புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
32 Posts - 55%
heezulia
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
32 Posts - 55%
heezulia
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
படிக்காதவன் Poll_c10படிக்காதவன் Poll_m10படிக்காதவன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காதவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 11:39 am

அன்றைய காலைப் பொழுது வழக்கம் போல் இல்லை அவர்களுக்கு. இரண்டு, மூன்று நாட்களாகவே அங்கே புயல் சின்னம் மையம் கொண்டுதானிருந்தது. எந்த நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாமென்ற சூழல் உருவாகியிருந்தது.

இன்று சிறு சிறு தூறலுடன் மழை வலுக்க ஆரம்பித்தது. ஆமாம். கணவனுக்கும், மனைவிக்குமிடையே மையம் கொண்டிருந்த கோபதாபங்கள் சிறு தூறலாக ஆரம்பித்தது.

முருகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணமாகி இரண்டரை வருடமாகிறது. கையில் ஒருவயதுக் குழந்தை இருக்கிறது. மகேஸ்வரியின் அத்தைப் பையன்தான் அவன். அவனுக்குத்தான் இவள் என்று எப்போதோ பெரியவர்கள் முடிச்சிப் போட்டு வைத்து விட்டார்கள். ஆனால், முருகேசனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. பத்தாவதுக்கு மேல் படிக்கவில்லை. ஒர்க்ஷாப் ஒன்றில் சேர்ந்து வேலை கற்றுக் கொண்டான்.

மகேஸ்வரி இவனை விட நன்றாகப் படித்தாள். ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரிக்கும் போனாள். அதைத்தொடர்ந்து `அவனுக்கு இவள் இவளுக்கு அவன்' என்று அன்று போட்ட முடிச்சி தளர்த்தப்பட்டது. காரணம் அவன் படிக்காதவன். இவள் படித்தவள்!

ஆனால் விதி யாரை விட்டது!

இருவரும் காதலித்தார்கள். வீட்டில் எதிர்த்தாலும் அவர்கள் மனம் மாறவில்லை. காதலின் தீவிரம் தெரிந்து பெரியவர்கள் பார்த்து இருவருக்கும் மணமுடித்து வைத்தார்கள்.

இப்போது முருகேசன் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கிறான். டவுனில் தனி வீடு. கையில் குழந்தை. குடும்பம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவன் சம்பாத்தியம் குறைவு தான் என்றாலும், பிக்கல் பிடுங்கல் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

மகேஸ்வரியிடம் தான் சின்ன மாற்றம். அடுத்தடுத்த வீட்டிலும் எதிர் வீட்டிலும் இருக்கும் பெண்களுடன் பேசிப் பழகும் போது, அவர்களின் ஆடம்பரமும், அணியும் துணிமணிகள் ஆபரணங்களும் இவளை ஈர்த்தன. அவர்களைப் போல் வருமானம் வந்தால் நாமும் இப்படி இருக்கலாமே என்ற எண்ணம் துளிர்விட்டது.

அந்த வீட்டில் கணவனும், மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். இரண்டு வருமானம் கிடைக்கிறது. நாமும் வேலைக்குப் போனாலென்ன என்ற ஆசை வந்தது. தன் படிப்புக்கு ஒரு கான்வென்ட் ஸ்கூலில் மூவாயிரம், நாலாயிரம் கூடவா கொடுக்க மாட்டார்கள் என்று மனம் கணக்குப் போட்டது. தன் எண்ணத்தைக் கணவனிடம் சொன்னாள்.

``வேண்டாம் மகேஸ், இப்போ நமக்கு எந்தக் கஷ்டமுமில்லே. அதே சமயம் கடனில்லாமலும் இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல சொந்தமா டாக்ஸி வாங்கிடுவேன். பேங்க்ல லோனுக்கு மனு போட்டிருக்கேன். அதுக்கப்புறம் வருமானம் நிறைய கிடைக்கும். அப்போ நீ ஆசைப்படுற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நம்ம தேவைகளையும் பூர்த்தி செய்துக்கலாம். இப்போ நீ வேலைக்குப் போனா குழந்தையை சரியா வளர்க்க முடியாது.'' என்று பக்குவமாக எடுத்துச் சொன்னான் முருகேசன்.

அவன் சொன்ன நியாயம் அவனுக்குள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ``எல்லாரும் அவங்க மனைவிகளை எப்படி உள்ளங்கையில் வச்சி தாங்குறாங்க. விதம் விதமா நகை நட்டு துணிமணின்னு எடுத்துத் தர்றாங்க. இங்க அன்னையிலேர்ந்து இன்னிய வரைக்கும் பஞ்சப் பாட்டுதான். டாக்ஸி ஓட்டுறது ஒரு பொழைப்பா? வேற ஏதாச்சும் வேலைக்குப் போனா எனக்கும் சொல்லிக்க கவுரவமா இருக்கும். டாக்ஸிகாரன் பொண்டாட்டின்னு என்னைக் கேவலமா பாக்குறாங்க...'' என்று வெடித்தாள் அவள்.

முருகேசன் மனம் நொந்து போனான். இப்படிப் பேசுபவளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது... படிக்காதவன் என்று சொன்ன சொல் அவனை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இரண்டு மூன்று நாட்களாக இருவரிடையே சரியான பேச்சுவார்த்தையில்லை.

`நாலு நாளைக்கு புருஷனைக் கண்டுக்காத! காயப்போடு! தானா வழிக்கு வருவான்..' சில பெண்களின் துர்போதனை அவளை யோசிக்க வைத்தது. திடீரென்று ஒரு நாள் மாலை, பொழுது சாய்ந்த வேளை குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மா வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் மகேஸ்வரி.

அவள் சென்ற பத்துநிமிடத்திற்கெல்லாம் அந்தப் பக்கம் சவாரி வந்த முருகேசன், வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து புரியாமல் குழம்பினான். அவன் டாக்ஸியை நிறுத்தி விட்டு. வீட்டைப் பார்ப்பதைப் பார்த்த பெட்டிக்கடை முத்துசாமி, ``என்ன முருகேசு... வீடு பூட்டியிருக்கேன்னு பார்க்கிறியா? இப்பதான் உன் ஓய்ப் வீட்டை பூட்டிக்கிட்டு வெளிய போனாங்க. உங்கிட்ட சொல்லலையா?'' என்றார்.

``தெரியும் அன்னாச்சி. நான் வர நேரமாயிட்டுன்னு புறப்பட்டாங்க போல. நான் பஸ் ஸ்டான்ட்ல பார்த்துக்கிறேன்'' என்று தன் வீட்டு குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாமென்று சமாளித்து புறப்பட்டான். வண்டியிலிருந்த சவாரியை இறங்க வேண்டிய இடத்தில் விட்டு விட்டு நேரே பஸ் ஸ்டாண்ட் சென்றான்.

பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. அன்று திருவண்ணாமலை கிரிவலம். வழி டிக்கட்டை ஏற்றாமல் திருவண்ணாமலை போகும் பயணிகளுக்கு மட்டும் டோக்கன் சிஸ்டத்தில் டிக்கெட் வழங்க, வழியில் இறங்க வேண்டியவர்களெல்லாம் தவித்துக் கொண்டிருந்தனர். மகேஸ்வரி குழந்தையுடன் வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தாள். முருகேசன் அவளருகில் சென்றான்.

``அம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்லியிருந்தா நானே அனுப்பியிருப்பேன். இன்னிக்கு முழுக்க பஸ் ஏற முடியாது. வா நாளைக்கு காலை போகலாம். கைக் குழந்தையை வச்சிக்கிட்டு எப்படிப் போவ இந்தக் கூட்டத்துல? நீ போறதுக்குள்ள இருட்டாயிடும். வா..''

அவள் பதில் எதுவும் பேசாமல் டாக்ஸியில் ஏற, வீட்டுக்குச் செலுத்தினான்.

``என்கிட்ட கூட சொல்லாம திடீர்னு புறப்பட்டுட்டே, ஏன்னு தெரியல. எதாயிருந்தாலும் பரவாயில்லை.. குழந்தையை பத்திரமா பார்த்துக்க. எப்ப வரணும்னு தோணுதோ அப்ப வா. உன் மேல எனக்கு கோவமில்லை. நான் படிக்காதவன்னு தெரிஞ்சிதான் நீ என்னை விரும்புனே. இப்ப அதைச் சொல்லிக்காட்டுறே. பரவாயில்லை. ஆனா என் நிலைமை எப்பவுமே இப்படி இருக்காது. அதுக்குப் பிறகு உன் இஷ்டம்.''

டாக்ஸி வீட்டிற்கு வந்து நின்றது.

கதவைத்திறந்து உள்ளே சென்றார்கள். முருகேசன், பாத்ரூம் சென்று முகம், கை கால் கழுவி வந்தான். மகேஸ்வரி அவனுக்கு டீ போட்டு வந்து கொடுத்தாள். கையில் டீ கப்பை வாங்கியவன், "மகேஸ் இங்கே வாயேன்'' என்றான். அவள் வந்தாள்.

இதோ டீ கப்புல வழிய வழிய டீ இருக்கு. இதுக்கு மேல இன்னும் கொஞ்சம் டீயை ஊத்தினா என்னாகும்? ஊத்துனது எல்லாம் வழிஞ்சி போயிடும். இப்ப நிறைய டீ இருக்கும்போது மேற்கொண்டு டீ எதுக்கு? அது மாதிரிதான் வாழ்க்கையும்! நம்ம குடும்பம் அமைதியா நிறைவா போய்க்கிட்டிருக்கு. மத்தவங்க நம்ம குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்த அதையும் இதையும் சொல்லுவாங்க. உன் மனசு நிறைவா இருந்தா அவங்க சொல்ற வார்த்தையெல்லாம் வழிஞ்சி போற டீ மாதிரி போயிடும். எல்லாமே நம்ம கைலதான் இருக்கு.'' என்றவன், மனைவி கொடுத்த டீயைக் குடித்தான்.

டீயைக் குடித்து விட்டு. ``இந்தா மகேஸ் இந்த இருநூறு ரூபாயை செலவுக்கு வச்சிக்க. நீயா பொறப்பட்டு வரவேணாம். சொன்னா நானே வந்து அழைச்சிக்கிட்டு வரேன். நைட் சவாரி ஒண்ணு இருக்கு. வர லேட்டாயிடும். பத்திரமா தாப்பா போட்டுக்கிட்டு படுத்துக்க.'' என்று புறப்பட்ட முருகேசனிடம், ``மன்னிச்சிடுங்க. நான் அம்மா வீட்டுக்கு போகலீங்க'' என்றாள்.

அவள் கண்களில் கணவனை புரிந்து கொண்டதற்கான அடையாள மாக கண்ணீர் கசிந்தது.

- எஸ்.மீனாட்சி சுந்தரம்



படிக்காதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:47 pm

கதை அருமை அண்ணா படிக்காதவன் 224747944 படிக்காதவன் 224747944 படிக்காதவன் 224747944

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளக்கூடாது படிக்காதவன் 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக