புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கேடயம் I_vote_lcapகேடயம் I_voting_barகேடயம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:19 am

`கிர்ர்...' -மணி ஐந்தரை ஆகிவிட்டதை அறிவித்து, தொடர்ந்து அலறியது அலாரம்.

ஞாயிற்றுக்கிழமை அதுவும் அதிகாலை நேரத்தில் ஒரு வேலை வைத்துக் கொண்டு அசந்து தூங்கியவன் முழித்தால் இப்படித்தான் எரிச்சல் வரும்.

செல்வம் முழு வீச்சில் அலாரம் தலையில் ஒரு தட்டு தட்டினான். நீண்டு கொண்டிருந்த பட்டன் உள்ளுக்குள் பயந்து ஓடிப் போனது. இந்த `கிர்ர்...' சப்தம் அவனைத் தவிர யாரையும் தொந்திரவு செய்யவில்லை. வளர்மதி மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆறு வயது மகன் அஜய் லேசான சிணுங்கல் அழுகையுடன் புரண்டு படுத்து அமைதியானான்.

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவனின் தம்பி கல்யாணம். ஆறு-ஏழரை முகூர்த்தம். இன்னும் அரைமணி நேரம் தூங்க ஆசைப்பட்டது செல்வம் மனது. கண்ணில் சொச்ச தூக்கம் வைத்துக் கொண்டே, மணி தெரிந்து கொள்ள அலாரத்தை தேடிய போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கைப்பட்டு அலாரம் கீழே விழுந்தது. நல்ல வேளையாக உடையவில்லை. அலாரத்தை எடுத்துப் பார்த்தவன்... லேசாக கலவரமானான்.

சாவிக் கொடுக்கும் திருகாணி மடங்கி இருந்தது. லாவகமாக நேர்படுத்தினாலும்... கடிகாரம் ஓடவில்லை. ஸ்பிரிங் உடைந்து விட்டதோ என்னவோ! புதிய அலாரம். போன மாத சம்பளத்தில் வாங்கியது. நல்ல வேளையாக இந்த விடியற்காலை அசம்பாவிதத்தை வளர்மதி பார்க்கவில்லை. அவள் திட்ட ஆரம்பித்து விட்டால் கோயம்பேடு மார்க்கெட் கழிவு மாதிரி அவனது நிலைமை மோசமாகிவிடும். நல்ல பிள்ளை மாதிரி இருந்த இடத்தில் வைத்து விட்டு அரவம் இல்லாமல் குளியலறை நோக்கி போனான்.

மதியம் ஒரு மணி போல திரும்பி வரும் போது, வளர்மதி முகம் இயல்பாகவே இருந்தது. செருப்பு சப்தம் கேட்டு திரும்பி பார்த்தவள். `தொரைக்கு... கல்யாண வீட்ல இவ்வளவு நேரம் என்ன வேலையோ?' என்றுஆரம்பித்தாள்.

"நெருங்கின நண்பன்... உடனே வந்தா நல்லா இருக்குமா.. மொய் எழுத உட்கார வச்சுட்டான்...''

ஓரக் கண்ணால் அலாரத்தை பார்த்தான். ஐந்தரையிலேயே அசையாமல் நின்றிருந்தது. நான் தான் காரணம் என்று தெரிந்தால்... ஒருவழி பண்ணி விடுவாள். நீங்க எதுக்கும் லாயக்கு இல்ல... பொறுப்பு இல்லாத மனுஷனை கட்டிக்கிட்டு வாழ்க்கை பூரா என்னென்ன கஷ்டம் அனுபவிக்கப் போறேனோ...' என்கிற விதத்தில் ஒரு பெரிய கலாட்டாவே பண்ணி விடுவாள்.

கிரிக்கெட் மட்டையுடன் ஓடி வந்தான் மகன் அஜய். தாம்பூலப் பையில் கைவிட்டு அவன் எதிர்பார்த்த சாக்லெட் கிடைத்ததும், சந்தோஷம் பொங்க பிரித்து வாயில் போட்டுக் கொண்டதை அப்பாஸ்தானம் ரசித்தது.

`ஆபீஸ் ஸ்டாப் எல்லாம் வந்திருந்தாங்க... ஒரே அரட்டை...'

`அதுக்கு தான் தெனம் ஆபீஸ் போறீங்களே...'

காமெடியாகப் பேசுகிறாளாம்... சிரித்து வைத்தான்.

மின் விசிறியை சுழல விட்டு... சோபாவில் சாய்ந்தான். வளர்மதி துடைப்பத்துடன் அறையை சுத்தம் பண்ண வந்த போது, எதேச்சையாக அலாரத்தை பார்த்தது மாதிரி செல்வம் அலறினான்.

"ஐய்யய்யோ... வளர்மதி டைம் பீஸ் என்னாச்சு... ஓடல?''

`என்னது ஓடலையா' திரும்பிப் பார்த்தவள் "என்னங்க ஆச்சு...''

`என்னைக் கேட்டா...' தான் கல்யாணத்துக்கு போய் விட்டதை சாக்காக சொல்லிக் கொள்ள தயார் ஆகி விட்ட செல்வம், அலாரத்தை கையிலெடுத்து கீ கொடுத்து, உதட்டை பிதுக்கினான். `ஏதோ... ரிப்பேர்... ஸ்பிரிங் லூசா இருக்கு போலிருக்கு...'

`நீங்களும் கல்யாணத்துக்கு போயிட்டீங்க... நானும் சமையல் அறையில இருந்தேன். இந்த அஜய் பயல் தான் வீட்டுக்கும், வாசலுக்குமா ஓடிக்கிட்டு இருந்தான்...'

`சரி.. சரி விடு. வாரன்டி இருக்கு இல்ல... பாத்துக்கலாம்...'

`அப்படியா... காசு வாங்காம சரி பண்ணி கொடுத்துடுவானா...'

`அதான் வாரன்டி... கவலைப்படாதே...'

`ஐயோ... என் புத்திசாலி புருஷனே...ஷார்ப்பா யோசிக்கிறீங்களே...' அவன் காலையிலேயே யோசித்து வைத்திருந்ததுக்கு இப்போது பாராட்டு.

செமையா கலக்குறடா செல்வம்... அவன் முதுகில் அவனே சபாஷ் போட்டுக் கொண்டான்.

ஆயினும் தான் செய்த தவறுக்கு மகனை குற்றக் கூண்டில் நிற்க வைத்தது மனதை கலக்கவே செய்தது.

வளர்மதி மகனை குரல் கொடுத்து கூப்பிட... செல்வம் பெரிய குரல் கொடுத்து `விளையாடட்டும் விடேன்... அதான் கேரண்டி இருக்கு இல்ல... சின்ன விஷயம், பெரிசு படுத்தாத. சின்ன பசங்கன்னா... கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்... அதை சகிச்சு அட்ஸட் பண்ணிக்கிறவங்க பேரு தான்... அப்பா, அம்மா...'

வளர்மதி அமைதி ஆகி விட்டாலும், செல்வத்தின் மனது அமைதி ஆகவில்லை. தனது தவறுக்கு அநியாயமாக சின்னப் பிள்ளை அஜயை கேடயமாக பயன்படுத்திக் கொண்டது எந்த விதத்திலும் நியாயமில்லையே...'

அன்று மாலை...

கேரன்டி கார்டும், கடிகாரமுமாக கிளம்பும் போது அஜய் வருவதாக அடம் பிடித்தான். அம்மா அடிக்காமலேயே அழுதான். வளர்மதி சிபாரிசுடன் வெளிப்பட்டான்.

`பாவம்... அழறான்... அழைச்சுக்கிட்டு போங்களேன்...'

அப்பீல் ஏது? பைக் முன்பு உட்கார்வதில் அஜய் ஆர்வம் காட்டினான். வேகமாக போகும் போது, சில்'லென எதிர்ப்படும் காற்று, முடியை சிலுப்பி விளையாட்டுக் காட்டும். காற்றின் அந்த விளையாட்டு, அவனுக்கு பிடிக்கும். அதற்காகத்தான் அடம் பிடித்து வந்திருக்கிறான்.

கேரன்டி கார்டு தைரியத்தில் வந்து விட்டாலும் அதை பயன்படுத்தி சலுகை அனுபவித்த பழக்கம் அவனுக்கு இல்லை. கேரன்டி என்பது வியாபார தந்திரம். இது செல்வத்தின் கருத்து. தெரு முனை பழுது பார்ப்பவன் இருபது ரூபாய் கொடுத்தால் சரி செய்து விடுவான் என்று வளர்மதியிடம் சமயம் பார்த்து செல்வம் சொல்லிப் பார்க்க, அவள் விடுவதாக இல்லை. உபகரணங்களை மாற்றி விடுவான் என்ற வளர்மதி, கேரன்டி கார்டும் கையுமாக அனுப்பியும் வைத்து விட்டாளே!

விளக்கு அலங்காரத்தில் கலை நயத்துடன் அந்த கடிகார ஷோ-ரூம் ஜொலித்துக் கொண்டிருந்தது. குளிரூட்டப்பட்டிருந்த அறை அஜய்யை பரவசப்படுத்தியது.

`அலாரம் கீ டைட் ஆகல மேடம்... கேரன்டி இருக்கு... இந்தாங்க கார்டு..'

அந்த ரிசப்ஷன் பெண்மணி, அவனது பதட்டத்தையும், பயத்தையும் உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். ரசீது ஒன்றில் ரிப்பேர் விபரம் எழுதி, கடிகாரத்துடன் சேர்த்து பக்கத்து அறைக்கு கவுண்டர் வழியாக அனுப்பி வைத்தாள்.

`சார்... ஸ்பிரிங் தன்னால உடைய சான்ஸ் இல்லையே... என்னாச்சு? திருகிற திசை படமெல்லாம் போட்டிருக்கு அதை சரியா பாக்கலையா?'

அவளது நுனி நாக்கில் குறும்பு கலந்து இருந்தது. கலாய்ப்பது போலவும் இருந்தது. தெரு முனை பழுது பார்ப்பவன் இது மாதிரி எல்லாம் கேட்க மாட்டான். செல்வம் தர்ம சங்கடத்துடன் தவித்தான். அந்தப் பெண்மணி சோதனையாக, அவனையே பார்ப்பது போலவும் இருந்தது.

"அது வந்து...மேடம்...இவன் என் பையன். சரியான வாலு. காலையில் கடிகாரத்தை தூக்கி வெச்சிக்கிட்டு கண்ட மேனிக்கு திருகிட்டு இருந்தான். அப்ப ஏதேனும் ஆகியிருக்கும்...''

பொய் என்பதால் கொஞ்சம் தடுமாற்றமாகவே வந்து விழுந்தன வார்த்தைகள்.

கண்ணாடி கூண்டுக்குள் புத்தம் புது மீன் குஞ்சுகளாய் நீண்டு கிடந்த கடிகாரங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய் கவனம் சிதறி, உதார் விடும் அப்பாவை பார்த்தான். அவனது ஆர்வம் குன்றிப் போனது. தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்தவனை அந்தப் பெண்மணி உன்னிப்பாக பார்த்தாள்.

`சின்ன மனுஷா... என்ன படிக்கிற?'

`செகண்ட் ஸ்டாண்டர்ட்...'

`இன்னும் விளையாட்டுத்தனம் மாறாம இருக்கியே...'

அவளது கேள்விகள் தன்னை தாக்குவதாக செல்வம் உணர்ந்தான்.

பத்து நிமிடத்தில் அந்தக் கடிகாரம் பழுது நீக்கப்பட்டு வந்தது. இரண்டொரு முறை அலார ஒலி எழுப்பிக் காட்டினாள். பாலிதீன் கவரில் போட்டு நீட்டினாள்.

`மேடம் பே... பண்ணணுமா...'

`வேண்டாம்... பாவம், பையனுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுங்க...' அவள் சிரித்ததை கவனிக்காதது மாதிரி நழுவிய செல்வம், பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

`என்ன அஜய் தூக்கமா... அமைதி ஆயிட்டே... ஐந்து நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம்....'

`ஏம்ப்பா... பொய்... பொய்யா சொல்றீங்க?' செல்வம் அவனையும் அறியாமல் வேகம் குறைத்து `என்னப்பா சொல்றே...'

என்றான்.`வீட்டுக்கு போக எப்படியும் அரைமணி நேரமாகும். ஐந்து நிமிஷத்துல போயிடலாம்னு அசால்ட்டா பொய் சொல்றீங்களே... பொய் சொல்லக் கூடாது. அது தான் அம்மா... அப்பா...'

முறை தவறி பயன்படுத்தினால் கேடயம் கூட அவனையே தாக்கும் ஆயுதமாகி விடும். வாகனவேகத்தின் எதிர்க்காற்றில் அஜய் முடிக்கற்றை துள்ளாட்டம் போட்டது. பாவம் அந்த காற்றால் கூட செல்வத்தின் வியர்வை பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.


- இள.அழகிரி



கேடயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 9:48 am

நல்ல கதை. பிள்ளைகள் முன்னாடி போய் சொல்ல கூடாது. அது எண்ணிக்குமே ஆபத்துதான் என்பதை உணர்த்தும் கதை



கேடயம் Uகேடயம் Dகேடயம் Aகேடயம் Yகேடயம் Aகேடயம் Sகேடயம் Uகேடயம் Dகேடயம் Hகேடயம் A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக