புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
59 Posts - 58%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
54 Posts - 58%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 43 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

Page 43 of 48 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011

1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 11, 2012 11:31 am

செப்டெம்பர் 11

1297 ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.

1541 சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.

1609 ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.

1649 ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

1708 சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ் மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.

1709 பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.

1802 பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.

1857 யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.

1889 யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.

1893 முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

1897 எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.

1906 மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.

1914 ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகளை வெளியேற்றினர்.

1916 கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1919 ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.

1926 பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.

1940 இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.

1944 இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்.

1945 இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர்.

1961 டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.

1968 பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.

1973 சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

1974 வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

1978 அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.

1982 பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

1989 ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.

1992 ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.

1997 ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.

2001 நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

2006 ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 13, 2012 4:11 pm

செப்டெம்பர் 12

1791: அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் முகமாக அமெரிக்க தலைநகருக்கு வாஷிங்டன் டி.சி. என பெயரிடப்பட்டது.

1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.

1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் பிரகடனப்படுத்தினார்.

1969: கனடாவில் ஆங்கிலத்திற்கு சமமாக பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ மொழிகள் சட்டம் அமுலுக்கு வந்தது.

1976: 33 வருடங்கள் சீனாவை ஆட்சி செய்த சீன அதிபர் மாவோ சேதுங் தனது 82 ஆவது வயதில்

1990: மட்டக்களப்பு சத்துருகொண்டானில் 184 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1991: தஜிகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1993: இஸ்ரேலை பலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்தது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 13, 2012 4:12 pm

செப்டெம்பர் 13

1922: லிபியாவின் அல் அஸீஸியா நகரில் வெப்பநிலை 58.7 பாகை செல்சியஸுக்கு உயர்ந்தது. இதுவொரு உலக சாதனையாகும்.

1971: சீனாவில் மாவோவுக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வியுற்ற 2 ஆம் நிலை தலைவர் லின் பியாவோ விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றார்.இவ்விமானம் மொங்கோலியாவில் விபத்துக்குள்ளாகி விமானத்திலிருந்த அனைவரும் பலியாகினர்.

1989: தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஆயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமையில் நடைபெற்றது.

1993: பலஸ்தீனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து கையெழுத்திட்டபின் இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் கைகுலுக்கினர்.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டிருந்த சிவில் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியது.

2008: இந்தியாவின் டில்லியில் தொடர் குண்டுவெடிப்புகளால் 30 பேர் பலியாகினர், 130 பேர் காயமடைந்தனர்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:27 am

செப்டெம்பர் 14

1812: நெப்போலியனின் படையெடுப்பின்போது ரஷ்ய துருப்புகள் வெளியேறியவுடன் மொஸ்கோ நகரில் பாரிய தீ பரவ ஆரம்பித்தது.

1829: ரஷ்ய – துருக்கி யுத்தம் முடிவுற்றது.

1901: செப்டெம்பர் 6 ஆம் திகதி துப்பாக்கி தாரியொருவரால் சுடப்பட்டு காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே உயிரிழந்தார்.

1917: ரஷ்யா குடியரசாகியது.

1959: சோவியத் யூனியனின் லூனா -2 விண்காலம் சந்திரனின் தரையில் மோதியது. சந்திரனை அடைந்த மனிதனால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.

1960: ஒபெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1960: கொங்கோவில் சி.ஐ.ஏ. உதவியுடன் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1979: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நூர் மொஹமட் தராக்கி படுகொலை செய்யப்பட்டார்.

1982: லெபனானின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பாசிர் ஜெமயாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர் என்பவர் அத்திலாந்திக் சமுத்திரத்தை வெப்ப வாயு பலூனில் கடந்த முதலாவது நபரானார்.

2008: ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 88 பேர் பலி.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:28 am

செப்டெம்பர் 15

1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது)

1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம் மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது.

1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன.

1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது.

1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி.

1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி.

1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ்.

1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது.

1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:31 am

செப்டெம்பர் 16

1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:34 am

செப்டெம்பர் 17.

1928: அமெரிக்காவில் வீசிய சூறாவளி காரணமாக சுமார் 2,500 பேர் பலியாகினர்.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின் துருப்புகள் நெதர்லாந்தில் பரசூட் மூலம் தரையிறங்கின.

1948: இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தின் இறையாண்மையை; இந்திய யூனியனிடம் ஹைதராபாத் நிஸாம கையளித்தார்.

1949: கனேடிய நீராவிக் கப்பலொன்று தீப்பற்றியதால் 118 பேர் பலி.

1957: மலேஷியா சுதந்திரம் பெற்றது.

1978: கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் இஸ்ரேலும் எகிப்தும் கையெழுத்திட்டன.

1980: நிகரகுவாவின் முன்னாள் ஜனாபதிதி அனஸ்டாஷியோ டிபாயெல், பரகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.

1982: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அகதிகள் முகாமொன்றில் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.

1983: மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டியில் வெற்றி பெற்ற முதல் கறுப்பின பெண் எணும் பெருமையை வனேஸா வில்லியம்ஸ் பெற்றார்.

1993: போலந்திலிருந்து கடைசி ரஷ்ய துருப்புகள் வெளியேறின.

2006: அமெரிக்காவின் அலெஸ்கா பிராந்தியத்திலுள்ள போர்பீக்ட் எரிமலை சுமார் 10,000 வருடங்களின் பின் முதல் தடவையாக வெடித்தது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:35 am

செப்டெம்பர் 18.

1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.

1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.

1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

1943: பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்ட்டதால் 5620 பேர்பலி.

1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.

1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.

1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.

1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.

1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.

2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:35 am

செப்டெம்பர் 19.

1881: ஜுலை 2 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் உயிரிழந்தார்.

1893: நியூஸிலாந்தின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1944: சோவியத் யூனியன், பின்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946: கான்ஸ் திரைப்படவிழா முதல் தடவையாக நடத்தப்பட்டது.

1952: ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் ஐரோப்பாவுக்கு சென்றபின் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது.

1976: துருக்கி விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 155 பேர் பலி.

1983: சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் சுதந்திரம் பெற்றது.

1985: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலி.

1989: நைகர் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் 171 பேர் பலி.

1997: அல்ஜீரிய நகரமொன்றில் 53 பொதுமக்கள் படுகnhலை செய்யப்பட்டனர்.

2006: தாய்லாந்தில் இராணுவத்தினர் புரட்சி நடத்தினர்.

2010: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய பெற்றோலிய எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பல வாரங்களாக தொடர்ந்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்பட்டது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 24, 2012 9:37 am

செப்டெம்பர் 20.

1857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை கைப்பற்றியதையடுத்து 19857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.

1742: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது கார்க் குண்டுத் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.

1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.

2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால் 54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Sponsored content

PostSponsored content

Page 43 of 48 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக