புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 38 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 38 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 38 of 48 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 11:55 am

ஜூலை 26

1847: லைபீரியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1944: பிரிட்டன் மீது ஜேர்மனி முதல் தடவையாக வீ-2 ரொக்கட் தாக்குதல் நடத்தியது.

1945: பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றது.

1952: எகிப்திய மன்னர் பாருக், தனது மகன் புவாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

1953: பிடெல் காஸ்ட்ரோ, சுயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது.

1965: பிரிட்டனிடமிருந்து மாலைதீவு சுதந்திரம் பெற்றது.

1977: கனடாவின் கியூபெக் மாநில சட்டசபை, பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கியது.



சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 26, 2012 12:04 pm

அரிய தகவல்களை அறிய உதவும் பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 12:12 pm

ஜூலை 27.


1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.

1953 :கொரிய யுத்தம் முடிவடைந்தது.

1976: ஜப்பானிய பிரதமர் ககுவேய் டனாகா, வெளிநாட்டு நாணயமாற்று சட்டத்தை மீறினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானார்.

1983: வெலிக்கடை சிறையில் 18 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இருநாட்களில் இரண்டாவது தடவையாக இத்தகைய சம்பவம் நடைபெற்றது.

1990: பெலாரஸ் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2002: உக்ரேனில் இடம்பெற்ற விமான சகாசத்தின்போது விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் பலி.


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 11:01 am

ஜூலை 28

1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.

1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.

1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.

1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக
992 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.

1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.

1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.

2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.

2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jul 29, 2012 10:50 am

ஜூலை 29

நிகழ்வுகள்

1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.

1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.

1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.

1848 - அயர்லாந்தில் "டிப்பெரரி" என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

1900 - இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.

1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.

1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.

1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.

1967 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)

1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)

1905 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)

இறப்புகள்

1913 - டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)

1974 - கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)

1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி

2009 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920

2009 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)

சிறப்பு நாள்

ருமேனியா - தேசிய கீத நாள்

பரமக்குடி சாதிய மோதலும்
காவல் துறைத் துப்பாக்கி சூடும்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 30, 2012 11:30 am

ஜூலை 30

நிகழ்வுகள்

1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.

1629 - இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1733 - ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.

1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

1825 - பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1930 - உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1932 - கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1954 - எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.

1966 - உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.

1971 - அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.

1971 - ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

1997 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் "திரெட்போ" என்ற
இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1818 - எமிலி புரொண்டி, ஆங்கில நாவலாசிரியர் (இ. 1848)

1863 - ஹென்றி ஃபோர்ட், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1947)

1947 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், நடிகர், அரசியல்வாதி



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 31, 2012 12:56 pm

ஜூலை 31

நிகழ்வுகள்

30 BC - மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 - தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.

1588 - ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1655 - ரஷ்யா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

1741 - புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.

1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகொஸ்லாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992 - நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 - வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

பிறப்புகள்

1704 - கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் (இ. 1752)

1874 - செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)

1912 - மில்ட்டன் ஃப்ரீட்மன், பொருளியல் நிபுணர் (இ. 2006)

1966 - ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

1805 - தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756)

1980 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பி. 1924)


தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Aug 01, 2012 12:02 pm

ஆகஸ்டு ௧

நிகழ்வுகள்

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள்
கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்

பிறப்புகள்

1929 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)

1946 - குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 - குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

இறப்புகள்

1920 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

2008 - ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)

2009 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி.
1933)

சிறப்பு நாள்

உலக சாரணர் நாள்

அங்கோலா - இராணுவ நாள்

பெனின் - தேசிய நாள் (1960)

கொங்கோ - பெற்றோர் நாள்

லெபனான் - இராணுவ நாள்

சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)

யாசர் அராபத் பிறப்பு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 02, 2012 10:57 am

ஆகஸ்டு 2

நிகழ்வுகள்

1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).

1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.

1945 - இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.

1968 - பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1973 - மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.

பிறப்புகள்

1913 - தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர் (இ. 1980)

1926 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2008)

இறப்புகள்

1860 - சேர் ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர் (பி. 1796)

1892 - Dr Bonjean, கொழும்பின் முதலாவது ஆயர்.

1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)

1923 - வோரன் ஹார்டிங், ஐக்கிய அமெரிக்காவின் 29வது குடியரசுத் தலைவர் (பி. 1865)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 2:09 pm

ஆகஸ்டு 3
நிகழ்வுகள்

435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.

1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப்பட்டனர்.

1645 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப்
படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

1678 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.

1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.

1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர்
கொல்லப்பட்டனர்.

1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

[தொகு] பிறப்புக்கள்

1924 - லியொன் யூரிஸ், அமெரிக்க நாவலாசிரியர் (இ. 2003)

1957 - மணி சங்கர், இந்திய திரைப்பட இயக்குனர்

இறப்புகள்

1977 - மக்காரியோஸ், சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதி (பி. 1913)

1993 - சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)

2008 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

நைஜர் - விடுதலை நாள் (1960)

வெனிசுவேலா - கொடி நாள்

Sponsored content

PostSponsored content



Page 38 of 48 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக