புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
14 Posts - 70%
heezulia
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_m10அழகு-காதல்-கடவுள்-பணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு-காதல்-கடவுள்-பணம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Sep 25, 2009 4:50 pm

அழகு, காதல், கடவுள், பணம்.... இந்த நான்கையும் பற்றி நான் பேச வேண்டுமாம். என்ன கொடுமை ஐயா இது. இந்தத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்தது நையாண்டி நைனா, அதுவும் இனி என்னைக் கூப்பிடுவீங்க!!! என்று ஒரு மாதிரி எச்சரிக்கை விடுக்கும் தொனியில். எனக்கு என்ன நடுக்கம் என்றால் நைனா கவிதை எல்லாம் எழுதியிருந்தார். நைனாவுடைய முத்திரையே எதிர்க் கவிதை, ஆக இது எதிர்க்கவிதை எழுதும் தொடர்பதிவோ என்று உண்மையாகவே நடுங்கியது எனக்கு. (எனக்குக் கவிதையே வராது, இதில எங்க போய் எதிர்க் கவிதை எழுதிறதாம்????) நல்ல வேளை, இது கவிஞர்களுக்கான தொடர் பதிவு இல்லை. ஆக, இதோ அழகு, காதல், கடவுள், பணம் என் பார்வையில்.


அழகு
அழகை எப்படி வரையறுப்பது என்று தெரியவில்லை. பேராதனைப் பூங்காவில் பார்த்த பூக்களிலும் இருக்கிறது, ஊர்ப் பற்றைகளுக்குள் பார்த்த பூநாறிச் செடிகளிலும் இருக்கிறது. காற்றில் ஆடும் நெல்லிலும் இருக்கிறது, நெல்லைக் கொல்லும் புல்லிலும் இருக்கிறது. கன்றுக்கும் பால் கொடுக்கும் பசுவும் அழகாயிருக்கிறது, வாலைத் தூக்கிக் கொண்டு ஓடும் நாம்பனும் அழகாயிருக்கிறது. ஐஸ்வர்யா ராயிடம் கொட்டிக் கிடக்கிற அதே அழகு, கோயில் திருவிழாக்களில் வலம் வரும் எங்களூர்ப் பெண்களிடம் ஒழிந்து இருக்கிறது. இப்படியாக அழகை எங்கேயும் எப்போதும் காணலாம், மனம் ரசிப்புத் தன்மையால் மட்டும் நிரம்பி இருக்கிறபோது. அதாவது அழகு என்பது பார்ப்பவரின் மனநிலையில், ரசிப்புத் தன்மையில் தங்கியிருக்கிறது.

அழகு-காதல்-கடவுள்-பணம் Smiling-irfan-on-bedஎன்னை மிகவும் கவரும் அழகு ஒன்றிருக்கிறது. குழந்தைகள் பிறந்து கொஞ்ச நாட்களின் பின்னர் முகங்களையும், உலகத்தையும் வேடிக்கை பார்க்கும் ஒரு பருவம் இருக்கிறது. அம்மா, அப்பா அல்லது ஆயாவின் தோளில் இருந்தபடி தோளுக்கு மேலால் பின்னே இருப்பவர்களைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும் குழந்தைகளை சின்னச் சின்னச் சேட்டைகள் செய்து கவரலாம், மிக இலகுவாக. அந்தச் சேட்டைகளைப் பார்த்துவிட்டு முகம் மலர்ந்து அந்தக் குழந்தை ஒரு சிரிப்புச் சிரிக்கும் பாருங்கள், உலகில் மிச்ச எல்லாம் அசிங்கமாய்த் தோன்றும் கணம் அது. முயன்று பாருங்கள். (குழந்தைக்கு வேடிக்கை காட்ட சேட்டை செய்கிறேன் பேர்வழி என்று அதன் அம்மாவிடம் சேட்டை செய்து அடி வாங்கினால் அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்). குழந்தைகளுக்கு அடுத்த படியாக நான் ரசிக்கும் அழகு.....பெண்கள்.


காதல்
நேரடி அனுபவமில்லை எனக்கு. ஆனால் பல காதல்களைப் பார்த்திருக்கிறேன். சொந்தங்களோடு சண்டை போடப் பயந்தோ என்னவோ காதலிக்க ஒருவகைப் பயம் இருக்கிறது என்னிடம். அதனால் நான் ‘மாலையிட்டுக் காதலிக்கும்' கட்சி. இன்றைய உலகில் மதிமயங்கிச் சில காதலர்கள் செய்யும் கீழத்தரமான செயல்கள் காதல் மீதான ஒரு பிழையான பார்வையை உண்டாக்கிவிட்டது. இங்கே நான் திருமணத்துக்கு முன்னான கூடலைப் பற்றித்தான் சொல்கிறேன். அந்தக் கூடல் சரி பிழை என்கிற ஆய்வுகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை, அது சுயமாக முடிவெடுக்கக் கூடிய இருவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் அதை இணையத்தில் கூவிக் கூவி விற்கும் வக்கிரம் எனக்குப் பிடிக்கவில்லை.

அழகு-காதல்-கடவுள்-பணம் Tl_vintage_couples_love_card_10காதல் சம்பந்தமான அடுத்த ஏமாற்று வேலை, இந்த so called தெய்வீகக் காதல். உடல் ரீதியான சின்னச் சின்ன இச்சைகள் இல்லாமல் காதல் இல்லை. அந்த இச்சைகளுக்கு இடம் கொடுக்காத காதல் நிலைத்து நிற்பதும் இல்லை. காமம் கலக்காமல் காதல் என்கிற ஒரு விஷயமே உலகத்தில் இல்லை என்பது காதல் பற்றிய என்னுடைய பார்வை. அதற்காக வேலு பிரபாகரன் போல, காதல் என்று ஒன்று இல்லை எல்லாம் காமம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மனிதனுடைய உளவியல்+உடலியல் சார்ந்த ஒரு உணர்ச்சிதான் காதல் என்பது என்னுடைய கருத்து.


கடவுள்
கடவுள் பற்றிய என்னுடைய கருத்தில் பரிணாம வளர்ச்சி இருக்கிறது. கடவுள்தான் எல்லாம் என்று போதிக்கப்பட்டு, கடவுள் மட்டும் எல்லாம் இல்லை என்கிற ரீதியான வளர்ச்சி. எங்களை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அதற்குரிய அடையாளங்களை வெறுக்கிறேன். புதிது புதிதாக வரும் பகவான்களை வெறுக்கிறேன். பூஜை, புனஸ்காரம் என்கிற பெயரில் நடக்கக்கூடிய படம் காட்டுதல் கோபமடைய வைக்கிறது. கோவிலைப் பெருப்பிப்பவர்களின் மனங்கள் இன்றைக்கும் சிறுத்துப் போய்த்தான் இருக்கின்றன. ஒரு சிலரின் உயர்வுக்காக என்றோ சிலபேர் ஆக்கி வைத்த பகுத்தறிவுக்குப் புறம்பான சில சட்டதிட்டங்களுக்கு அஸ்திவாரமாக இருப்பது கடவுள் என்ற அந்த ஒன்றுதான் என்பதாலேயே எந்தக் கடவுளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

அழகு-காதல்-கடவுள்-பணம் S4npd5சமீபத்திய எரிச்சல்
அக்காவுக்கு ஒரு குடும்ப நண்பரிடமிருந்து ஒரு மந்திரம் மின்னஞ்சலில் வந்தது. கடவுள் பற்றிய என்னுடைய எதிர்மறைக் கருத்துக்களைப் போக்க முயல்வதாக நினைத்துக் கொண்டு, ‘ஏதாவது ஒரு விசயத்தை நினைச்சு இந்த மந்திரத்தை ஒரு மாதம் சொல்லு. நல்லது நடந்தால் தொடர்ந்து மந்திரம் சொல்லு, இல்லாட்டா உன் வழியிலையே போ' என்கிறார்கள். இதென்ன விளையாட்டு? உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் உச்சாடனம் செய்து நன்மை அடையுங்கள். எனக்கு நம்பிக்கை இல்லை, தன்னம்பிக்கை இருக்கிறது நான் என் வழியில் போகிறேன். இந்தப் பரிசோதனை முயற்சியெல்லாம் வேண்டாம். Be black or white, இந்தக் கடவுள் விசயத்தில் மட்டும்.

நீண்டகால எரிச்சல்
கூற்று-1: கடவுள் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்
கூற்று-2: உன்னுடைய ஒவ்வொரு செயற்பாடும் கடவுளாலேயே தீர்மானிக்கப் படுகிறது.
அபத்தமாக இல்லையா. என்னுடைய எல்லாச் செயலும் கடவுளால்தான் தீர்மானிக்கப் படுகிறது என்றால், மாமிசம் சாப்பிடும் ஆசை உண்டாதல் என்ற செயலும் அவரால்தானே தீர்மானிக்கப்பட்டிடுக்க வேண்டும்? ஆகவே முதல் கூற்று பொய்யல்லவா?
இல்லை மாமிசம் சாப்பிடக் கூடாது என்பதுதான் கடவுளின் அறிவுறுத்தல் என்றால், மாமிசம் சாப்பிடும் என்னுடைய ஆசையைக் கடவுள் தீர்மானிக்கவில்லை. ஆக கடவுளே எல்லாமுமாக இருப்பதில்லை. அப்படித்தானே?
இப்படியாக கடவுள் தொடர்பில் வைக்கப்படும் முன்னுக்கு முரணான கூற்றுகள்.


பணம்
'பணம் என்னடா பணம், குணம் தானடா குணம்' என்று யாராவது சொல்கிறார்களா? ஓங்கி அறையுங்கள். இன்றைக்கு அந்தக் குணத்தைத் தீர்மானிப்பதும் பணம்தான். பணம் சம்பாதிப்பது எப்படி என்று அறிவுரை சொல்லும் ஆலோசகர்கள் பணம் அறவிடுவது தொழில். பணத்தின் மீதான பற்றை அறுத்து முக்தி அடைவது எப்படி என்று பணம் வாங்கிக் கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுபவர்களை என்னென்று சொல்வது. பணத்தால் வாங்க முடியாத பலதும் இருந்தாலும், பணத்தால் வாங்கக் கூடிய சிலது இல்லாவிட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். இன்றைய உலகின் முதலாளி, நாளைய உலகின் சர்வாதிகாரி, பணம், பணம், பணம் மட்டுமே என்பது என் கருத்து.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 4:58 pm

இப்போ இங்கு யாரை ஓங்கி அறைய சொல்ல்கிறீர்கள் ..

இன்றைய உலகின் முதலாளி, நாளைய உலகின் சர்வாதிகாரி, பணம், பணம், பணம் மட்டுமே என்பது என் கருத்து. அழகு-காதல்-கடவுள்-பணம் 56667 அழகு-காதல்-கடவுள்-பணம் 56667



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக