உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
+15
அசுரன்
செல்ல கணேஷ்
மாணிக்கம் நடேசன்
நேரு
பேகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
Aathira
sshanthi
kitcha
மகா பிரபு
பிஜிராமன்
கேசவன்
சதாசிவம்
19 posters
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.
சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.
உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.
அன்புடன்......

Last edited by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:49 am; edited 4 times in total
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
ஆசாரக்கோவை மிகவும் அருமையான நூல், அதில் இருந்தும் பயனில்லாதவை பற்றி ஒரு பாடல் வரும் அந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பாடல் 1: (பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து
பொருள் விளக்கம்
ஒருவன் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருத்தல், பொறுமையுடன் இருத்தல், இனிய சொல் பேசுதல், எந்த ஒரு உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல், கல்வி அறிவு, பலனை எதிர்பார்க்காமல் இந்த சமுதாயதிர்க்கு செய்யும் சேவை (அடுத்தவருக்கு உதவும் ஒப்புரவு குணம்), காலம் கருதி ஆற்ற வேண்டிய விஷயத்தை ஆற்றும் திறன், அறிவுடைமை, நல்ல குணம் உடையவருடன் சேர்தல் ஆகிய எட்டும் ஒழுக்கங்களின் வித்து என்று கூறும் விதை ஆகும். இந்த குணங்களில் இருந்து தான் நல்லொழுக்கம் அனைத்தும் ஆரம்பமாகிறது.
பாடல் 2 :ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
பொருள் விளக்கம்
நல்ல குடியில் பிறக்கும் பிறப்பு, நீண்ட ஆயுள் , செல்வம், அழகானத் தோற்றம், நிலங்களை ஆளும் உரிமை, சொல்வன்மை, யாராலும் அழிக்க முடியாத கல்வி, நோய்யற்ற வாழ்வு ஆகிய எட்டும் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

ஆசாரக் கோவை அறியும் வாய்பை ஏற்படுதி கொடுதமைக்கு நன்றிகள் ஐயா......
தொடருங்கள் ஐயா.......உங்கள் முகவுரையும்.....பாடலின் விளக்கமும் அருமை........நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தொடருங்கள் ஐயா.......உங்கள் முகவுரையும்.....பாடலின் விளக்கமும் அருமை........நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
நன்றி கேசவன் , நன்றி ராமன்.
கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலை தமிழுக்கு வரவில்லை என்பது உங்கள் போன்றுள்ளோர் சான்று.
நன்றி
கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலை தமிழுக்கு வரவில்லை என்பது உங்கள் போன்றுள்ளோர் சான்று.
நன்றி

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
தொடருங்கள் அண்ணா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பாடல் 3 தக்கணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும்.
பொருள் விளக்கம்
ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுப்பவருக்கு உரிய குரு தட்சணை, யாகம், தவம் செய்தல், கல்வி கற்றல் ஆகிய நான்கும் ஒருவன் தவறாமல் மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றும் ஒன்று பட செய்ய வேண்டும். செய்யா விட்டால் எந்த உலகத்திற்கும் (இந்த உலகம், மேல் உலகம்) பயன் படாது.
பாடல் 4 முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை.
பொருள் விளக்கம்:
விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது வாழ்விற்கு சிறந்தது என்பதே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

காலையில் தாய் தந்தயரை வணங்க வேண்டும் என்று முன்னோர் சொன்னது முன்னோர் காலத்தோடு போகி விட்டது.....இப்பொழுது யாரும் (நானும்) அவ்வாறு செய்வது கிடையாது.........
பல அம்மா அப்பாக்கள் விடியற்காலை எழுந்து வேலைக்கு சென்று விடுகின்றனர்...பிள்ளைகளோ..அவர்கள் சென்ற பின் தான் விழிக்கிறார்கள்.....இதில் எங்கே வணங்குவது வழிபடுவது......இல்லையா ஐயா......
மிக்க நன்றிகள் ஐயா........
[You must be registered and logged in to see this image.]
பல அம்மா அப்பாக்கள் விடியற்காலை எழுந்து வேலைக்கு சென்று விடுகின்றனர்...பிள்ளைகளோ..அவர்கள் சென்ற பின் தான் விழிக்கிறார்கள்.....இதில் எங்கே வணங்குவது வழிபடுவது......இல்லையா ஐயா......
மிக்க நன்றிகள் ஐயா........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பிஜிராமன் wrote:காலையில் தாய் தந்தயரை வணங்க வேண்டும் என்று முன்னோர் சொன்னது முன்னோர் காலத்தோடு போகி விட்டது.....இப்பொழுது யாரும் (நானும்) அவ்வாறு செய்வது கிடையாது.........
பல அம்மா அப்பாக்கள் விடியற்காலை எழுந்து வேலைக்கு சென்று விடுகின்றனர்...பிள்ளைகளோ..அவர்கள் சென்ற பின் தான் விழிக்கிறார்கள்.....இதில் எங்கே வணங்குவது வழிபடுவது......இல்லையா ஐயா......
மிக்க நன்றிகள் ஐயா........[You must be registered and logged in to see this image.]
உண்மை ராமன், பழைய காலத்தில் உள்ள பல நல்ல விஷயத்தை இழந்து விட்டோம். ஆதலால் பல புதிய மனப் பிரச்சனையை உடல் பிரச்சனையை சுமக்கிறோம்.
இன்றைய போட்டி உலகில் பணத்தை நோக்கி தான் ஓடுகிறோம். இதையும் "இல்லாதவனை ஈன்ற தாயும் விரும்பாள்" என்று ஔவை அன்றே கூறிவிட்டார்.
நம்மால் முடிந்ததை செய்வோம், செய்ய இயலாவிட்டால் குறைந்த பட்சம் செய்யவேண்டும் என்றாவது விரும்புவோம். அதுவும் புண்ணியம்தான். அறம் செய்ய விரும்பு (செய்ய இயலாவிட்டாலும் atleast விரும்பவாவது செய் என்று தானே ஔவை கூறினாள். நாம் செய்ய மாட்டோம் என்று ஔவைக்கு அன்றே தெரிந்திருக்கிறது.
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
நம்மால் முடிந்ததை செய்வோம், செய்ய இயலாவிட்டால் குறைந்த பட்சம்
செய்யவேண்டும் என்றாவது விரும்புவோம். அதுவும் புண்ணியம்தான். அறம் செய்ய
விரும்பு (செய்ய இயலாவிட்டாலும் atleast விரும்பவாவது செய் என்று தானே ஔவை
கூறினாள். நாம் செய்ய மாட்டோம் என்று ஔவைக்கு அன்றே தெரிந்திருக்கிறது.
மிக உண்மை ஐயா......என் மனதில் என்றுமே அந்த எண்ணம் உண்டு .....நன்றிகள் ஐயா... [You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பாடல் 5 ;எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
பொருள் விளக்கம்:
பசு, பார்ப்பனன், நெருப்பு, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை ஒருவன் எச்சிலுடன் இருக்கும் போது தீண்டக்கூடாதவை ஆகும்.
பாடல் 6 எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.
பொருள் விளக்கம்:
நன்கு விஷயம் அறிந்தவர்கள் ஒரு நாளும் எச்சிலுடன் இருக்கும் போது புலையன், நிலா, சூரியன், நாய், எரி நட்சத்திரம் ஆகியவற்றை பார்க்க மாட்டார்கள்.
பாடல் 7 எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு
பொருள் விளக்கம்:
எச்சில்கள் நான்கு வகைப்படும், அவை மலம், ஜலம் என்று உடலில் இருந்து வரும் கழிவுகளால் ஏற்படுபவை இரண்டு, உடலுறவால், வாயால் ஏற்படுபவை இரண்டு ஆக மொத்தம் நான்கு ஆகும்.
பாடல் 8 எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார்.
பொருள் விளக்கம்:
நான்கு வகை எச்சிலில் ஒருவகை இருப்பினும் நன்கு விஷயம் தெரிந்த மேதைகள் எப்போதும் எச்சிலை விலக்காமல் புத்தகம் படிக்கமாட்டார், யாருடம் பேச மாட்டார், தூங்க மாட்டார்.
பாடல் 9 காலையில் கடவுளை வணங்குக!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.
பொருள் விளக்கம்:
காலையில் விழித்தவுடன், குச்சியால் பல் துலக்கி, கண் துடைத்து,குளித்து இறைவனை நின்று தொழுது எழுக, மாலையில் நின்று தொழுவது தவறு, அமர்ந்து இறைவனை வணங்குக.
பாடல் 10 : நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்
பொருள் விளக்கம்:
இறைவனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும், தூய்மை குன்றிய காலத்திலும், உண்ட உணவை வாந்தி எடுத்தாலும், முடி வெட்டிய பிறகும், உணவு உண்ணும் முன்னர், காலையில் எழுந்த பிறகும், உடலுறவுக்குப் பிறகும், கீழ் மக்களை தீண்டிய பிறகும், மல ஜலம் கழித்த பிறகும் ஆகிய பத்து விஷயங்களில் நாம் சந்தேகம் கொள்ளாமல் குளிக்க வேண்டும்.
தொடரும்.......

ஐயா இந்த ஐந்து பாடல்களிலேயே பல தெரியாத விஷயங்களை கற்றுக் கொண்டேன்.....அப்படியென்றால் ஆசாரக் கோவை முழுவதும் எத்தனை விஷயங்கள் உள்ளது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை........
மிக அருமை.........நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]
மிக அருமை.........நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
இத்தனை விஷயங்கள் உள்ளது ராமன், தொடர்ந்து வாசியுங்கள். என்னால் இயன்ற வரை முழுவதையும் பதிக்க முயல்கிறேன்.
1. ஆசார வித்து
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
4. முந்தையோர் கண்ட நெறி
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
7. எச்சில்கள்
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
9. காலையில் கடவுளை வணங்குக
10. நீராட வேண்டிய சமயங்கள்
11. பழைமையோர் கண்ட முறைமை
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
13. செய்யத் தகாதவை
14. நீராடும் முறை
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
16. யாவரும் கூறிய நெறி
17. நல்லறிவாளர் செயல்
18. உணவு உண்ணும் முறைமை
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
20. உண்ணும் விதம்
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
22. பிற திசையும் நல்ல
23. உண்ணக்கூடாத முறைகள்
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
27. உண்டபின் செய்ய வேண்டியவை
28. நீர் குடிக்கும் முறை
29. மாலையில் செய்யக் கூடியவை
30. உறங்கும் முறை
31. இடையில் செல்லாமை முதலியன
32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
35. வாய் அலம்பாத இடங்கள்
36. ஒழுக்க மற்றவை
37. நரகத்துக்குச் செலுத்துவன
38. எண்ணக்கூடாதவை
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
40. சான்றோர் இயல்பு
41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
45. பந்தலில் வைக்கத் தகாதவை
46. வீட்டைப் பேணும் முறைமை
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
50. கேள்வியுடையவர் செயல்
51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
52. தளராத உள்ளத்தவர் செயல்
53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
55. அறிஞர் விரும்பாத இடங்கள்
56. தவிர்வன சில
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
59. சில தீய ஒழுக்கங்கள்
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
63. கற்றவர் கண்ட நெறி
64, வாழக்கடவர் எனப்படுவர்
65. தனித்திருக்கக் கூடாதவர்
66. மன்னருடன் பழகும் முறை
67. குற்றம் ஆவன
68. நல்ல நெறி
69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
70. மன்னன் முன் செய்யத் தகாதவை
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
72. வணங்கக்கூடாத இடங்கள்
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
76. சொல்லும் முறைமை
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
81. ஆன்றோர் செய்யாதவை
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
84. பழகியவை என இகழத் தகாதவை
85. செல்வம் கெடும் வழி
86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
90. தலையில் சூடிய மோத்தல்
91. பழியாவன
92. அந்தணரின் சொல்லைக் கேட்க
93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
97, சான்றோர் முன் சொல்லும் முறை
98. புகக் கூடாத இடங்கள்
99. அறிவினர் செய்யாதவை
100. ஒழுக்கத்தினின்று விலகியவர்

இந்தக் கட்டுரை மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதிப்பீடுகள் : 1331
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
இந்தக் கட்டுரை மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 122
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|