புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மண்ணில் அந்நிய மனிதங்கள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்திய மண்ணில் அந்நிய மனிதங்கள்
(இந்தக் கட்டுரை இன்று 30.10.2011 மலேசிய நண்பன் ஞாயிறு மலரில் பிரசுரம் ஆனது)
ஆதிகால மனிதன் சக்கி முக்கி கற்களைக் கண்டுபிடித்தான். ஆசையாய்த் தொட்டுப் பார்த்தான். ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆனந்தமாய் ஆடிப் பாடினான். ஆற்றில் பிடித்ததை காற்றில் பறந்ததைச் சுட்டுச் சாப்பிட்டான். கிடைத்ததை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தான். சுத்தமாய்ச் சுகமாய் வாழ்ந்து காட்டினான். அது அப்போதைய வரலாறு.
கருணம்மா என்பவர் இப்போது இடுப்புக்கு
கீழ் உணர்வு இல்லாமல் அவதிப் படுகிறார்
ஆனால், அதே மனிதன் இப்போது என்ன செய்கிறான். ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி ஆயிரம் ஆயிரம் எலிகளை அடித்துப் பிடித்து வெட்டிப் பார்க்கிறான். ஆயிரம் கோடி சுண்டெலிகளை நசுக்கிப் பொசுக்கி அசிங்கப் படுத்துகிறான். அவனுடைய ஆராய்ச்சிக்கு அளவே இல்லை. ஆசைக்கும் அளவே இல்லை.
அந்த ஆராய்ச்சிகள் அதோடு நின்றால் பரவாயில்லை. அதையும் தாண்டிப் போய் மனித உணர்வுகளை வதக்கி எடுத்து வேடிக்கை பார்க்கின்றன. ஏழை இந்திய மக்களின் உயிர்களைக் கோமாளிக் கூண்டில் நிறுத்தி அவற்றைப் பகடைக் காய்களாக மாற்றிப் பார்க்கின்றன.
மருந்து பரிசோதனை செய்யப் பட்ட
கர்நாடகா மநிலப் பெண்கள்
அவை மனித நேயங்களை மாசு படுத்தும் மிக மோசமான அவலட்சணங்கள் தானே! ஒன்றே ஒன்று சொல்வேன். உலகின் பல இடங்களில் துலாபாரத் தூண்கள் தூசுகளாகித் தூர்ந்து போய் விட்டன. இது இப்போதைய வரலாறு. பதற்றப் படாமல் படியுங்கள்.
அண்மைய காலங்களில் நடந்து வருகின்ற ஓர் உண்மையைச் சொல்கிறேன். அந்நிய நாட்டு மருத்துவ ஆய்வுக் கூடங்கள் ஆராய்ச்சி எனும் பாவனையில் தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் நுழைகின்றன.
அங்கு படிக்கும் மாணவர்களிடம் ஆயிரம், பத்தாயிரம் என்று சொல்லி ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளிக்கின்றன. [சான்று: http://indiatoday.intoday.in/story/india-an-easy-target-for-cheap-drug-trials/1/141921.html]
அப்புறம் அவர்களை ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். சுண்டெலிகளுக்குப் பதிலாக புதுப் புது மருந்துகளை அவர்களின் உடல்களில் பாய்ச்சுகின்றன.
Engineering Students fell Pray to Pharma
அந்த மருந்துகள் என்னென்ன பக்கவாதங்களை விளைவிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கின்றன. அதாவது அவர்களை மனிதச் சுண்டெலிகளாக மாற்றிப் பார்க்கின்றன என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.
இவை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்து வரும் நவீன வியாபாரத் திருகு தாளங்கள். உங்களுக்கு அப்பச் சட்டியில் ஆட்டா உருண்டை சுடத் தெரியுமா. தெரியாவிட்டால் பரவாயில்லை. அங்கே கணக்கு வழக்கு இல்லாமல் ஜால்ரா போடும் ஜிங்கு சிக்கான் பணப் பெருச்சாளிகள் நெட்டி உடைக்கின்றன. அவற்றிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
Guinea Pig Nation Pharmas Use People
As Drug Test Fodder in India
இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். மனதைக் கொஞ்சம் இறுக்கிக் கொள்ளுங்கள். எந்த ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்தாலும் முதலில் அந்த மருந்தை சுண்டெலிகளுக்கு அல்லது கினியா முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதுதான் காலம் காலமாக மருத்துவ உலகில் நடந்து வரும் ஒரு பாரம்பரிய வழக்கம்.
அப்படி பரிசோதிக்கும் போது ஆயிரக் கணக்கான சுண்டெலிகள் பலியாவது வழக்கம். ஊசி மூலம் செலுத்தப் படும் மருந்துகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்துப் போகும் எலிகள் உண்டு.
மருந்தின் வேகத்தினால் வலிப்பு வந்து மரித்துப் போகும் எலிகள் உண்டு. மருந்தின் அதீத வக்கிரமத்தினால் உள் உறுப்புகள் சிதைந்து போய் சின்னா பின்னாமாகிப் போன எலிகள் உண்டு. மருந்தின் ஒவ்வாமையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரணமாகிக் கொடூரமானச் சாவுகளை அனுபவித்த எலிகளும் உண்டு. [சான்று: http://www.nature.com/news/2011/110622/full/474427a.html]
அதன் பின்னர் தான், அந்த மருந்து மனிதப் பயன்பாட்டிற்கு ஒத்து வருமா இல்லையா என்று முடிவு செய்வார்கள். எந்த வகையில் ஒத்துப் போகும் என்பதையும் முடிவு செய்வார்கள். அது வரை அந்த மருந்தை விற்பனைக்கு அனுப்ப மாட்டார்கள். மனிதர்கள் பயன்படுத்த அனுமதிக்கவும் மாட்டார்கள்.
ஆனால், நிலைமை இன்று அப்படி இல்லை. மேலை நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என்ன செய்கின்றன தெரியுமா. ஏழைகள் அதிகமாக உள்ள இந்திய ஆப்ரிக்க நாடுகளுக்குப் படை எடுத்துப் போகின்றன. தங்களது மருத்துவ ஆய்வுகளில் அங்குள்ள ஏழை மக்களிடம் இனிமையான வார்த்தைகளைப் பேசி அவர்களை எலிகளாய் முயல்களாய்ப் பயன்படுத்தி வருகின்றன.
‘உலக மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறோம். இதனால், உலகத்தில் எத்தனையோ கோடி பேர் நன்மை அடையப் போகிறார்கள். ஏற்கனவே, அமெரிக்காவில், அங்கோலாவில், ஆஸ்திரேலியாவில் செய்து பார்த்தாகி விட்டது.
American Murder Association
அங்கே யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இங்கே இந்தியாவிலும் இந்த மருந்து நல்லபடியாக வேலை செய்கிறது. இளைஞர்களிடம் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்’ என்று சத்தியத்தில் சவரம் செய்வார்கள்.
அந்த இளைஞர், இளைஞிகளுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் என்று கொடுப்பார்கள். அவர்களும் காசை வாங்கிக் கொண்டு தங்களுடைய உடலைப் பரிசோதனைக்கு தாரை வார்த்துக் கொடுப்பார்கள். அப்புறம் அந்த உடலகள் பந்து விளையாட்டுத் திடல்களாக மாறும்.
அடுக்கு அடுக்கான ஆராய்ச்சிகள். எல்லாம் கருணை பகவான் சித்தம். ஒரு சில நாட்களில் மருந்து அதன் வேகத்தைக் காட்டும். நேரம் சரி இல்லை என்றால், சனி பகவான் சங்கு ஊத சகுனம் பார்ப்பார்.
[சான்று: http://www.naturalnews.com/029924_medical_experiments_Guatemala.html#ixzz1Zy2LDYm9]
உயிருக்கு ஆபத்து என்றால் ஒரு கோடி வெள்ளி குடுமபத்திற்கு கொடுக்கப் படும் என்று ஏற்கனவே இனிக்க இனிக்கச் சொல்லி இருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வந்தால் அவ்வளவுதான். ஒன்றும் தெரியாத சித்தன் மாதிரி அப்படியே காலையையும் கையையும் கழுவிக் கொள்வார்கள். கம்பி நீட்டி விடுவார்கள்.
பெற்றோர் அல்லது உறவினர் போய் மேலிடத்தில் புகார் செய்யலாம். அந்த மேலிடத்திலேயே இவர்கள் போய் காசு மேல் காசைக் காட்டி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். அவ்வளவு தான். பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றும் வாசிக்க முடியாது.
Pharma Probe in Tamil Nadu
இந்தியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் மேல்நாட்டு நிறுவனங்கள் மனிதர்களை வைத்து பரிசோதனைகள் செய்வது பரவலாகிப் பிரபலமாகியும் வருகின்றது. அந்த மாதிரியான பரிசோதனைகளில் 2008 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் மட்டும் 1,593 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
இது அதிர்ச்சி தரும் தகவல் மட்டும் அல்ல. வேதனையிலும் வேதனையான செய்தி. [சான்று: http://ekawaaz.org/2010/08/20/india-a-nation-of-human-guinea-pig/]
இதில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்கள். நகர்ப்புறச் சேரிப் பகுதிகளில் வாழும் அன்றாடம் காய்ச்சிகள். அற்றைக் கூலிக்காக அவதிப் படும் சாமான்ய மனிதர்கள். தனிமைக் கடலில் தவித்து வாடும் தனித்து வாழும் தாய்மார்கள். பணப் பற்றாக்குறையினால் படிக்க சிரமப் படும் மாணவர்கள். என்ன செய்வது. இவர்கள் வெள்ளைச் சட்டை போட்டவர்களிடம் வெள்ளந்தியாக ஏமாந்து போகிறார்கள்.
ரொம்ப வேண்டாம். இந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை மட்டும் 618 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது உலகச் சுகாதாரச் சேவைகள் இயக்கம் தரும் புள்ளி விவரங்கள் ஆகும்.
Protest against Malaysia
எப்படி உயிர் இழப்பு ஏற்படுகின்றது? எடுத்துக் காட்டாக, இப்படிச் சொல்லலாம். ஒரு நிறுவனம் ஒரு புதிய மருந்தைப் புற்று நோய்க்காக ஆய்வு செய்து கண்டுபிடித்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மருந்து மனித உடலில் எவ்வாறு பலன் அளிக்கிறது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. கிடைக்கவும் இல்லை.
[சான்று: http://www.fromdusktildawn.org.uk/news.html]
ஆக, சுண்டெலிகள் அல்லது முயல்களை வைத்து சோதனை செய்தால் அவற்றுக்குப் பேசத் தெரியாது. எங்கே வலிக்கிறது எப்படி வலிக்கிறது என்று சொல்லவும் தெரியாது. மனிதர்களை வைத்தே சோதனை நடத்தி விட்டால்… பிரச்னையே இல்லை.
உடலில் இந்த இந்த இடத்தில் இப்படி இப்படி எல்லாம் வலிக்கிறது. இந்த இடத்தில் இந்த எலும்பு வலிக்கிறது. இந்த இடத்தில் இந்தத் தசை வலிக்கிறது. இந்த முட்டி வலிக்கிறது என்று அவர்களே வாய்விட்டுச் சொல்வார்கள். கண்ணீர் விட்டுக் கதறுவார்கள். வலியைப் போக்க மாற்று மருந்து கொடுப்பார்கள். அந்த மாற்று மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும் கவனிப்பார்கள்.
ஆக, இப்படியே ஆராய்ச்சிகள் தொடரும். கடைசியாக, ஒரு சில நாட்களில் ஒரு சிலர் செத்தும் போவார்கள்.
[சான்று: http://indiatoday.intoday.in/story/hyderabad-illegal-human-trial-of-anti-cancer-drug-suspended/1/142692.html]
Monkey Tested
இந்தியா, விசாகப்பட்டணத்தில் நடந்த ஒரு சம்பவம். Actimus Bio Private Limited எனும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சில கல்லூரி மாணவர்களை மருந்து சோதனைகளுக்காக அவர்களுடைய ஆய்வு கூடத்திற்கு அழைத்து வந்தனர். அந்த மாணவர்களில் ஒருவர் விஜயக்குமார். வயது 19. சங்கீத வித்யா பரிஷாத் தொழியியல் கல்லூரியில் மாணவர்.
ஆய்வுக் கூடத்திற்கு வந்து பரிசோதனை செய்து கொண்டால் 6000 ரூபாய் தரப்படும் என்று அவருக்குச் சொல்லப் பட்டது.
ஆய்வுக் கூடத்தின் உள்ளே நுழைந்ததும் அவருடைய தோள் பை பிடுங்கப் பட்டது. கைப்பேசி அடைக்கப் பட்டது. சில ஒப்பந்தப் பாரங்களில் கையொப்பம் வாங்கப் பட்டது.
சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தம் சின்னச் சோதனைக் குழாய்களில் பரிசோதனைக்காக எடுக்கப் பட்டது.
மொத்தம் 20 முறைகள் இரத்தம் எடுக்கப் பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது. புகார் செய்தனர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் கீழ் பரிசோதனைகள் செய்யப் பட்டதாக அந்த நிறுவனம் தற்காத்துப் பேசியது. வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. [சான்று: http://indiatoday.intoday.in/story/andhra-engineering-students-lured-into-drug-testing/1/145529.html]
இதே போல ஹைதராபாத்தில் Axis Clinicals எனும் ஒரு மருந்து நிறுவனம். இந்த நிறுவனம் குந்தூர் மாவட்டத்தில் பிதுகுர்லா பகுதியில் உள்ள 35 ஏழைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு செய்தது.
அந்தப் பெண்கள் அனைவரும் சுண்ணாம்புத் தொழில்சாலையில் வேலை செய்பவர்கள். அவர்களில் சிலர் விதவைகள், சிலர் தனித்து வாழும் தாய்மார்கள்.
Drug Testing on Babaies
அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப் பட்டன. சிறுநீர், இரத்தம் போன்றவை தொடர்ந்தாற் போல நான்கு நாட்களுக்குப் பரிசோதிக்கப் பட்டன. பின்னர், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அன்பளிப்பு’!
வீட்டுக்கு வந்ததும் பலருக்கு வாந்தி, மயக்கம், உடல் வலி, முட்டி வலி, நெஞ்சு வலி, அளவுக்கு மீறிய உடல் பலகீனம் போன்ற உபாதைகள். புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அவர்களில் கருணம்மா என்பவர் இப்போது இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறார்.
[சான்று: http://unitedblackuntouchablesworldwide.blogspot.com/2011/06/karunamma-victim-and-also-former-drugs.html]
இந்த மாதிரி பரிசோதனைகளைச் செய்யும் வெளி நாட்டு நிறுவனங்களினால் 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 1,500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்தத் தொகை 2012ல் 2,760 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாலா புறமும் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய் மக்கள் என்கிற பாவேந்தரின் சொற்கள் இப்போது என்னை வந்து குத்துகிறது.
மேல்நாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளுக்காக ஏழை எளியவர்களை மனிதப் பிண்டங்களாய் மாற்றி வருகின்றன. எலிகள் போய்விட்டன. முயல்களும் போய்விட்டன. ஆனால், அந்த இடத்தில் இப்போது மனிதன் வந்து மாட்டிக் கொண்டு நிற்கிறான்.
மனிதனின் ஆராய்ச்சிக்கு சின்னச் சின்ன உயிரினங்கள் பயன்படுத்தப் பட்ட காலம் மலையேறி விட்டது. இப்போது ஏழை எளிய மனிதனே பலிக்கடாவாக மாறி வருகிறான். இது காலம் செய்கின்ற கோலம். தப்பு… மனிதம் செய்கின்ற கேவலம். மனித இனத்தை மனித இனமே அழித்துக் கொண்டு போகிறது.
இப்படி எழுதுவதற்காக மன்னிக்கவும். பணத்திற்காக தன் இனத்தையே இப்படி அழிக்கலாமா. கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் நாக்கை வழித்துப் போடும் அந்த ஜால்ரா பிண்டங்களை என்னவென்று சொல்வது? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மனிதச் சுகத்திற்காகக் கோடிக் கோடியான வாயில்லா ஜீவன்களின் உயிர்கள் முன்பு வேரோடு அறுக்கப் பட்டன. பொறுத்துப் போனது பூமி.
ஆனால், பேசத் தெரிந்த ஜீவன்களைப் பேசாமடந்தைகளாக மாற்றிப் போட்டு அந்த உயிர்களுக்கு அலங்கோல மாலைகளைப் போடுவது என்பது பாவத்திலும் பெரிய பாவம். ஏழேழு ஜென்மங்களுக்கும் சொந்த பந்தங்களைச் சுற்றி சுற்றி வரும் பொல்லாத பாவம்
http://ksmuthukrishnan.blogspot.com/2011/10/blog-post_30.html

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பணத்துக்காக விலை போகும் நிலை இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர தான் செய்யும். ஒருவன் நமக்கு சும்மா பணம் கொடுக்கிறான் என்றால் உடனே இளித்து கொண்டு வாங்கமா நமக்கு இவன் எதுக்கு தருகிறான்
யோசிக்காத இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.பகுத்து அறியும் அறிவு இருந்தால் தான் அவன் மனிதன்.இல்லையெனில் அந்நிய நாட்டு ஆராய்ச்சி கூடத்துக்கு இவன் மனித எலிதான்

உதயசுதா wrote:பணத்துக்காக விலை போகும் நிலை இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர தான் செய்யும். ஒருவன் நமக்கு சும்மா பணம் கொடுக்கிறான் என்றால் உடனே இளித்து கொண்டு வாங்கமா நமக்கு இவன் எதுக்கு தருகிறான்
யோசிக்காத இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.பகுத்து அறியும் அறிவு இருந்தால் தான் அவன் மனிதன்.இல்லையெனில் அந்நிய நாட்டு ஆராய்ச்சி கூடத்துக்கு இவன் மனித எலிதான்
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
நல்ல கருத்துள்ள பதிவு நன்றி அண்ணா
பேசத் தெரிந்த ஜீவன்களைப் பேசாமடந்தைகளாக மாற்றிப் போட்டு அந்த உயிர்களுக்கு அலங்கோல மாலைகளைப் போடுவது என்பது பாவத்திலும் பெரிய பாவம். ஏழேழு ஜென்மங்களுக்கும் சொந்த பந்தங்களைச் சுற்றி சுற்றி வரும் பொல்லாத பாவம்
பாவம் மனிதம்...
நூற்றாண்டுகளின் இறுதியில் ஏதாவது மனித உயிர்கள் மிஞ்சுமா பார்ப்போம் ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
சரியாக சொன்னீர்கள் சகோதரியே............உதயசுதா wrote:பணத்துக்காக விலை போகும் நிலை இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர தான் செய்யும். ஒருவன் நமக்கு சும்மா பணம் கொடுக்கிறான் என்றால் உடனே இளித்து கொண்டு வாங்கமா நமக்கு இவன் எதுக்கு தருகிறான்
யோசிக்காத இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.பகுத்து அறியும் அறிவு இருந்தால் தான் அவன் மனிதன்.இல்லையெனில் அந்நிய நாட்டு ஆராய்ச்சி கூடத்துக்கு இவன் மனித எலிதான்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- poongulazhiபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
அடிமைகளாக்கி போன நாம் இன்னும் அதிலிருந்து முழுமையாய் வெளியே வரவில்லை அதனால் தான் யார் என்று கூட அறிந்திராத மனிதர்களை(அரக்கர்களை) நம்பி தான் வாழ்வையே தொலைகிறார்கள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று தான் வாழ்க்கையையே தொலைத்து கொண்டிருக்கிறோம் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற வரிகளை இவர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லதுஉதயசுதா wrote:பணத்துக்காக விலை போகும் நிலை இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர தான் செய்யும். ஒருவன் நமக்கு சும்மா பணம் கொடுக்கிறான் என்றால் உடனே இளித்து கொண்டு வாங்கமா நமக்கு இவன் எதுக்கு தருகிறான்
யோசிக்காத இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.பகுத்து அறியும் அறிவு இருந்தால் தான் அவன் மனிதன்.இல்லையெனில் அந்நிய நாட்டு ஆராய்ச்சி கூடத்துக்கு இவன் மனித எலிதான்
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1