புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_lcapஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_voting_barஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_lcapஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_voting_barஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_lcapஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_voting_barஅன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 1:39 pm

அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !

வாழ்த்துகளும் ,வணக்கமும் ! தமிழ் இலக்கியங்களில் ஏற்படுகிற மாற்றம் , தமிழ் திரையுலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனாலும் கல்கி காலத்தில் அதாவது விக்ரமன் , சாண்டில்யன் போன்றவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ரசிக்கும் படி அமைந்த வரலாற்று புதினங்களை திரைப்படம் தவறவிட்டது. இக்காலத்திலேயே தமிழ் இலக்கியமும் , தமிழ் சினிமாவும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்ய ஆரமித்தது. அப்போது தவற விட்ட இந்த கதை களங்கள் தசாவதாரம் படத்திற்கு பின்பு மீண்டும் கையில் எடுக்க பட்டிருக்கிறது என்பதை நீ உறுதி படுத்துகிறாய்

இங்கு இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். வரலாற்றினை நினைவுபடுத்துகிறேன் என்கிற பெயரில் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் இன்றும் அருவருக்க தக்கவிதத்தில் இருக்கிறது. ஆனால் நீ அப்படி இல்லை என்பது ஒரு ஆறுதல். ஒரு திரைப்படமோ , வேறு ஏதோ ஒரு படைப்போ தான் செய்ய வேண்டிய பணியை நீ கச்சிதமாக செய்திருக்கிறாய்.

நடனம் ஆட , கவர்ச்சிக்கு , கதாநாயகன் சோர்ந்து போகிற நேரத்தில் , ஒரு நிமிட உற்சாகவசனம் பேச என்கிற செயலுக்குத்தான் கதாநாயகிகள் என்கிற தற்கால திரை இலக்கணம் , உன்னுடைய படத்தில் இல்லை . இதில் வழக்கம் போலவே உன்னுடைய இயக்குனர் முருகதாஸ் வெற்றி அடைந்திருக்கிறார். சும்மா சொல்லகூடாது உன்னுடைய கதா நாயகி சுருதிஹாசனும் அபாரமான ஆற்றல் உடையவராகத்தான் இருப்பார் போல.

உன்காதலை கொண்டுபோய் குப்பையில் போடு , அதை தவிர உனக்கு என்ன தெரியும் என்று கேட்கிற இடங்களில் நன்றாய் நடித்திருக்கிறார்.இங்கே மருந்துக்கு கூட சுஹாசினியின் சாயல் வரவில்லை என்பதில்தான் நான் கமலஹாசன் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். DNA ஆராய்ச்சி பற்றிய பிரெசென்டேசன் நிகழ்வில் , தமிழ் பற்றி பேசுகிற கதாநாயகி , கல்லறையில் we have to do something என்று பேசுவது மிகப்பெரிய சறுக்கல் வசனம். நள்ளிரவில் நடுத்தெருவில் ,, நீ தூங்காத ப்ளீஸ் ,,என்று பேசும் போது , பின் அரவிந்த் அலைபேசியி பார்த்துவிட்டு கத்திய பிறகு விழித்துக்கொண்டு , நிலைமையை யூகித்துவிட்டு கூச்சத்தில் குலையும் போதும் சரி திரையரங்கில் எழுகிற சிரிப்பு அலைகளையும் தாண்டி சுபா ஸ்ரீநிவாசன் மனதில் நிற்கிறார் .அரவிந்த் கதா பாத்திரம் சுபா ஸ்ரீனிவாசன் கதாபாத்திரம் இரண்டில் நயகிக்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. போதி தர்மா கதாபாத்திரம் இல்லை என்றால் சூர்யா தோற்றுபோயிருப்பார். ஆனாலும் சுருதிஹாசனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் கதாபாத்திரத்தை வைத்துதான் அவரின் நடிப்பை உறுதிகூறமுடியும். ( தமன்னாவிற்கே இங்கு நிறைய படங்கள் கிடைக்கிறது சுருதிஹாசனுக்கு கிடைக்காதா என்ன ? )


உன் கதையின் நாயகன் வழக்கம் போலவே தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் இது ஏற்கனவே அறியப்பட்டதுதனே ? என்ன ஆச்சு சூர்யா ? நீங்க இன்னும் ஒரு மாலை இளவெயில் பாட்டிலிருந்தும், அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை பாட்டிலிருந்தும் வெளியே வரவில்லை என தெரிகிறது. நீங்களும் உங்களுக்கு என்று ஒரு பார்மலாவை உருவாக்கியிருக்கிரீர்களா ? அப்படி இருந்தால் அதை மாற்றிகொள்ளுங்கள் இல்லை என்றால் விஜய் கதைதான் உங்களுக்கும்.

உன் படத்தின் இசையமைப்பாளர் , இந்த படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார்.பின்னணி இசை சுவாரசியம் கூட்டுவதாக இருக்கிறது ஆனால் ரசிக்கும் படி இல்லை. அலை பேசியில் உள்ள புகைப்படத்தை பார்த்துவிட்டு இவன் எல்லா படத்திலேயும் இருக்கான் என்று கூறி , எதிரே உள்ள சூர்யாவை பார்க்கும் போது ......., கஜினி படத்தில் கல்பனா ,, முதன் முதலில் நான் அவனை ஏற்போர்ட்லதான் பார்த்தேன் என்று கதையளக்கும் போது உள்ள பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது. இன்னொன்றை புரிந்துகொள்ளுங்கள் ஹரிஸ்............ MSV யும் , இளையராஜாவும் ரஷ்ய இசையினையும் , வேறு பிற இசையினையும் தமிழ் வடிவில் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் தமிழ் இசையைகூட மேற்க்கத்திய இசையின் வடிவில் கொடுக்கிறீர்கள். மாற்றிகொள்ளுங்கள்.

உனது பாடல்களை பற்றி கூறவேண்டும். ஒ ரிங்கா எழுதிய பா.விஜய் ... முன் அந்தி எழுதிய நா. முத்துகுமார் இருவருக்கும் .... யம்மா , யம்மா எழுதிய கபிலனுக்கு ஆனாலும் ஆம்பிளைங்க காதல் கைரேகை போல , பொம்பளைங்க காதல் கைக்குட்டை போல என்பதெலாம் கொஞ்சம் ஓவர்தான் ...
SPB யின் இடம் இன்னும் நிரப்ப படவிழலி என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

உன்னை இயக்கிய முருகதாசிடம் நிறைய பேச வேண்டும். ஆனால் .. யானையில் வரும் அரவிந்த் பின் அதில் சவாரி செய்யும் சுபா இருவரும் தங்களது காலில் காலணிகளை அணியாமல் யானையில் ஊர்வலம் வருவது நல்ல செயல். கதையின் நாயகன் . நாயகி இருவரைதவிற துணை பாத்திரங்களுக்கும் உணர்ச்சி வசனம் தந்திருக்கும் இவர் செயல் பாராட்டுக்குரியது. அந்தவகையில் மாலதி கொஞ்சம் பேசபடுவார்.

போதி தர்மாவைப்பற்றி, தமிழர்களுக்கு தெரியவில்லை , ஆனால் சீன மக்கள் அறிந்துவைத்திருக்கிரர்கள் என்று திரைப்படத்தின் இடையே நீங்கள் (காட்டியிருக்கும் ) செருகிய பேட்டி பில்டப் சீன்களே ... முதல் பல்பை வாங்க ஆரமிக்கிறது. பின்பு வில்லன் காட்டும் நோக்கு வர்மம், மாயா ஜாலங்களாக . மாறிப்போகிறது. எப்போது ஹிப்னாடிசம் என்கிற கலையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த ஆரமிக்கிரார்களோ அப்போதே அந்த நபர் தன் நோக்குவர்ம சக்தியை இழந்துவிடுவர் என்பது அக்கலை கூறுகிற முதல் கட்டுப்பாடு. இதை உன் இயக்குனர் முருகதாஸ் அறியதிருப்பாரா ?
மொத்தத்தில்
சுருதிஹாசன் டாப் கியர்
சூர்யா பிரஸ்ட் கிளாஸ்
இசை - மோசம்
எடிட்டிங், ஒளிப்பதிவு - எனக்கு தெரியவில்லை.
முருகதாஸ் - ஜஸ்ட் பாஸ் ( ஏனென்றால் நீங்கள் செய்த விளம்பரத்திற்கு ஈடுசெய்கிற வகையில் படத்தில் போதிதர்மன் பற்றி காட்சிகள் அமைக்கவில்லை. ஒருவேளை அதிக விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வெளியிட்டிருந்தால் அதிகமாய் பெசப்பட்டிருக்குமோ என்னவோ )

மொத்தத்தில் நீ (ஏழாம் அறிவு) தரமான படம் ஆனால் ஆகச்சிறந்த படம் என்று கூறமுடியாது
இப்படிக்கு
படம் பார்த்த ஒருவன்




[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 28, 2011 1:50 pm

நான் இன்னும் படம் பார்க்கவில்லை ..

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் மடல் படித்ததில் மகிழ்ச்சி ... ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 28, 2011 1:50 pm

இதுவரை பொது விஷ்யங்களுக்காக மடல் எழுதிய நீங்கள் இன்று ஒரு படத்திற்காக மடல் எழுதி உள்ளீர்கள் நல்ல விஷ்யம்....... [You must be registered and logged in to see this image.]
படத்தை நானும் பார்த்தேன் ....படம் அவளோ சொல்லும்படி இல்லை.......ஆனாலும் ஒரு விஷ்யம் இங்கே சூர்யாவை விட நடிப்பில் அந்த வில்லன் எவளோ தேவலாம்....கஜினியில் அதிகம் லாஜீக் மீறல்கள் அதேபோல் இதிலும் [You must be registered and logged in to see this image.]போதிதர்மன் பற்றி கொஞ்சம் படித்து இருந்தேன் படதை பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று போனால் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 1:53 pm

வை.பாலாஜி wrote:நான் இன்னும் படம் பார்க்கவில்லை ..

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் மடல் படித்ததில் மகிழ்ச்சி ... ஜாலி ஜாலி


தங்களின் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன். நன்றி பாலாஜி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 1:57 pm

ரேவதி wrote:இதுவரை பொது விஷ்யங்களுக்காக மடல் எழுதிய நீங்கள் இன்று ஒரு படத்திற்காக மடல் எழுதி உள்ளீர்கள் நல்ல விஷ்யம்....... [You must be registered and logged in to see this image.]
..படம் அவளோ சொல்லும்படி இல்லை.......ஆனாலும் ஒரு விஷ்யம் இங்கே சூர்யாவை விட நடிப்பில் அந்த வில்லன் எவளோ தேவலாம்....கஜினியில் அதிகம் லாஜீக் மீறல்கள் அதேபோல் இதிலும் [You must be registered and logged in to see this image.]போதிதர்மன் பற்றி கொஞ்சம் படித்து இருந்தேன் படதை பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று போனால் [You must be registered and logged in to see this image.]

நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 2:04 pm

அருமையான மடல்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 2:10 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான மடல்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன். இருந்தாலும் நன்றி ரமேஷ் !



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 28, 2011 2:16 pm

படம் பார்த்த பல பேர் இதை தான் சொல்கிறார்கள் போதி தர்மன் பற்றி சொல்லி எல்லாரிடமும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விட்டு அதை பற்றி பெரிதாக சொல்லாமல் இருந்தது படத்தின் பெரிய மைனஸ் ஆக இருக்கிறது..!

யம்மா யம்மா பாடல் வரிகளில் கொஞ்சம் ஆழமாக உள்ளது இது தேவை தானா..!

பகிர்விற்கு நன்றி அண்ணா!


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 2:20 pm

அருண் wrote:
இது தேவை தானா..!

தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .





[You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 2:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நான் தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன். இருந்தாலும் நன்றி ரமேஷ் !
அண்ணா என்ன சொல்லவது என்று தெரியவில்லை இந்த மடலில் குறிப்பிட்டு இருந்த அனைத்தும் சரியாக உள்ள போது... புன்னகை
படத்தின் ஆரம்பத்தில் பல்லவ அரசு என்று ஒரு இடத்தை வான்வெளியில் இருந்து பார்ப்பது போல காண்பித்தார்கள் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.பல்லவ நாட்டை கதைகளில் படித்த போது அதில் உண்மையாகவே நான் உலாவுவது போல் இருக்கும் அதனால் பல்லவ நாட்டை காண்பித்தவுடன் என்னுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் அது நீடிக்க வில்லை.விரைவாகவே போதிதருமரும் பல்லவ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்(படத்தில்).பின் போதிதருமரின் காட்சிகள் ஆவது இடைவேளை வரும் என்று இருந்தேன் அதுவும் இல்லை.
என்னுடைய கருத்து என்னவெனில் முருகதாஸ் புதுமை பழமை என்று இரண்டையும் சேர்த்து படமாக்கியதை விட போதிதருமரை பற்றி மட்டுமே முழுபடமாக எடுத்து இருக்கலாம் என்பதே...
கரிகாலன் என்று விக்ரம் நடித்து கொண்டிருக்கும் படம் முழுமையாக அரசர்கள் காலத்து படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா...
அது சாண்டில்யன் அவர்களின் யவணராணியை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்...





[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக