புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
9 Posts - 82%
heezulia
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
1 Post - 9%
mruthun
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
2 Posts - 1%
mruthun
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
2 Posts - 1%
prajai
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_m10கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 25, 2011 5:42 pm

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை

ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்
புரட்சிகரச் சிந்தனை
முவம்மர் கடாபி சிறுவயது முதலே புரட்சிகரச் சிந்தனை உள்ளவராக விளங்கினார் தான் பிறப்பதற்க்குச் சில வருடங்கள் முன்பு வரை தன் தாய்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும் அதில் உமர் முக்தார் போன்றோரின் தியாக வரலாறையெல்லாம் வாய்வழியாகக் கேட்டதும் ரஷ்ய கம்யூனிஸப்புரட்சியைத் தேடிப்பிடித்து படித்ததும் அக்காலகட்டத்தில் பாலஸ்தீன மன்னில் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் தங்களின் தந்திரத்தாலும் இங்கிலாந்தின் நூறுசதவித முழு ஆதரவுடனும் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற அரபு நாடுகளுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தததுமே அவரின் புரட்சிகரச் சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்
ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல்
லிபியாவை ஆண்ட இத்ரீஸ் மன்னர்
பல்லாண்டு காலமாக லிபியாவை தங்களின் காலனி நாடாக வைத்திருந்த இத்தாலி லிபியாவைச் சுதந்திர நாடாக்கி தாங்கள் நாட்டை விட்டு வெளியேற நினைத்தபோது மேற்க்கத்திய நாடுகளின் வழக்கப்படி தாங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேறும்போது தங்களின் ஆதரவாளர் ஒருவரைப் பிடித்து பொம்மை அரசு ஒன்றை நிறுவி விட்டுப்போவார்கள் அது போல் இத்ரீஸ் என்ற மன்னரை நியமித்து விட்டுப் போனதாகவும் சில தகவல்கள் உண்டு இதற்க்கு நேர் எதிராக இத்ரீஸ் என்பவர் ஓர் மார்க்க அறிஞர் அவர் நல்ல முறையில் ஆட்சி நடத்தினார் என்பதாகவும் வரலாறுகள் உண்டு ஆக இத்ரீஸ் மன்னர் மார்க்க அறிஞராக இருந்தாலும் இத்தாலியின் பிரதிநிதி என்ற அளவில் செயல்பட்டுள்ளார் என்றே விளங்கமுடிகிறது இதன் உன்மை நிலையை அல்லாஹ் மிக அறிந்தவன் எப்படியிருந்தாலும் இத்ரீஸ் மன்னரின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிப்பணி பெரிதாக ஒன்றும் நடக்காமல் இருந்ததையும் இஸ்ரேல் என்ற குட்டி நாட்டுடன் மற்றுள்ள அரபுநாடுகள் பெரும் தோல்வியைச் சந்தித்தையும் கண்ட ராணுவத்தின் உயர்பதவிகளில் இருந்த கடாபியும் அவரின் நன்பர்கள் சிலரும் ராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தார்கள் அவர்களின் கனவை நினைவாக்கும் விதத்தில் மன்னர் இத்ரீஸ் அவர்கள் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த போது தற்காலிகமாகப் பொருப்பில் இருந்த இத்ரீஸ் மன்னரின் மருமகன் சையது அர்ரிதா அல்மஹ்தி அஸ்சுனசியை வீட்டுக்காவலில் வைத்து 1969 செப்டம்பர் 1ம் தேதி கடாபியும் அவரின் நன்பர்களும் சேர்ந்து கத்தியின்றி ரத்தமின்றி மன்னர் ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு ராணுவ ஆட்சியை நிறுவினார்கள்
அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள்
புரட்சி மூலம் அதிகாரத்திலேறிய கடாபி அதிரடியாகச் சில மாற்றங்களைச் செய்தார் லிபியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ராணுவத்தலங்களை உடனடியாக மூடினார் அதேபோல் 1970 ல் லிபியாவில் குடியேறியிருந்த இத்தாலியர்களை நாட்டை விட்டே வெளியேற்றினார் இதற்க்குப் பின்னர் லிபயாவின் எண்ணெய் வளங்களை நிர்வாகம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் லிபியாவிற்க்கு வழங்கும் 50% சதவீத லாபத்தை அதிகரிக்க வேண்டும் இல்லையென்றால் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தார் அவரின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த எண்ணெய் நிறுவனங்கள் லிபியாவிற்க்கு வழங்கிக் கொண்டிருந்த 50% சதவீதத்தை 79% ஆக அதிகரித்தது . லிபியா உத்தாலியின் காலனி நாடாகப் பல்லாண்டுகாலம் இருந்ததால் இத்தாலியக் கலாச்சாரத்தின் சில பிரதிபளிப்புகளை தன்னுல் உள்வாங்கியிருந்தது அவையெல்லாவற்றையும் கடாபி துடைத்தெறிந்தார் அவற்றுள் ஆட்சிமொழியாக அரபுமொழியை அறிவித்தது ஹிஜ்ர காலண்டரை நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தவையும் அடங்கும்
அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி
கடாபி ஆரம்பகாலம் முதலே இஸ்ரேலைக் கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவராக இருந்தார் அதனாலேயே இஸ்ரேல் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் தங்களின் எதிரிகளின் பட்டியலிலேயே வைத்திருந்தார் அவர் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்ப்பதற்க்கு இதுமட்டுமே காரணமாக இருக்கவில்லை இஸ்லாத்தையும் கம்யூனிஸத்தையும் சேர்த்து உண்டாக்கிய அவரின் அரசியல் கொள்கையே இதற்க்கு மற்றொரு காரணம் எனலாம் அதனால் தான் உலகலவில் அமெரிக்காவை எதிர்க்கும் பிடல்காஸ்ட்ரோ யூகோசாவேஸ் போன்ற அமெரிக்க எதிர்ப்பாளர்களுடன் அவர் நட்புறவு பாராட்டினார் அரபு நாடுகள் சிறிய சிறிய நாடுகளாக இருப்பதால் தான் உலகலவில் அரபுநாடுகளின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை என்று கருதிய அவர் அரபு நாடுகளையெல்லாம் ஒன்றினைத்து ஓர் மிகப்பெரும் சக்தியாக்கவேண்டும் எப்போதுமே அவரிடம் காணப்பட்டது அதனால்தான் அண்டை நாடான எகிப்துடன் லிபியாவை ஒன்றினைத்து ஒரே நாடாக ஆக்கிவிடுவோம் என்று அப்போதைய எகிப்து அதிபராயிருந்த அன்வர்சதாத்திடம் கூறி அப்படி இருநாடுகளையும் ஒன்றினைத்தால் அதிபராக நீங்கள் இருந்துகொள்ளுங்கள் நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொள்கிறேன் என்ற யோசனையை கடாபி அன்வர்சதாத்திடம் முன்வைத்தார் என்ன காரணமோ அது நடக்கவில்லை பின்னர் அத்திட்டத்தை கைவிட்ட கடாபி எகிப்தைத் தவிர மற்றுள்ள அண்டைநாடுகளுடன் அந்த திட்டத்தை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டார் அதனடிப்படையில் தான் 1984 ல் மோரித்தானிய மொராக்கோ அல்ஜீரியா துனிஷியா போன்ற நாடுகளுடன் லிபியாவை ஒன்றினைத்து ஒரே நாடாக ஆக்கும் மக்ரெப் ஒப்பந்த்த்தில் இந்நாடுகளெல்லாம் கையெழுத்திட்டன ஆனால் கடாபியின் அந்த முயற்ச்சியும் கைகூடவில்லை அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சிக்காக கடாபி சில தியாகங்களைக்கூடச் செய்திருக்கிறார் அது மிகையல்ல ஆம் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சிக்காக சிலகாலம் வெளிநாடுகளிலும் பல மாதங்கள் தலைமறைவாக்ககூட இருந்திருக்கிறார் அதன் தொடர்ச்சியாகத்தான் 1972 ல் மேஜர் ஜலுதை பிரதமராக கடாபி நியமித்தார் சில வருடங்களில் தன்னுடைய வேறு சில அதிகாரங்களையும் ஜலுதிடம் ஒப்படைத்த கடாபி ராணுவத்தின் சீப் கமான்டராகத் தொடர்ந்தார்
கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள்

கடாபியை கவிழ்ப்பதற்க்கு இப்போது நடந்த புரட்சி மட்டுமல்ல இதற்க்கு முன்பும் பல தடவைகள் புரட்சி மேற்கொள்ளப்பட்டன கடாபியின் சில உயர் அதிகாரிகள் செய்த சதியை எகிப்தின் உளவுப்பிரிவு கண்டுபிடித்து முறியடித்தது அதிலிருந்து தான் கடாபி உயர்அதிகாரிகளை விட குடும்பத்தினருக்கு அதிகாரங்களைக் கூடுதலாக வழங்கினார் அதேபோல் 1980 ஆகஸ்ட் மாதம் லிபியாவின் ராணுவத்தினர் சிலர் உண்டாக்கிய கலவரத்தை மிகக்கடுமையாக கடாபி அடக்கியிருக்கின்றார் இதுபோல் தனக்கெதிராகச் செயல்படும் எல்லோரையும் கொள்வதற்க்காகவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கூலிப்படைகளை கடாபி உருவாக்கி வைத்திருந்தார் தனக்கெதிராக யாரும் களமிறங்கக்கூடாது என்பதற்க்காக்கல்வி நிலையங்கள் அரசு அலுவகங்கள் உட்பட நாட்டின் எல்லா இடங்களையும் கண்காணிப்பதற்க்கென்றே சிறப்பு உளவுப்படைகளை கடாபி வைத்திருந்தார்

கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இஸ்லாத்திற்கெதிரான கடாபியின் கொள்கைகள்
கடாபியைப்பொருத்த வரை சிறுவயது முதலே அவருக்கு உண்டான கம்யூனிஸத்தின் தாக்கம் அவரின் இறுதிவரை பிரதிபலித்தது அதனால் தான் கம்யூனிஸத்தின் சில கொள்கைகளை இஸ்லாத்திற்க்குள் நுழைக்க முயன்றார் அதுபோல் குர்ஆன் வசனங்களுக்கு தன்இஷ்டப்படி வியாக்கியானம் செய்தார் குர்ஆனில் பல வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று சொன்னார் லிபியாவில் தான் வைத்ததுதான் சட்டம் என்பதுடன் தான் சொல்வதுதான் இஸ்லாம் என்ற நிலையையும் உண்டாக்க நினைத்தார் அதற்கெதிராக குரல் கொடுத்த பல ஆலிம்களை தூக்குமேடைக்கு அனுப்பினார் பலருக்கு உடல் உறுப்புக்களை வெட்டி ஊனமாக்கினார் 1970 ல் ஹிஸ்புத்தஹ்ரீர் இயக்கத்தவர்கள் பலைரைக் கொன்றார் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தவர்களைக் கொன்று குவித்த இஸ்லாத்திற்கெதிராக பலசட்டங்களை இயற்றிய அப்போதைய எகிப்து அதிபர் கமால்நாசரின் தீவிர ஆதரவாளராகவே கடாபி விளங்கினார் ஆனால் இஸ்ரேல் விஷயத்தில் கமால்நாசரைப் போலவோ அவரைத்தொடர்ந்து வந்த அன்வர்சதாத் போலவோ கடாபி முஸ்லீம்களை வஞ்சிக்கவில்லை அவர் எப்பொழுதுமே இஸ்ரேலை எதிர்க்கக்கூடியவராகவும் இஸ்ரேல் விஷயத்தில் முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது என்ற கொள்கையுள்ளவராகவே கடாபி இருந்தார் அதனால் தான் அன்றைய அமெரிக்க வெளியுறவுச்செயலாளராக இருந்த கான்டலிசரைஸ் தன்னைச் சந்திக்க லிபியா வந்தபோது இஸ்ரேல் என்ற நாடு இருக்கககூடாது பாலஸ்தீன் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்
கிரீன்புக் எனும் லிபியாவின் தலையெழுத்து
அல்லாஹ் மூமின்களைப் பற்றி அவர்களுக்கு வாய்ப்பழித்தால் பூமியில் இறையாட்சியை நிலைநாட்டுவார்கள் என்று கூறுகின்றான் ஆனால் கடாபியைப் பொருத்தவரை அல்லாஹ் அவருக்கு நாற்பதாண்டுகளுக்கு மேல் லிபியவின் அதிகாரத்தைக் கொடுத்தான் ஆனால் கடாபி அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவவில்லை மதுபானம் வட்டி போன்ற சிலவற்றை ஒழித்ததைத் தவிர வேறோன்றும் கடாபி செய்யவில்லை செய்யாதது மட்டுமல்ல 1975 ம் ஆண்டு கிரீன்புக் என்ற ஒன்றை
எழுதிவைத்துக்கொண்டு அதுதான் லிபியாவின் சட்டப்புத்தகம் அரசியல்சாசனம் என்று எல்லாமாக அதை ஆக்கினார் தனி ஒருமனிதரால் எழுதப்பட்டு பல்லாண்டுகளாக ஒருநாட்டின் தலையெழுத்தையே தீர்மானித்து என்று சொன்னால் அது கடாபி எழுதிய கிரீன்புக்காகத்தான் இருக்கும்

ஹதீஸை நிராகரித்த கடாபி

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி ஒருகாலம் வரும் அப்போது வயிறுபுடைக்க உண்ட ஒருவன் (திமிர்பிடித்தவன்) ஒருவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றது அதுவே போதும் என்பான் என்ற நபிமொழி கடாபிக்குத்தான் பொருந்துமோ என்று என்னத்தோன்றுகிறது ஆம் கடாபி குர்ஆன் மட்டும் போதும் ஹதிஸ் தேவையில்லை என்ற கொள்கையுடையவராக இருந்துள்ளார் அதுபோல் முஹம்மது நபி அவர்களின் பேரைக்கேட்கும்போது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று கூறுவது ஷிர்க் என்று கூறினார் அதுபோல் மக்காவில் உள்ள கஃபாவை அல்லாஹ் மனிதர்களுக்குப் பொதுவானதாக ஆக்கியிருக்கின்றான் என்று கூறி முஸ்லீமல்லாதவர்களையும் கஃபாவில் அனுமதிக்கவேண்டும் என்று சொன்னார் பின்னர் வந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இவ்வாண்டுக்குப்பின் இனைவைப்பாளர்கள் யாரும் கஃபாவை நெருங்கக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கின்றான் அதனால் முஸ்லீம்களைத் தவிர வேறுயாரும் மக்காவில் பிரவேசிக்கககூடாது என்று மாற்றிச்சொன்னார் இப்படி இஸ்லாத்தையும் குர்ஆனையும் தான்தோன்றித்தனமாக வியாக்கியானம் செய்தார் அதனால்தான் அரபுலகமும் உலக முஸ்லீம்களும் அவரை எதிர்த்தனர்

கடாபியின் மூலம் மற்ற ஆட்சியாளர்கள் கற்க வேண்டிய பாடம்

லிபிய சுதந்திரத்திற்க்காகப் போராடி 1931 செப்டம்பர் 16ல் தூக்குமேடையேறிய லிபிய சுதந்திரப்போராட்ட வீரர் உமர்முக்தார் அவர்களின் வரலாற்றைப் பற்றி உமர்முக்தார் என்ற ஆங்கிலப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் உமர்முக்தார் அவர்கள் தூக்கிலிடப்பட்டு கொள்ளப்பட்டவுடன் தரையில் விழும் அவரின் மூக்குக்கண்ணாடியை ஒரு சிறுவன் போய் எடுப்பதைப்போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்
அந்தச் சிறுவன் மூலம் முவம்மர் கடாபியைத்தான் உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது என்று உலகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்துச் சொல்லப்படுமளவிற்க்கு உமர் முக்தாருக்குப்பின் லிபியாவை காப்பாற்றவந்தவர் கடாபி என்றெல்லாம் கூடச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது கடாபியைப் பொருத்தவரை எகிப்து துனிஷியா போன்றெல்லாம் மக்களை வாட்டிவதைக்காமல் அவரால் முடிந்த அளவு நல்லமுறையில் திறமையாகத்தான் ஆட்சி நடத்தினார் மக்களுக்கு பல சலுகைகளையும் பல இலவச திட்டங்களையும் வழங்கினார் லிபியமக்களைப் பொறுத்தவரை கோத்திரங்களாக இருந்ததால் சில கோத்திரத்தாரின் எதிர்ப்பு எப்போதுமே கடாபிக்கு இருந்தது அதனுடன் தன் சர்வாதிகாரப்போக்கும் தன்னை எதிர்த்து யாரும் மூச்சுவிட்டால் கூட அவர்களை சிறைபிடிப்பதும் ஈவுஇரக்கமில்லாமல் கொன்றதுதான் கடாபிக்கு இந்த நிலைமை ஏற்படக்காரணம் கடாபி லிபியவை ஓரளவுக்கு நல்லமுறையில் ஆட்சி நடத்தினாலும் அவரின் ஆட்சிமுறை அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தந்த அடிப்படையில் இருக்கவில்லை என்பது தின்னம் இறைவன் கூறியமுறைப்படி இவர் ஆட்சிநடத்தியிருந்தால் எதிர்ப்பே வராது என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட மறுமை எனும் நிரந்தர வாழ்வில் நீதியான ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் வாக்களித்திருக்கும் மிகப்பெரும் வெற்றி கிடைத்திருக்கும் என்பது உறுதி ஆனால் இப்பொழுது இரண்டுமே நஷ்டமடைந்ததுதான் மிச்சம் இதைப்பார்த்தாவது முஸ்லீம் நாடுகளை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய முறைப்படி நாட்டை ஆளமுன்வரவேண்டும் நேற்று 23.10 11 அன்று லிபியாவில் நடந்த சுதந்திர அறிவிப்புக் கூட்டத்தில் லிபியா இனி இஸ்லாமிய ஷரிஆ முறைப்படி ஆளப்படும் என்று தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது
கடாபியின் கோரமுடிவு
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக லிபியாவை ஆட்சி செய்த கடாபி இறுதியாக அவரின் சொந்த ஊரான ஸிர்த்தில் வைத்தே புரட்சிப்படைகளின் கைகளால் மிகக்கொடுரமாக அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றார் அவர் கொல்லப்பட்டவிதம் தொடர்பாக பலவித கருத்துக்கள் சொல்லப்படுகின்றன எப்படியிருந்தாலும் அவரைப் பிடித்து 45 நிமிடங்களுக்குப் பிறகுதான் கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் அதுதொடர்பாக இனையதளங்களில் வெளியான வீடியோக்களையும் பார்க்கும்போது நீண்ட நேரம் அடித்து கழுத்தில் கயிறைக் கட்டியெல்லாம் இழுத்து கொடுரமாக அடித்தேதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது அவரின் கொலையைப் பொருத்தவரை எந்த விசாரனையும் இல்லாமல் சர்வதேச சட்டங்களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுத்தான் இதைசெய்திருக்கிறார்கள் என்பது உறுதி
இறுதியாக
இத்தனை வருடங்கள் லிபியாவை தன் கைபிடிக்குள் வைத்து ஆட்சி செய்த கேர்னல் கடாபியின் இறுதிநிலையைப் பார்க்கும்போது ஆட்சி அதிகாரம் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஒரு இறைவசனம் தான் ஞாபகம் வருகிறது
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
அல்லாஹ் மிக அறிந்தவன்

http://neermarkkam.blogspot.com/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 25, 2011 5:50 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 8:55 pm

பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி கடாபி என்றாலே ஒரு பயம் இன்னும் லிபியா மக்களிடம் இருக்கிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 9:01 pm

நல்ல பதிவு ! சிறு சிறு பத்திகளாக பதியுங்கள்! படிப்பத்ற்கு ! எளிதாக இருக்கும் :idea:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 9:22 pm

பகிர்ந்தமைக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கடாபி பிறப்பு முதல் இறப்புவரை 1357389கடாபி பிறப்பு முதல் இறப்புவரை 59010615கடாபி பிறப்பு முதல் இறப்புவரை Images3ijfகடாபி பிறப்பு முதல் இறப்புவரை Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக