கு! அன்பு மலர்



வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 2:50 am

பிரசன்னாவுக்கும் சிவாவுக்கும் என் நன்றிகள். எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டிய தொடர்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக