புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
170 Posts - 80%
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Pampu
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
335 Posts - 79%
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரழகி கிளியோபாட்ரா !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 11:57 am

First topic message reminder :

இன்று நெல்லை விவேகநந்தா அவர்கள் எழுதிய "உலக பேரழகி கிளியோபாட்ராவின்" வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 Cleopatradrawing

அழகு என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருபவள் எகிப்து பேரரசி
கிளியோபாட்ரா. உலகப் பேரழகி பட்டத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துக்
கொண்டிருப்பவள் கிளியோபாட்ராதான். அவளுடைய அழகால் கவிழ்ந்த அரசுகளும்
உண்டு. அந்த ஆழகை ஆராதித்த அரசுகளும் உண்டு. அந்த அழகின் வசீகரத்தால்
சிதறுண்டு போனது ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையும்தான்..!

கி.மு.51-ம் ஆண்டில் ஒரு நாள்.

வடக்கு எகிப்தின் கடற்கரையில்
அமைந்திருந்த அலெக்சாண்டிரியா நகர மக்கள் அனைவரும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.

நாட்டை ஆளும்
பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.
அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அங்கே
கூடி இருந்தனர்.

அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான 18 வயது
இளம்பெண்ணையும், 12 வயதான ஒரு பையனையும் மொய்த்துக் கொண்டிருந்தது. இவர்கள்
இருவரும் அக்காள், தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே இந்த அரண்மனை
விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

என்னது...? அக்காள்- தம்பிக்குத் திருமணமா என்று அதிர்ச்சியடைகிறீர்களா?

கிறிஸ்து
பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் இப்படி
குடும்பத்துக்குள் மணம் செய்யும் சம்பிரதாயம் இருந்து வந்திருக்கிறது..

ஏன்?

அந்தக் காலத்தில் அரச பரம்பரையில், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.

அரசர்
இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும்
கொல்லப்பட்டுவிட்டால் (இது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும்
கொலையாகவும் இருக்கலாம்) வாரிசை நியமிப்பார்கள். அந்த வாரிசு வயதுக்கு வந்த
ஆணாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்?

அவனுக்கு
மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து,
அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம்
கதாநாயகி கிளியோபாட்ரா!

திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி
மிடுக்கோடு காட்சியளிக்க மணமகனான அவளது தம்பிதான், விரல் சூப்பாத குறையாக
நின்று கொண்டிருந்தான்.

பளபளக்கும் ஆடையில் வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் வர்ணித்துதான் ஆக வேண்டும்.

வயதுக்கு
வந்த 18 வயது பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல்
நதியாக நீளமாக நெளிந்து வளர்ந்து படர்ந்திருந்தது.தலையை அலங்கரித்த,
பளிச்சிடும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகில்
தோற்றுப்போய் ஒதுங்கி இருந்தது. கறுத்துச் செழித்து வளர்ந்திருந்த அவளது
தலை முடி, மெல்லிய இடுப்பு வரையிலும் உரசிக் கொண்டிருந்தது.

உருண்டையாகவும்
இல்லாமல், சப்பையாகவும் இல்லாமல், இவை இரண்டும் இடையில் அமைந்த அவளது
பிரகாசமான முகம், அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டியது.
மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆபரணங்கள், அவளை
குட்டித் தேவதைபோல் அலங்கரித்திருந்தன. அவளது கண்களில் மிரட்சிக்கு பதில்
தைரியம்... தைரியம்... தைரியம் மாத்திரமே!

இந்த உலகமே ஒரு நாள் எனது
கடைக்கண் பார்வையில் சொக்கி என் காலடியில் விழத்தான் போகிறது..." என்று
சொல்வதுபோல் திமிராக காட்சி தந்து கொண்டிருந்தன அவளது கண்கள்.

ஆனாலும்,
அந்த கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் நடந்து முடிந்தது திருமணம்.

யார் இந்த கிளியோபாட்ரா?

இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம்
எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாகப்
பிறந்தவள்தான் நம் கதாநாயகி கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு, அவளது
அரசவம்சத்தில் ஏற்கெனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து
முடித்துவிட்டதால், நம் கதாநாயகி 7-ம் கிளியோபாட்ரா என்று
அழைக்கப்படுகிறாள்.

தந்தை ஓ.கே. தாய் யார்?

இந்த கேள்விக்குத்தான் இன்றுவரையிலும் உறுதியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.

கிளியோபாட்ரா
எப்படிப்பட்டவள், அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன என்பவை பற்றியெல்லாம்
புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள்
காலப்போக்கில் மறைந்துவிட்டன.

அதேநேரம், அவள் வாழ்ந்த 200
ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப்
பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச் சென்ற
குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான்
இன்றும் நமக்கு அவளைப் பற்றிய ஆதாரங்களாக உள்ளன.

அவள் சிவந்த நிற
மேனி கொண்டவள் அல்ல; ஆனால், அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த
மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்,
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்
இவர்.

கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக
அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட
பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து
இருந்தது.

உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரப் புறப்பட்டு,
வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரன், மாசிடோனிய பேரரசன் அலெக்ஸாண்டர் எகிப்து
மாகாணத்தின் மீதும் படையெடுத்து வெற்றிகொண்டான்.

எகிப்து வெற்றியைத்
தொடர்ந்து, நைல் நதி வழியாக பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட
அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை
நியமித்தார். அவர்கள் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக்
கொண்டனர்.

அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில்
ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த படைத்தளபதி
மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட. மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச்
சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர்
அர்சினி.

ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின்
கவர்னராக மட்டுமே இருந்து வந்த டாலமி, கி.மு. 305 முதல் அலெக்ஸாண்டருக்குப்
பிறகு மன்னராக நாட்டை ஆளத் தொடங்கினார். அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல
வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம்
ஆரம்பமானது.

சரி.. கிளியோபாட்ரா பேரழகி ஆனது எப்படி?

கி.மு. 51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன்
மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி
13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான்.

அரியணையில் ஏறிய கிளியோபாட்ரா,
ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள்.
பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் கொட்டிக் கிடந்தது. அதுவரை நைல் நதியை
அழகுக்கு அழகாய்ப் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அதற்கும் ஒரு படி மேலாக
கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினர்.

தனது அழகைக் கண்டு தானே வியந்து
போனாள் கிளியோபாட்ரா. அந்த பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னைப் பலவாறு
அலங்கரித்துக் கொண்டாள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள்.
அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக
அலங்கரித்தன.

அவளது மேனியில் நறுமணப் பொருட்களின் வாசனை எப்போதும்
இருக்கும். அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை
அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு, மேலும் அழகு சேர்த்தது. கழுத்தில்
இருந்து மூக்குவரை மறைக்கும் முகவலைகள் அவளது அழகை மேலும் அதிகரித்தது.

உதட்டுச்சாயம் இல்லாமலே லேசாக எப்போதும்
சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை
அம்புகளும் அவளுக்கே உரிய அடையாளமாகத் திகழ்ந்தன.

அவள் எங்கு
புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும்
பின்தொடர்ந்தனர். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த
கிளியோபாட்ரா சாட்சாத் தேவதை போலவே தெரிந்தாள். இவ்வாறாக, எகிப்து மக்களின்
தெய்வமாகவும் தேவதையாகவுமே தன்னைக் காட்டிக்கொண்டாள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா,
கிரேக்க காதல் கடவுளான க்யூபிட் போலவே இருந்தாள். சில நேரங்களில்
எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய
காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும்
தெரிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகும் மேலும் மேலும்
அதிகரித்துக்கொண்டே போனது.

இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில்
ஜொலிக்க அவள் தினமும் குளித்தவிதம்தான் காரணம் என்று இன்றுவரையில்
கூறுவோர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப்
பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு
ஆதாரங்கள் இல்லை.

ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்
உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாக
திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு கழுதைகளே முக்கிய காரணமாகத்
திகழ்ந்தன.

இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல்
மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால
எகிப்தியர் நம்பினர். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது
கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையை செய்து வைக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இருந்தது. மறு ஜென்மத்தில் இந்தக் கழுதை இப்போது
இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக
இருந்தது.

இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக
இருந்த கழுதை, கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில்
வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. தனது அழகுக்காக
குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்ற கருத்தும் உள்ளது.

அழகு
மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது
பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவித கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது. கற்பனை
வளமும் அவளிடம் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது,
துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாகவும்
ஆக்ரோஷமாகவும் வந்து விழுந்தன.

தாய்மொழியுடன் மேலும் சில
மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள் வரை கிளியோபாட்ராவுக்கு பேசத்
தெரியும் என்பது பலரது கருத்து. எகிப்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு
எகிப்திய மொழி தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதனைக் கற்று
வைத்திருந்தாள்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.

இப்படி பல்வகை திறமைகளுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்ட கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து வந்தது.




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:48 pm

அருண் wrote:முழு நீள! கிளியோ பெட்ரா! பகிர்விக்கு பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 678642 ரேவதி!
படிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கி விட்டது..! பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 755837
இன்னும் கதை முடியல பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 2:04 pm

ரேவதி wrote:
இன்னும் கதை முடியல பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196

யம்மாடி..! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:07 pm

அருண் wrote:
ரேவதி wrote:
இன்னும் கதை முடியல பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 677196

யம்மாடி..! பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 230655 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 230655
அதுக்குள்ள ஓடின எப்படி நான் இந்த கதையை படித்து முடிக்கவே 7 மாசம் ஆயிற்று இது தொடர்கதை அடுத்த பகுதி எப்ப வரும்னு ரொம்ப ஆவலா படிச்சேன்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 2:14 pm

கொஞ்சம் கொஞ்சமா நேரம் இருக்கும்போது படிக்கிறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:17 pm

dsudhanandan wrote:கொஞ்சம் கொஞ்சமா நேரம் இருக்கும்போது படிக்கிறேன்
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 678642 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 154550 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 2 678642



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 2:59 pm

அறிய தகவலகள் நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 3:00 pm

ரேவதி wrote:
அதுக்குள்ள ஓடின எப்படி நான் இந்த கதையை படித்து முடிக்கவே 7 மாசம் ஆயிற்று இது தொடர்கதை அடுத்த பகுதி எப்ப வரும்னு ரொம்ப ஆவலா படிச்சேன்

அப்படியா சரி போடுங்க ஒரு கை பார்த்துடுவோம்..! மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:32 pm

என்று நம்பினான் பாம்பே. தனக்கு எதிராக சீஸர் பெரும்படையுடன் போரிட வந்தபோதுதான் அவன் அதை உண்மை என்று நம்பினான்.

சீஸரின்
பெரும்படைக்கு முன்னால் பாம்பேவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தோல்வியைத்தான் தழுவ முடிந்தது. ரோமாபுரியின் அதிபதியாக தன்னை
அறிவித்துக்கொண்ட சீஸர், பாம்பேவைக் கொல்லவும் உத்தரவிட்டார். உயிருக்கு
பயந்த பாம்பே அடைக்கலம் கேட்டு பல நாடுகளுக்கு ஓடினான். சீஸருக்கு பயந்து
யாருமே அடைக்கலம் தர முன்வரவில்லை.
அந்தநேரத்தில்தான் எகிப்தில்
இருந்து, கிளியோபாட்ராவின் மாஜி கணவனாகிய சிறுவன் 13ஆம் டாலமியின்
ஆதரவாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதுபோல் நீட்டினர். அதை நம்பி அங்கு வந்தான்
பாம்பே. ஆனால், அவனைக் கொன்று, அவனது தலையைத் துண்டித்து சீஸருக்கே பரிசாக
கொடுத்துவிட்டனர்.

தனக்குக் குருவாக இருந்த பாம்பேவை சீஸர்
விரட்டியது பற்றியும், பாம்பே எகிப்தில் கொலை செய்யப்பட்டது பற்றியும்
செனட் சபையில் பேச்சுக்கள் எழ... அது எதிர்பாராமல் நடந்த முடிவு என்று
சமாளித்த சீஸர், அவர்களை சரிக்கட்டும்விதமாக செனட் சபையிலேயே பாம்பேவுக்கு
சிலையும் வைத்தார்.

அந்த சிலையின் காலடியில்தான் இப்போது சீஸர் ரத்த
வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார். செனட் சபையில் சீஸர் சதி செய்து கொலை
செய்யப்பட்டது அவரது ரோமானியச் சக்கரவர்த்தி கனவை மட்டும் சிதைக்கவில்லை.
நம் கதாநாயகி பேரழகி கிளியோபாட்ராவின் கனவையும் சேர்த்தே சிதைத்துவிட்டது.
ஜூலியஸ் சீஸர், செனட் சபையில் கொலை செய்யப்பட்டதை அறிந்த கிளியோபாட்ரா தரையில் விழுந்த கண்ணாடி போல மனம் நொறுங்கிப் போனாள்.
“சீஸர்...
என்னருமை காதலனாக வலம் வந்தவரே... உங்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட
வேண்டுமா? இந்த உலகத்தையே உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத்
துடித்தீரே... உங்கள் ஆசைகள் எல்லாம் கானல் நீராகிவிட்டதே... உங்களை
மாத்திரமே நம்பி எகிப்தை விட்டு இந்த ரோமாபுரிக்கு வந்த என் கதி என்ன
ஆகும்? இனி நான் என்ன செய்வேன்..?” என்று பலவாறு புலம்பியழுதாள் அவள்.

அவளைச்
சந்திக்க வந்தான் ஜூலியஸ் சீஸரின் வலது கரமாக செயல்பட்ட ஆருயிர் நண்பன்
ஆண்டனி. கிளியோபாட்ராவின் நிலையை புரிந்து கொண்டவன், தன்னால் முடிந்த
ஆறுதலை அவளுக்குக் கூறினான்.

“எகிப்து அரசியாரே! நம் சீஸருக்கு
இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. இந்த உலகம் உயிருடன்
இருக்கும்வரை நம் சீஸர் மக்கள் மனங்களில் இருந்து சாகமாட்டார். இப்போது
அவரது உடல்தான் மரித்துப்போய் இருக்கிறது. அவர் கண்ட கனவு நிச்சயம்
நனவாகும். இதே ரோமாபுரியில் அவர் ஆசைப்பட்டபடியே மன்னராட்சி மலரும்.
ஆனால்... “

“என்ன ஆனால்... தளபதியாரே! நீங்கள் சொல்ல வந்ததை
சொல்லிவிடுங்கள். சீஸரை நினைத்து நினைத்து ஏங்கி வாடிப்போன என் முகம் மலர
நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்“.

“மதிப்பிற்குரிய அரசியாரே!
எக்காரணம் கொண்டும் தாங்கள் கலங்க வேண்டாம். சீஸருக்குப் பிறகு தங்களுடைய
நிலை என்னவாகும் என்றுதானே பயப்படுகிறீர்கள்? “

“ஆமாம்... “

“அந்த பயம் இனி உங்களுக்கு வேண்டாம். சீஸர் இருந்த இடத்தில் நான் இருந்து கொண்டு உங்களது லட்சியங்கள் நிறைவேற துணை நிற்கிறேன்“.

“அது உங்களால் முடியுமா ஆண்டனி? “

“ஏன் முடியாது? ஒரு மாவீரனால் போன உயிரை மீட்டு வர முடியாதே தவிர, வேறு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்“.

“சீஸர்,
என்னை தனது மனைவியாக்குவார்; எங்கள் அருமை மகன் டாலமி சீஸரை தனது வாரிசாக
அறிவிப்பார் என்றெல்லாம் நான் கனவு கண்டேன். அந்த கனவு எல்லாம் தகர்ந்து
போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்... “ என்ற கிளியோபாட்ராவின் அழகான வேல்
விழிகளில் இருந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தான் ஆண்டனி.

அப்போது, ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தவனாய், தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டு தவிப்போடு அதைச் சொல்லத் தொடங்கினான் அவன்.
“எகிப்து
அரசியாரே! சீஸரை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டும் நான்
இங்கே வரவில்லை. ரோமாபுரி அரசியல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றையும்
சொல்லவே வந்தேன். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் அதை தங்களிடம்
சொல்லிவிடலாமா வேண்டாமா என்று தவிக்கிறேன்... “

“ஏன் தயக்கம் தளபதியாரே! சீஸர் இறந்த செய்தியையே தாங்கிக்கொண்டு நிற்கும் என்னை, நீங்கள் சொல்லும் தகவல் ஒன்றும் செய்துவிடாது“.

“நான்
சொல்லும் தகவல் சீஸரின் வாரிசு பற்றியது. அது, தங்களது ஆசைக்கு சாதகமாக
இல்லையே என்பதால்தான் அதுபற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறேன்“.

“என்னை
மேலும் மேலும் குழப்ப வேண்டாம் ஆண்டனி. சட்டென்று உண்மையைச் சொல்லுங்கள்.
சீஸருக்கும், எனக்கும் பிறந்த டாலமி சீஸரைத்தானே நம் சீஸர் தனது வாரிசாக
அறிவித்து இருக்கிறார்? “

“இல்லை கிளியோபாட்ரா. தனது வளர்ப்பு மகனான
கயஸ் ஜூலியஸ் சீஸர் ஆ’டோவியன்ஸ் என்பவரையே தனது அரசியல் வாரிசாக அறிவித்து
உயில் எழுதி இருக்கிறார் ஜூலியஸ் சீஸர். தங்கள் மகன் பற்றியும், தங்களைப்
பற்றியும் அந்த உயிலில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை... “ என்று ஆண்டனி
சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்து அப்படியே உட்கார்ந்துவிட்டாள்
கிளியோபாட்ரா.

ஏற்கெனவே அழுது அழுது சிவந்து போன கன்னங்களும்,
கண்ணீர் வற்றிப்போன கண்களும் அவளை பரிதாபமாக காட்சியளிக்க வைத்தன. அவளுக்கு
ஆறுதல் பல கூறிய ஆண்டனி, பாதுகாப்பு காரணங்களுக்காக கிளியோபாட்ரா டைபர்
நதிக்கரை அரண்மனையைத் தவிர்த்து வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று
கேட்டுக்கொண்டுவிட்டு திரும்பினான்.

இதற்கிடையில், ரோமாபுரி அதிபதி
ஜூலியஸ் சீஸர் கொலை செய்யப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் கலகங்கள்
ஏற்பட்டன. அடுத்து ரோமாபுரியைக் கைப்பற்றப்போவது யார் என்ற குழப்பமும்
அதிகரித்தது. இதுதான் தக்க சமயம் என்று முடிவெடுத்த ஆண்டனி, ரோமாபுரியின்
ஆட்சியைக் கைப்பற்ற காயை மெல்ல நகர்த்த ஆரம்பித்தான்.

அதேநேரம்
சீஸரைக் கொலை செய்த புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள், தாங்கள்
சீஸரைக் கொலை செய்தது நாட்டின் நலனுக்குத்தான் என்று மேடைகளில் ஏறி முழங்க
ஆரம்பித்துவிட்டனர்.

மக்கள் திரண்டிருந்த ஒரு மேடையில் புரூட்டஸ் கர்ஜித்ததை ஆவேசமாகவே எழுதுகிறார் ஷேக்ஸ்பியர்.
“சீஸர்
கொலை செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி நான் கூறும் காரணங்களை அமைதியாகக்
கேளுங்கள். உங்கள் அறிவால் என்னை ஆராய்ந்து தீர்ப்புக் கூறுங்கள். உங்கள்
அறிவை விழிப்புறச் செய்து நல்ல தீர்ப்பு சொல்லுங்கள். இந்த கூட்டத்தில்
சீஸரின் இனிய நண்பர் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு நான் ஒன்றை
சொல்லிக்கொள்கிறேன். இந்த புரூட்டசிடம் சீஸர் காட்டிய அன்புக்கு அது
ஒன்றும் குறைவானதில்லை. அப்படியென்றால், நான் ஏன் சீஸருக்கு எதிராக
கிளர்த்தெழுந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான எனது பதில் இதுதான்.
...
நான் சீஸரை குறைவாக நேசித்தேன் என்று அதற்கு பொருள் இல்லை. நான்
சீஸருக்கும் மேலாக இந்த ரோமை நேசித்தேன். சீஸர் உயிரோடு இருந்து, நீங்கள்
எல்லாம் அடிமைகளாக இருப்பதை விரும்புவீர்களா? அல்லது சீஸர் இறந்து, நீங்கள்
எல்லாம் எல்லாவித உரிமைகளோடும் வாழ்வதை விரும்புவீர்களா? உரிமைகளோடு
வாழ்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள்? அதைத்தான், உங்களுக்காக நான்
செய்தேன்.
... சீஸர் என்னை நேசித்ததால் அவருக்காக நான் அழுகிறேன். அவர்
புகழ்பெற்று வாழ்ந்ததற்காக நான் மகிழ்கிறேன். அவரது வீரத்துக்காக அவரை நான்
மதிக்கிறேன். அதேநேரம், அவரது பேராசைதான் அவரது உயிரை இழக்கும்படியாக
ஆகிவிட்டது.
... இந்த கூட்டத்திலே அடிமை மனிதர்கள் யாராவது இருந்தால்,
நான் சீஸரைக் கொன்றது தவறு என்று வாதிடலாம். அப்படிப்பட்டவர்கள் யாரேனும்
இங்கு உண்டா? அப்படியொருவர் இருந்தால் தாராளமாக எழுந்து என்னிடம் கேள்விகள்
கேட்கலாம். அப்படியொரு அடிமை மனிதன் இங்கே இருந்தால், அவன் பார்வையில்
நான் குற்றவாளிதான். இந்த ரோமாபுரி மீது அன்பு பாராட்டாத எவன் ஒருவனாவது
இங்கு உண்டா? அப்படியொருவன் இருந்தால், அவன் பார்வையில் நான்
குற்றவாளிதான். பிறந்த நாட்டை நேசிக்காத எவரேனும் இங்கே உண்டா? அப்படி
இருந்தால், அவர்கள் பார்வையில் நான் குற்றவாளிதான்.
... நீங்கள் எல்லாம்
மவுனமாக இருப்பதை, அறிவைத் திறந்து சிந்திப்பதைப் பார்த்தால், நான்
யாருக்கும் கேடு விளைவிக்கவில்லை என்பது நன்றாக புரிகிறது. என்னுடைய நண்பனை
இந்த நாட்டின் நன்மைக்காக கொன்று இருக்கிறோம். அந்த வாள் என்னிடம்தான்
இருக்கிறது. இந்த நாட்டுக்கு எனது சாவும் மகிழ்ச்சியைத் தரும் என்றால்,
அப்போதும் அந்த வாளை பயன்படுத்த நான் சற்றும் தயங்க மாட்டேன்...” என்று
உணர்ச்சிப்பிழம்பாக புரூட்டசின் உரையைக் கொண்டு செல்கிறார் ஷேக்ஸ்பியர்.

இவ்வாறு
புரூட்டஸ் தரப்பினர், சீஸரைத் தாங்கள் கொலை செய்தது சரிதான், காலத்தின்
கட்டாயம் என்று ஒருபுறம் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்க... ஆண்டனியோ
ரோமானிய அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கும் முயற்சிகளில் இறங்கினான்.
அவனும் மேடை ஏறி, சீஸரின் கொலைக்கு நியாயம் கேட்டான். ஒரு மேடையில் அவன்
முழங்கியபோது ரோம் மக்கள் கொந்தளித்தே விட்டார்கள். அவனது பேச்சு இங்கே...
“சீஸர்
பேராசைக்காரன் என்று புரூட்டஸ் கூறுகிறார். அவர் சொல்வது உண்மை என்றால்,
லூபர்கா திருவிழாவில் நான் வழங்கிய மணிமுடியை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தது
ஏன்? சீஸர் பயன்படுத்திய பெட்டியில் இருந்து ஒரு பத்திரத்தை இன்றுதான் நான்
கண்டறிந்தேன். அது அவரது உயில். அதை இப்போது நான் உங்கள் முன்பு
படித்தால், நீங்கள் செத்துக்கிடக்கும் சீஸரின் உடலில் ஏற்பட்ட காயங்கள்
மீது முத்தமிடுவீர்கள்.
... ஆனாலும், அந்த உயில் பற்றி நான் உடனே
சொல்வதாக இல்லை. ஒருவேளை அதுபற்றி நான் இப்போது குறிப்பிட்டால் நீங்கள்
எல்லாம் கொதித்தெழுந்து விடுவீர்கள். சீஸரைக் கொலை செய்தவர்களுக்கு
தீங்கிழைத்து விடுவீர்களோ என்றுகூட அஞ்சுகிறேன்.
... சீஸரின்
வீழ்ச்சியால் நானும், நீங்களும் எல்லோருமே வீழ்ந்துவிட்டோம். சீஸர்
விஷயத்தில் ரத்தவெறி பிடித்த துரோகமே நம்மை வென்றது. உங்கள் கண்களில்
இருந்து சிந்தும் கண்ணீரைப் பார்த்தால், இரக்கத்தின் வலிமையை இப்போது
நீங்கள் உணர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் சிந்தும் கண்ணீர்த்
துளிகள் ஒவ்வொன்றும் புனிதமானவை.
... இந்த பேச்சின் மூலம் நான் உங்களைப்
புரட்சிக்கு தூண்டுவதாக நினைக்க வேண்டாம். இப்போது நான் சீஸர் எழுதி
வைத்துள்ள உயிலை வாசிக்கிறேன். ரோம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்
தனித்தனியாக எழுபத்தைந்து பவுன் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,
டைபர் நதிக்கரையில் உள்ள மக்கள் உலவும் இடங்கள், மரங்கள் நிறைந்த தோப்புகள்
ஆகியவற்றை உங்களுக்கே உரிமையாக்கி இருக்கிறார். அந்த இடங்கள்
உங்களுக்கும், உங்களுக்குப் பிறகு உங்களது வாரிசுகளுக்கும் சொந்தம் என்றும்
அந்த உயிலில் நமது சீஸர் குறிப்பிட்டுள்ளார்.

... ஆனால், இதெல்லாம்
நடைபெறாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். ஆம்... நம் சீஸர்தான் இப்போது
நம்மோடு இல்லையே... இப்படிப்பட்ட ஒரு சீஸர் இனி எப்போது வருவார்?” என்று
புரட்சியை உசுப்பேற்றிவிட்ட ஆண்டனி, தனது கண்களில் இருந்து கண்ணீரை
வலுக்கட்டாயமாக வரவழைத்துவிட்டு பேச்சை நிறுத்தினான்.

அவன்
கொளுத்திப்போட்ட புரட்சித்தீ வேகமாக வேலை செய்தது. ரோம் குடிமக்கள்
ஒவ்வொருவரும் கொந்தளித்தனர். சீஸர் அநியாயமாக கொலை செய்யப்பட்டுவிட்டார்
என்று மனம் வருந்தினர். அதற்குக் காரணமான காஷியஸ், புரூட்டஸ்
உள்ளிட்டவர்களைப் பழிவாங்க முடிவெடுத்தனர்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:33 pm

ஜூலியஸ் சீஸரின் மரணம் ரோமாபுரியை அல்லோலகல்லோலப்படச் செய்தது.
ரோமாபுரியின் அடுத்த அதிபதி யார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. ரோமானிய
அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் இறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே
சீஸரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதேநேரம், சீஸரின் வாரிசாக
உயிலில் எழுதப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்த கயஸ் ஜூலியஸ் சீஸர் ஒக்டாவியஸ்
என்ற அகஸ்டஸ் சீஸர், ஜூலியஸ் சீஸர் செனட் சபையில் கொல்லப்பட்ட செய்தியை
அறிந்து ஆவேசம் ஆனார். அப்போது அவர் ரோமில் இருந்து 25 கிலோமீட்டர்
தொலைவில் முகாமிட்டு இருந்தார். சிறிதுநேரத்தில் தனது படைகளுடன் ரோமுக்கு
திரும்பினார்.

யார் இந்த அகஸ்டஸ் சீஸர்?

கி.மு.63ஆம் ஆண்டு
செப்டம்பர் 23-ஆம் தேதி ரோமாபுரியில் கையஸ் ஒக்டாவியஸ் என்பவருக்கு மகனாக
பிறந்த இவரை, ஆண் வாரிசு இல்லாத ஜூலியஸ் சீஸர் தத்தெடுத்திருந்தார்.
சீஸரின் உடன் பிறந்த சகோதரனின் மகளது மகன்தான் இந்த அகஸ்டஸ்.

தனது
கண் பார்வையில் வளர்ந்த அகஸ்டஸ் மீது, ஜூலியஸ் சீஸருக்கு எப்போதுமே
தனிப்பாசம் உண்டு. அந்தவகையில்தான் அவரைத் தனது வாரிசாக தத்தெடுத்தார்.
அவருக்கு ரோமானிய அரசியலிலும், ராணுவத்திலும் சிறப்புப் பயிற்சிகள்
அளித்தார். சீஸர் அளித்த பயிற்சிகள் வீண் போகவில்லை. இளம் வயதிலேயே
அவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றார். ஜூலியஸ் சீஸர் கொலை செய்யப்பட்டபோது
அகஸ்டஸின் வயது வெறும் பதினெட்டுதான்.

அகஸ்டஸ் சீஸர் ரோமாபுரி
திரும்பிய போது அவருக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருந்தன. ஜூலியஸ்
சீஸரின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டனியும் மிகச்சிறந்த வீரன்தான்.
ஆனால் மதுவும் மாதுவும் தினமும் அவனுக்கு வேண்டும். இதைத்தான் பேரழகி
கிளியோபாட்ராவும் சரியான நேரம் பார்த்து பயன்படுத்திக் கொண்டாள்.

ரோமானிய
அரசியலின் இக்கட்டான நேரத்தில் வந்து சேர்ந்த அகஸ்டஸ் சீஸர், குழப்பமான
அரசியல் சூழ்நிலையைச் சமாளிக்க முயன்றார். அப்போது, ரோமானிய அரசியலில்
ஆதிக்கம் செலுத்த செனட்டின் மூத்த தலைவர்கள், ராணுவ தளபதிகள் இடையே கடும்
போட்டி நிலவியது. அதில் முக்கியமானவர்களாக விளங்கியவர்கள் ஜூலியஸ் சீஸரின்
வலது கரமாக இருந்து வந்த ஆண்டனி மற்றும் லெப்பிடஸ்.

அதனால்,
இளைஞராகக இருந்தாலும் ராஜதந்திரமான செயலில் இறங்கினார், அகஸ்டஸ். ரோமானிய
அரசியலின் அப்போதைய பெரும் தலைகளான ஆண்டனி, லெப்பிடஸ் இருவரையும்
இப்போதைக்கு அனுசரித்துச் சென்றால், பின்னாளில் ரோமாபுரியை நம் கைக்குள்
கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார் அகஸ்டஸ். ஒருநாள் அவர்கள்
இருவரையும் விருந்துக்காக அழைத்திருந்தார்.

ரோமில் உள்ள ஒரு பிரம்மாண்ட வீட்டில் அவர்களது சந்திப்பும் நிகழ்ந்தது. அகஸ்டஸே பேச்சை ஆரம்பித்தார்.

"ஜூலியஸ்
சீஸரின் அரசியல் வாரிசாக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உங்கள்
துணையின்றி என்னால் ஆட்சி செய்ய முடியாது. என் வளர்ப்புத் தந்தைக்கு
நீங்கள் எப்படி பக்கபலமாக இருந்தீர்களோ, அதுபோன்று எனக்கும் உதவ வேண்டும்
என்று கேட்பதற்காகவே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்.." என்றார் அகஸ்டஸ்.

அகஸ்டஸின்
வேண்டுகோளை ஆண்டனியும், லெப்பிடசும் ஏற்றுக்கொண்டனர். ரோமானிய அரசியலில்
ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் இவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும்
என்று ஒரு பட்டியலை நீட்டினான் ஆண்டனி. சீஸரை கொலை செய்த சதிகாரர்கள்
தொடங்கி... ஆண்டனிக்கு எதிராக செயல்படுபவர்கள் வரை ஏராளமானவர்களுடைய
பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஏன்... லெப்பிடசின் சகோதரன்
பெயர் கூட அதில் இருந்தது. அதுபற்றி லெப்பிடசின் கருத்தை கேட்டபோது,
'அரசியலில் கொலை எல்லாம் சகஜமப்பா...' என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து,
அங்கிருந்து லெப்பிடஸ் விடைபெற்று புறப்பட்டுவிட, ஆண்டனியும், அகஸ்டஸும்
முக்கியமான விஷயங்கள் குறித்து ரகசியமாக ஆலோசித்தனர். அகஸ்டசே கேட்டார்..

"ஆமாம் தளபதியாரே... ரோமப் பேரரசு முழுவதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறீர்களா?"

"நன்கு யோசித்து அருமையான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறேன்".

"அதை என்னிடம் சொல்லலாமே..."

"ஆமாம்... கண்டிப்பாக உன்னிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்?"

"இப்போதைய
ரோமானிய அரசியல் சூழ்நிலையில் நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்க
வேண்டும். நாம் இருவரும் ஒவ்வொரு பகுதியை நிர்வகிக்க வேண்டும். இன்னொரு
பகுதியை லெப்பிடஸ் பார்த்துக் கொள்ளட்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் நம்
மீது சந்தேகம் கொள்ள மாட்டார்கள்".

"நாம் இருவரும் நாட்டை இரண்டாகப் பிரித்து, நிர்வகித்துக் கொள்ளலாம். இடையில், லெப்பிடஸ் ஏன் வேண்டும்?"

"இப்போதைக்குதான் இவன் தேவை. பிறகு கழற்றி விட்டுவிடலாம். அல்லது கொன்று விடலாம்".

ஆண்டனியின்
இந்த அதிரடியான திட்டம் அகஸ்டஸைச் சற்று கலங்க வைப்பதாக இருந்தாலும், வேறு
வழி இல்லாததால் அதை ஏற்றுக்கொண்டார். நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்க
வேண்டும் என்று திட்டம் வகுத்த ஆண்டனி, லெப்பிடசோடு அகஸ்டசையும்
விரட்டிவிட்டு நாட்டை முழுவதுமாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று இன்னொரு
மறைமுக திட்டமும் போட்டிருந்தான். அது அகஸ்டஸுக்குத் தெரியாது

"சரி....
எனது வளர்ப்பு தந்தை சீஸரைக் கொலை செய்த காஷியஸ், புரூட்டஸ்
உள்ளிட்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களைப் பழி வாங்க
வேண்டாமா?" என்று ஆண்டனியிடம் கேட்டார் அகஸ்டஸ்.

"நம்மைப் போலவே
அவர்களும் ரோமானிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார்கள்.
தங்களது ஆதரவாளர்களையும், படைகளையும் திரட்டுகிறார்கள். நமக்கு எதிராக
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் போர் செய்யலாம்.."

"நான் இப்போதே
அவர்களை எதிர்கொள்ள படைகளைத் தயார் செய்கிறேன். தலைமைத் தளபதியான நீங்கள்
எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். நாம் எதிரிகள் அனைவரையும்
பந்தாடிவிடுவோம்".

"நீ சிறுவனாக இருந்தாலும் வீரத்தோடுதான்
இருக்கிறாய், அகஸ்டஸ். ஆனாலும், இப்போதைக்கு போர் பற்றி எண்ண வேண்டாம்.
படைகள் நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எதிரிகளால் நம்மை ஒன்றும் செய்ய
முடியாது. அப்படியே அவர்கள் படையெடுத்து வந்தாலும் நாம் அவர்களை எளிதில்
துவம்சம் செய்துவிடலாம்" என்றான் ஆண்டனி. தொடர்ந்து, இருவரும் விடைபெற்று
கலைந்து சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய ஆண்டனிக்கு தூக்கம் வர
மறுத்தது. எதிரிகளையும் வெல்ல வேண்டும், அகஸ்டஸையும் ஓரம் கட்ட வேண்டும்
என்று அவன் போட்ட குழப்பமான கணக்குதான் அதற்குக் காரணம். அதேநேரம், அவன்
மனதிற்குள் கிளியோபாட்ராவும் வந்துபோனாள்.

சீஸர் கொலை செய்யப்பட்டதை
அறிந்து துடித்துப்போன அவளுக்கு முதல் ஆளாகச் சென்று ஆறுதல் கூறியவன்
ஆண்டனிதான். அத்துடன், சீஸர் கொலை செய்யப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்
கிளியோபாட்ரா எகிப்து செல்வது நல்லதல்ல, சில மாதங்கள் போகட்டும் என்றும்
அன்பாகவும் ஆதரவாகவும் அறிவுரை கூறியவனும் அவனே! அந்த அதீத அக்கறையில்
அவனது தனிப்பட்ட விருப்பம் ஒன்றும் ஒளிந்திருந்தது.

மறுநாள் காலை
டைபர் நதிக்கரையோரம் இருந்த அரண்மனையில் கிளியோபாட்ராவைச் சந்தித்தான்
ஆண்டனி. வழக்கமாக அவள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி காணாமல் போய்
இருந்தது. ஏதோ பறிகொடுத்தவள் போல் அமர்ந்திருந்தாள். ஆனால், ஆண்டனியைப்
பார்த்த மாத்திரத்தில் சற்று உற்சாகமானாள்

சீஸர் உயிரோடு
இருக்கும்போது கிளியோபாட்ராவிடம் சில அடிகள் தள்ளியே நின்று பேசிய ஆண்டனி,
இன்று கிளியோபாட்ராவுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டான். அவனது கண்களில்
ஒருவித போதை தெரிந்தது. கூடவே, அதன் ஓரங்களில் இனம்புரியாத காதலும் எட்டிப்
பார்த்தது. மேலும், அதுவரை கிளியோபாட்ராவை மிகுந்த மரியாதையுடன்
அழைத்தவன், இப்போது தனக்குரியவள் என்பதுபோல் உரிமையோடு அழைத்துப் பேசினான்.
கிளியோபாட்ராவும் அதை ஏற்றுக்கொண்டது ரோமானிய அரசியலில் பெரும்
திருப்பத்தை ஏற்படுத்த காத்திருந்தது.

சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு ஆண்டனியே பேசினான்.

"கிளியோபாட்ரா... ஏன் இன்னும் சோகமாக இருக்கிறாய்? சீஸர் இல்லாவிட்டால் என்ன நான் இருக்கிறேனே..."

"நீ என்ன சொல்ல வருகிறாய்?"

"சந்தோஷமும்,
துக்கமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இன்று இந்த ரோமாபுரிக்கு
தளபதியாக இருக்கும் நான் நாளைக்கே சீஸரைப் போல் அதிபதி ஆகிவிடலாம். அதனால்,
உனது கவலை தேவையற்றது. இன்று முதல் மீண்டும் மகிழ்ச்சியான
கிளியோபாட்ராவைப் பார்க்க ஆசைப்படுகிறேன்..." என்று உருகினான் ஆண்டனி

"உனது
ஆறுதலான, அக்கறையான பேச்சு என் மனதை இதமாக்கிவிட்டது. உனது இந்த
நம்பிக்கையான பேச்சை நான் நிறைய உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.." என்ற
கிளியாபாட்ரா முதன் முறையாக ஆண்டனியின் வலது கையை உயர்த்தி, தனது சிவப்பு
இதழ்களால் முத்தமிட்டாள்.

கிளியோபாட்ராவின் முத்தத்தில் போதை
தலைக்கேறி தள்ளாடிப் போன ஆண்டனி, தனது இதயத்தில் அவளுக்கு ஒரு சிம்மாசனத்தை
ஏற்படுத்திக்கொண்டான். அதேபோல் கிளியோபாட்ரா மனதிலும் அவன்
இடம்பிடித்தான்.
ரோமானிய அரசியலில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற
முனைப்புடன் இருந்தான் புரூட்டஸ். ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்தபோது தன்னுடன்
கைகோர்த்த காஷியஸ் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து அவனும் பெரும் படையைத்
திரட்டினான். மறைமுகமாக போருக்குத் தயாரானான். இதுபற்றிய தகவல் அறிந்த
அகஸ்டஸ் சீஸரும், ஆண்டனியும் வேகவேகமாக பெரும்படையைத் திரட்டினர்.

இரு
தரப்பினரும் மோதிக்கொள்ள தயாரானார்கள். இரு தரப்பினருமே ராஜதந்திரமான
செயல்களில் இறங்கினர். இரு அணிகளாகப் பிரிந்து சென்று போரைச் சந்திக்க
புறப்பட்டனர்.

இதற்கிடையில், புரூட்டஸின் அன்பு மனைவி போர்ஷியா
இறந்துவிட... புரூட்டஸ் இன்னும் சோகமானான். செனட் சபையில் சீஸர் கொலை
செய்யப்பட்டதையும், அதில் தனது கணவன் புரூட்டசுக்கு பெரும் பங்கு
இருப்பதையும் அறிந்த போர்ஷியா, தனது கணவனுக்கு எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம்; அதனால் தானும் அவமானத்திற்கு ஆளாகலாம்
என்கிற அச்சத்தில் நெருப்பை விழுங்கி இறந்தாள் என்று குறிப்பிடுகிறார்
ஷேக்ஸ்பியர்.

அன்பு மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தையும் தாண்டி
போருக்குத் தயாரானான் புரூட்டஸ். போரில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்,
தோற்கும் நிலைமை வந்தால் எந்த நிலையிலும் உயிருடன் இருக்கக்கூடாது என்று
உறுதியாக முடிவெடுத்துக் கொண்டான்

பிலிப்பி சமவெளி போர்க்களத்தில்
அகஸ்டஸ் மற்றும்ஆண்டனி தலைமையிலான படைகளும், புரூட்டஸ் மற்றும் காஷியஸ்
தலைமையிலான படைகளும் மோதத் தயாராக வீறுகொண்டு புயலென புறப்பட்டு வந்தன. இரு
தரப்பு படைகளும் வந்த வேகத்தில் அந்த சமவெளியின் சுற்று வட்டாரப் பகுதிகள்
முழுவதும் புழுதிக் காடாக மாறின

அகஸ்டஸின் படைகள் பிலிப்பி
சமவெளியை நோக்கி வர... ஆண்டனியோ புத்திசாலித்தனமாக மலைப் பகுதியைச் சுற்றி
வந்து எதிரிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தாக்க முயன்றான்.
இதேபோல், காஷியஸ் தலைமையில் ஒரு படையும் தந்திரமாக முன்னேறி வந்தது.

ஒரு
மலையின் உச்சியில் காஷியஸ் படைகள் வேகமாக வந்த காரணத்தால் சற்று
இளைப்பாறிக் கொண்டிருந்தன. மலை உச்சியில் இருந்து அவர்கள் பார்த்தபோது
சற்று தொலைவில் பாலைவனப் புயல் போல் புழுதிப்படலம் எழுந்து வந்தது.
குதிரைக் குழம்புகளின் அதிர்வுகளால் பூமியில் லேசான அதிர்வு தெரிந்தது.
நிச்சயமாக அது அகஸ்டசின் படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கணித்தான்.
ஆனாலும் அது புரூட்டசின் படையாகக் கூட இருக்கலாம் என்று அவனுக்கு சந்தேகம்
வந்தது. அப்போது மூச்சு வாங்க குதிரையோடு வந்து நின்றான், காஷியசின்
உதவியாளரான பிண்டாரஸ்.

"எதிரிகள் நம்மை சூழ்ந்துவிட்டார்கள்.
ஆண்டனியின் படை நமது கூடாரத்தை எல்லாம் தீ வைத்து அழித்துவிட்டது.." என்ற
பிண்டாரஸ், தனக்கு பின்நோக்கி கை காண்பித்தான். அங்கே பெரும் புகை மூட்டம்
வான் நோக்கி திரண்டு மிரட்டியது
அதைப் பார்த்த காஷியஸ் மிரண்டு போனான்.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாத அவன், தனது தலைமை படைவீரன் ஒருவனை அழைத்தான்.
அவன் பெயர் டிடினியஸ்

"அங்கே நம்மை நோக்கி மலை அடிவாரத்தில் வரும் படையைப் பார். அது நம் புரூட்டஸின் படையா அல்லது எதிரியின் படையா என்று பார்த்து வா..."

டிடினியஸ், குதிரையில் வேகமாக மலை அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தான்

தனியாகச்
சென்ற டிடினியசை எதிரே வந்த படைவீரர்கள் மடக்கிவிட்டார்கள். அவர்களைப்
பார்த்த மாத்திரத்தில் குதிரையில் இருந்து இறங்கினான் டிடினியஸ். எதிரே
வந்த படைவீரர்கள் சிலர் அவனைத் தனியாக அழைத்துச் சென்றனர். அப்போது அந்த
படைவீரர்கள் எழுப்பிய ஆரவாரம் காஷியஸ் காதையும் வந்தடைந்தது.

டிடினியசை
எதிரிகள் கைது செய்துவிட்டார்கள் என்று, தனது உதவியாளர் பிண்டாரஸ்
உதவியுடன் கணித்தான் காஷியஸ். இதனால் நாமும் தோற்றுவிடுவோம் என்று
அஞ்சினான் அவன்.

அடுத்தநொடியே பிண்டாரசை அழைத்துக்கொண்டு தனியாக சென்றான் காஷியஸ்.

"பிண்டாரஸ்...
நாம் நினைக்காத ஒன்று நடந்துவிட்டது என்று எண்ணுகிறேன். டிடியஸ் என்
நண்பனும்கூட! அவனைக் கைது செய்தவர்கள் எதிரிகள்தானே? இதில் எந்த மாற்றமும்
இல்லையே...?"

"ஆமாம்! நிச்சயம் அவர்கள் நம் எதிரிகள்தான். நம் படை
என்றால், அவர்கள் நம்மை நோக்கி அல்லவா வந்து இருப்பார்கள்? டிடினியசும்
திரும்பி வந்து இருப்பானே..?"

"ஆமாம்... நிச்சயம் அவர்கள் எதிரிகள்தான்..." என்ற காஷியஸ் ஒரு நிமிடம் அமைதியாக எதையோ யோசித்தான்.

"என்ன யோசிக்கிறீர்கள்? தோல்வி அடைந்துவிடுவோம் என்று பயப்படுகிறீர்களா?" என்று பிண்டாரஸ் கேட்டான்.

"தோல்வியை
நினைத்து பயப்படவில்லை. ஒருவேளை என்னை எதிரிகள் கைது செய்துவிட்டால்,
என்னை எப்படி நடத்துவார்கள் என்றுதான் எண்ணிப் பார்த்தேன். அப்படியொரு
அவமானத்தைச் சந்திக்க வேண்டுமா என்றும் எண்ணுகிறேன்".

"அதனால், என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"அவமானப்பட்டு உயிர் துறப்பதைவிட விரும்பி உயிரை விடுவது எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்".

"நீங்கள் என்னை மேலும் குழப்பம் அடையச் செய்கிறீர்கள்".

"பிண்டாரஸ், நான் சொல்வதை நீ செய்வாயா?"

"நிச்சயமாகச் செய்வேன். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லையே..."

"எதிரிகள் கையால் மரணிப்பதைவிட உன் கையால் இறப்பதையே நான் விரும்புகிறேன்..."

பிண்டாரஸ் அதிர்ந்து போய்விட்டான்.

"ஆமாம்
பிண்டாரஸ். நீ இப்போது என்னைக் கொல்ல வேண்டும். இதோ இந்த வாளால்தான்
சீஸரைக் குத்திக் கொன்றேன். அதே வாளால் நீ இப்போது என்னைக் குத்திக்
கொன்றுவிடு. எதிரிகளிடம் சிக்கி மரணிப்பதைவிட இதைப் பெரிய தியாகமாக
கருதுகிறேன்..." என்று காஷியஸ் சொல்ல... கலவர முகத்தோடு நின்று
கொண்டிருந்தான் பிண்டாரஸ்

"நான் எப்படி உங்களைக் கொலை செய்ய
முடியும்? என் மனம் அதற்கு இடம் கொடுக்காது..." என்று மறுத்தான் அவன்.
ஆனால், காஷியஸ் தனது முடிவில் உறுதியாக இருந்தான்

"இந்தப் படையைத்
தலைமை தாங்கி நடத்துபவன் நான்தான். நான் சொல்வதை நீ கேட்டுத்தான்
ஆகவேண்டும்..." என்ற காஷியஸ், பிண்டாரஸ் கையில் தனது கூரிய வாளை
வலுக்கட்டாயமாக திணித்தான். அதை வாங்கிய பிண்டாரஸ் கைகள் நடுங்கியது
அப்பட்டமாக தெரிந்தது. அப்போதும் காஷியசைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம்
அவனுக்கு ஏற்படவில்லை.

"என்ன யோசிக்கிறாய், பிண்டாரஸ்? நீ கோழையா?
ஏன் இப்படி நடுங்குகிறாய்? ஒருவனின் உயிர் எப்போது வேண்டுமானாலும்
போய்த்தானே ஆக வேண்டும்? அதனால், என் கண்களை நான் மூடிக் கொள்கிறேன். இந்த
வாளை நேராக என் மார்பில் பாய்ச்சு. அப்படியொரு மரணத்தைத்தான் நான் இப்போது
விரும்புகிறேன்..." என்று கடைசியாகச் சொல்லி முடித்த காஷியஸ், தன் கண்களை
மூடிக் கொண்டான். நடுங்கிய கைகளோடு கூரிய வாளை அவனது மார்பில் பாய்ச்சினான்
பிண்டாரஸ்
அடுத்த நொடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காஷியஸ் துடிதுடித்து இறப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தினான் பிண்டாரஸ்
இதற்கிடையில்,
தனி ஆளாக குதிரையில் புறப்பட்டுச் சென்ற டிடினியஸ் முகத்தில் பேரானந்தம்
பொங்கி வழிந்தது. ஆம்... அவன் சந்தித்தது எதிரிகளை அல்ல. புரூட்டசின்
படையைத்தான். அந்த மகிழ்ச்சியில்தான் எல்லோரும் ஆரவாரம் இட்டார்கள். ஆனால்,
காஷியஸ்தான் அதைத் தவறாக கணித்து, அவசரப்பட்டு தற்கொலை செய்து
கொண்டுவிட்டான்.

இதற்கிடையில், நடந்து கொண்டிருந்த போரில் இளைஞனான
அகஸ்டசின் படை புரூட்டசின் படையிடம் தோற்று பின்வாங்கி ஓடியது. ஆனால்,
ஆண்டனி தலைமையில் சென்ற படையின் கை ஓங்கி இருந்தது. அவன் காஷியஸ் தலைமையில்
புறப்பட்டு வந்த படையை முறியடித்துவிட்டான்

அகஸ்டஸ் படை பின்வாங்கி
ஓடியதால் களிப்புடன் காஷியசைத் தேடி வந்த டிடினியஸ் உள்ளிட்ட படை
வீரர்கள், அவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை அறிந்து அதிர்ந்தனர்
(காஷியசைக் கொன்ற பிண்டாரஸ், பக்கத்து நாட்டுக்கு ஓடிவிட்டதாக
குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்). தன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று
எண்ணிய டிடினியஸ், காஷியஸ் மார்பைத் தைத்திருந்த வாளை உருவி, அதனால்
தன்னைத்தானே குத்திக்கொண்டு சாய்ந்தான். இவனது மரணமும் மறக்க முடியாது
வரலாறாக பதிவாகியது

அதேநேரம் -

அகஸ்டஸ் படையைத் தோற்கடித்த
மகிழ்ச்சியில் இருந்த புரூட்டஸ், காஷியசின் மரணம் பற்றி அறிந்து
வருந்தினான். காஷியஸ் உடலையும், அவனுக்காக உயிர் துறந்த டிடினியஸ் உடலையும்
மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டான்.
அவனும் விரைவில் காஷியஸ் போன்றே சாகப் போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:34 pm

பிலிப்பி போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் ஆண்டனியின் படைவீரர்கள்
தங்களுக்குக் கிடைத்த செய்தியின் காரணத்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே
போய்க்கொண்டு இருந்தனர். ஆம்... புரூட்டஸ் பிடிபட்டுவிட்டான் என்பதே அந்தச்
செய்தி.
பகல் நேரம் முடிந்து, மாலை துவங்கியதால் போர் நிறுத்தப்பட்டு
வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். கைது செய்யப்பட்ட புரூட்டஸை,
அவசரப்பட்டு கொன்றுவிடக் கூடாது என்று கருதி சிறைப்பிடித்து
வைத்திருந்தனர்.
ஓய்வெடுக்க வந்த ஆண்டனியிடம் புரூட்டஸ் கைது செய்யப்பட்ட தகவலை கூறினார்கள். அதைக் கேட்ட ஆண்டனிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"என்னது... இவ்வளவு சீக்கிரத்தில் புரூட்டஸ் கைது செய்யப்பட்டுவிட்டானா? என்னால் நம்பவே முடியவில்லையே..."

"ஆமாம் தளபதியாரே! போர்க்களத்தில் அவன் தன்னை புரூட்டஸ் என்றுதான் கூறினான்" - வீரன் ஒருவன் கூறினான்.

"சரி...
இப்போது அவன் எங்கே?" என்று ஆண்டனி கேட்க, அவனை புரூட்டஸ் சிறை
வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் அந்தப் படைவீரன்.

அங்கே
புரூட்டஸ் என்று அடையாளம் காட்டப்பட்டவனைப் பார்த்த மாத்திரத்தில்
அதிர்ச்சியானான் ஆண்டனி. காரணம், அங்கே புரூட்டஸ் என்ற பெயரில் இன்னொரு
வீரன் இருந்தான்

"இவன் புரூட்டஸ் இல்லை. ஆனாலும், புரூட்டசுக்கு
சளைத்தவன் இல்லை என்றுதான் கருதுகிறேன். அதனால், இவனை எதிரியாக நடத்தாமல்
நண்பனாக நடத்துங்கள். உண்மையான புரூட்டஸ் உயிருடன் இருக்கிறானா இல்லையா
என்று பார்த்து வந்து சொல்லுங்கள்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து
அகன்றான் ஆண்டனி

புரூட்டஸ் படையின் போர்க்களம் -

முந்தைய
நாள் இரவு சரியாக தூக்கம் வராததால் கண்கள் சிவந்துபோய் இருந்தான்
புரூட்டஸ். காரணம், கொலை செய்யப்பட்ட ஜூலியஸ் சீஸர் அவனது கனவில் பேயாக
வந்து அச்சுறுத்தியதுதான். இதுபற்றி தினமும் போர்க்களத்தில் நண்பர்களிடம்
கூறி வருத்தப்பட்டு வந்தான் அவன். ஆனால், அன்று என்னவோ அதன் தாக்கம்
அவனிடம் நிறையவே தெரிந்தது

போதாக்குறைக்கு, தனது படை வீரர்களின்
எண்ணிக்கை குறைந்து போனதும், வேறு வீரர்களை உடனடியாக திரட்ட முடியாததும்
அவனை பயம் கொள்ளச் செய்தது. அதனால், தோல்வி அவன் கண்முன் நிழலாடியது

திடீரென்று என்ன நினைத்தானோ, தனது நம்பிக்கைக்குரிய வீரன் கிளைட்டஸ் என்பவனை அழைத்தான் புரூட்டஸ்.

"கிளைட்டஸ், நான் சொல்வதை நீ நிச்சயம் செய்வாய் என்ற நம்பிக்கையோடு இதை உன்னிடம் சொல்கிறேன்".

"கண்டிப்பாக செய்கிறேன், புரூட்டஸ்..." என்ற கிளைட்டசின் காதுகளில் எதையோ கிசுகிசுத்தான் புரூட்டஸ். அடுத்த நொடியே ஆவேசமானான் அவன்.

"என்ன
சொல்கிறீர்கள், புரூட்டஸ்? இப்படியொரு காரியத்தை நான் உங்களுக்கு செய்ய
வேண்டுமா? என்னால் முடியவே முடியாது. ஏன் இப்படியொரு முடிவை
எடுக்கிறீர்கள்? தோல்வி பயமா?"

"அப்படியில்லை என் நண்பனே... என் மரணம் என் கண்முன்னே தெரிகிறது".

"என்ன சொல்ல வருகிறீர்கள்.."

"ஆமாம்...
இறந்துபோன சீஸரின் ஆவி என்னைப் பாடாய் படுத்தி வருகிறது. நேற்று மீண்டும்
தோன்றி என்னைப் பயமுறுத்திவிட்டது. என் முடிவு நெருங்கிவிட்டது என்றே
உணர்கிறேன்".

"அதற்காக, உங்களை நான் கொல்ல வேண்டுமா? காஷியஸ் செய்த தவற்றை ஏன் நீங்களும் திரும்பவும் செய்கிறீர்கள்?"

"என்
முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். உன்னால் முடியவில்லை என்றால்
இங்கிருந்து சென்றுவிடு..." என்று சட்டென்று கோபம் கொண்டான் புரூட்டஸ்.

கிளைட்டஸ் அங்கிருந்து வெளியேற... தனது இறுதி முடிவை இன்னொரு நண்பன் ஸ்ட்ராட்டோவிடம் கூறச் சென்றான் புரூட்டஸ்.

அப்போது போர் துவங்கிவிட்டது என்பதை உணர்த்தும் போர்ப்பறை ஒலித்தது. அதன் ஒலி புரூட்டஸை இன்னும் பயம் கொள்ளச் செய்தது.

சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து வெளியேறிய கிளைட்டஸ் பதற்றமாக திரும்பினான்.

"புரூட்டஸ்!
நீங்கள் இப்போது இங்கே இருக்க வேண்டாம். தயவு செய்து தப்பித்து
ஓடிவிடுங்கள். எதிரிகளின் பெரும் படை நம்மை நோக்கி வருகிறது. அவர்களை நம்
சிறிய படையால் ஒன்றும் செய்துவிட முடியாது. அதனால் தப்பித்து விடுங்கள்..."
என்று கூறிவிட்டு, உயிர் பிழைக்கத் தப்பித்து ஓடினான். அங்கிருந்து
வீரர்களும் புரூட்டசின் உத்தரவைக்கூட எதிர்பார்க்காமல் உயிர்த் தப்பிக்க
ஓட்டம் பிடித்தனர்.

இதைக்கண்ட புரூட்டஸ், தனது மரணத்தை உடனடியாக வரவேற்கத் தயாரானான். நண்பன் ஸ்ட்ராட்டோவைப் பார்த்தான்.

"நண்பா!
நான் உங்கள் எல்லோரிடமும் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது.
அகஸ்டஸும், ஆண்டனியும் இன்று பெற்றுள்ள வெற்றியைவிட எனது தோல்வியே
பின்னாளில் பேசப்படும்".

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?"

"என் மரணத்தை உன் மூலம் வரவேற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்".

"ஏன் இப்படியொரு பாவச் செயலை செய்யச் சொல்கிறீர்கள்?"

"நீ இப்போது அதைச் செய்துதான் ஆகவேண்டும். இந்த ஒரு செயலின் மூலம் நீயும் என்னோடு சேர்ந்து புகழ்பெறப் போகிறாய்".

"சரி... உங்கள் விருப்பத்திற்காக அப்படியொருச் செயலைச் செய்ய சம்மதிக்கிறேன்..." என்றான் ஸ்ட்ராட்டோ

அடுத்த நொடியே புரூட்டஸ் கொடுத்த கூரிய வாளைத் தனது கைகளால் உறுதியாக பிடித்துக்கொண்டான் ஸ்ட்ராட்டோ. முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

"சீஸர்...
உன் பழி இப்போது தீரப் போகிறது. என்னை நானே கொல்லும் இந்த விருப்பத்தில்
பாதி அளவு விருப்பத்தோடு கூட நான் உன்னைக் கொல்லவில்லை..." என்று
கூறியபடியே, ஸ்ட்ராடோ பிடித்திருந்த வாளின் மீது பாய்ந்தான் புரூட்டஸ்.
அடுத்த நொடியே உடல் வெட்டுபட்டு உயிர் துறந்தான்

எதிரியாக இருந்தாலும் மரியாதையோடு புரூட்டஸின் உடலை அடக்கம் செய்தார் அகஸ்டஸ் சீஸர்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக