புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
25 Posts - 69%
heezulia
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
361 Posts - 78%
heezulia
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
8 Posts - 2%
prajai
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொழுதைப் போக்காதே! Poll_c10பொழுதைப் போக்காதே! Poll_m10பொழுதைப் போக்காதே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைப் போக்காதே!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:33 pm

என் மனைவி பேப்பர் படிக்க ஆரம்பித்ததினால் ஏற்பட்ட சம்பவம் இது; - விபரீதம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். “ஏன்னா! இதிலே இன்றைக்கு ஒரு சமாசாரம் பார்த்தீர்களா? - 70 வயது வரைக்கும் ஒரு மனிதன் உயிருடனிருந்தால், அதில் 23 - வருஷம் தூக்கத்திலேயே போய் விடுகிறதாம்!” என்றாள். அரைத் தூக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். உடனே மனதிற்குள்ளேயே ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டேன். என் கணக்கைப் பற்றி அவ்வளவாக எனக்கு நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் கணக்கு, கணக்குத்தானே? வெற்றிலை கிழித்துப் போட்டுக் கொள்ள 1 வருஷம் சாப்பிடுவது, அருந்துவது இவற்றில் 5 வருஷம் க்ஷவரம் செய்து கொள்ள ஒண்ணரை வருஷம் குழந்தை அழாமல் பார்த்துக் கொள்வதில் 3 வருஷம் மனைவியைச் சமாதானம் செய்வதில் 7 வருஷம் இந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொண்ட வுடனே ராஜியைக் கூப்பிட்டனுப்பினேன். “நான் தாடி வளர்த்துக் கொள்வதாக உத்தேசம் செய்து விட்டேன். நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நான் தாடியுடனிருந்து 600 ரூபாய் கொண்டு வருவது நல்லதா? அல்லது தாடியில்லாமல் 60 ரூபாய் நஷ்டப்படுவது தேவலையா? சொல் சீக்கிரம்!” என்றேன். அவள் என்னைச் சற்று மிரள மிரள விழித்தாள். “உங்களுக்கென்ன பித்தம் ஜாஸ்தியாய்ப் போயிற்றா? நீங்கள் தாடி வளர்ப்பதற்கு யாராவது பணம் கொடுப்பார்களா? அதிசயமாகவல்லவா இருக்கிறது?” என்றாள்.

“அது கிடக்கட்டும். இன்னொரு கேள்வி, நான் உனக்கு 800 ரூபாய் கொடுக்கிறேன்.. எனக்காக வெற்றிலை போட்டுக் கொள்கிறாயா?… வெற்றிலை போட்டுக் கொள்ளக் கூட வேண்டாம்… வெற்றிலையைக் கிழித்துத் தயாராய் நான் நினைத்தபோது என் வாயில் போட வேண்டும். இதற்கு ரூ. 800… என்ன?” “ஐயையோ! ஜன்னி கண்டு விட்டதா உங்களுக்கு? நான் என்ன பண்ணுவேன்? டாக்டர் ராமனைக் கூப்பிடச் சொல்லட்டுமா?” என்று பதறிக் கொண்டு எழுந்தாள். நான் அவளைக் கையைப் பிடித்து உட்கார வைத்து, விஷயத்தை விஸ்தரித்தேன். “கேளு, ராஜி! எனக்கு உடம்பு ஒன்றும் இல்லை சௌக்கியமாகத்தான் இருக்கிறேன். நீ சொன்னாயே பேப்பரில் போட்டிருந்த சமாசாரம் ஒன்று, அதைப்பற்றி ஒரு யோசனை செய்தேன்…. வருஷத்திலே எனக்கு 600 ரூபாய் சம்பாத்யமல்லவா? நான் எழுபது வயது இருந்தால், அதற்குள் வெற்றிலை கிழிக்கும் பொழுதில் ரூ. 600 சம்பாதிக்கலாம். சாப்பிடும் நேரத்தில் ரூ. 300. க்ஷவரம் செய்து கொள்ளும் நேரத்தில் ரூ. 900, குழந்தை பார்த்துக் கொள்ளும் பொழுதில், ரூ. 1800 இப்படி. நான் என்னமோ சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்து விட முடியாது. ஆனால், இதர காரியங்களை எனக்காக வேறு யாரையாவது செய்யச் சொன்னால், எவ்வளவு பணம் மிச்சம் பிடிக்கலாம்?” ‘சாப்பிடுவதையும் தூங்குவதையும் தவிர - நீங்கள் வேறு என்ன காரியம் பெரிதாய்ச் செய்து விடுகிறீர்கள்?“ என்று கேட்டாள். அவள் குரலில் கொஞ்சம் எகத்தாளம் தொனித்தது. ”இப்போது போய் ஒரு ஜாபிதா போடப் போகிறேன். அப்புறம் உனக்குக் காண்பிக்கிறேன். உனக்கே ஆச்சர்யமாயிருக்கும்!“ என்றேன். ஆகவே, உடனே கணக்குப் போட ஆரம்பித்தேன். வீட்டுக் காரியத்துக்கென்று ராஜி என் பொழுதை வீணாக்குவதெல்லாம் நினைவுக்கு வந்தது. அதற்காகவென்று, குடும்ப ஸ்மரணையே இல்லாமல் சம்பாதிப்பதென்பது முடியாத காரியம்தான். இருந்தாலும் சிற்சில காரியங்களில் அவள் எனக்கு ஒத்தாசை செய்ய வேண்டியதும் அவசியம் என்பதை நியாயமாக அவளே ஒப்புக்கொள்ள வேண்டும். நான் போட்ட ஜாபிதாவை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 1. கடைக்கு முதல்தரம் போகும்போதே சொல்ல மறந்துபோய், இரண்டாந்தரம் போக வைத்ததில் செலவழிந்த நேரம் - தினப்படி இருபது நிமிஷம். எழுபது வருஷத்தில் - ரூ. 1000. 2. கூஜா மூடியைத் திறந்து தருவது, டம்ளருக்குள் டம்ளர் மாட்டிக் கொண்டிருப்பதைப் பிரித்துத் தருவது, அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை அவிழ்த்துத் தருதல், ஏணிமேல் ஏறும்போது அது சரிந்து விடாமல் பிடித்துக் கொள்ளுதல் இம்மாதிரி காரியங்கள் மாதத்தில் இரண்டு மணி, அதாவது 70 வருஷத்தில் - ரூ. 200. 3. குழாயடியில் ஸ்நானத்துக்கு ஜலம் வரவேண்டுமென்று காத்துக் கிடப்பது, 6 மணி, 70 வருஷம் ரூ. 2400. 4. அடுத்த வீட்டுக்காரர்கள் வீட்டில் வாங்கியிருக்கும் புடவை ரவிக்கைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுதல், தினம் ஒன்றரை மணி. 70 வருஷத்தில் - ரூ. 5000. இது மாதிரி இன்னும் எவ்வளவோ விஷயங்கள் சேகரித்துக் கொடுப்பேன். ஆனால் இவ்வளவே போதுமென்று தோன்றியதால், இந்த ஜாபிதாவை ராஜியிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். ”பார்த்தாயா? நாம் மட்டும் ஜாக்கிரதையாக இருந்தால் எவ்வளவு பணக்காரர்களாக ஆகியிருப்போம்? இதை நீ கவனித்துப்பார்த்தால், இனி மேலாவது இந்தச் சில்லறைத் தொந்தரவுகள் எனக்கு ஏற்படாமல் செய்வாய் என்று நினைக்கிறேன்“ என்றேன். ராஜி சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு ”இந்த அல்பத் தொகைக்காக வீண் யோசனை செய்ய வேண்டாம்“ என்றாள். ”என்ன! அல்பத் தொகையா? ஐந்நூறும், ஆயிரமும் ஐயாயிரமும் சில்லறைத் தொகையா?“ என்று ஆத்திரத்துடன் கேட்டேன். ”நான் இதைத் தனிப்படச் சின்னத் தொகை என்று சொல்லவில்லை. ஆனால் நாம் சம்பாதிக்கக்கூடிய பெரிய பெரிய தொகைகளுடன் ஒத்துப் பார்த்தால் இதெல்லாம் சின்னத் தொகைதான். வெகு அல்ப சமாசாரங்கள்.“ ”நீ சொல்வது புரியவில்லையே?“ ”இந்த ஜாபிதாவைப் பாருங்கள், புரியும்?“ என்று ஒரு நீண்ட கடுதாசியைக் காண்பித்தாள். ஆத்திரத்துடன் எழுந்து, பிடுங்கிப் பார்த்தேன். 1. தினம் காலையில் எட்டரை மணிக்கு எழுந்திருப்பதற்குப் பதிலாக ஆறரை மணிக்கு எழுந்திருப்பதால் 70 வருஷத்தில் - ரூ. 5600. 2. காப்பி ஹோட்டலில் மத்தியானமும் மாலையும் இரண்டு மணி அரட்டை அடிக்காமலிருப்பதனால் 70 வருஷத்தில் - ரூ. 5600. 3. கண்ட நாவல்களையும், பத்திரிகைகளையும் படிப்பதில் தினம் 1 மணி வீதம் 70 வருடம் - ரூ. 2800. 4. வாரத்தில் மூன்று நாள் தமிழ் சினிமா பார்த்தால், வாரத்தில் 2 மணி வீதம் 70 வருஷத்தில் - ரூ. 8400. 5. யோசனை செய்வதாகப் பாசாங்கு செய்து கொண்டு குறட்டை விடுவது 70 வருஷத்தில் - ரூ. 8400. ”இதையெல்லாம் கூட்டினால் 30000 ரூபாயாகிறதே! இன்னும்…" என்றாள். ஆனால் அன்று அதற்குமேல் வீண் பொழுது போக்கிக் கொண்டு சண்டை போட எங்களுக்கு நேரமில்லை. சினிமா பார்க்கப் போவதற்கு நேரமாகி விட்டது. அதற்கு வேண்டிய சில்லறையைத் தேடுவதில் நாங்கள் இருவரும் முனைந்துவிட்டோம்.

-நன்றி தேசிகன் வலைபக்கங்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:09 pm

என்னதிது ..படிக்க மண்டை காயுதே..கணக்கு வழக்கு ..யப்பா ..எனக்கும் சினிமா பார்க்க டைம் ஆகுது .. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக