புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் (ஈழத்தில் இருந்து )
Page 1 of 1 •
- GuestGuest
(பாகம் 1)
சுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள்
இளைஞர்கள். “எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம்
விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற
எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள்
இளைஞர்கள்.
நமக்கானதொரு தேசத்தை சொந்தமாக்க உயிர் உடன்பிறப்புக்களை
சத்தமின்றி பிரிந்தவர்கள் இவர்கள். களமாடி நின்ற காலங்களில் தம் நலம்
நாடாது மக்கள் நலம் நாடி எக்காலத்துக்குமான காவியமானவர்கள் இவர்கள்.
காவிய
நாயகர்கள் மாகாவியமாகிப் போன வேளையில் நான் ஈழத்தமிழர் பகுதிகளில்
நின்றேன். இயல்பான மகிழ்வும் இயற்கையான வளமையும் இல்லா எதிர்கால வரலாற்று
உயிரோவியங்களை பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. அருளில்லா ஆலயம் போல
இருந்தார்கள் அவர்கள். வறண்ட பாக்காப் பள்ளத்தாக்குபோல சோர்ந்து காய்ந்து
கிடந்தார்கள்.
“விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி” என்ற
தமிழீழத்தலைவரின் அனுபவ வார்த்தையை எம் எதிர்கால வசந்தங்களின் உணர்வலைகளில்
ஏற்ற இளைஞர் யுவதிகளுக்காக சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தோம்.
தகவல் கிடைத்தவர்களில் துணிவுள்ளவர்களும் கனவுள்ளவர்களும் கலந்து
கொண்டார்கள்.
17.07.2011 ஞாயிறு அன்று நடைபெற்ற கூட்டத்தில் வட்டமாக
அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் வலுவில்லாத கேள்விக்குறிகள் மட்டும்
பொதுவாய் இருந்ததை அவதானிக்க முடிந்தது. சலனமற்ற வளிமண்டலத்தில் ஒரு மேகமாக
பேச ஆரம்பித்தேன்.
"குண்டுகள் வெடிக்கவில்லை. ஆகாயத்தில் கச்சேரி
நடத்திய போர்விமானங்கள் பறக்கவில்லை. இரச்சல் கேட்டவுடன் பங்கர் தேடிய நிலை
இல்லை, புதிது புதிதாக பதுங்குழிகள் வெட்டவேண்டிய அவசியமில்லை.
நடந்துகொண்டே வாழ்ந்து திரிந்த வாழ்க்கை இல்லை. இராணுவம் அரணாக எங்கும்
அமைதி, எதிலும் அமைதி. அந்த சூழ்நிலையில் என்ன செய்வதாய் உத்தேசம்? இந்த
அமைதியை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது இவை கல்லறைச்சுவர் என
இயம்புகின்றீர்களா? என்ன செய்வதாய் உத்தேசம்?" என்றேன்.
பட்டியில்
அடைக்கப்பட்ட ஆடுகள் திறக்கப்பட்ட வாயில்நோக்கி விரைந்தோடுவதுபோல
கருத்துக்கள் பல ஒவ்வோருவரிடமிருந்தும் விரைந்து வரத்தொடங்கின. வெடிகளே
வெளிச்சம் கொடுத்த நாட்கள் அன்று இருந்தன. இன்று வெளிப்படையாக வெடியோசை
இல்லை. அவ்வளவே.
வெடித்து சிதறிய சில்லுகளாலும் பற்றி எரிந்த
குடில்களாலும், எங்களை பொசுக்கிபோன தழல்களாலும் நாங்கள் இழந்தது அதிகம்
தான். ஆனால் அவையெல்லாம் மீண்டும் பெற்றுவிடக்கூடியவை.
இப்போது
முடியாவிட்டாலும் காலச்சுழற்ச்சியில் பெற்றுவிடலாம்தான். ஆனால் இப்பொழுது
பொருளாதாரம் மற்றும் கலாச்சார சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறதே. இதை
எதைக்கொடுத்து பெறுவது? என்று அங்கலாய்த்தார்கள்.
காங்கேசன்துறையில்
மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த இடம் முழுவதும்
சுண்ணக்கல் அல்லது சுண்ணாம்புக்கல் அமுத சுரபிபோல கிடைக்கிறது. யாழ்ப்பாணம்
வளங்கள் நிறைந்த பூமி என்பதற்கு இவையும் சான்றாகும்.
இது சிமெண்ட்
தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களிள் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு
மொத்த இலங்கையின் சிமெண்ட தேவையை நிவர்த்தி செய்தது இந்த ஆலைதான்.
ஆனால்
இன்று அது மூடப்பட்டிருக்கிறது. இங்குள்ள கனிமங்களை வெட்டி
எடுக்கிறார்கள். அங்கேயே உடைக்கிறார்கள். தமிழர்களுக்கோ அதனால் எந்த பயனும்
கிடைப்பதில்லை.
மாறாக புத்தளத்தில் உள்ள சிங்களவனின் ஆலைக்கு அதனை
கொண்டு செல்கிறார்கள். வசதிகள் பறிக்கப்படும் அந்தப்பகுதியிலும்
மீள்குடியமர்த்தல் ”நடைபெறுகிறது” என்பது இன்னுமொரு அபத்தம் என்று சொல்லி
கொள்ளையிடும் கயவர்களை நினைத்து கொந்தளித்தார்கள்.
உயிருக்கும்
அச்சுறுத்தலுக்கும் பயந்து வீட்டை விட்டு ஓடிஒழிந்து திரிந்தவர்கள்
நாங்கள். அவதியிலிருந்து மீண்டு, மீண்டும் வந்தபோது எங்களது வீடுகள்
அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தது. காவலர்களின் ஆக்கிரமிப்பாகி அவை
இருந்ததன.
சொந்த வீடு இருந்தும் அந்நியமாகி நிற்கின்றோம். “இது
பொலிஸ் ஸ்டேசனுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதி” என்று பல்வேறு பகுதிகளில்
தகவல் பலகைகள் வைத்து முள் வேலியும் அமைத்து விட்டார்கள். எமது நிறைய
சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்கள்.
சிங்கள மொழி ஆதிக்கமும்
அதிகரித்துள்ளது. நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாடு பல்வேறு
அரசுசார்ந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
ஆனால் இனவெறிபிடித்த
சிங்கள அரசு, ஜனவரி 10ஆம் திகதி மாநாட்டின் இறுதிநாளில் யாழ்வீரசிங்க மண்டப
முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது.
அக்கொடூர துயரில் ஒன்பதுபேர் செத்து போனார்கள்.
இன்று அதே யாழ்ப்பாண
வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் சிங்களத்தின் தேசிய
கீதம் பாடப்பட்டுள்ளது. அனைத்து எதிர்ப்புக்களுக்கும் மிரட்டலுக்கும்
பின்னே முனகிகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி இல்லைத்தானே. இப்போது
சிங்களம் தெரிந்தால்தான் வாழமுடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார்கள்.
பரந்த மொழிஅறிவு இருக்கின்றபோது,
உலக ஞானத்தை, பெரியோர்களின் கருத்துக்களை, நாடுகடந்த விடுதலைப்போராட்டத்தை,
உண்மையின் உரைகல்லை நாம் அறிந்துகொள்ள முடியுமே என்று நான்கேட்டேன்.
அதற்கு,
மொழி விருப்பம் என்பது,தாய்ப்பால் தேடும் குழந்தைபோல இயல்பாக வரவேண்டும்.
இங்கே திணிக்கப்படுகிறது. அதிகாரத்தன்மையுடன் கட்டாயப்படுத்தப்படுகின்றது
என பரந்த பார்வையுடன் பேசினார்கள்.
குடிப்பழக்கமும் ஆபாச
குறுந்தகடுகளும் எம் சகோதரர்கள் பலரின் மூளையை சிதைத்து விட்டன. கடைசிகட்ட
போர் ஆரம்பிப்பதற்கு முன்பே குப்பை மேட்டிலும் பேரூந்து நிறுத்தத்திலுமாக
பல்வேறு இடங்களில் ஆபாச குறுந்தகடுகள் கேட்பாரற்று கொட்டி கிடந்தன.
அனைத்தையும் எடுத்து பார்த்து பழகி மூளையை மழுங்கடித்து கொண்டார்கள் சிலர்.
இன்னும்
சிலர் சாராயத்தின் வாசத்தில் நாட்டின் சுவாசத்தை வியாபாரம் செய்தார்கள்.
மிகப்பெரிய திட்டத்துடன் மறைமுகமாக அரங்கேற்றப்பட்ட இத்திட்டத்தில் நாம்
வீழ்ந்து போனோம். சிங்களவன் பயங்கர படைபலத்துடன் எங்களை நெருங்கியபோது
போகத்திற்கும் போதைக்கும் பழகிப்போன பலரின் மூளை நாட்டின் நாணயத்தன்மையை
மறைத்தது. இன்றுவரை மயக்கம் தெளியாமல் பலர் சீரழிந்து வருகிறார்கள்.
“மொழியும்,
கலையும், கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய
இனக்கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனிதவாழ்வும் சமூக
உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது” என்ற
நம் தலைவரின் நற்சிந்தனை நினைவுகளில் வந்து சென்ற வேளைகளில் மனம் திறந்த
விவாதத்தின் இடையே அரங்கிற்குள் ஒருவர் நேரடியாக நுழைந்தார்.
நம்
தேசத்தில் அரங்கேற்றப்பட்ட அநியாய போர் குறித்த ஐக்கியநாடுகள்
விசாரணைக்குழு தனது அறிக்கையை ஏப்பிரல் 12,2011 இல் ஐ.நா தலைமைச் செயலர்
பான் கீ மூனிடம் அளித்தது. அது ஏப்பிரல் 25ல் வெளியிடப்பட்டது. அந்த
அறிக்கை,
1. இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டவீச்சுக்கள் மூலம் பெரும்தொகை பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாயின.
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.
4.
போரில் உயிர்பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயரவைக்கப்பட்ட
மக்கள் மற்றும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்திற்குரியவர்கள்
ஆகியோர் தொடர்ந்தும் மனிதஉரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.
5.
போர்க்களத்திற்கு அப்பாலிருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற
திறனாய்வாளர்கள் மனிதஉரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று
தெளிவுபடுத்தியிருக்கின்றது.
ஆனால் வெளிநாட்டிற்கு பயணமான ரணில்
விக்கிரமசிங்க ஐ.நாவின் இந்த அறிக்கை பொய்யானது என்றும் இப்படியான அழிவுகள்
நடைபெறவே இல்லை என்றும் மற்ற நாட்டு தலைவர்களிடம் பேசியிருக்கின்றார்.
தனது
அரசியல் எதிரி அழியட்டும் என்ற எண்ணத்தைவிட தமிழர்கள் அழியட்டும் என்ற
எண்ணமே மேலோங்கியிருக்கின்றது என்ற எண்ணத்தை பதிவுசெய்திருந்தார்.
யூலை
23 நம் எல்லோருக்கும் கருப்பு ஜூலையாகும். அந்த நாட்களில் நாம்
கறுப்புகொடிகட்டி. கண்டன ஊர்வலங்கள் நடாத்தி இக்கால சந்ததியினருக்கு 1981
இல் சிங்கள காடையர்களால் நம்மவர்கள் அனுபவித்த கொடும் துயரங்களை,
நம்குலப்பெண்கள் சீரழிக்கப்பட்தை, வணிக வளாகங்கள் இரையாக்கப்படதை, நாம்
அகதிகளாக ஓட ஆரம்பித்ததை எடுத்தியம்பி வருகின்றோம்.
ஆனால் இந்த
ஆண்டு அதே நாளில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது(23.07.2011). அன்று
நாம் ஒன்றுமே செய்ய முடியாது. நம் வரலாற்று காயங்களை மறைக்கும் அல்லது
மறக்கச்செய்யும் ஆதிக்க வகுப்பினரின் இதுபோன்ற அடக்குமுறைகள் தொடருமானால்
நிச்சயம் நமது வரலாறு நம்மோடு புதைந்து போகும் என்ற ஆதங்கத்தை
முன்வைத்தார்கள். வரலாற்றை முன்னெடுக்கவேண்டிய ஆர்வத்திற்கு
ஒளியேற்றினார்கள்.
எல்லா நாட்டிலுமே சுதந்திரத்திற்கான வழிமுறைகள்
காலத்திற்கு ஏற்றால் போல மாற்றம் கண்டிருக்கின்றன. நமது போராட்டமும் பல
சூழல்களில் மெருகேறியிருக்கின்றது. புது வழிகளில் நடைபோட்டிருக்கின்றது.
அனைத்து போராட்ட வடிவங்களுமே வெற்றியை தந்துவிடுவதில்லை. நிறைந்த அனுபவ
பாடங்களையும் தோல்விகளையும் தந்திருக்கின்றன. அதற்காக விடுதலை வேட்கையை
அணையவிடக்கூடாது. பாதங்கள் நடக்க தயாராகிவிட்டால் பாதைகள் தானே
கிடைத்துவிடும்.
வேதனையும் அச்சமும் கலந்து தொடர்ந்து பகிர்ந்து
கொண்டவர்கள், சமுதாய மாற்றம் நிச்சயமாக இளைஞர்களால் முடியும் என்ற
திசைக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
“இளைஞர்களுக்குள் மாற்றத்தை
கொண்டுவந்து இளைஞர்கள் வழியாக சமுதாயத்திற்குள் செல்லும்போது நிச்சயமாக
நல்ல மாற்றங்கள் ஏற்படும்.” என்ற உற்சாகம் கலந்து உத்வேகத்துடன்
முன்வைத்தார்கள்.
கலாச்சாரம் பண்பாட்டு சுரண்டல்களுக்கு மத்தியில்
எதிர் நீச்சல்போடவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எதிர்நீச்சல்போட்டு
இந்நிலையை தாண்டிவிட்டால் எதிர்காலம் நமக்கு வசந்தமாகும். அதற்காக நாம்
அணியமாவோம். வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் பரவலாக்குவோம் என்ற புரிதலுடன்
கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது
இக்கூட்டத்தை தவற விட்டவர்கள் நிறைய இழந்துவிட்டார்கள் என்றார்கள். புதிய
தளங்களுக்குள் எங்களை அழைத்து சென்றுள்ளீர்கள். எங்களது பகுத்தறிவு
பார்வைகளை புதுப்பித்துள்ளீர்கள் என்று சொன்னார்கள். எங்கள் பகுதிக்கு
வாருங்கள் எங்கள் இளைஞர் யுவதிகளிடமும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
செய்யுங்கள் போன்ற கருத்துக்களை பகிந்ந்து கொண்டார்கள்.
அப்போது
அருகில் வந்த யுவதி ஒருத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் நெஞ்சை
அரித்துகொண்டிருந்த தகவல்களை, கோபங்களை, எதிர்பார்ப்புக்களை, ஏமாற்றங்களை
முதல்முறையாக இறக்கி வைத்துள்ளோம்.
எழுதவும் பேசவும் பயந்து
வீட்டுக்குள் ஆத்திரத்துடன் அடங்கி கிடந்த எங்கள் உணர்வுகளை எடுத்து வைக்க
இடமளித்தமைக்கு உளப்பூரிப்பான நன்றிகள். இனி நிச்சயம் சிறுவட்டத்திலாவது
தொடர்ந்து கதைப்போம். வரலாற்றை உயிர்ப்புடன் பாதுகாப்போம் என்றார்கள்.
இப்போது எனக்கு மனம் நிறைந்தது.
சந்திப்போம்...
அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
ஈழநேசன்

பாகம் 2.
எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன
நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட
சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும்
ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக்
காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும்
ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.
வெட்கத்தையும் பரிகசித்தவர்களின்
பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க
முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம் ஈழத்து யுவதிகளது
கூக்குரலின் ஆதாரம் இது.
காலை பத்து மணி இருக்கும், அயலூரில்
இருந்து என் வருகை தெரிந்து என்னைச் சந்திக்க வந்தபோது. தன்னை அறிமுகம்
செய்துகொண்டு தன் தோழிகளுடன் முன்னிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.
மற்றவர்களும் சற்றுத் தயக்கமும் கண்களில் கலக்கமுமாக என் முன்
தோழிகளுக்குத் துணையாக ஆசுவாசமாக அமர்ந்தார்கள்.
1987, ஆகஸ்ட் மாதம்
இரண்டாவது வாரத்தில் ஃபிரண்லைன் மற்றம் இந்து இதழ்களுக்கு கொடுத்த
பேட்டியில் தமிழினத் தலைவர் வே.பிரபாகரன், “எமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை
எங்கள் இதயங்கள் மிக ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று
குறிப்பிட்டிருந்தார் (ஃபிரண்லைன் 04.09.1987). தாங்கமுடியா வெப்பத்துடன்
அதே உணர்ச்சிகளின் தகிப்புடன் என் முன்னே அமர்ந்திருந்தார்கள். வெப்பத்தின்
வீச்சு கதிர் வீச்சு போல அரித்தது.
அவள் பேச ஆரம்பித்தாள். பாசமும்
கண்டிப்பும் இரண்டு கண்களாக பூசிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் நான்.
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் பிள்ளை. அதனாலேயே செல்லமாக
வளர்க்கப்பட்டேன். கனிவுடன் கற்பிக்கப்பட்டேன். இளமை தமது அழைப்பிதழை
நீட்டிய பிறகு கலை ஞாயிறென ஒளிர்ந்திருந்தேன்.
இள மொட்டுக்கள்
நாங்கள் கூடிய நேரங்களில் எமது நாட்டின் நிலைமைகளையும் பேசியிருக்கின்றோம்.
“நில மீட்புக்காகவே இந்தப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழீழம்
எமக்கு சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது
வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த
நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம். இந்த நிலத்தை தனது
சொந்த நிலம் என்கிறான் எதிரி” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 1999-ஆம்
ஆண்டு மாவீர்ர் தின உரை முழக்கத்தையும் சிலிர்ப்புடன்
சிலாகித்திருக்கின்றோம்.
பல யுவதிகள் போராட்டத்திற்கு தற்கையளிப்பு
செய்தபோது, எனக்குள்ளும் ஆர்வம் இருந்தது. நான் இல்லை என்று சொல்லவில்லை.
என் நாட்டிற்கா போராட வேண்டும் காடையரின் கங்கறுக்க வேண்டும் காலத்திற்கும்
தமிழீழம வாழ வேண்டும் என்ற வேகம் இருந்தது. ஆனால் ஏனோ சரியான சந்தர்ப்பம்
அமையவில்லை. வீட்டிலும் ஒரே கவலை. பாசம் தானே. அவர்களும் என்னதான்
செய்வார்கள். ஒரே பிள்ளையாயிற்றே.
எனவே யாராவது வந்து கூப்பிட்டால்
கூட நான் போய்விடக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
ஆனால், காலத்தின் சூத்திரம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
2008-ஆம் ஆண்டு சிங்களவனின் கொடூர முகம் குண்டுகளாய்
விழ ஆரம்பித்தது. அவனது அகங்காரச் சிரிப்பு நெருப்புப் பிழம்புகளாய் பற்றி
எரிந்தது. தப்பிக்க வழிதேடி எல்லோரும் ஓடியது போல, நாங்களும் கையில்
அகப்பட்டதை கக்கத்தில் அடைத்துக் கொண்டு ஓடி ஒளிய ஆரம்பித்தோம்.
வானத்தையும் அதில் ரீங்காரமிடும் விமானத்தையும் பார்த்து அழுதபடி
ஓடிக்கொண்டே இருந்தோம். நடந்து மூச்சு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம்.
என்னால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. எனவே என் பெற்றோர் என்னைப்
பாதுகாக்கும் வழி தேடினார்கள். தேவிபுரம் காட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு என்
சித்தப்பா என்னை மட்டும அழைத்துச் சென்றார்கள்.
அந்த வீட்டிலும்
மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இங்கு ஓர் உறவினர் இருக்கிறார் என்ற
எந்த அறிமுகமும் அதுநாள் வரை என் பெற்றோர் சொன்னதில்லை. காரணம், அவர்கள்
எங்களது ரத்த சொந்தமோ மத்த சொந்தமோ இல்லை. ஈழச் சொந்தம் மட்டுமே.
அச்சொந்தம்
யாரையும் ஏமாற்றாது என்பது எம் சித்தப்பாவின நம்பிக்கை. அதன்படி என்ன
அவர்களது வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். நம்பிக்கை
பொய்க்கவில்லை. தமது பிள்ளைகளில் ஒருத்தியாகவே என்னை பராமரித்து
வந்தார்கள். நாள் கணக்கு இல்லை.... வாரக் கணக்கும் இல்லை....மாதக் கணக்கு.
ஆம், நான் ஆறு மாதங்கள் அந்த வீட்டிலே இருந்தேன். வெளியார் யாருக்கும்
தெரியாமல் மறைந்திருந்தேன்.
ஒரே கவலை. எங்கே போனார்கள் தாயும்
தந்தையும் என் குடும்பத்தினரும். எந்த பிரதேசத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே... வேளாவேளைக்கு
சாப்பிட்டார்களா.... ஓய்வாக உறங்கினார்களா ... அதற்கெல்லாம் தான்
வாய்ப்பிருக்காதே... பிறகு என்ன ஆயிருக்கும்...? நாமாவது ஒரே இடத்தில்
இருப்பதால் உண்ண உணவு, உறங்க வீடு இருக்கிறது. பதுங்கிக்கொள்ள பங்கர்
இருக்கிறது. பெற்றோருக்கு....
என் பெற்றோர் காயத்துடன் எங்காவது
ஆதரவின்றி கிடப்பார்களோ... ஒரு வேளை உணவும் இன்றி, தப்பிக்க வழியுமின்றி
சிங்களவனின் குண்டு பாய்ந்து செத்துப் போயிருப்பாங்களோ...? நினைத்த
மாத்திரத்திலேயே நெஞ்சம் விம்மியது. குரல் கம்மியது. எப்படி தூங்கினேன்.
எப்பொழுது தூங்கினேன் என்பதெல்லாம் தெரியாது. ஒருவேளை அழுது வீங்கிய
கண்களுக்கேது தெரியுமோ இல்லையோ!
எதிர்பார்த்திராத வேளையில் ஒருநாள்
என் பெற்றோர் என்னைத் தேடி வந்தார்கள். இனியும் காலம் தாழ்த்தி என்ன செய்ய
என நினைத்தவர்கள் என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். நாங்கள்
அதுவரை இருந்த இடம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை காவு வாங்கிய
சிங்களவனின் குரூரத்தை வெளிக்காட்டிய முள்ளிவாய்க்காலுக்கு அருகில் இருந்த
இடம். அது 2009, மே 29 ஆம் தேதி நடந்தது. நாங்கள் பிப்ரவரி மாதம்
அங்கிருந்து கிளம்பினோம்.
என்ன கையில் கிடைக்கிறதோ அதைக் கொண்டு
போகும் நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதியாக கையில்
அகப்பட்டதைக் கொண்டு சென்றோம். கடல் வழியாகப் பயணித்தோம். கரையிரங்கும் வரை
கதிகலங்கிப் போயிருந்தோம். அதோ கரை தெரிகிறது. அந்த இடம் தான் பருத்தித்
துறை என மெதுவாகப் பேசிக்கொண்டோம்.
ஏனென்றால் அது, கட்டுப்பாடு
இல்லாத சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
பருத்தித்துறையில் வந்து இறங்கினோம். துப்பாக்கியின் குரூர வாசத்தில் சுகம்
காணும் வீரர்கள் இருவர் எங்களை வழி நடத்தினார்கள். இல்லை இல்லை
“வலி”காட்டினார்கள்.
அவர்கள் குறித்திருந்த இடத்தில்
நிறுத்தப்பட்டோம். சுற்றிலும் இராணுவ வீர்ர்கள் நின்றார்கள். வீடியோ
கேமராக்கள் தயார் நிலையில் இருந்தன. எமக்கு விடுதலை அளித்து அதை வெளி
உலகுக்கு அறிவிக்கப் போகிறானோ என நினைத்துக் கொண்டிருந்த போது, எல்லோரும்
உங்கள் உடுப்புக்களை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நில்லுங்கள் என்ற
மானங்கெட்ட குரல் இடியென இறங்கியது. நாங்கள் அதிர்ந்து போனோம்.
முகத்தில்
கைபொத்தி விம்மி விம்மி அழுதோம். வெடி ஓசைக்குப் பழக்கப்பட்டவனின் காதில்
விம்மல் புரியாமலே போனது. கறிக்கடைக்காரனிடம் ஜீவகாரூண்யம் பேசினது போல்
இருந்தது.
எம்மைச் சுற்றி என் தந்தை நின்றார். என் தாய் நின்றார்.
எம்மோடு கடல் பயணத்தில் உயிர் மூச்சின் அனலோடு வந்த சகோதர சகோதரிகள்
நின்றார்கள். அவமானமும் வெட்கமும் எல்லோரையும் ஆட்சி செலுத்தியது.
யாரும்
யாரையும் காப்பாற்ற முடியாமல் நின்றோம். ஆறுதல் கூற முடியாமல் தவித்தோம்.
ஒரு வீட்டில் இறப்பு நடந்தால் ஊரே திரண்டு ஆறுதல் சொல்லும். ஊர் முழுவதும்
இறப்பு என்றால் யார்தான் யாருக்காக அழ முடியும். அதே நிலையில்தான் நாங்கள்
அழுதுகொண்டிருந்தோம். ஆனால் வீடியோ கேமராக்கள் தயாராயின. காமப் பார்வையின்
கண்கள் வழி காட்சிகள் கரைந்து விழுந்தன.
சில நாட்களுக்கு முன் யுவதி
ஒருத்தி கருத்தாங்க வேண்டிய வயிற்றின் மீது வெடிகுண்டு சுமந்து வந்தாராம்.
தான் பிறந்த மகிழ்வின் அடையாளத்தை தாயின் வயிற்றின் மேல் கோட்டோவியமாய்
தீட்டி மகிழ்வார்கள் பிள்ளைகள். ஆனால், அந்த ஓவிய மொழியைப் புரிந்து
ஆனந்திக்கும் வாய்ப்பை புறந்தள்ளி ஈழத்தாயின் வயிற்றில் கோட்டோவியம் தீட்ட
அந்த பெண் பிள்ளை வந்திருக்கிறாள். சிங்களவனின் சோதனையில் சிக்கி
சின்னாபின்னமாகியிருக்கிறாள்.
எனவே, பருத்தித்துறைக்கு வந்திறங்கும்
அனைவரையும் அவிழ்த்துப் பார்த்தார்கள். அதனைப் படமாக்கினார்கள். அவர்களது
கெடுபிடிக்கும் கேமராவுக்கும் தப்பமுடியாததால், எல்லாம் முடிந்த பிறகு
வெட்கத்துடன் எல்லோருடனும் நடந்தேன்.
“பெண் விடுதலை என்ற இலட்சியப்
போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை”
என்ற எம் தமிழினத் தலைவருடைய பெண்ணுரிமைச் செயல்பாட்டின் வைர வரிகளை
நினைத்தபடி வந்தேன்.
யார் முகத்தையும் யாராலும் அதன் பிறகு பார்த்து பேசமுடியவில்லை. மனதில் இருந்த ரணம் முகத்திலும் தெரிந்தது.
இன்னும் வரும்...

Similar topics
» கருணாநிதியை 6 மணி நேரம் காக்க வைத்த சோனியா
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» தையல் மெசின்னில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி ?
» 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1